ஆகஸ்ட் 2024

5th Annual Symposium of Neurocritical Care Society of India (NCRI)



The 5th Annual Symposium of Neurocritical Care Society of India (NCRI) will be held in Chennai from 30th August to 1st September. This consultation is being conducted by Kaveri Hospital, Chennai Radial Road, in association with NCRI.

NCRI's main objective is to promote evidence-based treatment of neurological diseases. NCRI continues to strive to advance the field of neurology, improve the health of patients and provide them with multidisciplinary care. 

NCRI strives to provide best clinical practice by reviewing current scientific advances in the field of neurology in consultation with other clinical disciplines. NRCI focuses on education, research, patient safety, multidisciplinary care, innovative and multi-disciplinary clinicians, etc.

Dr. Ponnaiah Vanamurthy, President, Neurocritical Care Society of India, highlighted the clinical merits of modern advances in the treatment of stroke, head injury and other serious neurological diseases.


Dr. MJ University Chancellor Dr. Narayanasamy inaugurated the 5th Annual Symposium of Neurocritical Care Society of India. Dr. K. Sridhar, Secretary, Neurocritical Care Society of India, who was the special guest, shared his joy about joining the Neurocritical Care Society of America for the first time.

15 international neurologists from different countries are participating in this seminar. In this, a pre-consortium workshop on Advanced Monitoring in Neurotherapy has been organized. 

400 eminent doctors and neurotherapists from all over the world are participating in the first ever Neurocritical Care Society of India Symposium in Chennai. The seminar is organized around the theme "Emerging Trends, Expanding Opportunities, Changing Perspectives".

பாவார்ப்பணம் குரு மாங்குடி துரைராஜ ஐயர் அவர்களுக்கு கலை வடிவில் அஞ்சலி




சென்னை:

குரு மாங்குடி துரைராஜ ஐயர் சித்தயடைந்த தினத்தை அவரது சிஷ்யை குரு ரேவதி ராமசந்திரன் கடந்த 25 வருட காலமாக கலை வடிவமாக  பாவார்ப்பணம் என்ற பெயரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

இதில் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் , மூத்த கலைஞர்களை கெளரவித்தும் வருகிறார்கள்.

இந்த வருடம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்ஜனி சபாவில் இரண்டு நாள் விழாவாக கொண்டாடபட்டது.

முதல் நாளான 28 ஆம் தேதி குரு ரேவதி ராமசந்திரனின் மகள் மற்றும் சிஷ்யையான மனஸ்வினி நாட்டிய கோர்வை செய்து லால்குடி கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில் ப்ளுதி என்ற தலைப்பில் மிக நேர்த்தியான நாட்டிய நாடகம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது. 

தொடர்நது கலாசாதனாலயா மாணவிகளின் ஆயர் குல திலகம் நாட்டிய நாடகம் கண்ணணின் பெருமையை வெளிகாட்டும் விதமாமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் முன்னனி கலைஞர் திருமதி. பத்மா சுப்பிரமணியன் , நல்லி திரு. குப்புசாமி செட்டியார், பாரதி வித்யாபவன் திரு இராமசாமி,  க்ளீவ்லேன்ட் திரு. சுந்திரம், நாடக நடிகர். காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பல நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சியை கலாசாதனாலயா  மாணவிகளும் பெற்றோர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

"வரம்" சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது!



வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.


இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்...


இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில்  வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க  வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது..


ரஞ்சித் மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார்.


எழுத்து இயக்கம் வெங்கட் ஜனா, எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர், கலை பாபு M பிரபாகர், பாடலாசிரியர் மஷீக் ரஹ்மான், பாடகர் அரவிந்த் கார்ணீஸ், ஸ்டில்ஸ் மணிவண்ணன், டிசைன் ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு வேலு..


இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வர , விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

வாழை திரைவிமர்சனம் 




இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'வாழை'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:  

தூத்துக்குடியைச் சேர்ந்த புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்துவரும் சிறுவன் சிவணைந்தன் படிப்பில் கெட்டிக்காரன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் அவன் தான் முதல் மாணவன். ஆனால், வறுமையான குடும்பம். இவனது நண்பன் சேகர். வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்க உடன் அழைத்துச் செல்லப்படுகிறான் சிவணைந்தன். 

வாழை தார்களை சுமந்ததும் வலியால் அவதிபடுகிறான். சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழியில்லாமல் வாழைத்தார் வேலை ஒரு புறம்...  மறுபுறம் அவன் விரும்பும் பள்ளிக்கூடமும் அங்கு அவனைக் கவர்ந்த ஆசிரியை பூங்கொடியும். 

அவனின் நெருங்கிய நண்பன் சேகருடன் சேர்ந்து பூங்கொடியைப் பார்த்து ரசிப்பது, பாடல் பாடுவது என பள்ளிக்காலத்தில் நமக்கு அப்படியிருந்த ஆசிரியைகள் எல்லாரும் நினைவுக்கு வருகின்றனர். பிறகு வாழைத்தார் சுமக்க தன் வியாபாரியிடம் அதிக கூலி கேட்க அதனால் நடந்த விளைவு என்ன?  சிவணைந்தன் கனவு என்ன ஆனது? என்பதே கதை.

சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி கிளைமேக்ஸ் காட்சியில் நம்மை அழ வைத்துவிட்டார். சிவணைந்தனாக நடித்த பொன்வேல் மற்றும் சேகராக நடித்த ராகுல் இருவரும் சரியான தேர்வு. நன்றாகவே நடித்திருக்கின்றனர். இருவரும் வாழைத்தோட்டத்திற்குள் ஓடும்போது நாமே ஓடுவது போல் பங்களிப்பைச் செய்துள்ளனர். 

இசை அருமை. கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது இந்த படம். கிளைமேக்ஸ் காட்சியை அழாமல் பார்க்க முடியாது.

பள்ளி சிறுவன் ஆசிரியை கைக்குட்டையை மோப்பம் பிடிக்கும் காட்சியை மட்டும் வேறுவிதமாக சொல்லியிருக்கலாம்.....    

மொத்தத்தில் இந்த 'வாழை' சிறந்த உண்மை படைப்பு 

RATING 4/5


சாலா விமர்சனம் 




அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'சாலா'

மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், 'மெட்ராஸ்' வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார். விட்னஸ், வடக்குப்பட்டி ராமசாமி படங்களுக்கு பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

வடசென்னையில் உள்ள பார்வதி பார் என்ற மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள். அருள்தாஸ் மற்றும் அவருக்கு தம்பி போல இருக்கும் நாயகன் தீரான் ஆகிய இருவருக்கும் எத்தனையோ பார் நடத்தினாலும் அந்த பார்வதி பாரை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பது கனவு. 

அவருக்கு எதிராக அந்த பாரை கைப்பற்றி அது கைக்கு வந்த மறுநொடியே பழைய பகையால் அவர்களை பழிவாங்க நினைக்கிறார் சார்லஸ் வினோத். இவர்களின் போட்டிக்கு மத்தியில் டாஸ்மாக்குகளை இழுத்து மூட பெரும் அறப்போராட்டத்தையே நடத்தி வருகிறார் நாயகி. டாஸ்மாக் கடையை மீண்டும் கைபற்றினார்களா? நாயகியின் போராட்டம் வெற்றி அடைந்ததா? என்பதே கதை. 

நாயகனாக தீரன் கட்டுமஸ்தான உடலுடன் ஹீரோவுக்கு உண்டான அம்சங்களுடன் வலம் வருகிறார். நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் எதார்த்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவும், தீசன் இசையும் படத்துக்கு கூடுதல் பலமாகவே இருக்கிறது. வில்லனாக வரும் சார்லஸ் வினோத்தின் உடல் பாவனை முக தோற்றம் எல்லாம் ஓகே. 

குடியால் வரும் விளைவுகளை சரியாக சொல்லியிருகிறார் இயக்குனர் மணிபால். இப்படத்தில் தீரன் குரல் சிம்பு குரலை ஜெராக்ஸ் எடுத்தாற்போல கேட்கிறது. கிளைமேக்ஸ் கர்ப்பிணி பெண் காட்சி மனம் தாங்காமல் அனைவரையும் தலை சரிய வைத்தது. மது பிரியர்கள் கட்டாயம் இந்த படத்தை பாருங்கள்.  

மொத்தத்தில் இந்த 'சாலா' சிறந்த விழிப்புணர்வு.  

RATING: 3.9/5


Ahead of its premiere in India, Alien: Romulus crosses $ 110 Million globally on opening weekend



Ridley Scott's iconic Alien franchise has continued to terrify and enthral audiences for decades. Alien: Romulus, the latest instalment from 20th Century Studios, has once again proven the enduring power of this sci-fi horror series, delivering a box office performance that has achieved a significant feat in its launch weekend. In its opening weekend, Alien: Romulus raked in a staggering $41.5 million domestically, securing its place as the second-highest-grossing debut in the entire Alien franchise. This impressive figure was further bolstered by an additional $66.5 million in international ticket sales, bringing the global total to a remarkable $108 million.


Alien: Romulus managed to capture the essence of what made the original films so terrifying while also offering a fresh and innovative take on the series. The film's intricate plot, stunning visuals, and heart-pounding action sequences kept audiences on the edge of their seats from beginning to end. The phenomenal box office performance of Alien: Romulus is a testament to the enduring popularity of the Alien franchise. It also serves as a reminder of the power of well-crafted horror films to connect with audiences on a deep emotional level. As the film continues to expand its theatrical run, it is poised to become one of the biggest box office hits of the year.



Taking the phenomenally successful “Alien” franchise back to its roots, Alien: Romulus scavenges the deep ends of a derelict space station, where a group of young space colonizers come face to face with the most terrifying life form in the universe. The film stars Cailee Spaeny, David Jonsson, Archie Renaux, Isabela Merced, Spike Fearn, Aileen Wu in pivotal roles. Directed by Fede Alvarez who co-wrote the film with Rodo Sayagues, the film is based on characters created by Dan O’Bannon and Ronald Shusett. “Alien: Romulus” is produced by Ridley Scott and Walter Hill with Fede Alvarez, Elizabeth Cantillon, Brent O’Connor and Tom Moran serving as executive producers.

20th Century Studios India releases ‘Alien: Romulus’  on August 23, in English, Hindi, Tamil and Telugu, only in cinemas.

World Record with 2500+ Nurses Taking the Nurses' Pledge!




Chennai:

In a historic and extraordinary event of nurses, Gleneagles Hospital Chennai in collaboration with the Association of Nurse Executives (India), Tamil Nadu Charter, is poised to set a new World Record as 2500 +  nurses and nursing students from 146+ institutions, colleges and hospital unite in an unprecedented celebration of the nursing profession. Dr J Radhakrishnan, IAS, Additional Chief Secretary to the Government Cooperation, Food and Consumer Protection Department joined the momentous event as chief guest, where nurses came together to take the Nurses’ Pledge and form an inspiring nurses word art display of this year's international nurse’s day 2024 theme: Our Nurses. Our Future. The Economic Power of Care.”

This event is a tribute to the unwavering commitment, care, and service of nurses, who form the backbone of healthcare systems worldwide. Dr. Jothi Clara Michael, Director of Nursing, Gleneagles Healthcare India, IHH Healthcare, Founder ANEI has led this event and the nurses pledge to reiterate professional values involving involved 2,500+ nurses forming a human chain under the theme “OUR NURSES, OUR FUTURE: THE ECONOMIC POWER OF CARE,” and collectively taking the nursing oath on 18th August 2024 at Gleneagles Health City, Chennai.




The focus this year, encapsulated in the theme “Our Nurses. Our Future. The Economic Power of Care,” highlights the vital role nurses play not just in patient care but also in driving healthcare economies forward. As part of International Nurses Day 2024, the collaboration aims to shine a spotlight on the economic and social contributions of nurses, emphasizing their pivotal role in ensuring the well-being of communities. This world record was recognized by the Einstein World Record Institute.

Dr. Nageshwar Rao, CEO, Gleneagles Hospital Chennai, remarked, “This event is not only a celebration of nurses but also a recognition of their tireless efforts in delivering care and healing. By attempting this world record, we wish to honor nurses and highlight the critical role they play in the future of healthcare, both locally and globally.”

By attempting this world record, Gleneagles Hospital Chennai and the Association of Nurse Executives (India) underscore the importance of recognizing nurses' dedication and the indispensable impact they have on healthcare systems globally, added Dr Nageshwar Rao.


Chennai City Gangsters Teaser and Audio Launch!


Chennai:

The teaser and audio launch of Chennai City Gangsters, produced by BTG Universal and directed by Vikram Rajeshwar and Arun Keshav, took place in Chennai today. The film is touted to be a comedy entertainer starring Vaibhav, Athulya Ravi, and others.


The production company owned by Indian-American entrepreneur Bobby Balachandran, make a mark in Tamil cinema with their recent sensational hit, Demonte Colony-II. Following this, their next release would be Chennai City Gangsters. 


The teaser of the film officially released on August 18, 2024, giving a glimpse into the film's comedic storyline. The music, composed by D Imman, is upbeat and entertaining.


Actor Arun Vijay and Director Ajay Gnanamuthu graced the ocassion as special guests. The event was attended by the film's cast and crew- Manikanda Rajesh, Anandraj, Ilavarasu, John Vijay, Redin Kingsley and Bipin who expressed their excitement about the project. They praised the film's director, Vikram Rajeshwar, and the production team for their hard work. 


Actor Ilavarasu 

"Producers paid me more than what I asked for. Such generous beings they are.  Music director D.Imman's growth has been massiv and has carved a niche for himself. Actor Vaibhav is a quiet guy to watch but a terrific prankster. Please support good films. I request them to write good reviews and help Tamil cinema to progress."


Manikanda Rajesh

"I would like to express my gratitude and congratulations to Manoj Beno and producer Bobby Balachandran who invited me and gave me an opportunity, and to Vaibhav and the film crew who cooperated a lot in the shooting."


Editor Suresh A Prasad

"I would like to express my sincere gratitude to both the producers of the film, Balachandran and Manoj Beno, for giving me the opportunity to work in this film. I would also like to express my gratitude and congratulations to the rest of the film crew, including directors Vikram Rajeshwar and Arun Keshav."


Stunt director Don Ashok

"My sincere thanks to the producers and directors for giving me the opportunity to work in this film. This is the third film with Vaibhav. We worked on the fight scenes without being serious. My best wishes to all the crew."


Choreographer Ajay Raj

"This is my third film with music director Imman. He has given excellent music in this project. The film will be full of comedy. I would like to express my gratitude to my friend Vaibhav and the directors."


Actor Redin Kingsley

"BTG Universal's first film Demonte Colony-II is doing well. Next is Chennai City Gangster. I hope Arun Vijay's next film is a huge success and producer Bobby Balachandran makes more films like this. Thanks to National Award winner Imman Sir, the songs have come out really well. My best wishes to the director and crew."


Actor John Vijay

"This film is an entertaining film with great comedy. The films in which I am acting with Ilavarasu are becoming successful. I have also cast brother Imman during his early days, knowing him for many years now. Everyone has given their best performance for this film. Congratulations to all the crew."


Actor Anandraj

"This is my second film with music composer Imman and my best wishes to him and the producer. Producers should make small and big films. Only then cinema will be healthy. I request you to support this film to make it a success."


Director Ajay Gnanamuthu

"I have already seen this teaser. It has turned out to be a laugh riot. Congratulations to the entire cast and crew for a blockbuster hit."


Actor Athulya Ravi

"My thanks to the producer and the director for making me a part of this film. Thanks to music director D Imman for the lovely songs. Our crew had a lot of fun during the making. Thanks to the technicians too."


Director Vikram Rajeshwar

"Thanks to both Bobby and Manoj Beno for giving me this opportunity. Heartfelt thanks to my schoolmate D Imman for giving me great album. Many thanks to Vaibhav and Athulya for their good cooperation during the shoot."


Music composer D Imman

"It's a pleasure to work on this film produced by BTG Universal. They have also started BTG Universal Music Publishing Company. It's great to see the songs of this film coming out. All the technicians, lyricists and singers have done a great job. My congratulations to Vaibhav, Athulya and the entire cast and crew." 


Actor Arun Vijay

BTG Universal's debut production Demonte Colony-II is going well at the box office. I feel happy to be a part of the company's next production Rettai Thala. I wish this film Chennai City Gangsters also turns out to be successful."


Actor Vaibhav

"Many thanks to producer Bobby Balachandran and Manoj Beno. Thank you brother Arun Vijay, D Imman, directors and fellow actors and technicians for coming here to greet me. The film will definitely be a comedy treat."


Producer Bobby Balachandran

"Manoj Beno, who is the strategic head of our company, and our team are very thankful to both Ajay Gnanamuthu, director of our first film, 'Demonte Colony-II', which was released successfully, and Arun Vijay, the hero of our next film, 'Rettai Thala'.

We have made Chennai City Gangsters with the aim of bringing together the best actors and providing a quality comedy entertainment film. We hope it will please you. I would like to express my gratitude to all the press and media for their support."


Head of Strategy Dr.M Manoj Beno

"I have known Bobby Balachandran since childhood. All his ventures have been successful. His father wanted this one to succeed as well. Heartfelt thanks to director Ajay Gnanamuthu who gave us our first hit with "Demonte Colony-II" and our next film Chennai City Gangsters should also be successful. 75% shooting of the next film Rettai Thala is also complete. Many thanks to its hero Arun Vijay for coming here to congratulate the team. A lot of opportunities await new directors like Vikram Rajeshwar at home. I am asking for your support to make this film a success."

Chennai City Gangsters is all set for a September release.

'கோட்' பக்கா கமர்ஷியலான திரைப்படம்- இயக்குநர் வெங்கட் பிரபு!



சென்னை:

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 


ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ்,  கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ('கோட்') திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 


ஆக்ஷன் எண்டர்டெயினராக தயாராகி செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். 


'கோட்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''எங்கள் நிறுவனத்தின் 25வது படமாக 'கோட்' உருவாகி இருக்கிறது.‌ தளபதி விஜய்யுடன் 'பிகில்' படத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.‌‌ இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. எங்கள் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இது. 


இப்படத்தின் பணிகள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றன. படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவான படைப்பு. ஏராளமான வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். விஜய் சார் நடிக்கும் படத்தில் அதிகளவு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் இது தான். 



இந்த தருணத்தில் படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்காக திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார். 


இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்:

''என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம்.‌ இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை முதன்முதலாக சந்தித்து இந்த கதையை விவரித்தேன். அப்போது அவரும் ஆர்வமாகி இந்த படைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க தொடங்கினார். 


பின்னர் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.‌ அதன் பிறகு விஜய் - ஏஜிஎஸ் நிறுவனம் இருவரும் இணைந்தார்கள். கதையைக் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் அவர்கள், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சி. செலவைப் பற்றி கவலைப்படாமல் உலகத் தரத்திலான படத்தை உருவாக்குங்கள் என்றார். இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் பெரிதாக யோசிக்கத் தொடங்கினேன்.‌ 


இந்தப் படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிடுவதற்காகவே இஸ்தான்புல் நகரத்திற்குச் சென்றோம். ஆனால் அங்கு பணியாற்ற முடியாத சூழல் இருந்தது. அதனால் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்தினோம்.  நாங்கள் படப்பிடிப்பை நடத்திய காலத்தில் அந்த நாட்டில் பெரிய பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாதது. 


இந்தப் படத்தினை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தான் தொடங்கினோம். இந்த படத்திற்காக உலகத்தில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான 'லோலா' உடன் இணைந்தோம்.  இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது.  இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் முதலில் சற்று தயக்கம் இருந்தது. ஏனெனில் வித்தியாசமாக யோசித்த விசயத்தை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்காக என்னுடைய குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு. இதனால் திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார்.‌ ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா-  கலை இயக்குநர் ராஜீவன் - ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர், கதாபாத்திரத்தை வடிவமைத்த மும்பையை சேர்ந்த பிரீத்தி ஷீல் சிங்- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-  என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், அனைத்தும் விஷுவல் ட்ரீட் ஆகவும் இருக்கும். 


படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர்  படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.‌ இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.  அவர்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி. 


விஜய்யை தவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, யோகி பாபு ,மீனாட்சி என ஏராளமானவர்கள் நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் அனைவரும் இணைந்து நடிப்பதற்காக ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே எனக்கு மகிழ்ச்சியையும் தந்தது. 


இந்தப் படம் ஒரு நேர்த்தியான, கமர்ஷியலான எண்டர்டெயின்மென்ட் படம். விஜய் சாரை இது போன்றதொரு கமர்சியலான படத்தில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமில்லாமல் கதையும் இருக்கிறது. 

'கோட்' செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.‌ 


இது விஜய் சார் படம் என்றாலும் அனைவரும் இதில் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே சமயத்தில் முக்கியத்துவம் இருந்தால்தான் அவர்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அதனால் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. 


படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தணிக்கைக்காக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 


இந்தப் படத்தில் முதன் முதலாக வசனகர்த்தா விஜியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 


இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான விருந்தாக இருக்கும். 'கோட்' பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. எந்த இடத்திலும்  முகத்தை சுழிக்கும் காட்சிகள் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு ஆசியையும், ஆதரவையும் வழங்குங்கள்,'' என்றார். 


இதனைத் தொடர்ந்து படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்தனர்.

'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!



சென்னை:
 
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர்  பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌

இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், '''அந்தகன்' படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் 'கரிஸ்மா' தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்.

தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் 'அந்தகன்'. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். 'ஜோடி', 'கண்ணெதிரே தோன்றினாள்', 'ஜீன்ஸ்' போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.‌ பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,'' என்றார்.



நடிகர் பெசன்ட் ரவி பேசுகையில், ''மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரசாந்துடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அந்தகன் எனக்கு ஸ்பெஷல். படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவருடன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.

தியாகராஜன் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது.‌ இருந்தாலும் படத்தைப் பற்றிய சிறிய சந்தேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்காக பிரசாந்த் உடன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை.  பிரசாந்த் -  தியாகராஜன் ஆகியோர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களுடன் பயணித்தேன்.

அதன் பிறகு ஒரு நாள் தியாகராஜன் என்னை அழைத்து படத்தை காண்பித்தார்.  அதிர்ச்சியில் உறைந்தே போனேன். படம் மிக அழகாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. படம் வெற்றி பெறும் என்பதை அப்போது உறுதி செய்தேன்.  இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி மீது எனக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நான், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாக ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இந்த படம் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் முடிவடைந்து விட்டது. அதனால் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று மனித உளவியலே சொல்லிவிட்டது. ஏனெனில் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஏதேனும் ஒரு வகையில் இடையூறு ஏற்படும்.  ஆனால் அந்தகன் படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இது போன்ற வெற்றி படத்தை வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி நன்றி,'' என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ''அந்தகன் படம் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்திய ஊடகங்களுக்கும், திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். '90ஸ் கிட்ஸ்' என்ற வார்த்தையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இதற்காக பிரசாந்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '90ஸ் ஸ்டார்ஸ் கம் பேக்'. இதற்காக சிம்ரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.‌ நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அந்த தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எம் மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..! அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில், ''இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.  இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும்.

அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி," என்றார்.

நடிகை சிம்ரன் பேசுகையில், ''திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் 'அந்தகன்' சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.  

படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.

பிரசாந்த் - என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ரியா ஆனந்த் - படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். உண்மையில் அவர்தான் எனக்கு குரு. நான் இன்று  தமிழில் இந்த அளவிற்கு பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். அவருடைய படப்பிடிப்பு தளத்தில் ஒழுக்கமும், நேர்மையும் நிறைவாக இருக்கும். அவர் மிகவும் அன்பானவர், உதவும் குணம் உள்ளவர். இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசை போன்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி," என்றார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், ''அந்தகன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஏராளமான ஊடகங்களை வரவேற்கிறேன். ஊடகங்களின் வளர்ச்சி  அதிகரித்திருப்பதை காண்கிறேன். இது ஆரோக்கியமானது.

தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை  தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.

இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார்.

படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சிம்ரனை 'தர்மசக்கரம்' எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அர்ஜுன் நடித்த 'கொண்டாட்டம்' படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்  படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் 'கொண்டாட்டம்' தான். அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார். அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

ஒரு எல்லைக்கு பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது.  நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதி காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.‌ அவர் நடித்த கடைசி படம் 'தசாவதாரம்'. அப்போது கூட அவருக்கு கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன்.

இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ''அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடைய செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களை சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம்.‌ திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.

பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது.  அவருடைய அழகு - சிரிப்பு-  டயலாக் டெலிவரி- என  எல்லாம் சிறப்பாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார்.‌ நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன்.

அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த 'தமிழ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.‌ அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.

சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்.‌ நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.  

பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.

அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார்.‌ அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

'டாப் ஸ்டார்' பிரசாந்த் பேசுகையில், ''அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.‌

இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌

சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம். 60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் 'அந்தகன்' படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது.‌ அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார்.‌ என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம்.

நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த 'ராக் ஸ்டார்' அனிருத், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும்.‌ என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


Kauvery Hospital Alwarpet launches Mobile Wellness Clinic!


Chennai: 

Kauvery Hospital Alwarpet, a leading healthcare institution, launched the Mobile Wellness Clinic, a major initiative under CSR Project of Kauvery Hospital, Rotary Club of Madras North and Bay Forge. This ambitious project aims to bridge healthcare accessibility gaps in Chennai and its surrounding districts by offering free medical screenings and consultations to the underprivileged.

The inauguration ceremony was graced by Thiru Ma. Subramanian, Honorable Minister for Health & Family Welfare, Government of Tamil Nadu, and Thiru Dha. Velu, MLA for Mylapore Constituency.

The mobile unit is expected to benefit over 100,000 individuals by providing timely medical interventions and raising health awareness in the community.

The Kauvery Mobile Wellness Clinic is a state-of-the-art mobile medical unit equipped with advanced diagnoses, including ECG, EchoCardiogram, X-rays, and BMD scanners. It offers a wide range of services across various specialties such as General Medicine, Diabetology, Cardiology, Dermatology, Nephrology, Pulmonology, Orthopedics, Oncology, Geriatrics, Neurology, and Diet Counseling. The clinic is designed to provide comprehensive screenings and early detection of health issues, bringing high-quality healthcare directly to the poor, particularly those in suburban areas who may otherwise have limited access to medical care.

This mobile unit is equipped with state of the art equipment capable of delivering the essential primary care and diagnostics that one would expect from a hospital. With the ability to conduct essential tests and provide expert consultations, the Kauvery Mobile Wellness Clinic ensures that individuals receive timely medical attention, which is crucial for preventing and managing chronic conditions.


Beyond diagnostics and treatment, the Mobile Wellness Clinic will play a pivotal role in health education. The clinic will conduct community awareness sessions and free medical screening camps in schools, colleges, and local underprivileged communities, focusing on preventive health measures. We are honored and pleased to collaborate with Kauvery Hospital, a leading healthcare institution in the state who have also been doing various activities in the community to raise awareness on preventive health. We believe the expertise offered by Kauvery Hospital will enable the project to reach maximum population in the state”, says Rtn Dr P Sathish Chairman- CSR, Rotary Club of Madras North.

Speaking at the event, Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals said:

“The launch of the Kauvery Mobile Wellness Clinic is  our way of giving back to the community. Preventive Health is a key focus area where we have been consistently creating awareness on early diagnosis. However, when it comes to the semi rural and rural areas, access to timely healthcare is still lacking, and through this project we aim to bridge this gap. This initiative is a step forward in making quality healthcare accessible to everyone, regardless of their financial status. The project aligns with our mission of making great healthcare affordable and accessible. I thank Rotary Club of Madras North represented by Dr P Sathish - Chairman , CSR  and Bay Forge represented by Mr Julian Christopher , Managing Director, for collaborating with us in this noble initiative.

The Mobile Wellness Clinic shall conduct over 12 camps per month, screening around 600 individuals monthly. The clinic will primarily operate in Chennai and extend its services to the surrounding districts of Kanchipuram, Tiruvallur, and Chengalpattu.

 VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.