ஜூன் 2021

அஜித்தின் 61 வது படம்....!


நேர்கொண்ட பார்வை படத்தைத்தொடர்ந்து அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,அஜித்தின் 61 வது  படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும், எச் வினோத் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன்  படம் என்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில்  இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பை 7 மாதங்களில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம்  வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்டபார்வை, வலிமை  படங்களைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக போனிகபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில்  அஜித் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்- வானிலை


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்., தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும்., அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


2,000 பஸ்கள் இன்று இயக்கம்


சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று குறைந்துள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன.

                                 கட்டுப்பாடுகள் என்ன?


• ஓட்டுனர், நடத்துனர், பயணிர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பயணியர், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து, பின்படிக்கட்டில் ஏறி, முன் படிக்கட்டில் இறங்க வேண்டும்

• நடத்துனர்கள், எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது, 'ஏசி' பஸ்களை இயக்கக்கூடாது. இவை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் 60 சதவீத சாதாரண பஸ்களுடன் 1,400 பஸ்களை இயக்க உள்ளோம்' என்றனர்.

விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, கல்பாக்கம், கூவத்துார், கூடுவாஞ்சேரி, செங்குன்றம், ஆரம்பாக்கம், பொன்னேரி, ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு, முதற்கட்டமாக 250 பஸ்கள் இயக்கப்படும்.பின், படிப்படியாக 350 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மகளிடம் அத்துமீறல்: அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்!


திருவண்ணாமலையை சேர்ந்த  நபர் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40) இவர் தெருக்கூத்து நாடக கலைஞர்,  முருகன் மனைவி மஞ்சு(32) மற்றும் மகள்கள் இரண்டு மகள்கள் மூத்த மகள் ஷர்மிளா வயது 19,முருகனுக்கு குடிபழக்கம் அடிமையானவர்.

இந்நிலையில் மனைவி மஞ்சு மற்றும் இரண்டாவது மகள் ஆகிய இருவரும் இன்று காலை திருவண்ணாமலைக்கு சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மதியம் குடிபோதையில் விட்டிற்கு வந்த முருகன்  தனியாக இருந்த தனது மூத்த மகளிடம் அத்துமீறி ஈடுபட்டதாகவும் அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பத்மா அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார்.  இந்நிலையில், மயங்கி விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் உயிரிழந்த முருகனின் மனைவி  மஞ்சு மற்றும் மகள் ஷர்மிளா  கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானது!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இநடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் 6-வது திரைப்படமாக நேரடி ஆங்கில வார்த்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பீஸ்ட் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என்பதுதான் நேரடி பொருள். அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.

தமிழில் விஜய்யின் படத்தலைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீஸ்ட் என வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். இவை தவிர கில்லி, பிகில் வட்டார வழக்கு சொற்களையும் தலைப்பாக வைத்து நடித்துள்ளார்.

விஜயின் 65வது திரைப்படத்தின் பெயர் டார்கெட் என பொதுவாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்த நிலையில் பீஸ்ட் என்ற பெயரை மிகவும் ரகசியமாக வைத்து படக்குழுவினர் தற்போது அதனை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டில் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் நீளமான துப்பாக்கியுடன் ஸ்டைலாக காட்சியளிக்கிறார். விஜய் ரசிகர்கள் தற்போது இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானதையொட்டி ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர்கள் நலிந்த திரைப்பட கலைஞர்கள் 200 நபர்களுக்கு மேல் நிவாரண தொகுப்பு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் 10கிலோ அரிசி வழங்கப்பட்டது.

 இந்நிகழ்சிக்கு நடிகர் திரு.செந்தில் அவர்கள், திரு.இமான் அண்ணாச்சி அவர்கள், திரு.ஜெய் ஆகாஸ் அவர்கள்,சங்கத் தலைவர் திரு.ஜாகுவார் தங்கம் அவர்கள் தலைமையில் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க தயாரிப்பாளர் திரு.கே. நாகராஜ் அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.