நவம்பர் 2024

சொர்க்கவாசல் விமர்சனம் 


ட்ரீம்வாரியர் தயாரிப்பில், சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், நடிகர் RJ பாலாஜி, நட்ராஜ், கருணாஸ், செல்வராகவன், சானியா அய்யப்பன் அந்தோணி தாசன், ஹக்கீஷா, ஷர்புதின், பாலாஜி சக்தி வேல் என பலர் நடித்து வெளியாகியுள்ள படம் தான் 'சொர்க்கவாசல்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

தள்ளு வண்டியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார் RJ பாலாஜி. அப்பகுதியில் நடக்கும் ஒரு கொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து பெயில் கிடைக்கும் சூழ்நிலை உருவாகிறது. 

பெயில் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரி ஒருவர், பாலாஜியை அழைத்து, பிரபல தாதா சிகா (செல்வ ராகவன்) உணவில் பேதி மருந்து கலக்க சொல்கிறார். இந்த மருந்தை உணவில் கலப்பதற்கு முன்பே தாதா எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இந்த விஷயம் சிறை கைதிகள் - காவலர்கள் மோதலாக வெடிக்கிறது. 

இந்த மோதலால் பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயில் கிடைக்காமல் போகிறது. கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் RJபாலாஜி தான் தாதா மறைவுக்கு காரணம் என்று எண்ணி  பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை... 

RJ பாலாஜி, கருணாஸ், செல்வராகவன், சானியா அய்யப்பன் அந்தோணி தாசன், ஹக்கீஷா, ஷர்புதின் என நடித்த அனைவருமே கதைக்கு பொருந்தி இருக்கிறார்கள். தன் காதலியையும், அம்மாவையும், பிரிந்து வர மாட்டேன் என்று RJ பாலாஜி அடம் பிடிக்கும் காட்சி பார்க்கும் போது போலீசார் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. 

சிறைக்கு பின்னால் இருக்கும் நிழல் உலகத்தை ஓரளவு இப்படம் பதிவு செய்துள்ளது. சிறைக்கு சென்று வந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். 

வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்ப்பது கடினம். 

மொத்தத்தில் இந்த 'சொர்க்கவாசல்' நிஜ துடிப்பு.... 

RATING: 3.5/5

நிதி ஆண்டு 2026 - 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க டி.ஆர்.ஏ ரியல் எஸ்டேட் நிறுவனம் இலக்கு!




சென்னை: 

தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் நிதி ஆண்டு 2026 - 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்தது. 

இதன் வர்த்தகமானது நிதி ஆண்டு 2023 - 2024-ல் ரூ.300 கோடியிலிருந்து நிதி ஆண்டு 2024 - 2025ல் ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் 2026 - 2027-ல் ரூ.1000 கோடி இலக்கை அடைய பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழகத்தை தொடர்ந்து, புனே சந்தையில் நுழைவதுடன், அடுத்த நிதி ஆண்டுக்குள் பெங்களூரில் தனது இருப்பை மேலும் விரிவாக்குவதற்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டது. 

சென்னை சந்தையில் 2.7 மில்லியன் சதுர அடியில் விற்பனை செய்யக்கூடிய பகுதியைச் சேர்க்கும் மூலம், நகரின் முக்கிய சந்தைகளில் 9 நடப்பு மற்றும் 6 வரவிருக்கும் திட்டங்களுடன் தனது தடத்தை வலுப்படுத்துவதாகவும் நிறுவனம் அறிவித்தது. தரமான கட்டுமானம் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி வழங்குவதில் புகழ்பெற்ற இந்த பிராண்ட், பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவை தனது முதல் பிராண்ட் தூதராக நியமித்து, தனது புதுப்பிக்கப்பட்ட ‘ஹோம் ஆஃப் ப்ரைட்’ என்ற பிராண்ட் தத்துவத்தை வெளியிட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்ஜீத் ரத்தோட் கூறுகையில், பெருமை என்பது டிஆர்ஏவின் தாரக மந்திரமாகும். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுடன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் செல்லும்போது இது இன்னும் வேகமெடுக்கும். இந்தியாவில், வீடு வாங்குவது பலருக்குமான ஒரு கனவும், பெருமையும் ஆகும். 

மேலும் இது இளம் தலைமுறையினர் இடையே இன்னும் உற்சாகமாக இருக்கிறது. சிறந்த விலை, தரம் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி போன்ற ஒவ்வொரு சிரமத்தையும் தீர்க்க மட்டுமல்லாமல், அழகான மற்றும் காலத்திற்கேற்ப இல்லங்களை வழங்குவதன் மூலம், வீடு வாங்குபவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நாங்கள் பொறுப்பான பங்கு வகிக்க உறுதியாக இருக்கிறோம்."




ரஷ்மிகா மந்தனாவை தனது பிராண்ட் தூதராக நியமிப்பதன் மூலம், DRA தனது சந்தை பங்கைக் கூடுதல் அளவில் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுடன் தனது பெருமை தொடர்பை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, ஒவ்வொரு வீடு வாங்குபவருக்கும் பெருமை உணர்வை ஊட்டுவதுடன், சரியான விலை அளவில் தரமான, பரந்த வீடுகளை வழங்குவதற்கான DRA-வின் உறுதிமொழியை மேலும் வலுப்படுத்துகிறது. 

DRA, ரஷ்மிகா மந்தனாவுடன் 'ஹோம் ஆஃப் ப்ரைட்' விளம்பரம் நாளை முதல் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெளியிடப்படுகிறது என்றார். புதிய பிராண்ட் தத்துவம் மற்றும் கட்டிடக்கலை, ப்ளூ நூடில்ஸ் (Blue Noodles pvt ltd)   மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஞ்ஜீத் கூறுகையில், "ரஷ்மிகா மந்தனா எங்கள் தேசிய பிராண்ட் தூதராக எங்களுடன் சேர்ந்து, எங்கள் புதுப்பிக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையை – ‘ஹோம் ஆஃப் ப்ரைட்’ – பிரதிபலிப்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திறமையான நடிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக  தேசிய நட்சத்திரமாக மாறிய ரஷ்மிகாவின் அற்புதமான வளர்ச்சி, DRA-வின் கடுமையான ஆர்வம் மற்றும் சிறந்த தரத்திற்கு உறுதிமொழியுடன் கூடிய பயணத்தைப் போலவே, முயற்சி, உண்மைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக வீடுகளை மட்டுமல்லாமல், நிலையான பாரம்பரியங்களை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம்"என்று தெரிவித்தார்

இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுகையில்,  DRA-வின் பிராண்ட் தூதராக இணைவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். DRA கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதுடன், இந்த புதிய பயணம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெரும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. DRA-வின் 'ஹோம் ஆஃப் ப்ரைட்' விளம்பரம் மூலம், எதிர்காலத்தில் மேலும் பல ஆசை கொண்ட மக்களின் வீடு வாங்கும் கனவுகளை நிறைவேற்றுவதைக் காண எதிர்பார்க்கிறேன்."

VIDEO HERE:

'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு




இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.


அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.

வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன்,  கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர‌ படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது 'ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்' என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய 'கைதி 2' படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது," என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், "சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி 'சொர்க்கவாசல்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன‌. அவர் நடிக்கும் படங்களுக்காக‌ கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

கதாசிரியர்-எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், "உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார் நீதிபதி...
வாக்கிங் புறப்பட்டு விட்டார் வக்கீல்...சீருடை அணிந்து விட்டார் போலீஸ்காரர்...நான் இன்னும் என்னுடைய குற்றத்தை செய்ய துவங்கி இருக்கவில்லை...' என கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிதை தான் இந்த தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த கவிதையை தான் இந்த படமாக நான் பார்க்கிறேன்.
இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் நான் எழுதிய முதல் திரைப்படமான 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியாகியிருக்கவில்லை. அந்தத் தருணத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் என்னை தொடர்பு கொண்டு என் உதவியாளர் சித்தார்த் ஒரு கதையை வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்று என கேட்டுக்கொண்டார். அந்த கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.

என்னுடைய வீடு சென்னை மத்திய சிறைக்கு அருகே உள்ளது. சிறையில் நடைபெற்ற கலவரத்தை நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கலவரத்தை தழுவிய திரைப்படம் என்றவுடன் எனக்கு திரைக்கதை எழுதுவது ஆர்வமாகிவிட்டது. அருண் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றினேன்.

திரைக்கதை எழுதுவது என்பது எளிதில் சோர்வடைய வைக்கும் பணி. ஆனால் மற்றவர்களுடன் இணைந்து உருவாக்கும் போது ஆற்றலுடன் விரைவாக செயல்பட முடிகிறது. இந்த கதையை பொருத்தவரை பன்முகத் தன்மைமிக்க கதாபாத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன‌. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவம் உண்டு.

இந்தப் படத்தில் நடித்த ஆர். ஜே. பாலாஜியை எப்போதும் எனக்கு ஒரு முன்னூதாரண நாயகனாக பார்க்கிறேன். ஏனெனில் பண்பலை வானொலியில் சென்னை தமிழில் பேசினார். அதுவே எனக்கு உந்துதலாக இருந்தது. இதனால் நானும் இரண்டு ஆண்டுகள் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றினேன்.

நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை விரும்பியதில்லை. அப்படி நான் விரும்பிய ஒரே= நடிகர் - படைப்பாளி செல்வராகவன் தான். ஏனெனில் அவருடைய திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். 'புதுப்பேட்டை' படத்தில் நாயக பிம்பத்தை பத்து பேர் அடித்தாலும் வலியை தாங்கக்கூடிய கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பார். இது என்னை பெரிதும் கவர்ந்தது.  இயக்குநரை தொடர்பு கொண்டு செல்வராகவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து செல்வராகவன் என்னை சந்திக்க விரும்பினார். அவரை நேரில் சந்தித்த பொழுது திரைக்கதை நேர்த்தியாக எழுதி இருக்கிறாய் என பாராட்டினார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையாக திகழும் எழுத்தாளர் ஷோபா ச‌க்தி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு புதிதாக முயற்சித்து இருக்கிறோம். கிரைம் ஆக்ஷ‌ன் திரில்லர் கதை என்றாலும், சர்வைவல் திரில்லர் வகைமையை சார்ந்தது என குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

கதாசிரியர் அஸ்வின் ரவிச்சந்திரன் பேசுகையில், "சிறைக்குள் நடைபெறும் கதையை எழுதலாமா என என்னுடைய நண்பரான இயக்குநர் சித்தார்த் கேட்டார். அது கொரோனா காலகட்டம் என்பதால் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு சிறையை பற்றிய படங்களை பார்த்தோம், அது தொடர்பாக எழுதி வெளியான புத்தகங்களையும் வாசித்தோம்.

இந்தத் தருணத்தில் எங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படம் வட சென்னையை களமாகக் கொண்டது. நானும், இயக்குநர் சித்தார்த்தும் தென் சென்னையை சார்ந்தவர்கள். இதனால் வடசென்னையை சார்ந்த எழுத்தாளர்-கதாசிரியர் தமிழ்பிரபாவை அழைத்து, அவருடன் இணைந்து பணியாற்றினோம். தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் தமிழ் பிரபாவின் உழைப்புதான் அதிகம். கதையின் நாயகனான பார்த்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதும் அவர்தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், "இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷ‌யம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.

நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்." என்றார்.

ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ் ஆர் பிரபு பேசுகையில், "இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. இப்படத்தை உருவாக்கத்தின் தொடக்க நிலையில் இருந்து எனக்கு தெரியும். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் நண்பர்களாக இருந்து படைப்பை உருவாக்கும் போது அவர்கள் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நாங்களும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம். இக்கதை நம்மில் பலரும் கேட்டு பார்த்த சம்பவங்களுடன் தொடர்புடையது. படம் பார்க்கும்போது அந்த சம்பவத்துடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் அனைவரும் ரசிக்கும் வகையிலான திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், "ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், "அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- செல்வராகவன் -பாலாஜி சக்திவேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நைஜீரிய நாட்டில் இருந்து சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு வருகை தந்து நடித்தார். கேரளாவில் இருந்து ஷஃரப் உதீன் -ஹக்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.

இந்த மேடைக்காக... மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். 'வடசென்னை', 'விருமாண்டி' என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம். இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறை கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம்.  அவர்களை விசாரணை கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணை கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது. இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.  அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷ‌யம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த விஷ‌யம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷ‌ன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இர‌ண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பு அளிப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் - ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா - அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.

இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் - இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து 'எல்கேஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷங்க', 'சிங்கப்பூர் சலூன்' என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை  பிரார்த்திக்கிறேன்.

கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த  திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வராகவன்  திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.

நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது.
இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்... ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை. 

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.  இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.

போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என  எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை.  ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் வேலை செய்யாதீர்கள். டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்.

நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்தத் திரைப்படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும். 29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு படைப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் - இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்



காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.


இப்படத்தில்  முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

'லாரா' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது,

"எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி "
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,

 "முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட்டபோது  இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லா மும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது'' என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,

 "இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன . நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை  முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் "என்றார்.

தயாரிப்பாளர்,நடிகர் கார்த்திகேசன் பேசும்போது,

 "நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து  திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது "என்றார்.

படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது ,

"நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாக ஆகியிருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு  நன்றி" என்றார் .

கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது,

" நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது.லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர்  அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது . ஏனென்றால் கதைக்கேற்ற  செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது .அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் .இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் .ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது ,அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.

என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான்,நன்றாக நடிக்கிறான்,நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள் .
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர்  லாராவை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் சார் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுகம் செய்தார் .அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும்  இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் "என்றார்.

இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது,

"இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது  அவர்  என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்  என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள்.அதனால்தான் குறுகிய காலத்தில்  நிறைய வேலை செய்ய முடிந்தது . அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை  சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றி"சென்றார் .

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் .கே ராஜன் ,பேசும்போது

"இந்தத் தயாரிப்பாளரை நான் மனமார வரவேற்கிறேன். சென்னையில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இவர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.ஏனென்றால் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.

லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒரு பாடல் வருகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் நமது கொள்கை.  எல்லா மதங்களும் நல்லவற்றையே சொல்கின்றன.

 குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் முக்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால்  .அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள்தான் நடுத்தெருவுக்கு வருவார்கள் இன்று இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். முன்னூறு நானூறு   படங்கள் வெளியிட முடியாமல் இருக்கின்றன .

இது சின்ன படங்களின் காலம். இன்று சின்ன படங்கள் ஓடுகின்றன. இந்த ஆண்டு நல்ல கதை உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எடுக்கப்படுவது எல்லாம் ஓடுவதில்லை. சின்ன படம் வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

 படத்துக்கு விமர்சனம் தேவைதான். நல்லது நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள் .குறை இருந்தால் குறைவாக எழுதுங்கள். சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள்.

ஒரு  கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம்  பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதாது என்று இன்றைக்கு இந்திக்கு நடிக்கச் சென்று விட்டார். இப்படி இருக்கிறது நிலைமை.

 இந்தப் படத்திற்கு மூன்று கதாநாயகிகளும் படத்தை விளம்பரப்படுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.மகிழ்ச்சி. இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து நல்லதை எழுதுங்கள், உள்ளதை எழுதுங்கள், குறைகளை குறைத்து எழுதுங்கள்" என்றார்.

இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேசும்போது,

" திரைப்படமே ஒரு கூட்டு முயற்சி தான். இங்கே ஒரு வேடிக்கையான அனுபவத்தைக் கண்டேன். தயாரிப்பாளர் என்னைச் சகித்துக்  கொண்டிருப்பது சிரமம் என்றார். ஆனால் இயக்குநரோ தயாரிப்பாளரின் நல்ல குணங்களை எடுத்துக் கூறினார். நாங்கள் தாய்நாடு படம் எடுத்த போது சத்யராஜ் சார் நடித்தார். அப்படி அவர் நடித்த போது  நாங்கள் படக்குழுவினர் பழகுவதைப் பார்த்து  மகிழ்ச்சியடைந்தார்,பாராட்டினார். ஏனென்றால் நான் கேமரா மேன் எல்லாம் வாடா போடா என்று பேசிக் கொண்டிருப்போம்.இது சரியாக வரும், வராது என்று எங்களுக்குள் கருத்து மோதல் வரும். இருந்தாலும் அப்படி ஒரு நட்பாக இருந்தோம்.
அதேபோல் இந்தப் படத்தின் குழுவினரைப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் அசோக்குமார் அடைய வேண்டிய உயரத்தை இன்னமும் அடையவில்லை. அடைய வேண்டிய வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும். ஒரு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு, சாப்பாடு சரி இல்லை என்றால் கூட வாசலில் நின்று அந்த  இந்த ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூற முடியாது.விடமாட்டார்கள். ஆனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு இந்தப் படம் நல்லா இல்லை போகாதீர்கள் என்று  சொல்கிற நிலை இப்போது உள்ளது. சினிமாவுக்கு மட்டும் தான் இந்த அவல நிலை இருக்கிறது. இது ஏன் ?ஒரு படத்திற்குப் பலரும்  உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். அது அவர்களுக்கு புரிவதில்லை " என்றார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் பேசும்போது,

"ஒரு நல்ல படத்திற்குக் கதை வேண்டும், நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை என்பேன். ஏனென்றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கலைஞானி கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு  லொள்ளு வேண்டும்?
சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. கதைக்கான காட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில்  வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்துகொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள்  இருந்தார்கள்.

என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும்  வருவார்கள் .எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு.அவர்களை
எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் .

ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு  ஒருவர் வந்திருக்கிறார்.என்னால் முடியவில்லை.அவர் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்தபோது நான் வாய்ப்பு கேட்டு வந்தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்,நான் சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று கூறினார். அப்போது அவரைச் சந்தித்தபோது அவர் 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருந்தார். நல்ல வேளை அவருக்கு நான் வாய்ப்பு தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் படத்திற்காக ஒரு குடும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றாலும்  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.
இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் தயார்.

என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன், யாரும் தருவதில்லை.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தைப் பார்த்து விட்டேன்.உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித்தான் வரவேண்டும் .இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது.

 இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்றுகிறார்கள். அவர்கள் உண்மையான விமர்சகர்களா ?நானும் 40 ஆண்டுகளாக கத்திரிகையாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை உயர்த்தி வைத்தார்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிப் புண்படுத்தும் படியோ, இழிவாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை.
விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

"இந்தத் தயாரிப்பாளரின் நட்பு  பலத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் " என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் இயக்குநர்கள்
காளி ரங்கசாமி, வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடகர் முகமது ரிஸ்வான்.
கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷினி வெங்கட், ஒளிப்பதிவாளர்   
ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன்,
எடிட்டர் வளர் பாண்டியன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிலைத்தன்மை மாநாட்டுக்கான இந்திய சுற்றுப்பயணத்தை சென்னையிருந்து துவங்கிய கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்!



சென்னை: 

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் இன்று சென்னையில் நிலைத்தன்மைக்கான தீர்வுகள்  குறித்த மாநாட்டை நடத்தியது. நிலைத்தன்மை கல்வியை வளர்ப்பது, புதுமையான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது மற்றும் கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நிகழ்வு கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.


கரும்புக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த குறைந்த கார்பன் கட்டுமானப் பொருளான சுகர்-கிரீட் தொழில்நுட்பத்தை இந்த மாநாட்டில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியது. இப்புதிய தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் கார்பன் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. முன்னணி இந்திய நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதன் மூலம், திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதையும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பங்களிப்பதையும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. 


கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் , சீமென்ஸ் இந்தியா மற்றும் பிற முன்னணி நிறுவனங்களின் வல்லுநர்கள், நிலைத்தன்மைத் துறையின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பார்வையாளர்களுக்கு வழங்கினார். மேலும் பருவநிலை மாற்றம், நிலையான ஆற்றல் மற்றும் வட்டப் பொருளாதாரம் போன்ற அழுத்தமான பிரச்சனைகளை குறித்து நிபுணர் குழுக்கள் கூடி விவாதித்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தலைவருமான பேராசிரியர் அமண்டா ஜே. ப்ரோடெரிக் கூறுகையில், "கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும், மேலும் 2024ம் ஆண்டுக்கான  எங்களது இந்திய சுற்றுப்பயணம் வலுவான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும் நிலையான கண்டுபிடிப்புகளை இயக்குவதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். புதுமை மற்றும் நிலைத்தன்மையின் துடிப்பான மையமான சென்னையில் எங்கள் சுற்றுப்பயணத்தை துவங்குவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சுகர்-கிரீட் போன்ற அற்புதமான தீர்வுகளை காண்பிப்பதன் மூலமும், இந்திய நிறுவனங்களுடன் வலுவான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும், அழுத்தமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளவும் மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்று கூறினார்.


கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம், சீமென்ஸ் மற்றும் டி-ஹப் இடையேயான கூட்டு முயற்சி, உயர்கல்வியில் நிலைத்தன்மையை முன்னேற்றுவதற்கும், இந்தியாவில் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு இடையே தாக்கமிக்க கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த சுற்றுப்பயணம் கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், நிலையான கல்வியை மேம்படுத்தவும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சர்வதேச ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய சக்தியாக இந்தியாவின் பங்கை அங்கீகரித்துள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம், முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வீரர்களுடன் கூட்டுசேர்வதன் மூலம், கல்வியாளர்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தைப் பெறவும் எதிர்கால வாழ்க்கைக்குத் தயாராகவும் உதவுகிறது. இந்த சுற்றுப்பயணம், நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராயும். 

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் இந்திய சுற்றுப்பயணம் 2024 நவம்பர் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் மனித வள கண்டுபிடிப்புகள் பற்றிய மூலோபாய வட்டமேசையுடன் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து நவம்பர் 22 ஆம் தேதி வதோதராவில் மகளிர் தலைமைத்துவ விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

JGU and IIT Madras Collaborate to Design Advanced Robot Tour Guide for India’s First Constitution Museum 



Chennai: 

The Indian Institute of Technology Madras (IITM) and O.P. Jindal Global University (JGU) have entered into a noteworthy Memorandum of Understanding (MoU) to collaborate on the development of S.A.M.V.I.D. (Smart Assistant for Museum Visitors and Interactive Displays), an innovative semi-humanoid guide robot designed for the new established India’s First Constitution Museum & The Rights and Freedoms Academy at JGU Campus in Sonipat, Haryana. This initiative aims to celebrate 75 years of the adoption of the Constitution of India. The innovative effort to develop a unique robot is to enhance visitor engagement through advanced technology. 

The Constitution Museum and The Rights & Freedoms Academy is an unparalleled initiative and a landmark institution to be established in the annals of Indian constitutional history. The museum will be inaugurated and dedicated to the nation on 26th November 2024 to commemorate the 75th Anniversary of the adoption of the Constitution of India.

Towards this end, cutting edge technology, AI driven interactive experiences, 3-D installations and progressive displays will be a key part of this novel museum, the first of its kind to be established at any educational institution. The collaboration between the O.P. Jindal Global University and the celebrated centre for technical expertise at IIT Madras will bring to life an unprecedented experience to commemorate the most significant document that defines India as a Republic.

The S.A.M.V.I.D. project will utilise advanced language models making visitor’s experience interactive, providing guided tours and detailed information about the exhibits, including profiles of every member of the Constituent Assembly and their pivotal contributions to the Constitution. This collaboration signifies a significant step towards integrating technology into educational and cultural experiences.  

JGU is establishing India’s First Constitution Museum to enrich the understanding the Constitution with various sections highlighting its significance and the historical debates that shaped its creation. The museum will feature engaging installations and interactive displays that illuminate the journey of the Constitution over the past 75 years. 

The museum will be a key destination for understanding the Constitution, with sections dedicated to each part of the document and its significance. Through many formats—textual, audio-visual, experiential— the museum will ignite visitors’ interest in the Constitution, its evolution and its various components.

The art featured in the museum, anticipated to be a major attraction, will include both pieces from the original handcrafted document and artworks inspired by the Constitution.

JGU’s partnership with IIT Madras will bring the latest in design, robotic application, bespoke hardware systems and application of new technology towards creating a museum which brings history alive.

Speaking on the occasion, Professor V Kamakoti, Director, IIT Madras, said:

“IIT Madras is honoured to contribute to India's constitutional history through SAMVID, a humanoid robot that brings history to life. By blending technology with heritage, we have transformed the Constitution Museum into an immersive experience where visitors can engage with our nation's foundational legacy. SAMVID brings to life the spirit and debates that shaped modern India, offering a unique, interactive journey. At IIT Madras, our technological innovations are designed to enrich experiences in all aspects of life, and SAMVID plays a crucial role in imparting democratic values to future generations.” 

Professor C Raj Kumar, Founding Vice Chancellor of JGU, observed, “The partnership with IIT Madras reflects our dedication to innovation and education. The Constitution Museum, with the incorporation of S.A.M.V.I.D., will serve as a beacon of knowledge for citizens, allowing them to explore the essence of the Constitution in a manner that is both informative and inspiring. As the S.A.M.V.I.D. project develops, it aims to redefine how visitors experience the Constitution Museum at JGU, fostering a greater appreciation for India's constitutional journey through the innovative use of technology where history and tradition will meet technology and innovation.”  

IIT Madras, oversees the implementation of S.A.M.V.I.D. through its Office of Innovation and Entrepreneurship (OIE). The OIE is committed to nurturing entrepreneurial initiatives and fostering innovation through collaboration. The Robotics centre at IIT Madras has a dedicated team of scientists and experts who are pathbreakers in the field of robotics and its application in medical, technical, underwater and teleoperated robots. This will be unique project where a tour guide robot will be designed for the Constitution Museum at JGU.

Professor Venkatesh Balasubramanian, Head, RBG Labs, Department of Engineering Design IIT Madras, who is coordinating this initiative added, “IIT Madras is privileged to contribute to India's constitutional history through SAMVID, a humanoid robot that brings our rich history to life. By blending technology with heritage, we can provide an immersive experience to visitors at the Constitution Museum to engage with our nation's foundational legacy. The Centre for Innovation's technological novel approach and the collaboration between the students of two institutes using a combination of various cutting-edge technologies are designed to enrich experiences in all aspects of life, and aid in playing a crucial role in imparting democratic values to our future generations.”

VIDEO HERE:

உலக நீரிழிவு தினத்தையொட்டி டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் நீரிழிவு பராமரிப்பு, மேம்பட்ட சிகிச்சை அளிக்க ஹெல்த்தி ஏஜிங் கிளினிக், டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ் திட்டம் துவக்கம் 



சென்னை: 

நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், இந்தியாவில் உள்ள வயதான மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஹெல்த்தி ஏஜிங் கிளினிக் மற்றும் டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த 2 புதிய முன்முயற்சி திட்டங்கள் மூலம், இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், அதற்கான சிகிச்சை முறை, தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் கவனம் செலுத்த உள்ளது.

ஆண்டுதோறும் 'உலக நீரிழிவு தினம்' நவம்பர் 14-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று சிறப்பான மருத்துவ சேவையை இந்த மையம் வழங்க உள்ளது. இதன்மூலம் வயதான நோயாளிகள் எங்கும் அலையாமல் தங்கள் வீடுகளிலேயே நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பெறலாம்.

ஹெல்த்தி ஏஜிங் கிளினிக், இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வயதானவர்கள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக துவக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் நீரிழிவு நோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் தனித்துவமிக்க கவனிப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த கிளினிக்கில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு உள்ளது. 

இது குறித்து டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில்:

ஆரோக்கியமான முதுமை என்பது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியதாகும். இது மனதும் உடலும் ஒருசேர ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே ஏற்படும். அந்த வகையில் தனிநபர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக, சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை வழங்குவதில் நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகிறோம். அந்த வகையில், எங்களின் இந்த புதிய கிளினிக், வயதான நோயாளிகள் எதிர்கொள்ளும் மருத்துவ சவால்களை பூர்த்தி செய்து, அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்வதற்காக துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம். மன உறுதி மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, எங்கள் நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வயதாகும்போது முழுமையான, நிறைவான வாழ்க்கையை வாழவும் நாங்கள் அவர்களுக்கு உதவ இருக்கிறோம் என்று தெரிவித்தார்.


டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில்:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திறன் குறைதல், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை உணர்ந்து, இந்தியாவில் முதல் முறையாக எங்கள் நீரிழிவு மையத்தில் ஹெல்த்தி ஏஜிங் கிளினிக்கை துவக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மனச்சோர்வு மற்றும் மறதி சம்பந்தமான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் வகையில் எங்கள் கிளினிக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்கும், தடுப்பதற்கும் அதிநவீன கருவிகள் மற்றும் சிறந்த சிகிச்சை முறைகள் இங்கு உள்ளன. இந்த சிறப்புப் பராமரிப்பின் மூலம், எங்கள் நோயாளிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, மன உறுதி, அறிவாற்றலையும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் ஆலோசகர் டாக்டர். எஸ். உத்ரா கூறுகையில்:

சிந்திக்கும் திறன் குறைதல் மற்றும் மறதி போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது, மேலும் இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய இங்கு அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்களின் வயதான நோயாளிகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது, மேலும் இந்த கிளினிக் மூலம் மேலும் கூடுதலாக கவனித்து அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவை வழங்கும் விதமாக இந்த மையத்தின் சார்பில் 'டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ்'என்னும் திட்டமும் துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அங்கு அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து டாக்டர் மோகன் விரிவாக கூறுகையில்:

நீரிழிவு சிகிச்சையை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் துவக்கி உள்ளோம். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் நாங்கள் 'டாக்டர். மோகன்'ஸ் ஆன் வீல்ஸ்' திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் அவர்களின் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இந்த புதுமையான சேவை குறித்து டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், மருத்துவ சேவையை அணுகுவது என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கும் விதமாக எங்களின் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்க முடியும். இந்த முன்முயற்சியானது சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், சிறந்த நீரிழிவு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

ஹெல்த்தி ஏஜிங் கிளினிக் மற்றும் டாக்டர் மோகன்ஸ் ஆன் வீல்ஸ் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்கள் ஆரோக்கியமாக வாழ டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க மருத்துவ சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் துவக்கப்பட்டு உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சையை எளிதாக பெறும் வகையில் உலக நீரிழிவு தினம் 2024ஐயொட்டி இந்த புதிய திட்டங்களை இந்த மையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் மேம்படுத்தப்பட்ட சிகிச்சையை அனைவருக்கும் வழங்குவதும், சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் ஆகும். சிறந்த மருத்துவ சேவை மற்றும் மனிதநேயமிக்க நோயாளிகள் கவனிப்பு ஆகியவற்றின் மூலம் டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு மேலாண்மை மற்றும் சமூக ஆரோக்கியத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.