ஆகஸ்ட் 2022

பழைய செய்தித்தாளில் ஆடை வடிவமைப்பு! 




பழைய செய்தித்தாளில் ஆடையை வடிவமைத்துள்ளார்.அவரது வேலையைப் பற்றி பேச,இது அனைத்து நாகரீகமான ஆடை அலங்காரம் மற்றும் அது ஒட்டப்படவில்லை அல்லது தைக்கப்படவில்லை. ஃபேஷன் மாடலில் அவர் செய்தித்தாளை கொக்கிகளால் பொருத்தினார். முழுமையான தோற்றத்தை முடிக்க 2 மணி நேரம் செலவிட்டுள்ளார். பேஷன் மாடல்கள் விஜய் சாமுவேல் மற்றும் ரஞ்சனா கோக்சா அவர்கள் தான் இந்த போட்டோஷூட்டில் நடித்துள்ளனர். என்று விஜய் சாமுவேல் தெரிவித்தார்'

"இந்த செய்தித்தாள் அலங்காரத்துடன் போட்டோஷூட் செய்யும் போது அது மிகவும் தனித்துவமாகவும் வசதியாகவும் இருந்தது. ஆடை வடிவமைப்பாளர் முகமது ஃபாரூக்கின் கருத்துக்காகவும், அற்புதமான வாய்ப்புகளை வழங்கியதற்காகவும் நான் நன்றி சொல்ல வேண்டும்" என்று ரஞ்சனா தெரிவித்தார் 

"ஆடை வடிவமைப்பாளர் முகமது எனது தோற்றத்தை முடிக்க 1 மணிநேரம் எடுத்துள்ளார். அவருடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்ந்தேன்" ஆடை வடிவமைப்பாளர் முகமது ஃபாரூக்குடன் நாங்கள் நேர்காணல் செய்தோம். அந்த நேரத்தில் அவர் தனது வேலையைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தார், மேலும் அவர் தனது பணி மற்றும் அனுபவத்தைப் பற்றி எங்கள் ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள சில மணிநேரங்களை விட்டுவிட்டார். என்று ஆடை வடிவமைப்பாளர் முகமது பாரூக் புன்னகையுடன் கூறினார்.





அவர்களின் முழுமையான தோற்றத்தை முடிக்க 2 மணிநேரம் எடுத்துக்கொண்டேன். மேலும் இது ஒரு புதிய யோசனை அல்ல, அதே நேரத்தில் நான் இந்த கருத்தை யாரிடமிருந்தும் எடுக்கவில்லை அல்லது நகலெடுக்கவில்லை. இந்த செய்தித்தாள் அலங்காரத்தில் எனது படைப்பாற்றலைக் காட்ட விரும்பினேன். இந்த போட்டோஷூட் படப்பிடிப்புக்கு 2 மணி நேரத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது. விஜய் சாமுவேல் மற்றும் ரஞ்சனா மிகவும் பொறுமையாக இருந்தனர். நான் செய்தித்தாளைப் பொருத்தியபோது அவர்கள் ஆடை வடிவ மேனிக்கைப் போல நின்றார்கள். இது ஒரு பட்ஜெட் படப்பிடிப்பு என்று நான் சொல்ல வேண்டும். பழைய நாளிதழ் ஒரு கிலோவுக்கு 35 ரூபாயில் இருந்து கிடைத்துள்ளது. 




முழு படப்பிடிப்புக்கும் நாங்கள் 2 கிலோ பழைய செய்தித்தாளை பயன்படுத்தினோம். இந்த படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிக்க உதவிய என் நண்பர்களான தாரிக் அன்வர் மற்றும் முகமது ஃபர்ஹாத் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். "ஃபேஷன் டிசைனர் மொஹமட் ஃபாரூக்குடன் பணிபுரிந்த எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது, இந்த போட்டோஷூட் ஃபரூக்கால் உருவாக்கப்பட்ட எனக்கு மிகவும் புதியது" இந்த ஃபேஷன் தொழில்முறை நபர்களுடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்பினேன். என்று  புகைப்படக்காரர் ரஃபி. ரஃபி தெரிவித்தார்.



'அர்த்தம்' திரைப்பட தமிழ் பதிப்பு! 





மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது…

நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது… 

நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து தயாரித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.  நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷ்ரத்தா தாஸ் இந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகை. மிகச்சிறந்த நடிகை கடின உழைப்பாளி தமிழில் பெரிய வெற்றி பெறுவார். நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. 

இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி பேசியதாவது..

இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான்  70 சதவீதம் ஷீட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்.




நடிகை ஷ்ரத்தா தாஸ் பேசியதாவது..

நான் 40 படங்களுக்கு மேல் தெலுங்கு,  மலையாளம்,  இந்தி, ஆங்கிலம் பெங்காலி படங்களில் நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன்.  அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவாக கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.  மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகருடன் நடித்தது மகிழ்ச்சி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது….

இந்த திரைப்படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். தம்பி மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை தந்தார். இந்தபடத்திலும் நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் மிக விரைவில் இயக்குநராக பரிணாமம் எடுக்க போகிறேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

நடிகர் வினோத் பேசியதாவது…

இந்தப்படம்  நண்பர் மூலம் ஷூட்டிங் பார்க்க போனேன் அங்கு அவர்கள் வேலை பார்த்தது பிடித்திருந்தது. மணி சாரிடம் நானே வாய்ப்பு கேட்டு இந்தப்படத்தில் நடித்தேன். ஒரு தெலுங்கு படத்தில் வேலை செய்தது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னை மிக நன்றாக பார்த்து கொண்டார்கள். ரோபோ சங்கர் அண்ணாவுடன் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி. 

'டைட்டில் ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு



நடிகர் விஜித் அவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ' டைட்டில் ' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு  விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ 9 R K சுரேஷ் அவர்கள் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனை பதிவு செய்தார். மேலும் தனது வேண்டுகோளாக படத்தில் நடிக்கும் நடிகர்களை அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்றார்.

மைம் கோபி படத்தின் பெயரே டைடில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது என்று கூறினார். இயக்குனர் விக்னேஷ் அவர்கள் கதாநாயகன் விஜித்துடன் தனது நட்பு சிறுவயதில் இருந்து எவ்வாறு தொடங்கியது என்பதனை அழகாக வருணித்தார்.

நடிகர் ஜீவா மற்றும் ராஜ்கபூர் படத்தின் கதாநாயகன் விஜித் அவர்களை வாழ்த்தியதுடன் நிறுத்தாமல், ஒரு சிறிய படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதனை மீண்டும் பதிவு செய்தனர்.

இயக்குனர் ரகோத்து விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை பதிவு செய்தார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் தனது தாய் மற்றும்  சீதா பாட்டிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். "என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு..இது ஏழாவது படம்..நிச்சயம் வெற்றி பெறும்" என்று கூறியதோடு மட்டும் நிறுத்தாமல் அனைவருக்காகவும் தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

தத்தோ ஶ்ரீ ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தினார். தான் பேசிய அனைத்தையும் எவ்வாறு ட்ரெண்ட் ஆகிறது என்பதனையும் நக்கலாக பதிவு செய்தார். மேலும் ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார். நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிகொள்ளவில்லை எனவும் ஏற்றிகொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும் எனவும் வினவினார். ஒரு படத்தை காப்பாதனும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும்.

மேலும் அவர் கூறுகையில், "எல்லாரும் படத்த திரையரங்கில் பாக்கணு, OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது. அத்தோடு நிறுத்தாமல், திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்" என்றார்.


ஒரு பெரிய பெயர் போன தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் வெற்றி படம் எடுக்க முடியும் என்பதனை தாண்டி தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெறவேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும் என்பதனை பதிவு செய்ததோடு மற்றும் நிருத்தாமல், நடிகர் கமல் பற்றி பெருமையாக பேசினார். மேலும் நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது  என சர்ச்சையாக பேசினாலும், இறுதியில் தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என ஒரு செய்தியுடன் தன் உரையை நிறைவு செய்தார்.
அடுத்து பேசிய மிரட்டல் செல்வா, இந்த திரைப்படத்தில் விஜய் அஜித்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இருப்பது என்பதனை தெரிவித்துள்ளார்.

படத்தின் நாயகி அஸ்வினி,  நாயகன் விஜித் தனக்கு ஒரு சிறந்த துணை நடிகராக  இருந்தது தனக்கு பலம் அளித்ததாக பதிவு செய்ததுடன் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் பெசன்ட் ரவி, " ஒரு மனிதன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்" என்பதனை அழுத்தமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், தனக்கே உரித்தான நக்கல் பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்தார். பிறகு பேசிய இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்து எதிர்மறையாக பேசினார். மேலும் தனது பேச்சில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சாடினார். இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி குடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனை கூறினார். திருப்பாச்சி படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினை கூட தன் பாணியில் கூறினார்.

பிறகு பேசிய RV உதயகுமார் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் வழித்தளத்தயே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி என அவர் கூறினார். மேலும் யூடியூப் வலைதளங்களுக்கு ஒரு கோரிக்கையினை அவர் எடுத்து வைத்தார். "நாகரீகமாக டைட்டீல் வெயிங்க. தவறாக வழி நடத்தாதீங்க மக்கள".
கே பாக்யராஜ் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் தன் ரசனை மிக்க பேச்சினால் அனைவரையும் ஈர்த்தார்.

"ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ' சுவரில்லா சித்திரம் ' என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது. எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக வேண்டும்".

தனது படத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு உருவாகும் என்பதனை தன் நகைச்சுவை பேச்சினால் அழகாக வருணித்தார். தனது 'அந்த 7 நாட்கள் ' படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளை பதிவு செய்தார். மேலும் முந்தானை முடிச்சு என்ற தனது படம் எவ்வாறு பிரபலமடைந்து எனவும் தன் பாணியில் மக்களுக்கு கொண்டு சேர்த்தது இறுதியாக பேசிய இயக்குநர் S P முத்துராமன் அவர்கள், ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்ததுண்மட்டும் இல்லாமல் திரைஉலகில் காலடி எடுத்து வெய்ப்பதற்க பொறுமை மற்றும் நம்பிக்கை தேவையோ  அது உங்களிடம்  இருக்கின்றது "நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்", என்று கூறினார். இறுதியாக திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது.




JewelOne Anna Nagar Chennai welcomes customers to a bigger experience!

 




Chennai:

 

An emerging jewellery retail brand from a company with a 38-year legacy in jewellery making, Guinness Record holder for creating World’s Largest Handmade Gold Chain. Jewel One, the jewellery brand from the house of one of India's largest jewellery manufacturers, Emerald now comes to Anna Nagar (Near Thirumangalam Metro station, 233-235, 2nd Avenue, L Block, Anna Nagar (West), Chennai).

 

‘Jewellery that understands the persona of women’, as summed up in their tag line – ‘Penn Manadhai Purintha Ponn’ (பெண் மனதைப் புரிந்த பொன்).

 

The Chennai Anna Nagar store of JewelOne has been launched on 21st Aug 2022, at a pompous and grand event. The new store has been designed in such a way to give the customers a wonderful shopping experience.

 

The new store was inaugurated by the Founder and Managing Director of Emerald Jewel Industry India Limited, Mr K. Srinivasan, the Joint Managing Director Mrs. Sakthi Srinivasan, Director Mr. Dhiaan Srinivasan and other dignitaries, who graced the event in the presence of their Chief Operating Officer, Mr Vaideeswaran N. The store was inaugurated by cutting the welcome ribbon and traditional lamp lighting.


During the launch, Mr K Srinivasan, the Managing Director of 
Emerald Jewel Industry India Limited said, “We are delighted to have brought a new experience to our customers. Our new Anna Nagar showroom has been designed in a new format as a Ground plus mezzanine floor spanning an area of 2900 SFT and located on a high street which is becoming a jewellery hub”.



 

As part of the launch celebrations, JewelOne has several exciting offers in gold and diamond jewellery for its customers that are sure to delight them. As part of the launch, they have displayed a special attraction which is JewelOne Dancing Peacock, a mesmerising 4.5-feet larger-than-life Dancing Peacock embedded with semi-precious stones. As a tribute to the Chess loving customers who had a great time during the 44th Chess Olympiad at Chennai, Jewel One has launched a set of products resembling the chess characters.

 

Mr Vaideeswaran N, Chief Operating Officer of Emerald Jewel Industry India Limited said, “JewelOne has been undergoing various changes to keep itself relevant in the marketplace. It has brought 5 collections, viz, Chiara (Affordable diamond collection), Ayanaa (Floral collection), Nirjhara (Waterfall theme-based diamond collection), Zheena (Vibrant gemstone collection) and Delites (Lightweight collection) in the last 17 months to delight its design seeking customers. It has products from 4.99% (VA) onwards. This showroom has a service facility for its customers.

 

Retail Promotion of the Year Award 2022 for Jewel One received from the Retail Jeweller Awards and received ‘Best Retailer of the Year 2022’ in Jewellery Category by RAI’s India Retail Excellence Awards 2022. Both the awards have been received by the brand in this same month of August’2022. These awards are testimonies to the brand’s transformative journey which was initiated 17 months before”.

 

JewelOne is a brand with 13 showrooms across Tamil Nādu and Puducherry. The brand plans to expand its retail presence through franchisees and business partners across the state and nationally as well.

STOPPAGE AT AVADI FOR EXPRESS TRAIN BETWEEN CHENNAI – MANGALORE FLAGGED BY UNION MINISTERS OF STATE




Railway Board had approved the stoppage of Train No.12685/12686 Dr MGR Chennai Central – Mangalore Central – Dr MGR Chennai Central Superfast Expresses at Avadi Railway Station on an experimental basis for a period of six months, on and from 21st August 2022.

The introduction of the stoppage at Avadi Railway Station for these trains were marked by a brief function in which Train No.12686 Mangalore – Dr MGR Chennai Central Superfast Express was stopped at 06.58 hrs and flagged off at 07.00 hrs by Shri V.Muraleedharan, Honble Union Minister of State for External Affairs and Parliamentary Affairs and Dr L.Murugan, Hon’ble Union Minister of State for Information and Broadcasting, Fisheries and Animal Husbandry and Dairying, in the presence of Shri Durai Chandrasekaran, MLA, Ponneri, Shri Ganesh, Divisional Railway Manager, Chennai Division, other invitees, Railway Officials and Passengers.

Consequent to the introduction of this stoppage, the following are the changes in the timings of Train No.12685 Dr MGR Chennai Central – Mangalore Superfast Express at Katpadi, Jolarpettai, Morappur, Salem, Erode, and Tiruppur, and the arrival time change in Train No.12686 Mangalore - Dr MGR Chennai Central Superfast Express at Dr MGR Chennai Central.

Thiruchitrambalam Movie Review: குடும்பங்கள் கொண்டாடும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம்



ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம் என்கிற திருவை (தனுஷ்) பலம் என்று அழைக்கிறார்கள் அனைவரும். எந்த லட்சியமும் இல்லாமல் இருக்கும் அவர் வாழ்க்கை, அவர் பெயரையே கொண்ட தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), தனக்குப் பிடிக்காத போலீஸ் அதிகாரி அப்பா நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்), பால்யத் தோழி ஷோபனா (நித்யா மேனன்) ஆகியோருடன் சென்று கொண்டிருக்கிறது, இயல்பாக. இதற்கிடையே அவருக்கு இரண்டு பெண்கள் மீது காதல் வருகிறது. அவை தோல்வியில் முடிய, அவர் அடுத்து என்ன செய்கிறார்?  அவருக்குப் பிடிக்காத அப்பா எப்படி பிடித்தவராகிறார்? நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது? என்பதை சிறப்பாக சொல்கிறது 'திருச்சிற்றம்பலம்'.

'பழம்' என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான்.ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ஃபிரெஷ்சான யோசனைகளுக்காகவும் திறமையான நடிகர்களைச் சரியாகப் பயன்படுத்தி இருப்பதற்காகவும் வாழ்த்தலாம் அவரை.... தனுஷின் பயம் போக்க வைக்கப்பட்டிருக்கிற கிளைக்கதை கூட படத்துக்கு வலு சேர்ப்பது அழகு.

தாத்தாவையும் அவர் ஆலோசனையையும் கிண்டலடித்துக் கொண்டே தோழமையாக இருப்பது, தோழியுடன் ஜாலி.... கேலி...., கோபக்கார அப்பாவுடன் மோதல், நிராகரிக்கப்படும் காதல் ஏமாற்றத் தவிப்பு என, ஹீரோயிசம் இல்லாத அசல் பக்கத்துவீட்டு பையனை அப்படியே முன் நிறுத்துகிறார். 

அனிருத் இசையில், ’தாய்க்கிழவி’ ஆட்டம்போட வைக்கிறது. ’மேகம் கருக்காதா பெண்ணேபெண்ணே’ பாடலும் அதற்கான நடனமும் மனதை வருடுகிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையை அழகாக இழுத்துச் செல்கிறது.

மொத்தத்தில் இந்த  'திருச்சிற்றம்பலம்' பழத்தை சுவைக்கலாம்....  குடும்பங்களுக்கு விருந்து.....


‘கொடை’ பட இசை வெளியீட்டு விழா! 




எஸ்.எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’ .  இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 

5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது. 


இவ்விழாவினில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது:

இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 

நடிகர் கார்த்திக் சிங்கா பேசியதாவது:

இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். 

நடிகை அனயா கூறியதாவது:

தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுகொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான்  எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. 

நடிகர் ராதாரவி கூறியதாவது:

இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும்.  நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் கூறியதாவது:

இந்த படத்தில் எனக்கு சிறிய ரோல்  என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய  உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி

நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது:

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி. 

தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது:

 படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை  என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.  இயக்குனருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் அம்மா T சிவா கூறியதாவது:

ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. எம் எஸ் பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களை திரையில் பார்ப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை சரியான முறையில் புரமோட் செய்து, மிகப்பெரிய வசூலை, படக்குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். 

இயக்குனர் எழில் கூறியதாவது:

 படத்தின் டிரெய்லர் ஈர்க்கும் படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றி போய் உள்ளது. இந்த படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் உடைய உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாக தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள். 

இயக்குனர் ராஜா செல்வம் கூறியதாவது:

மிகப்பெரும் ஜம்பாவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளை கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள் நன்றி. 


தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:

தயாரிப்பு நிறுவனம்: எஸ்எஸ் பிக்சர்ஸ் 

எழுத்து இயக்கம் : ராஜசெல்வம்

இசை: சுபாஷ் கவி 

ஒளிப்பதிவு: அர்ஜுனன் கார்த்திக்

எடிட்டர்: G.சசிகுமார் 

கலை: K.M.நந்தகுமார் 

நடனம்: தினேஷ், ராதிகா

சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆடைகள்: P.ரெங்கசாமி 

ஒப்பனை: P.S.குப்புசாமி 

ஸ்டில்ஸ்: மோகன் 

மக்கள் தொடர்பு - சதீஷ் AIM

‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது



ஜீ5 தளத்தில்  ஆகஸ்ட் 19, 2022 முதல்,  இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர்  அருண் விஜய் நடித்த "யானை" என்ற அதிரடி  ஆக்‌ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன்,  வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களை தந்த இயக்குனர் ஹரி எழுதி இயக்கியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 தளம்  தற்போது  இந்த ஆக்‌ஷன்  நிறைந்த, உணர்ச்சிகரமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை, ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு வருகிறது.

இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ்த்தப்பட்டிருந்தது, அவற்றில் அருண் விஜய் நிகழ்த்திய சிங்கிள்-ஷாட் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தவிர, இயக்குனர் ஹரியின் வலுவான கம்பேக்கிற்காக “ யானை”  பாராட்டை பெற்றது குறிப்பிடதக்கது. பொதுவாக இயக்குநர் ஹரி தன் திரைப்படங்களில்  ஆக்‌ஷன், உணர்வுகள், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்களை  சரியான கலவையுடன் தந்து, பார்வையாளர்களின் நாடித் துடிப்புக்கு ஏற்ப பொழுது போக்கை வழங்குவதில் பாராட்டைப் பெறுபவர். மேலும் இப்படத்தில், ஜீவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டு மொத்த நட்சத்திர நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு கதைக்கு மேலுமொரு பேரலங்காரமாக அமைந்திருந்தது.

ஜீ5  தொடர்ந்து சிறந்த உள்ளடக்கம் கொண்ட அசல் தொடர்களை வழங்கி வருகிறது. விலங்கு, அனந்தம், ஃபிங்கர் டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கி சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என அனைத்து தொடர்களும் ரசிகர்களிடம் பெரிய பாரட்டுக்களை பெற்றது. பல தரமான படைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களில் சிறந்த படைப்புகளை தந்து, ஜீ5 அதன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை  வழங்கி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட பா.இரஞ்சித்தின் படம்!




 

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம்  சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.  தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி படப்பிடிப்பை துங்குகிறார்கள்.


திரைக்கதை வசனம் - தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்

இயக்கம் - ஜெய்குமார்.

தயாரிப்பு- லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,

நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை - ரகு

எடிட்டிங் - செல்வா RK

உடைகள்- ஏகாம்பரம் .

ஸ்டில்ஸ் - ராஜா

பி ஆர் ஓ - குணா.

லாகின் & ட்ராமா படங்களின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 



தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ்  தயாரிப்பு நிறுவனம்.  ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா  நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்கவிழாவும் இன்று இனிதே நடைபெற்றது. 

இவ்விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  

“கா”  பட இயக்குநர் நாஞ்சில் பேசியதாவது…

நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி. 

“கா” பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசியதாவது…

ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் நன்றி. 

தயாரிப்பாளர் அம்மா T சிவா  பேசியதாவது…

திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்று தான் போய்க்கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியை பெறும். ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப்பெரும் வெற்றி ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியை தருமென வாழ்த்துகிறேன். தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தமிழ் சினிமா இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன் நன்றி.  




ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசியது… 

தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி  

ட்ராமா  பட நடிகை காவ்யா வெல்லு பேசியதாவது: 

இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட்  இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.  படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 

தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசியதாவது…. 

சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி. 

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி   பேசியதாவது…

எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்.



 

நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது…

லாகின் லாக்டவுன் முடிந்து ஷீட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை  உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய  நன்றிகள்.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பரபரப்பு கேள்வியாக இருந்து கொண்டிருந்தது. வெளியாகுமா என்ற நிலையில் மூன்று சின்ன படங்களை வாங்கி அதன் வெளியீட்டை உறுதி செய்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ். மூன்று படைப்புகளையும் தரமான படைப்புகளாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். நல்ல படைப்பாளிகள் இதன் மூலம் வெளிவருவார்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது…

சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தை தரும் நன்றி.  

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசியதாவது…

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா?  நாம் ஜெயிப்போமா ?  என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ்  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.




Southern Railway celebrates 75th anniversary of Indian Independence Day





The Nation is commemorating the monumental occasion of the 75th Anniversary of Indian Independence as ‘Azadi Ka Amrit Mahotsav’.   ‘Azadi Ka Amrit Mahotsav’ is an initiative of the Government of India to celebrate and commemorate 75 years of independence of progressive India and the glorious history of its people, culture and achievements.  

The 76th Independence Day Celebrations held today is part of year-long celebrations under the aegis of Azadi Ka Amrit Mahotsav. Southern Railway celebrated the 76th Independence Day today (15.08.2022) at the Railway Stadium, Perambur, Chennai.  Shri B.G.Mallya, General Manager, Southern Railway hoisted the National Flag in the presence of Shri G.M.Eswara Rao, Principal Chief Security Commissioner, RPF, and took the salute at the RPF parade comprising of RPF contingents including Women Platoons and St John's Ambulance Brigade. The program was attended by Principal Heads of Departments of Southern Railway, Shri Ganesh, Divisional Railway Manager Chennai, Smt Renuka Mallya, President of Southern Railway Women's Headquarters Organisation,  Officers & Staff and their family members, and  Representatives of Labour  Unions and Associations of Southern Railway. Addressing the gathering, the General Manager recalled the great sacrifices of martyrs of freedom and their invaluable struggle to free India.  He stated that it is the responsibility of the present generation to nurture patriotic spirit in young minds.  

He appreciated the railway employees for carrying the Har Ghar Tiranga campaign far and wide by hoisting National flag at their homes, offices and railway stations. He lauded the efforts of Officers and Staff for enthusiastically organizing various activities in commemoration of Azadi Ka Amrit Mahotsav. In his address, the General Manager briefly outlined the various performance highlights of the zone, especially about the various infrastructure, electrification, engineering and safety works. He mentioned that projects such as Andipatti – Teni section (of Madurai-Bodinayakkanur Gauge conversion) and new line between Milavittan-Melmarudur have been completed during 2021-22.  

Further, 69.97 Kms of doubling has been completed in the current fiscal. He added that in Southern Railway, under Station redevelopment, nine stations viz. Chennai Egmore, Rameswaram, Madurai, Katpadi, Kanniyakumari, Puduchery, Ernakulam Jn., Kollam and Ernakulam Town have been taken up.   Emphasising on Level Crossing Safety, GM mentioned that 69 Bridges were rehabilitated/replaced, 54 nos. of ROB/RUB/LHS’s were completed, 35 nos. of Manned LC’s were eliminated by the Railway. The zone is marching ahead in all facets of working by adopting modern technological advancements like Electronic Interlocking, he added. 

During the programme, sixteen retired railway employees of Southern Railway were honoured by the General Manager for their outstanding service to the organization and society at large as part of the Program commemorating 75 Years of Indian Independence. All these retired Railway personnel had crossed the age of 75 years and were felicitated by the General Manager. Cultural programmes by RPF, Dog Squad ( Dog Show) and performances by various departments including the Railway schools and Ashraya, the Special school for special children, followed the Flag Hoisting program. General Manager also flagged off a mega bike rally by the Bharat Scouts & Guides of Southern Railway as part of the 76th Independence Day program.



Methagu 2 Movie Review:  'மேதகு 2'  திரைப்படத்தின் திரை விமர்சனம் 



படம்: மேதகு 2

நடிப்பு: கவுரி சங்கர், நாசர் மற்றும் புதுமுகங்கள்

தயாரிப்பு நிர்வாகிகள்: தஞ்சை குகன் குமார், அயர்லாந்த் கவிஞர் திருக்குமரன்ப், டென்மார்க் சுமேஷ் குமார், தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா

இசை: பிரவின்குமார்

ஒளிப்பதிவு:வினோத்
ராஜேந்திரன்

இயக்கம்: இரா.கோ யோகேந்திரன்

பி ஆர் ஒ: கே எஸ் கே செல்வா

'மேதகு 2' திரைப்படம் ஆகஸ்ட்-19ஆம் தேதி  வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான மேதகு படத்தின் தொடர்ச்சியாக இந்த 'மேதகு 2' படம் வெளியாகி உள்ளது.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது.


அதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது.



இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 20 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது. 


குறிப்பாக இடைவேளைக்கு பின் காட்சிகள் விறுவிறு வேகத்தில் நகர்கின்றன அதிலும் பிரபாகரன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த நால்வரை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வலுக்கட்டாயமாக கையெழுத்து போட சொல்வதும் ஆனால் அவர்கள் அங்கிருந்து சாமார்த்தியமாக தப்பிப்பதுமாக, அந்த சமயத்தில் இருந்த மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தையும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்.


திரிக்கப்பட்ட ஈழ தமிழர் போராட்ட வாழ்வியலை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சரியான விதத்தில் கடத்தும் ஒரு ஊடகமாக நடிகர் நாசர் தனது பங்களிப்பை சிறப்பாக  செய்துள்ளார். 


வெப்சீரியஸ் போல் தொடர்ச்சியாக கதை முழுவதும் வந்திருந்தால் நன்றாகவும் தெளிவாகவும் மக்களுக்கு புரியும் என்று நினைக்க வைக்கிறது..... 


மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த 'மேதகு 2' திரைப்படம்  முடிகிறது.


மொத்தத்தில்  'மேதகு 2' வீர தமிழர்களின் உணர்வு....... 








“தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்” ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை




சென்னை: 

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார் .




இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் பேசும்போது:

“ஜீவி முதல் பாகம் ரிலீசான அன்றே அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மறுநாளே எனக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி கொரோனா காலகட்டம் காரணமாக அது தள்ளிப்போனது. அந்தசமயத்தில். தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்தி கொடுத்த உற்சாகம் காரணமாக உருவானதுதான் ஜீவி-2 படத்தின் கதை.

முதல் பாகத்திற்கு கதை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த கதாசிரியர் பாபு தமிழ் தான் இயக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இந்த கதையை நானே 2 நாட்களில் உருவாக்கினேன். இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து அரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன்பின் தான் எனக்கு மனம் நிறைவடைந்தது. இன்னும் உலக அளவில் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது” என்று கூறினார். 

இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிட்டு தளத்தில் வெளியிடும் அதன் சிஇஓ சீகா பேசும்போது:

 “நேரடியாக படங்கள் ஓடிடியில் வெளியாவதை விட தியேட்டரில் வெளியானபின் இங்கு வந்தால் தான் எங்களுக்கு அது சக்சஸ். தமிழ் மக்களை உயர்வாக காட்டும் படங்களை வெளியிடுவது தான் எங்களது குறிக்கோள். விரைவில் எங்களது தளத்தில் ஒரு முக்கியமான பிரபலத்தை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றையும் துவங்க இருக்கிறோம். 

ஜீவி முதல் பாகத்திற்கு ஆஹாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அந்தவகையில் ஜீவி-2 நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவது எங்களுக்கு பெருமை தான். 160 நாடுகளில் இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும். சமீபத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படமும் எங்களுக்கு கிடைத்தது ஒரு கௌரவம். இயக்குனர் சீனுராமசாமியை பொருத்தவரை எங்களது நிறுவனத்தின் தூதராகவே மாறிவிட்டார் என சொல்லும் அளவிற்கு அவரது படத்தை புரமோட் செய்து வருகிறார். படத்தில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் இதுபோல தங்களது பட்ங்களை புரமோட் செய்ய முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் பேசும்போது:

“ஜீவி-2 மாதிரியான படங்களுக்கு ஆஹா ஓடிடி தளம் சரியான பிளாட்பார்ம். இந்த படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் ஒரு அறிவுஜீவி என்று சொல்லலாம். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் மனநிறைவாக இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது நல்ல படங்களைத் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் கெட்ட பழக்கம். இந்த பழக்கம் தொடர்ந்து அவரிடம் இருக்க வேண்டும். அதே போல ஆஹா ஓடிடி தளம் நாடகங்களையும் ஒளிபரப்ப முன்வரவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

நாயகி அஸ்வினி பேசும்போது:

“ஜீவி படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக அமைந்தது நான் பணியாற்றிய படங்களிலேயே ஜீவி முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுக்கும் மிகச்சிறந்த தயாரிப்பாளர்கள் கிடைத்து விட்டனர். முதல் பாகத்தில் பாடல் காட்சி தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அந்த குறை தீர்ந்து விட்டது” என்று கூறினார்

நாயகன் வெற்றி பேசும்போது:

‘ஆந்திராவில் நான் செல்லுமிடங்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளம் மூலமாக தெலுங்கு மக்களை சென்றடைந்தது தான் காரணம். நிச்சயமாக இந்த நிறுவனத்தினர் இந்த இரண்டாம் பாகத்தையும் இன்னும் பிரமாதமாக கொண்டு சேர்ப்பார்கள்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு போன்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்துவிட்டு, ஜீவி-2 போன்ற சிறிய படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. ஆனால் கதை மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு என் நன்றி” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் தம்பிராமையா பேசும்போது:

‘பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும் ஆனால் ஜீவி-2 படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப்படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குனராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்

இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது:

“தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போல, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி போல முக்கியமான தயாரிப்பாளராக இருக்கிறார். அவரிடம் கதை அறிவும் நேர்மையான வணிகமும் இருக்கிறது. மாமனிதன் ரிலீஸ் சமயத்தில் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்து சிசேரியனாக மாற இருந்த அந்த படத்தை சுகப்பிரசவமாக வெளியிட உறுதுணையாக நின்றார். தியேட்டர் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிடையாது. காரணம் என்னுடைய மாமனிதன் படம் தியேட்டர்களில் வெளியாகி யாருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய சூழலில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானதன் மூலம் 160 நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. வெற்றியின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அவர் இருப்பார். பிரேம்ஜி பாடியுள்ள டயர்டா இருக்கு என்கிற பாடல் உற்சாகத்தை ஊட்டும் விதமாக இருக்கிறது. விமர்சகர்கள் எல்லா படத்துக்கும் ஒரே தராசு கொண்டு அளவிடக்கூடாது என்று பேசினார்.




இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது:

 “முன்பெல்லாம் இயக்குனர்கள் தான் ஹீரோக்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது ஹீரோ என்று மாறிவிட்டது. ஹீரோ கைகாட்டுபவர் தான் இயக்குனர் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதேசமயம் நடிகர் வெற்றி விஜே கோபிநாத்தை இயக்குனராக தேர்ந்தெடுத்து, அவர் மீது வைத்த நம்பிக்கையை காட்டிவிட்டார். 

இன்று சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக் கூட ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இயக்குனர் கோபிநாத்துக்கு சுரேஷ் காமாட்சி கொடுத்த விளக்கம் எனக்கு சமாதானம் ஆகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் தியேட்டரில் வெளியாகி விட்டு பின்னர் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்..

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொருத்தவரை எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். எனது மகன் சாந்தனுவின் படத்திற்கு ராமநாதபுரம் படப்பிடிப்பின்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சுரேஷ் காமாட்சியை அணுகியபோது தன்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து மூன்று நாட்கள் கூடவே இருந்து அதை சரிசெய்து கொடுத்தார். இது போன்றவர்களை சினிமாவில் பார்ப்பது அரிது” என்று கூறினார்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது:

“எனக்கு பிடித்த கதைகளாகத்தான் தேர்ந்தெடுக்கிறேன் என்றாலும் எனக்கு மட்டும் பிடித்தால் போதாது.. ரசிகர்களுக்கும் பிடிக்கவேண்டும். சின்ன படங்களுக்கு ஓபனிங் கிடைப[ப்பது கஷ்டமாக இருக்கிறது. மாமனிதன் படம் கூட அப்படித்தான். அதேசமயம் ஓடிடியில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. வெற்றி நல்ல நடிகர். இப்படி இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறேன் என்றதும் அவரது தந்தை வெள்ளப்பாண்டி கதைக்கான எந்த உரிமையும் கோராமல் என்னிடம் தந்தார். எங்களது தயாரிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது போல, இந்த ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தியேட்டர் நெருக்கடிகள் காரணமாக தான் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது:

‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனை தான் அறிமுகம் செய்திருக்கிறார்.

விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது” என்று கூறினார்


நடிகர்கள்:

வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகினி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர்


தொழில்நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி 

இயக்கம் ; வி.ஜே.கோபிநாத்

இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவாளர் ; பிரவீண் குமார்

படத்தொகுப்பு  ; பிரவீண் கே.எல்

சண்டை பயிற்சியாளர் ; சுதேஷ் 

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.