Articles by "தமிழகம்"

தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்களிடம் அத்துமீறிய மதபோதகர்! நெல்லை கோர்ட் அதிரடி தீர்ப்பு




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கருப்பூரில் வசித்து வருபவர் ஜோசுவா இம்மானுவேல் (47). கோவில்பட்டி பசுவந்தனை சாலை, பாண்டவர்மங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர். கிறிஸ்தவ மத போதகரான இவர்ம் ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி பெண்களை தனியாக அழைத்து சென்று நகைகளை பறித்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், படித்து முடித்த பட்டதாரி பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி நகைகளையும் பறித்து விடுவதாகவும் கடந்த 2016-ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த 24 வயதான பெண், பாப்பான்குளத்தை சேர்ந்த 26 வயதான பி.எட் கல்லூரி மாணவி உள்ளிட்டோர் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதில் தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், ஜோசுவா இம்மானுவேல் தான் ஒரு மதபோதகர் எனவும், ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றினால் குடும்பம் விருத்தி அடையும் எனவும் கூறி சேலத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்துக்கொண்டு 10 சவரன் நகையை பறித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.

இதுபோல் பி.எட். கல்லூரி மாணவியும் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை நிர்வாணப்படுத்தி, 6 பவுன் நகையை பறித்து மிரட்டியதாவும் புகார் அளித்தார். அதன்பின் ஜோசுவா இம்மானுவேல் உட்பட 4 பேர்தான் தனது சாவுக்குக் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து 2 பெண்களின் புகார்களின் பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜோசுவா இம்மானுவேல், அவரது ஓட்டுனரான விருதுநகர், சாத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து, ஜோசுவா இம்மானுவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.54 ஆயிரம் அபராதமும், வினோத் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



செங்கல்பட்டு:

அபிராமி ராமநாதன் சென்னை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து இருளர் பழங்குடி மக்களுக்காக "நல்லம்மை ராமநாதன் குயில்குப்பம் நகர்" பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேம்பட்ட வசதி கொண்ட 63 தனி வீடுகளை இளைஞர் நலன் மற்றும்  விளைாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வீடுகளை பயனாளிகளுக்கு  வழங்கிய  விழா  இனிதே நடை பெற்றது. திட்ட மதிப்பீடான 7. 5 கோடியில் 4 கோடியை  திட்டத் தலைவர் திரு அபிராமி ராமநாதன் நன்கொடையாக வழங்கியுள்ளார். அழகாகவும் நேர்த்தியாகவும் மிக வசதியாகவும் கட்டப்பட்ட  இந்த குடியிருப்பு வீடுகள் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இருளர் மக்களுக்காக கட்டப்பட்ட இந்த 63 வீடுகள் ஒவ்வொன்றிலும் இரு படுக்கை அறைகள்,ஒரு சமையலறை,வரவேற்பறை உடனிணைந்த கழிவறை என அனைத்து  வசதிகளும் உள்ளன. வீடுகள்  ஒவ்வொன்றும் 650 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் பகுதியில்  மேம்பட்ட வசதிகளுடன் கூடிய "நல்லம்மை ராமநாதன் நகர்" வீடுகளை இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று,சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழகத்தின் சிறு தொழில் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் மாண்புமிகு த.மு.அன்பரசன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

கலைமாமணி திரு அபிராமி ராமநாதன் அவர்கள் பேசும்போது இருளர் பழங்குடி மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர்கள் அபாயகரமான விஷ பாம்புகளைப் பிடித்து வாழ்வை நகர்த்தும் வாழ்வின் சோகநிலையை விளக்கினார். சமூகத்தின் பின் தங்கிய நிலையில் இருக்கும் இருளர் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு நல்ல இருப்பிடம் அமைத்துக் கொடுக்க எண்ணிய அபிராமி ராமநாதன்  மாற்ற இயலாத பட்டாக்களை அரசிடம் பெற்று 2018-2019 ல் இக்குடியிருப்பு வீடுகளை கட்டத் தொடங்கினர்.இதற்கான அடிக்கல்நாட்டி பணி 2018-2019 ல் தொடங்கப்பட்டது.இந்த 63 வீடுகள் கொண்ட குடியிருப்பு 7.5 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொரு வீடும் 650 சதுர அடி கொண்ட 63 குடும்பங்கள் குடியிருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திட்டத்தலைவர் கலைமாமணி திரு.அபிராமி ராமநாதன் தனது பங்களிப்பாக ரூ 4 கோடியை மனமுவந்து வழங்கியுள்ளார். மீதத் தொகையை   அபிராமி ராமநாதன் நண்பர்களும் பல்வேறு  ரோட்டரி சங்கங்களும் ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தைச் செவ்வனே நிறைவேறியுள்ளது. இதில் அமையப் பெற்றுள்ள ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கை அறைகள், ஒரு வரவேற்பறை, ஒரு சமயலறை ஒரு கழிவறை என வடிவைக்கப் பட்டு பயனாளிகளுக்கு இந்த வீடுடன் கேஸ் ஸ்டவ், குளிசாதன பெட்டி, LED தொலைகாட்சி பெட்டி,LED பல்புகள்,மின் விசிறிகள், மிக்சி, கிரைண்டர், இரும்பு அலமாரி, மெத்தை தலையணை, பாத்திரங்கள், பலசரக்கு சாமான்கள், அமரும் பிளாஸ்டிக் இருக்கைகள், பிரஷர் குக்கர் போன்ற அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டன. இந்த "நல்லம்மை ராமநாதன் குயில்குப்பம் நகர்" பகுதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி கிராமம் பெரியார் நகரில் முள்ளிப்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது.


இவ்வீடுகளில் தரை மற்றும் சுவர்களில் டைல்ஸ் கற்கள் பதிக்கப் பட்டுள்ளன.வீடுகளுக்கு எதிர் காலத்தில் மேல்தளம் கட்டினாலும் தாங்கும் வகையில் பலமான அஸ்திவாரம் போடப் பட்டுள்ளது.திரு அபிராமி ராமநாதன் தனது உரையில் குறிப்பிடும்போது 'நாட்டு மக்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளிவந்தால் தான் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும்' எனக் குறிப்பிட்டார்.அவர் மேலும் தன் உரையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் அனைத்து ரோட்டரி உறுப்பினர்களையும் தனது இத்தகு நற்செயல்களுக்குஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். இத்திட்டம் ரோட்டரி கிளப்புக்கு மாபெரும் கனவுத் திட்டம் ஆகும்.

VIT பல்கலை கழக நிறுவனரும் வேந்தருருமான திரு G.விஸ்வநாதன் அவர்கள்,திரு அபிராமி ராமநாதன் அவர்களை உயர்கல்வித் திட்டங்களுக்கும் தனது உதவும் கரங்களை நீட்டும் படி கேட்டுக் கொண்டார்.

நல்லம்மை ராமநாதன் நகர் குயில் குப்பம் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற தையல் தொழிற் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் தையல் இயந்திரமும் வழங்கப்படும்  என திருமதி நல்லம்மை ராமநாதன் அவர்கள்  தெரிவித்தார்.இதன் மூலம் அப்பெண்களின் வாழ்வு தன்னிறைவு பெற்று விளங்கும் எனவும் குறிப்பிட்டார். திட்டத் தலைவரும் முன்னாள் ரோட்டரி மாவட்ட கவர்னருமான திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகள் கட்டியிருக்கிறார்   அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கி உள்ளார். இது தவிரவும் தமிழகம் முழுவதும் சமூக கூடங்கள் அமைத்தும் இலவச கணிப்பொறி கல்வி கற்பிக்கும் மையங்கள் அமைத்தும் பள்ளி கல்லூரி செல்லாமல் பாதியில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களும் கற்கும் வகையில்  ஆவன செய்திருக்கிறார். திரு அபிராமி ராமநாதன் அவர்கள் வாழ்வில் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நிறைய கோவில்கள் கட்டி புணரமைத்து திருப்பணிகளிலும் ஈடு பட்டுள்ளார்.


இந்த விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்இ திருவண்ணாமலை,  மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் பொது மக்களும் சேர்ந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் சர்வதேச ரோட்டரி சங்க இயக்குநரான A.S.வெங்கடேஷ் அவர்களும்,  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரு ராகுல் நாத் IAS,மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு S S பாலாஜி அவர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

காஃபி பைட் ரிச் – புதிய சாக்லேட்டை அறிமுகம் செய்தது லோட்டே இந்தியா



 

சென்னை:


சாக்லேட்பிஸ்கெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் லோட்டே இந்தியாஅனைவரும் விரும்பும் காஃபி பைட் பிராண்டின் கீழ் புதிய அறிமுகத்துடன் தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தை துவங்கி உள்ளதுஅந்த வரிசையில் தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட்புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா உடன்முழுமையான காபி சுவை அனுபவத்தை இதை சாப்பிடுபவர்களுக்கு வழங்குகிறது.

 

இது குறித்து லோட்டே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலன் வாஹி கூறுகையில்:


தற்போது நாங்கள் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட்எங்கள் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறதுஇது நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளதுஇந்த புதிய சாக்லேட்டிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவதோடுஎங்களின் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்மேலும் இந்த புதிய தயாரிப்பு புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா சுவையுடன்நுகர்வோரின் விருப்பங்களை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் விரும்பும் சாக்லேட்டாக மாறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

 

இந்த புதிய சாக்லேட் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளதுஇது சாக்லேட் சந்தையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் தனித்து நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதுஇந்நிறுவனம் தனது பிராண்டின் பாரம்பரியத்தைப் பராமரிக்கும் வகையில்இந்த புதிய சாக்லேட்டை அசல் காஃபி பைட் சுவை மாறாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த சுவை அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த சாக்லேட்டை இந்நிறுவனம் பலதரப்பட்ட மக்களிடம் பல்வேறு வயதினரிடம் பரிசோதித்துள்ளதுபாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து லோட்டே நிறுவனம் காபி டோஃபி பிராண்ட் பிரிவில் முன்னோடியாக இருந்து வருகிறதுமேலும் காஃபி பைட்டில் பல ஆண்டுகளாக ஒரு சிறந்த பிராண்டாக இருந்து வருகிறதுஇதன் தயாரிப்புகள் 1987–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது.

 

மேலும் பல்வேறு புதிய சுவைகள்புதிய பேக்கிங் வடிவங்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய அதே நேரத்தில் அதன் பெருமையை குறிக்கும் காபி சுவையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதை தொடர்ந்து தக்க வைத்து வருகிறதுஇந்தியாவில் உள்ள நுகர்வோர்களின் சாக்லேட் அனுபவத்தை மாற்றி அமைக்கும் வகையில் இந்நிறுவனம் தற்போது காஃபி பைட் ரிச் சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளதுஇது எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பயணம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

 

வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதோடுவளர்ந்து வரும் உணவு வர்த்தக பிரிவில் தனக்கென ஒரு இடத்தை லோட்டே இந்தியா நிறுவனம் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வேளாண் – தீவனத் துறையில் கவனம் செலுத்தும் வகையில்‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்'



கோவை: 

வேளாண் உணவுத் துறையில் கவனம் செலுத்தும் விதமாக இந்தியாவின் பிரமாண்ட கோழிப்பண்ணை நிறுவனமான சுகுணா புட்ஸ் – கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி உடன் இணைந்து ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்' என்னும் பெயரில் கிராமப்புற சந்தைப்படுத்தல் போட்டியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப்பெற்று அவற்றில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டவற்றிற்கு பரிசு வழங்கப்பட்டன.

 

சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் தீவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் முரளிபிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் மார்க்கெட்டிங் துறை தலைவர் அருள் ராஜன் ஆகியோர் வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் அன்ட் ரிசர்ச்தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்மதுரை மற்றும் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகிய கல்லூரிகளிலிருந்து வரப்பெற்ற கட்டுரைகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கினர். வேலூர்விஐடி ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரி இது சம்பந்தமாக தனித்துவமான ஆலோசனையை விளக்கக் காட்சி மூலம் வழங்கியதன் காரணமாக அக்கல்லூரிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியானது கிராமப்புற சந்தைப்படுத்தல் தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் விவசாய உணவுத் துறையில் பரந்து விரிந்துள்ள தன்மையை புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியதுகுறிப்பாக இந்த நிகழ்ச்சி கால்நடை தீவனங்களில் அதிக கவனம் செலுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவாதங்கள் மற்றும் நேரடி அமர்வுகளும் இடம் பெற்றிருந்தன. இதன் காரணமாக வேளாண் உணவுத் தொழில் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு பற்றி மேலும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு உதவியதோடு அது தொடர்பான விழிப்புணர்வையும் அவர்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக அமைந்திருந்தது. இந்த போட்டிக்கு வரப்பெற்ற மொத்த கட்டுரைகளில் 15 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 3 கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் சுகுணா ஃபீட்ஸ் துறையின் மூலம் விருதுகள் மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டங்கள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்ச்சி குறித்து சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் தீவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பொது மேலாளர் முரளி கூறுகையில், ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்' போட்டிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்து உள்ளது. மேலும் இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து பங்கேற்பாளர்கள்பேச்சாளர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனம் சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயம் மற்றும் கால்நடை தீவனம் தொடர்பாக அறிந்து கொள்ள விரும்பிய அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கவும்அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்சமீபத்திய போக்குகள் பற்றி அறிந்து கொள்ளவும் சிறந்த ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக முடித்துள்ளோம். எதிர்காலத்தில் வேளாண்-உணவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் சில சிறந்த நடைமுறை தீர்வுகளை வழங்கிய பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


இவ்வாறு அவர் கூறினார்.




மூச்சு திணறி உயிருக்கு போராடிய சிறுமி! 




செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பிரேம் எட்வின். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளி்ட்ட அனைத்து புராதன சின்னங்களையும் சுற்றி பார்த்த பிறகு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். 

அவருடைய மகள் ஜோஸ்னா அமுல்யா (வயது 8), அந்த நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளம் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் கால் தவறி நீச்சல் குளத்தில் விழுந்து விட்டார். நீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி உயிருக்கு போராடினார். அங்கு குளித்து கொண்டிருந்த சக பயணிகள், அந்த சிறுமியை மீட்டு அறையில் இருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரது தந்தை பிரேம் எட்வின் அங்கு வந்து மயக்க நிலையில் காணப்பட்ட தனது மகளை ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஜோஸ்னா அமுல்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் பலியான சிறுமி ஜோஸ்னா அமுல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டலின் நீச்சல் குளம் அருகில் சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழும் வரை எந்தவித பாதுகாப்பு பணியிலும் ஈடுபடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதாக கூறி நீச்சல் குள பராமரிப்பாளரான மாமல்லபுரத்தை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்(39) என்பவரை கைது செய்தனர். 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுமி ஜோஸ்னா அமுல்யா மப்பேடு பகுதியில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் விடுமுறை தினத்தை கழிக்க வந்த சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரவுடி  சீசிங் ராஜா கைது.....




சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா (எ) சீசிங் ராஜா மீது கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், ஆட்கடத்தல், கொள்ளை என 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவனுக்கு இரண்டு மனைவிகளும், 3 பிள்ளைகளும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டே ரவுடிசத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிலும் ரவுடி ராஜா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

ரவுடி ராஜா (எ) சீசிங் ராஜா இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடிகளான ஆர்காடு சுரேஷ், சதீஷ், படப்பை அட்தி, மார்கெட் சிவா ஆகியோரின் கூட்டாளியான சீசிங் ராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்த நிலையில் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 

இவர் கூலிப்படை கும்பல் தலைவனாக செயல்பட்டு, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ராஜா பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை தெற்கு கூடுதல் ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில் ஆந்திர எல்லைப் பகுதியில் ரவுடி ராஜா பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் தனிப்படை போலீசார் ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து அங்கிருந்த ரவுடி சீசிங் ராஜாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவிடம் இருந்து ஒரு துப்பாக்கியையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் ரவுடி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்...! 



பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில்  ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் ரெட்டிபாளையத்திலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதைத் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

அதனால் 5 முதல் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்துதர வேண்டுமென அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாட்டு வெடிக்குண்டுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள்!




போரூர் அடுத்த பாரதியார் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் தினேஷ்(என்ற)பீடி தினேஷ்(23), இவரது நண்பர் அஜீம்(என்ற) முகமது அஜீம்(22), இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தனர்.

இன்று நுங்கம்மாக்கம் தனிப்படை போலீசார் இந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது அவர்கள் வீட்டில் கத்திகள், ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அதே இடத்தில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களுடன் விசாரணை மேற்கொண்டதில் தினேஷின் நண்பரான குள்ளகுமார்(21), என்பவரை 2 மாதத்திற்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் வைத்து சாம்பார்(என்ற), தனசேகர் தரப்பினர் கொலை செய்ததாகவும் இந்த கொலைக்கு தனசேகரை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து கொண்டு சமயம் பார்த்து தீர்த்து கட்டுவதற்கு இந்த வீட்டில் இருவரும் தங்கியிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் முகமது அஜீம் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து இருவரையும் போரூர்  போலீசாரிடம் ஆஜர்படுத்தி விட்டு பின்னர் விசாரணைக்காக இருவரையும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஐந்து நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் போலீசார் எடுத்து சென்றனர். அந்த வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ரஷ்யா - உக்ரைன் போர்: விலை உயர்வு?!  


ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்தியாவில் சில நுகர்வு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவை என்ன? யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 4வது வாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால், அந்த பொருட்களை சார்ந்திருக்கும் உலக நாடுகளுக்கு பாதிப்பு தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதைத் தவிர்த்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இவை சர்வதேச அளவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு மறைமுகமாக வழி வகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

தற்போது போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய்யின் உற்பத்தி குறைந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான தேவையும் இன்னொரு பக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் சமையல் எண்ணெய்யின் விலை உயரலாம். இதை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பருப்பு வகைகள்

சர்வதேச சந்தைக்கு வரும் பருப்பு, தானிய வகைகளில் 29 சதவீதம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பாவின் பிரேக் ஃபாஸ்ட் (காலை உணவு) என்று உக்ரைன் பொதுவாக அழைக்கப்படுகிறது.

போர் தொடர்ந்து நடைபெற்றால், பருப்பு தானிய வகைகளின் விலையும் உயரும். குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைனின் விவசாய நிலங்களின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உணவு பொருட்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோளம்

உலகம் முழுவதும் சோளத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று. துறைமுகங்கள், தரைவழிப் பாதைகள் மற்றும் விமான சரக்குகள் வழியாக உக்ரைன் மேற்கொள்ளும் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. இதன் விளைவாக, சோளத்தின் விலை உயர்ந்துள்ளது. இது லட்சக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கனிமங்கள், உலோகங்கள்

நிக்கல், பிளாட்டினம், பல்லேடியம் மற்றும் தங்கம் போன்ற அரிய உலோகங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடைகள் உலோகங்கள் உலகச் சந்தையை அடைவதைத் தடுத்து, உலோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் நிக்கலின் விலை ஒரு டன் 100,000 டாலர் வரை உயர்ந்துள்ளது. போர் இன்னும் தீவிரம் அடையும்போது எஃகு விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு தற்போது 100-டாலருக்கு மேல் உள்ளது. போர் காரணமாக, இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலைகள் உயர நிலை உருவாகக்கூடும்.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவிற்கு விலைவாசி உயர்வு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

விமானப் பயணம் - போக்குவரத்து

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும். உலகம் முழுவதும் விமான கட்டணமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மொத்த வாக்கு சதவீதம்! 


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பிற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

31,150 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலுக்காக 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றபோதும் சென்னையில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விடுமுறையையொட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக தருமபுரி மவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மாநகராட்சி பகுதிகளை விட பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.


மாவட்டங்களும் அவற்றில் பதிவான வாக்கு சதவீதமும்:

அரியலூா் 75.69  (பேரூராட்சி - 81.04,  நகராட்சி- 73.99)

செங்கல்பட்டு 55.30 (பேரூராட்சி - 80.67,  நகராட்சி-63.08, மாநகராட்சி-49.98 )

சென்னை 43.59

கோயம்புத்தூா் 59.61  (பேரூராட்சி -73.83 ,  நகராட்சி- 67.09, மாநகராட்சி-53.61)

கடலூா் 71.53  (பேரூராட்சி 73.26 - ,  நகராட்சி- 72,21, மாநகராட்சி - 68.19)

தருமபுரி 80.49  (பேரூராட்சி - 80.14,  நகராட்சி- 81.37)

திண்டுக்கல் 70.65 (பேரூராட்சி -75.88 ,  நகராட்சி- 67.26, மாநகராட்சி- 64.01 )

ஈரோடு 70.73  (பேரூராட்சி 79.42- ,  நகராட்சி- 74.14, மாநகராட்சி -61.91 )

கள்ளக்குறிச்சி 74.36  (பேரூராட்சி -76.93 ,  நகராட்சி-72.57 )

காஞ்சிபுரம் 66.82  (பேரூராட்சி - 73.63 ,  நகராட்சி- 68.79, மாநகராட்சி-64.25)

கன்னியாகுமரி 65.72  (பேரூராட்சி -67.86 ,  நகராட்சி-63.18, மாநகராட்சி-60.94 )

கரூா் 76.34  (பேரூராட்சி -86.43 ,  நகராட்சி- 6.15, மாநகராட்சி-75.84 )

கிருஷ்ணகிரி 68.52  (பேரூராட்சி - 75.80 ,  நகராட்சி- 75.32 மாநகராட்சி-63.97 )

மதுரை 57.09  (பேரூராட்சி -79.42 ,  நகராட்சி- 71.33, மாநகராட்சி- 53.99)

மயிலாடுதுறை 65.77  (பேரூராட்சி - 69.47 ,  நகராட்சி- 64.07)

நாகப்பட்டினம்  69.19  (பேரூராட்சி -77.30 ,  நகராட்சி-66.68 )

நாமக்கல் 76.86   (பேரூராட்சி -80.83 ,  நகராட்சி- 74.03 )

பெரம்பலூா் 69.11  (பேரூராட்சி -72.47 ,  நகராட்சி- 66.01)

புதுக்கோட்டை 69.61  (பேரூராட்சி -76.94 ,  நகராட்சி- 66.11)

ராமநாதபுரம் 68.03  (பேரூராட்சி -73.18 ,  நகராட்சி- 66.25 )

ராணிப்பேட்டை 72.24  (பேரூராட்சி -82.13 ,  நகராட்சி- 69.10)

சேலம் 70.54  (பேரூராட்சி - 78.49,  நகராட்சி- 76.61)

சிவகங்கை 67.19  (பேரூராட்சி -69.66 ,  நகராட்சி-65.53 )

தென்காசி 70.40  (பேரூராட்சி -73.14 ,  நகராட்சி- 68.63)

தஞ்சாவூா் 66.12  (பேரூராட்சி -72.18 ,  நகராட்சி- 64.95, மாநகராட்சி - 62.45)

தேனி 68.94  (பேரூராட்சி - 72.64 ,  நகராட்சி-65.88 )

நீலகிரி 62.68  (பேரூராட்சி -66.29 ,  நகராட்சி-59.98 )

தூத்துக்குடி 63.81  (பேரூராட்சி -73.52 ,  நகராட்சி- 62.70, மாநகராட்சி- 59.11)

திருச்சி 61.36  (பேரூராட்சி - 74.87,  நகராட்சி- 70.44, மாநகராட்சி 57.25)

திருநெல்வேலி 59.65  (பேரூராட்சி -69.20 ,  நகராட்சி- 67.22, மாநகராட்சி- 52.45)

திருப்பத்தூா் 68.58  (பேரூராட்சி -73.45 ,  நகராட்சி-67.89 )

திருப்பூா் 60.66  (பேரூராட்சி  75.34- ,  நகராட்சி- 66.35, மாநகராட்சி-55.40)

திருவள்ளூா் 65.61  (பேரூராட்சி -74.92 ,  நகராட்சி-68.26, மாநகராட்சி- 59.13)

திருவண்ணாமலை 73.46  (பேரூராட்சி -80.07 ,  நகராட்சி-70.26 )

திருவாரூா் 68.25  (பேரூராட்சி - 72.69,  நகராட்சி-66.28 )

வேலூா் 66.68  (பேரூராட்சி -79.09 ,  நகராட்சி-66.00, மாநகராட்சி -65.50 )

விழுப்புரம் 72.39  (பேரூராட்சி -79.67 ,  நகராட்சி- 69.49)

விருதுநகா் 69.24  (பேரூராட்சி -76.55 ,  நகராட்சி- 67.12, மாநகராட்சி- 68.47)

மொத்தம் 60.70

முழு ஊரடங்கு:  பலத்த போலீஸ் பாதுகாப்பு! 



கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று போடப்பட்டு இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  காரணமாக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், ஆவடி கமி‌ஷனர் சந்தீப் ராய்ரத்தோர், தாம்பரம் கமி‌ஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

சென்னை மாநகர பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. இதேபோன்று ஆவடி, தாம்பரம், போலீஸ் கமி‌ஷன் ரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 493 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வாகனங்களில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உரிய காரணங்கள் இன்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

இன்று முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் பல இடங்களில் நேற்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் களை கட்டி காணப்பட்டன. இன்று காலையில் சென்னை மாநகர் முழுவதுமே திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று உள்ளன. இந்த திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த அளவிலேயே பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாரும், அதிகாரிகளும், மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தனர்.

இந்த திருமணங்களுக்கு செல்வதற்காக பலர் அழைப்பிதழ்களுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். அதுபோன்று திருமணத்திற்கு சென்றவர்களை அழைப்பிதழை காட்டி விட்டு செல்லுமாறு போலீசார் கூறினார்கள். இதன்படி இன்று முழு ஊரடங்கு நாளிலும் சிலர் சாலைகளில் அழைப்பிதழை காட்டி பொதுமக்கள் பயணம் செய்ததையும் காண முடிந்தது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். அப்போது தேவையின்றி வெளியில் சுற்றியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பல இடங்களில் முக்கிய சாலைகள் முழுமையாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு இருந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகன ஓட்டிகளும் சில கிலோ மீட்டர் சுற்றியே செல்ல முடிந்தது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இன்று சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாலங்கள் நேற்று இரவு 10 மணியில் இருந்தே மூடப்பட்டு இருந்தது.

இன்று முழுவதும் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்பட்டு இருக்கும். முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு நாளை காலையில்தான் பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகள் திறக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.