மார்ச் 2021

கர்ணன் திரைப்பட இசை வெளியீட்டு விழா



தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .


கலைப்புலி S தாணு பேசியவை:

உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குனர் மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு மாரி  செல்வராஜ் போக்கி இருக்கிறார். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை. வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ  அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும்  பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.. மாரி செல்வராஜ் என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். இந்த படத்தின் கதையை ஒரு புத்தகமாக கொடுத்துள்ளார் மாரி .அதை என் பூஜை அறையில் வைத்துள்ளேன். இந்த படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி .கர்ணன் வருவான், கர்ணன் வெல்வான் வாய்மையே வெல்லும். இவ்வாறு பேசினார் .

இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியவை:

கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை  திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள் பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். இப்படி அழகான ஒரு செட் அமைத்துக் கொடுத்த ஆர்ட் டைரக்டருக்கு என் நன்றிகள்.. ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் எனக்கு 12 ஆண்டுகால பழக்கம். மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் எனக்கென்று ஒரு தனி அமைப்பில் இசை அமைத்துள்ளார். என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து தான் சார் என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார் .படம் பார்த்து முடித்தவுடன் கண்கலங்கினார். பரியேறும் பெருமாள் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற  மீடியாவும் ஒரு காரணம் . அதுபோல் கர்ணனுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை:

பரியேறும் பெருமாள் படம் பார்க்காமலேயே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ். இந்த விழாவில் அவர் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது .அவரை ரொம்ப மிஸ் பண்றேன் .இப்படத்தில் உழைத்த அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்துக்காக கிராபி பகுதிகளுக்கு சென்று நேரடியாக இசையை ரெகார்ட் செய்துள்ளோம் .இதற்கு பின் பலபேரது உழைப்புகள் இருக்கிறது. கண்டா வரச்சொல்லுங்க, தட்டான் தட்டான் போன்ற பாடல்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பை அளித்த கலைப்புலி தாணு சார் மற்றும் மாரிசெல்வராஜ் ,தனுஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் யோகிபாபு பேசியவை:

கர்ணன் படத்தில் அனைவராலும் பேசப்படக்கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் .பரியேறும் பெருமாள் படத்திலும் இதுபோன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிசெல்வராஜ் எனக்கு வாய்ப்பு அளித்தார். தனுஷ் சார் பற்றி நான் சொல்ல வேண்டும் அவர் திரைக்கு பின்னால் வேறொரு முகம் .திரைக்கு முன்னாள் கர்ணன் ஆகவே வாழ்ந்தார் .அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை ரெஜிஸா விஜயன் பேசியவை:

மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில்  ஆக்டிங் லெஜெண்ட் தனுஷ் சார், டைரக்டர் மாரி செல்வராஜ், லால் சார் போன்ற கலைஞர்களுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக ஊர் மக்களுடன் நடித்த காட்சிகள் இன்னும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது .இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.


நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பேசியவை:

இப்படத்தில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது .சந்தோஷ் நாராயணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படத்திற்கு நடனப் பயிற்சி செய்தபோது மாரி செல்வராஜ் அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.. அவர் ஆடும் ஒரு புதுவிதமான நடனத்தை கவனித்தேன்.இந்த படத்தில் பணிபுரிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. தயாரிப்பாளர் தாணு சார் அவர்களுக்கும் தனுஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றி.

நட்டி நடராஜ் அவர்கள் பேசியது:

இந்த படத்தில் வாய்ப்பளித்த கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கும் தனுஷுக்கும், மாரிசெல்வராஜ் அவர்களுக்கும் நன்றி .படம் நம் மனம் சொல்வது போல் அமையும். இப்படத்திற்காக மூன்றாவது முறையாக தனுஷ் அவர்கள் தேசிய விருது வாங்குவார்.மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார் தாணு சார். இவ்வாறு பேசினார்.

 TSUSC brings Rock School of London to Chennai 


Chennai, The Shri Ram Universal School, Chennai (TSUSC) at SPR City, in association with Southside Performing Arts Center (SPAC) brings an internationally recognized qualification in dance, arts, music and other vocational courses from The Rock School London, (RSL) to the city. Rock School offers a wide range of certifications for performers of various age groups. This will be RSL’s first ever centre in South India. 

Rock School of London (RSL) will be offering graded courses in  Music, electric, acoustic and bass guitar, drums, vocal, piano and keyboard, ukulele and classical piano. RSL is the world’s first graded exam syllabus for popular music and conducts examinations in over 45 countries. The certified courses and graded exams carry allotted UCAS (Universities & Colleges Admissions Service) points offering students the opportunity to apply for UG courses in the UK. 

 

RSL graded music exams are now available in ten different disciplines. Each course is developed with care, skill and expertise to ensure that every addition is creative, innovative and industry relevant; with the overall objective to provide access to music education for the many, not the few.

 

With Rock School, TSUSC is aiming to change the landscape of formal music education and will be the first viable alternative to traditional offerings available in Chennai for aspiring musicians. The course curriculum of the school has been designed by some of the best names in the world. Some notable alumni from The Rock School include Ed Sheeran, Jess Glynne, Albert Gold, Izzi Thomas and Hannah Macleod amongst others. 

 

Mrs. Mangala Madhavan, Principal, TSUS Chennai, said:


“The world needs people with logical skills, language skills and liberal arts for a sustained humane approach. Wholesome Education is to take along all of these without any distinction. TSUS Chennai at SPR city will walk the talk by nurturing healthy children having a positive outlook without missing out on humanity.”

 

Mr. Ritesh Khokhar, Country Manager & Director India, RSL said:


“Rock School has developed positive and progressive relationships with music providers, institutions, and aspiring musicians around the world. We take pride in delivering the most academically rigorous, industry-relevant qualifications that support the aspirations of all musicians, performers, educators and teaching institutions, and our operations in India are no different. We are happy to start our training and certification center in Chennai, as the city is well-known for its music and other art forms. We are hoping to inspire youngsters and contemporary artist to ensure they are confident and prepared for all their future endeavours.”

 

Mr. Hitesh P Kawad, Managing Director, SPR City said:


“SPR is happy to welcome Rock School to SPR City. I am sure Rock School at TSUSC will be one of the most comprehensive institutes for music with state-of-the-art infrastructure. It is heartening that within a short span after its launch, SPR City is attracting some of the biggest names in the world to come and set up their offerings in our campus”.

 

Mr. Binu James, founder of Southside Performing Arts Center ( SPAC) said "We are on a mission to foster India’s performing arts community by encouraging talent and giving everyone an opportunity to excel in their preferred form of art. At SPAC, you will get an opportunity to learn from the industry experts, connect with experienced and professional artists and collaborate with them on various projects.


‘தளபதி 65’ பட பூஜை


நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது.

இந்நிலையில், தளபதி 65 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை பூஜா ஹெக்டே, “வேறு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால், தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தளபதி 65 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டாலும், படப்பிடிப்பு தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே தொடங்கும் என கூறப்படுகிறது.

@actorvijay @sunpictures
@Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @RIAZtheboss
#Thalapathy65


தொடர் புகார்கள்: நடவடிக்கை என்ன?!  


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10 11 12 13 வார்டுகளில் ஆறு மாதத்திற்கு முன்பு பணியாற்றிய ஜெயவேலு 12 வது வார்டில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வரி கட்டுவதாக வசூல் செய்துவிட்டு வரி கட்டாமல் இவர் வார்டுகளை மாற்றியதால் பணம் கொடுத்த பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இவர் மீது வழக்கு தொடரவும் உள்ளன இவர் மீது ஆணையர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். 

தற்போது ஜெயவேலை  தன்னுடைய பினாமியாக வைத்து கொண்டு பல காரியங்களை ஆணையர் ரவிச்சந்திரன் சாதித்து கொள்கிறார் என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பில் கலெக்டராக உள்ள ஜெயவேல்  எப்படி பில்  கலெக்டர் ஆனார் என்ற விவரம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இவருக்கு பக்கபலமாக இருக்கும் ஆணையர் ரவிச்சந்திரன் மீது பல குற்றங்கள் எழுந்துள்ளது.

இவர் ஒரு கையெழுத்துக்கு 5,000 முதல் 50 ஆயிரம் வரை கையூட்டு வாங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு மறைமுக மாக வேலை செய்து வருகிறார் என்பதை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மீது  தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பார்ப்போம்.


 மை’ நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நியமனம்




பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கான உலகின் முதல் பிராண்டாக விளங்கும் ‘மை’ நிறுவனம்தனது நல்லெண்ண தூதுவராக 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவியை நியமித்துள்ளது.


 பவானி தேவி வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வாள் வீச்சு வீராங்கனையாவார்


இந்த வாள் வீச்சு போட்டியில் அவர் பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

இது குறித்து மை நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கவின்குமார் கந்தசாமி கூறுகையில்:


 “பவானி தேவி போன்ற ஒரு துடிப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீராங்கனைக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு கூட்டாளராக நாங்கள் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்அவரது ஆளுமை எங்கள் பிராண்டின் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கை முறையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒத்திருக்கிறதுமேலும் பவானி தேவி விளையாட்டு மீது வைத்துள்ள ஆர்வம்மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பு மற்றும் உடற்தகுதிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவை எங்கள் பிராண்டுடன் தொடர்புடையதுஎனவே அவரை நல்லெண்ண தூதராக நியமித்திருப்பதன் மூலம் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்த முடியும்பாதுகாப்பின் தேவை என்பது நமது வீடுகளில் இருந்தே துவங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்எனவே ஒவ்வொரு தனிநபர்அமைப்புசமூகம் மற்றும் நாடு முழுவதிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்மேலும் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்திறன் கொண்ட நமது வாழ்க்கை முறை நடைமுறைகளில் சாதகமான மாற்றத்தைக் காண்பதேஎங்களின் முக்கிய குறிக்கோளாகும் என்று தெரிவித்தார்”.

 

இது குறித்து வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கூறுகையில்:


 ‘மை’ நிறுவனத்துடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுநமது வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பதைநான் வலியுறுத்த விரும்புகிறேன்தொற்றுநோய் நமக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.மேலும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைத்துள்ளதுஇந்நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக நான் இருப்பதன் மூலம்,எங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக பாதுகாப்பை உருவாக்குவதற்கும்அதற்கான ஒப்புதல் அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்ஒரு விளையாட்டு வீராங்கனையாகஉடற்பயிற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை எங்கள் செயல்திறனுக்கான திறவுகோல் ஆகும். ‘மைமூலம்எனது முன்னுரிமை பட்டியலில் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன்மை நிறுவனத்தின்தயாரிப்புகள் அனைத்தும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலானவை ஆகும்.ஆனால் அதே நேரத்தில் அவற்றின் புதுமையான பாதுகாப்பு அம்சங்கள் மூலம்மக்கள் விரும்பும் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக அளிக்க உதவி செய்கிறதுவாழ்க்கையில்முன்னேற ஒரே வழி நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்.நாங்கள் விரும்பும் விளையாட்டைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பை எங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் எங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.

 

கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மை நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டதுஇந்நிறுவனம் இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளதுமத்திய கிழக்குஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது வினியோக வலைதளத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கி உள்ளதுஇது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறதுதொற்று காலங்களில் நாம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் முகக்கவசம்யூவி ஒன் பாக்கெட் ஸ்டெர்லைசர் என்னும் கருவ 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட யூவி ஸ்டெர்லைசர் பாக்ஸ்வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் கர்ச்சீப் போன்றவற்றை தயாரிக்கிறது.


 VIDEO HERE:

 

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.