ஜூன் 2025

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!



சென்னை:

ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.  

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான், ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமான நாள் இது. 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் 'டிராகன்'. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ' டிராகன்' பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.

கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ''குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் 'இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்' என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட 'கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் 'டிராகன்' திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் 'DUDE' படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,'' என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ''இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் 'நான் ஹீரோவாக போகிறேன்' என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் 'டிராகன்' என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.  

'லவ் டுடே' படத்தை விட 'டிராகன்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ''இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.

அதன் பிறகு 'லவ் டுடே' படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.

'டிராகன்' படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.  

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் 'டிராகன்' அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.

'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் 'டிராகன்' படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் 'கோமாளி', 'லவ் டுடே' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக 'டிராகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். 'டிராகன்' படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.  

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

நூறாவது நாள் வெற்றி விழாவில் 'டிராகன்' பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கன் விமர்சனம் 



Casting : Vijay antony, Ajai Deeshan, Mahanadhi Shankar, Samuthrakani, Ramachandran, Brigida, Deepshika, Archana, Kanimozhi

Directed By : Leo John Paul

Music By : Vijay Antony

Produced By : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:


சென்னையில் ஒரு இளம்பெண் ஊசியால் குத்தப்பட்டு மரணம் அடைகிறார். உடல் முழுவதும் கருப்பாகி வித்தியாசமான முறையில் இறக்கும் அந்த பெண்ணின் கொலை பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். இதே போன்று ஒரு வழக்கை மும்பையில் விஜய் ஆண்டனி  விசாரிக்கிறார். சென்னையில் இதே சம்பவம் அரங்கேறிய நிலையில் அதை பார்த்து சென்னைக்கு வந்து தனது முழு விசாரணையை தொடங்குகிறார் விஜய் ஆண்டனி. அந்த கொலையாளி யார்? என்பதை விசாரிக்கும் விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்கள் தெரிய வருகிறது. அது என்ன? யார் அந்த கொலையாளி? ஏன் செய்தார்? என்பதே கதை.....


விஜய் ஆண்டனி நடிப்பு எதார்த்தம் கலந்த ஆக்க்ஷன். இன்ஸ்பெக்டராக பிரிகிடா சகா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். 


எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் பாணிக்கு ஏற்ப பணித்திருக்கிறது. கதை விறுவிறுப்புக்கு குறையில்லாமல் செல்கிறது. தண்ணீர் அடியில் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டும் காட்சிகள் புதிதாக இருக்கிறது.


ஊசி காட்சியில் சில மாற்றங்களை வைத்திருக்கலாம்..... சில காட்சிகள் குழப்பமாக அமைகிறது....


மொத்தத்தில் இந்த 'மார்கன்' சிறந்த திரில்லர் கலவை.....    


RATING: 3.5/5


Phoenix Trailer Launch Event!



Chennai:

Renowned Stunt Director Anl Arasu has helmed Phoenix, a sports-based action film starring Surya Vijay Sethupathi, son of actor Vijay Sethupathi, in the lead role. With the film slated for release on July 4th, the grand trailer launch event was held in Chennai. The event witnessed the presence of several celebrities and cast members who shared their thoughts and well wishes.

*Actor Muthukumaran*

"Greetings to all media friends. It gives me immense joy that Surya, the son of my friend, is making his debut with Phoenix. I’m also proud to have acted in this film. My heartfelt wishes to the entire cast. No matter what others say, just keep moving forward, Surya. You’re going to achieve great things! My best wishes to you as your uncle."

*Lyricist Viveka* shared:

"Anl Arasu, who choreographs powerful action sequences in other films, has outdone himself in his own directorial debut. Sam CS has composed fantastic music, and every song has turned out great. Surya’s debut is already impressive. This film is a shining example of how a young actor can make a mark in Tamil cinema. Phoenix is a symbol of hope, and hope is the most powerful driving force in life. I wish this film all success."

*Actor Moonar Ramesh*

"I’ve acted with Vijay Sethupathi sir and now with his son Surya. Anl Arasu’s name has been part of global stunt accolades, but we haven't celebrated it enough. Sam CS’s music is a big strength for the film. I’m sure Phoenix will be a big success."

*Actor Dileepan*

"Happy to be a part of Anl Arasu sir’s film. I was ready to take on any role under his direction. Surya has performed exceptionally well. I wholeheartedly wish for his success and the film’s victory."

*Actress Devadarshini*

"The trailer looks fantastic, and Surya has performed brilliantly. Films like these require a lot of hard work. Watching Surya felt like watching my own son on screen. The trailer clearly shows the effort Anl Arasu has put in. Every artist has poured their heart into this film. Sam CS’s music adds another level of strength. Everyone should come to the theatres and support the film."

*Sakthivelan of Sakthi Film Factory* stated:

"My heartfelt thanks to all the media personnel. If there's one artist from Tamil Nadu who has worked successfully across Hindi, Malayalam, and Kannada industries, it’s Anl Arasu. Phoenix is his first directorial venture. He has worked on 18 Hindi films including 7 with Salman Khan and 9 with Thalapathy Vijay. This is a complete action film, and Surya, Vijay Sethupathi sir’s son, has played a full-fledged action hero. Just as Vijay Sethupathi's journey inspired many, Surya’s journey will inspire even more. Vijay Sethupathi is a name, but Surya will be a symbol. The producer made this film out of pure love for cinema. Please make Phoenix a grand success."

*Producer T Siva*

"I’ve seen the entire film. Phoenix will surely rank among the top 10 most neatly made films. Anl Arasu has crafted it as a proper seat-edge thriller. If I’m wrong, you can call and scold me after the release. The director, cinematographer, and composer have done outstanding work. The performances are also excellent. Anl Arasu deserves the best director award this year. Surya has a bright future and will be the Tiger Shroff of Tamil cinema. I keep watching Maharaja, and now Phoenix will be added to that list. Sam CS’s music is a huge boost. Vijay Sethupathi has given so much to Tamil cinema, and now he’s given us his son too. I love Vijay Sethupathi, and I believe his son will go even further. Please support this film in theatres."

*Director Pandiraj*

"I’m here solely for Surya. I’ve worked with Anl Arasu only once, but even in that brief interaction, I could see his clarity. Watching the trailer, I can say the film has shaped up really well. I’ve known Vijay Sethupathi since Pasanga days. He is a humanitarian, and Surya, too, speaks with clarity and passion. Surya dances even better than his father and excels in action scenes. Watching the trailer gave me the same vibe I had when I saw Vishal in Sandakozhi. If someone watches 10 Vijay Sethupathi films repeatedly, they can become a great actor like Surya. As a big brother, I wish him all the best."

*Stunt Choreographer FEFSI Vijayan*

"Success doesn’t come easy. Anl Arasu has gone through many struggles. Action without emotion doesn’t work, and Anl Arasu has brought great emotional depth to this film. He introduced Surya as a hero, and Surya has strong self-confidence. That’s key to success. He has the charm to win people’s hearts. This film will be his milestone. Sam CS’s background score is especially powerful. Anl Arasu handpicked every actor for their role. I wish the film a huge success. As long as Tamil cinema exists, Surya will shine. He’s not just a name, he’s a pride."

*Director H Vinoth*

"I actually planned to launch Surya myself, but Anl Arasu beat me to it! Usually, it takes 10 films for an actor to become an action hero, but Surya got that in his debut. Congrats on your hard work, and I wish the film great success."

*Music Composer Sam CS* 

"There's a lot of effort behind every scene that works—or doesn’t. I tried to compose music that enhances the action. Commercial elements are essential for a film to connect with audiences. Vijay Sethupathi told me he wanted Surya to come into the industry without his interference. After watching Phoenix, I told him his son has done a fabulous job. This film gave me immense satisfaction. It’s a milestone in my career. Anl Arasu directed it with a clear vision. I believe Phoenix will bring both Surya and me recognition. Proud to be part of this journey."

*Actor Vijay Sethupathi* said:

"Honestly, I don’t know what to say about my son. I owe a big thanks to Anl Arasu. He told me the story in 2019, but I couldn’t do it then. Later, he asked if Surya could take it up, and I felt both joy and nervousness. I believe Surya should make his own decisions. I asked him to hear the story, and didn’t interfere afterward. I always share my industry experiences with my family but leave the decisions to them. That’s why I didn’t attend the pooja or any events. I only asked Surya if he was happy, and he said yes—that’s all. Thanks to everyone who gave him this opportunity. It’s a blessing that Anl Arasu launched him. My wife is even more thrilled than me. On her behalf too, I thank you all."

*Actor Surya Sethupathi* said:

"Greetings to everyone. I want to use this moment to thank everyone. I’ve learned a lot over the past two years. I owe my position today to my family, friends, and the press. The film releases next week. Whenever I felt low, the cast and crew supported me. Devadarshini ma’am played my mom on-screen, but also felt like my real mother off-screen. I thank our producer Rajalakshmi ma’am and director Anl Arasu sir for guiding me. Please watch Phoenix in theatres and share your feedback."

*Director Anl Arasu* said:

"My father played a key role in me reaching this point. Without our producer Rajalakshmy, this film wouldn’t exist. I first saw Surya on the sets of Jawan, and later approached Vijay Sethupathi sir. Surya worked incredibly hard for over a year and a half. He has a bright future. All technicians have worked with sincerity. Though I’ve choreographed stunts for over 200 films, Phoenix is my debut as a director. Please support this film."

*Producer Rajalakshmy Anl Arasu* said:

"Thank you to everyone. I sincerely thank all the journalists present here. We hope you’ll take this film to the people. Thanks to my son, my daughter, and everyone involved in this journey."

Prashanth Hospitals Becomes City’s First To Successfully Heal 500 Patients with Robotic Knee Replacement Surgeries Using 4th Gen Velys Tech!



Chennai:

In a major advancement for precision-led orthopaedic care, Prashanth Hospitalsone of Chennai’s leading multi-specialty healthcare providers has become the first in the city to complete over 500 robotic knee replacement surgeries using the state-of-the-art 4th Generation Velys Robotic-Assisted System. This milestone comes at a critical time, as India faces an arthritis epidemic, with over 100 million people affected by the condition. Leading this achievement is Dr. Arumugam S, Senior Orthopaedic Surgeon and Joint Replacement Expert at Prashanth Hospitals, who now ranks among the top five surgeons in India to cross the 500-surgery mark using the 4th Gen Velys system.

Osteoarthritis, especially in the knees, has seen a sharp rise among people over 60 due to sedentary lifestyles, obesity, and aging. According to the Indian Journal of Orthopaedics, knee arthritis in India is 15 times more prevalent than in Western nations — making precision-driven treatment essential. This milestone by Prashanth Hospitals sets a new benchmark by enabling anatomically aligned, rotational knee movements that closely mimic natural function—leading to shorter hospital stays, quicker recovery, and patients walking within a day and regaining near-normal mobility in just a month.

Commenting on the occasion, Dr. Arumugam S, Senior Orthopaedic Surgeon and Joint Replacement Expert at Prashanth Hospitals, said:

“India is slowly becoming the arthritis capital of the world—much like it is with diabetes. We’re now seeing younger patients, even in their early 50s, requiring knee replacements. Watching them walk out pain-free within days is a powerful reminder of why this advancement matters. Robotic technology has moved beyond the one-size-fits-all approach. It has enabled me to do patient-specific alignment—something conventional techniques simply can’t offer—resulting in more precise, personalized, and effective knee replacements. As someone who also mentors surgeons across India and Southeast Asia in robotic joint replacement, it’s incredibly rewarding to see how technology is transforming care at every level.”

Once affecting just 1 in 10 senior citizens, arthritis now impacts 3 to 4 out of every 10 Indians over the age of 60—with severe cases increasingly seen in patients as young as their early 40s and 50s. This surge is driven by sedentary lifestyles, obesity, lack of exercise, and prolonged hours of desk-bound work. Women, notably, account for over 75% of the knee replacement cases at Prashanth Hospitals, a trend consistent across the country. Reflecting the broader momentum, the adoption of robotic systems is expanding rapidly—even in Tier 2 and Tier 3, marking a significant step toward more accessible, precise, and patient-specific orthopaedic care.

Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, shared the broader vision behind this technological advancement:

“Being the city’s first to use the latest 4th Gen Velys Robot and successfully complete over 500 robotic knee replacement surgeries marks a major milestone in our commitment to advanced healthcare at Prashanth Hospitals. This is not just about numbers—it’s about helping patients regain mobility and confidence through precision-driven care. Robotic-assisted surgery enables us to replicate natural knee movement with exceptional accuracy, resulting in faster recovery and better long-term outcomes. As robotic adoption grows across India, Prashanth Hospitals remains one of the pioneers in integrating both Velys for orthopaedics and SSI Mantra for soft tissue surgeries, making us one of the few centres in Tamil Nadu to offer multi-specialty robotic capabilities under one roof. Our goal has always been to bring world-class innovation to Chennai, and this achievement reflects our dedication to transforming lives through cutting-edge care.”


 AKB பெவிலியன் IIT என்க்ளேவ்’! - வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள்!



AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது.

ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் தன்னிறைவான சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


தென் சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி வளாக மேம்பாடு மற்றும் விரைவான வளர்ச்சியால், தையூர் விரைவாக முதலீட்டாளர்களின் மையமாக உருவெடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், AKB Pavilion இந்த நீளத்தில் உள்ள நிலங்களின் விலையில் கிட்டத்தட்ட பாதி விலையில் உள்ளது, இது புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து வெறும் 5 நிமிடங்களில் ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்குகிறது.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 200 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படும் வருமானத்துடன், இந்த திட்டம் ஓ.எம்.ஆர் அருகிலுள்ள மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக மாற உள்ளது. ஏகேபியின் 36 ஆண்டுகால பாரம்பரியத்தால் ஆதரிக்கப்பட்டு, சட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பாட்டுத் தரத்திற்கு பெயர் பெற்ற பெவிலியன் ஐஐடி என்க்ளேவ் வெறும் ஒரு நிலம் மட்டுமல்ல, இது சென்னையின் எதிர்காலத்தில் ஒரு புத்திசாலித்தனமான முதலீடாகும்.

Kauvery Hospital Launches ‘Project Jeevan’  in collaboration with  Rotary Club of Chennai Mitra to Offer Free Spinal Surgeries for Children in Need



Chennai: 

Kauvery Hospital, a leading multi-specialty healthcare provider, has launched Project Jeevan, a comprehensive initiative to provide free spinal surgeries for children from the economically weaker section, born with congenital spinal and brain disorders. The project is being carried out in collaboration with Rotary Club of Chennai Mitra and Rotary Bangalore IT Corridor as lead clubs. It aims to bring life-changing surgical care to children from underserved communities who suffer from conditions such as spina bifida, myelomeningocele, tethered cord syndrome, scoliosis, and spinal tumors. These complex procedures will be conducted at Kauvery Hospital, Alwarpet, with a multidisciplinary team of surgeons and medical team. 

The initiative is supported by a grant of ₹85 lakhs raised through The Rotary Foundation, participating Rotary Clubs and through CSR of Inflow Technologies. In its first phase, Project Jeevan will enable at least 35 children to receive critical surgical interventions at no cost. This effort builds on Kauvery Hospital’s earlier successful collaboration with Rotary, through which over 100 such surgeries were previously performed free of charge. 

Many of these children are born prematurely and in critical condition. Without timely and specialized care, they face lifelong disability or death. “Through Project Jeevan, we aim not only to save lives but also to help these children lead normal, independent lives. These surgeries are highly intricate and require a well-coordinated team, and Kauvery Hospital is fully equipped to deliver the best possible outcomes,” said Dr Aravindan Selvaraj Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals. 

Project Jeevan was created in response to the high incidence of neural tube defects in South India—estimated at 10 to 15 cases per 1,000 live births which disproportionately affects children from low-income backgrounds. Without proper surgical correction, these children often live with severe disabilities, placing emotional and financial strain on families and society.

With the right intervention at the right time, we can transform these lives. This initiative is not just about surgeries, it's about restoring futures, dignity, and the potential every child deserves.

The project encompasses several outreach and education components, including training programs for sonologists to improve early prenatal detection of spinal birth defects, awareness campaigns for expectant mothers on the prevention of congenital anomalies, and capacity-building workshops for surgeons and nurses to strengthen pediatric spine care across the region.

“Kauvery Hospital has been at the forefront of advanced healthcare for over 20 years. Our core vision lies in making quality healthcare accessible and affordable. We believe that no child should be denied life-saving treatment because of financial constraints. Our partnership with Rotary Club of Chennai Mitra ensures that this care reaches those who need it most. I congratulate Dr Balamurali, Senior Consultant Spine and Neurosurgeon at Kauvery, for this noble initiative,” added Dr Aravindan Selvaraj. 

Rtn. N S Saravanan, District Governor of Rotary District 3234, stated, “Project Jeevan is dedicated to improving child health through meaningful action. We extend our gratitude to The Rotary Foundation and our partner club in Bangalore for their invaluable support.”

With Project Jeevan, Kauvery Hospital goes beyond medicine to touch lives at their most vulnerable. It is a heartfelt mission to give children not just the gift of health, but the promise of a future filled with possibility. Every surgery performed is a step toward hope, dignity, and a life that every child deserves  free from pain, limitations, and fear. Through this initiative, Kauvery Hospital stands as a pillar of healing, reminding us that compassion and care can truly change the course of a life.

VIDEO HERE:

Grand Trailer Launch of "Charukesi" – A Powerful Tale Comes to the Big Screen



Chennai:

The trailer launch event of Charukesi was held in Chennai with great fanfare, marking a momentous occasion for Tamil cinema. The film features legendary actor Y.Gee. Mahendra in a pivotal role and boasts a stellar ensemble cast that includes Sathyaraj, Samuthirakani, Suhasini Mani Ratnam, Thalaivasal Vijay, Ramya Pandian, Raj Ayyappan, Madhumathi, Livingston, Jayaprakash, and many more.

Charukesi is produced by Arun R. and directed by acclaimed filmmaker Suresh Krissna, who has also penned the screenplay. With lyrics and dialogues by Pa. Vijay and music composed by Thenisai Thendral Deva, the film promises a deeply emotional and thought-provoking cinematic experience.

At the grand trailer launch, several cast and crew members were present and shared their thoughts and heartfelt experiences associated with the film. Notably, actor Sathyaraj addressed the gathering through a special video message due to his absence at the event.

In his message, Actor Sathyaraj said,

“Director Suresh Krissna called me one day and explained the role I was to play in Charukesi. I instantly agreed, simply because of who he is. Every dialogue written by Pa. Vijay was powerful and meaningful. I’m confident Y.Gee. Mahendra sir will win a National Award for his performance in this film. Thalaivasal Vijay has played a remarkable supporting role—so much so that if I had known about that character earlier, I might have asked to do it myself! Films today are evolving—audiences are embracing stories like Tourist Family, Maman, and Madras Matinee. Charukesi is another such film with an impactful narrative.”

Musician Shankar Mahadevan, also through a video message, expressed regret for not being able to attend the event in person.

“My heartfelt wishes to director Suresh Krissna, composer Deva sir, and Y.Gee. Mahendra sir. Among today’s releases, Charukesi will definitely stand out. Congratulations to the entire team!”

Actor Mohanlal, too, conveyed his wishes through a video, saying,

“It’s unfortunate I couldn’t be there. I hope Charukesi reaches a wide audience and becomes a grand success. Best wishes to everyone involved.”

Actress Madhuvanthi Arun, speaking on stage, said,

“It’s an emotional moment for me—as both a daughter and a mother. A stage play has transformed into a full-fledged film, and that passion for theatre I inherited from my father. He acted in many iconic films with Rajini sir and Kamal sir. I’m delighted that *Charukesi* is directed by Suresh Krissna, who made *Baashha*, and composed by Deva sir, who has given soul-stirring music here. This film features three generations—my father, myself, and my son Ritwik, who debuts in this film and has even sung a song. Please watch *Charukesi* in theatres and support us.”

Actor Thalaivasal Vijay stated,

“This is a landmark film in my career. Acting alongside Y.G. Mahendran sir was an honour. Thank you, Suresh Krissna sir, for giving me this opportunity. Charukesi will certainly leave a lasting impression on audiences.”

Actor Samuthirakani shared,

“Watching the Charukesi stage play made me feel a sense of responsibility. It inspired me to do good. The film industry never abandons those who live with integrity—Y.G. Mahendran sir is proof of that. He is an inspiration to me.”

Actor Jayaprakash said,

“I played a small but significant role in this film. It was a great honour to be directed by Suresh Krissna sir. He lets his work speak louder than his words. My sincere wishes for the film’s success.”

Actress Suhasini Mani Ratnam remarked,

“Everyone on this stage has played a key role in my life. After a long time, I’ve come across a film with such strong dialogues—thanks to Pa. Vijay. Y.Gee. Mahendra sir has helped me immensely. I’ve watched the Charukesi play twice. He’s a legend on stage. Acting under Suresh Krissna’s direction has been a joy. This film makes you reflect on life.”

Actress Ramya Pandian added,

“I’m extremely grateful to Suresh Krissna sir for this opportunity. This film reminds us to value our relationships. After my first shoot, Krissna sir personally appreciated me—it boosted my confidence. Being directed by the man who directed Rajini sir is a lifetime honour.”

Music Composer Deva shared

“Across all languages—Tamil, Telugu, Malayalam—Suresh Krissna sir gave me my biggest opportunities. I've worked with Y.G. Mahendran sir for 45 years. He and Suhasini ma’am have lived their characters in this film. Pa. Vijay’s lyrics are extraordinary. Kudos to producer Arun for taking this story from stage to screen.”

Lyricist Pa. Vijay said,

“Some films are done for money, some for career growth—but a few films bring true emotional satisfaction. Charukesi is one of them. I owe my recognition to Deva sir. I'm thankful to Y.Gee. Mahendra sir for giving me this chance after 22 years of collaboration.”

Director Suresh Krissna recounted,

“My heartfelt thanks to Rajinikanth sir, who insisted that this stage play be made into a film. I approached Y.G. Mahendran sir after watching it, unaware that Rajini sir had told him the same earlier. Arun sir said he would produce it only if I directed. Turning a play into a film is tough—I wrote the screenplay in two days and signed Deva sir for music immediately. I believe Shankar Mahadevan will win a National Award for the song. Sathyaraj was moved to tears after watching the film. Ramya Pandian is one of the pillars of this project. And none of this would be possible without Y.G. Mahendran sir, who has astounded us all with his performance and memory at 75.”

Finally, veteran actor Y.G. Mahendran shared his emotional words:

“At 75, to get such a role is a blessing. Thank you to Arun for producing this film and Suresh Krissna sir for directing it with such finesse. Every actor came forward willingly to be part of this film. Deva sir insisted on being involved after watching the play. Suhasini and Thalaivasal Vijay have delivered excellent performances. After a long time, we have a Tamil film without violence and bloodshed. Pa. Vijay’s dialogues are brilliant. When people walk out of the theatre after watching Charukesi, they’ll feel truly fulfilled. Rajini sir has long been a mentor to me—my thanks to him. More than money, the people we earn in this journey matter most.”


CAST:

Y.Gee. Mahendran 

Sathyaraj

Samuthirakani

Suhasini Mani Ratnam 

Thalaivasal Vijay

Ramya Pandian

Raj Ayyappan

Madhuvanthi

Livingston

Jayaprakash


CREW:

Produced by: Arun Visualz 

Story: Venkat

Screenplay & Direction: Suresh Krissna

Music: Deva

Cinematographer: Sanjay Loknath

Editor: S. Richard

Art Director: Vasudevan

Choreographers: Kala, Ashok Raja, Swarna

Lyrics & Dialogues: Pa. Vijay

Sound Engineer: Sharan

Sound Design & Mix: Lakshminarayanan A.S. (S Design)

PRO: Riaz K Ahmed, Paras Riyaz


28 YEARS LATER Horror Releasing around the world from June 18, 2025



Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominated writer Alex Garland reunite for 28 Years Later, a terrifying new "auteur horror" story set in the world created by 28 Days Later. It’s been almost three decades since the rage virus escaped a biological weapons laboratory, and now, still in a ruthlessly enforced quarantine, some have found ways to exist amidst the infected. 

One such group of survivors lives on a small island connected to the mainland by a single, heavily-defended causeway. When one of the group leaves the island on a mission into the dark heart of the mainland, he discovers secrets, wonders, and horrors that have mutated not only the infected but other survivors as well.

Directed by: Danny Boyle

Written by: Alex Garland

Cast: Jodie Comer

Aaron Taylor-Johnson

Jack O'Connell 

Alfie Williams

and Ralph Fiennes

Sony Pictures Release

மரம் நடும் திட்டத்தில் இறங்கிய தாகம் ஃபவுண்டேஷன்!



சென்னை:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பசுமையை பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் பிரபல தொண்டு நிறுவனமாக தாகம் ஃபவுண்டேஷன், தற்போது நகரங்களிலும் பசுமை பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் மரம் நடும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதுவரை கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பு அளித்த தாகம் ஃபவுண்டேஷன் தற்போது மாணவர்களுக்கிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் என்னும் நோக்கத்தில் கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.


முதல் படியாக சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் 17.6.2025 அன்று சுமார் 30 செடிகள் நட்டுள்ளது. மரம் நடுதலுடன் மட்டுமல்லாமல் பராமரிப்பு, போன்ற தொடர் பணியிலும் ஈடுபடும் என தாகம் ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது. தாகம் ஃபவுண்டேஷன் இந்த பயணத்தில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் கூறுகிறது. மரம் என்பது நமது வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒன்றும் அதனை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுவதுடன் மட்டுமல்லாமல் அதனை செய்தும் காட்டி வரும் தாகம் ஃபவுண்டேஷனுக்கு துணையாக நம்மால் முயன்றதை செய்வோம்.

தாகம் ஃபவுண்டேஷன் பற்றி:

2018-ம் ஆண்டில் வெறும் மூன்று பேரால் தொடங்கப்பட்ட இந்தத் "தாகம் ஃபௌண்டேஷன்", வெகு விரைவில் ஒரு பெரிய மாற்றத்திற்கான இயக்கமாக வளர்ந்தது. கடந்த ஏழாண்டுகளில், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் இணைந்து, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான நபர்களின் வாழ்க்கையில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் "அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் கல்வி" என்ற இரண்டு முக்கிய இலக்குகளுடன் பயணத்தை ஆரம்பித்த தாகம் ஃபௌண்டேஷன், இன்று அந்த இலக்கங்களைத் தாண்டி, சுமார் 20 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தும் வல்லமை கொண்ட அமைப்பாக மாறியுள்ளது.

தாகம் ஃபௌண்டேஷன் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் கண்டது, அது 100% வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் இந்தியாவின் முதல் தன்னார்வ அமைப்பாக இருக்கும் முறையில். நன்கொடையாளர்கள் தங்களது நன்கொடை எங்கு செல்கிறது என்பதை நேரடியாக கண்காணிக்கக்கூடிய வசதியுடன், நம்பிக்கையுடன் தங்களைச் சேர்ந்தவையாக உணர முடியும்.

இது வெறும் ஒரு தன்னார்வ இயக்கம் மட்டுமல்ல, இது ஒரு நம்பிக்கையின் பேரில் வளர்ந்த சமூக மாற்ற இயக்கம்.

VIDEO HERE:

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா



'பர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், 'ஜீவா டுடே' ஜீவ சகாப்தன், 'யூ டூ ப்ரூட்டஸ்' Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ''இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்' காதல் கோட்டை' படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல்  நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார்.  தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் - நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். '' என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''  ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. 'தூறல் நின்னு போச்சு' படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும்.  'நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்' என சொல்வார்.  அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார். சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன். சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, 'அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்' என்றார்.  சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன். இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். '' என்றார்.

கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், '' என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து.  படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், '' இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.  இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்... இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். '' என்றார்.

இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், '' திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன்.  இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் '' என்றார்.

தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், '' எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் 'Grand Master of Politics ' எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 'பதிவுகள்' எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை.  சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற  முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். '' என்றார்.

தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், '' இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ''மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் 'ரோப்' என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.  

அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
இது ஒரு புது முயற்சி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது.  'நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே' என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்... எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான்.  எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.'' என்றார்.


Decathlon opens one of its large-format stores at Pondy Bazaar, T. Nagar, Chennai



Chennai: 

French sporting goods brand Decathlon has launched a new, expansive four-floor facility in Pond Bazaar, T. Nagar, Chennai spanning around 28632 sq ft. This new location is set to become the sporting goods retailer's flagship store in Tamil Nadu. Dr.C. Sylendra Babu, IPS (Retd), Former DGP/ Head of Police Force, Tamil Nadu inaugurated the store today.

The Pondy Bazaar store boasts the highest range and variety of sporting goods and equipment available in Tamil Nadu, offering a comprehensive selection for various sports and activities. The four floors of the store have been dedicated to the different sporting goods, Ground floor for cycling and allied goods, first Floor for fitness and running, second floor for football, basketball, badminton and table tennis and third floor dedicated for trekking, hiking and camping materials.

Beyond its extensive product offerings, the new Decathlon Pond Bazaar store is a full-service hub. It provides various specialized services, including Racket stringing: Catering to tennis, badminton, and squash enthusiasts; 1-hour delivery: For quick access to essential sporting items and T-shirt printing: Allowing customers to customize their athletic wear. Decathlon has officially relocated its Ramee Mall store to a new, expansive four-floor facility in Pond Bazaar, Chennai.

VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.