நவம்பர் 2021

 சபரிமலை பூஜை நேரம்! 



Tomorrow's (30.11.2021) ceremonies at Sabarimala ...

 4am.... Holy Thirunada opening

 4.05 am..... Abhishekam

 4.30 am.... Ganapathi Homam

 Ghee Abhishekam from 5 to 7 am

 Usha Pooja at 7.30 am

 Udayasthamana Puja from 8 am to 9am

 11.30 am 25 Kalashabhishekam

 Following Kalabhabhishekam

 Noon Pooja at 12 noon

 Closing the thirunada  at 1 p.m.

 The temple will again open at 4 p.m.

 6.30pm.... Deeparadhana

 7 pm ..... Padi Pooja

 9 pm .... Night Pooja

 Harivarasanam will be sung at 9.50 pm and the  Thirunada will be closed at 10 pm

 அஜினோமோட்டோ உடலுக்கு நல்லது!


அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் திரு. இஷிகவா- கட்சுயுகி மற்றும் இந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ் கூறுகையில்: 

எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி பற்றி பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த சுவையூட்டியில் பலவிதமான புரதச் சத்துக்கள் இடம் பெற்றுள்ளன என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பொதுவாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் இயற்கையாகவே பல்வேறு சுவைகள் அடங்கியுள்ளன. இது தான் குளுட்டாமேட் ஆகும். நாம் சமைக்கும் பல்வேறு பதார்த்தங்களில், மோனோ சோடியம் குளுட்டாமேட்டை (எம்.எஸ்.ஜி.) சேர்க்கும்போது சுவை அதிகரிப்பதுடன் பல்வேறு புரதச்சத்துகளும் நமக்கு கிடைக்கிறது. இந்த சுவையூட்டியை சேர்ப்பதால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. குறிப்பாக, மோனோ சோடியம் குளுட்டாமேட்டில் தாய்ப்பாலில் அடங்கியுள்ள அனைத்து புரதச்சத்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாம், வீட்டில் ரசம் செய்யும்போது அதில் தக்காளியை சேர்க்கிறோம். அப்போது ரசத்தின் சுவை எப்படி அதிகரிக்கிறதோ அதே போன்று தான் எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை சேர்க்கும் ஒவ்வொரு சமையல் பதார்த்தத்திற்கும் அதிக சுவை கிடைக்கிறது. இந்த சுவையூட்டியை, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கிக்குனே இக்கிடா என்பவர் 1909-ஆம் ஆண்டு கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளுட்டாமேட் வாயிலாக கிடைக்கும் இந்த சுவைக்கு, இந்த பேராசிரியர் ‘உமாமி’ என்றும் பெயர் இட்டார்.

எவ்வித பக்கவிளைவுகளையோ, உடலுக்கு எந்தவிதமான தீமைகளையோ ஏற்படுத்தாத இந்த மோனோசோடியம் குளுட்டாமேட் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, கரும்பில் இருந்துதான் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பு, ஆலைகளில் இடப்பட்டு சாராக பிழியப்படுகிறது. அந்த கரும்புச் சார், நொதிக்க வைக்கப்பட்டு, எவ்வாறு பாலிலிருந்து தயிர் உருவாக்கப்படுகிறதோ அதேபோன்று பதப்படுத்தப்படுகிறது. 

அவ்வாறு கிடைக்கும் திரவம் குளுட்டாமிக் ஆசிட் என்று அழைக்கப்படுகிறது. பின்பு, குளுட்டாமிக் ஆசிட் பதனப்படுத்தப்பட்டு மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற திடப்பொருளாக மாற்றப்படுகிறது. பின்பு, வெப்ப மற்றும் குளிர் காற்று மூலம் உலர வைக்கப்பட்டு சிறிய, சிறிய பொடிகளாக (சர்க்கரை போன்று) செய்து, பாக்கெட்டுகளில் இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

இவ்வாறு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோசோடியம் குளுட்டாமேட் 100 சதவீத சைவ உணவுப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சுவையூட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஜப்பானில் பல ஆண்டுகளாக பயன்படுத்தபட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் 1964-ம் ஆண்டிலும், இந்தியாவில் 2003-ம் ஆண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில், துவக்கத்தில், பெரிய ஹோட்டல்கள், தொழிற்சாலைகளிலுள்ள சமையல் கூடங்கள் போன்றவற்றில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, பின்பு படிப்படியாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சில்லரையில் விற்பனை செய்யப்பட்டது. 

மோனோசோடியம் குளுட்டாமேட் என்பது இதன் பண்பு பெயர். இன்று உலகளவில் அஜினோமோட்டோ, விவன் மற்றும் விவான் உள்ளிட்ட ஒரு சில அமைப்பு சார்ந்த நிறுவனங்களே இதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீத பங்களிப்பை, அமைப்புசாராத சீன நிறுவனங்களே அளித்து வருகின்றன. 

பல ஆண்டுகள் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சுவையூட்டிக்கு கடந்த 2010-ம் ஆண்டில் பிரச்சினை ஏற்படத்தொடங்கியது. தரமற்ற சீன தயாரிப்பு மோனோசோடியம் குளுட்டாமேட்டினால், உணவுப்பொருட்களின் தரம் குறைந்ததுடன், ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டன. இந்த நிலைப்பாட்டை சரி செய்ய, இதன் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் மிகவும் போராட வேண்டியிருந்தது. 

இதையடுத்து, உலக சுகாதார அமைப்பும் (டபிள்யூ.எச்.ஓ.) உணவு மற்றும் வேளாண் அமைப்பும் (எஃப்.ஏ.ஓ.) இணைந்து, உணவு சார்ந்த இடைநிலை பொருட்களை ஆய்வுசெய்வதற்கான ஒரு குழுவை ஏற்படுத்தி ஆய்வறிக்கை அளிக்கும்படி பணித்தன. இக்குழு, மோனோசோடியம் குளுட்டாமேட்-ஐ ஆய்வுசெய்து, இந்த உணவு இடைநிலைப்பொருளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுப்பொருள்களுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்றும், இது மிகவும் பாதுகாப்பானது என்றும் சான்று அளித்தது. இது தவிர, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பு (யு.எஸ்.எஃப்.டீ.ஏ.), ஐரோப்பிய கூட்டமைப்பின் உணவு அறிவியல் ஆய்வு குழுவும் இதன் பாதுகாப்புத்தன்மையை உறுதிசெய்தன. மேற்கண்ட அமைப்புகள் தவிர இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (எப். எஸ்.எஸ்.ஏ.ஐ), இந்த சுவையூட்டியான மோனோசோடியம் குளுட்டாமேட், உணவு பொருட்களுடன் சேர்த்து கொள்வதற்கு உகந்தது என சான்று அளித்துள்ளது. 

தற்போது, மோனோசோடியம் குளுட்டாமேட்டின் விற்பனை உலகளவில் ஆண்டுக்கு 4.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இந்த கூவையூட்டியின் விற்பனை அளவின் அடிப்படையில் ஆண்டுக்கு 10,500 மெட்ரிக் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோனோசோடியம் குளுட்டாமேட் சுவையூட்டியை, ரசம், குழம்பு, வெஜிடெபில், ஃப்ரைட் ரைஸ், முருங்கைக்காய் கறி, பொரியல், கோழி கறி, மாமிசம், மீன் உணவு வகைகள், சாஸ், சூப் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களிலும் சேர்த்துக்கொள்ளலாம். 

இந்த சுவையூட்டியால் எவ்வித தீங்கும் ஏற்படுவது இல்லை. எனவே சிறிய குழந்தைகள், கர்பிணிகள், என அனைத்து தரப்பு மக்களும், உணவு பொருட்களுடன் இதனை சேர்த்து கொள்ளலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் மிக தரமான மோனோசோடியம் குளுட்டாமேடின் விலையை விட சீன நிறுவனங்கள் தரமற்ற இதன் தயாரிப்புகளை மிக குறைந்த விலையில் விற்கின்றன. எனவே நுகர்வோர், தரமான தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.



பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

–– ADVERTISEMENT ––
அவ்வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவாரூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை தகவல்.


'வனம்' திரைப்படத்தின் விமர்சனம் 


புதிதாகத் தொடங்கப்படும் நுண்கலைக் கல்லூரி ஒன்றின் விடுதியில் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர் அங்குள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதன் பிறகு கல்லூரி தொடங்கப்பட்டதும் அங்கு முதலாம் ஆண்டு மாணவராகச் சேர்கிறார் மகிழ் (வெற்றி). அந்தக் கல்லூரியைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்க அங்கு வருகிறார் ஜாஸ்மின் (ஸ்மிருதி வெங்கட்).

இந்தச் சூழலில் அந்த பெயிண்டர் இறந்த அதே அறையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களை ஆராயத் தொடங்கும் வெற்றி மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவருக்கும் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் பின்புலம் தெரியவருகிறது.

1960-களில் அந்த ஊரில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி, அவர் பெண்களுக்குச் செய்யும் சித்ரவதை, காட்டில் வாழும் பழங்குடி மக்களின் தலைவியாக வரும் அனுசித்தாரா உள்ளிட்ட தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். அந்த மர்ம மரணங்களை அவர்களால் தடுக்க முடிந்ததா? என்பதே ‘வனம்’ படத்தின் கதை.

வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.

புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. 

வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது. ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது. 

வனம்... திகில் கலந்த செய்தி

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் கலர்ஸ் தமிழின் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2’


தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, இந்த வார இறுதியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்களை உங்களுக்காக வழங்கவிருக்கிறதுஇந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்

பவர்டு பை நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்டு புரோவரும் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த அணிகள் போட்டியிடுவதை பார்த்து ரசியுங்கள்

இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும்இதில் 6அணிகள் அதாவது 12 போட்டியாளர்கள் நேரடியாக மோத உள்ளனர்ஒவ்வொரு அணியும் தங்களுக்கு பிடித்தமான தனித்துவமான ஆடைகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடனமாட உள்ளதுஇதில் தொடக்கமாக அய்ஷு-அல்ஹேனா பாரம்பரிய உடையுடனும்அவர்களுக்கு போட்டியாக சாண்டி நந்திகா நவநாகரீக ஆடைகளுடன் களம் இறங்க உள்ளனர்இதில் நடிகர் ஷாம் அணியும்நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனஅதனைத் தொடர்ந்து ராய்சன்-மெர்சினா மற்றும் நாவல்-அலிஷாவும் அவர்களைத் தொடர்ந்து அபிராமி அணியை சேர்ந்த அபிராஜ்-அஞ்சனா மற்றும் ஸ்ரீதர் அணியை சேர்ந்த காவ்யா-மகாலட்சுமி ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்இவர்களுடன் வித்தியாசமான மையக் கருவுடன் ஜூட்-ரக்ஷனாவும்கபாலி ரஜினி மற்றும் பாட்ஷா ரஜினி போல இனியாவின் அணியை சேர்ந்த பிருத்வி-தியான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்இவை அனைத்தும் ரசிகர்களின் காட்சிக்கு விருந்தாக அமைய உள்ளன.


மேலும் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தம்கபாலி படத்தில் நடிகர் ரஜினி நடந்து வந்து பேசும் ஒரு வசனத்தை அதேபோல் பேசி நடித்துக் காட்ட இருக்கிறார்நடிகை குஷ்பூ மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தாவை நடுவர்களாக கொண்டிருக்கும் உங்கள் மனம் கவர்ந்த டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 – ல் இதுபோன்ற ஏராளமான வித்தியாசமான நடனங்களுடன் இந்த வாரம் மிகவும் மறக்க முடியாத வாரமாக இருக்கும்இந்த வாரம் எந்த அணி வெற்றி பெறப் போகிறது திறமைமிக்க அவர்களின் நடிப்பில் யார் பிரகாசிக்க போகிறார்கள் என்பதை  பார்க்க வரும் நவம்பர் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்;  நிகழ்ச்சியை பார்த்து உற்சாகம் அடையுங்கள்.


 அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண  VOOT –  டியூன் செய்யலாம்.

 

'மாநாடு'  திரை விமர்சனம்


தன் நண்பனின் திருமணத்தை நடத்தி வைக்க துபாயில் இருந்து கோயம்புத்தூருக்கு வருகிறார் அப்துல் காலிக்(சிம்பு). நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும்போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதல்வரை கொலை செய்ய வேண்டும் என்று காவல் துறை அதிகாரியான தனுஷ்கோடி(எஸ்.ஜே.சூர்யா)தெரிவிக்கிறார். அவர் பேச்சை கேட்டு அப்துல் காலிக்கும் முதல்வரை கொன்று விடுகிறார். 

அப்பொழுது கண் விழித்தபோது தான் அவர் இன்னும் விமானத்தில் இருப்பது அப்துல் காலிக்கிற்கு தெரிய வருகிறது. மேலும் டைம் லூப்பில் சிக்கியதும் அவருக்கு புரிகிறது. ஒரு முதல்வரின் உயிரை காப்பாற்றி, மத கலவரத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அப்துல் காலிக்.

அதற்காக அவர் எடுக்கும் முயற்சியே மீதமுள்ள படம். டைம் லூப் கதையை தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி அழாக சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தில் சிம்புவுக்கு தேவையில்லாத மாஸ் காட்சிகள் எதுவும் கிடையாது. சிம்புவின் நடிப்பு அருமை. அவருக்கும், வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே நடக்கும் ஆடு, புலி ஆட்டம் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக செல்கிறது. அதிலும் இடைவேளை நேரத்தில் வரும் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை.


யுவனின் பி.ஜி.எம். படத்திற்கு பக்க பலம். மனிதர் வேற லெவலில் வேலை செய்திருக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. படத்தில் வந்து செல்கிறார். சிம்பு தான் ஹீரோ என்றாலும் எஸ்.ஜே. சூர்யா அனைவரையும் கவர்கிறார். 

ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு. தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார். 

யுவனின் இசையில் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை விட்டு நம்மால் பிரியமுடியவில்லை. அந்த அளவிற்கு அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மாநாடு... விறுவிறுப்பு  

'ராஜவம்சம்' - திரைவிமர்சனம்!


கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சிங்கம் புலி, மனோபாலா, சதீஷ், தம்பி ராமையா, விஜய குமார், ராதாரவி, யோகி பாபு, ரேகா என மிகப்பெரிய நடிகர் பட்டாளாமே இணைந்து நடித்திருக்கும் சினிமா ராஜவம்சம். இன்று இத்திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

ஐடி துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு தொடர்புடையது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவர் அதனை கையாள வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் மிகப்பெரிய குடும்ப பின்னனி கொண்ட சசிகுமாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறது. இவ்விரண்டுக்கும் இடையே நடக்கும் காட்சிகளின் தொகுப்பாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.


யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த். கதையில் மேலும் சில திருத்தங்கள் சேர்த்திருக்கலாம்.

ராஜவம்சம்.. குடும்ப பொழுது போக்கு சினிமா!. 


ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!


இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது 'மட்டி ' (Muddy) திரைப்படம். இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.  பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது.குடும்பம், பகை,  பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

'கே ஜி.எப் ' போன்று  இப்படம் ஒரு முழு மேக்கிங் ஸ்டைல் விசையுடனான  விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும் . 'கே ஜி.எப் ' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ்  எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன் ' புகழ்  ஆர்.பி.பாலா  இப் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார். யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப் படத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,  ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும் தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.

சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் வரும் ஜீப் பந்தயப் படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். இதில் வரும் ஜீப் ரேஸ் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன.

அதனால்தான் இந்தப் படத்தின் தகுதியறிந்து அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர்களை  வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி ,தெலுங்கில் அனில் ரவி புடி,

கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார்:

இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் கபூர்,மலையாளத்தில் பகத் பாசில், உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி ,ஆசிப் அலி ,சிஜுவில்சன் என்று திரைப் பிரபலங்கள்  தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதரவுக் கரம் கொடுத்துப் படத்தை மேலே கொண்டு சென்றுள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல் பேசும்போது:

"இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்புஅனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.இதில் வரும் சாகச காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும். இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் பிகே 7கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் தருவதற்கு மறுத்து விட்டார் .ஏன் என்றால் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஓடிடியில் வெளியிடக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்தப்படத்தின் டிரைலர்கள் , மோஷன் போஸ்டர்கள் போன்றவை பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"என்கிறார்.

பல படங்களில் இடம் பெறாத  கதை நிகழ்விடங்கள் படத்தில் வருகின்றன.வாகனங்கள் செல்லாத பல இடங்களில் இதன் படப்பிடிப்பு சிரமப்பட்டு நடந்திருக்கிறது. அதற்காகப் பெரிய அளவில் திட்டமும் பயிற்சியும்  செயல் படுத்தப் பட்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மில்லியன் கணக்கில் ஹிட்டடித்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்தி வைத்துள்ளது.

"ஒரு பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்" என்று படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது. சினிமா தாகம் உள்ள இளைஞர்களின் திறமைகள் இணைந்து இப்படத்தை முழு வீச்சோடு உருவாகியிருக்கிறது .இப்படம் டிசம்பர் 10 முதல்  ஒரே நேரத்தில் 6 மொழிகளில் பேன்  இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.