ஜூன் 2022

பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்” ஜூலை 8.....!
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர்  மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம்  ஜூலை 8, 2022 முதல்  உலகம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது*

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  உலகம் முழுதும் வெளியாகிறது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான "விக்ரம்" படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது.

திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்", "ஆண்டவரின் வெற்றி மேஜிக்", "தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி", "ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!! கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான 'விக்ரம்' படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ள, இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட  விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என 'விக்ரம்' படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.

விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓபனிங்கை பெற்றது. வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. ‘விக்ரம்’  இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்  உலகளாவிய ஓடிடி பிரீமியர் மூலம் ஒவ்வொரு வீடும் இத்திரைப்படத்தின் திருவிழாவாக மாறும் நேரம் இது. கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது. தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு  அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. 

விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது  என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் 'விக்ரம்' என்ற பிரம்மாண்டமான ஆக்‌ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு  திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜூலை 8, 2022 முதல் கண்டுகளிக்கலாம்.

 Kanal Audio Launch: படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும்- ராதாரவி
விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசியதாவது: 

"அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்" என்றார்

இசை அமைப்பாளர் தென்மா பேசியதாவது:

"வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. கானாமுத்து வழியாக இந்தப்படம் எனக்கு வந்தது. இந்தப்படத்தின் பாடல்வேலைகள்  மிகவும் சவாலாக இருந்தது. சமயமுரளி சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு  இருந்தது. இந்தப் புது படக்குழுவிற்கு இந்தப்படம் நல்ல அடையாளத்தை கொடுக்கும். ஸ்ரீதர் மாஸ்டருக்கு பெரிய நன்றி" என்றார்

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் பேசியதாவது:

"எல்லாருக்கும் வணக்கம்..கனல் படத்தில் நடனம் அமைத்து நடித்ததில் சந்தோஷம். இந்தப்படத்தின்  தயாரிப்பாளருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் ... ஹீரோயின்   காவ்யா பற்றிச் சொல்ல வேண்டும் . காவ்யாவின் ஒவ்வொரு நடிப்பும்  சிறப்பாக இருந்தது. தென்மா மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது .இயக்குநர் சமயமுரளியின் பாடல் வரிகள்  அருமை . கேமராமேன் பாஸ்கர் ரொம்ப சப்போர்ட் செய்தார் . சின்ன ஏரியாவிற்குள் அவர் ரொம்ப நல்லா உழைச்சிருக்கார். இந்த படக்குழு பெரிதாக ஜெயிக்க வேண்டும் .பெருசா ஜெயிக்கணும் என்று எல்லாரும் வேலை செய்துள்ளோம் . என் ஆல்பங்களுக்கு சப்போர்ட் பண்ற எல்லாரும் இந்தப்படத்தின் பாடல்களுக்கும் சப்போர்ட் பண்ணணும்.  இயக்குநர் சமயமுரளி க்கு மிக்க நன்றி" என்றார்

நடிகை காவ்யா பெல்லு பேசியதாவது:

"கனல் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இதில் நான் நடிக்க மட்டும் செய்யவில்லை . புரொடக்‌ஷன் வேலையும் செய்தேன். இந்தக் கேரக்டர் நான் பண்றதுக்கு இயக்குநர் என்னைக் கேட்டார். எல்லாருக்கும் டவுட் இருந்தது. இந்தக் கேரக்டரை ரொம்ப சீரியசா எடுத்துட்டுப் பண்ணேன். சக்தி என்ற இந்த கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர். இந்த டீம் வெரிகுட் டீம்..தயாரிப்பாளர் ஜெய்பாலா சார் ரொம்ப ஹார்ட் வொர்க்கர். பாஸ்கர் எக்ஸ்பீரியன்ஸ் கேமராமேன் நிறைய சப்போர்ட் பண்ணார். இயக்குநரோட டெடிகேசன் வேறலெவல். சமயமுரளி சாரிடம் இருந்து நிறைய கத்துக்கணும்..ஸ்ரீதர்  சார் ரொம்ப ப்ரண்ட்லி. நம்ம சாங்கை அவர் பண்ணுவாரா என்ற தயக்கம் இருந்தது. இங்கிருக்கும் எல்லாருக்கும் நன்றி. மீடியா சப்போர்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி"  என்றார்.
ராதாரவி பேசியதாவது:

"இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசினாங்க. என் சினிமா கரியரில் முதலில் கன்னடத்தில் தான் நடித்தேன். கமல் தான் இங்கு மன்மதலீலையில் சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்க ஆள் போல. நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை  மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப்! 

கானா கும்பலோட எல்லாம் சுத்துனவன் தான். ஆனா இந்தப் பசங்க நல்லா பாடினாங்க. தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார். இந்த ஹீரோயின் புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம். சமயமுரளி இந்தப்படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி  மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார்யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. சனியன் நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம்,  நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியதிருக்கு. எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பம் கொடுப்பான் ஓடிடி. பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும். இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேசமுடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்று கேட்டேன். நடிகை தமன்னாவைப் பார்த்து வியந்தேன். அந்தப்பொண்ணை சுத்திச்சுத்தி பார்த்தேன். ஒரு இடமும் கருப்பும் இல்ல. இந்தப்பொண்ணு காவ்யாவும் தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. அற்புதமான குருப் இது. சினிமாவைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள். சினிமாவில் ஒற்றுமை தான் முக்கியம். கமல் எல்லாம் எவ்வளவு திறமை பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்" என்றார்

இயக்குநர் சமயமுரளி பேசியதாவது:

"இந்தப் பங்ஷனில் முதலில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் சார்பாக  ஒட்டுமொத்தமாக  நன்றி சொல்லவேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் மக்களுக்குத் தான் சொல்லவேண்டும். கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. எம்.ஜி.ஆர் நகரில்  வாழும் பானு அக்கா ஒரு முஸ்லிம். ஆனால் அவர் வீட்டில் தான் அய்யனார் சாங் எடுத்தோம். பணம் மட்டும் சந்தோசம் அல்ல.. என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருப்பார்கள்..இந்தப்படம் எடுத்த பிறகுதான் பாட்டு வைக்கணும் என்று தோன்றியது. சென்னை மண்ணு என்ற பாட்டை எழுதினோம். அதை கானாமுத்து அழகாக பாடியிருந்தார். தென்மாவின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை அணுகினேன். சதிஷ் சக்ரவர்த்தி  தென்மா இருவரும் மியூசிக் பண்ணிருக்காங்க. ஜெய்பாலா ஒரு தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் எல்லாமுமாகவும் வேலை செய்தார். ஸ்வாதி நல்லா நடிச்சுக் கொடுத்தார். காவ்யா நிறைய பெண்களை நடிக்க அனுப்பினார். பின் அவரையே நடிக்கச் சொன்னேன். ஆனால் அவர் இவ்வளவு அழகாக நடிப்பார் என்று நினைக்கவில்லை. அவர் பெரிய நடிகையாக வருவார். இந்த சினிமாத்துறைக்கு வருவதற்கு என்னை அனுமதித்த என் மனைவிக்கும் நன்றி. இந்தப்படம் வெற்றி பெறுவதற்கு மீடியா சப்போர்ட் வேணும்" என்றார்


நடிகர்கள் : 

காவ்யா பெல்லு 

ஸ்ரீதர் மாஸ்டர் 

ஸ்வாதி  கிருஷ்ணன் 

ஜான் விஜய்  மற்றும் பலர் 


தயாரிப்பு - The Nightangle Production

எழுத்து ,இயக்கம் - சமய முரளி 


இசை -தென்மா  & சதிஷ் சக்ரவர்த்தி  

ஒளிப்பதிவு - பாஸ்கர் 

மக்கள் தொடர்பு - பரணி அழகிரி , திருமுருகன்


VIDEO HERE:

இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத்திரைப்படம்!
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசைமேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும். இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, “எ பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். 

“இசைஞானியின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள். எனவே, இசைஞானியின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்மூலம், 12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் 'கடுவா'
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடுவா'. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

வரும் ஜூலையில் ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலக சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், "மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு  முன்பே இந்தப்படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் பிரத்தியோக பேட்டி அளித்தார் பிரித்விராஜ்.

இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய லூசிபர் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இயக்குனர் ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கடுவா திரைப்படம்.

நடிகர்கள்:

பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழுவினர்:

டைரக்ஷன் ; ஷாஜி கைலாஷ்

தயாரிப்பு ; சுப்ரியா மேனன் (பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்) & லிஸ்டின் ஸ்டீபன் (மேஜிக் பிரேம்ஸ்)

கதை  ; ஜினு ஆபிரகாம்

இசை ; ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவாளர்  ; அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு ; சமீர் முகமது

தயாரிப்பு வடிவமைப்பு  ; மோகன்தாஸ்

வசனம் ; ஆர்பி பாலா

பாடல்கள் ; சாமிஜி, ஆர்பி பாலா

ஒலிப்பதிவாளர் ; அருண் குமார்

ஒளிப்பதிவு ஸ்டுடியோ ; ஆர்பி ஸ்டுடியோ

ஆடை வடிவமைப்பு ; ஸ்டஃபி சேவியர், சமீரா சனீஸ்

சண்டைக் காட்சி ; கனல்கண்ணன் & மாபியா சசி

தயாரிப்பு நிர்வாகி ; மனோஜ்.என்

துணை தயாரிப்பாளர் ; சந்தோஷ் கிருஷ்ணன்

நிர்வாக தயாரிப்பாளர் ; நவீன் பி.தாமஸ்

நிர்வாகம் மற்றும் விநியோக தலைமை ; பபின் பாபு

தயாரிப்பு மேற்பார்வை ; அகில் யசோதரன்

முதன்மை துணை இயக்குனர் ; மனீஷ் பார்கவன்

தயாரிப்பு உறுதுணை ; சஞ்சு.ஜே

ஒப்பனை ; ஷாஜி கட்டக்கடா

புகைப்படம் ; சைனத் சேவியர்

விஎஃப்எக்ஸ் ; கோக்கனட் பஞ்ச்

விளம்பர வடிவமைப்பு ; ஆனந்த் ராஜேந்திரன்

புரமோஷன் ஆலோசகர் ; விபின் குமார்

மார்க்கெட்டிங் ; போபக்சியோ

மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹமத்

Pattamboochi Movie Review: ‘பட்டாம்பூச்சி’ திரைவிமர்சனம் 


சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பட்டாம் பூச்சி. எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் நவ்நீத் இசையமைப்பில் பட்டாம் பூச்சியை இயக்கியிருக்கிறார் பத்ரி நாராயணன்.

பால்யத்தில் தனது தந்தையால் குடும்பவன்முறைக்கு ஆளாகும் சுதாகர்(ஜெய்), வளர்ந்து ஓவியன் ஆகிறார்.தந்தையின் தொடர் துன்புறுத்தல் காரணமாக உடல் மற்றும் மனச் சிக்கலுடன் வாழ்கிறார். எதிர்பாராதவிதமாக செய்யாத கொலைக்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், ஒருசைக்கோவாக மாறி அவர் செய்த 7 கொடூரகொலைகள் பற்றி காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. சுதாகரே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். கொலைகளுக்கான சாட்சியங்கள் கிடைத்தால் மட்டுமே அவரை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்கிற நிலையில், அவற்றை கண்டுபிடிக்க களமிறங்கும் காவல் அதிகாரிக்கும் (சுந்தர்.சி) சைக்கோ கில்லரான சுதாகருக்கும் இடையே நடக்கும் ரத்த விளையாட்டுதான் கதை.

கொலையாளி யார் என்பதை எடுத்த எடுப்பிலேயே கூலாக அறிமுகப்படுத்திவிட்டு கதை சொல்லத் தொடங்குகிறார் இயக்குநர். அதனால், ‘திருவாளர் கொலையாளி எப்படி கொலை செய்தால் எங்களுக்கு என்ன?’ என்பதுபோலதிரையரங்குகளில் பாவமாக உட்கார்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள்.

மரண தண்டனை கைதியை வெளியேஅழைத்து வருவது, காவலர் இமான் அண்ணாச்சி கொல்லப்படுவது, நாயகனின் தந்தையையும், தோழியையும் கடத்தி துன்புறுத்துவது உள்ளிட்ட பெரும்பகுதி காட்சிகள் பார்த்து சலித்த ‘டெம்பிளேட்’ ட்ரீட்மென்ட். அதேநேரம் பத்திரிகையாளராக வரும் ஹனி ரோஸ் - சுந்தர்.சி - அவரது அப்பா இடையிலான காட்சிகளில் இழையோடும் குடும்ப, காதல், பாச உணர்வுகள் நன்கு எடுபடுகின்றன.

80's கால கட்டத்திற்கு ஏற்ற ஒளி அமைப்பை உருவாக்கியதில் ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி மிளிர்கிறார். பாராட்டுகள். நவ்நீத்தின் இசையும் படத்திற்கு பலமே. பட்டாம் பூச்சி நல்ல கதைக் களம் உள்ள சினிமா. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான கிரைம் சினிமாவாக இது ஹிட் அடித்திருக்கும்.

மொத்தத்தில் இந்த  ‘பட்டாம்பூச்சி’ ஒற்றை சிறகு.... 


DIVERSION OF TRAIN SERVICES

 Due to ongoing Engineering and Signalling Works connected with Doubling of Track between Omalur and Mettur Dam in Salem Division of Southern Railway from 23rd June to 29th June 2022, the following are the changes in pattern of train services :-

 

The following trains will run via diverted route on 28th June 2022.                                  

 

Train No.12678 Ernakulam – KSR Bengaluru Superfast Intercity Express scheduled to leave Ernakulam Jn at 09.10 hrs on 28th June 2022 (Tuesday) will run via diverted route of Salem – Tirupattur – Bangarapet – Baiyyapanalli  and skip stoppages at Dharmapuri, Hosur and Carmelaram

 

Train No.11014 Coimbatore – Lokmanya Tilak Terminus Express scheduled to leave Coimbatore at 08.50 hrs on 28th June 2022 (Tuesday) will run via diverted route of Salem – Tirupattur – Bangarapet and skip stoppages at Dharmapuri and Hosur.

நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்!அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்தார். 

இன்று காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். 

பிரபல உடல்நல நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஆதிஜோதிபாபு மூலமாக பஞ்சபூத மருத்துவமுறையினால் மருந்தில்லா மருத்துவமுறையை அறிமுகப்படுத்தி இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமுகாம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த மருத்துவமுறையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினரோடு பங்குகொண்டு பயன் பெற்று வருகின்றனர். 

சிறப்பு முகாமில் கலந்துகொண்ட உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த முன்னெடுப்புக்காக நடிகர் ராதாரவியையும், எளிய முறையில் சிறந்த சிகிச்சை அளித்ததற்காக டாக்டர் ஆதிஜோதிபாபுவையும் பாராட்டியதோடு அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர். 

'என் பார்வையில் உன்னைத் தேடி' ரொமாண்டிக் பாடல் ஆல்பம் ! 
திரைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து கனவுத் தொழிற்சாலையில் முட்டிமோதும் இளைஞர்கள் பலருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு போல் உதவி,வாய்ப்பு வாசலில் உள்ளே நுழைய வழி வகுப்பவை குறும்படங்கள் மற்றும் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை. 

அப்படிப்பட்ட கனவைச் சுமந்திருக்கும் இளைஞர்தான் துளசிராம். அவர் நாயகனாக நடித்து தன் M9 ஸ்டுடியோ சார்பில் தயாரித்திருக்கும் படைப்பு தான் 'என் பார்வையில் உன்னைத் தேடி' ரொமாண்டிக் பாடல்  ஆல்பம். 'அன்பே உன் பார்வை என்னை கொல்கின்றதே ! நீ சென்றால் காற்றும் என்மேல் வீசுதே' என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.  காதல் மொழி பேசும் இந்த ஆல்பத்தில் துளசிராம், சிம்ரன் நடித்துள்ளார்கள்.  சதீஷ் இயக்கியுள்ளார்.   இ

தற்கு  இசை- கிங்ஸ்லி, ஒளிப்பதிவு- தினேஷ் ,நடனம்- சதீஷ், பாடல் எழுதியுள்ளவர் ஜோயல் கிங்ஸ்டன், படத்தொகுப்பு -திருச்செல்வம் என,  புதிய இளைஞர்களின் கூட்டணியில் இந்த ஆல்பம் உருவாகி உள்ளது.  ஒரு திரைப்படத்திற்கான கனவோடு இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள் துளசிராம் குழுவினர்.   "இந்த சிறு முயற்சிக்கு பாராட்டுக்களை உங்கள் பார்வைகளின் மூலம் கொடுத்தால் நாங்கள் பெரிய முயற்சியில் இறங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்.உங்கள் கண்ணசைவுக்காகக் காத்திருக்கிறோம். பாருங்கள் வாழ்த்துங்கள்" என்கிறார் துளசிராம்.

Maayoon Movie Review: 'மாயோன்' விமர்சனம் பார்ப்போமா?! நடிகர் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் அருண் மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் அவருக்கு சொந்தமான டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் 'மாயோன்'.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள புராதன கோயில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டறிகிறார். ஏற்கெனவே சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கண்டறிந்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் சிபிராஜும் இணைந்துவிட இறுதியில் புதையலை கண்டறிந்தார்களா? இல்லையா? என்பது தான் 'மாயோன்' படத்தின் திரைக்கதை.

சிபி சத்யராஜ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நாயகி என அந்தஸ்துக்காக வந்துசெல்கிறார். ஹரிஷ் பேரடி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), ராதாரவி கதாபாத்திரத்துக்கான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். 

வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆராஷ் ஷா என்பவரை பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள்.  படத்தின் மூலம், ஆன்மிகம், அறிவியலை கலந்து கொண்டு சேர்த்திருக்க முயற்சித்திருக்கிறார்கள். 'வாழ்க்கையை இரண்டு வகையில் வாழலாம். ஒன்று அற்புதம் அதிசயம் இல்லாதது போல நம்பிக்கொண்டும், மற்றொன்று அற்புதம் அதிசயம் இருப்பது போல நம்பியும்'' என படம் தொடங்குவதற்கு முன்பே ஒரு வசனம் வருகிறது.

அதேபோலத்தான் அறிவியலை நம்பி ஒருக்கூட்டமும், ஆன்மிகத்தை நம்பி ஒரு கூட்டமும் இருப்பது போல காட்டப்படுகிறது. சிலை கடத்தல், அதற்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து ஓவர் ஹைப் கொடுத்துவிட்டு இறுதியில் அந்த ஹைப் கொடுத்த வில்லன் அடிவாங்க இந்தியா வரும் காட்சிகள் செயற்கை. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி இருட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் தன் உழைப்பைக்கொட்டி திரையில் விருந்து படைக்கிறார். 

மொத்தத்தில் 'மாயோன்' ஆன்மீகம் கலந்த கலவை.... 

Maamanithan Review: "மாமனிதன்" எப்படி இருக்கு?! 


                         விமர்சனத்தை பார்ப்போமா? 

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் "மாமனிதன்"

தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கக்கூடிய ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி) , தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மாதவன் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர் அவருடைய நிலத்தை விற்பதற்காக வருகிறார்.

தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படும் ஆட்டோ ஓட்டுனரான ராதாகிருஷ்ணன், டக்குனு ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி, அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேசு நான் உங்களுக்கு இந்த நிலத்தை விற்று தருகிறேன் என மாதவனிடம் கூறுகிறார். அதற்காக தனக்கு கமிஷன் தர வேண்டும் என்றும் மாதவனிடம் டீல் பேசிக் கொள்கிறார் ராதாகிருஷ்ணன்.

அதற்கு மாதவனும் ஒத்துக்கொள்கிறார். தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்கிற ராதாகிருஷ்ணனின் முயற்சி வெற்றி கண்டதா? இல்லையா?. ராதாகிருஷ்ணன் எப்படி மாமனிதன் ஆனார் என்பதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை உடன் விளக்கி உள்ள படம் தான் இந்த மாமனிதன்.நடிகர் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக ஒரு நல்ல முதிர்ச்சியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய மனைவியாக சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி. அவர் தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார்.

சிக்கந்தர் பாய் ஆக குரு சோமசுந்தரம் வழக்கம்போல் கலக்கி இருக்கிறார். மாதவனாக வரும் ஷாஜிசேன், கஞ்சா கருப்பு, கேபிஏசி லலிதா. விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.  யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா என இரண்டு இசை அரசர்கள் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தாலும், பாடல்களோ பின்னணி இசையோ மனதில் பதியும்படி இல்லாதது படத்திற்கு பின்னடைவாக தெரிகிறது.

மொத்தத்தில் "மாமனிதன்" குடும்ப மனிதன்.... 


 ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!
ZEE5’s latest Original release ‘Fingertip Season 2’ has become a blockbuster hit by scaling 4Crore streaming minutes in a short span. Besides, the series has created a tremendous benchmark of 7.5 IMDB rating and has garnered phenomenal reviews. 

ZEE5 has carved a niche of excellence by constantly delivering splendid Original series and movies. It has already clasped a greater stature in the Tamil OTT market with its back-to-back blockbuster series like Vilangu, Karmegam, Anantham, and many more. Significantly, it has hit the bull’s eye with yet another promising magnum opus ‘Fingertip Season 2’. 

Setting great records with the highest streaming minutes isn’t something new for ZEE5. It keeps breaking its records with each new series. Apparently, Fingertip Season 2, which premiered on June 17, 2022, has touched a milestone by scaling 4Crore streaming minutes in less than a week of its release. Moreover, the IMDB ratings of 7.5 have turned the spotlight upon this series beyond the linguistic factors and boundaries. 

The ability of director Shivakar to present the contemporary crisis involving cyberspace and digital technological progressions has appealed to the interests of audiences. In addition, the spellbinding performances of actors Prasanna, Regina Cassandra, Aparna Balamurali, and others have been acclaimed as well. Furthermore, the technical department has been appreciated for delivering top-notch work. 

Scoring brownie points with Originals, ZEE5 has lined up a wide array of Original movies and series, and blockbuster entertainers. The official word about the release dates will be announced soon.

'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் சர்வதேச அளவில் விநியோகம்!


நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட  இந்த திரைப்படம்… ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  இந்நிலையில், ஆர். மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து 'ராக்கெட்ரி'. படத்தை உருவாக்கியது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் மற்றும் இயக்குநர் மாதவன் கூறியதாவது:

விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து  வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்." என கூறினேன். ஆனால் அவர், "ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது. அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது  அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பிதார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என கேட்டார். நான் அவரிடம் ஒரு ஏமாற்றத்துடன் கேட்டேன், "நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை." . அவர் அதற்கு ஒரு பதிலைக் கொடுத்தார், "நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன். “ என்று சாதாரணமாக கூறிவிட்டார். நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள்.  ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார், பரப்புகிறார், ஆனால்  மற்றவர் - எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்.

நடிகர் மாதவன் திரைப்படத்தில் வரும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காக  தனது உடலில் உருவாக்கிய மாற்றத்தின் சில படங்கள் மற்றும் காட்சிகளை திரையிட்டு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தினார். அவர் வயதான தோற்றத்தை பெறுவதற்காக தனது பற்களை மறுசீரமைத்தார், மேலும் அவர் அந்த தோற்றத்திற்காக தொப்பை வரவைத்து காட்சிகளை எடுத்ததை பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், வெறும் 14 நாட்களில் அவர் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சி அடைந்ததைக் காட்டும் படத்தை காண்பித்து,  கூட்டத்தினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து ஆர்.மாதவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் உறுதியான போராட்டம், மற்றும் வெற்றியின் கதையை படம்பிடித்து காட்டும்,  “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், TriColour films, Varghese Moolan Pictures  மற்றும் 27th Investments  நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை இந்தியாவில் UFO Moviez மற்றும் Red Giant Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து  விநியோகம் செய்கின்றன.  Yash Raj Films மற்றும் Phars Film Co மூலம் இத்திரைப்படம் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படுகிறது.திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்து பாராட்டு! 
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி  ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார். 

அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார். திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.

A LATEST VENTURE OF FOOTBALL PLUS INTERNATIONAL STRIKERS ACADEMY IN ASSOCIATION WITH PUMA!
Chennai: 

Football plus is a professional soccer academy based out of Chennai, Tamil Nadu. Having been started back then in 2014 and accredited to All India Football Federation (AIFF), the institution has emphasized on grassroots training and youth football development.

The main motive of the international striker’s academy is to produce strikers who would fill the lack of top-class finishers in Indian football. The idea birthed to improve the standard and quality and level of Indian Football by giving a Spanish touch. Players from the age group of 13 years can participate in the training program.

Top legendary strikers from the best teams in the world would come down to India to train the Indian strikers who wish to take part in the program. The impartation of skills and experience from the top legendary strikers would happen during the training.

David Anand, Coach & Founder, Football Plus, said the focus and motive of the program is to create a pathway to get exposed to International Football and to improve the standard and quality and level of Indian Football. The phase-1 training session of the International Strikers Academy will happen in the month of August from the 15th – 21st 2022. Players can enroll their application from 1st week of July 2022 through www.footballplus.in the official announcement will be posted in Facebook and Instagram.  

For the phase – 1, Gaizka Toquero – A legend and an all-time greatest striker of Atletic Bilbao, Spain will be training the players. We are expecting a minimum of 100 strikers from all over India taking part in the program.

The 2nd phase is expected to happen in the month of December. For each phase we will have legendary strikers from different countries to train our strikers. International striker’s academy would lay a foundation for the strikers to excel in their position.

The total cost for the program is Rs. 1 Lakh including taxes for one week. Throughout the one week, they will be staying in a 3-star hotel and the food, accommodation and local transfer for the players will be taken care by Football plus. The players will have everyday training, theory classes and fitness sessions for the one week.


Mr. Gaizka Toquero, said:

 I am very glad and interested to be a part of the training program in international striker’s academy and also develop the future strikers of India. To improve their tactical awareness and technical skills of the players and introduce them to Spanish way of soccer training.  

One of the top sporting brands in India, PUMA will be our Merchandise partner for the program. They will be sponsoring training kits for the players, coaches, officials and the legend Mr. Gaizka Toquero.

2 best players from the program will be given 100% scholarship for one month of training in Spain. They will be training for one month with a 2nd division La Liga club in Spain. If they are extremely well, their scholarship will be extended for a year.

VIDEO HERE:

‘ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000’ புத்தகம்!யோகி கி.வெங்கட்ராமன் எழுதிய ‘ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000’ என்ற புத்தகத்தை கோல்டன் புக் பப்ளிகேஷன்ஸ் சார்பில் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா  (ஜூன் 21) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உலக இந்து அறக்கட்டளை (World Hindu Foundation) நிறுவனr மற்றும் உலக தலைவர், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணை செயலாளர் ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் ஜெம் ஷிப்பிங் சர்வீஸ் நிறுவனத்தின் இயக்குனரும் ‘குமரிக்கண்டமா சுமேரியமா’ மற்றும் ‘புகர் நகரத்து பெருவணிகன்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியருமான எல்.பிரபாகரன், செண்ட்ரல் இண்ட்டியூட் ஃபார் கிளாசிக்கல் தமிழின் இயக்குனர் பேராசிரிய சந்திரசேகர், கலைமகள் ஆசிரிய ராஜன், ஸ்ரீராம் சேசாத்ரி ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்த கோல்டன் புக் பப்ளிகேஷன் நிறுவனர் சத்திமூர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கவும் செய்தார்.


நிகழ்ச்சியில் சத்தியமூர்த்தி பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் திரைப்படங்களை விநியோகம்  செய்து வந்தேன். எனக்கு இந்த புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு அளித்ததற்கு யோகி கே.வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி. அவர் எழுதிய பல புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அந்த புத்தகங்களை படித்து தான் நான் சித்த மருத்துவம் குறித்து அறிந்துக்கொண்டேன். ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000 புத்தகமும் நல்ல வரவேற்பு பெறும். இதுபோல் வெங்கட்ராமன் ஐயா அவர்கள் இன்னும் பல புத்தகங்களை எழுதுவார். இந்த நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

எல்.பிரபாகரன் பேசுகையில், “பெரியவர்களே தாய்மார்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற தலைவர் அவர்களே, இந்த புத்தகத்தை உருவாக்கிய ஐயா அவர்களே, மேடையில் இருக்கின்ற நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தியா ஒரு ஆன்மீக பூமி. ஆன்மீகம் என்றால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை தருகிறது. சொர்க்கத்திற்கு போவதுதான் முத்தி அது தான் முடிந்த முடிவு என்று கிறித்துவமும், இஸ்லாமும் போதிக்கின்றன. ஆனால் இந்து தர்மம் மட்டும் தான் தன்னை அறிவது ஆன்மீகம், தன்னை அறிகின்றவன் ஆன்மீகத்தை அறிகிறான் என்று கூறி சொர்க்கத்தை கீழே கொண்டு வந்து நம் மனதுக்குள் காட்டுவது இந்து தர்மம். இந்த தர்மத்திலே எல்லாவகையான வழி பாட்டு முறைகளுக்கும் வழி உண்டு. இங்கி ரிஷிகளும் உண்டு, ஞானிகளும் உண்டு, முனிவர்களும் உண்டு, வேதாந்திகளும் உண்டு. சித்தர்களும் உண்டு, இவர்ற்றை எல்லாம் கடந்த குடும்பத்தினரும் உண்டு. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் இல்லை. குறிப்பாக தென்னகத்தில் 63 நாயன்மார்கள் பற்றி நாம் பெரிதாக பேசுகிறோம். இவர்களில் 57 பேர் திருமணமாகி குழந்தை குட்டிகள் பெற்றவர்கள் தான். நமது மதத்தில் பிரம்மச்சரியத்திற்கு இடம் இல்லை. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனை அடையாளம் என்ற போதித்த தர்மம் இந்து தர்மம். இந்த் தர்மத்தில் மட்டும் தான் இறைவன் நம்முடன் விளையாடுவான். கூலி வேலை செய்வான், பிரம்மட்ப் பௌவான், தூது போவான், நண்பனாக பழகுவான். ஆனால், மற்ற தர்மங்களில் இறைவன் எட்டா இடத்தில் இருப்பது போன்றும், நாம் அவனுக்கு பயந்து வாழ்வது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். நம் மதத்தில் இறைவன் மிக எளியவன். மஞ்சள் பிடிச்சு வைத்தால் பிள்ளையார் வந்துவிடுவார். ஒரு பூவை அள்ளி போட்டால், ஒரு துளசி மாலையை போட்டால் கிருஷ்ணன் வந்துவிடுவிடுவார். இப்படி ஒரு எளிமையான தர்மம் தான் நமது இந்து மதம்.


நம் முன்னோர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை நமக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. அது பரம்பரை பரம்பரையாக நமக்கு இயல்பாகவே வருகிறது. காரணம் என்னவென்றால்  நமது குடும்பத்தில் நாம் எப்படி இயல்பாக நடந்துக்கொண்டோமோ அதை நாம் ஒரு தர்மமாக மாற்றி விட்டோம். ஒரு குழந்தை பிறந்தால் சேனை தொட்டு வைக்கிறோம், ஒரு வருடத்தில் மொட்டை போடுகிறோம், வயதுக்கு வந்தால் சடங்கு செய்கிறோம், திருமணம் செய்து வைக்கிறோம் இப்படி நம் வாழ்வில் இயல்பாக நடக்கும் விஷயங்களை நாம் தர்மமாக மாற்றி விட்டோம். ஆகையால், இந்து தர்மம் மனித வாழ்க்கையில் இணைந்த தர்மம் ஆகும். ஆடி மாதம் வந்துவிட்டால் மழை வர வேண்டும் என்று திருவிழா நடத்துகிறோம் இது இயல்பாக நடப்பது தான். தை மாதம் வந்தால் அறுவடை செய்கிறோம். அதனை கொண்டாடுவதற்காக தை பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். இது நம் வாழ்வில் இயல்பாக நடக்க கூடியவைகள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை நம் மண்ணிற்கானதா? இல்லை. கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறோம். இதில் மதம் என்ன சொல்கிறதோ அதை நாம் செய்கிறோம். ஆனால், இந்து மதத்தில் மக்கள் செய்வதையே தர்மமாக மதம் ஏற்றுக்கொள்கிறது. இது தான் இந்து மதத்தின் அளப்பறிய மிகப்பெரிய சிறப்பு என்று நான் சொல்கிறேன்.

நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடிய வள்ளவர்கள் தான் சித்தர்கள். அவர்களுக்கு எந்தவித சட்ட திட்டங்களும் பொருந்தாது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பட்டணத்து சாமி சொல்லும் போது “பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம் நாய் போல் அருந்தி, சேய் போல் இருந்து நல் மாதர்களை எல்லாம் தாய் போல் நினைப்பார்கள், என்று சொல்லுவார். ஆகையால் அவர்கள் எப்படியும் இருப்பார்கள் என்று தெரிகிறது. மனிதகுலம் நன்மைக்காக சித்தர்கள் பல விஷயங்களை செய்துக்கொடுத்திருக்கிறார்கள். இந்த சித்தர்கள் காடு, மலை, குகை போன்ற இடங்களில் இருப்பார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள் என்றால் ஒரு நன்மை செய்தாலும் அதற்கு ஒரு பிறவி வரும். இந்த புன்னியமும், பாவமும் வேண்டாம் என்பதற்காக தான் மனிதர்கள் இல்லாத இடத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.  அதையும் மீற் நம் மீது இறக்கப்பட்டு ஒரு சில சித்தர்கள் நமக்கு வழங்கியது தான் வைத்தியம், வானசாஸ்திரம், ஜோதிடம் போன்ற நூல்கள். இப்போது இருக்கின்ற பல கலைகளும், விஞ்ஞானமும் சித்தர்கள் நமக்கு தருவித்தது. திருவருட்பாவில் வள்ளல் பெருமான் ஒரு கட்டுரையில் எழுதிருக்கிறார், ஒன்றில் இருந்து நூறுவரை தமிழில் எண்களை எழுதும் போது அவை உகரத்திலேயே முடிகிறது. காரணம் என்னவென்றால் வேண்டுமென்றே சித்தர்கள் அப்படி அமைத்திருக்கிறார்கள் என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் தத்துவங்களும், விஞ்ஞானமும் நமக்கு விளங்காது. அது நமக்கு விளங்கவில்லை என்பதற்பதற்காக அதை நாம் சிறுமை படுத்தி பேசக்கூடாது. அதை தான் இப்போது திக, திராவிட கூட்டங்கள் எல்லாம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

மிகப்பெரிய பாரம்பரியத்தில் வந்த நாம் நமது மொழி, பண்பாடு இவற்றை எல்லாம் கட்டிகாப்பத்துற பொருப்பு நமக்கு இருக்கு. நமக்கு பிறகு வரும் தலைமுறைகளுக்கும் இதை நாம் எடுத்து செல்ல வேண்டும். இந்த மகா பொக்கிஷத்தை அருளிய சித்தர்கள், அதிலும் குறிப்பாக நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் போகரின் நூல்களை மேலோட்டமாக பார்க்கும் போது வரிகள் எளிமையாக இருக்கும். ஆனால், அது ஒரு மறை நூல், விஷயம் அறிந்தவர்களால் தான் அதில் இருக்கும் குறியீடுகளை புரிந்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட அறிய பணியை வெங்கட்ராமன் அவர்கள் செய்துள்ளார். அவருடைய இந்த புத்தகத்தை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.” என்றார்.

கலைமகள் ஆசிரியர் ராஜன் பேசுகையில், “எலோருக்கும் நமஷ்காரம். இது ஒரு அறுமையான புத்தக வெளியீட்டு விழா. சொல்ல போனால் தற்போதைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு இதுபோன்ற சித்தர்கள் பற்றிய புத்தகங்கள் மிகவும் அவசியம். சுமார் 15 வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஐயா இந்த புத்தகத்தை கொண்டு வந்ததாக நான் கேள்விப்பட்டேன், இது மிகப்பெரிய விஷயம் ஐயாவுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற ஒரு புத்தகத்தை கொண்டு வந்த வெளியீட்டாளரான இளைஞர் சத்யாவுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற ஆராய்ச்சி பூர்வமான புத்தகங்கள் இளைஞர்களிடம் சேர வேண்டும், இதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பேராசிரியர் சந்திரசேகர் பேசுகையில்:

“இன்று மிக முக்கியமான தினம். உலக யோகா தினம். இந்த தினத்தில் அனைத்து நாட்டினரும், மதத்தினரும் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நாளில் இந்த புத்தகம் வெளியிடுவது பெருமையாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து தத்துவங்களையும் 9 தந்திரங்களையும் சொல்லியிருக்கும் ஒரு நூல் திருமந்திரம்.  அந்த வகையில் தத்துவ உலகில் தலைமையானவராக இருப்பவர் திருமூலர், போகர் எழுதிய பாடல்கள் ஏராளமானவை நமக்கு சில ஆயிரம் பாடல்கள் தான் கிடைத்திருக்கிறது. ஓலைச்சுவடிகளை படிப்பது என்பது அறியது, அதிலும் இந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளை படிப்பது என்பது பெரிய விஷயம். அதை படித்து இப்படி ஒரு பெரிய புத்தகத்தை ஐயா வெங்கட்ரமன் கொண்டு வந்திருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதை வெளிக்கொண்டு வந்த சத்யாவையும் வாழ்த்துகிறேன். இந்த காலக்கட்டத்தில் இப்படி நுலை கொண்டு வந்தது நமது அனைவருக்கும் பெருமை. இந்த போகர் நூலி என்ன இருக்கு? 18 சித்தர்கள், அவர்களில் தலைமையானவர் போகர், நமது பழனி மலையில் வாழ்ந்தவர். ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு தான் இந்த போகர் 7000 நூழ். ஆன்மீகம் ஆகட்டும், மருத்துவம் ஆகட்டும் அனைத்தும் உள்ளடக்கிய இந்த பொக்கிஷத்தை இன்று கொண்டு வந்திருக்கிறார்கள். இது மனிதனை செம்மைப்படுத்த கூடிய மிக முக்கியமான் புத்தகமாகும். போகர் எழுதியதில் சுமார் 25 நூல்கள் தான் வெளியாகியிருக்கிறது. அவர் எழுதிய சோடிகள் பல இன்னம் வெளிவராமல் இருக்கிறது. அவற்றை எல்லாம் இவர்களை போன்றவர்கள் புத்தமாக கொண்டு வர வேண்டும், என்று கூறிக்க்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி.” என்றார்.

ஸ்ரீராம் சேசாத்ரி பேசுகையில், “போகரின் பாடல்களை இப்போதுள்ள தமிழில் மிக எளிமையாக கொடுத்ததற்கு வெங்கட்ராமன் அவர்களுக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் நமது சனாதான தர்மம் நமது வாழ்க்கையில் பின்னி பினைந்தது. சைவ சிந்தாந்தமாக இருக்கட்டும், வைணவ சித்தாந்தமாக இருக்கட்டும்  எது இருந்தாலும் இங்கு நம் வாழ்க்கையில் நடப்பதில் ஆன்மீகத்தை சேர்த்துக்கொண்டு நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்று சொல்பவனையும் இந்த சனாதனம் ஆதரித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. இராஜராஜ சோழன் காலத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் திருவாசகம், மறைகளாகட்டும், இப்போது கிடைத்திருக்கும் போகரின் பாடல்கள் கிடைத்திருக்கிறது. ஆனால், இவையும் சுமார் 23 ஆயிரம் பாடல்கள் தான் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் பார்த்தால் தமிழ் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக எப்படி உருமாறி வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். அப்படியானால் நமக்கு ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அதில் இருக்கும் தமிழ் புரிந்துக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எப்படி இருந்தது என்பது கூட நமக்கு தெரியாது. எழுத்தை சீரமைக்கிறோம் என்று தமிழை கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ளார்கள் கடந்த 100 ஆண்டுகளில். இதனால் 100 ஆண்டுகளுக்கு முன்பான நமது வரலாறு தெரியாமல் போய்விட்டது. அந்த காலக்கட்டத்தின் புத்தகங்களை இப்போதுள்ள மாணவர்களால் படிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட புத்தகங்களில் எழுதியிருப்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமானால் தவம் செய்து தான் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு புத்தகத்தை தான் வெங்கட்ராமன் ஐயா கொடுத்திருக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் நாம் நம் ஆன்மீகத்தை இழந்திருக்கிறோம், பாரம்பரியத்தை இழந்து நிற்கிறோம், சனாதன தர்மம் என்று பேசுவதையே குற்றமாக பார்க்கப்படுகிறது. நாம் மற்ற மதங்களை மதிக்கிறோம், அதே சமயம் நமது மதத்தை எதிர்ப்பவர்களை தடுக்க முயற்சிப்பதை குற்றமாக பார்க்க கூடிய இடத்தில் நாம் இருந்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலையில், நம் அடுத்த தலைமுறைக்கு இதை நாம் எடுத்து செல்லவில்லை என்றால் அது மிகப்பெரிய குற்றமாகும். அப்படி ஒரு நிலையில் இதுபோன்ற புத்தகத்தை, நமக்கு புரியும் தமிழில் கொண்டு வந்ததற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

புத்தகத்தை வெளியிட்ட ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி பேசுகையில்:

“இன்று நாம் போகரை பற்றி பேச வந்திருக்கிறோம். போகரை பற்றி இந்தியாவில் மட்டும் பேசவில்லை, இலங்கையில் பேசுகிறார்கள். மேற்கிந்திய நாடுகளிலும் இதன் சித்தாந்தம் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழை ஒரு மொழியாக மட்டுமே சித்தரிக்கிறார்கள். இது வெறும் மொழி மட்டும் அல்ல இது ஒரு கலாச்சாரம். இந்த கலாச்சாரம் மிக முக்கியமானது. இதை வைத்து பார்க்கும் போது நாம் அனைவரும் மனுபுத்திரர்கள். இந்த வழியில் நாம் வந்தவர்கள். கடைசியாக வாழ்ந்த மனு தமிழகத்தை சேர்ந்தவர். அவர் தான் வாழ்ந்த ஒவ்வொரு ஜீவராசிகளின் ஒவ்வொரு சாம்பிள்களை எடுத்துக்கொண்டு இமயமலைக்கு சென்றார். வட நாட்டில் இருக்கும் ஜீன்கள் தென்னாட்டில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால், உண்மையில் தென்னாட்டில் இருக்கும் ஜீன்கள் தான் அதிகமாக வடநாட்டில் இருக்கிறது. திராவிடன் என்ற சொல்லே விந்திய மலைக்கு கீழே இருப்பவர்களை தான் குறிக்கிறது. முதல் திராவிடர்களாக மராட்டியர்கள் தான் பார்க்கப்படுகிறார்கள். அதை தாண்டி ஐந்த் திராவிடம் என்று செல்லக்கூடிய ஆந்திரா, கன்னடம், கேரளம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்டிரம் என்ற இந்த ஐந்து தேசங்கள் சேர்ந்து தான் திராவிடம். ஆனால் திராவிடம் என்பதை தமிழாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள். நாம் இன்று பேசக்கூடிய மொழி என்பது சிவபெருமானின் உடுக்கை சத்தத்தில் இருந்து வந்தது. அந்த உடுக்கையில் இருந்து வந்த சொற்களில் நாம் எப்படிப்பட்ட வாக்கியங்கள் அமைக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இந்திரன் எழுதினார். அதில் இருந்து பிரிந்து வந்த சமஸ்கிருதத்திற்கு பானிலி இலக்கணம் அமைத்தார். அதே இலக்கணம் தான் தொல்காப்பியத்திலும் பார்க்கிறோம். ஆக இதன் மூலப்பொருள் சிவனின் உடுக்கையில் இருந்து வந்த ஐந்திரியம் என்ற இலக்கணம் தான். ஆக, தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு என்று நாம் பிரிவினை பார்ப்பது அர்த்தமற்றது. நாம் அனைவருக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்புகளை போகர் போன்ற ரிஷிகளின் நூல்கள் சொல்லியிருந்தாலும், அவை மக்களுக்கு புரியாதபடி இருந்தது. அதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக வெங்கட்ராமன் இந்த நூல் மூலம் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

நரேந்திரன் பேசுகையில்:

“இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் மிகவும் அவசியமானது. இதனை மக்களுக்கு எளிமையாக புரியும்படி உருவாக்கி கொடுத்த வெங்கட்ராமன் அவர்களுக்கும், இந்த இளம் வயதில் இப்படி ஒரு புத்தகத்தை உலகத்திற்கு கொடுத்த சத்தியமூர்த்தி அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும். இங்கு ஆன்மீகமும் அறிவியலும் பிரித்து பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டுமே ஒன்றோடு ஒன்று பினைந்திருக்கிறது என்பதை போகர் போன்ற ரிஷிகளின் படைப்புகள் நமக்கு புரிய வைக்கிறது. இவைகள் எல்லாமே பொக்கிஷம். சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போக ரிஷிஷை இவற்றை படைத்ததாக சொல்கிறார்கள், இதற்கு நாம் பெருமை பட வேண்டும். அவர் வழியில் வந்த நாம் இந்த புத்தகத்தை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.” என்றார்.

ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000 புத்தகத்தின் ஆசிரியர் யோகி கி.வெங்கட்ராமன் பேசுகையில், “இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. புத்தகத்தை வெளியிட்ட  ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜிக்கு நன்றி. இந்த புத்தகத்தை போகர் எழுதுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை எழுத 11 ஆண்டுகள் ஆனது. அதற்கு என்ன காரணம் என்றால், மேடையில் இருக்கும் பெரியவர்கள் போல் படித்திருந்தால் விரைவாக எழுதியிருக்க முடியும். ஆனால், நான் எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை, சாதாரண எஸ்.எஸ்.எல்.சி தான் படித்திருக்கிறேன். போலீஸ் துறையில் கான்ஸ்டாபிளாக சேர்ந்து பணியாற்றினேன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு இந்த வேலையை ஆரம்பித்தேன். இதன் மீது எனக்கு அப்படி ஒரு ஆர்வம் இருந்தது. இந்து மதம் ஆகட்டும் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மதமாகட்டும் உலகத்தின் எந்த மதம் ஆனாலும், அந்த மதத்தை பற்றி தெரிந்துக்கொள்ள அந்த மத நூல்களை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ளதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால், இதன் அடிப்படை எங்கிருந்து வருகிறது, நாம் ஏன் இன்னும் பெரியவர்களின் பேச்சை கேட்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த நூழ் எழுதிய காலம் கலியுகம் பிறந்து 80 வது ஆண்டு. இப்போது நடப்பது 1186. இந்த நூல் வழியில் பலர் பேர் நடந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்த நூலின் பொருள் உரை அரங்கேறுகிறது. ஆனால் இந்த நூழ் எங்கு அரங்கேறியது என்ற செய்தி இதுவரை நம்ம யாருக்கும் தெரியாது. முதல் முதலில் 7000 நூல் எழுதி அப்போது இருந்த சித்தர்கள் மகான்களிடம் கொடுத்த போது அதை யாரும் அங்கீகரிக்கவில்லை. இதனால் போகர் வேதனை அடைந்தார். அவருடைய வரலாற்றை படித்தால் உங்களுக்கு தெரியும். அங்கீகாரம் கிடைக்காததால் வேதனை அடைந்த போகர், தனது குருவிடம் இந்த நூலை ஒப்படைக்க முடிவு செய்கிறார். அவருடைய குரு சீன தேசத்தில் இருக்கிறார். அவரிடம் கொடுப்பதார்காக அவர் அங்கு செல்கிறார். அப்போது போகருக்கு பனிவிடை செய்துக்கொண்டிருக்கும் புலிபானி சித்தர், யார் வேண்டுமானாலும் இந்த நூலை படிக்கலாம், அதனால் எனக்கு இந்த நூலை கொடுங்கள் என்று கேட்கிறார். உடனே போகர் அவருக்கு ஒரு நகல் கொடுப்பதற்காக ஒலைச்சுவடியை இரண்டு கட்டாக பிரிக்கிறார். சீன தேசத்துக்கு ஒன்று, நமக்கு ஒன்று கிடைக்கிறது. புலிபானி சித்தரின் பரம்பரை அந்த நூலை பாதுகாக்கிறது. அன்று அவர் வாங்கவில்லை என்றால் இன்று நமக்கு போகரையே தெரியாமல் இருந்திருக்கும். நம் பாரத தேசத்தை தவிர வேறு எந்த நாட்டிலும் ரிஷிகளின் தியான முறை கிடையாது. அமெரிக்க ஜாப்பான் போன்ற நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்கிறார்கள், பல தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறார்கள் ஆனால்  நம்மிடம் இருக்கும் தியானம் முறை அவர்களிடம் இல்லை. அதனால் தான் இப்போதும் பல வெளிநாட்டவர் திருவண்ணாமலைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். உடம்பில் இருக்கும் சிறு சிறு செல்களை கூடா ஆய்வு செய்கிறார்கள் ஆனால் உயிர் எங்கிருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியாது. அதை தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். அதனால் தான் அதை நிலை பெற வைத்து சாகாமல் இருந்தர்கள். நிறைய பேர் இந்த ஜன்மே போதும் அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்வார்கள். அப்படியானால் நீங்கள் முதலில் இறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். அவர்கள் அவற்றை தான் ஓலைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவைகள் நமக்கு ஏன் தெரியவில்லை என்றால் கல்விநிலை மாற்றம் தான். ஒரு பொருளை வாங்கும் போது அந்த காலத்தில் ஒரு குருனி என்ரு சொல்கிறார்கள். இன்று அரை கிலோ, ஒரு கிலோ என்று சொல்கிறோம். இந்த வித்தியாசம் யாருக்கும் தெரியாது. குருனி என்றால் என்ன என்பது 60 வயதுடையவர்களே தெரியாத போது, அவருடைய பேத்திக்கு எப்படி தெரியும். இப்படி ஒரு காரணத்தால் தான் இந்த நூல் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது. அந்த காலத்தின் அளவு முறையும், இந்த காலத்தின் அளவு முறைக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பது இந்த புத்தகத்தில் இருக்கிறது. இது வேறு எந்த புத்தகத்திலும் உங்களுக்கு கிடைக்காது.

இந்த நூலியில் இருக்கும் செய்யூள்களுக்கு பலர் பல அர்த்தங்களை சொல்வார்கள். சிலர் தெரியாததை தெரியவில்லை என்று சொல்வார்கள், ஆனால் சிலரோ தெரியாதை சொல்ல வெட்கப்பட்டு சித்தர் பொய்யாக எழுதிவிட்டார். அதில் இருப்பதை செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அதற்கான சரியான அர்த்தம் தெரியாமல் இருப்பது தான். அதனால் தான் அவர்களை போன்றவர்களுக்கு எளிமையாக எடுத்து சொல்ல வேண்டும் என்று இந்த புத்தகத்தை கொண்டு வந்தோம்.

போதி தர்மர் யார் என்பது 7 ஆம் அறிவு படம் மூலம் தெரிந்துக் கொண்டோம். அதற்கு முன்பு அவரை பற்றி யாருக்கும் தெரியாது. அதுபோல், இப்போது போகர் யார்? அகத்தியர் யார்? என்பது நமது இளைய தலைமுறைக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் நமது அடிப்படை கல்வி முறை தான். அவர்களுடைய சாஸ்திரங்களை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு நமது கல்வி முறை இப்போது இல்லை என்பது தான் உண்மை. இந்த புத்தகங்களை படித்தால், அவர்களை பற்றி நம் இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டியதில்லை அவர்களே புரிந்துக்கொள்வார்கள். நமது ரிஷிகள் ஒரு முறை இரண்டு முறை சமாதியில் இருந்து எழவில்லை. பல முறை எழுந்திருக்கிறார்கள். அதுபோன்ற 48 ரிஷிகள் பற்றி இந்த நூலில் இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு நான் ஆசிரியர் இல்லை, நான் விளக்கம் தான் அளித்திருக்கிறேன். எழுதியவர் போகர் தான். அவர் இதை எப்படி எழுதினார் என்று சிலர் கேட்கிறார்கள். உலகத்தில் சித்தாந்தம் என்ற வாய்ப்பை கொடுத்தவர் சிவன். அவர் எழுதிய 7 லட்சம் புத்தகங்கள் உலகத்தின் 108 அண்டத்தில் இருக்கிறது அதை நீ சென்று பார்த்துவா என்று போகரின் பாட்டன் திருமூலர் சொல்கிறார். அங்கு சென்று பார்த்தால் நந்தி காலில் மிகப்பெரிய நூலகமே இருக்கிறது. அதில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 38 கோடி. அதில் சிவபெருமான் எழுதிய 7 லட்சம் புத்தகங்களை எடுத்து மொத்தத்தையும் படித்து முடித்தவர், இதை ஒரு மனிதரால் எப்படி படிக்க முடியும், இதில் இருப்பதை எப்படி படித்து செய்ய முடியும். இதை சுருக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்கிறார். அப்போது நந்தி சிவபெருமான் எழுதியதை யாரால் சுருக்கி எழுத முடியும், என்று கேட்க, நான் செய்கிறேன் என்று சொல்கிறார். அந்த 7 லட்சம் ஓலை சுவடிகளை தான் 7 ஆயிரம் பாடலாக போகர் எழுதினார்.

இதில் விஞ்ஞானம் மருத்துவம் என அனைத்தும் இருக்கிறது. பல சாதனங்களை போகர் கண்டுபிடித்துள்ளார். டெலஸ்கோப் கருவியை கண்டுபிடித்ததும் போகர் தான் ஆனால் இப்போது அது வேறு ஒருவர் கண்டுபிடித்ததாக இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போகர் கண்டுபிடித்தது குறித்து இப்போதுள்ள நமது பிள்ளைகளுக்கு யார் சொல்வது, யாராலும் சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கே இது பற்றி தெரியாது, புரியாது. ஆனால், அவை அனைத்தும் எளிமையாக புரியும் வகையில் போகர் 7000 புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

6 வகையான காலநிலை  கொண்ட நம் பாரததேசத்தில் ஆன்மீக வளர்ச்சியும், கலாச்சார வளர்ச்சி, சமூக ஒழுக்கம், உயிரின் பரினாம வளர்ச்சி ஆகியவை இருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் நாம் பிறந்திருப்பதால் நாம் அனைவரும் பெருமை அடையளாம். இந்த நூலை நான் மிக சாதாரணமாக எழுதியிருக்கிறேன். இந்த நூலை வெளியிட்ட எனது சிஷ்யர். அவர் சிஷ்யர் என்று சொல்வதில் எனக்கு தான் பெருமை சத்யமூர்த்தி அவரிடம் தான் சொன்னேன். இப்படி ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், இந்த புத்தகத்தை வெளியிட என்னிடம் பணம் இல்லை. இது ரொம்ப தர்மான புத்தகம், அதனால் செலவும் அதிகம் ஆனது. அதனால் என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்று சொன்ன போது. இது பெரிய விஷயமா சாமி, நான் செய்கிறேன், இப்படிப்பட்ட புத்தகம் வெளியே வர வேண்டும். உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும், மக்கள் இதனை படிக்க வேண்டும், அதனால் இந்த புத்தகத்தை நான் வெளியிடுகிறேன் என்று சொன்னவர் சத்யமூர்த்தி தான். அவருக்கு தான் முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும், அவர் இல்லை என்றால் இந்த புத்தகம் வெளியே வந்திருக்காது.

இப்படி ஒரு நிகழ்ச்சியில், இவ்வலவு பெரிய சான்றோர்கள் முன்னிலையில் இந்த புத்தகத்தம் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. போகரின் நூலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷிகளின் முன்னிலையில் அகத்தியர் வெளியிட்டது போன்ற ஒரு நிகழ்வாகத்தான் இதை நான் பார்க்கிறேன். அப்போது அங்கிருந்தவர்கள் தான் இன்று உருமாறி இங்கு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாதாரண மனிதர்களால் இந்த புத்தகத்தை வெளியிட முடியாது. இந்த புத்தகத்தில் சிறு சிறு பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்கவும். இந்த புத்தகத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கும் ஊடகத்தினருக்கும் என் நன்றிகள்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி ’போகர் சப்தகாண்டம் 7000’ புத்தகத்தை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.

VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.