மே 2023

ஒன்பது இந்திய மொழிகளில் சோனி ஸ்பைடர் மேன்: நடிகர் கரண் மகிழ்ச்சி!



ஸ்பைடர் மேன்: 

ஸ்பைடர்-வசனத்தில் ஸ்பைடர் மேன் மேனியாவைக் காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அதே வேளையில், இந்தத் திரைப்படம் ஏற்கனவே உலகளவில் அற்புதமான ஆரம்ப விமர்சனங்களுடன் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது. முதல் இந்திய ஸ்பைடர் மேன், பவித்ர் பிரபாகர் மற்றும் டெட்பூல் புகழ் கரண் சோனி ஆகியோரின் சிறப்புப் பிரவேசத்தால் இந்திய பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், அசல் படத்தில் பவித்ர் பிரபாகருக்கு குரல் கொடுத்த கரண் சோனி, அதை எப்படி மக்கள் அவரை அணுகினார்கள் என்று கூறினார்.

பவித்ர் பிரபாகருக்காக குரல் கொடுத்ததற்கும், ஒன்பது இந்திய மொழிகளில் இந்தப் படம் டப் செய்யப்பட்டதற்கும் மக்கள் அளித்த வரவேற்பைப் பற்றிப் பேசிய கரண் சோனி, “படம் ஒன்பது இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதை மிகவும் உற்சாகமாக நினைக்கிறேன். நான் இந்தியாவில் வளர்ந்ததால் இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, மேலும் நாங்கள் ஸ்பைடர் மேனை முற்றிலும் விரும்புகிறோம். நான் அவருடன் நடிக்கிறேன் என்று அறிவிக்கப்பட்டதும், மக்களிடமிருந்து எனக்கு எத்தனை செய்திகள் வந்தன என்பதை என்னால் சொல்ல முடியாது. முதலில், அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள், பின்னர் இன்னும் சில தீவிரமான செய்திகள் இருந்தன, முக்கியமாக, 'இதைக் குழப்ப வேண்டாம்.' நாங்கள் செய்ததாக நான் நினைக்கவில்லை!"

படத்தின் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் பவித்ர் பிரபாகருக்கு குரல் கொடுப்பார் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். ஸ்பைடர் மேன் பிரபஞ்சத்தில் மீண்டும் மூழ்குவதற்கு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்திய இந்த செய்தி சமூக ஊடகங்களில் புயல் வீசியது.

_Sony Pictures Entertainment India, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 'ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸை' 1 ஜூன் 2023 அன்று திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுகிறது.

Athulya Senior Care Launches Dementia Care Services in Chennai 


Chennai:

Athulya Senior Care, a prominent name in India's senior care landscape, proudly announced the launch of their revolutionary Dementia Care Services at Pallavaram, Chennai. This landmark event was marked by the esteemed presence of Tmt. P Geetha Jeevan, Honourable Minister for Social Welfare & Women Empowerment, Government of Tamil Nadu. Sharing the dais were Dr. Karthik Narayan, Founder & MD, Athulya Senior Care, and G. Srinivasan, Founder & CEO, Athulya Senior Care. Marking a key expansion to Athulya's rapidly growing senior care infrastructure, the addition of Dementia Care services augments the wide range of senior care service being provided across Athulya Senior Care facilities spanning 1,000+ beds. It is a testament to Athulya's steadfast commitment to providing holistic, specialized care for seniors grappling with serious conditions such as dementia. Athulya Dementia Care Service brings together a multidisciplinary appro that caters to the physical, emotional, and cognitive needs of seniors. With a dedicated team of seasoned doctors and nurses, they are adept at managing various forms of dementia, including Alzheimer's, Vascular Dementia, Lewy Body Dementia, and Frontotemporal Dementia. 


Speaking about the new service, G. Srinivasan, Founder & CEO, remarked, "Our goal is to create an atmosphere of warmth, security, and understanding. We are here to care for those who once cared for us, and that's a responsibility we don't take lightly." 

Dr. Karthik Narayan, Founder & MD, reiterated Athulya's mission:

"We are committed to delivering comprehensive, personalized care plans for each of our residents. We aim to foster an environment where they can maintain their dignity, enjoy engaging activities, and receive the highest standard of medical care.

"Delving into the significance of the dementia care services, Dr. Narayan explained, "Dementia is not just about forgetting things. It's a condition that impacts the person's daily life and even alters their personality. At Athulya, we are here to provide all-round support - medical, emotional, and social. Our approach is not just to care but to connect, understand, and empower." Athulya Dementia Care stands for transparency in communication, alleviation of symptoms, and an unwavering focus on treatments designed to improve overall well-being and the quality of life for residents. With its safe and homely environment, engaging activities, personalized care plans, and compassionate care, Athulya sets the gold standard in dementia care. 


About Athulya Senior Care:

Headquartered in Chennai, Athulya Senior Care is a premier provider of senior care services in India. With a capacity of 1,000 beds and an ever-growing network of facilities, Athulya delivers a broad spectrum of specialized senior care services.

VIDEO HERE:

'வீரன்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!




நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் பிரபல யூடியூபருமான சசி பேசியதாவது, 

"கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது. இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி. முதலில் இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து ஆரம்பித்து விடுகிறேன். நான் ஒரு படம் நடித்து வெளியாகிவிட்டது. அடுத்து எப்போது திரையில் என்னை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுது சரவன் சார் உடைய AD என்னை அவருடைய அலுவலகத்திற்கு கூட்டிக்கொண்டு போய் கதை சொன்னார். 'சக்கரை' எனும் மிகப்பெரிய ஒரு கேரக்டரை எனக்கு கொடுத்துள்ளார். அடுத்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸூக்கும் எனது நன்றி. பிரசன்னா, ஆதிரா என இவர்களுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. 'உன்னாலே உன்னாலே' படம் வந்த சமயத்தில் நான் தான்டா வினய் என்று சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். படத்தில் அவருடன் எனக்கு காம்பினேஷன் சீன் எதுவும் இல்லை. அதனால் டப்பிங்கில் வினய் வரும் வரை காத்திருந்து என்னுடையதை முடித்துவிட்டு சென்றேன். கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் இருந்த பல யூடியூபருக்கும் ஆதி அண்ணா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு யூடியூபரை கொண்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.  படத்தில் எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது. அதையெல்லாம் பொறுமையாக விளக்கினார். யூடியூபில் எனக்கு ஆதரவு கொடுத்தது போலவே சினிமாவிலும் மக்கள் எனக்கு தொடர்ந்து அன்பை கொடுக்க வேண்டும். நன்றி!"

நடிகை ஆதிரா, 

"படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி ஃபிலிம்ஸ்கும், இந்த படத்தில் என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சரவன் சாருக்கும் நன்றி. ஆதி சார் சிறந்த கோ- ஸ்டார். எனக்கு படத்தில் நிறைய விஷயங்களில் உதவி செய்தார். அனைவருக்கும் நன்றி. படம் ஜூன் 2 வெளியாக இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, 

"'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்லுகிறேன். இந்த படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய கூடிய வகையில் இருக்கும். ஆதி சாரோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி. தமிழில் இது போன்ற முதல் நேட்டிவிட்டி சூப்பர் ஹீரோ கதையை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்க்கு நன்றி. இயக்குநர் சரவன் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி". 

நடிகர் வினய், 

"கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு சத்யஜோதி தியாகராஜன் சார் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கிறேன். மிகச் சிறந்த தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். இந்த படத்தின் இயக்குநர் சரவன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டபோது நான் உடனே சம்மதித்து விட்டேன். ஏனென்றால், சூப்பர் ஹீரோ படம் என்றால் அதை எப்படி அவர்கள் நம்பும்படி தர போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களை போல எனக்கும் இருந்தது. அடுத்து ஆதி. இனிமையாக பழகக் கூடியவர். நல்ல நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர். ஒரு படக்குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது 'வீரன்' படத்தில் உள்ளது. தொழில்நுட்பக்குழுவினர் தங்களுடைய சிறந்த பணியை கொடுத்துள்ளனர்". 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசியதாவது, "நீண்ட நாட்கள் கழித்து ரிலாக்ஸாக ஒரு படம் செய்து இருக்கிறேன். படத்தின் குழுவே புரொமோஷனல் பணிகள் உட்பட அத்தனையும் அழகாக செய்து இருக்கின்றனர். தினமும் கிச்சனில் சமைக்கும் அம்மாவை ஒரு நாள் ஹோட்டலுக்கு வெளியே அழைத்து போய் சாப்பிட வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுத்துள்ளது. ஒரு நல்ல படம் அதற்கான இடத்தை தானே அமைத்துக் கொள்ளும் என்பது போல ஜூன் இரண்டாம் தேதி குழந்தைகளுக்கான படமாக ஒரு விடுமுறை கொண்டாட்டமாக இது வெளியாக உள்ளது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு ஹிட் கொடுத்து அதை அனைத்து தலைமுறையினருக்குமாக கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் 'வீரன்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்".





இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் பேசியதாவது, 

"இந்த கதையை நம்பிக்கையோடு அணுகிய தயாரிப்பாளர்கள் தியாகராஜன் சாருக்கும் அர்ஜூன் சாருக்கும் நன்றி. இந்தக் கதை முன்பே ஆதி சாருக்கு தெரியும். ஒரு சூப்பர் ஹீரோவாக இந்த படத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்கி, அவ்வளவு பொறுமையாக இன்று வரைக்கும் எங்களுக்கு ஆதி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இது பொள்ளாச்சி கதை. அதற்கேற்ற ஒரு முகம் தேவைப்பட்டதால் தேடி ஆதிராவை கண்டுபிடித்தோம். அவர் மிகவும் சிரமப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டு நடித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் முனீஸ்காந்த், காளி வெங்கட், பத்ரி, சசி, சின்னி ஜெயந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் இசை மிக சிறப்பாக வந்துள்ளது என்பதை ட்ரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள். இந்த படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியம். அது நன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் அனைவரும் தங்களது சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். சில படங்கள் தான் காலம் கடந்தும் நம்முடைய நினைவில் இருக்கும். அதுபோல 'வீரன்' இருக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். ஜூன் இரண்டாம் தேதி படம் வெளியாகிறது பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 

நடிகர் ஆதி பேசியதாவது, 

" வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி! சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். தியாகராஜன் சாருடைய இரண்டாவது மகன் அர்ஜூன் எனக்கு நல்ல நண்பர். அவர் 'நட்பே துணை' சமயத்தில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு படம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. அவருக்கும், சந்திக்கும் போதெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் தியாகராஜன் சாருக்கும் நன்றி. அடுத்து இயக்குநர் சரவன். எனக்கு 'இன்று நேற்று நாளை' சமயத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில் தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம். கிட்டத்தட்ட இந்த பயணத்தில் ஆறு மாதங்கள் என்னுடனே அவரும் உடன் இருந்தார். வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு சரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன். இந்த படம் மூலம் அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய் அண்ணன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. இன்று தமிழ் சினிமாவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துக் கொண்டிருக்கும் காளி அண்ணனும், முனீஸ்காந்த் அண்ணனும் இந்த படத்தின் நகைச்சுவைக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறுமேயானல், அவர்களுடைய பங்கும் மிகப் பெரியது. ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார். 

புதிய திறமைகளை ஒவ்வொரு படத்திலும் எடுத்து வருவதை நாங்கள் எங்களுடைய பாக்கியமாக கருதுகிறோம். அந்த வகையில் இந்த படத்தில் சசி, அவருடைய நக்கலைட்ஸ் டீம், டெம்பிள் மங்கி என அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி. இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஒரு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் 'முடியும் முடியும்' என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு, ஜான் அவர்களுக்கு நன்றி. 'சிங்கிள் பசங்க',  'கேரளா டான்ஸ்' என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்த கதைக்கு அந்த மண்சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார். இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை கீர்த்தி நிறைய டிரையல் செய்து எடுத்து வந்தார். இதுபோல படத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பணியை கொடுத்துள்ளனர். என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90'ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும்  நாஸ்டலஜியா. இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளி போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த 'வீரன்' படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம். அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து 'வீரன்' ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்" என்றார்.


COAST GUARD RESCUES FISHING BOAT SAVING SIX FISHERMEN

 




The Indian Coast Guard station at Mandapam successfully rescued a fishing boat yesterday, stuck near IMBL due to engine failure since 27 May 2023. Earlier in the day, ICG unit at Mandapam had received information from the fisheries department about an Indian Fishing Boat (IFB) Thalapathy that had not returned to Harbor on the previous night. 


The ICG unit at Mandapam redirected a Coast Guard ship ICGS C-432 that was already on patrol in the area, to search the missing fishing boat.  After extensive search, the Coast Guard ship located the fishing boat drifting close to IMBL about 16 Nm from Pamban Light. When contacted, the fishermen on the boat informed that they were unable to make way due to broken shaft that had fallen in the sea.  


Thus, the boat was stuck at the same location since last two days. The fishermen were taken on board by ICGS C-432 and provided with necessary assistance.  Thereafter, the fishing boat was taken under tow by the Coast Guard ship and brought back to north Mandapam fishing harbor at 1130 hrs. On reaching harbour, the boat was handed over by Indian Coast Guard to the Fisheries department of Tamilnadu Government.  The quick action by the Indian Coast Guard resulted in saving 06 precious lives at sea.

மாணவர்களின் ஒழுக்கம் காணாமல் போய்விட்டது- இயக்குனர் பேரரசு வேதனை


JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை - சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். 

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பள்ளி நண்பர்களாக ஒன்றாக படித்து இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் அவரது 40 நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தயாரிப்பாளர் T.சிவா பேசும்போது, “இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி உள்ள ஜீவானந்தம் இனி தயாரிப்பாளர் என்கிற அடையாளம் பெற்ற ஒரு ‘லைசென்ஸ்’ ஹோல்டர் தான். பெரிய நடிகர்கள் மற்றும் ஓடிடிக்கு பின்னாடி ஒரு ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுக்க இவருக்கு வந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன். இந்த மேடையிலேயே தயாரிப்பாளரிடம் பாராட்டு வாங்கிய இந்த இயக்குனர் தான் புதிதாக சினிமாவிற்கு வரும் இயக்குனர்களுக்கு ரோல் மாடல்.


ராஜலட்சுமியை என் பேரன்பு மிக்க மகள் என்றே சொல்வேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண். அத்தனை திறமைகளையும் ஒன்றாக பெற்றவர். இதுவரை தனது பாடல்கள் மூலமாக பார்வையாளர்களின் மனதை வென்றவர், இனி இந்த படம் மூலம் ஒரு நடிகையாக திரையுலக  ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிப்பார்” என்று வாழ்த்தினார்.


நடிகை அபி நட்சத்திரா பேசும்போது, “நான் நடித்த அயலி வெப் சீரிஸ்க்கு முன்பாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ராஜலட்சுமி அக்காவின் மிகப்பெரிய ரசிகை நான். அயலிக்கு கொடுத்த ஆதரவு போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.


படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத் பேசும்போது, “எடிட்டர் ஆண்டனியை குருவாக ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் படத்தொகுப்பை கற்றுக்கொண்டேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கான ஒரு லைசென்ஸ் ஆக இருக்கும்” என்றார்.

இயக்குனரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் பேசும்போது, “இருப்பதிலேயே சின்ன படம் பண்ணுவது தான் கஷ்டமான விஷயம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல், நல்ல கதை வைத்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு கிடைத்த முதல் பரிசாக தான் இந்த படத்தின் இசை உரிமையை எம் ஆர் டி நிறுவனம் வாங்கியிருக்கின்றனர். இது ஒரு பாசிட்டிவ்வான படம்” என்று கூறினார்.


எடிட்டர் ஆண்டனி பேசும்போது, “இந்த படம் சின்ன படம் என்று சொன்னார்கள். ஆனால் இதை பார்க்கும்போது கொஞ்சம் பெரிய படமாகவே தெரிகிறது. முதன் முதலில் ஒரு பெண், சினிமாவில் படத்தொகுப்பாளராக வருவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.


துரிதம் பட நாயகன் ஜெகன் பேசும்போது, “தயாரிப்பாளர் ஜீவானந்தம் எனக்கு நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு படம் தயாரிக்கிறேன் என அவர் சொன்ன போது இயக்குனர் கணபதி பாலமுருகன் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இரண்டு படங்களில் நடித்து அனுபவப்பட்டதால் அந்த சந்தேகம் வந்தது. ஆனால் போகப்போக அவரது திறமையும் கதை மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.


நாயகி ராஜலட்சுமி பேசும்போது, “இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்து நம்பிக்கையை கண்டு வியந்து போனேன்.


பொதுவாக ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக அவர்களிடம் மாற்றம் வரும். ஆனால் ஜீவானந்தம் சார் கடைசி வரை மாறவே இல்லை. பைஜூவின் இசையில் நிறைய ஆல்பங்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடியுள்ளேன். நல்ல இசையமைப்பாளர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். அயலி புகழ் அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நாந கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்.


ஒருமுறை ராதாரவி சார் என்னிடம் பேசும்போது இனி அடுத்து எந்த நிகழ்வுக்கு வந்தாலும் உன் கணவரை அழைத்து வரக்கூடாது என்று விளையாட்டாக கூறுவார். இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவில்லை. ஆனால் அதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை.. எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டிய இருந்ததால் எனது கணவரை எனக்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு அனுப்பி விட்டேன்” என்று கூறினார்.


மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசும்போது, “ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார். ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என்றார்.


இயக்குனர் கணபதி பாலமுருகன் பேசும்போது, “எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள்.. எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.


படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.


இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று கூறினார்.


தயாரிப்பாளர் N.ஜீவானந்தம் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார் படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.


இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன். நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.


இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம். ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குனர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இயக்குனர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.. அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான டைரக்டரில் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியாக சாய்ஸ்.


ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.


அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும்.பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். அதை விடுங்க அனுமதிக்க கூடாது. இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம்.  மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை வைத்து பேசினார் இயக்குனர் பேரரசு.


இந்த நிகழ்வில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட, சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்திருந்த தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பால்ய கால நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.

Fastest Indian to cover the four corners of India by car - 16 States - 4 Union Territories - 12,500+ Kms - One Epic drive- 3 Records, all in support of Girl Child Education




Chennai:

A Coimbatore based Businessman, an Ultra Cyclist and a Marathon runner, GD Vishnu Raam embarks on a quest to cover 12,500+ Kms on an Epic drive to four corners of India - Kanyakumari - Tezu - Leh - Koteshwar on his indigenous Mahindra XUV 700 in 14 days, beginning May 28th 2023. 

Flagged off by Thiru K Shankar, IPS, Additional DGP Law and Order Chennai and Tmt. RV Ramya Bharathi, IPS, Joint Commissioner of Police, North Chennai in the presence of other dignitaries, the first leg of the car expedition will see Vishnu drive from Chennai to Tezu, for about 3, 231 kms, from Tezu to Leh in the second leg for about 3,458 Kms, there on from Leh to Koteshwar for about 2,212 Kms and finally traversing 2,643 Kms from Koteshwar to Kanyakumari, in the last and fourth leg, before he drives 706 Kms to return to Chennai. 

With six National records for expeditions (four by cycling and two by car) already to his credit, Vishnu Raam now attempts to clock 12,500+ Kms in 14 days to cover the four corners of India and break the earlier Guinness World Record of 401 hours achieved by India's Suresh Joseph. Also, during this remarkable journey he will be connecting with the locals to spread awareness on the importance of Girl Child Education.


Speaking to the media before his odyssey for a cause, GD Vishnu Raam said:

" I am truly delighted and excited to begin my car expedition to the four corners of India. My passion for sports and fitness has brought me this far and I wish more and more youngsters take to the roads to set their fitness goals, either by running, cycling or driving and also achieve them in earnest. In the process they should also strive to give back to society in whatever way they can. This endeavour of mine is not only an attempt to create a Guinness World Record, but also to support 'Girl Child Education', a social cause that I strongly believe in. My inspiration stems from Dr BR Ambedkar's advocacy for Women's right to equal education and how he believed that education could help women achieve not only their own empowerment, but also empowerment of others through them. A Chennai based eminent artist has very artfully sketched the campaign logo- 'Girl Child Education and Dr BR Ambedkar'. The funds raised as part of this expedition will go for the development and enhancement of girl child education in Government schools of Chennai and Coimbatore".

Driving, running and pedalling for a cause! 

From cycling to running to steering the wheel, his passion with purpose has seen him champion for social & environmental issues by integrating sports and fitness with one cause or the other! GD Vishnu Raam's national record accomplishments include: 

Fastest cycling by an individual to cover 1000 Kms:

In November 2022, Vishnu Raam attempted a 1000 Kms cycling expedition, a national record, to create awareness around the growing menace of drugs in our country. In support of Tamil Nadu Government's 'Say No to Drugs' Campaign, he undertook a non- stop cycle journey from Hyderabad International Airport to Coimbatore via Bangalore, where the ride was the toughest with high elevated roads making cycling difficult. In addition, heavy rains all through the Krishnagiri route affected his cycling speed too. With no sleep, no rest, undeterred, he pushed his limits to complete the attempt in a record time of 37 hours and 43 minutes and 22 seconds. 



The fastest individual to cover 100 miles in road bicycling:

His solo cycling expedition in 2022 to create awareness on Global Warming and Climate Change saw him ride his Scott Addict 30 bicycle non-stop to reach Salem from Coimbatore airport in four hours, 28 minutes, and 19 seconds covering a distance of 161 kilometres. This endeavour fetched him the National record of being 'The fastest individual to cover 100 miles in road bicycling' and enter the India Book of Records and Asia Book of Records. 

Maximum distance covered by an individual on bicycle: 

The following year saw him cycling in support of the frontline covid warriors from Coimbatore International airport to Salem via Madurai, Trichy, Tirunelveli, Kayathaaru and Kanyakumari covering 623 kms in 23 hours and 52 mins and entering into the Asia Book of Record and India Book of Record. 

Fastest Man to cover the Golden Quadrilateral by Car: 

High on adrenalin his unstoppable adventures continued with a car drive through the epic golden quadrilateral, traversing 5853 kms across Chennai- Kolkata- Delhi- Mumbai in 82 hours, 20 minutes in his Toyota Fortuner to commemorate the 99th birthday of Iconic leader Kalaignar Karunanithi last year, thus entering the Limca Book of Record, Asia Book of Record and India Book of Record. 

Maximum distance covered by an individual in 24 hours by car: 

2020, the year of Pandemic saw Vishnu drive 2152.32 Kms in 20 hours 40 mins starting from Bangalore via Hyderabad to Nagpur and back to Bangalore by his car, as a tribute to the frontline Covid workers, creating a record for the maximum number of kilometres driven by an individual in India.


VIDEO HERE:

DAC Developers Unveils 'DAC Prathyangira' with 163 Luxurious Residential Apartments at Sholinganallur!




Chennai:

DAC Developers, one of Chennai's most trusted developers, is all set to launch 'DAC Prathyangira', an upscale luxurious 163 residential apartments in Sholinganallur. 'DAC Prathyangira' boasts 12 residential floors and a magnificent rooftop clubhouse spanning 10,000 sq ft. 

Situated in the heart of OMR on 80-ft road, this meticulously designed property offers a picturesque view of the Buckingham canal. It comprises a diverse range of unit configurations, including: spacious 2, 3 BHK apartments and penthouses. The units start from 1258 sq ft and ranges up to 3007 sq ft. Pricing for these apartments starts from Rs. 93 lakhs. Bookings for these exquisite units will start on the 2nd, 3rd and 4th of June, 2023.

Located less than a kilometre away from the revered 'Sri Prathyangira Devi' Temple, this project marks the 101st construction endeavour of DAC Developers. As the construction progresses steadily, the basement work is currently nearing completion. The project presents over 50 luxurious amenities, including the exclusive rooftop sky clubhouse that provides stunning sea views. 'DAC Prathyangira' also features an infinity swimming pool and a double-height entrance lobby. The units themselves offer spacious rooms with expansive windows, ensuring ample ventilation and welcoming natural light. Each unit prioritises privacy and serenity, standing independently with no shared walls or no opposite doors. 


Three-sided opening exudes the charm of individual houses. All apartments have smart locks on the main door, high-end branded products and specifications throughout. All units are Vaastu compliant. Sporting a holistic approach to health and fitness, the premises has an open yoga deck, a dedicated zumba room, a serene reflexology pathway, and a tranquil zen garden. A fully equipped gym with a steam room. There is a dedicated court for indoor games such as billiards and table tennis. Thoughtfully designed amenities for kids. A mini theatre, a versatile multipurpose hall for hosting parties, a rooftop landscape for serene moments, and a barbecue corner are among the facilities for relaxation and entertainment. 

The apartments also provide essential features including solar power backup for common area, automatic high-speed lifts and service lifts, EV charging bays, DG power backup, and centralised DTH and data provision. With the Sholinganallur Metro station underway, residents can look forward for seamless and convenient access to all parts of the city.

In his comments, Dr. S. Sathishkumar, Founder and Managing Director, DAC Developers, said:

"DAC Prathyangira holds immense prestige for us, and we aspire for it to become a source of pride for Sholinganallur itself. Situated facing the Buckingham Canal, it stands as a waterfront residential complex, guaranteeing an unobstructed scenic vista of the Buckingham canal. This multi-storeyed complex is set to redefine luxury living in the city. Following this project, we are taking up about 12 housing projects in various locations in Chennai. Setting our vision beyond Chennai, we will soon foray into other cities such as Coimbatore." 

About DAC Developers:

DAC Developers, headed by Dr. Sathish Kumar (Founder & MD), a highly regarded civil engineer, has emerged as the most trusted developer in Chennai with more than 2000+ happy customers. The company's commitment to excellence and unparalleled quality standards speaks volumes, reflecting the extensive knowledge and experience of its founder in the realm of civil engineering.

VIDEO HERE:

 “கழுவேத்தி மூர்க்கன்” அடிதடி ஆட்டம்! 





ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிப்பில், கௌதம ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  “கழுவேத்தி மூர்க்கன்” இன்று வெளியானது. 

இதில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  டி.இமான் இசையமைத்துள்ளார். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.... 

சிறுவயது முதலே அருள்நிதியும், சந்தோஷ் பிரதாபும் (பூமி) நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உயர்ந்த சமூகங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சந்தோஷ் பிரதாப் சமூகத்தை தள்ளி வைத்து வருகின்றனர். ஆனால் அருள்நிதி, நண்பனுக்காக எப்போதும் துணை நிற்கிறார். நண்பனை யாராவது இழிவு படுத்தினாலோ அடித்தாலோ அவர்களை அடித்து துவைக்கிறார். ஒரு கட்டத்தில் தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த சந்தோஷ் பிரதாப் (பூமி)  கொல்லப்படுகிறார். அந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. இதற்கு பின் என்ன ஆனது? கொலையை அருள்நிதி செய்தாரா? அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி மற்றும் அரசியல் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.... 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிநாதமாக எடுத்துகொண்டு கழுவேத்தி மூர்க்கன் படத்தை எடுத்துள்ளனர். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதியின் தாக்கமும், அதிகார அரசியலும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை விரிவாக படமாக்கியுள்ளனர். சாதி ஆதிக்கமும், பதவி அரசியலும் என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்லியிருக்காங்க. அதற்கு சில காட்சிகளும், வசனங்களும் உறுதுணையா இருக்கு. நடிகர்களை பொறுத்தவரை, ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை கச்சிதமா நடிச்சி கொடுத்திருக்காங்க. 

குறிப்பா, மூர்க்கசாமி கதாபாத்திரத்தில் அருள்நிதியும், பூமி கதாபாத்திரத்தில சந்தோஷ் பிரதாப்பும் பொருந்தி போறாங்க. அதேபோல் முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா கதாபாத்திரங்கள் ரசிக்க வைக்கின்றன. கோயில் கழுமரம் எனக் கலை இயக்குநர் மகேந்திரா கவனம் பெறுகிறார். டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கேட்டதுபோலத் தோன்றினாலும் யுகபாரதியின் வரிகளில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. 

மேலும் படத்தில் காதல் காட்சிகள் எதற்கு? காதலி எதற்கு? என்ற கேள்வியும் எழுகிறது. அந்த கதாபாத்திரம் படத்தில் இல்லை என்றாலும் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. 

மொத்தத்தில் இந்த “கழுவேத்தி மூர்க்கன்” அடிதடி ஆட்டம்......

MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE



Paramount Pictures and Skydance Present

A Tom Cruise Production

Tom Cruise 

“MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE”

 

 

DIRECTED BY

Christopher McQuarrie


  

BASED ON THE TELEVISION SERIES CREATED BY

Bruce Geller

 

 

STARRING

Tom Cruise, Hayley Atwell, Ving Rhames, Simon Pegg, Rebecca Ferguson, Vanessa Kirby, Esai Morales, Pom Klementieff, Mariela Garriga, Henry Czerny, Shea Whigham, Greg Tarzan Davis, Charles Parnell, Frederick Schmidt,Cary Elwes, Mark Gatiss, Indira Varma


MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE IS ONLY IN THEATRES, DOLBY CINEMA, PREMIUM LARGE FORMATS, AND IMAX ON 14th JULY IN ENGLISH, HINDI, TAMIL & TELUGU

Spider-Man: Across the Spiderverse Director Kemp Powers talks about what makes Indian!



While audiences across the globe are eagerly waiting for Spider-Man: Across of Spiderverse, Indian fans have their excitement hit the roof. The film will introduce the first Indian Spider-Man, Pavitr Prabhakar and to add to it the voice for him in Hindi and English is being given by Indian Cricketer, Shubman Gill. 

The original Indian version of Spider-Man was first introduced by Sharad Devarajan, Suresh Seetharaman, and Jeevan J. Kang in the Spider-Man: India comic book from January 2005. Now Spider-Man: Across the Spiderverse will mark his first appearance on the big screen.

Director Kemp Powers explains how Pavitr Prabhakar is different from other Spider-People in the multiverse, “Pavitr’s powers came through magic, so he is quite different from a lot of other Spider People who were bitten by radioactive spiders. He actually gained his powers from a mystical shaman. Like many other Spider People, he has had to suffer a loss, and in his case, it was his uncle. Yet he’s probably one of the most optimistic characters in the movie. He’s definitely a glass half-full kind of guy. He’s Miles’ contemporary, and his happy, positive disposition can probably even rub Miles the wrong way.”

Sony Pictures Entertainment India releases 'Spider-Man: Across the Spider-Verse' in English, Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Gujarati, Marathi, Punjabi and Bengali on 1st June 2023, only in Cinemas.

இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் - Y G மகேந்திரன்




MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  

இந்நிகழ்வினில்.. 

தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… 

நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…

ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார் என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள். ஆனால் கவிதா அவர்களின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது அவரது தந்தை TN பாலு அவர்களின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப்படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன் அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும் என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள்வேண்டும்.  நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன். இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

நடிகர் கதிரவன் பேசியதாவது..,  

இயக்குனர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி ,

என் அப்பா அந்த காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார், இந்த படத்தின் கதை அரசியலில் ஒரு  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,  அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி.  மட்டும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி. 

எங்கேயும் எப்போதும்  இயக்குநர் சரவணன் பேசியதாவது.., 

கவிதாவை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் காரணம் அவரின் தைரியம், அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும் அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது.  படம் வெற்றி பெற  என்னுடைய வாழ்த்துக்கள். 


Y G மகேந்திரன் பேசியதாவது.. 

நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன் ஆனால் இந்தப்படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி, TN பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர் அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை, அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார், கதை அருமையாக நகரும் அது படம் பார்க்கும்போது தெரியும், இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் ஆனாலும் அது ஒரு முயற்சிதான் மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் நன்றி. 

கதாநாயகி பூஜா பேசியதாவது.. 

இந்தப் படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி , இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் ஏங்கியுள்ளேன் இப்போது அது உண்மையாக நடப்பது  மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தப் படத்தில் என்னை நம்பி எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்த  இயக்குநர் கவிதாவிற்கு நன்றி , தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி, ஒவ்வொரு நாளும் எனக்கு ஆர்வமாக இருந்தது , படக்குழு அனைவருக்கும் எனது நன்றி , பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும், இது அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்,  அனைவருக்கும் நன்றி

படத்தொகுப்பாளர் டாய்ஸ் பேசியதாவது 

இந்தப் படத்தில் இயக்குநர் கவிதாவின் பங்களிப்பு மிகவும் பெரியது , இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மிகப்பெரும் பொதுநலத்தை பற்றி பேசும் படம், மக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

இயக்குநர் கவிதா பேசியதாவது…

இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின். ஒய் ஜி மகேந்திரன் சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள்  என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம் என் தந்தை TN பாலு இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தை, ஒய் ஜி மகேந்திரன்  சார் நடிக்க காரணம் என் தந்தை. இந்த பெருமை போதும் எப்போதும் பழையதை மறக்காதீர்கள், புதுப்பித்துக்கொண்டே இருங்கள். என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன்.  பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல, பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. 

நடிகர்கள் 

அஜித் விக்னேஷ், பூஜா சங்கர், நடராஜன் (கனடா), கதிரேசன், செந்தில் நடராஜன் (கனடா), ராதா ரவி, Y G மகேந்திரன் கதிரவன் பாலு , கார்த்திக், சக்தி (கனடா) வெங்கடேஷ் ஆறுமுகம் (அசத்த போவது யாரு) தென்காசி நாதன் வினோத் (KPY) DR அமுதா குமார், ஜீவா கார்த்திக், அஷ்வின் சுதந்திரம். 

தயாரிப்பு: மேட்டினி ஃபோல்க்ஸ் 

தயாரிப்பு  : ஜி. பிரதீப் குமார் ஆஷா மைதீன் இணை தயாரிப்பு: கதிரேசன் செந்தில் இயக்கம்: கவிதா 

ஒளிப்பதிவு : என்.எஸ்.ராஜேஷ் குமார் & ஸ்ரீவட்ஸ் 

எடிட்டர் : டாய்ஸ்.BM 

இசையமைப்பாளர்: தர்ம பிரகாஷ் 

கலை: சங்கர் 

உரையாடல்கள்: கவிதா & ராசி தங்கதுரை ஸ்டண்ட்: குன்றத்தூர் பாபு 

உடைகள் : சத்யா 

ஒப்பனை : நந்தினி லோகநாதன் 

தயாரிப்பு மேலாளர் : ஆம்பூர் ஜே நேதாஜி

டிசைன்ஸ்: குமரன் 

மக்கள் தொடர்பு :  பரணி அழகிரி, திருமுருகன்.


"ஏலியன்ஸ் 2042" 777 பிக்சர்ஸ் மூலம் 6 மொழிகளில் வெளியீடு!




`CURTAIN RAISER (கர்டெய்ன் ரைசர்)` - James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) (அவதார் இயக்குநர்), ALIENS (1986) ஏலியன்ஸ் (1986) சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது! இதுவரை பல தொடர்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986)  (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது! வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த சமீபத்திய படம், ஏலியன்ஸ் 2042 மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில், 6 மொழிகளில் வெளியாகிறது. 2042-ம் ஆண்டு எதிர்காலத்தில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது!


`சுருக்கம்` - தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில்,

ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தின் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுபடுகிறார்கள்! மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது!

தப்பிப்பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது. வேற்றுகிரகவாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது!


CREDITS 


Cast- Ren Tianye, Zhang Zhilu, Qu Niciren etc 

Cinematography- Qiu HangXu ; 

Action Director - Shi Zhanbiaa 

Visual Effect Director - Du Keyan 

Director - Huang Zhuasheng


777 பிக்சர்ஸ் மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி என 6 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Fast X Movie Review




Synopsis: 

Dominic Toretto (Vin Diesel) and his wife Letty (Michelle Rodriguez), are happy to have renounced their dangerous street racing-heist lifestyle for the peace and safety of their family, until a psychotic revenge seeker, Dante Reyes (Jason Momoa) comes knocking.

Review: 

Roaring fast cars, underworld, cops, and family… The Fast and the Furious franchise for over two decades with minor modifications has pretty much offered us the same content, over the top fast car action, with little to none, emotional heft. Paul Walker’s untimely death in 2013, was perhaps the most you felt for the franchise. Over the years, the core team has stayed the same even as newer faces joined the race. Beyond Diesel and his crew, Dwayne Johnson, John Cena, Charlize Theron, Helen Mirren, Brie Larson, Gal Gadot, Scott Eastwood, Jason Statham and now Jason Momoa, the series has resorted to using actors as minor script updates.

Despite a rather chaotic, silly, and overcrowded plot, Jason Momoa has the most fun with his character. He gives his comical-psychotic villain the insanity and anger of a disgruntled employee on a notice period. He just wants to watch the world burn. His jibes and nicknames for characters (John Cena is uncle muscle) entertains and amuses the most. While he is vindictive and ruthless, he doesn’t seem as menacing as his Joker-esque alter ego would imagine.




The plot has little relevance but if you must know, it all begins when Toretto’s wisecracking friends are sent on a fake mission to Rome. The team is framed for a massive bomb explosion that turns the agency against them. This moment has the film's most ambitious chase sequence. Drug kingpin Dante is the mastermind, and he is hellbent on making Toretto suffer by depriving him of his family.

You will hear the words ‘family’ and ‘agency’ after every two lines in the 10th instalment. Are “the days where a man behind the wheel of a car could make a difference are (truly) over?” Turns out they aren’t over as we have another sequel waiting. Director Louis Leterrier offers an orgy of explosions and car chases demanding minimal emotional investment. If you don’t mind a cycle of preposterous action sequences loaded with VFX not allowing a moment of calm, Fast X delivers exactly what it promises. Pete Davidson has a fun cameo. You won't blink even for a second. The film offers mindless popcorn entertainment in every scene in abundance.

However, there is not a single novelty factor and watching one film in the series is as good as watching them all. Not that some other successful franchises haven’t taken the same route, but F&F series is nearing its end and you want them to take that VRS.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.