Articles by "தெரிந்து கொள்வோம்"

தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோவை மாநகரில் நகரியங்கள்  - ஒரு பாதுகாப்பான முதலீடு

 


தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரம் என அறியப்படும் கோயம்புத்தூர், தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பெரு நகரங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது.  ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இம்மாநகரில் காணப்படும் வளர்ச்சியானது, அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக உட்கட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ந்து வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தோடு இணைந்ததாக நிலம் மற்றும் சொத்துக்களுக்கான தேவையும் அதிகரிப்பது இயல்பானதே.  கோயம்புத்தூரில் அவுட்டர் ரிங் ரோடு என அழைக்கப்படும் வெளிவட்டச் சாலை சமீப காலத்தில் மிகச்சரியான காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வர்த்தக மனைகளுக்கான முதலீட்டிற்கு அதிக வரவேற்பை பெறும் அமைவிடமாக உருவெடுத்திருக்கிறது.  

சிறப்பான நகர வடிவமைப்பு திட்டமிடல், நேர்த்தியான போக்குவரத்து அணுகுவசதி மற்றும் குறைவான வாழ்க்கைச் செலவுகள் என பல்வேறு அம்சங்களுக்காக அறியப்படும் கோயம்புத்தூர் அதன் குடியிருப்புவாசிகளுக்கு உயர்தர வாழ்க்கை வசதிகளை வழங்குகிறது.   நகரியங்கள் என அழைக்கப்படும் பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள் மக்களின் அதிக அபிமானத்தைப் பெற்று வருகின்ற நிலையில் இம்மாநகரில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிவேகமாக வளர்ந்து வருவதற்கான காரணங்களுள் ஒன்றாக இந்த சிறப்பான லைஃப் ஸ்டைல் வசதிகள் இருக்கின்றன என்றே கூறலாம்.

கேட்டட் கம்யூனிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு நகரியம், எண்ணற்ற ஆதாயங்களை அதே விலையில் வழங்குகிறது.  இம்மாநகரில் சமீபத்தில் முழுமையடைந்திருக்கும் இத்தகைய குடியிருப்பு வளாக செயல்திட்டங்கள், அதிக அமைதியான, சௌகரியமான வாழ்க்கையையும், மேம்பட்ட நவீன அம்சங்களையும் ஒருங்கிணைத்து, கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் வழங்கியிருப்பது மக்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.

இன்றைக்கு, சிறப்பான வாழ்விட வசதிகள் வேண்டுமென விரும்பி, விவேகமாகத் தேடுகின்ற நபர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் மற்றும் வசிப்பிட விருப்பத்தேர்வாகவும் கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகத் திட்டங்கள் இருப்பதால், பல பிரபல மற்றும் அனுபவம் மிக்க ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங்கள் பலவும் இத்தகைய நகரியங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகின்றன.  தனிப்பட்ட குடியிருப்பு வீடுகளும், சிறிய குடியிருப்பு வளாகமும் கொண்டிராத எண்ணற்ற வசதிகளோடு நிகரற்ற பாதுகாப்பையும் இத்தகைய நகரியம் வழங்குகிறது.  டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சிக்கான இடம், பல்வேறு விளையாட்டுகளுக்கான சிறு மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, நடைப்பயிற்சிக்குரிய பூங்காக்கள், பார்ட்டிகளையும், விழாக்களையும் நடத்துவதற்கான கூடங்கள், மினி தியேட்டர், கிளப்ஹவுசஸ், நீச்சல் குளம் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பெரிய அளவிலான குடியிருப்பு வளாகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.  மருத்துவ உதவி மையம், ஏடிஎம் வசதி மற்றும் நூலகம் போன்ற அத்தியாவசிய வசதிகளும் இங்கு வசிப்பவர்களின் சௌகரியத்திற்காகவும் மற்றும் அவசரநிலை நேரத்தில் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே இடம்பெறுகின்றன.  பிற இடங்களில் கிடைக்காத இந்த வசதிகள் அனைத்தும், இங்கு வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் பராமரிப்பு கட்டணமின்றி அல்லது மிக மிகக் குறைவான கட்டணத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில, முதல் சில ஆண்டுகளுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே இத்தகைய பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.  

இந்த நகரிய குடியிருப்பு வளாகங்களின் சுற்றுப்புறங்களும் மற்றும் உட்புற அமைவிடங்களும் மிக நன்றாக பராமரிக்கப்படுகின்றன.  ஒரு பெருநகரத்தின் பரபரப்பு, கூச்சல் மற்றும் ஒலிமாசு ஆகிய தொந்தரவுகளிலிருந்து விலகி, அமைதியான, பசுமையான வாழ்க்கை முறையை வழங்குவது நகரிய திட்டத்தின் சிறப்பை இன்னும் அதிகமாக்குகின்றன.  குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி பசுமையான தாவரங்களும், மரங்களும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய மாசு பிரச்சனை குறைவாக இருப்பதை உறுதி செய்கின்றன.  ஆண்டு முழுவதும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வகையில் 24*7 கேமரா கண்காணிப்பு அமைப்பின் கீழ், ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகமும் கொண்டு வரப்படுகிறது.  பெரும்பாலான நகரிய செயல்திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களது அலுவலக அமைவிடங்களுக்கு அருகே இடம்பெற்றிருப்பதால் போக்குவரத்திற்கு செலவிடப்படும் நேரம் குறைக்கப்படுகிறது; ஆரோக்கியமான பணி – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பணியாளர்கள் கொண்டிருப்பதற்கு இது வகை செய்கிறது.

நவீனமான, தரம் உயர்த்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்பட்ட வாழ்க்கை முறையின் இந்த நகரிய வளாகத்தில் கிடைப்பதால், முதலீட்டின் மீது அதிக லாபம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது; அத்துடன் ரியல் எஸ்டேட் சந்தையில்   எளிதாக மறுவிற்பனை செய்யும் வாய்ப்பும் உத்தரவாதத்துடன் இங்கு அமைந்துள்ள வீடுகளுக்கு கிடைக்கிறது.  இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் எதிர்காலமாக இத்தகைய நகரிய கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகங்களே இருக்கப்போகின்றன.  கோயம்புத்தூர் மாநகரில் வெளிவட்டச் சாலை பகுதியில் சிறப்பான முதலீட்டிற்கு நிகரற்ற வசதிகளுடன் உருவாக்கப்படுகின்ற கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகளுக்கான மனைகள் பல கிடைக்கின்றன.  

வெளிவட்டச் சாலையில் முதலீடு செய்வதில் இருக்கும் வளர்ச்சிக்கான அதிக சாத்தியத்திறன் கோயம்புத்தூரில் குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான மனைகளுக்கு மக்களால் அதிகம் விரும்பித் தேடப்படும் அமைவிடமாக வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு) இருக்கிறது.  அத்துடன் மிதமான விலைகளில் இந்த மனைகள் கிடைப்பது இப்பகுதியின் மதிப்பை இன்னும் உயர்த்துகின்றன.  சிறப்பான வசதிகள், அமைவிடம் மற்றும் நகரின் மிக முக்கிய இடங்களுக்கு அருகிலிருப்பது ஆகியவை அவுட்டர் ரிங் ரோடில் மனைகள் வாங்குவதில் கிடைக்கக்கூடிய ஆதாயங்களுள் சிலவாகும்.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலைகள் எப்படி மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளும்போது, கோயம்புத்தூரிலும் வெளிவட்டச் சாலையில் செய்யப்படும் முதலீடுகள் அதேபோன்ற வெற்றி வரலாற்றைக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.  உட்கட்டமைப்பு மேம்பாடுகள் வரும்போது அதிகரித்த வேலைவாய்ப்புகளும், வாழ்க்கை முறை வசதிகளும் அதனோடு சேர்ந்தே தான் உருவாகின்றன.  குறைந்த காலஅளவிற்குள்ளேயே, வேகமாக வளர்ந்து வரும் மாநகரின் உயிர்நாடிகளுள் ஒன்றாக இத்தகைய வெளிவட்டச் சாலைகள் மாறிவிடுவதை நீங்கள் உணர்வீர்கள்.  சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் வெளிவட்டச் சாலையையொட்டிய வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

பிற பெருநகரங்களில் வெளிவட்டச் சாலைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அருகருகே அமைந்து மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில் கோயம்புத்தூரின் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலைகளும் வரும் ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எதிர்கொள்ளப்போவது இப்போதே வெளிப்படையாகத் தென்படுகிறது.  கனவு இல்லத்தை அமைதியான சூழலில் உருவாக்குவது அல்லது ஒரு பிசினஸ் நிறுவனத்தை தொடங்குவது அல்லது முதலீட்டின் மீது நல்ல லாபம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக இன்று முதலீடு செய்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக முதலீட்டாளர்கள் இப்பகுதியில் இப்போது முதலீடு செய்வது நிச்சயம் விவேகமான செயல்பாடாக இருக்கும்.  இப்போது கோயம்புத்தூர் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலை அமைவிடங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பத்தேர்வுகளுள் ஒன்றாக கோயம்புத்தூரில் இருக்கிறது.



'அஜினோமோட்டோ' அதிகம் சேர்ப்பவரா நீங்கள்? இனி உங்கள் உடல் நிலை?! 




இந்தியாவில் அஜினோமோட்டோ அல்லது எம்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளூடாமேட் அதிக அளவில் மக்கள்  தற்போது உணவுகளில் சேர்த்து வருகின்றனர். இது சுவையை அதிகரிக்க செய்கிறது. ஆனால் வயிற்றுக்கு சென்றவுடன் ஏற்படுவது என்ன? என்று யாரும் கவலை கொள்வதில்லை. பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் சுவைக்காக எடுத்து கொள்கின்றனர்.   

சீனர்கள் பயன்படுத்தி வந்த இந்த அஜினோமோட்டோ, அவர்கள் உணவுகளான நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகள் மூலம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி உள்ளது. அஜினோமோட்டோ பயன்பாடானது உடலுக்கு தீங்கு விளைவிப்பது நிச்சயம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறுகின்றனர். ஆனால் நாம் அதை ஏற்று கொள்வதில்லை. காரணம் ருசி.... 




உண்மையில் இதில் உள்ள குளுட்டமிக் அமிலமானது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்படுகிறது. குளுட்டமிக் நரம்பு செல்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இது சோர்விற்கு வழி வகுக்கிறது. உடலில் அதிக அளவு சோடியம் இருப்பதால் அது மூட்டு மற்றும் தசை வலிக்கு வழி வகுக்கும். மேலும் இது சிலருக்கு வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். இது குடலில் அமிலத் தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒட்டு மொத்த செரிமான அமைப்பிலும் பிரச்சனை ஏற்படுகிறது.  

மேலும் அஜினமோட்டோவினால் உயர் இரத்த அழுத்தம்,  உணவு  செரிமான பிரச்சனைகள், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு நோய், உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இனி 'அஜினமோட்டோ' உணவில் சேர்த்து சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் உள்ளது.....  

 


தங்கம் விலை சவரனுக்கு உயர்வு...!


கடந்த சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 472-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 559 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களின் மோதல்!




கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் இலட்சக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த ரியால்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம், இந்த ஞாயிறு அன்று பொழுதுபோக்கின் உச்சத்தை எட்டப்போகிறது.


திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாக இந்நிகழ்ச்சி இருக்கும். நடிகர்களின் வேடிக்கையும், கேளிக்கையும் நிறைந்த பேச்சுக்களும், பரபரப்பான விளையாட்டுக்களும் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருப்பதால் வரும் ஞாயிறு 2021 ஏப்ரல் 18 இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK) நிகழ்ச்சியை நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என்பதற்கான இரு காரணங்கள் இதோ.

 

நட்சத்திரங்களின் அதிரடி கொண்டாட்டம்: CSK-ன் இவ்வார எபிசோட், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துவரும் உபாசனா ஆர்சி, ரிஷா ஜேகப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா மற்றும் சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் அவர்களது பல்வேறு ஃபெர்பார்மன்ஸ் வழியாக பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கின்றனர். 


அதுமட்டுமல்ல, கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா ஆகியோருடன் நட்புறவுடன்கூடிய மோதலில் திரைப்பட நட்சத்திரங்கள் ஈடுபடவிருக்கின்றனர். சுவாரஸ்யமான இந்த போட்டியினால் இந்த வாரஇறுதி நாளில் ஒளிபரப்பாகும் CSK இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது நிச்சயம்.

 

மாபெரும் விருந்து: VJ அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த வாரத்தின் CSK எபிசோட், பல்வேறு விளையாட்டுக்களின் அற்புதமான கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தின் அறிவையும் மற்றும் சமயோஜித திறனையும் பரிசோதிப்பதாக இந்த விளையாட்டுகள் இருக்கும். எக்ஸ்பிரஷன்ஸ் சுற்றிலிருந்து மேக்-அப் சுற்று என குதூகலமான போட்டிகள் நிறைந்த இந்நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்களின் இதுவரை அறியப்படாத முகங்களை நகைச்சுவை கலந்து இந்த எபிசோட் வெளிச்சம் போட்டு காட்டும்.

 

கேளிக்கையும், வேடிக்கையும் நிறைந்த கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை 2021 ஏப்ரல் 18 ஞாயிறு இரவு 7:00 மணிக்கு கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. 




மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம்!


அதிநவீன மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா, செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதுமையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம் நியூராலிங்க். 

மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதே நியூராலிங்கின் நோக்கம்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், விரல்களை கொண்டு ஸ்மார்ட்ஃபோனை இயக்குபவரை விட வேகமாக ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க நியூராலிங்கின் முதல் தயாரிப்பு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட பரபரவென பற்றிக் கொண்டது அறிவியல் உலகம்.

அப்படி என்ன தயாரிப்பு அது? என்று ஆவலோடு கேட்போருக்கு நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் விடை இருக்கிறது. பேஜர் என்ற குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

வீடியோ கேமில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் ஒவ்வொரு முறை சேர்க்கும்போதும் குரங்கிற்கு ஒரு குழாய் மூலம் வாழைப்பழக் கூழ் கொடுக்கப்படுகிறது. அதனை சுவைத்துக் கொண்டே குரங்கு ஜாய்ஸ்டிக்கை அசைத்து விளையாட்டை தொடர்கிறது. ஜாய்ஸ்டிக் மூலம் பந்தை சரியாக ஆரஞ்சுப் பெட்டியில் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் உருவாகும் அலைகள், சிப் மூலமாக கணிணிக்கு கடத்தப்படுகின்றன.

ஜாய் ஸ்டிக்கை அசைக்க குரங்கின் மூளை இட்ட கட்டளையை ஒரு கணிணி ப்ரோகிராமாக மாற்றி சிப்பில் பதிய வைக்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது ஜாய் ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என்று குரங்கு நினைத்தவுடன் ஜாய் ஸ்டிக் இல்லாமலே வீடியோ கேம் விளையாட்டு வேகமாக நடக்கிறது.

குரங்கின் மூளை இட்ட கட்டளை வயர்லெஸ் தொடர்பு மூலமாக நேரடியாக கணிணிக்கு கடத்தப்படுவதால் விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. சரி இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்று கேட்டால், எலான் மஸ்க் சொன்ன அதே விளக்கம் தான் பதில். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி விட்டால் அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்ஃபோன் இயங்கத் தொடங்கும். இதேபோல செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஒருவரின் மூளையுடன் அவரது கையை இணைத்து விட்டால் மூளை சொல்லும் கட்டளைக்கு ஏற்ப கை தானாக இயங்கும்.

இவையெல்லாம் தாண்டி மனித நினைவுகளை காப்பி எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கவும் முடியும் என்றெல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் நியூராலிங்க் குழுவினர். 

கண்ணுக்குத் தெரியாத ஒற்றை சிப்பின் மூலம் மனித வாழ்க்கை ஆளப்படும் காலம் விரைவில் வரலாம் என முன்னோட்டம் காட்டியிருக்கிறது நியூராலிங்கின் புதிய தயாரிப்பு.




தபால் துறை தேர்வு தமிழில்! 




புதுடில்லி: 

தபால்துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தபால் துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வுகள் வரும் பிப்., 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றது.


தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்., 14ம் தேதி நடைபெற உள்ள தபால் தேர்வை ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


2021 பிப்., 14 ல் தபால்துறை கணக்காளர் பதவிக்கு நடக்கும் தேர்வை,தமிழக வட்டாரத்தில் உள்ளவர்கள் தமிழில் மொழியில் எழுதலாம். தமிழக வட்டாரத்தில் உள்ளவர்கள், ஹிந்தி அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் தேர்வை எழுதலாம் எனக்கூறப்பட்டுள்ளது.






குறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்!

கள்ளகுறிச்சி:

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர்  TIK TOK அப்ளிகேசன் தடை செய்த உடன் குறைந்த டேட்டா செலவில் பயன் பெரும் வகையில்  Hip Hop அப்ளிகேசனை வெளியிட்டுள்ளனர். இதில் இன்டர்நெட் டேட்டா அதிகம் செலவாகாது என்று உறுதியளித்துள்ளார்.


செயலி-இன் சிறப்பம்சங்களை  பற்றி  அறிய 


செயலியை  பதிவிறக்கம்  செய்ய 




பெருந்தலைவர் காமராஜரை பற்றி வெளிவராத உண்மைகள்! 



பெருந்தலைவர் காமராசரின் வாழ்கை வரலாறு:

நம் எல்லோராலும் காமராசர் என அறியப்பட்ட "கர்ம வீரர் காமராசர்" இயற்பெயர் "காமாட்சி", அஃது அவரின் குலதெய்வத்தின் பெயர் ஆகும். காமராசர் காமாட்சியாக, குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தது 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள். அவருக்கு நாகம்மாள் என்ற ஒரு தங்கை இருந்தது பலருக்கு தெரியாது.

காமராசரின் தனி வாழ்க்கை:

காமராசர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார் ஆகையால் அவர் 6-ஆம் வகுப்பில் தன் கல்விப்படிப்பை நிறுத்தி தனது மாமாவின் துணிக்கடையில் தனது வாழ்க்கைப்படிப்பை தொடங்கினார். தனது 16வது வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணி செய்ய தொடங்கியவர் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை, தனது ஆயுள் முழுவதையும் நாட்டுக்காகவும், நாட்டுமக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் நம் பெருந்தலைவர்.

காமராசரின் சிறை வாழ்க்கை:

துணிக்கடையில் நேர்த்தியாக தன் வேலையை செய்த காமராசர் வரதராஜ நாயுடு, ராஜாஜி போன்றோரின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் மற்றும் சுதந்திர போராட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், காமராசர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றது 1930 - இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கு, ஆகத்து புரட்சி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு போன்ற பல்வேறு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது ஆண்டு இளம் வாழ்க்கையை சிறையில் கழித்தார் நம் பெருமைக்குரிய கிங்மேக்கர் காமராசர்.


தமிழக தலைவராக தமிழன் காமராசர்:

1947 - இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் நம் விடுதலைப் போராட்ட வீரர் காமராசர். தனது பெரும் தியாகத்தாலும் சலியாத உழைப்பாலும் 1952 - ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இரண்டு ஆண்டு கால பொற்கால ஆட்சியின் பலனாக 1954 -இல் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் காமராசர். தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி பெரும் செல்வாக்கை பெற மிக முக்கியமான கர்த்தாவாக திகழ்தவர் நம் காமராசர்.

காமராசரின் சாதனைகள்:

காமராசர் தனது 9 ஆண்டு கால முதல்வர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் அமைந்தது , தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்த ஒரே தலைவர் நம் படிக்காத மேதை காமராசர் தான், அவரின் சாதனைகள் சிலவற்றை நாம் பாப்போம். அதிகம் படிக்காத நம் பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30000க்கும் மேல் பள்ளிகள் தொடங்கினார், பள்ளிகள் தொடங்கினால் போதுமா மாணவர்கள் வேண்டாமா? அதற்கு அவர் செய்த தந்திரம் தான் இலவச மதிய உணவுத் திட்டம், தன் பிள்ளையாவது பசி இல்லாமல் இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பிய பெற்றோரே அதிகம், 7% ஆக இருந்த கற்போரின் எண்ணிக்கையை 37% ஆக மாற்றி புன்னகைத்தவர் தான் நம் புரட்சிதலைவர் காமசாரர், பள்ளி, கல்வி மட்டும் போதுமா வேலை வேண்டாமா என யோசித்தவர் பல புது புது தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். கல்வி, தொழில் என்று மட்டும் நின்று விடாமல் மின் திட்டம், நீர் பாசன திட்டம் போன்றவற்றிலும் காமசாரர் தனது சிறப்பான பணியை ஆற்றினார் என்று கூறவேண்டும்.


காமராசர் ஏன் திருமணம் செய்யவில்லை:

அன்று பலரது மனத்திலும் ஓடிய கேள்வி வயசாகி கொண்டே போகிறதே ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை, நாட்டின் முதல்வருக்கு பெண் தர யாரும் முன்வரவில்லையா என்றே, இதனை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு இல்லை, இங்கிலாந்து ராணி நேரடியாக கேட்டார், சிறிது கூட யோசிக்காமல் இன்றும் என் வீட்டில்(நாட்டில்) பல பேர் திருமண வயதாகியும் கல்யாணம் செய்யாமல் வறுமையில் இருக்க நான் மட்டும் எப்படி மணம் முடிக்க முடியும் என் சமூகத்தில் தங்கைக்கு தான் முதலில் முடிக்கும் வழக்கம் என்றார். நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி யாருக்கும் வராது.

காமராசரின் இறப்பும் தேசத்தின் இழப்பும்:

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.