Articles by "விளையாட்டு"

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இங்கிலாந்தை 336 ரன்களில் வீழ்த்தி இந்தியா வெற்றி! 



ந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா அபார வெற்றி:

மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. மழை நின்ற பின், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். ஆலி போப் 24 ரன்களும், ஹாரி ப்ரூக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் உடைத்தார். வாஷிங்டர் சுந்தரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடான் கார்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும், பிரைடான் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மாநில அளவில் வில் வித்தைக்கான நடுவருக்கான பயிற்சி முகாம்!




சென்னை: 

வண்டலூரில் உள்ள TNPES பல்கலைகழகத்தில்  தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கள வில் வித்தைக்கான நடுவருக்கான பயிற்சி முகாம் கா.ரத்ன சபாபதி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்த சங்கம்) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த விழாவினை தொடங்கி வைத்த திரு.எஸ் பெருமாள் சாமி (அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி), திருமதி.மேகலா (Deputy Superintendent Of Police தமிழ்நாடு போலீஸ் அகடமி), திரு.சி ராஜகுமார் (செகரட்டரி பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி), டாக்டர். எஸ்.ஆறுமுகம் (இயக்குனர், தலைமை உடற்கல்வித்துறை, விளையாட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி), திருமதி.எம். ரேவதி (அசிஸ்டன்ட் பப்ளிக்  ப்ராஸிக்யூட்டர்), ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 



நிறைவு நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினராக டாக்டர். எம்.சுந்தர் (தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) மற்றும் டாக்டர் வி.துரைசாமி (அசோசியேட் ப்ரொபசர் இன்சார்ஜ் யோகத்துறை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் துணைத் தலைவர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம்) கலந்து கொண்டனர்.  மாநில அளவிலான நடுவருக்கான சான்றிதழை உயர்திரு.டாக்டர்.எம்.சுந்தர் (துணைவேந்தர் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம்) அவர்களால் அனைவருக்கும் நடுவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நடுவர்களுக்கு திருமதி.கிரேஸ் ஹெலினா (இயக்குனர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு  பல்கலைக்கழகம்) அவர்கள் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.  

VIDEO HERE:

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி!



கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது  தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார்

அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். 

அந்த தடகள வீரர்கள் விவரம்:


1. Dheena dhayalan - Pole vault (கோலூன்றி தாண்டுதல்) - All India Inter University & Khelo india University Games Medalist.  


2. Hemamalini - Javelin throw (ஈட்டி எறிதல்) - State, National & All India Inter University Medalist. 


3. S.V. Arun kumar - 100,200mts (Sprinter) - State & All india Inter University Medalist. 


4. P.Shandosh - 100,200mts (Sprinter) - State & All India Inter University Medalist.


5. Stalin Joes S - Decathlon - Senior state, All india inter University & Khelo India University games Medalist.


6. Dhivya.J - 400mts hurdle & 4×400mts relay - Senior State & Senior National Medalist, Junior State& Junior National Medalist , All India Inter University Medalist.


7. Mithra.M.R. - 5000mts & 10000mts (Long distance) - Junior State & Junior National Medalist,All India Inter University participant.


8. Arun Krishna V.B. - 800mts & 1500mts (Middle distance) - Junior State & Senior state Medalist, All india inter University Finalist.


9. M. Bhuvana Karthick - 400mts hurdle - State & South zone National Medalist.


10. M.Shyam Kumar - 3000mts - RDS School State Medalist & South Zone National Participant.


11. S. Harish - 800mts (Middle distance) - Junior State Medalist


மேற்கண்ட வீரர்களுக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால், "விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என்றும்,  அதற்கென ஒரு நிரந்தர செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும்" தெரிவித்தார்.

இந்தியப் பெண்கள் சாதனையாளர் விருது-2022 மற்றும் 14வது அகில இந்திய  யோகா சாம்பியன்ஷிப்-2022




சென்னை:

டெகாத்லான் முகப்பேர் விளையாட்டு அரங்கில் இந்தியப் பெண்கள் சாதனையாளர் விருது-2022 மற்றும் 14வது அகில இந்திய  யோகா சாம்பியன்ஷிப்-2022 நிகழ்ச்சி பதஞ்சலி காலேஜ் ஆஃப் யோகா & ரிசர்ச் சென்டரால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில்  தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், இந்திய கள வில்வித்தை சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணைந்த உறுப்பினர் சர்வதேச கள வில்வித்தை சங்கம், AI சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஃபீல்ட் ஆர்ச்சரி அசோசியேஷன் ஆஃப் இந்தியா) ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, இந்த சங்கங்கள் அனைத்தும் இணைந்து யோகா நேரடி தேர்வு 4 நீதிபதிகள் முன்னிலையில் நடத்தி தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.


இதில் சுமார் 1,000 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கெளரவ விருந்தினர் ஸ்ரீமதி. டாக்டர்.ஜி. பத்ம பிரியா, வழக்கறிஞர் ( Honourable Ambassodor) சென்னை உயர்நீதிமன்றம், வெளி உறுப்பினர்-இந்தியாவின் விமான நிலைய ஆணையம். ஸ்ரீமதி. சாந்தி கோபிநாத், நிருபர், ஸ்ரீ சாய்ராம் பாடஷாலா, சென்னை, ஏ.சித்ரா அரவிந்தன், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் திரு.கே.ரத்னா சபாபதி, பொதுச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம். ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர். 


கோல்டன் வுமன்ஸ் மற்றும் தங்கப் பெண் மற்றும் தங்க மகள் விருது பெற்ற சாதனையாளர்கள் -2022 பட்டியல்:   

டாக்டர்.ஜி.பத்மா பிரியா

தங்கப் பெண்


டாக்டர்.ஜோதி தயாளன்

தங்கப் பெண்


டாக்டர்.எஸ்.இந்திரா

தங்கப் பெண்


டாக்டர்.எஸ்.செல்வலட்சுமி

தங்கப் பெண்


சாந்தி கோபிநாத்

தங்கப் பெண்


டாக்டர்.ஆர்.ஷகிலா ஜாஸ்மின்

தங்கப் பெண்


டாக்டர்.விஜயகுமாரி

தங்கப் பெண்


டி.ஆர்.ஜே.சசிகலா

தங்கப் பெண்


டி.ஆர்.வி.உமா

தங்கப் பெண்


சித்ரா அரவிந்தன்

தங்கப் பெண்


டாக்டர்.எம்.ஹேமமாலினி

தங்கப் பெண்


சி.சுபா

தங்கப் பெண்


ஜி.தீபிகா

தங்கப் பெண்


எம்.ஜெயலக்ஷ்மி மூர்த்தி

தங்கப் பெண்


டி.பாரதி

தங்கப் பெண்


ஜென்சி ஷம்னா ஜேஷ்வர்

தங்கப் பெண்


டாக்டர்.ஆர்.கண்மணி

தங்கப் பெண்


எஸ்.எழிலரசி

தங்கப் பெண்


அ.கலைவாணி

தங்கப் பெண்


சி.ரத்திஷோபனா

தங்கப் பெண்


ஆர்.நித்யா

தங்கப் பெண்


வி.நிர்மலா

தங்கப் பெண்


டாக்டர்.எம்.யோகவல்லி

தங்கப் பெண்


எஸ்.சஞ்சனா ஸ்ரீ

தங்க மகள்


ஆர்.சஸ்மிதா

தங்கமகள்

மேலும் பல்வேறு மாணவ மாணவிகள் விருது பெற்றனர். 

VIDEO HERE:

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் சாதனையாளர் விருது-2022


சென்னை:

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் சாதனையாளர் விருது-2022 நிகழ்ச்சி  சென்னை கோயம்பேடு விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.  

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தில்  சர்வதேச கள வில்வித்தை சங்கம் IFAA, TAFISA, TAFISA, ICSSPE, WHO & சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி FAAI (பள்ளி வில்வித்தை சங்கம் இந்தியா) இந்திய விளையாட்டு கூட்டமைப்பு இணைந்துள்ளது. இந்த சங்கங்கள் அங்கீகரிக்கபட்ட சங்கங்கள்  ஆகும். 

இந்த நிகழ்ச்சியில் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில்   

கௌரவ விருந்தினர் திரு.எம்.கருணாநிதி- காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) Dy. காவல்துறை ஆணையர்) புரவலர்- தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், பேராசிரியர் டாக்டர்.ஆர்.இளங்கோவன்- HOD (FYST) MAHER (பல்கலைக்கழகமாகக் கருதப்படும்) தலைவர், தொழில்நுட்பக் குழு, தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், டி.நரசிம்ம ராவ், தலைவர், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் அ.சித்ரா அரவிந்தன், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் இணைச் செயலாளர் கே.பி.பி.விஜய பாஸ்கரன், கெளரவ விருந்தினர் திரு.சுபாஷ் சந்திர நாயர் பொதுச்செயலாளர்- இந்திய கள வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.உதய குமார் வர்டி, இந்திய கள வில்வித்தை சங்கத்தின் இணை செயலாளர் திரு.கா.ரத்ன சபாபதி தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் (சென்னை மாவட்டம்) எஸ்.சுரேஷ் குமார்- திருவள்ளூர் மாவட்டம், டாக்டர்.கே.செந்தில்-கோவை, பி.வைரமுத்து-தென்காசி, விஜயகுமார் திருவாரூர், ஆர்.சிவ குமார்- தருமபுரி, பி.காளீஸ்வரன்-தூத்துக்குடி, என்.மணிவண்ணன்- திருச்சி, எஸ்.ஆறுமுகம். நீதிராஜன்- கிருஷ்ணகிரி, அ.சுரேஷ் குமார்- கடலூர், எஸ்.திருமுருகன்- கள்ளக்குறிச்சி, கே.முத்துசாமி-நாமக்கல், பிரகாஷ்-பெரம்பலூர், எஸ்.சுரேந்திரர்- நீலகிரி, சேலம், ச.அய்யப்பன்- சிவகங்கை, ஏ.ரவி- மதுரை, எஸ்.கருப்பசாமி- விருதுநகர், வினோதா சிவபாலன்-காஞ்சிபுரம், டெல்லஸ்- கன்னியாகுமரி, தமிழ்மணி- விழுப்பூர் எண் சுரேஷ் குமார்- திருவள்ளூர், சத்தியமூர்த்தி- திருவண்ணாமலை, த.தமிழ்மணி - விழுப்புரம், என்.கணேசன் - மயிலாடுதுறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


இந்த சாதனையாளர்கள் அனைவரும் மாநில AGM-2022 இல் கலந்து கொள்கின்றனர்.  தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்க வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு  உறுதியாக செயல் படுவோம் என்று தெரிவித்துக் கொண்டனர். அடுத்து  27-02-2022 அன்று  தென்காசி மாவட்டம், வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அடுத்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர். 

VIDEO HERE:

தமிழ்நாடு கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்பு-2022


தமிழ்நாடு கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்பு-2022, கே.ரத்னா சபாபதி (பொதுச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் சார்பில் மதுரவாயலில் உள்ள  மாதா பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியில் 25 மாவட்ட உறுபினர்கள் பங்கு பெற்றனர். பங்கு பெற்ற 25 மாவட்ட உறுப்பினர்களுக்கு மாநில கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் நிலை 1 பாடநெறி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

TAMILNADU YOUTH FIELD ARCHERY ASSOCIATION

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி.சித்ரா அரவிந்தன்,  திருமதி.சாந்தி கோபிநாத் (துணைத் தலைவி) ஸ்ரீ சாய்ராம் பாடசாலா (நிருபர்) மற்றும் கே.ரத்னா சபாபதி (பொதுச் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினர். 

FULL VIDEO HERE:

டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு பட தயாரிப்பாளர்!


தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி (டிச15-18) சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் நடைபெற்றது.  இதன் இறுதிப்போட்டியில் சபீர் தன்கோட்டை 395-362 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஹபீபுர் ரஹ்மான்.

முன்னதாக இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்னல் என்கிற அடிப்படையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல் அரையிறுதி போட்டியில். முதலிடத்தில் இருந்த ஜே.பார்த்திபன் நான்காவது இடத்தில் இருந்த ஹபீபுர் ரஹ்மானுடன் மோதி 69 பின்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்..

இருப்பினும் இந்த போட்டித்தொடர் முழுவதுமாக 18 போட்டிகள் விளையாடிய ஜே.பார்த்திபன் 214.6 புள்ளிகள் (3863 பின்பால்) பெற்றதுடன் இரண்டு சிறப்பு பரிசுகளையும் பெற்றார். இரண்டாவது அரையிறுதி போட்டியில் 2-வது இடத்தில் இருந்த அக்ரமுல்லா பெய்க்கும் 3வது இடத்தில் இருந்த சபீர் தன்கோட்டும் மோதியதில் சபீர் தன்கோட் 122 பின்கள் என்கிற மாபெரும் வித்தியாசத்தில் (548-426) அக்ரமுல்லா பெய்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தார். 

தொடர்ந்து இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்னல் என்கிற அடிப்படையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் ஹபீபுர் ரஹ்மான் 15 பின்கள் வித்தியாசத்தில் (196-181) ஷபீரை தோற்கடித்தார். இரண்டாவது போட்டியிலும் தனது விறுவிறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹபீபுர் ரஹ்மான் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10வது பிரேமில் மூன்றுமுறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற ஷபீருக்கு எதிராக தனது வெற்றியை உறுதி செய்தார்..   

இந்த இரண்டாவது போட்டியில் 181 பின்கள் எடுத்த ஷபீர் தன்கோட்டுக்கு எதிராக 15 பின்கள் வித்தியாசத்தில் 199 பின்கள் எடுத்த ஹபீபுர் ரஹ்மான், மொத்த புள்களின் அடிப்படையில் 33 பின்கள் வித்தியாசத்தில் (395-362) அவரை தோற்கடித்தார். 6 போட்டிகள் கொண்ட பிரிவில் அதிகபட்ச சராசரியாக 216 புள்ளிகளும் 18 போட்டிகள் கொண்ட பிரிவில் அதிகபட்ச சராசரியாக 214.6 புள்ளிகளும் பெற்று இரண்டு சிறப்பு பரிசுகளையுமே ஜே.பார்த்திபன் கைப்பற்றினார்.

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

latest tamil news

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என, பின்தங்கி இருந்தது. இரண்டாவது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 134 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்தது. பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. லாரன்ஸ் (19), ரூட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் 429 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். அஷ்வின் ‛சுழலில்’ லாரன்ஸ் (26), பென் ஸ்டோக்ஸ் (8) சிக்கினர். அக்சர் படேல் பந்தில் போப் (12) அவுட்டானார். குல்தீப் யாதவ் பந்தில் பென் போக்ஸ் (2) சரணடைந்தார்.

தொடர்ந்து அசத்திய அக்சர் படேல் பந்தில் ஜோ ரூட் (33), ஸ்டோன் (0) அவுட்டாகினர். குல்தீப் பந்தில் மொயீன் அலி (43) சரணடைந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 

ஸ்டூவர்ட் பிராட் (5) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல் 5, அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என, சமநிலையடைந்தது.



கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு!


ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம்  நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. டி நடராஜன் மாலை சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

அப்போது செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை வரவேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. 

கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றியது.


தொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன்! 

தொடர்ச்சியாக 24+மணி நேரம் கேரம் விளையாடும் சாதனையை துவங்கியுள்ளார் தமிழ்நாடு  சென்னையை சேர்ந்த அஸ்வின் சௌந்திரராஜன்.

மின்ட், தங்கசாலை, பென்ஷனேர்ஸ்  லேனில் வசித்து வருபவர் அஸ்வின். கேரம் மீதான ஆர்வத்தினால் மிக நன்றாக கைதேர்ந்த அவருக்கு கேரம் விளையாட்டில் சாதிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து 40 மணி நேரத்த்திற்கு மேல் விளையாட முடிவு செய்துள்ளார்.

அதன் முன்னோட்டமாக இன்று காலை 8 மணியளவில் விளையாட துவங்கியுள்ள அவர் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல்  கேரம் விளையாடயுள்ளார் . மேலும் இருவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கேரம் விளையாட்டு வீரர்கள் கேரம் விளையாடி வருகின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில்:

தனது தொடர் பயிற்சியின் மீதான நம்பிக்கையில் தான் 40 மணி நேரத்திற்கும் மேல் விளையாட உள்ளதாகவும், இதன் மூலம் கேரம் விளையாட்டை நோக்கி பல இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

FOR You Tube LIVE SUBSCRIBE & CLICK BELL BUTTON 

https://www.youtube.com/c/tamillivenewsofficial


உங்கள் வாழ்த்தையும் நம்ம தமிழனுக்கு தெரிவிக்க, தொடர்பு கொள்ளுங்கள்  
Mr.Aswin Soundara Rajan (Carrom Player, Chennai)
9600113377



ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி- கங்குலி


மும்பை: 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய தொடர் விராட் கோலியின் கேப்டன் பதவியில் நீடிப்பதை தீர்மானிக்கும் எனவும் கூறினார்.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.