Articles by "வானிலை"

வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வடபழனி, கோயம்போடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும்,  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆம் தேதி வடதமிழக கடற்பகுதிகளை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.  

இதன் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், 11ஆம் தேதி அன்று கன முதல் மிக கனமழை வரையிலும், அதி கனமழை வரையிலும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்- வானிலை


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்., தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும்., அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கனமழை பெய்ய வாய்ப்பு!


சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ., பெரியகுளத்தில் 10 செ.மீ., தல்லாகுளத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மழை பெய்யும் இடங்கள்! 

வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும். கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக  நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 11, வால்பாறையில் 9, தேவலாவில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கன மழை எச்சரிக்கை!



சென்னை:

 ''தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி, தமிழக வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்று கன மழையும், மிக கன மழையும் பெய்யும்.சேலம், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும்.


திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, திருத்தணி, 8; காஞ்சிபுரம், வெம்பாக்கம், 7; அரக்கோணம், 5; காஞ்சிபுரம், ஏற்காடு, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, 4; திருப்பத்துார், தர்மபுரி, சோழிங்கநல்லுார், ஆற்காடு, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், வரும், 15ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.