Articles by "தலைப்பு செய்திகள்"

தலைப்பு செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மொத்த வாக்கு சதவீதம்! 


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பிற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

31,150 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலுக்காக 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றபோதும் சென்னையில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விடுமுறையையொட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக தருமபுரி மவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மாநகராட்சி பகுதிகளை விட பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.


மாவட்டங்களும் அவற்றில் பதிவான வாக்கு சதவீதமும்:

அரியலூா் 75.69  (பேரூராட்சி - 81.04,  நகராட்சி- 73.99)

செங்கல்பட்டு 55.30 (பேரூராட்சி - 80.67,  நகராட்சி-63.08, மாநகராட்சி-49.98 )

சென்னை 43.59

கோயம்புத்தூா் 59.61  (பேரூராட்சி -73.83 ,  நகராட்சி- 67.09, மாநகராட்சி-53.61)

கடலூா் 71.53  (பேரூராட்சி 73.26 - ,  நகராட்சி- 72,21, மாநகராட்சி - 68.19)

தருமபுரி 80.49  (பேரூராட்சி - 80.14,  நகராட்சி- 81.37)

திண்டுக்கல் 70.65 (பேரூராட்சி -75.88 ,  நகராட்சி- 67.26, மாநகராட்சி- 64.01 )

ஈரோடு 70.73  (பேரூராட்சி 79.42- ,  நகராட்சி- 74.14, மாநகராட்சி -61.91 )

கள்ளக்குறிச்சி 74.36  (பேரூராட்சி -76.93 ,  நகராட்சி-72.57 )

காஞ்சிபுரம் 66.82  (பேரூராட்சி - 73.63 ,  நகராட்சி- 68.79, மாநகராட்சி-64.25)

கன்னியாகுமரி 65.72  (பேரூராட்சி -67.86 ,  நகராட்சி-63.18, மாநகராட்சி-60.94 )

கரூா் 76.34  (பேரூராட்சி -86.43 ,  நகராட்சி- 6.15, மாநகராட்சி-75.84 )

கிருஷ்ணகிரி 68.52  (பேரூராட்சி - 75.80 ,  நகராட்சி- 75.32 மாநகராட்சி-63.97 )

மதுரை 57.09  (பேரூராட்சி -79.42 ,  நகராட்சி- 71.33, மாநகராட்சி- 53.99)

மயிலாடுதுறை 65.77  (பேரூராட்சி - 69.47 ,  நகராட்சி- 64.07)

நாகப்பட்டினம்  69.19  (பேரூராட்சி -77.30 ,  நகராட்சி-66.68 )

நாமக்கல் 76.86   (பேரூராட்சி -80.83 ,  நகராட்சி- 74.03 )

பெரம்பலூா் 69.11  (பேரூராட்சி -72.47 ,  நகராட்சி- 66.01)

புதுக்கோட்டை 69.61  (பேரூராட்சி -76.94 ,  நகராட்சி- 66.11)

ராமநாதபுரம் 68.03  (பேரூராட்சி -73.18 ,  நகராட்சி- 66.25 )

ராணிப்பேட்டை 72.24  (பேரூராட்சி -82.13 ,  நகராட்சி- 69.10)

சேலம் 70.54  (பேரூராட்சி - 78.49,  நகராட்சி- 76.61)

சிவகங்கை 67.19  (பேரூராட்சி -69.66 ,  நகராட்சி-65.53 )

தென்காசி 70.40  (பேரூராட்சி -73.14 ,  நகராட்சி- 68.63)

தஞ்சாவூா் 66.12  (பேரூராட்சி -72.18 ,  நகராட்சி- 64.95, மாநகராட்சி - 62.45)

தேனி 68.94  (பேரூராட்சி - 72.64 ,  நகராட்சி-65.88 )

நீலகிரி 62.68  (பேரூராட்சி -66.29 ,  நகராட்சி-59.98 )

தூத்துக்குடி 63.81  (பேரூராட்சி -73.52 ,  நகராட்சி- 62.70, மாநகராட்சி- 59.11)

திருச்சி 61.36  (பேரூராட்சி - 74.87,  நகராட்சி- 70.44, மாநகராட்சி 57.25)

திருநெல்வேலி 59.65  (பேரூராட்சி -69.20 ,  நகராட்சி- 67.22, மாநகராட்சி- 52.45)

திருப்பத்தூா் 68.58  (பேரூராட்சி -73.45 ,  நகராட்சி-67.89 )

திருப்பூா் 60.66  (பேரூராட்சி  75.34- ,  நகராட்சி- 66.35, மாநகராட்சி-55.40)

திருவள்ளூா் 65.61  (பேரூராட்சி -74.92 ,  நகராட்சி-68.26, மாநகராட்சி- 59.13)

திருவண்ணாமலை 73.46  (பேரூராட்சி -80.07 ,  நகராட்சி-70.26 )

திருவாரூா் 68.25  (பேரூராட்சி - 72.69,  நகராட்சி-66.28 )

வேலூா் 66.68  (பேரூராட்சி -79.09 ,  நகராட்சி-66.00, மாநகராட்சி -65.50 )

விழுப்புரம் 72.39  (பேரூராட்சி -79.67 ,  நகராட்சி- 69.49)

விருதுநகா் 69.24  (பேரூராட்சி -76.55 ,  நகராட்சி- 67.12, மாநகராட்சி- 68.47)

மொத்தம் 60.70



தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். மேட்டுக்குப்பாம் மின்மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
78 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

ஜனவரி 26 கலை நிகழ்ச்சிகள் ரத்து!  


சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஜனவரி 26-ந்தேதி காலை 8 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக்குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில், கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நிவர் புயல்: மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்!  


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.55 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடிநீர் திறக்க உள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமடங்கிலும் உள்ள காணுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு !

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும் என கூறினார்.




74-வது சுதந்திர தினம் 

சென்னை:

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.

அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்தார்.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.