ஜூலை 2022

166 INDIAN CADETS AND 30 FOREIGN CADETS COMMISSIONED!






An impressive military parade on the revered Parameshwaran Drill Square at Officers Training Academy, Chennai marked the commissioning of 125 Gentlemen Cadets and 41 Women Cadets in various Arms and Services of India Army. Four Gentlemen Cadets and 26 Women Cadets from Friendly Foreign Countries also successfully completed their training. 

The Parade was reviewed by Major General Abdulla Shamaal, Chief of Defence Forces, Maldives National Defence Forces, who also presented the Sword of Honour to the best all round cadet and meritorious medals to the toppers. The Reviewing Officer complimented the officer cadets and Staff of the Officers Training Academy on the excellent all-round standards achieved. The Reviewing Officer also mentioned Cadets about the technological advancements and influx of information, opinion and option in the conflicts in the recent time.

 And he stated the necessity of synthesising them to take timely and pragmatic decisions as future leaders. The impressive drill of Officer Cadets marching to enthralling martial tunes left the audience spell-bound. It was a proud moment for the officer cadets and their parents, as also the Instructors and Administrative Staff of Academy, who over the last 11 months of integrated training have seen the transformation of these proud men and women into future leaders of the Indian Army.


Impiger Technologies Presents UNQUIZZED 3.0




Chennai: 

Mpiger Technologies, a leading Digital Transformation organisation presented the third edition of the annual open quiz – UNQUIZZED. The event was hosted by Raja Ravi Shankar, the Quiz Master from the regional favourite Chennai Quiz Factory in association with SRM Institute of Science & Technology (formerly known as SRM University) and SRM College of Management. This year's edition saw a participation from over 120 professional quizzer from across 12+ cities like Bengaluru, Thrissur, Coimbatore, Pondicherry among others. 

The quiz was held at the auditorium of the SRM College of Management in Ramapuram, Chennai. The quiz was divided into two rounds – Prelims and Finals. The prelims round consisted of 30 questions which had to be answered in the given time. The top 9 participants from this round qualified for the finals. In the Finals, contestants participated in 5 rounds of questions. The event was presided over from Impiger Technologies by Saravanan.T, President - HR & CHRO and Saravanakumar R, Director of Marketing & Communications and from SRM College of Management by Dr.Sundar, Dean &Dr.Arulmoli, Head of MBA. 

The first prize included a cash prize worth Rs 15,000 and a certificate while the first & second runner-up received a cash prize worth Rs 10,000 and Rs 5,000 along with a certificate respectively. “We are extremely happy with the response we have received for UNQUIZZED 3.0! At times where Google rules for answers, it was heartening to see the depth of talent from the participants who made this event so exciting. We look forward to focusing on curating the knowledge powerhouse with more such initiatives in the future” said Saravanan T, President - HR & CHRO, Impiger Technologies.

புத்தம் புதிய தொடர் ‘மந்திரப் புன்னகை’ – ஆகஸ்ட் 1, 2022 முதல்.....




செஸ் விளையாட்டை திரைக்கு கொண்டு வந்து, விளையாட்டின் சிப்பாய் யார் என்று பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும், அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, மந்திரப் புன்னகை என்னும் புத்தம் புதிய தொடரை ஒளிபரப்ப உள்ளது. இது ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் முற்றிலும் காயத்ரி (நடிகை மெர்ஷீனா நீனு), கதிர் (ஹுசைன் அகமது கான்) மற்றும் குரு விக்ரம் (நியாஸ் கான்) ஆகிய மூன்று பேரைச் சுற்றியே வருகிறது. 

இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மர்மமான சம்பவங்களை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே இதன் கதையாகும். காதல், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த இந்த தொடரை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு டியூன் செய்யுங்கள் இந்த புத்தம்புதிய தொடரை பார்த்து மகிழுங்கள்.

 

இந்த தொடரின் நாயகி காயத்ரிஒரு அழகான மற்றும் புத்திசாலியான பெண் ஆவாள்அவள், காணாமல் போன தனது சகோதரியை (நடிகை நயனா ராஜ்) கண்டுபிடிக்கும் தேடலைத் தொடங்குகிறார். அதேசமயம், மாபியா மன்னன் குரு விக்ரமை சிறையில் அடைப்பதே தனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்படும் காவல்துறை அதிகாரி கதிரையும் காதலிக்கிறாள். இந்த தொடர் காதல், சஸ்பென்ஸ் மற்றும் மர்மம் நிறைந்ததாக இருக்கும். 

 

புதிய தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் ராஜாராமன் கூறுகையில், புதிய கருத்துகளை முன்னிலைப்படுத்தும் எங்களின் நெறிமுறைகளை ஊக்குவிக்கும் விதமாக, எங்கள் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக மந்திர புன்னகை சேர்ந்து இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தொலைக்காட்சி துறையில் முதல் முயற்சியாக இந்த தொடர் ஒளிபரப்பாகும் காலத்தை வரையறுத்துள்ளோம். மந்திர புன்னகை பன்முக அடையாளங்களுடன் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களைக் கொண்ட காதல், குற்றம் மற்றும் மர்மம் நிறைந்த ஒரு தொடராகும். இந்த தொடர் பார்வையாளர்களை நிச்சயம் கவர்ந்து இழுக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

 

இது குறித்து இந்த தொடரின் இயக்குனர் விக்கிரமாதித்தன் கூறுகையில், இதன் கதை ஒரு பெண்ணை சுற்றி வருகிறது. பாசாங்கு மற்றும் துரோகம் இழைக்கப்பட்டு காணாமல் போன தனது சகோதரியைக் கண்டுபிடிக்க அவள் எப்படி அனைத்து சவால்களையும் சமாளிக்கிறாள் என்பதே இதன் கதையாகும். இந்த தொடரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை ஆகும், மேலும் அழுத்தமான கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதி வரை பார்வையாளர்களை ஆர்வமாக இருக்கச் செய்யும். நாங்கள் இந்த தொடரை எடுக்கும்போது அவை எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதை நிச்சயம் அனுபவிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

 

நடிகை மெர்ஷீனா நீனு கூறுகையில், இந்த தொடரில் காயத்ரி என்ற புத்திசாலி மற்றும் வலிமையான பெண்ணாக நடிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் மன தைரியத்துடன் போராடும் பெண் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து இறுதியில் வெற்றி கொள்வாள். தன் சகோதரி மீது அவள் வைத்திருக்கும் பாசம் மற்றும் காதலன் மீது அவள் வைத்திருக்கும் அன்பு நிச்சயம் பார்வையாளர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நான் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும் என்று தெரிவித்தார்.

 

இந்த புதிய தொடர் ஆகஸ்ட் 1 முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடரை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்.



The Legend Movie Review: 'தி லெஜண்ட்' எப்படி இருக்கு?! 




சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

உலக பிரபலமான விஞ்ஞானியான டாக்டர் சரவணனை(லெஜண்ட் சரவணன்) சுற்றி கதை நகர்கிறது. ஆன்டிபயாடிக்ஸ் துறையில் புரட்சி செய்த டாக்டர் சரவணன் தன் மக்களுக்காக கிராமத்தில் இருந்தே வேலை செய்கிறார். நீரிழிவால் அவதிப்பட்டு வந்த சரவணனின் நண்பர்(ரோபோ ஷங்கர்) இறந்துவிடவே, அந்த நோய்க்கு மருந்து கண்டிபிடிக்க முடிவு செய்கிறார். 

ஆனால் சரவணனின் முந்தைய ஆராய்ச்சிகளால் பாதிக்கப்பட்ட ஃபார்மா மாஃபியாவுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் சுமன், ராகுல் தேவ் உள்ளிட்டோரை வைத்து அவருக்கு தனிப்பட்ட முறையில் இழப்பை ஏற்படுத்தி சரவணனின் ஆராய்ச்சியை நாசம் செய்ய முடிவு செய்கிறார்கள். இறுதியில் அவர் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா..?  என்பதை விளக்குவதே தி லெஜண்ட். 

லோகேஷன்கள் அனைத்தும் சூப்பர். பாடல்களில் ஹாரிஸூக்கான முத்திரை இல்லாவிட்டாலும், படத்தோட இணைந்து பார்க்கும் போது பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையில் பல இடங்களில், ஒரு இடத்தில் பயன்படுத்திய இசையை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்திருக்கிறார். இவ்வளவு சிக்கல்களிலும் படத்தை தாங்கி நிற்பது அனல் அரசின் சண்டை இயக்கமும், வேல் ராஜின் ஒளிப்பதிவும்தான். 

திரைக்கதையில்  சுவாரஸ்யம் அல்லாமை, தேவையில்லாத பஞ்ச் வசனங்கள், பாடல்களை வலிந்து திணிந்திருப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்திருந்தால் அண்ணாச்சி திட்டு வாங்காமலாவது தப்பித்திருக்கலாம். 

முகத்தில் நடிப்பு கலை கட்டாயம் சினிமாவில் இருக்க வேண்டும். அண்ணாச்சி மீண்டும் படம் எடுத்து நடித்தால் முதலில் நடிப்பு பயிற்சி எடுத்து நடித்தால் நல்லதாக இருக்கும். 

மொத்தத்தில் இந்த 'தி லெஜண்ட்' பண ஆட்டம்.....

Actress Sneha celebrated her father’s birthday with special children!




The smiling beauty! The Queen of Smile! Ennobled with these graceful acclaims, actress Sneha owns a precious stature in the movie industry. She decided to take a break from the acting profession, during the peak of her career, with sheer decision towards settling into family life, thereby entering wedlock with actor Prasanna, and are now the most adorable parents to two loveable children. She is back into the industry, by choosing good content-driven roles and scripts. 

Today, actress Sneha’s father Rajaram turned 70, and marking the auspicious occasion of his birthday, she wanted to give him a delightful surprise. As a sweet gesture of expressing it, she took her father to Shelter Home at Red Hills and celebrated his birthday along with special children there. Witnessing such a heart-warming surprise, Sneha’s father Rajaram was in emotional glee. 




He celebrated the occasion by cutting the birthday cake amidst the cheerful wishes of the special children. They also served delicious Biriyani to the children and made this occasion lovelier. 

Both the grandchildren of Rajaram, Sneha’s children – Son Vihaan and Daughter Aadhyantaa were present for the occasion as well. Both of them served the Biriyani to the children out there, and also gifted books to them.

ஆடி மாதத்திற்கு ஏற்ற ஆன்மீக பாடல் ’படவேட்டம்மன்’ சிம்பொனி மியூசிக்கில் வெளியானது!




அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது.

‘படவேட்டம்மன் என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைக்க, வளர்ந்து வரும் இளம் திரைப்பட நடிகை ஹரினி இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலை குணசேகரன் இயக்கியுள்ளார்.

பிரபல இசை நிறுவனமான சிம்பொனி மியூசிக் வெளியிடும் ‘படவேட்டம்மன்’ வீடியோ பாடல் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேன்டெர்னில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஏ.ஆர். ரமேஷ், மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், சிம்பொனி மியூக் நிறுவனத்தின் CEO ஸ்ரீ ஹரி -  விகேஷ்  மற்றும் இசை ஆல்பத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சிம்பொனி மியூசிக் CEO ஸ்ரீ ஹரி பேசுகையில், “படவேட்டம்மன் பாடல் பற்றி என்னிடம் நண்பர் கூறினார். நாங்கள் பொதுவாக எங்கள் நிறுவனத்தில் பிறர் தயாரித்த பாடல்களை வெளியிடுவதில்லை. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பாடல்களை மட்டுமே வெளியிடும். காரணம் எங்கள் நிறுவனத்திற்கு என்று ஒரு தரம் இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர் சுனிலை அழைத்து வாருங்கள் பார்க்கலாம், என்று கூறினேன். ஆனால், பாடலை பார்த்த உடன் நான் மெய் மறந்து விட்டேன். நிச்சயம் இந்த பாடலை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறோம், என்று ஒப்புக்கொண்டேன். அந்த அளவுக்கு பாடலும் அதை படமாக்கிய விதமும் சிறப்பாக இருந்தது. “ என்றார்.




இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ் பேசுகையில், “பொதுவாக மேடையில் பேசும் பழக்கம் இல்லை. இந்த பாடல் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த பாடலை இயக்கிய குணசேகரன் எனது சிஷ்யர் தான். பாடல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

நடிகை ஹரினி பேசுகையில், “இந்த வாய்ப்பை கொடுத்த ரமேஷ் சார் மற்றும் குணா சாருக்கு நன்றி. இவ்வளவு பெரிய பாடலை என்னை நம்பி கொடுத்த தயாரிப்பாளர் சுனில் சாருக்கு மிகப்பெரிய நன்றி. நடன இயக்குநர் விஜயலட்சுமி எனக்கு சிறப்பாக நடனம் கற்றுக்கொடுத்து ஆட வைத்தார், அவருக்கும் என் நன்றி. இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

நடன இயக்குநர் விஜயலட்சுமி பேசுகையில், “தயாரிப்பாளர் சுனில் இந்த பாடல் பற்றி என்னிடம் சொல்லிய போது, எனக்கு வழக்கமான அம்மன் பாடல் தான் நினைவுக்கு வந்தது. நான் இதுவரை அம்மன் பாடலுக்கு நடனம் அமைத்ததில்லை. இருந்தாலும், பாடல் பற்றி கேட்டதுமே வேப்பிலை, தீச்சட்டி, மஞ்சள் புடவை, ஆக்ரோஷம் என்று என் கற்பனை பயணித்தது. ஆனால், பாடலை கேட்ட பிறகு அனைத்தும் மறந்து விட்டது. காரணம், பாடல் மிக இனிமையாகவும், அமைதியாகவும் இருந்தது. அதேபோல், இயக்குநர் குணசேகரனும், தயாரிப்பாளர் சுனிலும் இந்த பாடல் வழக்கமான அம்மன் பாடலாக இருக்க கூடாது என்றார்கள். அதேபோல் இந்த பாடலில் சோலோ நடனம் ஆடப்போவது யார்? என்று கேட்டதும் ஹரினி புகைப்படத்தை காண்பித்தார்கள், அவரை பார்த்ததும், சார் இந்த பொண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள், நிச்சயம் இந்த பாடலை நான் செய்கிறேன், என்று கூறிவிட்டேன். அதேபோல் பாடல் வரிகளும் மிக நன்றாக இருந்தது. ஆனால், பாடல் வரிகளை எழுதியவர் பெரிய மனிதராக இருப்பார் என்று பார்த்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது முத்துக்குமார் இளைஞர் என்று, மிக சிறப்பாக எழுதியுள்ளார். இந்த பாடலை ஒரே நாளில் படமாக்கி முடித்தோம். தயாரிப்பாளர் சுனில் இவ்வளவு பெரிய விழா நடத்தி பாடலை வெளியிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு யூடியூபில் வெளியிடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த பாடலுக்கும், பாடலில் பணியாற்றியவர்களுக்கும் அவர் மிகப்பெரிய மரியாதை செய்திருக்கிறார். அவர் இந்த பாடலோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பல பாடல்களை தயாரிப்பதோடு, திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும், அதில் நாங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும், என்று விரும்புகிறோம்.” என்றார்.

 

பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி பேசுகையில், “படவேட்டம்மன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த போது சுனில் யார்? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன், வளர்ந்தவர்களுக்கு வாலாக இருப்பதை விட, புதியவர்களுக்கு தோளாக இருக்க வேண்டும், என்று. அதனால் தான் அழைத்தவுடன் வருவதாக ஒப்புக்கொண்டேன். இந்த மேடையில் இருக்கும் சிம்பொனி சகோதரர்கள், தயாரிப்பாளர் சுனில், ஹரினி, ஏ.ஆர்.ரமேஷ், பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். இந்த பாடலை பார்த்ததும் இது 80, 90 களில் எடுக்கப்பட்ட பாடல் போன்று தெரிந்தது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருந்தது. மிக அழகான வரிகளை முத்துக்குமார் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் சுனிலுக்கு விட்டகுறை தொட்டகுறை இருந்ததால் தான் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். அவருக்கும் படவேட்டம்மனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ரேணுகா தேவி தாயாரின் கோவிலில் அவருடைய தாத்த பிராதான அர்ச்சகராக இருந்தவர். அந்த தொடர்பு தான் சுனிலை இப்படி ஒரு பாடலை தயாரிக்க செய்திருக்கிறது.

 

சுனில் தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறார். உடும்பன் என்ற திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார். இப்போது இந்த பாடல் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். அவருடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். சுனிலுக்கு அன்னை பரசாக்தியுடைய வாழ்த்துகள்.

ஆடி மாதம் என்றால் ரேணுகா அம்மாளுக்கு மிகவும் விசேஷமான மாதம். ஆடி அமாவாசை அன்று கோடான கோடி பக்தர்கள் அவருடைய சன்னதியில் கூடுவார்கள். அப்படிப்பட்ட ரேணுகா அம்மாவின் வரலாற்றை சொல்லும் விதமாக, தனக்கு இட்ட கட்டளையாக சுனில் தயாரித்திருக்கும் இந்த வீடியோ இசை பாடல் ஏழு சுரங்களாகவும், எட்டு திசைகளிலும் வலம் வரும். இந்த பாடலை பெண்கள், பக்தர்கள் காது கொடுத்து கேட்பார்கள் தன்னிலை மறப்பார்கள், இந்த பாடல் பெரிய வெற்றி பெறும் என்று நான் சொல்வது மக்கள் குரல் அல்ல, மகேஷன் குரல் என்று சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசுகையில், “நான் அம்மனின் தீவிர பக்தன். மாதம் மாதம் திருவேற்காடு கோவிலுக்கு சென்று வருவேன். அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன். எம்.ஜி.ஆர் இருந்தவரை இது தொடர்ந்தது. நான் அம்மனின் செல்ல பிள்ளை. இந்த படவேட்டம்மன் பாடல் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாடலில் நடனம் ஆடிய ஹரினியும், அம்மனும் ஒன்றாக இருந்தார்கள். நான் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாடல் வரிகளும், இசையும், பாடிய விதமும் சிறப்பு.

தயாரிப்பாளர் சுனில் நல்ல மனிதர், பாடலை மிக சிறப்பாக தயாரித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவருடைய மனைவி மும்தாஜ் இருந்திருக்கிறார். மும்தாஜ் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். இதற்காகவே இவர்களை நாம் பாராட்ட வேண்டும். சுனில், மும்தாஜ் மற்றும் அவர்களுடைய மகள்கள் என அவர்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக படவேட்டம்மன் ஆசியுடன் வளமாக  வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

VIDEO HERE:

'செஞ்சி' பட குழுவினர்களை பாராட்டிய இயக்குநர் கே. பாக்யராஜ் , இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன்!




சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் 'செஞ்சி'.

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று  பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் 'செஞ்சி'. 

இதை  வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  'செஞ்சி' என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.

இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். 

அவர் பேசும்போது:

''எனது மனதில்  சினிமா கனவு இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கைக் கடமைகளை நிறைவேற்றிய பின் குடும்பத்தின், பிள்ளைகளின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் இதில் இறங்கினேன். அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்கு இரண்டு வருடம் நாங்கள் தேடி அலைந்தோம். அந்த அளவிற்கு ஒரு தேடலுடன் இதில் ஈடுபட்டோம். இதுவரை கேமரா போகாத பல இடங்களில் இந்தப் படத்திற்காக நாங்கள் பயணப்பட்டு படப் பதிவு செய்துள்ளோம்.   காலை 6 மணிக்கு கிளம்பி 2 மணி நேரம் மலையில் காடுகளில் என்று நடந்து 8 மணிக்குச் சென்றடைந்து, வனத்துறை அனுமதி கொடுத்த நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரை படப்பிடிப்பு  நடத்தியிருக்கிறோம். நாங்கள் போன சில நிமிடங்களில் யானை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்  சூழலில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வனத்துறை மிகவும் பாதுகாப்பாக உதவியாகவும் இருந்தது.

காட்டில் மட்டுமல்ல கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் எடுத்திருக்கிறோம் . பாண்டிச்சேரி, மலேசியா என்றும் பயணம் செய்து எடுத்துள்ளோம். சினிமா நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும்  போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்து இதில் சொல்லப்பட்டுள்ளது. சினிமா என்பதை இரண்டாவது கல்வி என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் ஒரு சிறு விஷயம்  வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். சினிமா மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இதை எடுத்திருக்கிறேன்.  .

இதில் யார் நடிப்பது  என்று பார்த்த போது பிரபல கதாநாயகர்கள் என்றால் நிபந்தனைகள் போடுவார்கள். அது சரிப்பட்டு வராது என்று நினைத்தேன். தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்றால் அதுவும் அப்படித்தான்,கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நானே நடித்து இயக்கித் தயாரித்தேன். நான் சினிமா எடுக்கும்  விஷயத்தை அப்படியே குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் ஆதரவுடன் இந்தக் களத்தில் இறங்கினேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யா இரண்டு மாதம் வந்து தங்கியிருந்து அழகாக நடித்துக் கொடுத்தார். இது வழக்கமான சினிமா போலிருக்காது. ஆக்சன் சென்டிமென்ட், போன்ற வியாபார நோக்கத்தில் இருக்காது .இவற்றையும் தாண்டி சினிமாவில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறேன்.அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையை வித்தியாசமான களத்தில் உருவாக்கி இருக்கிறோம்.  ஊடகங்கள்  ஆதரித்து ஊக்கப்படுத்தி விட வேண்டும். ஏனென்றால் ஊடகங்கள் தான் விடியலுக்கான சூரியக் கதிர்கள் என்று நான் நம்புகிறேன். ஆதரவு தர வேண்டும்'' என்று கூறினார்.




இயக்குநர் பேரரசு கூறும்போது:

"சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை. சினிமாக் கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக  இருக்கிறது.  இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு .அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார்.ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன். திருப்பாச்சியில்  பழுக்கக் காய்ச்சிய  அரிவாளை அந்தத் தலைப்பில் வைத்திருப்பேன். சிவகாசியில் பட்டாசை வைத்து வடிவமைத்திருப்பேன். திருண்ணாமலையில் லிங்கங்களாகக் காட்டி இருப்பேன். இவர்   தலைப்பில் செஞ்சிக் கோட்டையை நினைவூட்டும்படி  வடிவமைத்துள்ளார். செஞ்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று ஞாபகங்கள் தான். செஞ்சியின் அரசன் தேசிங்கு ராஜா கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரை வீழ்த்த முடியாத போது அவர் சவாரி செய்த குதிரையை வீழ்த்தினால் அவரைக் கொன்று விடலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். எனவே அவரது  குதிரை நீலவேணியை வெட்டிச் சாயத்தார்கள் .பிறகு ராஜாவைக் கொன்றார்கள்.செஞ்சியில் மன்னருக்குச் சமாதி இருப்பது போலவே அவரது நண்பன் அகமத்கானுக்கும்  அவர் சவாரி செய்த குதிரையான நிலவேணிக்கும் சமாதி உள்ளது .இதன்மூலம் விலங்குகளுக்கு வரலாற்றில் உள்ள இடத்தை நம்மால் அறிய முடியும். இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள் .அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று  செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும்" என்று வாழ்த்தினார்.




தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது:

"நான் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது பரபரப்பாக பேசுவதாகச் சொல்வதுண்டு. இப்போதெல்லாம் நான் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் யூடியூப் சேனல்களில் அது வந்து விடுகிறது. நான் வாழ்த்தவும் செய்வேன். நல்ல காரியங்கள் செய்யும்போது வாழ்த்துவேன். தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுவேன். தவறுகளை சுட்டிக்காட்டி காட்டுவது தானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவது தர்மம். தவறான வழியில் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்று நான் நடிகர்களை மட்டும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழல், மோசடிகள் செய்து தவறான வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியாமல் வெறும் காகிதக் குப்பைகளாக போட்டுவிட்டு செல்லும் பலருக்கும் நான் சொல்கிறேன். நீங்கள் கடவுளைத் தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டாம். அன்றாடம் சிரமப்படும் ஏழைகளைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் .அவர்கள் உங்களைக் கடவுளாக நினைப்பார்கள். தர்மம் செய்யுங்கள்.அலெக்சாண்டர் இறந்தபோது  சவப்பெட்டியில் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வெறுங்கையோடு தான் சென்றான். தர்மம் செய்யுங்கள். ரோட்டரி சங்கத்திலிருந்து நன்றாகச் சேவை செய்துவிட்டுத் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துவிட்டு ரோட்டோரத்திற்கு சென்றிருக்கிறார்கள். நடு ரோட்டுக்குச் சென்று இருக்கிறார்கள். நான் மாநகராட்சி பள்ளி ஆசிரியராக இருந்தவன்.  என்னை ஒருத்தர் ஏமாற்றி சினிமாவுக்கு இழுத்து விட்டார். 1983ல் பிரம்மச்சாரிகள் என்ற படம் எடுத்தேன். 7 லட்சம் செலவானது 5 லட்சம் இழப்பு, 2 லட்சம் கடன் .மொத்தமும் காலி. 1990-ல் நம்ம ஊரு மாரியம்மா என்ற படம் எடுத்தேன். சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் லாபம் கிடைத்தது. பிறகு தங்கமான தங்கச்சி என்று சரத்குமாரை நாயகன் ஆக்கி படம் எடுத்தேன்.10 லட்சம் லாபம் கிடைத்தது. பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் படம் எடுத்து,75 லட்சம் இழப்பு வந்தது. பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை  படம் எடுத்தேன்.ஒன்றே கால் கோடி இழப்பு. 

இப்படி ஒன்பது படங்களை எடுத்தேன். நாலரைக் கோடி காலி. சினிமா உலகம் நாணயம் இல்லாமல் இருக்கிறது .நான் இப்போது பைனான்ஸ் செய்து வருகிறேன். கொடுத்த பணத்தை வாங்குவதற்கு இழுத்தடிக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டிய சங்கத்தில் யார் இருக்கிறார்கள்?முதல் திருடனே தயாரிப்பாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதெல்லாம் சரியானால்தான் தான் சினிமா வளரும். தமிழ்ப் படங்கள் எல்லாம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கின்றன. இப்படி நடக்கும் தவறுகளை எல்லாம் நான் சுட்டிக்காட்டினால் என்னை விமர்சிக்கிறார்கள்.

நான் விஷாலை பல முறை விமர்சித்து இருக்கிறேன். லத்தி படத்தின் விழாவுக்காக விநியோகஸ்தர் சங்கத் தலைவர் என்கிற முறையில் என்னை அழைத்தார்கள். போனேன், அப்போது விஷாலை நான் பாராட்டிப் பேசினேன். அப்போது அவ்விழாவில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளை விஷால் வழங்கினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிச் சமூகத்திற்கு நல்லது செய்யும் போது அவர்களை பாராட்டத் தானே வேண்டும்? விஷாலின் இப்போதைய போக்கு சரியாக உள்ளதாக நான் நம்புகிறேன் .அதனால் நான் அவரைப் பாராட்டினேன் அவர்கள் பெற்றோர்களுக்கெல்லாம்  இத்தனை நாள் விமர்சனம் செய்து கொண்டிருந்தவர் பாராட்டுகிறார் என்று மகிழ்ந்தார்கள். தவறுகளை சுட்டிக்காட்டவும் நல்லது நடக்கும்போது பாராட்டவும் தயங்க மாட்டேன் . தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவதுதானே தர்மம்? இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைய வேண்டும். கணேஷ் சந்திரசேகர் இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும்" என்று வாழ்த்தினார்.




படத்தில் நடித்துள்ள ரஷ்ய நடிகை கெசன்யா பேசும்போது:

"இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்து இருந்தது.நான் இந்தப் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அனைவருக்கும் நன்றி." என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது:

"இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. வெற்றிகரமான மூன்றாவது நாள், வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று  ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த  செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள் .இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின்  தொந்தரவுகள் இல்லாமல் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார். இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான்  சினிமாவுக்கு வர முடியும் என்று   நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. இவரது விடாமுயற்சி பாராட்டுக்குரியது.ராஜன் சார் தன் வாழ்க்கைக் கதை முழுவதையும் கூறினார்.

இவ்வளவு  இழப்பு என்று ஆன போதும் அதே நேரம் அவர் சினிமாவில் வட்டிக்கு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. இதிலிருந்து சினிமாவில் விழுந்தாலும் , முடிந்தால் எழவும் முடியும் என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு ராஜன் தான் உதாரணம். இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது அவர் மைத்துனர் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார். ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும் தானே? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம். படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது .இப்போது கூட கேரளாவில் பல கோயில்கள்  திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப்  பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் முத்து கணேஷ், எல். வைத்தியநாதன் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எல்.வி என்பவர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு வாழ்த்துகள். படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குநரே   நடித்துள்ளார் .தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை .படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய  முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள்  வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே,  இசையமைப்பாளர்கள் முத்து- கணேஷ் ,பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர்  வைத்தியநாதன், மலேசியாவில் இருந்து வந்திருந்த தயாரிப்பாளரின் மைத்துனர் டத்தோ டாக்டர் கமலநாதன் , தயாரிப்பு நிர்வாகி தில்லை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் தினேஷ் சந்திரசேகரின் மகன் அஸ்வின் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Jothi Movie Review: 'ஜோதி' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?! 



'ஜோதி' உண்மை சம்பவம்.... 

நான்கு நாளில் பிரசவம் ஆகவிருக்கும் டாக்டர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி ஜோதி (ஷீலா) ஜோதியின் வயிற்றை அறுத்து குழந்தையை திருடி செல்கிறான் மர்ம ஆசாமி… இதை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ( வெற்றி) கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்து. துருவி துருவி விசாரணை நடத்துகிறார். மர்ம ஆசாமியை நெருங்கியது போல் தோன்றினாலும் அவனை கண்டறிய முடியவில்லை. 

பலர் மீது சந்தேகப்பார்வை விழுந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக உறுதி செய்யமுடிய வில்லை.ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஜோதியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தது யார்? அப்படி செய்ய சொன்னது யார்? திருடனை போலீஸ் பிடித்ததா? என்பது படத்தின் மீதி கதை.... 

போலீஸ் அதிகாரியாக வரும் சக்தி சிவபாலன், போலீசுக்குரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் வலம் வருகிறார். எந்நேரமும் வழக்கு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற முகத் தோற்றம் பார்வையாளர்களை ஒருவித பரபரப்புக்குள் ஆழ்த்துகிறது. ஜோதி (எ) அருள்ஜோதியாக, நிறைமாத கர்ப்பிணியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான, பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கத்திலும் தாய்மை உணர்வை துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். 

குழந்தைகளைக் கடத்தும் கயவனுக்கு பாடம் கற்பிக்க அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவு புல்லரிக்க வைக்கிறது. தலை வணங்கச் செய்கிறது. தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, மிக முக்கியமான ’ரங்கா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, கதை ஓட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார். 

செஸி ஜெயாவின் ஒளிப்பதிவும் ஹர்ஷவர்தன் ராமேசுவரின் இசையும் ஜோதிக்கு பலம் சேர்க்கின்றன. யேசுதாஸ் குரலில் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் 'யார் செய்த பாவமோ.... என்ற பாடல் சரியான இடத்தில் போடப்பட்டிருந்தால் மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். குற்றவாளி யார் என தொடங்கும் விசாரணையின் போது, படம் கூடுதல் வேகம் எடுக்க வேண்டிய இடங்களில் அழுத்தமில்லாத காட்சிகளால் வேகமும் குறைகிறது. 

மொத்தத்தில் இந்த 'ஜோதி' திருடனுக்கு சுடும்....




Bharathanatyam Arengetram with a difference were held in Chennai!

Chennai:

Chennai has witnessed many Bharathanatyam recitals & Arengetram and it is very common scene being the cultural capital of our country. Chennai is home to various sabha promoting performing artists of this ancient dance form of India. The one performed by Neha was with a Theme “Sampratti” which means Legacy and with a long-term mission to elevate the dance form and Tamil Culture to various countries in the Middle East & across the globe. The performer and Guru, their family are NRIs settled in Dubai (UAE).

 About the performer - Neha Krishnan 

Neha Krishnan, a 15 years old - grade 11 NRI student from Dubai (UAE) performed her Arengetram on 24th July, 2022 (Sunday) in Rasika Ranjani Sabha (RR Sabha), Mylapore, Chennai. Born to NRI parents Lakshmi Priya (mother), Anantha Krishnan (father) living in Dubai for almost 25 years, Neha was curious about Tamil culture and Bharathanatyam when she was 5 years old. She started her journey under the tutelage of Lakshmi Venkatesh, a Bharathanatyam guru based in Dubai. Neha is trained in Ballet dance (western dance) from the London School of Dance and received grade 6 completion certificate from the Royal Academy of Dance, UK. She is also a recipient of Duke of Edinburgh Award.  

Neha’s Social responsibility: 

 Neha believes in social service and is very much committed as responsible citizen and wish to give back to society. She care for society and truly inspired by the idea of co-existence. Neha is active in  'best buddy' program. Under this program, a student becomes a 'peer buddy' to a child of determination, who can then meet and be friends with other pupils and their families. "Buddy pairs are created between mainstream school pupils and pupils from various special needs centers in the UAE. Neha love dogs and she goes to the Dubai Stray Dog Center every Saturday to take  7 to 8 dogs for a 1 kilometre walk.

 Neha's mission for Bharathanatyam and Cultural Exchanges across the Middle East / World:

Neha believes that Bharathanatyam is a great dance form, which she wish to perform in every province in the United Arab Emirates to show the richness of Tamil culture, tradition and values to people, not only limiting to UAE alone but also across other Middle Eastern countries and to the world. "Tamil culture, art forms, tradition, family bonding and values are unique and I want to show it to the world" - says Neha. She is confident of achieving her mission with the help of her Guru - Lakshmi Venkatesh (NRI), Dubai and Singer - Sahana Venkatesh (NRI - studying her masters in Scotland)


 Family Background:

Neha's mother Lakhsmi Priya is a Professor in a college run by the Dubai Government and father Anantha Krishnan working in private company in Dubai. One of the highlights of Neha's Arengetram was a Padam composed in Tamil by her mother which was a conversation between mother and daughter, that brought out the values of a family, bonding and strength. Since the lyrics of the song is in Tamil, it was easy for the audience to comprehend and understand. Neha's mother Lakshmi Priya added "They are sure and fortunate to taking this mission as UAE has more respect towards Indian expatriates who are playing a pivotal role in the development of the country. UAE encourages cultural compatibility in all spheres and recently started to provide Golden Visa to expatriates who are in the field of art & culture" 

Event Honours:

Keeping Guru bakthi and our Tamil traditional values, eminent Gurus were honoured. Vanamala - Former HOD of Culturals Department, Anna Adarsh Higher Secondary School & Director of Sai Vidyalaya, Chennai. Sherthalai R. Sivakumar - Professional Carnatic Violinist, A-Grade Artiste at All India Radio. 

"தேஜாவு" வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!



வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது.

இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர்.


இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில்:

"இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "தேஜாவு" படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி  படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் "தேஜாவு" திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

படத்தின் வெற்றி குறித்து படத்தின் தயாரிப்பாளரான விஜய் பாண்டி தெரிவிக்கையில் "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றி படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதி அவர்களுக்கும், இதனை தரமான படமாக அளித்த இயக்குனர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தின் டீசர், டிரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்ப்பை பெற காரணமாக இருந்த திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பட வெளியீட்டிற்க்கும் பெரும் உதவி புரிந்த ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்களுக்கும்,  திரு. C.  ராஜா அவர்களுக்கும்,  மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், வெற்றி படமாக்கிய மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்."  என்றார். 

இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசைமைப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்திற்கு PG முத்தையா ஒளிப்பதிவையும், அருள் சித்தார்த் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

சசிகுமாரின் பட டைட்டில் மாற்றம்!




விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காமன்மேன்’. 

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப்படம் சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது. இந்தப்படம் துவங்கப்பட்டபோதே ‘காமன்மேன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன்கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது. 

இதனால் இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் காமன்மேன் என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு ‘நான் மிருகமாய் மாற’ என புதிய டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஏற்கனவே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு!




அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘லால் சிங் சத்தா’ படத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் நடிகர் அமீர்கான் தமிழ் ரசிகர்களிடத்திலும் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி, பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.  

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் இந்தியில் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.


'ஜோதி' திரைப்படம் உண்மை சம்பவம்- தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி



உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் – ல் நடைபெற்றது. அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு தெரிவித்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது:

இப்படம் ஒரு  உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40000 குழந்தைகள் தொலைந்து அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்க படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல்போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28 அன்று ஜோதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கூறியதாவது:

நா நா  படத்தின் மூலம் இந்தப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. முதலில் என்னிடம் படம் வரும்போது படத்தில் பாடல்களே இல்லை. அதிக காட்சிகளில் பல எமோஷனல் விசியம் இருந்ததால் அதையெல்லாம் பாடல் மூலம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைத்து என் விருப்பத்தை தெரிவித்தேன். பாடல் சிறப்பாக இருந்ததால் இயக்குனரும், செலவை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளரும் உடனே சம்மதித்து விட்டனர் என்று கூறினார்.




துணை நடிகர் ஹரி க்ரிஷ் கூறியதாவது:

என்னை முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது எனது கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்று. மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது இரண்டுகால் ஜவ்வும் கிழிந்து மூன்றுமாத காலம் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம் எனக்கூறினார்.

தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி கூறியதாவது:

இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம். 

எனக் கூறி அக்குழந்தையையும், குடும்பத்தையும் காட்டும்போது அனைத்து பத்திரிக்கையாளர்களும் கனிவுடன் பார்த்தனர். குழந்தை காணாமல் போன வலியால் அப்பெண்மணி பேச முடியாமல் திகைத்தார்.


ஜோதி

நடிகர்கள்:

வெற்றி (சக்தி சிவபாலன்) 

ஷீலா ராஜ்குமார் (அருள் ஜோதி) 

கிரிஷா குரூப்(ஜானகி) 

இளங்கோ குமரவேல் (முத்து குமாரசுவாமி) 

மைம் கோபி (தமிழரசு) 

நான் சரவணன் (அஷ்வின்) 

சாய் பிரியங்கா ருத் (சாந்தி) 

ராஜா சேதுபதி (ரங்கா) 

பூஜிதா தேவராஜ் (காமினி) 


இயக்குனர்: AV கிருஷ்ண பரமாத்மா

ஒளிப்பதிவு: செசி ஜெயா

இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

படத்தொகுப்பு: சத்ய மூர்த்தி

பாடல்கள்:கார்த்திக் நேத்தா

பாடகர்கள்: கே. ஜே ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த்

நடனம்: சுவிகுமார்

சண்டை: சக்தி சரவணன்

மக்கள் தொடர்பு: வின்சன் சி எம்

தயாரிப்பு: SP ராஜா சேதுபதி



Oasis Fertility, Chennai launches AndroLife – An Exclusive Male Fertility Clinic on World IVF Day


Chennai:

We often forget the other side of the equation when it comes to infertility. Male infertility is as common as female infertility and its high time we acknowledge this fact. Though infertility in men is on the rise, very few opt for fertility evaluation due to embarrassment and social stigma. On the occasion of World IVF Day, Oasis Fertility, Chennai launched AndroLife – An exclusive male fertility clinic. Dr Aparna Vishwakiran, Senior Consultant & Fertility Specialist, Oasis Fertility, Chennai, Dr D Maheshwari, Fertility Specialist, Oasis Fertility, Chennai, and Dr C Dev Krishna, Consultant Andrologist, Oasis Fertility, Chennai graced the occasion.

 

Speaking on the occasion, Dr Aparna Vishwa kiran, Senior Consultant & Fertility Specialist, Oasis Fertility, Chennai stated, “We are extremely glad to launch AndroLife clinic which is exclusively for men who face infertility issues. Though there is a rise in male infertility, not many men opt for fertility evaluation due to inhibition and ignorance. On this World IVF Day, we have come out with our special initiative “Infertility Knows No Gender” to emphasize the importance of fertility evaluation for men. Through this campaign, we wish to send a clear message: when a couple is unable to conceive even after a year, it is vital for both the husband and wife to consult a fertility specialist”.

 

Dr D Maheshwari, Fertility Specialist, Oasis Fertility, Chennai said, “Infertility doesn’t affect women alone. Infertility in men has increased due to several factors like obesity, lack of exercise, pollution, erratic lifestyle, exposure to heat and hazardous chemicals, excessive gadget use, delayed parenthood, etc. We have an array of treatment options for males and through these, we help even men with low sperm count to achieve fatherhood. Through Fertility Preservation technique, we enable male cancer patients to begin their family in the future by preserving their fertility before cancer treatment”.

 

Speaking on the occasion, Dr C Dev Krishna, Consultant Andrologist, Oasis Fertility, Chennai stated, “Globally, the fertility in men younger than 30 years has decreased by 15% according to research. As we understand the sensibilities when it comes to male infertility which calls for compassionate and exclusive care for men, we have set up AndroLife through which we offer all treatments pertaining to men. We are specialized in Micro-TESE which is an advanced sperm extraction procedure carried out by very few centres in the country. Through advanced technologies like MACS, P-ICSI, IMSI, Microfluidics, etc. we enable men to overcome infertility issues and achieve their parenthood dream. Instead of denying or delaying, men need to consult an andrologist at the right time”. 


வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம்- நடிகர் சிபிராஜ்



ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக,  உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்.....

தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது:

கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ஜூலை 29 இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சிபிராஜ் கூறியதாவது:

வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.




இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது:

“இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம்  முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்  இந்த சமூகத்தில் அதை விட  பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது:

ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடிகை அதுல்யா ரவி கூறியதாவது:

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கபட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்

நக்கலைட்ஸ் சசி கூறியதாவது:

எனக்கும் சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா கூறியதாவது:

இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இந்த படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள். 

ஜூலை 29  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “வட்டம்” நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.