மே 2022

'யானை' படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சி- இயக்குனர் ஹரி
தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வினில் இயக்குனர் ஹரி பேசியதாவது:

நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி  S.சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது:

நானும், இயக்குனர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது. பல இடங்களில்  இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி. 

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது:

இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குனர் ஹரி சார் தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரகனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்.  

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் கூறியதாவது:

இயக்குனர் ஹரியுடன் பணியாற்றுவது எனது பல நாள் கனவு, இந்த படம் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அவர் தயாரிப்பாளரின் இயக்குனர். இந்த படத்தை எந்த தடையுமில்லாமல் எடுக்க உதவிய படக்குழுவுக்கு நன்றி.
கேமராமேன் கோபிநாத் பேசியதாவது:

ஹரி சார் உடன் இணைவது இது தான் முதல் முறை. பல நாள் கனவு இது, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது. இப்போது நிறைவேறி உள்ளது, அதற்கு உறுதுணையாக இருந்தது தயாரிப்பாளர் அவருக்கு நன்றி. படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்துக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.  

நடிகர் ராஜேஷ் பேசியதாவது:

ஹரி உடைய படங்கள் எப்பொழுதும் செண்டிமெண்ட் நிறைந்து இருக்கும். படத்தில் அருண் விஜய், சமுத்திரகனியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா வயதினரும் ரசித்து பார்க்கும் படமாக, இப்படம் இருக்கும். 

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது:

இந்த படம் எனக்கு வேறு ஒரு பரிமாணமாக இருக்கும். அருண் விஜய்க்கு இந்த படம் மைல்கல்லாக இருக்கும்.  கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய படமாக யானை இருக்கும் என நான் நம்புகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 
நடிகர் KGF ராமசந்திர ராஜு  பேசியதாவது:

இந்த படத்தில் ஹரி சார் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். நிறைய கற்றுக்கொண்டேன். அருண் விஜய் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி, அவர் பல சிக்கல்களை கடந்து இந்த படத்தில் நடித்தார். ஆக்சன் காட்சியில் அடிபட்ட போதும், மறுநாள் சூட்டிங் வந்தார். அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி கொடுக்கும். படக்குழுவுக்கு நன்றி. 

நடிகர் சஞ்சய் பேசியதாவது:

கண்டிப்பாக இந்த படம் அருண் விஜய்க்கு பெரிய மைல்கல்லாக இருக்கும். நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம், இந்த படத்தில் அருண் விஜய் சிங்கிள் ஷாட்டில், 3.30 நிமிட சண்டை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அது மிகப்பெரிய அளவில் பேசப்படும், இந்த படத்தில் நடிக்க  வாய்ப்பளித்த அருண் விஜய் மற்றும் இயக்குனருக்கு நன்றி

நடிகை அம்மு அபிராமி பேசியதாவது:

இந்த படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த அனைவரும் பெரிய கலைஞர்கள். அவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஹரி சாருடனும், அருண் விஜய் சாருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா! 
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை  ஞாயிறு நடைபெறவுள்ள விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

'தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார். 

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார். 
அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. 

இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், 'தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது. 

படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர். 

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். 
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’. 

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது. 

சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். நாளை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை  நேரத்தை கடந்து சாதனை!
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”,  திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து  (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது:

நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின்  மீது காட்டும் அன்பிற்கு  மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

நடிகர் ராம் சரண் கூறும்போது:

ஜீ5 இல் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து  காத்திருந்த  நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பாணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஜீ5 இல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.

ஜீ5 தளமானது தமிழ் ஓடிடி உலகில், சிறந்த உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்குப் பரிசளிப்பதில் முன்னணியில் உள்ளது. அதன் அசல் தொடர்களான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘விலங்கு, அனந்தம், கார்மேகம்’ போன்ற தொடர்களுடன் அசத்தலான படங்கள் மற்றும் வணிகரீதியான பிளாக்பஸ்டர்களுடன், இது பொழுதுபோக்கு ஆர்வலர்களின் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியுள்ளது.


இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்....!- பா.ரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய 

இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது:

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஸியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன். கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். 
இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று. சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறது. 

சரி இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. 

நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர். அவருடைய எழுத்து என்னை ரொம்பவே பாதித்த ஒரு எழுத்து. அவரின் நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் போன்ற நாவல்கள் எனக்கு பிடிக்கும்.

கூள மாதாரி நாவலில் திருச்செங்கோடு குறித்த விவரணைகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமான நாவல் அது. குழந்தைகளின் உலகத்தை மிக அற்புதமாக அந்த நாவல் காட்சிப்படுத்தி இருக்கும்.  அந்த உலகம் எந்தளவிற்கு ஈவு இரக்கம் அற்ற உலகம் என்பதும் அதில் உண்டு. பண்ணை அடிமை முறையில் வாழும் குழந்தைகளின் வாழ்கையை உள்ளடக்கியது அந்த நாவல். சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான். இது எப்படி திரைப்படமாக சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது ஒரு முக்கியமான திரைப்படமாக வரும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 

இத்திரைப்படத்தில் போட்ட பணம் திரும்ப வருமா..? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை. இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இதை முன்னெடுத்துச் சென்றோம். 

நீலம் தயாரிப்பில்  படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம். கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது. 

நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம்.

நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன். இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதால், அந்த தீட்டை கழிக்க கோவில் சார்பாக யாகம் நடத்தப்பட்ட இந்தியா இது. 
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இது போன்ற அரசியல் பேசுவதில் இயக்குநர் தமிழுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. 

இது படக்குழுவினர் உட்பட எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கிறது. இப்பொழுது கூட கான் திரைப்படவிழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. அவையே அங்கு திரையிடப்படுகின்றன. இது போன்ற சுயாதீனப் படங்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தையும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்.'Vikram' Audio LaunchKamal Haasan-starrer Vikram will hit the theatres on June 3, and the makers have started a full-fledged promotional campaign. The movie stars Kamal Hassan, Fahadh Faasil and Vijay Sethupathi in important roles. Directed by Lokesh Kanagaraj, the makers recently dropped the first song, titled Pathala Pathala, on YouTube giving us the first glimpse of Kamal Hassan dancing to catchy tunes and amazing beats.

The makers released the entire album across all platforms on Sunday. The album consists of five songs namely - Pathala Pathala (lyricised and sung by Kamal Hassan), Vikram (Title Track, lyricised by Vishnu Edavan and sung by Anirudh Ravichander), Wasted (written by Heisenberg and sung by Anirudh Ravichander), Porkanda Singam (written by Vishnu Edavan and sung by Ravi G) and Once Upon A Time (written by Heisenberg and sung by Anirudh Ravichander). The song Pathala Pathala crossed 2 crore views in 2 days and currently sits at 2 crores and 30 lakh views.

The trailer and audio launch event for the movie were held at the Chennai Nehru Stadium with many stars and directors attending the event. Pa. Ranjith was also one of the esteemed guests to have been invited and he announced a new project that is in the works with Kamal Hassan in the lead role.

While the movie is already star studded with three huge names of the South Indian Film Industry, a video showing Suriya on the sets of Vikram had also gone viral leading to director Lokesh announcing a cameo by the actor in the movie.

The movie trailer has already crossed 1 crore views even before touching the 24-hour mark. The numbers indicate that the movie might earn well in its opening weekend.

Prime Minister dedicated to the Nation the 3rd Broad Gauge line project... 

Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India visited  the state of Tamil Nadu on 26th of May 2022 (today) and dedicated, inaugurated and laid the foundation stone for several key infrastructural projects.  A grand function was organised at Nehru Indoor Stadium, Chennai.  Shri K.N. Ravi, Governor of Tamil Nadu, Shri M.K.Stalin,  Chief Minister of Tamil Nadu and Dr.L.Murugan, Union Minister of State for Fisheries, Animal Husbandry and Dairying & Information and Broadcasting greaced the occasion.

The dignitaries who participated in the function through virtual means were - Shri Basavaraj S. Bommai, Chief Minister of Karnataka, Shri Y. S. Jagan Mohan Reddy, Chief Minister of Andhra Pradesh, Shri Nitin Gadkari, Union Minister for Road Transport and Highways and Shri Hardeep Singh Puri, Union Minister for Petroleum and Natural Gas, Housing and Urban Affairs.

Speaking at the function, Hon’ble Prime Minister stated that infrastructure plays a crucial role in the socio-economic development of  the Nation and the vital projects unveiled  are directly linked to economic prosperity.
Hon’ble Prime Minister dedicated to the Nation the 3rd Broad Gauge line between Tambaram and Chengalpattu (30 Km) completed at a cost of Rs.598 Crores.  This new additional line in the arterial Chennai Suburban network will pave the way for introducing additional EMU train services in the section, besides improving the punctuality of Mail/Express trains and significantly reduce the travel time for Chennai suburban commuters.

Hon’ble Prime Minster inaugurated the newly gauge converted Madurai – Teni (75 Km) section completed at a cost of Rs.506 Crore.   The section would Offer a reliable, faster and cheaper mode of transport, especially for agricultural purposes.   The improved connectivity to this region will boost local trade and industries thereby creating employment opportunities.

Hon’ble Prime Minister  also laid  the foundation stone for the Station redevelopment of 5 railway stations in the state of Tamil Nadu, namely, Chennai Egmore, Katpad jn,, Madurai jn, Rameswaram and Kanniyakumari.  The estimated total cost of redevelopment of these five stations is Rs.1803 Crore.

Local functions were organized  by Southern Railway at Chennai Egmore, Tambaram, Madurai, Teni, Katpadi, Rameswaram and Kanniyakumari railway stations.   Elected representatives attended the function at these locations.

Apart from the above railway projects, Hon’ble Prime Minister dedicated to the Nation, 1152 Houses constructed under Light House Project,   Ennore-Chengalpet section of ETBPNMT Pipeline and Thiruvallur Bengaluru section of ETNPNMT Pipeline.  Prime Minister also laid the foundation stone for Chennai – Bengaluru Expressway project, 4 Lane Double Decker Elevated Road connecting Chennai Port to Maduravoyal (NH-4) Project, 4 Lane Neraluru to Dharmapuri section of NH-844 Project, Multi Modal Logistic Park at Chennai and 2 Lane with paved shoulders of Meensurutti to Chidambaram section of NH-227 from Km 98/433 to Km 129/965.  'சூர்யா41' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும்   ரசிகர்களின் பேராதரவை பெற்ற,  நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில்  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. 

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர்  சதீஷ் சூர்யா. இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

'விஷமக்காரன்' திரைப்படத்தின்  விமர்சனம்
நடிகர்கள்:

அக்னி - வி, 

ஐகிரி - அனிக்கா விக்ரமன், 

தரங்கிணி - சைத்ரா ரெட்டி


தொழில்நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு : J கல்யாண்

இசை : கவின்-ஆதித்யா

படத்தொகுப்பு : S.மணிக்குமரன்

இயக்கம் : V

தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்

மக்கள் தொடர்பு : KSK செல்வா


ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஷமக்காரன்’.

மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.

அக்னி (வி) ஒரு மனநல மருத்துவர். மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் மனகசப்பை நீக்கும் டாக்டர். அக்னியும் தரங்கிணியும் (சைத்ரா ரெட்டி) காதலிக்கின்றனர்.

வேலைக்காக வெளிநாடு செல்ல எண்ணும் தரங்கிணி திடீரென்று அக்னியை பிரிவதுடன் அவன் மீதான காதலையும் தூக்கி எறிகிறார்கள். இந்நிலையில் ஐகிரியுடன் (அனிகா) அக்னிக்கு காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திடீரென்று ஒருநாள் அக்னி பழைய காதலி தரங்கிணியை சந்திக்கிறார். 

அவளுக்கு உதவ அக்னி எண்ண மனைவி ஐகிரியோ அவளுடன் பேச வேண்டாம் என்று எச்சரிப்பதுடன் இருவரையும் சேர்த்துவைத்து பேசுகிறாள். கேமரா மறைத்து வைத்து இருவரையும் வேவு பார்க்கிறார்கள். இந்த விஷயம் கணவருக்கு தெரியும் நிலையில் அடுத்து நடப்பது என்ன என்பதற்கு விடை சொல்கிறது படம். 

அதன் பின் மனைவி சந்தேகத்தின் உச்சங்கள் மீதி கதை.....


விஷமக்காரன் என டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ வி, விஷமம் செய்ய அது வில்லங் கத்தில் முடிகிறது. மற்றொருவரின் மனதை தன்வயப்படுத்தி அவர்களை தன் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கும் மனோத்துவ ரீதியிலான மாறுபட்ட கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இதில் இயக்குனரும் ஹீரோவும் வி என்ற ஒருவர்தான். படத்தின் தொடக்கத்திலேயே manupulate (கையாளுதல்) என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஒருவரிடம் அவர்களுக்கு சாதகமாகவே பேசி அவர்கள் மனதை தன் வயப்படுத்தி நம் எண்ணத்துக்கு ஏற்ப அவர்களை எப்படி செயல்பட வைக்கலாம் என்று சொல்லப் படுகிறது.

அதையே செயல் முறை விளக்கமாக முழுபடமாக உருவாக்கி இருக்கிறார் வி. படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மூன்றுதான். அதில் வி, அனிதா விக்ரமன், சைத்ரா ரெட்டி நடித்திருக்கின் றனர். இவர்களை சுற்றித்தான் முழுகதையும் நகர்கிறது. இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் பாடலும், பின்னணி இசையும் இனிமை. 

படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்? நீங்களே பார்த்து ரசியுங்கள்....

மொத்தத்தில் இந்த ‘விஷமக்காரன்’ சுவாரசியம் நிறைந்த கலவை... 


வம்பில் சிக்கிய ‘வாய்தா’... சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்!
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் 'வாய்தா'. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் 'வாய்தா' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.'ஜோக்கர்', 'கே.டி. என்கிற கருப்பத்துரை' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்ததோடு, அரசியல் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன், சீமான் மற்றும் திரைப்பிரபலங்கள் பொன்வண்ணன், நாசர், கவிதா பாரதி உள்ளிட்ட ஏராளமானோரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. முதன் முறையாக சலவை தொழில் செய்யும் சமூகத்தினர் பற்றியும், நீதிமன்றம் சாமானிய மனிதர்களை அணுகும் விதம் குறித்தும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
ஏற்கனவே பலமுறை ரிலீசுக்காக வாய்தா மேல் வாய்தா வாங்கிய  திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தை மே 27ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரிலீசுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேலைக்கு புதிதாக சிக்கல் உருவாகியுள்ளது. 

வாய்தா படம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகவும், சாதி மோதல்களை உருவாக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜகுல சமூக நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இயக்குநரும், தயாரிப்பாளரும் படத்தை எடுத்துள்ளதாகவும், வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள வாய்தா திரைப்படத்தை ஈரோடு மாவட்ட திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘சேத்துமான்’ அழகிய கலைப் படைப்பு
பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்  'சேத்துமான்'

இதுவரையிலும் ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, ‘சார்பட்டா பரம்பரை’, உள்ளிட்ட படங்கள் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. தற்போது 'சேத்துமான்' பற்றி பார்ப்போமா? 

பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், 'பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?'னு கேட்டாங்க, அதுக்கு நான் 'எல்லாமே சாப்பிடுவேன்'னு சொன்னதும் சிரிச்சாங்க. 'ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?' என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது 'சேத்துமான்'.

மேற்கு தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு நடக்கிறது கதை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு வெளியே தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார் பூச்சியப்பா (மாணிக்கம்). மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழுந்து தவிக்கும் குமரேசனுக்கு தாத்தா பூச்சியப்பாதான் எல்லாமுமே.


குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாது உழைக்கிறார் பூச்சியப்பா. கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊரில் உள்ள பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருந்த வருகிறார். இதனிடையே வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இறுதியில் அவர்களின் விருப்பத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்த அழுத்தமான காட்சிகளால் யதார்த்ததுக்கு நெருக்கமான படைப்பாக உருவாகியுள்ளது 'சேத்துமான்'.

பொட்டல் காட்டில் தாத்தாவும் பேரனும் நடந்து செல்லும்போது நமக்கு மூச்சு வாங்குகிறது. அதை நமக்கு கடத்துவதில் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றுகிறது. பல இடங்களில் வரும் லெந்த் ஷாட்டுகள், தொடக்கத்தில் வரும் வொயிட் ஆங்கிள் ஷாட், எதார்த்ததுக்கு நெருக்கமாக படத்தைக் கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது. பிந்து மாலனியின் பிண்ணனி இசையும், பாடல்களும் வித்தியாசமான திரை அனுபவதிற்கு உதவுகின்றன.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'வறுகறி' சிறுகதைதான் 'சேத்துமான்' ஆக திரை ஆக்கம் பெற்றிருக்கிறது. தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாணிக்கம் வாழ்த்திருக்கிறார். துறுத்தல் இல்லாத நேர்த்தியான நடிப்பு. எந்த இடத்திலும் அவரது நடிப்பை பார்க்க முடியவில்லை, தனக்கு முன்னால் கேமரா இருக்கிறது என்பதை மறந்து அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அதேபோல, பேரனாக வரும் அஸ்வின் குறும்புத்தனத்திலும், தாத்தாவுடனான பிரியத்தை காட்டுவதிலும், இறுதிக்காட்சியிலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவரின் நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘சேத்துமான்’ அழகிய கலைப் படைப்பு.

NEELAM PRODUCTIONS

SETHTHUMAAN 

SCREENPLAY, DIRECTION : THAMIZH

PRODUCER : PA. RANJITH

STORY, DIALOGUE: PERUMAL MURUGAN

CINEMATOGRAPHY: PRATHEEP KALIRAJA

MUSIC: BINDU MALINI 

EDITING: C.S. PREMKUMAR

SOUND DESIGN: ANTHONY BJ RUBAN 

STUNT : ”STUNNER” SAM

LYRICS: YUGABHARATHI, PERUMAL MURUGAN, MUTHUVEL 

ART: JAIKUMAR

CO DIRECTOR: SATHISH SOUNDAR

ASSOCIATE DIRECTOR: YESWANTH

PRODUCTION EXECUTIVE: SANJIV 

SOUND MIXING: PRAMOD THAMOS

CG: MADHAVAN 

DI: iGene

PUBLICITY DESIGN: DHAMO NAAGAPOOSHNAM 

PRO: GUNA

PRODUCTION COMPANY : NEELAM PRODUCTIONS

SETHTTHUMAAN 

ARTISTS:

1. MANICKAM (GRAND FATHER)

2. MASTER. ASHWIN (GRAND SON)

3. PRASANNA (PANNADI)

4. SURULI (VELLAIYAN BANGALI)

5. KUMAR (PIG MAN)

6. SAVITHIRI (VELLAIYAN WIFE)

7. ANNAMALAI (AASARI)

8. NAGETHRAN (TEACHER)

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்- சோனியா அகர்வால் பேச்சு!
பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'கிராண்மா' . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் .யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். 'கிராண்மா' படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால்  எஸ்.எஸ்.,  தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர் பேசும்போது:

"நான் படம் தயாரிப்பது என்று முடிவு செய்ததும் அதை தமிழில் தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஏனென்றால் இங்கே தான் நல்ல கதைகளையும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களையும் வரவேற்பார்கள். புதுமையான கருத்துகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் இந்த படத்தைத் தமிழில் தயாரித்தேன்.படத்தில் கேரளாவில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஹேமந்த் நாயகனாக நடித்துள்ளார். பிரபலமான நட்சத்திரங்கள் சோனியா அகர்வால், விமலாராமன் சார்மிளா , குழந்தை  நட்சத்திரம் பௌர்ணமி ஆகியோர் நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது  நடித்தவர்கள் மட்டுமல்ல அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இது  முழுக்க முழுக்க ஒரு ஹாரர் படம் என்று சொல்ல முடியாது. ஹாரரும் கலந்த ஒரு படம். படத்தின் இரண்டாம் பாதி உயிர்பிழைத்தலுக்கான  போராட்டம் பற்றியதாக மாறியிருக்கும். இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி  திரைக்கு வருகிறது .அனைவரும் திரையரங்கு சென்று கண்டுகளித்து ஆதரவு தர வேண்டுகிறேன்" என்றார்.

இயக்குநர் ஷிஜின்லால்  எஸ்.எஸ் பேசும்போது:

"இந்தப் படம் எனக்கு மட்டுமல்ல படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.நடித்தவர்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பௌர்ணமி என ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். குறிப்பாக சோனியா அகர்வால் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவிலானது. இந்தப் படம் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்கும் படியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

நிகழ்ச்சியில் நடிகை சார்மிளா பேசும்போது:

"இந்தப் படம் ஒரு நல்ல படம். எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால் ,விமலா ராமன் போன்ற நட்சத்திரங்களுடன் நான் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எங்களைத் தயாரிப்பாளர் சௌகரியமாகக்  கவனித்துக் கொண்டது மறக்க முடியாததாக இருந்தது.

இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் இருவரும் கணவன்-மனைவி போல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒவ்வொரு படத்திலும் அவர்களுக்குள் ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து படப்பிடிப்பில் பாதிப்பு நிகழும் சம்பவம் நடக்கும்.  இப்படி ஒவ்வொரு படத்திலும் பிரச்சினை வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படம் ஒரு நல்ல படம் என்று சொல்ல வேண்டும்'' என்றார்.

சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா பேசும்போது:

" இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சோனியா அகர்வாலைச் சண்டைக் காட்சிகளில் நடிக்க வைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சோனியா அகர்வால் சண்டைக்காட்சிகளில் தைரியமாக நடித்தார். படத்தின் 80 சதவிகித சண்டைக் காட்சிகளில் அவர் டூப் இல்லாமல் நடித்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா நடிகர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த படமாக கிராண்மா இருந்தது" என்றார்.நிகழ்ச்சியில் நடிகை சோனியா அகர்வால் பேசும்போது:

"இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி அவர்கள் அப்படி வைத்துள்ளார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது பல கதாநாயகர்களுடன் நடித்துள்ளேன். இது ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இருந்ததால் எனக்குப் பிடித்தது. இதை ஏற்றுக் கொண்டு நடித்தேன். தமிழில் இடையில் சிலகாலம் நடிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெப் சீரியல்களில் நடித்தேன். என்னுடன் இதே படத்தில் விமலா ராமன், சார்மிளா நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சௌகரியமாக இருந்தது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.பிரபல கதாநாயகர்களுடன்  கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள்.  அது ஒரு ரகம் இது ஒரு ரகம் அவ்வளவுதான். பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இதுமாதிரி பெண்ணைப் பிரதானப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும்.நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும்.இந்தப் படத்துக்காக இயக்குநர் சொன்ன கதையும் என் பாத்திரமும் பிடித்திருந்தது எனவே ஒப்புக்கொண்டேன். கிராண்மா படத்தில் சண்டைக்காட்சியில் நடித்துள்ளேன்.அது பற்றிக் கேட்கிறார்கள்.

சண்டைக் காட்சியில் நடிப்பது அபாயகரமானது என்ற பொருளில் கேட்கிறார்கள்.சண்டைக் காட்சிகளில் நடிப்பது சவாலான ஒன்று தான். ஆனால் இந்தப் படத்தில் சரியாகத் திட்டமிட்டு எடுத்ததால் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை. பெண்கள் பலசாலிகள் தான்.பொதுவாகப் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். எல்லா பெண்களுக்குள்ளும் இன்னொரு சக்தி வாய்ந்த பெண் இருப்பாள். இது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.ஒவ்வொரு பெண்ணும் சவால்களைக் கடந்து தான் மேலே வருகிறாள். பெண்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறதுதானே? அப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் உடனே சுட்டுக்கொல்லணும்  என்று தோன்றும். ஆனால் நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது .சட்டம் அதைப் பார்த்துக் கொள்ளும். 

இந்த கிராண்மா படம் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும் .இது  திகில் படமா பேய்ப் படமா என்றெல்லாம் கேட்கிறார்கள்.  பேய் என்றால் அபாயகரமானது பயங்கரமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண் என்பவள் பேயை விட பயங்கரமானவள் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் கருத்துதான் படத்தில் சொல்லப்படுகிறது" இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.