Articles by "உலகம்"

உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!



இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வகித்து வருகின்றது. இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை சிலர் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெட்ரோலுடன் கூட்டத்துக்குள் புகுந்த ஒருவர், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சித்துள்ளார். இதில், 6 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த நபர், பாலஸ்தீனத்தை மீட்போம் என்று கோஷமிட்டபடி அங்கிருந்து சென்ற நிலையில், அவரை அமெரிக்க காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

பேரணி சென்றவர்கள் மீது தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் முகமது சப்ரி சோலிமான் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீபர் மில்லர் வெளியிட்ட பதிவில்,

”கொலராடோவின் போல்டரில் சட்டவிரோத வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகத்தால் அவருக்கு சுற்றுலா விசா வழங்கப்பட்டது, விசா முடிவடைந்த பிறகும் சட்டவிரோதமாக அவர் தங்கியுள்ளார். மேலும், அவருக்கு பணி விசாவை பைடன் நிர்வாகம் வழங்கியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம்!


அதிநவீன மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா, செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதுமையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம் நியூராலிங்க். 

மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதே நியூராலிங்கின் நோக்கம்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், விரல்களை கொண்டு ஸ்மார்ட்ஃபோனை இயக்குபவரை விட வேகமாக ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க நியூராலிங்கின் முதல் தயாரிப்பு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட பரபரவென பற்றிக் கொண்டது அறிவியல் உலகம்.

அப்படி என்ன தயாரிப்பு அது? என்று ஆவலோடு கேட்போருக்கு நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் விடை இருக்கிறது. பேஜர் என்ற குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

வீடியோ கேமில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் ஒவ்வொரு முறை சேர்க்கும்போதும் குரங்கிற்கு ஒரு குழாய் மூலம் வாழைப்பழக் கூழ் கொடுக்கப்படுகிறது. அதனை சுவைத்துக் கொண்டே குரங்கு ஜாய்ஸ்டிக்கை அசைத்து விளையாட்டை தொடர்கிறது. ஜாய்ஸ்டிக் மூலம் பந்தை சரியாக ஆரஞ்சுப் பெட்டியில் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் உருவாகும் அலைகள், சிப் மூலமாக கணிணிக்கு கடத்தப்படுகின்றன.

ஜாய் ஸ்டிக்கை அசைக்க குரங்கின் மூளை இட்ட கட்டளையை ஒரு கணிணி ப்ரோகிராமாக மாற்றி சிப்பில் பதிய வைக்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது ஜாய் ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என்று குரங்கு நினைத்தவுடன் ஜாய் ஸ்டிக் இல்லாமலே வீடியோ கேம் விளையாட்டு வேகமாக நடக்கிறது.

குரங்கின் மூளை இட்ட கட்டளை வயர்லெஸ் தொடர்பு மூலமாக நேரடியாக கணிணிக்கு கடத்தப்படுவதால் விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. சரி இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்று கேட்டால், எலான் மஸ்க் சொன்ன அதே விளக்கம் தான் பதில். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி விட்டால் அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்ஃபோன் இயங்கத் தொடங்கும். இதேபோல செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஒருவரின் மூளையுடன் அவரது கையை இணைத்து விட்டால் மூளை சொல்லும் கட்டளைக்கு ஏற்ப கை தானாக இயங்கும்.

இவையெல்லாம் தாண்டி மனித நினைவுகளை காப்பி எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கவும் முடியும் என்றெல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் நியூராலிங்க் குழுவினர். 

கண்ணுக்குத் தெரியாத ஒற்றை சிப்பின் மூலம் மனித வாழ்க்கை ஆளப்படும் காலம் விரைவில் வரலாம் என முன்னோட்டம் காட்டியிருக்கிறது நியூராலிங்கின் புதிய தயாரிப்பு.




கோடியை தொட்டது கொரோனா தொற்று! 


சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 


கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.80 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20.97 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.55 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.11 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 


 டிரம்ப்  எதிராக  தீர்மானம்  நிறைவேற்றம் !


வாஷிங்டன்:

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக 2வது முறையாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 197 பேர் ஓட்டு போட்டனர்.அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரு அதிபருக்கு எதிராக 2வது முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ள, கேப்பிடோஸ் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று, டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர். மொத்தம் 232 பேரில், 187 பேர் டிரம்ப்பிற்கு எதிராக ஓட்டளித்தனர்.

பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், செனட் சபை 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள்(ஜன.,20) ல் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

அதற்கு பிறகு, செனட் சபை, இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்கலாம் என தெரிகிறது.


மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்!

இம்பால்: 

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இரவு 7:27 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின சேத விவரம் இன்னும் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


மிதக்கும் சினிமா தியேட்டர் விரைவில்! 



பாரிஸ்: 


சமூக தொலைதூர படகுகளில் இருந்து மக்கள் பார்க்கக்கூடிய ஒரு மிதக்கும் திரைப்பட தியேட்டர் வரும் 18 ம் தேதி பாரிஸில் உள்ள சீன் நதிக்கு வருகிறது.


பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்ற நிகழ்ச்சிகொண்டாடப்படும். பாரிசில் உள்ள புகழ்பெற்ற சீன் ஆற்றின் நடுவே தற்காலிக கடற்கரை உருவாக்கப்பட்டு கொண்டாடப்படும். இந்தாண்டு பிளேஜஸ் நிகழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்ஒரு பகுதியாக சீன் ஆற்றின் நடுவில் மிதக்கும் தியேட்டர் ஒன்று வரும் 18 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு சுர் எல் யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் தண்ணீரில்சினிமா என்பதாகும்.

மிதக்கும் தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்காக 38 மின்சார படகுகள் தயாராக உள்ளன. சமூக இடைவெளி நடைமுறை பின்பற்றி ஒவ்வொரு படகிலும் இரண்டு முதல் 6 பேர்வரை அமர்ந்து திரைப்படத்தை ரசிக்கலாம்.


கொரோனா தொற்று பற்றிய கொரோனா ஸ்டோரி என்ற குறும்படமும், இரண்டாவது படமாக நீச்சல் அணியை துவங்கும் ஆண்கள் குழுவை பற்றிய2018 ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான லு, கிராண்ட் பெயின் என்ற படமும் திரையிடப்படுகிறது. உள்ளூர் வாசிகளுக்கு வரும் செவ்வாய்கிழமை(13ம் தேதி ) முதல் 15ம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது.


பிரான்சில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.





Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.