சென்னையில் மிகப் பிரபலமான வி.ஆர் மாலில் பால் சீலிங் உடைந்து மழை நீர் கொட்டுகிறது!
சென்னையில் மிகப் பிரபலமான வி.ஆர் மாலில் பால் சீலிங் உடைந்து மழை நீர் கொட்டுகிறது!
சென்னையில் மிகப் பிரபலமான வி.ஆர் மாலில் பால் சீலிங் உடைந்து மழை நீர் கொட்டுகிறது!
Temporary Augmentation of Train No. 17651/17652 & Train No. 17643/17644 With one additional Sleeper Class Coach!
The following Trains has been temporarily augmented as detailed below:
· Train No. 17651/17652 Chengalpattu – Kacheguda - Chengalpattu Express will be temporarily augmented with 1- Sleeper Class Coaches and 1- General Second Class Coach Ex. Kacheguda on and from 01st January, 2022 to 31st January, 2022 and Ex. Chengalpattu on and from 02nd January, 2022 to 01st February 2022
· Train No. 17643/17644 Chengalpattu – Kakinada – Chengalpattu Circar Express will be temporarily augmented with 1- Sleeper Class Coaches and 1- General Second Class Coach Ex. Kakinada on and from 03rd January, 2022 to 02nd February, 2022 and Ex. Chengalpattu on and from 04th January, 2021 to 03rd February, 2022
Revised Composition: 1- AC Two Tier Coach, 4- AC Three Tier Coaches, 11-Sleeper Class Coaches, 4- General Second Class Coaches & 2- Luggage cum Brake Vans.
Short Termination Cancelled – Trains to run as per normal schedule
Consequent to the cancellation of Line Block between Nayudupeta and Pedapariya, the following trains will run as per normal schedule.
· Train No. 12711 Vijayawada – Dr MGR Chennai Central Pinakini Express commencing journey on 04th January, 2022 will run to its normal schedule (Earlier notified cancellation of service between Gudur and Dr. MGR Chennai Central stands withdrawn now)
· Train No. 12712 Dr MGR Chennai Central – Vijayawada Pinakini Express commencing journey on 04th January, 2022 will run to its normal schedule (Earlier notified cancellation of service between Dr MGR Chennai Central and Gudur stands withdrawn now)
ஜனவரி 2022-1ல் வெளியாகும் ஜெய்பீம் நாயகி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது. மலையாளத்தில் ஹிட்டான ஜோசப் படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
சென்னை-28 படம் முதல் நட்பு கூட்டணியாக வலம்வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல் ஆகியோர் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் ஜன-1 புத்தாண்டு தினத்தன்று வெளியிடுகின்றனர்.
இந்தப்படம் பற்றி தயாரிப்பாளர் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும் போது:
“மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.. பாடல்கள் அனைத்தும் அங்கே மிகப்பெரிய ஹிட்.. இங்கே தமிழில் பிரபல முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு ஃபீல் குட் படமாகவும் இருக்கும். குறிப்பாக மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு ஒரு பிரேமம் படம் அமைந்ததோ அதேபோல ரஜிஷா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக அமையும். விரைவில் ரிலீசாகும் விதமாக இந்தப்படம் தயாராகி வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டி!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும்.
அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து "செம்ம போத" பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா - மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் - தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் 'நீ சுடத்தான் வந்தியா' திரில்லர் படம்!
இப்படம் டிசம்பரில் 31 தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிசம்பரில் ஏராளமான படங்கள் வருவதால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது .பொதுவாக விழாக் காலங்களில் பெரிய படங்களும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களும் வெளியாகும் .அப்போது சின்ன படங்களை வெளியிட்டால் அந்தப் பரபரப்பு ஓசையில் இவை காணாமல் போய்விடும் .இந்த நிலையில் டிசம்பரில் வெளியாக வேண்டியது ஜனவரிக்குத் தள்ளிப் போயிருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் படத்தின் கதாநாயகன் பேசும்போது:
"நாங்கள் 150 ஸ்கிரீன் எதிர்பார்த்ததற்கு, மிகவும் குறைவாகத்தான் கிடைத்தது. எனவே கமர்சியல் பலமுள்ள வணிக மயமாக்கப்பட்ட இந்த படத்தை 2022 ஜனவரியில் வெளியிடத் தீர்மானித்து விட்டோம் நிறைய எண்ணிக்கையிலான திரையில் வெளியாகும்". " சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.
எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன். இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.
இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் '.
இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் ரெட் ட்ராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்"
ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் நாயகன் அருண்குமார்.பல்வேறு தடைகளைக் கடந்து இப்படம் ஜனவரி 2022 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை'
இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக 'மங்களாபுரம்' என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.
இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.
சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள் .அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.
டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது .அவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று துடிக்கிறான்?பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தவிக்கிறான்; தயங்குகிறான்; யோசிக்கிறான். ஆனால் இயற்கையோ மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறது.இப்படிப் போகிறது 'அடங்காமை' படத்தின் கதை.
"திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் 'என்ற குறள் 100க்கு 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை டிசம்பர் 31-ல் தமிழகமெங்கும் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தோம்.ஆண்டின் இறுதி வாரத்தில் ஏராளமான படங்கள் வருவதால் திரையரங்குகள் கிடைப்பது சரியாக அமையவில்லை. எனவே நிதானமாகத் திட்டமிடப்பட்டு ஜனவரியில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது. இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் "என்கிறார் இயக்குநர்.
தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.
திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் இரண்டு தயாரிப்பாளர்களும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,
நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா. ஜனவரி முதல் 'அடங்காமை' திரைகளில்.
கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை- மாவட்ட ஆட்சியர்
கோவை:
கரோனா பரவும் அச்சத்தால், கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோவை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நாளை (31-ம் தேதி) இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தும் போது, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வடபழனி, கோயம்போடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு!
பெங்களூரு:
கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகத்தில் அரசு அறிவித்தப்படி இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9.30 மணிக்கே மூடப்பட்டன. இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான்!
கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், துபாய், கானா, மும்பையில் இருந்து தலா ஒருவரும் பெங்களூரு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சுகாதார துறை மந்திரி சுதாகரும் உறுதி செய்துள்ளார்.
கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விலக்கு!
கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புத்தி காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து, ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.
வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது.
பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.
இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா!
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.
ஊட்டியை சுற்றி உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பல நாட்கள் குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே அர்ப்பணிப்பு உணர்வுடன் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்
இயக்குனர் மணிபாரதி கூறும் போது:
“வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப்படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை (Bed) தனது பார்வையில் தன்னை தேடிவந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பது போல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘தி பெட்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என கூறுகிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வரும் ஜன-3ஆம் தேதி வெளியிடுகிறார்.
நடிகர்கள்:
ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இயக்குநர் ; எஸ்.மணிபாரதி
ஒளிப்பதிவு ; கே.கோகுல்
படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)
இசை ; தாஜ்நூர்
பாடல்கள் ; யுகபாரதி
கலை ; பழனிவேல்
நடனம் ; தீனா
சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு
நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி
தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்
தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்
மக்கள் தொடர்பு ; A ஜான்