ஜனவரி 2023

'மைக்கேல்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்..!Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’.

ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது:

“படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது:

”சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும். இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ”

நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது:

”எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். ”

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது:

”ரஞ்சித் ஜெயக்கொடி உடைய முந்தைய படங்களிலிருந்த நேர்த்தியை விட இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். சந்தீப் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர், அவருடன் நான் அடுத்த படம் பண்ணுகிறேன். படக்குழு அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். ”

இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது:

”ரஞ்சித், லோகேஷ் போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும் போது எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ”

நடிகை தீப்சிகா பேசியதாவது:

”இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் CS உடைய இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார். படம் சிறப்பாக வந்து இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை. ”

நடிகை திவ்யான்ஷா பேசியதாவது:

”எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். சாம் CS சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். ”

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது:

”எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர் தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல் படம் இப்படி உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.

சாம் CS எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர்.

இந்த படத்தில் ஒரு கேமியோ பாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார். கௌதம் சார் படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம். 

நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது:

“இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி.

மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள்.

நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.

இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். 

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

MUTHU HOSPITAL DOCTOR’S ACHIEVEMENT IN KIDNEY TRANSPLANT!
Chennai:

MUTHU Hospital Was Started In The Year 2010 At Pulianthope (North Chennai) To Cater The Near By Population. Slowly Expanded Its Facility With Involving Various Speciality Services. Gradually Expanded ICU Facilities To Round The Clock With Top Notch Expertise We Have Now Inducted ECMO Facility In Our ICU. Our Hospital Team Of Doctors Have Performed Renal Transplantation On The Patient Mr Abdul Matheen 33 Years Male He Was Refused For Transplantation Since He Was A Very High Risk Individual With Multiple Co Morbidity

1. Chronic Kidney Disease For Past 4 Years

2. Systemic Hypertension

3. Left Destroyed Lung

4. Right Heart Failure

5. Portal Hypertension With Congestive Hepatomegaly
Transplantation Was Successfully Done On 22/01/2023 Patient Has Completely Recovered During The Post Operative Period Without A Slightest Complications This Was Possible Because Of Our Team Work Both Patient And Their Family Members Are Very Happy. 

Muthu Hospital Managing Director Dr.Chokalingam

Urologist Dr. Muthurathinam

Nephrologist Dr. Senthil Kumar

Anaesthetist Dr. Praveen Nath, Dr. Ravi

ICU Head Dr. Kasi

This Kidney Transplant Was Done Successfully Because Of Entire Team Of Doctors.

VIDEO HERE:

இந்த இரண்டு த்ரில்லர் வெப் சீரிஸ்களிலும் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்!கொலைகளுக்குப் பின்னால் உள்ள மர்மத்தை பார்வையாளர்களுக்கு அவிழ்க்க வைக்கும் அர்ஜுன் ராம்பால் மற்றும் பூரப் கோஹ்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த எபிசோடுகள் கொண்ட லண்டன் நிமிடங்கள் (இந்தியில் லண்டன் ஃபைல்ஸ்)என்ற வெப் சீரிஸ்சமுதாயத்தில் மிகவும் செல்வாக்கு உள்ள ஒரு நபரின் காணாமல் போன மகளை தேடும் ஒரு துப்பறிவாளனின் கதை மற்றும் கொலை மர்மங்கள் அடங்கிய குஜராத் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களிடையே கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியை உள்ளடக்கிய தொட தொட ரகசியம் (ஹிந்தியில் கான் கேம் சீசன் 2) ஆகிய இரண்டு சுவாரசியம் கலந்த வெப் சீரிஸ்களை கலர்ஸ் தமிழில் இரவு மணிக்கு கண்டு மகிழ ஐந்து முக்கியமான விஷயங்கள்

 

1. திருப்பங்களுடன் கூடிய த்ரில்லர்கள் - பார்வையாளர்கள் எவ்வளவு அதிகமாக ஆராய முயற்சிக்கிறீர்களோஅவ்வளவு அதிகமாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். சில சிக்கலான மர்மங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் நிரப்பப்பட்ட தருணங்களை காணும் போது​​கொலை மர்மங்களை அவிழ்க்கும் த்ரில்லர் கதை ஒரு சுவாரஸ்யமான அம்சமாக இருக்கும். 

 

2. விறுவிறுப்பான எழுத்து - பொதுவாக த்ரில்லர் கதைகளில் எழுதுவது ஒரு பெரிய பலம். ஏனென்றால் எழுத்துகளை இறுதிவரை ரசிக்க ஒரு புதிரான கதை அம்சங்களை வழங்கினால் மட்டுமே பார்வையாளர்களின் இதயத்தை வெல்ல முடியும்.

 

3. மிருதுவான எடிட்டிங் – கதை முன்னேறும் போது அதிக விவரங்களை வெளிப்படுத்தாமல் சரியான அளவு சஸ்பென்ஸைப் புகுத்தி கிளைமாக்ஸை  கெடுக்காமல் கட்ஸையும் எடிட்களையும் மிக புத்திசாலித்தனமாகச் சேர்க்கிறது.

 

4. என்ன மற்றும் ஏன் கூறுகள் - கிளைமாக்ஸ் ஒரு அதிர்ச்சியூட்டும் வகையில் சுவாரஸ்யமான வெளிப்பாடுகளால் நிரம்பியுள்ளது. ஏன்என்ன போன்ற கேள்விகள் பார்வையாளர்களை  ஈர்த்து இந்த நாடகத்தின் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்க வைக்கிறது. 

 

5. ஈர்க்கக்கூடிய செயல்திறன் - இந்த வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும்  உண்மையில் பல்வேறு உணர்ச்சிகளால் நிரம்பிய மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் உறுதியான நடிப்பை வழங்கி பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளனர்.

 

எனவே 25 ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2, புதன்கிழமை வரை இரவு 9:00 மணி முதல் கலர் தமிழின் வரவிருக்கும் இணையத் தொடரின் ஒளிபரப்பில்இந்த சுவாரஸ்யமான த்ரில்லர் கதையில் மூழ்குவதற்கு தயாராகுங்கள். கண்டிப்பாக இந்த வெப்-சீரிஸ் நிச்சயமாக அனைவரின் மனதைக் கவர்வது மட்டுமில்லாமல் ஆச்சரியமான க்ளைமாக்ஸ்களுடன் பார்வையாளர்களை மிகுந்த உற்சாகப்படுத்தும்.
Calliper Brings Top Selling Quantum Electric Two Wheelers to Tamil Nadu!Calliper Green Vehicles Limited, a leading electric vehicle (EV) technology company in Tamil Nadu, has introduced three high-speed EV scooters of Quantum Energy – Elektron, Milan and Bziness, in the state. Calliper will be investing Rs. 100 crore towards setting up 150 showroom-cum-service centres in the major cities and towns in Tamil Nadu in the next six months. Dr Parasuraman PhD, Chief Scientist, M S Swaminathan Research Foundation and  Er N Elangovan, Regional Joint Director, Department of Industries and Commerce, Government of Tamil Nadu, have launched the Quantum electric two wheelers today, in the presence of Mr. Chukkapalli Ramakrishna Prasad, Managing Director, Kusalava Group of Companies & Director of Quantum Energy, and Mr. Manickam, Chairman, Calliper. Quantum Energy is a Hyderabad-based EV manufacturing company with growing market share in many Indian states. The company aims to sell 6000 Quantum EVs this year in Tamil Nadu. Its EV scooters, designed and manufactured with Korean technology, are powerful, efficient, and cost-effective. 

While Elektron and Milan, with a 1000W motor power, clocking a maximum speed of 60 km/h are ideally suited for the general public, Bziness, with a 1200W motor power, is designed as a delivery vehicle. Bziness clocks a maximum speed of 50 km/h, and is sold in different riding modes. The ex-showroom price in Tamil Nadu of Elektron & Milan is Rs. 92,888 and Jinka Bziness is Rs. 96,056 respectively. All the EVs feature advanced Lithium-ion batteries that get fully charged in 4 hours. Depending on the model, one full charge can last anywhere from 80-120 kms. The batteries are powered by a smart BMS with multilevel safety protections to make sure they are extremely safe and the scooters have good grade ability for dual riders and riding uphill. These EVs have been rigorously tested and validated for Indian road conditions. 


Quantum Energy is backed by Kusalava Group which has been in the automotive industry for the past 50 years. The company has its R&D centre at Bengaluru and manufacturing facility in Hyderabad, Telangana. Quantum is making inroads into the electric scooters market in several Indian states. Quantum EVs are already among the top selling EVs in Karnataka, Andhra Pradesh, Odisha and Maharashtra. Quantum has registered multiple design and utility patents. The company is all set to launch Plasma, powered by a 1500W motor, in March, 2024. Plasma features indigenous technology. 

In his comments, Mr. Chukkapalli Ramakrishna Prasad, Quantum Energy Limited, said:

“We are delighted to partner with Calliper, a reputed EV tech company, and introduce all our EV models in Tamil Nadu.Our focus has been on building high quality products at affordable prices. Encouraged by the overwhelming response for our vehicles, we have recently expanded our production capacity to 5000 vehicles per month. We are sure that Quantum EVs will meet the expectations of the customers of Tamil Nadu and inspire their confidence to make the shift to electric mobility swiftly. We also look forward to a long-standing association with Calliper.” 

Talking about the new product launch, Mr. Manickam, Calliper Green Vehicles, said:

“We are excited to become the authorised sales and service partner of Quantum Energy, which is revolutionising the EV market in the two wheelers segment in India with its unique design and product quality. While its existing products stand for advanced Korean technology in high-speed scooters, its soon to be launched Plasma is a great Indian innovation. What is common with both the companies, Calliper and Quantum, is our commitment to redefining green mobility in India and help the country reap rich benefits from its speedy transition to sustainable transportation.” Currently, Calliper Green Vehicles sells its own electric two wheelers: Varsha, Inventor, Innovator, Creator, Bull, Calliper EzeeGo - an e-bicycle.
'தக்ஸ்' திரைப்பட டிரெய்லரை பிரபலங்கள் வெளியிட்டனர்!
HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios  உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், 'தக்ஸ்' திரைப்பட டிரெய்லரை பிரபலங்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக தக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார். 

இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  வெளியிட்டனர். 

2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது. படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாப்பாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.  சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு  கைதேர்ந்த இயக்குனரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 


நடிகர்கள்:

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்....

தொழில் நுட்பக் குழுவினர்:

இயக்கம் : பிருந்தா 

தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் - ரியா ஷிபு

இசை : சாம் CS

ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி

புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்

எடிட்டர்: பிரவீன் ஆண்டனி

ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்

ஆடை: மாலினி கார்த்திகேயன்

நிர்வாக தயாரிப்பாளர் - யுவராஜ்

இணை இயக்குனர்: ஹரிஹரகிருஷ்ணன் ராமலிங்கம்

டிசைனர்: கபிலன்

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் - சிவா (AIM)

நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது....!
லராலும் பாராட்டப்பட்ட 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய பட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

குறும்படப் பின்னணியில் இருந்து வந்த விபிஆர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. இவர் இதற்கு முன்பு இயக்கிய 'ஓநாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றது. 

தனது புதிய படத்தின் கதைக்களம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் இந்த புதிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்றும் இயக்குநர் விபிஆர் கூறினார்.

"இப்படத்தின் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை, காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப் போதுமானதாக இருக்கும். அனைவரையும் ரசிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கலாம். 2023 கோடை விடுமுறைக் காலத்தில் இந்தத் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருக்கும் படத்தை தான் இயக்க திட்டமிட்டதாகவும் விபிஆர் கூறினார். "ஆனால் திரு.  பார்த்திபன் ஏற்கெனவே அதைச் சாதித்துவிட்டதால், நடிகர்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. புதிய படத்திற்கு, திரையில் நடிகர்கள் இல்லாவிட்டாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். இந்தப் படம் கின்னஸ் சாதனை மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்கான முயற்சியாகவும் இருக்கும்," என்று அவர் கூறினார்.

விபிஆர் படத்தொகுப்பாளராகவும் பங்களிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தேவராஜ் இந்த படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை ரெமி ஸ்டுடியோ மேற்கொள்ளவுள்ளது.  எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் சார்பாகப் பட்டாபிராமன் தயாரித்து இயக்குகிறார்.

பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா”
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர்.

ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.  தலைப்பு அறிவிப்பு போஸ்டரில்  லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க ஆட்டத்தைப் போலவே  படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசினாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சத்யா அகல, சுனில் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

50 நாட்கள் முதல் ஷெட்யூலை முடித்திருக்கும் படக்குழு, மீதமுள்ள படப்பிடிப்பை ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. KGF, KGF2 போன்ற புகழ்பெற்ற படங்களின் இசையமைப்பாளர்  திரு.ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் அவரது இசை மிகப்பெரும் பலமாக இருக்கும். 

இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளராகவும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். மீராக் வசனம் எழுத, படத்தொகுப்பை அனில் கிரிஷ் கவனிக்கிறார். இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

நடிகர்கள்: சத்யதேவ், தாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா அகல, சுனில் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குனர்: ஈஸ்வர் கார்த்திக் கூடுதல் திரைக்கதை: யுவா தயாரிப்பாளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் 

தயாரிப்பு நிறுவனம் : Padmaja Films Private Ltd மற்றும் Old Town Pictures 

இணை தயாரிப்பாளர்: சுமன் பிரசார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிரசார் பேகே 

இசை: ரவி பஸ்ரூர் 

எடிட்டர்: அனில் கிரிஷ் 

வசனங்கள்: மீராக் 

சண்டைக்காட்சிகள்: சுப்பு 

ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வினி முல்புரி, கங்காதர் பொம்மராஜு 

மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா ( AIM )

Indian Bank Financial Results!


Bank’s Global Business reached ₹10.49 lakh Cr

Operating Profit up by 24% YoY
Net profit up by 102% YoY

Key Highlights (Quarter ended Dec’22 over Dec’21)

* Net Profit up by 102% YoY at ₹1396 Cr in Dec’22 from ₹690 Cr in Dec’21
*Operating profit for Dec’22 up by 24% YoY at ₹4061 Cr from ` 3288 Cr in Dec’21
* Net Interest Income increased by 25% YoY to ₹5499 Cr in Dec’22 from ₹4395 Cr in Dec’21
*Fee based income grew by 6% YoY to ₹704 Cr in Dec’22
* Cost-to-Income Ratio stood at 43.71% in Dec’22 as against 44.75% in Dec’21
* Domestic NIM increased to 3.74% in Dec’22 from 3.03% in Dec’21
* Return on Assets (RoA) improved to 0.80% in Dec’22 as against 0.43% in Dec’21
* Return on Equity (RoE) increased to 15.21% for Dec’22 as against 8.26% in Dec’21
*Advances increased by 13% YoY to ₹451658 Cr in Dec’22 from ₹400432 Cr in Dec’21
* RAM (Retail, Agriculture & MSME) advances grew by 12% YoY to ₹262811 Cr in Dec’22 from ₹233738 Cr in Dec’21
*RAM contribution to gross domestic advances is 62%. Retail, Agri & MSME advances grew by 15%, 15% and 6% YoY respectively. Home Loan (Including mortgage) grew by 12% YoY, Auto Loan by 27% YoY and Personal Loan by 35% YoY
* Deposit increased by 6% YoY and reached to ₹597114 Cr in Dec’22
*CASA ratio stood at 40.4%
* GNPA decreased by 260 bps YoY to 6.53% in Dec’22 from 9.13%, NNPA reduced by 172 bps to 1% from 2.72% in Dec’21
* Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 810 bps YoY to 93.59% from 85.49% in Dec’21
* Capital Adequacy Ratio at 15.74%. CET-I improved by 59 bps YoY to 11.97% Tier I Capital improved by 55 bps YoY to 12.58%

Key Highlights (Quarter ended Dec’22 over Sep’22)

*Net Profit up by 14% QoQ to ₹1396 Cr in Dec’22 from ₹1225 Cr in Sep’22
*Operating profit up by 12% and stood at ₹4061 Cr in Dec’22 from ₹3629 Cr in Sep’22
*Net Interest Income grew by 17% QoQ in Dec’22 to ₹5499 Cr from ₹4684 Cr in Sep’22
* On a QoQ sequential basis, Return on Assets (RoA) improved by 9 bps to 0.80% in Dec’22 as against 0.71% in Sep’22.
*Return on Equity (RoE) stood at 15.21% in Dec’22 as against 13.83% a quarter ago
*Cost-to-Income Ratio stood at 43.71% in Dec’22 as against 44.27% in Sep’22

*Net Interest Margin (NIM) Domestic increased by 54 bps to 3.74% in Dec’22 as against 3.20% in Sep’22

Key Highlights (9M endedDec’22 Over Dec’21)

 Operating profit increased by 13% at ₹11255 Cr from ₹9979 Cr
* Net Interest Income grew by 18% to ₹14717 Cr in 9MFY23 from ₹12473 Cr in 9MFY22
* Return on Assets (RoA) increased to 0.75% in 9MFY23 from 0.62%
*Return on Equity (RoE) improved to 14.42% from 12.24% in 9MFY22
*Cost-to-Income Ratio stood at 43.35% as against 43.99% in 9MFY22
*Net Interest Margin (NIM) Domestic increased by 42 bps to 3.35% in 9MFY23 as against 2.93% in 9MFY22

Key Highlights of Business Performance as on 31 st December 2022

Business:
* Total Business recorded a YoY growth of 9% reaching the level of ₹1048772 Cr in Dec’22 as against ₹963007 Cr in Dec’21. It stood at ₹1026801 Cr in Sep’22.
* Advances grew by 13% to ₹451658 Cr in Dec’22 over ₹400432 Cr a year ago. Growth in RAM sector is recorded at 12% YoY of which Retail & Agriculture grew by 15% YoY.
*Deposits grew by 6% YoY to ₹597114 Cr in Dec’22 as compared to ₹562575 Cr during the corresponding period a year ago.
* CASA deposits recorded a YoY growth of 3% and stood at ₹241213 Cr in Dec’22. The share of CASA to deposits stood at 40.4%.
* Priority Sector portfolio stood at ₹152850 Cr in Dec’22. Priority sector advances as a percentage of ANBC stood at 45.19% as against the regulatory requirement of 40%.

Network:
*The Bank has 5770 domestic branches, out of which 1959 are Rural, 1509 are Semi-Urban, 1161 are Urban & 1141 are in Metro category. The Bank has 3 overseas branches & 1 IBU.
* The Bank has 4969 ATMs & BNAs and 10368 number of BCs.

Digital Banking:
*The Bank has established 3 Digital Banking Units (DBUs) at South Delhi, Lucknow and Karaikal.
*Transactions through ATM, BNA & Digital channels improved by 7% YoY.
*Mobile Banking users increased by 73% YoY, while its transactions increased by 85% YoY.
*UPI users and transactions increased by 19% YoY and 91% YoY respectively.

Awards & Accolades:
* Bank bagged the Best Performing Bank award in Tamil Nadu state for SHG-Bank linkage programme for FY22 from NABARD.
*Bank emerged as the winner for top improvement in the EASE 4.0 reforms index.
*Bank grabbed Financial Express award for the Best Public Sector Bank 2020-21.
*Bank was awarded the “Fastest Growing Public Sector Bank” in Banking Awards 2022 by Dalal Street Investment Journal.
*Bank was adjudged the Best Bank for servicing in MSME by FICCI CMSME.

Our Focus

Indian Bank’s vision is to foster innovation in the banking operations and offer services with technical prudence, ease of business through employee engagement and upgrade security features of the alternate delivery channels consistently.

The Bank is in a better financial health, well capitalised and the asset quality is continuously improving. Our emphasis would be on improving the low cost deposit base with focus on CASA, build a strong retail term deposits portfolio through new relationships and target a healthy and quality credit growth in the both RAM and Corporate Sector.

'அயலி' ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய கதை!S.குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அயலி’ தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. 

அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதும், இவை அனைத்தையும் தாண்டி தமிழ் செல்வி டாக்டர் ஆனாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே ஒரு படத்தின் கதையை இழுத்துச் சொல்வது என்ற தவறான இலக்கணத்தை விட்டொழித்து, ஒரு தொடருக்குத் தேவையான பாணியில் திரைக்கதை அமைத்த வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமாருக்குப் பாராட்டுகள். 

அதை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்த, ஆங்காங்கே கதைக்குள்ளாகவே காமெடியைக் கலந்தது சிறப்பு. இரண்டு கிழவிகள் இடைவிடாது சக்களத்தி சண்டை போட்டாலும் அவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் நடக்கும் அந்த நெகிழ்வான உபசரிப்பு, மாதவிடாய் ரத்தத்தை மறைப்பதற்காக தமிழ்ச்செல்வி சிவப்பு மையுடன் ஊர் முழுக்க நடந்துபோவது, ஒரு கட்டத்தில் யதார்த்தம் புரிந்து மகளுக்கு அப்பாவே ஆதரவளிப்பது எனப் பல ரசிக்கத்தகுந்த காட்சிகள் மேலும் சிறப்பு.ராம்ஜியின் ஒளிப்பதிவு அந்தக் கிராமத்தின் வெயிலையையும், அதன் மனிதர்களின் இயல்பையும் யதார்த்தம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய கதை இது. 

மொத்தத்தில் இந்த ‘அயலி’ தொடர்  சுவாரஸ்யம்....


கதையைத்தான் திருடினீர்கள்... சூப்பர் ஸ்டார்  பட்டத்தையும் திருடுவீர்களா? - பயில்வான் ரங்கநாதன்
பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது:

"இதை ஒரு  குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை ஆல்பங்கள் என்று அவர்கள் முதலில் செய்திருக்கிறார்கள். படம் எடுப்பார்கள் என்று நான் முதலில் நம்பவில்லை. பிறகு போகப் போக ஈடுபாடு ஏற்பட்டது .இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது" என்றார்.

கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது:

"முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று  நினைக்கவில்லை.நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள்  ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து  சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்." என்றார்.

படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது:

"வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன்.ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு  எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது" என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது:

"இந்த இயக்குநர்  நந்தா எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கம் .எனக்கு ஒரு பாசிட்டிவான வேடத்தை கொடுத்துள்ளார். ஒரு நாள் தான் படப்பிடிப்பு. போய் நடித்த போது திருப்தியாக இருந்தது . பனைமரத்தைப் பாராட்டிப் பேசுகிற மாதிரி ஒரு காட்சி. நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்.பனையேறிகள் அனைவரும் இன்று சிறப்பான வாழ்க்கையில் இல்லை. சிரமப்பட்டுத் தான் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது" என்றார்.

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது:

"இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத  எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி" என்றார்.


தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது:

"இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம். இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க். இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.

ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது:

"பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச்  சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது.பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும்  சொல்லப்படும் விஷயத்தாலும்  இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது" என்றார்.

டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது:

''சினிமாவில் நிறைய அவமானங்களைச் சந்தித்து தான் மேலே வர வேண்டும்.சினிமாவில் யாரிடம் ஏமாறக்கூடாது என்று யாராவது விளக்கி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சினிமாவில் ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் .அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்" என்றார்.

பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது:

இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள்  சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன். 'காவல் தெய்வம் 'படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார். நடிகர் திலகம் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல்  நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார். இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர்  நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும். பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள்.  எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான். அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை. இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள். பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது.அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள்  என்றும் சிரமப்பட்டதில்லை. பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு .அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள். நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால் .ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள். படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ?முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம். நான் எதையும் நேரடியாகப் பேசுபவன்.என்னை எப்போதும் தாக்கிப் பேசி வரும் கே .ராஜன் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில்  நலம் பெற்று வர நான்  வேண்டுகிறேன். இங்கே பேரரசு இருக்கிறார். அவர் ஒரு மேடையில் பேசினார். பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர் தான். அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால் நான் அப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்கிறேன் .இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன். நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒரு வர்தான்.அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும். இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான்.அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்? இதுவரை கதையைத் திருடினீர்கள்.இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? "என்றார்.


இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது:

"இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.பாண்டிச்சேரியில் நிறைய படப்பிடிப்பு நடக்கும் . அதை வேடிக்கை பார்த்த மக்களே விவரமாக இருப்பார்கள்.இதை நான் என் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன். பாண்டிச்சேரியில் இப்படி சினிமா எடுத்திருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இவர்களே தனியாக எந்தவிதமான முன்னனுபவமும் இல்லாமல் படம் எடுப்பதை அறிந்து நான் நேரில் போய்ச் சந்தித்துப் பேசினேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சினிமா ஆர்வத்தை நாம் மதித்து, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.


பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசும்போது:

"விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள். திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் .ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களேஅவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள். பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன .இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன? பத்திரிகையாளர்கள்  என்றும் மக்கள் பிரதிநிதியாக நின்று கேள்வி கேட்க வேண்டும். தொலைக்காட்சி பேட்டிகளை ஒரு காலத்தில் மக்கள் இது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்று மக்கள் கடந்து போனார்கள். நான் மக்கள் பிரதிநிதியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு தான் மக்கள் அதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.இவன் நம் சார்பில் நின்று கேள்வி கேட்கிறான் என்று நினைத்தார்கள். பத்திரிகையாளர்கள் ராணுவத்தினர், காவல்துறையினரைப் போன்றவர்கள். அவர்களைப் போலவே பத்திரிகையாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள், தங்கள் வீட்டு இன்ப துன்பங்களை மறந்து களத்தில் நிற்பவர்கள். எந்த விழாக் கொண்டாட்டமும் அவர்களுக்குக் கிடையாது.மழையா? வெள்ளமா ?புயலா ? சுனாமியா?எங்கும் களத்தில் நிற்பவர்கள். அந்தப் பத்திரிகையாளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். திராவிடம் தமிழ் தேசியம் என்கிற நிலையில் என்னை திருமா கவர்ந்த தலைவராக இருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்த் பற்றி நான் ஆயிரம் விமர்சனங்கள்செய்திருக்கிறேன்.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்றார். பிறகு அது தவறு என்று புரிகிற போது அதை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது .கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். இது ரஜினி கொடுத்துள்ள பாடம்.அந்தத் தெளிவான முடிவு எடுத்தவகையில் அவர் என்னைக் கவர்ந்த ஒருவராகத் தெரிகிறார். இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது:

"நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம்  தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு  ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார்.நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு.என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள் ;ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள்.இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை? மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது. அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து  அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி  வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது. நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்" என்றார்.

மேலும் இந்த விழாவில் யூடியூபர் காத்து கருப்பு கலை,ஐ .ஜி. பாஸ்கரன்,படத்தில் பணியாற்றியவர்கள் ,படக்குழுவினரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.