மே 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,  நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” 




டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை,  விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.  வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன்  உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில்,  சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்  நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ்  நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது,  இந்த பரபரப்பான சீரிஸை  விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள். 

HIT LIST- திரை விமர்சனம் 




இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி உள்ளனர். விஜய் கனிஷ்காவுடன் இணைந்து சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நினைத்து அசைவம் கூட சாப்பிடாமல் ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்ந்து வரும் ஹீரோ விஜய் கனிஷ்கா குடும்பத்தில் அவரது  அம்மாவையும் சகோதரியையும் ஒரு மாஸ்க் மேன் கடத்திக் செல்கிறான்.

கடத்தப்பட்ட இருவரையும் வைத்து ஹீரோவை பிளாக்மெயில் செய்து இரண்டு கொலைகளை செய்ய வைக்கிறான். அந்த கொலைகளை விசாரிக்க சரத்குமார் போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார். அந்த மாஸ்க் மேன் யார்? சரத்குமார் புலனாய்வில் சிக்கினானா? அம்மா, தங்கையை காப்பாற்றினாரா? ஹீரோ என்பதே கதை.... 

புதிய ஹீரோ போல தெரியாமல் தனது முழு நடிப்பின் திறமையையும் வெளிபடுத்தியுள்ளார் விஜய் கனிஷ்கா. சண்டைக்காட்சி படத்திற்கு பலம். சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய  படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 

கெளதம் மேனன், அபி நக்‌ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். நீட், கொரோனா கால நிகழ்வை பற்றி கதை அமைந்திருக்கிறது. படத்தின் உச்சகட்ட ட்விஸ்டே முகமுடி அணிந்து வரும் மாஸ்க் மேன் யார்? என்பது தான்.

இசையிலும், மாஸ்க் மேன் உடல் அசைவு மற்றும் குரலிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.....

மொத்தத்தில் இந்த 'ஹிட் லிஸ்ட்'  அதிரடி டிவிஸ்ட்.....   

RATING: 3/5


“நம்பிக்கையின் சித்திரம்” என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை!

 


சென்னை: 

தமிழ்நாட்டின் முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் குழுமத்தின் ஒரு அங்கமான காவேரி மருத்துவமனை – ஆழ்வார்பேட்டை, “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற ஒரு ஓவிய கண்காட்சி நிகழ்வை தொடங்கியிருக்கிறது.  ஓவியம் / கலையின் வழியாக சிறுநீர் பையில் தோன்றுகின்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதே இந்நடவடிக்கையின்  நோக்கமாகும்.  இந்த ஓவிய கண்காட்சி நிகழ்வை மெர்க் ஸ்பெஷாலிட்டி பிரைவேட் லிமிடெட் – ன் ஒத்துழைப்போடு காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. 

யூரினரி ஃப்ளோரசன்ட் ஃப்ளோ சைட்டோமெட்ரி (UFFC) என அழைக்கப்படும் ஒரு மிக சமீபத்திய தொழில்நுட்பமானது, சிறுநீர் பையில் உருவாகும் புற்றுநோயை கண்டறிவதற்கு சிறப்பாக உதவுகிறது.  இந்த நவீன தொழில்நுட்பத்தினால் கிடைக்கக்கூடிய  ஆதாய அம்சங்களையும் காவேரி மருத்துவமனை வலியுறுத்தியிருக்கிறது.  சிறுநீரில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புற்று செல்களை இத்தொழில்நுட்பம் கண்டறிகிறது.  சிறுநீர் மாதிரியை சேகரிப்பது, சிறப்பு ஒளிரும் சாயங்களைக் கொண்டு செல்களில் நிறமேற்றும் முறை மற்றும் சிறுநீர் ஓட்ட சைட்டோமீட்டர் வழியாக அந்த செல்களை கடக்கச் செய்வது ஆகியவை இந்த செயல்முறையில் இடம்பெறுகின்ற பல்வேறு கட்டங்களாகும் ஒரு லேசர் ஒளிக்கற்றை வழியாக  இந்த செல்கள் செலுத்தப்படும்போது அவைகளின் பண்பியல்புகளின் அடிப்படையில், வெளிச்சத்தை அவைகள் உமிழ்கின்றன.  புற்றுசெல்கள் போன்ற இயல்புக்கு மாறான செல்களை அடையாளம் காண்பதற்கு இந்த இயந்திரம் ஒளியை அளவிடுகிறது.  புற்றுசெல்கள் பெரும்பாலும் பெரிய அளவிலும், இயல்புக்கு மாறான டிஎன்ஏ உள்ளடக்கத்தையும், குறிப்பிட்ட மேற்பரப்பு குறிப்பாண்களையும் கொண்டிருக்கின்றன.  சிறுநீரில் புற்றுநோய்க்குரிய செல்கள் இருப்பதை இந்த புதிய நவீன உத்தியானது, விரைவாகவும், விரிவாகவும் மற்றும் மிக துல்லியமாகவும் கண்டறிகிறது.  இந்தியாவில் இத்தொழில்நுட்ப சாதனத்தை வெகுசில மருத்துவ மையங்களே கொண்டிருக்கின்றன.  அத்தகைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற மருத்துவமனைகளுள் ஒன்றாக இருப்பதில் காவேரி மருத்துவமனை பெருமை கொள்கிறது.  

சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, உலகளவில் காணப்படுகின்ற 11-வது மிகப்பொதுவான புற்றுநோயாகும்.  இந்திய மக்கள் தொகையில் சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, ஒரு அரிதான, வேகமாகப் பரவக்கூடிய புற்றுநோய் வகையாகும்.  GLOBOCAN 2020 தரவுப்பேழையின்படி, இந்தியாவில் கண்டறியப்படும் 17-வது மிக அதிக புற்றுநோயாக சிறுநீர்ப்பை புற்றுநோய் இருக்கிறது.  ஒவ்வொரு 100,000 நபர்களில், 3.57 என்ற அளவில் புற்றுநோய் இருப்பதாக 5 ஆண்டுகால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் இப்புற்றுநோயினால், சுமார் 11000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.  இப்புற்றுநோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் கிடைக்கக்கூடிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வும் மற்றும் தொடக்கநிலையிலேயே இதனை கண்டறிவதும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.  

“சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான முக்கியமான இடர் காரணிகளாக புகைப்பிடித்தல், வேதிப்பொருட்களுக்கு வெளிப்படுதல், குடும்பத்தில் பிறருக்கு புற்றுநோய் இருந்த வரலாறு, நாட்பட்ட சிறுநீர்பை பாதிப்பு நிலைகள் ஆகியவை இருக்கின்றன.  இந்நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது.  ஆகவே, இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிக அவசியம்.  ஓவியம் மற்றும் கலை என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.  இச்செயல்திட்டத்தின் வழியாக, தொடக்க நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து கற்பிக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.  அத்துடன், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நம்பிக்கையும், ஆதரவையும் வழங்குவது இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.  

சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை போன்ற பயனளிக்கும் பல்வேறு சிகிச்சை வழிமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதை முன்னிலைப்படுத்துவதும் இந்த ஓவியக் கண்காட்சி நிகழ்வின் நோக்கமாகும்.” என்று ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இயக்குனர் டாக்டர். A.N. வைத்தீஸ்வரன் கூறினார். 


ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சி தொடக்கவிழா நிகழ்வில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவிய நிபுணரான கலைமாமணி திரு. டிராட்ஸ்கி மருது கலந்துகொண்டு சிறப்பித்தார்.  “விழிப்புணர்வையும், சிந்தனையையும் தூண்டி உத்வேகம் அளிக்கும் திறன் ஓவியத்திற்கும், கலைக்கும் இருக்கிறது.  சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஓவியக்கலையைப் பயன்படுத்தும் இந்த பாராட்டுதலுக்குரிய முயற்சியின் ஒரு அங்கமாக பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்தின் வழியாக சமுதாயத்தில் நல்ல விழிப்புணர்வு மேலும் பரவும் என்று நான் நம்புகிறேன்.” என்று திரு. டிராட்ஸ்கி மருது தனது உரையில் குறிப்பிட்டார். 

இக்கண்காட்சி நிகழ்வில் ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் ஓவியப்படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.  சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறும் சித்திரங்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றன. 

“புற்றுநோயைக் கண்டறியவும், உயர் சிகிச்சையை வழங்கவும் தேவையான நல்ல நிபுணத்துவத்தையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் கொண்டிருக்கிறது.  பல்வேறு செயல்தளங்கள் வழியாக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை நாங்கள் தீவிர முனைப்புடன் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறோம்.  ஒவியக்கலையை ஒரு வழிமுறையாக திறம்பட பயன்படுத்தும் இந்த நேர்த்தியான முன்னெடுப்பு திட்டத்திற்காக மெர்க் நிறுவனத்தோடு ஒத்துழைப்புடன் செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். 

புற்றுநோய் குறித்தும் மற்றும் பயனளிக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தொடக்க நிலையிலேயே அதை கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு இந்த ஓவியக் கண்காட்சி போன்ற முயற்சிகள் பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

Annual Master Athletic Championship - SriLanka 2024!



இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்


வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்:


M Shenbagamoothy 


100mts - 2nd place

200mts- 3rd place

Mixed Relay - 1st


Suresh Kasinathan 


100- 3rd

200- 3rd

Mixed Relay - 1st


Jesu Esther Rani 


100- 3rd

200- 3rd

Long jump 3rd 

Mixed Relay 1st


R Pramila 


100- 2nd place 

Long jump - 2nd place 

Mixed Relay - 1st

சென்னையில் 80 வயது மூதாட்டிக்கு ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை!



சென்னை:

கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை, ரோபோடிக் உதவியுடன் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சையை துவங்கிய ஓராண்டில் 4 பேருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.

 

கடந்த ஓராண்டில் மட்டும், 4 ரோபோடிக் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டுள்ளன, தற்போது அவர்கள் 4 பேரும் நலமுடன் உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரும் ஆறு மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். முதல் நோயாளி, சென்னையைச் சேர்ந்த 80 வயதுப் பெண்மணிக்கு, வயிற்றில் புற்று நோய் பரவலுடன் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபியின் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அவர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த நிலையில் அவருக்கு மிகவும் சிக்கலான சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வெப்பமான கீமோதெரபியை வயிற்றுத் துவாரத்தில் ரோபோ உதவியுடன் உட்செலுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது, இது அதிக துல்லியமான சிகிச்சை என்பதோடு நோயாளி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.


இது குறித்து கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை, புற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராஜசுந்தரம் கூறுகையில்:

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பிறகு, சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அறுவை சிகிச்சை குறித்து மயக்க மருந்து நிபுணர்கள், புற்றுநோயியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு குழுக்கள் உட்பட பல்வேறு மருத்துவ நிபுணர்களிடையே விரிவான ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த 2வது நாள் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார் மற்றும் 6வது நாள் இங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ள வேண்டிய மீதி கீமோதெரபி சிகிச்சையானது எந்தவித சிக்கலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில்:

இந்த சிகிச்சை முடிந்த பின் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட சில மாதங்கள் ஆகும். ஏனெனில் அவர்களின் உறுப்புகள் சோர்வடைந்து காணப்படும். இந்த நிலையில் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு வழங்கும்போது மிக வேகமாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அனுராக் யாதவ் கூறுகையில்:

இந்தியாவில் 80 வயது பெண்ணுக்கு முதல் ரோபோடிக் உதவியுடன் சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அளித்த சென்னையில் உள்ள முதல் மருத்துவமனை எங்கள் மருத்துவமனையாகும். இந்த அற்புதமான சிகிச்சையின் மூலம் எங்கள் மருத்துவமனை மேலும் 4 ரோபோடிக் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. எங்கள் நோயாளிகள் வழக்கமான அறுவை சிகிச்சையை விட இந்த சிகிச்சையை விரும்புகின்றனர். இதற்கு காரணம் நோயாளி அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.


தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில்:

ரோபோடிக் அறுவை சிகிச்சையானது குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, முன்பு செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளும் இப்போது சாத்தியமாகின்றன. இதில் அதிக துல்லியம், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள், நோயாளிக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் குறைந்த அளவிலான சிக்கல்கள் மட்டுமே உள்ளன. சிக்கலான புற்றுநோயியல் செயல்முறைகள் கூட ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தி பாதுகாப்பாகச் செய்யலாம் என்பதை எங்களுக்கு இந்த அனுபவம் நிரூபிக்கிறது, இதன் விளைவாக தீவிர வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.இந்த நோயாளிகள் வழக்கமான மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் மற்றும் கடந்த ஆறு மாதங்களில் அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

70-Year-Old Patient Successfully Treated for Uncontrolled Hypertension Through Renal Denervation Therapy



Chennai:

A 70-year-old gentleman, who had been suffering from chronic high blood pressure and uncontrolled hypertension for the past six years, was successfully treated at Kauvery Hospital, Radial Road, through a procedure called renal denervation.

The patient had been battling with hypertension since 2019. Despite taking five different medicines for high blood pressure and even after increasing the dosage over a period of time, his blood pressure continued to be as high as 200/120mm Hg and the associated symptoms like frequent headaches and palpitations affected his quality of life.

With such uncontrolled hypertension posing the risk of many serious health conditions like stroke, heart attack and kidney failure, Prof Dr Ajith Pillai, Chief Cardiologist and Head of Department, recommended the latest electrically modulated renal denervation (RDN) treatment. This procedure was performed in the Cath Lab under local anesthesia, using radiofrequency ablation to control the patient’s renal nerve excitability. This effective treatment option is not only minimally invasive but also reduces nerve activity to achieve long-term stabilisation of blood pressure.

Following the procedure, the patient was discharged after 48 hours. Depending on the health status, some patients can also be discharged even within 24 hours. A month later, the patient’s blood pressure is well under control, with readings consistently in the range of 140/80mm Hg. He is free from the symptoms he experienced earlier and has been able to reduce the BP medicines significantly.

“The Heart Institute at Kauvery Hospital, Radial Road, is a tertiary centre of excellence that offers high-end care and runs an active hypertension screening and treatment program. It is one of the referral centres for RDN therapy, which would benefit patients who have uncontrolled blood pressure,” said Prof Dr Ajith Pillai.

Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, advanced Cath labs, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.

 

தொண்டை புற்று நோயாளி 22 ஆண்டுகள் கழித்தும் உயிருடன் இருக்கிறார்!





சென்னை: 

KKR ENT மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையளித்தல் மற்றும் குணமடைதல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது.  2002-ஆம் ஆண்டில், தொண்டைப் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்த நிலையில் கண்டறியப்பட்ட ஒரு நோயாளி 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் பிழைத்திருப்பது மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் ஆசிரியராக, பேசிக்கொண்டு, பணிபுரிந்துகொண்டு, ஒரு துடிப்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்.


2002-ஆம் ஆண்டில், அப்போது 27 வயதான திரு. போனடே தேஜேஸ்வர் ராவிற்கு, குரல்வளைக்குப் பின்னால் அமைந்துள்ள ஹைப்போஃபாரிங்க்ஸில் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. அவரது புற்றுநோயின் முற்றிய நிலை காரணமாக, ரேடியோதெரபி, கீமோதெரபி போன்ற பாரம்பரிய சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. டாக்டர் K.K. ராமலிங்கம், அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவுடன் இணைந்து, கேஸ்ட்ரிக் புல்-அப் உடன் டோட்டல் லாரிங்கோஃபாரிங்கோ-எசோஃபாஜெக்டமி எனப்படும் ஒரு செயல்முறையை மேற்கொண்டார். இது அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாகும்.


குரல்வளைக்குப் பின்னால் அமைந்துள்ள ஹைப்போஃபாரிங்க்ஸ், உணவுக்குழாய்க்கு உணவைக் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திரு. ராவின் புற்றுநோயின் பெரிதும் பரவியிருந்த தன்மையால் அவரது குரல்வளையை அகற்றி புதிய உணவுப்  பாதையை உருவாக்க வேண்டியிருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை இரண்டு அறுவை சிகிச்சைக் குழுக்களைக் கொண்டிருந்தது: கழுத்து, மேல் மார்புக்கென ஒரு கழுத்து அறுவை சிகிச்சை குழு; மற்றும் அடிவயிறு, கீழ் மார்புக்கென அடிவயிற்று அறுவை சிகிச்சை குழு. இச்செயல்முறை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது.


டாக்டர் K.K. ராமலிங்கம் கழுத்து மற்றும் மேல் மார்பு அறுவை சிகிச்சைக்குத் தலைமை வகிக்க, தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கௌரி சங்கர், டாக்டர். ராஜன் செந்தேசோம், டாக்டர். ராஜா சுந்தரம், டாக்டர். ஜோசப் டிரைரும் ஆகியோர் அடிவயிற்றுப் பகுதிகளைக் கையாண்டனர். இந்தப் புதுமையான அணுகுமுறை விழுங்குதல் மற்றும் சுவாசம் ஆகிய இரண்டிற்கும் உதவும் வகையில் கழுத்துப் பகுதியில் செயல்படுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட வயிற்றைப் பயன்படுத்தியது.


குறிப்பிடத்தக்க வகையில், திரு. ராவ் அறுவைசிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து, வயிறு ஒலி உற்பத்திக்கு உதவும் பேச்சு முறையான, கேஸ்ட்ரிக் குரலை வலிமையாக வளர்த்துக்கொண்டார். அவர் தனது ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பி, மாணவர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது மீண்டெழும் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து உத்வேகமளித்தார். இத்தகைய மேம்பட்ட மற்றும் சிக்கலான புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் 22 ஆண்டுகளுக்கும் மேலாக, மிக அதிக காலம் உயிர் பிழைத்திருக்கும் அவரது வாழ்க்கை தனித்துவமாகத் திகழ்கிறது.


டாக்டர் K.K. ராமலிங்கம் தென்னிந்தியாவில் இந்த அறுவை சிகிச்சை நுட்பத்தை அறிமுகப்படுத்தியது இது போன்ற சந்தர்ப்பங்களில் பல வெற்றிகரமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. அவர் கூறுகிறார், "கேஸ்ட்ரிக் புல்-அப் முறையானது, மொத்த லாரிங்கோஃபாரிங்கோ-எசோஃபாஜெக்டோமிக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு ஒரு பொதுவான மற்றும் பயனுள்ள புனரமைப்பு தெரிவாக அமைந்து, இக்கடுமையான நோயறிதல் செயல்முறையை எதிர்கொள்ளும் பலருக்கும் நம்பிக்கையையும் தரமான வாழ்க்கையையும் வழங்குகிறது. இப்பயணம் முழுவதும் நம்பிக்கையும் தைரியமும் அளித்த திரு. ராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதுமை உருவாக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மறையான உத்வேகத்துடன், மிகவும் கடினமான மருத்துவ சவால்களைக் கூட நாம் வெற்றிகொள்ள முடியும் என்பதை நிரூபித்து, இதே போன்ற யுத்தங்களை எதிர்கொள்ளும் பலருக்கும் அவரது கதை நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.”


திரு. ராவின் நீடித்த வாழ்க்கையும் தற்போதும் தொடரும் வெற்றிக் கதையும் புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றங்களையும் புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது பேச்சு, கற்பித்தல் திறன், ஒரு காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுக்களின் மிகச் சிறப்பான திறமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாகும்.


என் மனைவி சொன்ன கதையே இந்தப்படம்-  இயக்குநர் ராம் கந்தசாமி!




சென்னை:

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புஜ்ஜி திரைப்படத்தின்  திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா ஊடகங்கள் முன்னிலையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. 

விழாவில் படத்தின் இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது, "ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாகப் பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட 50 லட்சம் ஆகும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.ஒருநாள் சினிமா எடுப்பதைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது என் மனைவி ஒரு விஷயத்தைக் கூறினார் கூறினார்.

 எல்லாரும் நாயை , பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் ஆட்டை செல்லமாக வளர்ப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள் . ஆனால் அவர் பேசினார். அவர் ஆடு ஒன்று செல்லமாக இருந்ததைப் பற்றிக் கூறினார். அப்படி வளர்த்த ஆட்டை விற்று விட்டார்கள். அதைத் தேடி நான் போனேன். என்னைத் தேடி என் அப்பா அம்மா வந்தார்கள் என்று சொன்னார். இது நல்ல லைனாக இருக்கிறதே என்று அதை விரிவு படுத்தி ஒரு திரைக்கதையாக மாற்றினேன்.

பிள்ளைகளிடம் கதை பேசும்போது , ஒரு நாள் என் மகள் கேட்டாள். அந்த ஆடு மீண்டும் கிடைத்ததா இல்லையா என்று .அப்போது அவர்கள் பார்வை வேறாக இருப்பது புரிந்தது. எனவே அந்தக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையில் கதை சொல்வதாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம். முதலில் இதில் நடிப்பதாக இருந்த பெண் குழந்தை நடிக்க முடியவில்லை. எனவே ஒரு வாரம் முன்பு வரை கூட யார் நடிப்பது என்று தெரியாத நிலை இருந்தது. அப்போது தான் பிரணிதி சிவசங்கரன் நடிக்க வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. இந்தக் குழந்தை சிறப்பாக நடித்துள்ளாள். 

இரவு 12:00 மணிக்கு ஆடிஷன் பார்த்து  தூக்கக் கலக்கத்தில் ஒப்புக்கொண்டாள். இப்படி படத்திற்கு ஒருவர் ஒருவராக வந்தார்கள் .படத்தின் ஒளிப்பதிவாளர் அருண்மொழிச்சோழன் மிக வேகமாகப் பணியாற்றுபவர். அவருடைய வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .அப்படி இதில் பணியாற்றினார். நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.  அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார். 

இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஊடகங்களின் ஆதரவை நம்பி வெளியிடுகிறோம். ஆதரவு தர வேண்டும்'' என்றார். படத்தில் துர்காவாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் பேசும்போது, " எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது .எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்'' என்றார் .

படத்தில் நடித்த வைத்தீஸ்வரி பேசும் போது, 'நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தான்  இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. இதில் நான் போலீஸ் கான்ஸ்டபிலாக நடித்துள்ளேன் ''என்றார். 

இதில் கசாப்புக் கடை வைத்திருப்பவராக நடித்துள்ள வரதராஜன் பேசும் போது, " எனக்கு சினிமாவில் கனவுகள் உண்டு .நான் வில்லனாக நம்பியார் இடத்தைப் பிடிக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும். இது  நிறைவேறும் என்று நினைக்கிறேன். இது நல்ல படம். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார். 


இவ் விழாவில் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அருண்மொழிச் சோழன்,படத்தொகுப்பாளர்  சரவணன் மாதேஸ்வரன், 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வெளியிடும்  ரமேஷ் - அஞ்சலை முருகன் , படத்தில் நடித்த விஜய் கார்த்திக், கமல்குமார்,பாடலாசிரியர் கு.கார்த்திக், பாடகி பிரசாந்தினி, இயக்குநர் வேல் மாணிக்கம்,இணை இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். 

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது..

Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis




Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும்.  இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள்.

Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது!

மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  Conoor - இல்  இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. !

Multiple Sclerosis நோயினால்  பாதிக்கப்பட்ட அத்தகைய நபர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் மற்றும் தொடர்கிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, MSSI அமைப்பு, திரைப்படத்தின் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

Ms. Shreya P. Singh, IAS (Exec. Dir., TN Corporation for Development of Women, State Mission Director, National Urban Livelihoods Mission, TN. Govt.), சிறு உரை நிகழ்த்தி திரையிடலை துவக்கி வைத்தார்.



MSSI கெளரவ செயலாளர் AnnGonzalvez மற்றும் எழுத்தாளர்/இயக்குனர் Harry MacLure உடன் இருந்தனர்.

குன்னூரில் இருந்து சென்னைக்கும் (தனது மகளைச் சந்திக்க) கல்கத்தாவுக்கும் (அவரது பேத்தியைச் சந்திக்க) அமண்டா சைக்கிளில் செல்லும் நீண்ட பயணத்தை விவரிக்கிறது திரைக்கதை.

மனித இனம்  தன் வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பாடம்தான், இப்படம்!

CREDITS

Written and Directed by Harry MacLure

CAST - பிரிசில்லா கார்னர் அமண்டாவாகவும், கில்லியன் பின்டோ, மகள் சப்ரினாவாகவும், கில்லியன் வில்லியம்சன், பேத்தி  கல்கத்தா- வாகவும் நடித்துள்ளனர்.

இசை மற்றும் ஒலி வ டிவமைப்பு -கணேஷ் ராமண்ணா

ஒளிப்பதிவு & எடிட்டிங் - நிக்கோலஸ் மோசஸ்

பகலறியான்- திரைவிமர்சனம் 



ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரிக்க, வெற்றி,  அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா நடிப்பில்,  தயாரித்து எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம்  தான் 'பகலறியான்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். 

ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷயா வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அவர் தனது  தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியுடன் பயணிக்கிறார். 

மறுபக்கம் ரவுடியான முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையை தேடி அலைய, அவரின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி வைத்து, அதன் மூலம் அவரை பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒருபக்கம் எதிரிகளை சமாலித்தவாறு தங்கையை முருகன் தேடிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெற்றி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் நபரிடம் பணம் வாங்குவது இவரின் வேலை. 

பிறகு அக்‌ஷயா வுக்கு என்ன ஆனது? முருகன் தங்கையை கண்டுபிடித்தாரா? என்பதே மீதி கதை.... 

இசையமைப்பாளர் விவேக் சேரா வின் இசையில் 'நீ ராட்சசனா' பாடல் அழகாக உள்ளது.  

வசனங்கள் மூலம் துணை எழுத்தாளர் விக்னேஷ் குணசேகர் கவனம் ஈர்க்கிறார். அபிலாஷின் ஒளிப்பதிவும் விவேக் சரோவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.  காமெடி நடிகர் சாப்ளின் பாலு , மாற்றுத்திறனாளி தாதாவின் ஆலோசகராக சீரியஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் . 

சாய் தீனாவின்  போலீஸ் காமெடி காட்சி  அவருக்கு  ஒர்கவுட்  ஆகவில்லை. கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

மொத்தத்தில் இந்த பகலறியான் நல்லவன்..... 

RATING:2.6/5



சாமானியன்- திரைவிமர்சனம் 




ராகேஷ் இயக்கத்தில், நடிகர் ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாராவி, நக்க்ஷா சரண், மைம் கோபி, போஸ் வெங்கட், தீபாசங்கர், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் 'சாமானியன்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று தன்னுடைய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மேஜர் சங்கர நாராயணன் (ராமராஜன்). இவர் தத்தெடுத்து வளர்க்கும் பெண்ணான நக்க்ஷா சரண் இவர்  தன்னுடன் பணியாற்றும் லியோ சிவகுமாரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு கிராமத்திலிருந்து சென்னைக்கு இடம் மாறுதலாகி வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். 

வீட்டின் உரிமையாளர் பல்வேறு தொல்லைகளை அவர்களுக்கு கொடுக்க அவர்கள் சொந்த வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.  இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்கிறார்கள். கடன் வாங்கி, ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் மூலம் வீடு வாங்குகிறார்கள். அந்த புதிய வீட்டின் மேற்சுவர் பிஞ்சு குழந்தையின் தலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து கதறி அழுகிறார்கள். 

அந்த மோசடி ரியல் எஸ்டேட் அதிபரை நேரில் சென்று  மேற்சுவர் விழுந்ததை பற்றி நக்க்ஷா சரண் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட நக்க்ஷா சரண் தன் காலில் இருந்த செருப்பால் அடிக்கிறார். பிறகு இவர்களை நடு தெருவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற வெறியுடன் வங்கி அதிகாரியை கையில் போட்டு கொண்டு கடனை கட்ட தொடர்ந்து நெருக்கடி கொடுக்க, அவர்கள் தாங்க முடியாமல் பிஞ்சு குழந்தையுடன் வங்கிக்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். பிறகு களத்தில் இறங்கிய ராமராஜன், ராதாரவி, எம். எஸ். பாஸ்கர் இவர்களை என்ன செய்தார்கள் என்பதே மீதி கதை...... 

லியோ சிவக்குமார், திவ்யாவாக வரும் நக்‌ஷா சரண் ஆகியோரது நடிப்பு சிறப்பு. இளையராஜா இசை படத்திற்கு பலம். அருள் செல்வன் ஒளிப்பதிவில் கிராமத்தை காட்டும் காட்சிகள் எல்லாம் அருமை. எம். எஸ். பாஸ்கர், ராதாரவி போன்றோர் ராமராஜனின் நண்பர்களாக வரும் கெட்டப்பு சிறப்பு. கடன் வசூல் தொல்லையை கதை புரிய வைக்கிறது. 

ஆனால் லாஜிக் பெரிய அளவில் இல்லை.... சண்டை காட்சியிலும், பேங்க் காட்சியிலும் கூடுதல் கவனம் தேவை.

மொத்தத்தில் இந்த 'சாமானியன்'  அன்பான வெறியன்......

RATING: 3/5

Gleneagles Health City Makes History with Two Hand Transplants in a week!



Chennai: 

Gleneagles Health City has made history in the field of hand transplants by surgically attaching a brain-dead donor's hands to Mr. R. Karthick, a real estate consultant from Chennai. Karthick, now aged 31, lost both his hands a year ago when, while attending a funeral, the firework celebrations caused irreparable damage to his hands. He sought medical help in Chennai, where doctors at another hospital recommended amputation. After struggling for nearly a year without hands, Karthick received a new pair a few days ago from a donor who had met with an untimely road traffic accident.

Another patient, Mr. M. Buvan from Thanjavur , around 22 years old and the son of an auto driver, lost his dominant right hand while operating a machine. He is now the recipient of a hand from a female donor who was declared brain-dead due to a brain hemorrhage. Bilateral Hand Transplant for R Karthick was Performed on April 21st 2024 and Unilateral Hand Transplant for Mr Bhuvan was performed on 2nd May 2024.

Dr. Selva Seetha Raman, HoD & Senior Consultant, who led the team spoke on the success of the bilateral hand transplant saying, "For the bilateral hand transplant, it was a huge challenge for us. As Karthick's hands were amputated, it took nearly 20 hours to reconstruct his hands. Thankfully, the donor's hands were flown in from Trichy, and we received them in time for surgery. We had a team of 18 doctors, including Plastic Surgeons, Orthopedicians, Anesthetists, Nephrologists, and Intensivists, who took up this challenge."


"In the case of Buvan, it was a unilateral hand, and the challenge we faced was that we got the hand of a female donor from Erode.  Although the number of hours spent on surgery was comparably lesser than for Karthick, the team of doctors, consisting of 16 specialists, including Plastic Surgeons, Orthopedicians, Anesthetists, Nephrologists, and Intensivists, successfully completed the procedure," Dr. Selva Seetha Raman pointed out.

"Overall, both surgeries have been a success, with Karthick being discharged last week and Buvan scheduled to be discharged next week," added, Dr Selva Seetha Raman

"We are grateful to Transplant Authority of Tamil Nadu (TRANSTAN) for their unwavering support in successfully performing two hand transplants at our hospital in two consecutive weeks. We appreciate their dedication to educating the public and promoting the importance of organ donation. This awareness has been instrumental in saving countless lives, said Dr. K. Nagesh Rao, CEO, Gleneagles HealthCity Chennai. 

The history that Gleneagles Health City has created in this domain of hand transplants is the back-to-back hand transplants performed within a week and we take pride in stating our team of doctors have made this possible and this is no small feat," added Dr K Nagesh Rao

Apollo Doctors Perform Transformative Keyhole Approach for Insular Brain Tumor

 


Chennai:

In a medical feat akin to landing on the moon's unexplored terrain, a team of neurosurgeons at Apollo Cancer Centres (ACCs), Chennai, India, were able to achieve what was once thought impossible - aaccessing and removing deeply seated insular brain tumor through a transformative and a novel eyebrow keyhole approach. This unprecedented technique, being the world’s first, marks an important advancement in the field of Neuro Oncology. It provides not only another alternative to remove these deep seated brain tumors but it also demonstrates clinical excellence, efficiency and safety.


The journey began with the diagnosis of a 44-year-old woman found to have an incidental tumor nestled within the delicate folds of her dominant-side insular lobe of her brain. A scan conducted following a minor trauma revealed this lesion in the intricate area known as the insula.


The insula, which is deeply embedded within the cerebral cortex, poses significant challenges for surgical intervention. It is surrounded by vital areas controlling functions such as speech and movement and is layered by a dense network of blood vessels. Traditional surgical approaches require navigating through critical brain tissue and blood vessels, risking paralysis, stroke, and language impairment. Often, patients must remain awake during surgery, adding to their distress and increasing the risk of complications such as seizures and brain bulges. Despite these risks, surgery remains the primary option.


Recognizing the daunting task ahead, especially in patients with minimal symptoms, the neurosurgical team at Apollo Cancer Centres pioneered a ground-breaking approach, stepping away from the conventional treatment plan. Leveraging their prior experience with keyhole surgeries for skull base lesions, the team developed a similar strategy to reach previously uncharted areas of the brain. This new keyhole approach via a minuscule incision in the eyebrow to the insula was born out of meticulous planning, cadaveric feasibility studies, and advanced computer simulations that promises a safer and more direct route, minimizing the potential risks involved in conventional approach.

 

Dr Hrishikesh Sarkar, Senior Consultant – Neurosurgery, Apollo Cancer Centres, “The impact of this achievement cannot be overstated. Like the historic landing of ‘Chandrayaan’ on the moon's south pole, this groundbreaking surgical approach of Apollo Cancer Centres, opens up a new frontier in neurosurgery. The eyebrow keyhole approach offers a transformative alternative to reach these deep seated tumours inside the brain, minimizing invasiveness, reducing collateral damage, and significantly enhancing patient safety and overall quality of life.”

 

Dr. Agnetia Vinoth, Consultant – Neurosurgery, Apollo Cancer Centres, said, “Faced with a profoundly intricate case, our neuro team were compelled to challenge the conventional boundaries of neurosurgery. Opting for an unconventional route, we utilized the eyebrow keyhole approach, an ‘out of the box’ technique that minimized risks and maximized safety for our patient.”

 

Dr. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprises Ltd, passionately asserted, " At Apollo Cancer Centres, our unwavering dedication to innovation has once again propelled Indian medical science onto the global stage. The recent milestone of performing the world's first transformative keyhole approach for Insular Brain Tumour is not merely a victory for our doctors, patients, or hospital alone; it is a triumph for our entire nation. This remarkable achievement vividly showcases India's ability to pioneer ground-breaking medical advancements with the potential to reshape healthcare worldwide. It stands as a testament to the exceptional medical talent within our borders, inspiring us to continually innovate, explore, and evolve in the field of healthcare."

 

The Cancer Winner said, “I am deeply thankful to Apollo Cancer Centres for making my surgery less challenging and ensuring swift recovery. The care and advanced treatment I received not only healed me but gave me hope, comfort, and a shorter return to normalcy. I thank the team of neurosurgeons for treating me with utmost care and offering me with a new lease of life.”

 

This first-of-its-kind clinical milestone by Apollo Cancer Centres demonstrates the power of innovation, collaboration, and the relentless pursuit of excellence in healthcare, cementing its status as a beacon of medical innovation and advancement on the global stage.

 

 

#WinningOverCancer

 

About Apollo Cancer Centre https://apollocancercentres.com/

THE CANCER CARE LEGACY: BREATHING HOPE INTO LIVES FOR OVER 30 YEARS

 

Cancer care today means 360-degree comprehensive care, which requires commitment, expertise, and an indomitable spirit from cancer specialists.


Apollo Cancer Centre has a network across India with over 325 oncologists to oversee the delivery of high-end precision Oncology Therapy. Our oncologists deliver world-class cancer care following an organ-based practice under competent Cancer Management Teams. This helps us in delivering exemplary treatment to the patient in an environment that has consistently delivered an international standard of clinical outcomes.


Today, people from 147 countries come to India for cancer treatment at Apollo Cancer Centre. With the first and only Pencil Beam Proton Therapy Centre in South Asia & Middle East, Apollo Cancer Centre

இங்க நான் தான் கிங்கு- விமர்சனம் 



தயாரிப்பு - கோபுரம் பிலிம்ஸ்

இயக்கம் - ஆனந்த் நாராயணன்

இசை - டி இமான்

நடிப்பு - சந்தானம், பிரியலயா, தம்பி ராமையா

வெளியான தேதி - 17 மே 2024

நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 


வெற்றிவேல் (சந்தானம்) திருமணமாகாத முதிர்கண்ணன். சொந்த வீடில்லாத காரணம் திருமணத்திற்கு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்த வீடும் வாங்கி ரெடியாக இருக்கிறார். கல்யாண ஆசை முற்றிப் போய் மேர்ட்ரிமோனியல் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்து தனக்குப் பெண் தேடுகிறார். 

அவருக்கு தேவை எல்லாம் வீட்டுக்கு வாங்கிய கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையுடன் ஒரு பெண். எனவே தரகர் ஒரு ஜமீன் குடும்பத்தில் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கு கிடைக்கும் ராஜ வரவேற்பு, ஜமீன் பங்களா அனைத்தையும் பார்த்து மயங்கும் சந்தானத்தை, மயக்கம் தெளிவதற்குள் தன் மகள் தேன்மொழிக்கு (ப்ரியாலயா) கல்யாணம் செய்து வைக்கிறார் பெரிய ஜமீன் விஜயகுமார் (தம்பி ராமையா). 


திருமணத்திற்கு பின்பு, ஜமீனுக்கு பத்து கோடி கடன் இருப்பதும், ஊர்க்காரர்கள் சார்ந்து மகளுக்கு மணமுடித்து வைத்தால் சொத்து எல்லாவற்றையும் கடன்காரர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஜமீன் செய்த மாஸ்டர் ப்ளானும் வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன் பின் மனைவியுடன் சேர்த்து மாமனாரையும், மச்சானான சின்ன ஜமீனையும் (பால சரவணன்) பார்த்துக் கொள்ளும் பாரமும் சேர்ந்து கொள்கிறது. 

அவர்களை சென்னைக்கு அழைத்து வருகிறார். இதே வேளையில் சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்க தீவிரவாத கும்பலும் சென்னை வருகிறது. கடனை எப்படி கட்டுவது என முழி பிதுங்கும் சந்தானத்திற்கு 50 லட்சம் கிடைக்க ஒரு வாய்ப்பு அமைகிறது.  பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை.... 

கொஞ்சம் காதல், நிறைய காமெடி என காமெடியில் கிங்குதான் என நிரூபித்திருக்கிறார் சந்தானம். பால சரவணனின் வண்டியில் வழி சொல்லும் ஒரு காமெடி பிரமாதம். அறிமுக நடிகையான ப்ரியாலயா தனது வேலையை செய்திருக்கிறார். விவேக் பிரசன்னாவிற்கு நல்லதொரு கதாபாத்திரம்.   இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

தீவிரவாதி வெடிகுண்டு காட்சி மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்..... 

மொத்தத்தில் 'இங்க நான் தான் கிங்கு' சிரிப்பு அலை.....

RATING: 3.8/5



12 வயது சிறுவனின் முதல் இசை நிகழ்ச்சி!  




சென்னை:

மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் 12 வயதான அபினவ் விஸ்வநாதனின் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் கே.கே நகரில் உள்ள PSBB மேல் நிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இசை மேல் உள்ள ஆர்வத்தால் இசைக் கலைஞர் திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம்  இசை பயின்று தற்போது முதல் அரங்கேற்றத்தை கோவிலில் தொடங்கியுள்ளார். சிறுவன் அபினவ் விஸ்வநாதனுடன்  முன்னணி  தவில் வித்துவான் திரு.கே. சேகர் அவர்கள் பக்க வாத்தியம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறுவனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு ஊக்குவித்தனர் .  

சிறுவனின் பெற்றோர்கள் திரு. விஸ்வநாதன் மற்றும் திருமதி. காயத்ரி  விஸ்வநாதன் கூறுகையில்:  

முதலில் கடவுளுக்கு நன்றி. எங்களது மகன் அபினவ் இசையில் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முறையான பயிற்சி பெற திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பினோம். அவர்கள் நன்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இது எங்கள் மகனின் முதல் இசை நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.  தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஊக்குவித்து பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என இருவரும் கூறினர்.         



சினிமா உலகம் யாரையும் மதிக்காது- நடிகர் கருணாஸ்



சென்னை:

Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை".  விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்…


தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. 

நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன் ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். 12த் பெயில் படம் பார்த்த போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக்கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.  


இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது.. 

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன் அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. 



கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசியதாவது...

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி  பேசியதாவது.. 

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகு தூரமில்லை கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார் அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி 


இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது.. 

போகுமிடம் வெகு தூரமில்லை தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர், விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை அது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர்  சொல்லும் படமாக இருக்கும். ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.  அவருக்கும் என் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி. 





நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது.. 

ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்தப்படத்திற்கு என்னை அழைத்தது கோகுல் தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன்,  இரண்டே கேரக்டர் தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன், அடுத்த படத்தில் மறந்து விடாதீர்கள். தயாரிப்பாளர் தமிழ் தெரியவில்லை என்றார் தமிழில் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப்படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


நடிகர் அருள் தாஸ் பேசியதாவது.. 

இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது, ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால் அந்த ஜானரில் அருமையாக  இந்தப்படத்தை  எடுத்துள்ளார்கள். படம் மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.  



இயக்குநர் தினகரன் பேசியதாவது...

மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப்படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி. 



கவிஞர் சினேகன் பேசியதாவது.. 

கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும் தான் நான் வந்தேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின்  தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில்  போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு,  ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நன்றி. 


இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது.. 

தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் விட்டிலருகே தான் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப்படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும் வாழ்த்துக்கள். 


தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது… 

இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத படி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.


இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசியதாவது.. 

இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை  சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம்,  தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி. 



நடிகர் கருணாஸ் பேசியதாவது.. 

இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை.  சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது  நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.   




நடிகர் விமல் பேசியதாவது.. 

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.  தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய  இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம்.  எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். 




தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.


இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


தொழில்நுட்ப வல்லுநர்கள்:


இயக்குநர்: மைக்கேல் K ராஜா

தயாரிப்பாளர்: சிவா கில்லாரி (Shark 9 pictures)

இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

தொகுப்பாளர்: M.தியாகராஜன்

கலை இயக்குநர்: சுரேந்தர்

ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்

நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்

நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.