நவம்பர் 2023

Kauvery Cancer Institute Doctors Unite for "No Shave November" to Spotlight Men's Cancer Awareness



Chennai:

In a spirited initiative inspired by the global "No Shave November" and "Movember" movements, a group of nine dedicated doctors from Kauvery Cancer Institute has taken up the challenge of growing facial hair throughout November. Dr Mukunth K ,Orthopaedician, Dr Venkatraman Karthikaeyan, Neurologist, Dr Anantha Subramanian, Pulmonologist, Dr Iyappan Ponnuswamy Medical Director, Dr AN Vaidhyswaran Director Radiation Oncology, Dr Aswin AN, Radiation Oncologist, Dr Muralidharan Parthasarathy Surgical Gastroenterology, Dr Arunkumar Karthikayan Neurosurgeon, Dr Velmurugan Deisingh Anesthestist are part of the initiative.

The aim is to raise awareness about men's cancer and health issues, fostering open conversations about the importance of early detection, prevention, and overall well-being.

According to recent statistics from leading health organizations, men continue to face significant health challenges, with cancer being a prominent concern. Prostate cancer, testicular cancer, and colorectal cancer are among the leading causes of cancer-related deaths in men. The need for awareness and early detection is paramount, as timely intervention can greatly impact treatment outcomes.

Key Statistics:

· Prostate cancer is the second most common cancer in men globally.

· Testicular cancer is the most common cancer in young men aged 15 to 34.

Why "No Shave November" and "Movember" Matter" No Shave November" and "Movember" are global movements that encourage men to grow facial hair during November to raise awareness about men's health issues, including prostate cancer, testicular cancer, and mental health. Dr. SujaySusikar, a prominent surgical oncologist at Kauvery Cancer Institute, emphasizes, "Participating in 'No Shave November' or 'Movember' is a fun and impactful way to draw attention to serious health issues. It's a conversation starter, allowing us to discuss the importance of regular health check-ups and early detection."

Men are encouraged to be proactive about their health. Regular screenings, self-examinations, and an open dialogue with healthcare professionals are vital steps in maintaining overall well-being.

Dr. Vaidhyswaran, Director Radiation Oncology states, "Timely intervention can significantly improve the success of cancer treatment. Regular check-ups, especially for men over 40, can catch potential issues early on."

"Cancer doesn't discriminate. It's crucial for men to prioritize their health and take preventive measures," says Dr. VelmurganDeisingh, Consultant Anaesthesiologist and Head of the Department AnaesthesiaKauvery Hospital Main, Alwarpet.

Dr. IyappanPonnuswamy, Medical Director and Chief Radiologist at Kauvery Hospital Alwarpet  adds, "Radiology plays a pivotal role in early cancer detection. Regular screenings, such as mammograms and CT scans, can identify potential issues before symptoms manifest."

"As an ENT surgeon, I often see the impact of delayed diagnoses. Regular check-ups and awareness are fundamental in preventing advanced stages of cancer," remarks Dr. Niraj Joshi, ENT Surgeon.

The Kauvery Cancer Institute hopes that this "No Shave November" initiative will not only raise awareness but also inspire men to prioritize their health. By fostering open conversations and encouraging preventive measures, the institute aims to contribute to a healthier community.

 

Kauvery Hospital Presents 'Dishoom Dishoom Diabetes'


Chennai:  

Kauvery Hospital Chennai, a flagship unit of the Kauvery Group of Hospitals, renowned for its multispecialty healthcare services in Tamil Nadu, proudly announces the inauguration of 'Dishoom Dishoom Diabetes,' a unique initiative in honor of World Diabetes Day.

'Dishoom Dishoom Diabetes' is a comprehensive expo designed to address the effective management of diabetic ailments. Scheduled for December 3rd the event will offer free check-ups on Vitals, Blood Sugar Test, Lipid Profile, Fundus Screening, Fibro Scan, Foot Study, Refractry Screening Test, , Dental Screening and Biothesiometry. Beyond health screenings, attendees can explore stalls featuring diabetic-friendly foods, diet supplements, footwear, physiotherapy, diet counseling, and various other diabetic care products.

India has an estimated 77 million people (1 in 11 Indians) formally diagnosed with diabetes, which makes it the second most affected in the world. Furthermore, 700,000 Indians died of diabetes, hyperglycemia, kidney disease or other complications of diabetes in 2020. One in six people (17%) in the world with diabetes is from India.

Dr. K Baraneedharan, Senior Consultant Diabetologist, speaking on the occasion, emphasized the critical nature of diabetes as a chronic disease, warning of its potentially fatal consequences if not diagnosed or managed effectively. Untreated diabetes can lead to severe health complications, including cardiovascular disease, nerve damage, kidney damage, Alzheimer's disease, and depression. Dr. K Baraneedharan highlighted often overlooked risk factors such as obesity, sedentary lifestyle, genetics, age, and family history, urging attendees to become educated on disease risks and management.

In a pioneering move, Kauvery Hospital introduces 'Diabetes on Wheels.' This specially equipped vehicle will traverse Chennai for 100 days, screening people for diabetes as part of an awareness campaign. The initiative underscores the hospital's commitment to proactive healthcare and community outreach.

Join us at 'Dishoom Dishoom Diabetes' and be part of this impactful initiative. Together, let us raise awareness, promote healthier living, and combat the diabetes epidemic.

Date: 03 December, 2023

Time: 10am to 3pm

Venue: Kauvery Family Health Centre, B Block, No 5, Lady Desika Road, CIT Colony, Mylapore, Chennai, Tamilnadu 60004

Further Details contact: 044 4000 6000

Kauvery Hospital, part of the Kauvery Group of Hospitals, is a leading healthcare chain committed to delivering high quality, patient-centric care across diverse medical specialties.

81 வயதானவரின் மூளையிலிருந்த பெரிய கட்டியை அகற்றிய காவேரி மருத்துவமனை!



சென்னை: 

81 வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. குறைபாட்டையும் அமெரிக்காவில் அவர். கலந்தாலோசித்த மருத்துவர்கள், மேற்கூறிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் கவனித்தனர். 

மேலும் பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர் அந்தக் கட்டி, செவியின் கேட்கும் திறனை வழங்கும் நரம்பில் உருவாகியிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தனர். திருமதி கே.எஸ் அவர்களும், அவரது குடும்பத்தினரும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் GTTGTT பல்வேறு மருத்துவமனைகளில் ஆலோசனையைப் பெற்றனர். காணொளி மருத்துவ வாயிலாக சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவர் திரு கிரிஷ் ஸ்ரீதரிடம் நிகழ்ந்த சில கலந்தாய்வுக்குப் பிறகு அவரிடமே சிகிச்சை பெறலாம் என்ற முடிவினை எடுத்தனர். சிகிச்சைக்கு வயது தடையில்லை - 81 வயதானவரின் மூளையிலிருந்த பெரிய கட்டி ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது சென்னை, இந்தியா (H நவம்பர் 2023): 81 வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 

கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. அமெரிக்காவில் அவர் கலந்தாலோசித்த மருத்துவர்கள், நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் மேற்கூறிய திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைப்பாட்டையும் கவனித்தனர். பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் மேலும் கண்டறிந்தனர். அந்தக் கட்டி, செவியின் கேட்கும் திறனை வழங்கும் நரம்பில் உருவாகியிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தனர். திருமதி கே.எஸ். அவர்களும், அவரது குடும்பத்தினரும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றனர். காணொளி வாயிலாக, சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவர் திரு. கிரிஷ் ஸ்ரீதரிடம் நிகழ்ந்த சில கலந்தாய்வுக்குப் பிறகு, அவரிடமே சிகிச்சை பெறலாம் என்ற முடிவினை எடுத்தனர். 

இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பைனின் வழிகாட்டியும் இயக்குநருமான டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர், "நாங்கள் செவி நரம்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கட்டியை (Vxtibular Sdhwannoma) அகற்ற வேண்டியிருந்தது. இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க சுமார் 10 மணிநேரம் ஆனது. இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்வது எப்போதுமே சவாலானது. அதிலும் குறிப்பாக திருமதி கே.எஸ், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற பெரிய கட்டியாக (விட்டம் 4.5 செ.மீ.க்கு மேல்) இருக்கும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கும் உயர்நிலை இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்திக் கட்டியை அகற்றும்போது, விழுங்குதல், பேச்சு மற்றும் முகத்துடன் தொடர்புடைய முக்கியமான அதிநுண் நரம்புகள் பாதிப்படையாதவாறு கவனத்துடன் செயற்பட்டதோடு, நரம்பியல் மண்டலத்தைத் தொடர்ந்து கண்காணித்தபடி, அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம் * வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் திருமதி கே.எஸ் நடக்கத் தொடங்கினார். ஏழாவது நாளில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க, தனது பிசியோதெரபி அமர்வுகளைத் தொடர்ந்தவர். நல்ல ஆரோக்கியத்துடன். திடமாக அமெரிக்காவிற்குத் திரும்பினார்.

 "பலர், தங்களுக்கோ தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ 70 வயதிற்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். தற்போது, சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தொழில்நுட்பமும், தொடர் கண்காணிப்புக்கான வசதியும், மயக்க மருந்து அளிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், அறுவை சிகிச்சையின் பொழுது நேரும் அபாயங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன. மிக ஆபத்தான மூளைக் கட்டிகளுக்குக் கூட, நோயாளி மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், எந்த வயதினராக இருந்தாலும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படக்கூடும் என்றார் டாக்டர் ஸ்ரீதர். 

காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரெயின் & ஸ்பைனின் குழு, மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றி, திருமதி கே.எஸ். அவர்களின் உடல்நிலையைத் திரும்பிப் பெறச். செய்ததில் மகிழ்ச்சியடைகிறது. நல்ல முந்தைய ஆரோக்கியத்திற்காகவும், ஊக்கமுறு வாழ்க்கைக்காகவும் திருமதி கே.எஸ். அவர்களை வாழ்த்துகிறது. சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல் இயல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3TMRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் நெப்போலியன்



ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடித்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடி காவியம் இது.  பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் தளர்வுறாப் பயணத்தைப் பற்றியும்,  அவர் மிகவும் நேசித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  நெப்போலியனின் தொலைநோக்கான இராணுவ மற்றும் அரசியல் தந்திரத்தைத் திரைக்கதை எடுத்தியம்ப, இதுவரை வெள்ளித்திரையில் முயற்சி செய்திராத எதார்த்தமான போர்க் காட்சிகளால் சிலிர்ப்பூட்டுகிறது படம்!

கதைச்சுருக்கம் – பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில், அவர் உயர்குடியைச் சேர்ந்த விதவையான ஜோசஃபின் (வனேசா கிர்பி) உடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 


பிரமிடுகளின் போர், ஆஸ்டர்லிட்ஸ் போர், போரோடினோ போர் முதலிய போர்களின் வாயிலாகத் தனது அதிகாரத்தையும் சக்தியையும் பலப்படுத்துகிறார். 1815 ஆம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில், வெலிங்டன் பிரபுவாலும், மார்ஷல் ப்ளூச்சராலும் அவர் தோற்கடிக்கப்படுகிறார். செயின்ட் ஹெலினா தீவுக்கு நாடு கடத்தப்படும் நெப்போலியனை, 1821 இல் மரணம் தழுவியது.


CREDITS

இயக்கம் - Ridley Scott

இசை - Martin Phipps 

ஒளிப்பதிவு - Dariusz Wolski

பாரீஸில், இப்படத்தின் பிரத்தியேக காட்சி, நவம்பர் 14, 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா ,இப்படத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடுகிறது.

ZEE5 தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்  ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!



இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை இன்று வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை  காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.  வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும்  ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.


Trailer Link: https://youtu.be/Ho0JTx-mV8M


ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 

"இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்படாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை  வழங்கும் 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸை,  பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிக்கல்கள் மிகுந்த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த  சீரிஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில்  அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத்தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங்கள் நம்புகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின்  கடந்த காலத்தின் குற்றவியல் உலகின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வையாளர்களை இந்த சீரிஸ் கவர்ந்திழுக்கும்."

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான  நேர்காணலைப் பெறுவதற்கு,  நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது. வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்.

தயாரிப்பாளர் பிரபாவதி கூறுகையில், “உலகத் தரத்தில் உள்ளூர் கதைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் 'தீரன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தை நிறுவியுள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பான 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரு உயர்தரமான ஆவணத் தொடராக, இந்தியாவில் 'டாக்கு-சீரிஸ்' வகைக்கான எடுத்துக்காட்டாக இருப்பதோடு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருமென நாங்கள் நம்புகிறோம்.

‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது!


ZEE5  பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

“சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!



3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.. 


தயாரிப்பாளர் நடிகர்  கார்த்திகேயன் பேசியதாவது…

சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார்.  பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி 


கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசியதாவது… 

இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 


ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி  பேசியதாவது.. 

வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு  வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை சுபிக்‌ஷா LA பேசியதாவது...

இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஹீரோ கார்த்திகேயன் மிகப்பெரிய ஆதரவு தந்தார். மிகக்கடினமான உழைத்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தியேட்டரில் போய்ப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை தியா பேசியதாவது..

இந்த படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் மிக முக்கியமான ரோல் தந்துள்ளனர். என்னுடைய ரோல் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும். வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஷுட்டிங்கில் அனைவரும் எனக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.  


நடிகர் வின்சென்ட் அசோகன் பேசியதாவது..

சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் சதீஷ் கீதா குமார்  பேசியதாவது.. 

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்‌ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. 


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 

கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.  


நடிகர்கள்: 

V.கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர். 


இயக்கம்: சதீஷ் கீதா குமார் 

திரைக்கதை :- V.கார்த்திகேயன் 

பாடல் வரிகள்- கு.கார்த்திக், திரவ் 

நிர்வாகத் தயாரிப்பாளர்: பி.கார்த்திக் 

ஒளிப்பதிவு : சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ் 

எடிட்டர்: ராம் சுதர்ஷன் 

கலை இயக்குநர்: தினேஷ் மோகன் 

இசையமைப்பாளர்: அச்சு ராஜாமணி

மக்கள் தொடர்பு - சதீஷ் ( AIM )


Kauvery Heart Institute at the Inaugural of Kauvery International Cardiology Conclave!




Chennai: 

Kauvery Hospital Alwarpet announced the setting up of Heart Institute on the inauguration of the ‘Kauvery International Cardiology Conclave 2023, ’ held at ITC Grand Chola on November 18 th and 19 th. The Institute was unveiled by Padmashree Dr K. M Cherian, underscoring its unyielding commitment to advancing and promoting awareness in cardiac sciences, the Kauvery Heart Institute to set new benchmarks in world-class healthcare delivery. 

The 'Kauvery International Cardiology Conclave 2023 Marked by its distinguished setting and impactful discourse showcased ground-breaking developments in the field. Renowned speakers, cutting edge research presentations and discussions on the latest advancements in cardiac care that marked the two-day event. 

The response from over 250 delegates was overwhelmingly positive, reflecting the conclaves pivotal role in fostering collaboration and disseminating crucial knowledge in the pursuit improved health care outcomes. Eminent national speakers from India and from across the globe further enriched the diversity of perspectives and expertise shared during the event. The topics covered ranged from Coronary Artery Disease, Structural Heart Disease, PCI & Cardiogenic Shock, Cardiac Electrophysiology, to Heart & Lung Transplant, offering attendees a comprehensive understanding of the latest developments in the field.

Kauvery Hospital during the conclave honored Dr A R Raghuram for his exemplary contribution in the field of Cardiothoracic surgery, Dr Mullasari Ajit S for his exemplary contribution in the field of Interventional Cardiology, Dr Raghavan Subramaniyam for his exemplary contribution in the field of Paediatric Cardiology & Dr T R Muralidharan for his exemplary contribution in the field of Interventional Cardiology and Electrophysiology In commemorating the successful finale of the 'Kauvery International Cardiology Conclave 2023, 

'Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director of Kauvery Group of Hospitals said:

“This International Conclave will enable the clinical talent to collaborate with international Doctors by embracing and leveraging the strengths of international colleagues to create an environment that benefits better clinical outcomes for our patients” “Kauvery Hospital has been in the forefront of performing many first of its kind in the country and high-end cardiac surgeries like Complex Coronary Angioplasty, Impella, Hybrid Bypass Surgeries & Heart Transplants. Kauvery Heart Institute comprises internationally trained cardiologists, cardiac surgeons, technicians and Anesthetists to provide comprehensive care” He further added.

"கிடா" திரைவிமர்சனம் 



ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிக்க,  அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் உருவாக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் "கிடா". 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்! 

விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை வாங்க ஆசைப்படுகிறார். வறுமை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எனவே, வீட்டில் இருக்கும் ஆட்டை விற்று அந்தப்பணத்தில் புத்தாடை வாங்க நினைக்கிறார். 

இந்நிலையில் அது சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என்று கூறி ஒருவரும் வாங்க மறுக்கின்றனர். மற்றொருபுறம், கோழி மற்றும் ஆடு கறி வெட்டிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார் காளி வெங்கட். இவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறார். பல வருடங்களாக வேலை பார்த்த இடத்தில் தகராறு ஏற்பட, சொந்தமாக தீபாவளி தினத்தில் கறி வெட்டி தொழிலை தொடங்குவதாக சவால் விடுக்கிறார் காளி வெங்கட். 

அதற்காக, கிடாவை தேடி அலைகிறார். பலரும், காளி வெங்கட்டை நம்பி கிடாவை கொடுக்க மறுக்கிறார்கள். கடைசியாக, பூராமின் கிடாவை வாங்குவதாக கூறிவிடுகிறார். இதனால், தீபாவளிக்கு தனது பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று பூ ராமும், கேலி பேசிய ஊர் முன்னாள் கிடா’வை வெட்டி தனது தொழிலை தொடங்கி விடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிடா திருடு போய்விடுகிறது. 

பிறகு என்ன நடந்தது என்பதே கதை...... 

லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜா, கருப்பு, ஆனந்த்,ஜெய், தேவா, சங்கிலி ஆகிய படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள். தீசனின் இசை அற்புதம். ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு தத்ரூபம். ஆட்டின் கண் அசைவு, ஆடு திருடர்களை பிடிக்கச் செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி எதார்த்தம் என அனைத்தும் சிறப்பு தான்.

மொத்தத்தில் இந்த கிடா தீபாவளிக்கு விருந்து தான்...... 

RATING: 4/5  


 

MGM Healthcare Introduces Fastest Sunday Health Check in the Country



Chennai : 

MGM Healthcare is thrilled to announce the launch of its all-new "Fastest Sunday Health Check-up" package, available for just ₹1234 and backed by a unique money-back guarantee. This initiative is designed to make healthcare accessible, convenient, and efficient by offering comprehensive health check-ups specifically on Sundays.

The “Fastest Sunday Health-check” package is designed to cater to the diverse healthcare needs, emphasizing early detection and prevention of health issues. MGM Healthcare believes that everyone deserves easy access to essential healthcare services, and this package is a significant step toward fulfilling that vision.

 

The importance of regular health check-ups cannot be understated, as they play a pivotal role in early disease detection and prevention. By offering an affordable and swift Sunday health check-up option, MGM Healthcare aims to eliminate barriers that might deter people from seeking preventive healthcare.

 

"In today's fast-paced world, we encourage individuals to take charge of their health by incorporating regular health check-ups into their routines. We understand that busy schedules and the demands of daily life can often hinder this, which is why we have introduced our ‘Fastest Sunday Health Check-up’ package, designed to offer a convenient and efficient solution for everyone to prioritize their health”, Said Mr. Harish Manian, Group CEO, MGM Healthcare.

 

Key Features of the "Fastest Sunday Health Check-up" Package:

Comprehensive Health Assessment: The Sunday Health Check-up includes a comprehensive range of tests and screenings to assess an individual's overall health. It covers vital parameters such as Haemogram, Lipid Profile, Fasting/Random Blood Sugar, Liver Function Test, Renal Function Test, Urine Routine, Hb A1C, and ECG, ensuring a holistic evaluation of one's well-being all at Rs. 1234.

30-Minute Health Check: The Sunday Health Checkup Package offers a unique USP – a comprehensive health assessment completed within just 30 minutes, saving your valuable time without compromising on the quality of care.

 

Money-Back Guarantee: 

If your Sunday Health Check takes more time than our promised schedule, the payment will be refunded. Your time is valuable, and we are committed to delivering a swift and efficient service.

 

Convenient Sunday Appointments: 

We understand that people have busy schedules during the week, so Sunday availability ensures that you can prioritize your health without disrupting your work or daily routines.

 

Expert Medical Advice: 

Our experienced medical professionals will review your test results and provide expert guidance on maintaining or improving your health.

Efficiency Guaranteed: The "Fastest Sunday Health Check" package promises not only affordability but also the quickest service without compromising on the quality of care.

Affordable Pricing: The package has been priced at ₹1234, making it accessible to a wide range of individuals and families.

 

MGM Healthcare is committed to providing high-quality healthcare services that are accessible to all. The launch of the Sunday Health Check-up reinforces this commitment and encourages individuals to prioritize their health and well-being.


To book the Sunday Health Check-up, interested individuals can visit the MGM Healthcare website https://mgmhealthcare.in/ or contact the hospital at 044-45242407

 

About MGM Healthcare:

MGM Healthcare is obsessed with bettering patient experiences and improving clinical outcomes through expertise, passion and technology. The manifestation of this dedication to superlative health-caring is a state-of-the-art hospital on Nelson Manickam Road having 400 beds, 50 out-patient consultation rooms, over 100 critical care beds, 250+ Doctors, 12 Centers of excellence, 30+ Clinical Departments, 12 state-of-the-art Operating Theatres and 24 x 7 comprehensive Emergency Care. Here, a host of eminent surgeons and physicians wield a potent combination of skill and cutting-edge technology to elevate care and outcomes to new levels. MGM Healthcare is the first hospital in Asia with the highest rated USGBC LEED Platinum-certified Green Hospital. Over the past year, the team of clinical experts at MGM Healthcare have performed many innovative and complex surgeries in the pursuit of establishing trust and clinical excellence. MGM Healthcare designed and equipped with the latest in technology and equipment is poised to drive patient centricity and clinical excellence of both the domestic and international patients.



SRM Group Forays into Cement Business with the Launch of "SRMPR Cements"



Chennai: 

SRM Group, a leading diversified conglomerate based in Chennai, today announced the launch of its new cement division. SRMPR Cements was launched in a grand dealer meet held at Guindy Ramda Hotel by SRM Chairman Mr. Ravi Pachamuthu and SRMPR brand ambassador, famous Indian Actor Mr. Sathyaraj. 

The company has invested heavily in state-of-the-art manufacturing facilities and is poised to become a major player in the Indian cement market. SRMPR Cements is venturing into the cement market with Portland Pozzolana Cement (PPC). It will soon produce a wide range of cement products, including Ordinary Portland Cement (OPC), and high-performance cement. The company will also focus on sustainable building materials, such as white cement and cement for other applications. 

“Our brand equity under the SRM brand is very strong. It was a natural extension for us to offer our brand for the public to choose from. Also, cement as a business is witnessing a good demand in the state due to the numerous infrastructure projects being undertaken,” said Mr. Ravi Pachamuthu, Chairman - SRM Group. 

SRMPR Cements is committed to providing its customers with the highest quality products and service aims to make the vision “Construct the Future” dream of every Indian a reality with its affordable price range added, Mr. Ravi Pachamuthu.

Mr Ohm Prakash, Chief Executive Officer, SRMPR Cements, Said, “SRMPR cements is a subsidiary of the SRM Groups under the guidance of Mr. Ravi Pachamuthu, has already established a strong presence in the cement business with its 100 dealers from 2000 applicants and three cement manufacturing plants in South India. Of the three plants, two are in Tamil Nadu, and one is in Andhra Pradesh. Currently, the total capacity for manufacturing plant for SRMPR Cements is at 420,000 Tonnes per annum. 

SRMPR is aiming at increasing the number of dealers across Tamil Nadu in the coming months to bring quality delivery of cements across the state. Our immediate plan is to build awareness of SRMPR Cements and provide individual with more choices of cements to choose from. We will expand into other states of India and scale up our manufacturing capacity from the current to 10 million Tonnes per annum in the next three years, added Mr Ohm Prakash.

About SRMPR Cements:

SRMPR Cements is a leading young and vibrant cement trading company in South India. It is a division of SRM Group, a diversified conglomerate. SRMPR Cements is committed to providing its customers with the highest quality products and services. It has a strong network of dealers and distributors across South India, delivering the dream of many to “Construct the Future” with its quick and efficient delivery of product. SRMPR Cements is also focused on sustainable development of cement products. Along the way SRMPR is touching lives by helping individuals to become entrepreneurs while reaching the length and breath of India.  

About SRM Groups: 

SRM Group under leadership of Mr. Ravi Pachamuthu is a leading diversified conglomerate with interests in education, healthcare, infrastructure, Hospitality, Cements and Railways among many others. The group is headquartered in Chennai, India, and has a presence all over India. SRM Group is committed to excellence and innovation, and it is known for its high-quality products and services.

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் - கே ராஜன் பேச்சு!



ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும்  படம்

'ரா ..ரா ..சரசுக்கு  ராரா...'

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். 

கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்,

இசை ஜி. கே.வி.

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது,

"தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம்  சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது  கத்தி , வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது  வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும்.  படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம் .இதன் படப்பிடிப்பு  வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை  கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார். அதை  என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது" என்றார்.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது,

"நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது ;சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன் .நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.

'சந்திரமுகி ' படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன் .சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.

இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று. இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது . பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன.

ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.

படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை "60 கட் டைரக்டர் "என்று கூறுகிறார்கள்.

 நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.

 படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம். ஆனால்  சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள்.நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி  செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள். 

ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம்.

பல மணி நேரம் காக்க வைத்தார்கள்.

பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள் .ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.

அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள்.நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள் .லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள்.அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.

விளக்கிப் பேசும்போது

கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள்.  கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள் .நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .

சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள் .5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும் .அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .

ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று  கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம்.யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை .

நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா?

என்றோம் அவர்கள் ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை.

தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள் .அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம் .இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.  ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா? 

தயாரிப்பாளர் தந்தை போன்றவர் .அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ?ஏமாற்ற முடியுமா?

படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை .ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்" என்றார்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும்போது,

" இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை.அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் .அந்த நாலு பேருக்கு நன்றி!

 புதிதாக  இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும்.இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன. 

ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும் .விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்தப் பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள் .சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள்.

இந்தப் படத்தை வெளியிடும்  விநியோகஸ்தரும்  தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள்.

இது ஒரு அடல்ட் படம் இது இப்படித்தான் இருக்கும். இதை  ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை .பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ  படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள்.

இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

அவர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? 

இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள் .இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.

இப்போது  பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம்  பேசுகிறார்கள்.இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி

எதற்கெடுத்தாலும் கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது .

பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .

அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய்  லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது.இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.

 தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும்  பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால்  ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள்.

இப்போது கூட இருப்பவர்களே உதவியாக இருப்பதில்லை. அவர்களே பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். நிலைமை மாறும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். இதுதான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குநர் தயாரிப்பாளர் உடன் இருப்பதும் அவரது நிலைமை புரிந்திருப்பதும் பாராட்டுக்குரியது.

சினிமா விழாக்களில் போர்த்தப்படும் இந்தப் பொன்னாடைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ராஜஸ்தான் காரர்களுக்குத்தான் வியாபாரம் நடக்கும்.அந்தப் பொன்னாடையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.அவை பயனற்றவை எதற்கும் பயன்படாது.

நமது தமிழ்நாட்டின் நெசவாளிகள் பயன்பெறும் வகையில் கைத்தறி ஆடை வாங்கி போர்த்திடுங்கள். அதன்மூலம் அவர்களை வாழ வையுங்கள். இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்"

இவ்வாறு கே. ராஜன் பேசினார்.

விழாவில் விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசை அமைப்பாளர் ஜி கே வி , எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குநர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குநர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்

9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! 


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை  நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர்  அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம்  பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன்,  பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.