ஜனவரி 2022

Tamil Nadu Governor Launches Two Books By Heartfulness



Heartfulness launched two books as part of their Timeless Wisdom/YogUtsav celeb rations. The event was presided over by the Hon’ble Governor of Tamil Nadu, Thiru R. N. Ravi who launched the books called ‘The Authentic Yoga’ and ‘Tales from the Vedas and Upanishads’ from Heartfulness. The event brought together the magic of books and Yoga as well as Meditation in day-to-day life and made practical knowledge on Yoga and Meditation accessible to all through these two book launches. The event was attended by several Th ought Leaders, Educationists, Yoga Enthusiasts, Social Influencers, and other professionals at Heartfulness Cen tre, Manapakkam, Chennai. 

Tales from The Vedas and Upanishads has a collection of 25 stories retold by Guide of Heartfulness – Daaji and is meant especially for children. The book published by Red Panda (Westland Publications) intends at introducing children to virtues in simplistic way. The Authentic Yoga on the other hand is highly philosophical although writ ten in a simple language. The beauty of the two books is not only in bringing traditional wisdom within the me ans of the common man in a decipherable way, but also the breaking the cliché of the benefits of Yoga and taking them one notch ahead that makes them valuable.

Originally written by Shri P. Y. Deshpande, The Authentic Yoga is quite a departure for him to write it in English because he was originally a Marathi novelist. It was Deshpande’s meeting with J. Krishnamurthy in 1961, that got him into spirituality and wrote a series of books. His book on Yoga Sutras in English put him at an internation al stage as a great writer and as a highly regarding philosopher. Daaji has written the Forward and an additional chapter at the end of the book so as to bring Deshpande’s school of Yoga to modern consciousness. Daaji’s chap ter in the book talks about how to take what Deshpande said and translate it practically in modern-day life. It is also beautifully laid out and easy to read unlike what it was in the ‘60s.


Releasing a book titled, ‘The Authentic Yoga’ by Shri. P. Y. Deshpande published by the Heartfulness Institute, the Hon’ble Governor Thiru R. N. Ravi said:

 “It was about 6,500 years ago that our rishis came to the fundamental realization of unity of creation. Like the millions of leaves are unique and different from each other but are connected through a tree, all living beings are also inter-connected with each other. The creation is governed by immutable laws and forces that go beyond the reasoning of mere intellect. Our rishis taught us to understand creation through the intellect combined with anubhuti, intuitive experience.

“Rishi Patanjali helped us understand our ancient wisdom through his yoga sutras. The moment we realise that we are integrally connected, it takes away differences and conflicts. The ethnocentric view of life that humans are at the center of creation and everything else is just for our enjoyment is leading to reckless destruction of nature. This is opposed to the ancient Bharath view that we are not at the center of existence, but we are a part of the whole. Understanding this will help us move away from exploitation to co-existence. Yoga is essentially realization of connecting ourselves but what comes in the way is the sense of ‘I’ ness’, which gives rise to conflict. Our approach should begin with a healthy body because body is the medium of performing all our duties, and a healthy body can train the mind to be healthy to overcome the self-centered nature.”

Releasing a book for Children titled, ‘Tales from the Vedas and Upanishads’ by Daaji, the Governor added, “A child who reads a story also resonates with the emotions and develops a compassionate response. Books like these awaken the dormant goodness and such stories help children to nurture their wisdom at an impressionable age.” He also said, “India must grow to transmit its vision of a unified world drawing on our value systems and ancient wisdom.” 


Revered Daaji, Guide of Heartfulness says:

 “Our current and future generations need to understand the essence of Yoga beyond using it as a wellness tool. Deshpande has enunciated the Yoga Sutras by Patanjali in a brilliant way. I have only made the effort to bring it to common man in a way that one can put into daily practice. Yoga has to begin with character-building than merely adopting the asanas. Yoga means ‘Unity’. One’s effort must to find the unity within that will eventually lead to bliss. While Niyama and Yama aspects of Yoga deal with character-building, for children Tales from the Vedas and Upanishads does the job. The beautiful stories from ancient India help children to inculcate virtues early on. In retelling these legends, I hope I can be of help in building a strong budding generation of intellectual children.”

The Authentic Yoga raises the cliché of Yoga as physical exercise. The book teaches us that what stops us from attaining a Yogic state is our desires, our likes and dislikes. The book explains how we can relate to the human complexities, the emotions and the impediments in the path of attaining true bliss; while also  explaining the nature of existence in terms of matter and the universe. 

Patanjali’s Yoga Sutras propounded by Deshpande is taken one step further with a practical approach by Daaji. Daaji suggests the means to overcome the impediments and remove them from the system. On the other hand, Tales from the Vedas and Upanishads in spires children to tread the path of righteousness in the modern times that are given to materialistic incli natio ns. It takes a beautiful approach to help children stay close to our roots and ancient Indian wisdom. Timeless Wisdom/YogUtsav is devised to launch a series of events from Heartfulness that aim to elevate the hu man consciousness with nuggets of wisdom useful to all generations. 

The events will touch upon the essence of our ancient scriptures, the science of Yoga, character-building, holistic wellness, balance in life, inner harmony and our relation as humans with the universe. The event opened with the National Anthem followed by a welcome Address by Thiru. Venkat Lakshminarasim ha. This was followed by Guide of Heartfulness – Daaji’s message about the two books –  ‘The Authentic Yoga’ an d ‘Tales from the Vedas and Upanishads’. 

Dr. Veronique Nicolai, Director, Heartfulness Yoga Institute threw light on Heartfulness Initiatives as Yoga as highlight. Dr. K.S. Balasubrahmaniam, Dy Director Kuppuswamy Research Institute introduced Daaji’s book and spoke on the relevance of ‘Patanjali’s Yoga Sutras viz., Ashtang Yoga. Mr. Prashanth Vasu, Working Committee Member of SRCM, Author & Ex-Partner in McKinsey introduced the child ren’s book ‘Tales from the Vedas and Upanishads’. 

Smt Nalina Ramalingam, Parents’ Circle spoke on the early inc ulcation of Ancient Indian values in children. Hon’ble Governor of Tamil Nadu spoke on the occasion enlighteni ng on the importance of preserving our ancient wisdom in the current times.


'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்பட விமர்சனம்!
 


நடிகர்கள்:

1.  அசோக் செல்வன் - விஜய் 
2.  ரியா - மலர் 
3.  மணிகண்டன்.K - ராஜசேகர்
4.  அபி ஹாசன் -  பிரதீஷ் (எ) பப்பு
5.  அஞ்சு குரியன் - ரித்து  
6.  பிரவீன் ராஜா - பிரவீன் 
7.  ரித்விகா - கயல் 
8.  நாசர் - செல்வராஜ் 
9. K.S.ரவிகுமார் - அறிவழகன் 
10.  இளவரசு - வரதன் 
11.  பானுப்ரியா
12.  அனுபமா குமார்

                  
தொழில்நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு – AR என்டெர்டெய்ன்மென்ட், டிரைடன்ட் ஆர்ட்ஸ் 
இயக்குநர் – விஷால் வெங்கட்
இசை - ரதன்
ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்.K
படத்தொகுப்பு – பிரசன்னா G.K
உரையாடல் – மணிகண்டன். K
கலை – A.பெலிக்ஸ் ராஜா & மனோஜ்   குமார்
நடனம் –தினேஷ்(விழி பேசும்),ஸ்ரீ கிரிஷ்(உன் பிரிவு) 
பாடல் வரிகள் – சினேகன் (யார் வழியில்),  RJ விஜய் (விழி பேசும், உன் பிரிவு), மாதேவன் (உனக்காகவே), ராகேண்டு மௌலி & MC சேத்தன் (ஆட்டம்) 
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி & பிரியா கரன்
ஒலி வடிவமைப்பு – சுரேன்.G,அழகியகூத்தன்
வண்ண ஓவியர் – சேது செல்வம் 
VFX – அக்க்ஷா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
விளம்பர வடிவமைப்பு – NTALKIES 
புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் சந்துரு
மொழிக்கோர்வையாளர் - ரேக்ஸ்

றிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர், அபிஹாசன், அஞ்சு குரீயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.

நான்கு கதைகளை ஒருசேர இணைத்து ஒருபுள்ளியில் சங்கமித்திருப்பது தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.. நான்கு கதைகளையும் தனித்தனியாக பார்த்து விடலாம்.

முதலாவதாக.

நாசருக்கு ஒரே மகனாக வரும் அசோக் செல்வன், ஒரு தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில்தனது காதலியான ரியாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இரு வீட்டாரின் சம்மதத்தோடு இத்திருமணம் நடைபெறவிருக்கிறது.

தனது அப்பாவே, தன்னுடைய பேச்சைத் தான் கேட்க வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர் அசோக் செல்வன். எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகக்கூடிய முன் கோபம் படைத்தவர். 

இரண்டாவதாக..

ஊரில் மிகப்பெரும் இயக்குனராகவும் செல்வாக்கும் படைத்தவராக இருப்பவர் கே எஸ் ரவிக்குமார். இவரது ஒரே மகன் அபிஹாசன். தனது தந்தையின் எந்தவித சிபாரிசும் இல்லாமல், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதற்காக, பணக்காரத் திமிரோடு ”தான்” தான் என்ற மனப்போக்கோடு, தந்தையின் பேச்சைக் கேட்காத ஒருவராக இருக்கிறார் அபி.

மூன்றாவதாக...

பல வருடங்களாக தனியார் ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங்க் சூப்பர்வைஸராக இருப்பவர் மணிகண்டன். தான் வேலை கற்றுக்கொடுத்த சிறார்கள் எல்லோரும் மேனேஜர் ஆகிவிட்டனரே, நாம் இன்னமும் சூப்பர்வைஸராக இருக்கின்றோமே என்ற மனக்குமுரலில் பணிபுரிந்து வருபவர். எதனால் தமக்கு இந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது என்ற யோசனையிலேயே வாழ்ந்து வருபவர்.

நான்காவதாக....

ரித்விகாவும் பிரவீன் ராஜாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரவீன் ராஜாவிற்கு வசதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டு மற்றவர்களின் முன் அவற்றின் பெருமையை பேசிக் கொண்டிருப்பவர். அப்படியெல்லாம் தன்னால் வாழ முடியாது என்ற அடம்பிடிப்பவர் ரித்விகா.

இந்த 4 கதைகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களை ஒருவர் அவர்களின் தலையெழுத்தை மாற்றுகிறார். அப்படியான சம்பவம் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. அச்சம்பவத்திற்கு பிறகு அவர்களின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே இந்த சில நேரங்களில் சில மனிதர்கள்.

படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரஙகளான அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், ரித்விகா, அபி ஹாசன், கே எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் சரியான தேர்வு தான்.

நாசர் தனது அனுபவ நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். சாதாரணமாக வந்து தனது கேரக்டரை நிவர்த்தி செய்துள்ளார். அசோக் செல்வன் கத்தி கத்தி பேசுவதை சற்று குறைத்திருக்கலாம். அசோக் செல்வனில் ஆரம்பித்து, ரியா, பிரவீன் ராஜா, ரித்விகா என நால்வரும் சற்று மீட்டரை குறைத்து நடித்திருந்திருக்கலாம்.

வழக்கம்போல் மணிகண்டன் கதையோடு ஒன்றியிருந்தார். அளவெடுத்தாற்போல் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் உள்ளிட்ட அனுபவ நடிகர்களுக்கு பெரிதான காட்சிகள் இல்லை என்றாலும், அக்கதாபாத்திரத்திற்கு தேவையான வலுவான கேரக்டர்களாக தோன்றியிருந்தார்கள்.

கடாரம் கொண்டான் படத்தில் அசத்திய அபிஹாசன், இப்படத்தில் சற்று துவண்டிருக்கிறார். பிரதீஷ் கதாபாத்திரத்திற்கு இன்னும் சற்று உயிர் கொடுத்திருந்திருக்கலாம்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கலர் ஃபுல். காட்சிகளை அழகுற ரசிக்க வைத்திருக்கிறார். ரதனின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் தான். பின்னனி இசை மனதோடு வருட முயன்றிருக்கிறது.

மொத்தத்தில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'  உண்மையை சொல்ல வந்திருக்கிறது..... 

வருடம் ராசி: ஆளுமை மேஷம் ராசி!




இந்த ஆண்டு மேஷ ராசியினருக்கு ஆற்றலில் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் முக்கியமான விரும்பதகுந்த விஷயங்களுக்கு மட்டும் உங்கள் ஆற்றலை பயன்படுத்த வேண்டும். பல நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் இடங்களில் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டது.

சில நேரங்களில் குடும்ப உறவினர்களின், அறிவுரைகளும், அனுபவங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமென்ற திட்டம் இருந்தால் இந்த ஆண்டில் அதை முயற்சிக்கலாம். உங்கள் திட்டத்திற்கான பலன் இந்த ஐந்து மாதத்தில் கிடைக்கும். இந்த ஆண்டு மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் மாதம் பயணத்திற்கு ஏற்ற மாதமாக அமைகிறது, ஏனெனில் இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்வதின் மூலம் நிதிநிலை மேம்படும் மற்றும் மனநிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மீது அன்பு அதிகரிக்கும். 

அவர்களின் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவீர்கள். இந்த ஆண்டு நல்ல பணப்புழக்கம் இருப்பதால் தீய பழக்கங்களை கைவிடுவது நல்லது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குடும்பப் பொறுப்புகளை உணர கொஞ்சம் நேரம் கொடுங்கள். இந்த ஆண்டு அதிகப்படியான வேலையால் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர கோவில்களுக்குச் சென்று அதிக நேரம் கோவில்களில் செலவிடுவதை விரும்புவீர்கள். 

இந்த ஆண்டு உங்கள் தொழிலுக்கு சிறப்பான வருடமாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு உங்கள் குழந்தைகளின் நடவடிக்கை கண்டு கவலை அடையலாம். 

மே மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சமூக வேலைகளில் ஈடுபாடு ஏற்படும், அப்போது கவனமுடன் செயல்பட வேண்டும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய வளங்களைக் கொடுக்கப் போகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வருகின்ற வருடத்தில் கடினமாக உழைக்கத் தயாராவது ஒன்று மட்டுமே. அதற்கான சிறந்த பலன்களை இந்த ஆண்டு உங்களுக்குத் தரும்.


பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு...!


தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி  பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள்  பிப்ரவரி 22ம் தேதி  தேதி எண்ணப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தியது. இதனையடுத்து இன்று மாலை  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.

அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  பிப்ரவரி மாதம்  19ம் தேதி நடைபெறும்  என்று அறிவித்தார்.  தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Southern Railway Celebrates 73rd Republic Day




Southern Railway celebrated 73rd Republic Day with fanfare today (26.01.2022) at the Railway Stadium, Perambur,Chennai. Shri B. G Mallya, General Manager (In Charge), Southern Railway unfurled the National Flag and took the salute at the RPF Parade in the presence of Shri Birendra Kumar, Principal Chief Security Commissioner, Principal Heads of Departments, other officers and staff of  Southern Railway.

Addressing to the gathering, the General Manager (I/C) said that Last Year has been a year of twin challenges, with the second wave on COVID 19 on the one hand and Nature’s fury on the other hand. However, the hard work and toil of our Railway men and women ensured that the zone emerged safe and also scaled greater heights.

Southern Railway is gradually bouncing back from the effect of Covid pandemic in 2020-21. 93 percent of Southern Railway owned mail/ express trains have restarted and 121 out of 306 Passenger trains owned by SR are also restored and run as express specials. Despite Increase in services we have maintained punctuality at 95.6 percent. Twelve pairs of Mail/Express trains have been provided with LHB rake during the current year.

Southern Railway has taken a series of steps to boost freight loading. The originating Freight loading for the nine month period from April to December 2021 stood at 21.75 Million Tonnes yielding an originating freight revenue of Rs.1990 Crores. As a further impetus to our freight segment, contracts have been awarded in 5 locations for development of goodsheds under private investment.

Southern Railway has achieved improvement in mobility and connectivity through Infrastructure development through completion of important projects like Tambaram-Chengalpattu 3rd line and Gauge conversion work in Madurai to Theni. Further 183 kms of doubling works were completed on Southern Railway last year. To meet the Indian Railways goal of 100 percent electrification by 2023, Southern Railway completed electrification of 352 Track km of new lines, which includes important sections like Pollachi- Podanur, Madurai – Manamadurai etc. Further electrification of 112 Track km has been completed under doubling/quadrupling.

 The General Manager (I/C) listed the safety and security measures in place in the Zone and also detailed the remarkable strides in energy conservation both in traction and non-traction category. He listed the various measures taken in non-conventional energy too. He complimented Shri K.M.Sunil Kumar, Sub Inspector, Railway Protection Force, Tirur, in Palghat Division for having bagged the prestigious Indian Police Medal for meritorious service on the occasion of the Republic Day 2022.

Shri B.G.Mallya complimented the role of HR and sports and said that it was a matter of great pride that Sports Star Ms.P.Anitha has been honoured with the prestigious Padma Shri Award earlier this year. He also complimented Ms.Revathi Veeramani for representing the nation at the Tokyo Olympics.

At the Republic Day Function at Perambur, Shri B.G.Mallya also honoured all the Covid Warriors, especially Doctors and Para Medical Staff and Frontline staff who have rendered excellent service to the Railway during the Covid Pandemic.

The 73rd Republic Day was also celebrated in other divisions and extra divisional offices all over Southern Railway with patriotic fervour.  A large number of Officers, staff and their families enthusiastically participated in these events. At Chennai, Shri Ganesh Divisional Railway Manager, Chennai Division unfurled the National Flag at Divisional Office, NGO Annexe, Park Town, Chennai. At Southern Railway Construction Office, Egmore, Shri Prafulla Varma, Chief Administrative Officer, unfurled the National Flag. At the Railway Electrification Office, Shri Sameer Dighe, Chief Project Director, unfurled the National Flag and at the Joint Republic Day celebrations of the Perambur Workshops viz., Loco Works, Carriage Works and Electrical Works/Perambur Shri Arun Devraj, Chief Workshop Manager, Loco Works, unfurled the National Flag.


“தி வாரியர்”  திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனை!




இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும்  இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.

தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான்  படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும்,  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கிறது.  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும்  நடிக்கின்றனர்.

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். சீடிமார் படத்தின் பிரமாண்ட  வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen  தி வாரியர் படமும் மிகப்பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.


City Union Bank Launched Fitness Watch Debit Card!




Chennai:

As part of the Azadi Ka Digital Mahotsav, the Kumbakonam-based City Union Bank (CUB), a tech-savvy century old Private Sector Bank, in association with smart-tech-enabled preventive healthcare platform GOQii and powered by National Payments Corporation of India (NPCI), has launched a wearable payment solution called `CUB fitness watch Rupay debit card’ here on Monday.

The first fitness watch debit card was received by V R Venkataachalam, Chancellor of Sri Ramachandra Institute of Higher Education and Research in Chennai.

Launching the fitness watch debit card, the first of its kind in India N Kamakodi, Managing Director and Chief Executive Officer of CUB said, “We used advanced technology to enable our customers to make digital transactions in a contemporary, safe and secure fashion. We are happy to introduce this CUB Easy Pay Debit Card in a Fitness Watch providing our customers with an easy tap and go payment solution.”

Besides Sri Ramachandra Institute of Higher Education and Research, the CUB has entered in to an agreement with the 10 to 15 educational institutions to adapt contactless digital payments including promotion of fitness watch Rupay Debit Card.

Prior to this, the ‘Keychain debit card’ was launched during December in New Delhi by Ashwini Vaishnaw, Minister of Railways, Communications and Electronics & Information Technology. Customer can avail the Keychain debit card on payment of Rs. 400, he added.

Customers need to hold the strap fixed with a chip of the wristwatch in front of the PoS device during payment like tapping the card on PoS. For payments above Rs 5,000, customers need to tap and enter their PIN but it is optional. The promotion price of a smartwatch debit card is Rs 3,499 (Actual cost is Rs 6,499).

Customers can set limits for their payments using Net/Mobile Banking from the All-In-One Mobile App. Customers of CUB can apply for the Fitness Watch Debit Card through Net banking/ Mobile banking. Usage of wristwatches can be managed by customers on their own through CUB All in One Mobile App. Even non CUB customers can avail this facility by opening an account through this Mobile App within minutes by using their Aadhar Number followed by the OTP.

Besides being useful for making contactless payments, this Fitness Watch enables the wearer to monitor their Oxygen Level (Sp02), Body Temperature, Heart Rate, Blood Pressure and 18 Exercise Modes etc.

Addressing at the launch virtually, Praveena Rai, Chief Operating Officer, NPCI said:

“We are happy to partner with City Union Bank and GOQii to launch CUB Easy Pay, Contactless RuPay On-The-Go payment solution. This payment solution eliminates the need to carry tender cash, or even a wallet for that matter, and offers unparalleled and superior customer experience to cater to their day-to-day shopping needs. 

RuPay On-The-Go carries all the security features, notifications and controls of a regular card, and users can transact with the comfort of their safety. With the rapid increase of acceptance infrastructure, the demand for contactless payment mechanisms is on a steady rise. This one-of-its-kind offering is enabled with cutting edge innovation and is set to redefine the way contactless transactions will be made in the future.”

In a statement Vishal Gondal, Founder of GOQii said:

“At GOQii we aim to provide solutions for consumers to lead a healthy life. We are truly excited to partner with City Union Bank to offer contactless payments integrated with GOQii’s advanced health ecosystem to its banking customers. With the increasing digital payments and the need for social distancing we are confident that our association will benefit the user”.

CUB had recently launched their Debit Card in a Key Chain which also enables contactless Payment On the Go solutions. CUB’s focus on promoting contactless payment solutions is part of its overall strategy to offer a bouquet of Digital Payment Solutions.

FULL VIDEO HERE:

விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் “ரத்தம்”  படத்தில் மூன்று நாயகிகள்! 



ஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா & ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்”  படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்னர். தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோடியில் ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. 

அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக  இருக்கும் நிலையில், ரத்தம் என்ற தலைப்பில் திரைப்படத் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம்  புகழ்) அவர் நடிக்கும் படத்தின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர-நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்  பங்கேற்றிருப்பது  படத்திற்கு பெரும் மதிப்பை தந்துள்ளது. 




இந்நிலையில் தற்போது இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

இயக்குநர் CS அமுதன் தான் இயக்கிய 'தமிழ்ப் படம்' மூலம்  மூலம் தென்னிந்தியத் திரைத்துறையில் ஒரு புதிய போக்கை உருவாக்கினார். அவர் இப்போது  “ரத்தம்” படம் மூலம் முற்றிலும் புதிய களத்தில் அடியெடுத்து வைக்கிறார், இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.



Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


“ரத்தம்”   படத்தின்  40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022 கோடை கால வெளியீடாக இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.



முழு ஊரடங்கு:  பலத்த போலீஸ் பாதுகாப்பு! 



கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று போடப்பட்டு இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  காரணமாக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், ஆவடி கமி‌ஷனர் சந்தீப் ராய்ரத்தோர், தாம்பரம் கமி‌ஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

சென்னை மாநகர பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. இதேபோன்று ஆவடி, தாம்பரம், போலீஸ் கமி‌ஷன் ரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 493 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வாகனங்களில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின்போது உரிய காரணங்கள் இன்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

இன்று முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் பல இடங்களில் நேற்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் களை கட்டி காணப்பட்டன. இன்று காலையில் சென்னை மாநகர் முழுவதுமே திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று உள்ளன. இந்த திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த அளவிலேயே பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாரும், அதிகாரிகளும், மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தனர்.

இந்த திருமணங்களுக்கு செல்வதற்காக பலர் அழைப்பிதழ்களுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். அதுபோன்று திருமணத்திற்கு சென்றவர்களை அழைப்பிதழை காட்டி விட்டு செல்லுமாறு போலீசார் கூறினார்கள். இதன்படி இன்று முழு ஊரடங்கு நாளிலும் சிலர் சாலைகளில் அழைப்பிதழை காட்டி பொதுமக்கள் பயணம் செய்ததையும் காண முடிந்தது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். அப்போது தேவையின்றி வெளியில் சுற்றியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பல இடங்களில் முக்கிய சாலைகள் முழுமையாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு இருந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகன ஓட்டிகளும் சில கிலோ மீட்டர் சுற்றியே செல்ல முடிந்தது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இன்று சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாலங்கள் நேற்று இரவு 10 மணியில் இருந்தே மூடப்பட்டு இருந்தது.

இன்று முழுவதும் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்பட்டு இருக்கும். முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு நாளை காலையில்தான் பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகள் திறக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 இந்த மாத உங்கள் ராசி பலன்கள்!



இன்றைய ராசி மேஷம்
மேஷம்

தடுமாற்றம் அகன்று தனவரவு கூடும் நாள். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.




இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்

அதிகாலையிலேயே அருகில் இருப்பவர்களால் தொல்லை ஏற்படும் நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். இடமாற்றச்சிந்தனை உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.


இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.



இன்றைய ராசி கடகம்
  கடகம்


குடும்பப் பொறுப்புகள் கூடும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.



இன்றைய ராசி சிம்மம்
 சிம்மம்


வரவு திருப்தி தரும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சி தரும்.




இன்றைய ராசி கன்னி
  கன்னி

சச்சரவுகள் தீர்ந்து சமாதானம் அடையும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் உதவி உண்டு.



இன்றைய ராசி துலாம்
 துலாம்


ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

இன்றைய ராசி விருச்சகம்
விருச்சகம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பொருள் வரவு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.



இன்றைய ராசி தனுசு
   தனுசு


குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.



இன்றைய ராசி மகரம்
  மகரம்

எண்ணங்கள் எளிதில் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்ப்பர். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.


இன்றைய ராசி கும்பம்
 கும்பம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.



இன்றைய ராசி மீனம்
  மீனம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகள் அகலும்.




Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.