மே 2021

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!


சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பிற்கான இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான தடுப்பூசி தொடக்க முகாம் சிவகங்கை நகராட்சி நகர் நலமையத்தில் நடைபெற்றது. 

முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவுவதையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இலவசமாக முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு பொது சுகாதாரத்துறையின் மூலம் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர்நல மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.

இதில் முதற்கட்டமாக கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், அனைத்து கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மாநில போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அனைத்து அரசுப்பணியாளர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்த்தசாரதி, கலாதேவி, சிவகங்கை நகராட்சிஆணையாளர் அய்யப்பன், பூச்சியியல் நிபுணர் ரமேஷ், சுகாதார ஆய்வாளார்கள் கோதண்டம், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 Coast Guard issues Warning!



As per IMD forecast, a low pressure area is very likely to form over North Andaman Sea and adjoining East Central Bay of Bengal around 22 May 2021. It is very likely to intensify into a Cyclonic storm in the next 72 hrs. It is predicted to move North-westwards and reach Odisha-West Bengal coasts around 26 May 2021 evening. 

Indian Coast Guard (ICG) has initiated extensive pre-emptive measures on Eastern coast and all the ashore, afloat and aviation units are on high alert. The development of weather in Bay of Bengal is being closely monitored and ICG Remote Operating Stations (ROS) in the States/ UTs of Tamilnadu, Puducherry, Andhra Pradesh, Odisha, West Bengal as well as A&N islands are incessantly relaying weather alert messages on MMB radio at regular intervals both in English and in vernacular language to alert Merchant vessels, fishing boats, fisheries survey, Scientific research vessels, Oil rigs, accommodation barges, support vessels for Offshore Development Areas (ODAs), etc. 

Ships at anchorage have also been advised to take shelter and necessary safety measures. Navtex warnings are being issued regularly and International safety Net (ISN) has been activated to alert the vessels in/ transiting through the area. Port authorities, Oil rig operators, Shipping, fisheries authorities and fishermen associations have been informed about the likelihood of cyclone formation and a close liaison and coordination for safety of boats, vessels and fixed platforms is being maintained. 

Though a fishing ban is enforced on the east coast of India, Coast Guard Dornier aircraft and Ships at sea are also broadcasting weather warnings to fishermen operating at sea about likely formation of cyclone and directing them to return to the nearest harbour for safety. ICG has also requested respective State/ UT governments to sensitise fishers and accounting of fishing boats present in harbour and a close liaison is being maintained.

In addition, Coast Guard Disaster Relief Teams (DRTs) with inflatable boats, Life buoys and lifejackets are standby for undertaking Disaster response operations. Medical teams & ambulances have also been kept standby for swift mobilisation.



 THE HOMEPRENEUR AWARDS


“Think like a queen. A queen is not afraid to fail.

“Every woman's success should be an inspiration to another.

“Women don't need to find a voice, they have a voice, and they need to feel empowered to use it, and people need to be encouraged to listen.”

“I am not the first woman to multitask. I am not the first woman to work and have a baby — there are many women who have done this before.” 

So, likewise there are many amazing sayings from women achievers. No pandemic can stop women from keep doing and achieving, just as our Brand Avatar along with Sakthi Masala - Homepreneur award will never miss to recognize them. Here comes the 4th edition, THE HOMEPRENEUR AWARDS (Suyasakthi Virudhugal) with more celebration, power, search, eagerness.

The House of Brand Avatar, decided that the efforts of the unsung women should get some recognition and out of such decision was born THE  HOMEPRENEUR AWARDS (Suyasakthi Virudhugal).  These awards, which have run 3 successful editions, have created a platform to Recognize, Reward, Celebrate and Transform such home-based businesswomen who are carrying on diverse business activities from home starting from baking, tutoring, freelancing, beautician, writing, healthcare services to catering. 

புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளநிலையிலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,74,390 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 076 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 35,16,997 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

இந்தியாவில் இதுவரை 31 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 658 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,73,515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.




310.22 MT of Oxygen delivered to Tamil Nadu in 5 Oxygen Expresses


Tamil Nadu received its fourth and fifth loaded Oxygen Express trains today(17-5-2021).  The Fourth loaded oxygen express from Tata Steel Siding, Kalinganagar (Odisha) with 80 MT LMO in four containe

rs arrived at Inland Container Depot at Tondiarpet, Chennai at 4.55 hours today.  Decanting was completed at 11.25 hrs and the rake with four empty containers was dispatched back to Rourkela for refill.  The fifth loaded oxygen express loaded at Rourkela (Odisha) for Milavittan Station, Tuticorin, Tamilnadu  arrived at the destination at 16:03 hours today delivering 5 tankers carrying 78.82 MT of  LMO.

With this, total oxygen delivered for Tamil Nadu - 310.22 MT.

The Sixth loaded oxygen express for Tamilnadu loaded with 2 containers carrying 40 MT LMO is likely to arrive late in the evening today to Inland Container Depot, Tondiarpet. This has been loaded at Tata Steel Siding, Kalinganagar (Odisha).

The Seventh loaded oxygen express for Tamil Nadu departed from Rourkela at 16:18 hrs today (17-05-2021) carrying 4 tankers with 57.46 MT.  Refilling is underway in 2 more containers at Rourkela today and the same will be dispatched to Inland Container Depot at Tondiarpet, Chennai.

                                 Oxygen Express for Kerala

Kerala received its first loaded oxygen express carrying 6 Oxygen containers (117.9 MT) dispatched from Tata Steel Siding in Kalinganagar, Odisha on 16-05-2021.On completion of decanting at Vallarpadam Container Terminal in Kochi, the rake with six empty containers have been dispatched to Rourkela for refill.

Crisscrossing the country, Indian Railways is picking up oxygen from places like Hapa &  Mundra in the West and Rourkela, Durgapur, Tatanagar, Angul in the East and then delivering it to 13 States upscaling its Oxygen Express operations in complex operational route planning scenarios.  

So far,  521 MT of Oxygen has been offloaded in Maharashtra, nearly 2652 MT in UP, 431 MT in MP, 1290 MT in Haryana, 564 MT in Telangana, 40 MT in Rajasthan, 361 MT in Karnataka, 200 MT in Uttarakhand, 231 MT in Tamil Nadu, 40 MT in Punjab, 118 MT in Kerala and nearly 3734 MT in Delhi. 

In spite of the upcoming cyclone, Railways run early morning 2 Oxygen Expresses from Gujarat to beat high winds and deliver 150 MT of Oxygen to the Nation. One Oxygen Express from Vadodara left at 4 am with 2 RORO trucks & 45 MT of LMO for delivery in the Delhi region. The other Oxygen Express left Hapa at 5.30 am with 6 tankers loaded with 106 MT of Oxygen Relief for deliveries for UP & Delhi region. 

First Oxygen Express from Bokaro to Punjab is also set to reach Phillaur at 7 PM today with two tankers with 41.07 MT OF Oxygen Relief. 

It may be noted that Oxygen Expresses started their deliveries 23 days back on 24th April 2021 in Maharashtra with a load of 126 MT. 

So far, Indian Railways has delivered more than 10300 MT of LMO in more than 600 tankers to various states across the country. Nearly 160 Oxygen Expresses have completed their journey so far and brought relief to various States. Oxygen Expresses have been delivering nearly 800 MT of LMO to the Nation each day for last few days. 

In order to ensure that Oxygen relief reaches in the fastest time possible, Railways is creating new standards and unprecedented benchmarks in the running of Oxygen Express Freight Trains. The average speed of these critical Freight trains is way above 55 in most cases over long distances. 

Running on high priority Green Corridor, with the highest sense of urgency, operational teams of various zones are working round the clock in most challenging circumstances to ensure that Oxygen reaches in the fastest possible time frame. Technical stoppages have been reduced to 1 minute for crew changes over different sections. 



முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது:

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை

தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும் (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர,பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள்

(Shopping Complex & Malls) இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

 Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதிஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும்தொடர்கிறது.


அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில்மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி,ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு / வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

முழு ஊரடங்கின்போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்


சென்னை:

                              முத்துவேல் கருணாநிதியின் மகன்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசின் நம்பிக்கையின் பால் உண்மையான நம்பிக்கையையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், தமிழ்நாட்டு அரசியலமைப்படியும், கடமையை நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும் என் கடமையும் செய்வேன் என்றும் அரசியல் அமைப்பின் சட்டத்தின்படி, ஒருதலை சார்பின்றி, விறுப்பு வெறுப்பின்றி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன் என்றும் அரசின் ரகசியங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ தெரிவிக்க மாட்டேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

125 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற திமுக தனிப்பெரும்பாண்மையுடன் இன்று ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்குப்பின் திமுக ஆட்சி கட்டிலில் அமர்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக அமைச்சர்களை கவர்னரிடம் அறிமுகம் செய்தார் ஸ்டாலின். காலை 9;10 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

கொரோனா காரணமாக எளிய முறையில் கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் , உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , நீதிபதிகள், என விழாவில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணசேன், காங்., தலைவர் அழகிரி, தமிழக காங்., மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மதிமுக பொதுசெயலர் வைகோ, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கொரோனாவால்  நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் 



பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74.

கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.



Samsung Pledges USD 5 Million to India’s Fight Against Covid-19

Samsung has pledged USD 5 million (INR 37 Crores) as its contribution to India’s fight against the current surge of Covid-19, providing donations to central and state governments, and boosting the healthcare sector with essential medical equipment for hospitals, as part of its citizenship initiatives. The decisions have been taken after due consultations with various stakeholders in India and assessing the immediate needs of local administrations. Samsung will donate USD 3 million to the Centre as well as to the states of Uttar Pradesh and Tamil Nadu. 

In addition, to help the healthcare system that has been stretched over the last few weeks, Samsung will provide USD 2 million worth of medical supplies, including 100 Oxygen Concentrators, 3,000 Oxygen Cylinders and one million LDS syringes. These will be offered to the states of Uttar Pradesh and Tamil Nadu.

 LDS or Low Dead Space syringes minimize the amount of drug left in the device after injection, optimizing vaccine usage. Existing products have a large amount of the vaccine remaining in the syringe after use. The technology has demonstrated up to 20% greater efficiency and if existing syringes were to deliver one million doses, LDS syringes could deliver 1.2 million doses with the same amount of vaccine. Samsung has helped the manufacturer of these syringes increase production capacity.


Additionally, as part of its people initiative, Samsung will cover the vaccination costs for over 50,000 eligible employees and beneficiaries in India, with an aim to safeguard their lives, as vaccine doses become available. This will also include all Samsung Experience Consultants, who work at electronics retail stores across the country.

At Samsung, employee health, safety and well-being are our absolute priority. To help employees and their families with information and access to medical supplies as well as hospital facilities and home-care, we have set up in-house facilities and teams across the country.

In April 2020, Samsung had contributed INR 20 crore to India’s fight against the pandemic. This included a donation to the Central government and support to local administration in Noida, where the Company had provided hospitals with medical equipment required in the preventive drive against the pandemic such as thousands of Preventive Masks and Personal Preventive Equipment (PPE) kits.

Samsung salutes all professionals working tirelessly on the frontline of this battle. The Samsung family, which includes our employees across India and our partners and their employees, stand together in this battle against Covid-19.

 

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.