பிப்ரவரி 2022

உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கமும், பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய "எழுத்துக்கு மரியாதை" 


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கமும், பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி சென்னையில் மயிலாப்பூர் TAG தட்சிணாமூர்த்தி கலையரங்கத்தில் முனைவர் பாலசாண்டில்யன் அவர்களின்    தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.


சென்னையில் உள்ள  சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி செல்வி. ரா.வசுதா "வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள்" என்ற பாரதி பாடலையும், ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷகன் ஜெயின் மகளிர்   கல்லூரி மாணவி செல்வி.பா.ஐஷ்வர்யா  " மனதிலுறுதி வேண்டும்" என்ற பாரதி பாடலையும் அருமையாக பாடினர்.

தபம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் திரு.பா.மேகநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்களின் சிறப்பினைக் கூறி அறிமுக உரை நிகழ்த்தினார். உரத்தசிந்தனை சங்கத்தின் தலைவர் திருமதி.பத்மினி பட்டாபிராமன் நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவரையும் இனிமையாக வரவேற்றார்.

எழுத்தாளரும் சிறந்த சொற்பொழிவாளருமான திரு.இந்திரா சௌந்தரராஜன் தலைமையேற்றார். முனைவர் மிருதன்பாலா எழுதிய "தனிமையின் தடயங்கள்" கவிதை நூலை திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன்  வெளியிட முதல் பிரதியினை திரைப்பட நடிகர் கலைமாமணி திரு.டெல்லி கணேஷ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திரைப்பட நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், CBSE முன்னாள் இயக்குனர் கல்வியியல் ஆலோசகர் திரு.க. பாலசுப்பிரமணியன், மனிதவள மேம்பாட்டு பயிற்சி யாளர் திரு.பிரசன்ன வெங்கடேசன், ஆகியோர் இந்த நூலை மேடையில் பெற்று பெருமை சேர்த்தனர்.


திரைப்பட நடிகர் திரு.டில்லி கணேஷ்  "தனிமையின் தடயங்கள்" நூலின் சில கவிதைகளின் சிறப்பை எடுத்துரைத்து நகைச்சுவை ததும்ப பேசி மகிழ்வித்தார். CBSE முன்னாள் இயக்குனர், கல்வியியல் ஆலோசகர்  திரு.க.பாலசுப்பிரமணியன் இந்த நூலைப் போற்றி  கவிதை எழுதி இனியும் "தேடல்கள் தொடரட்டும், தடயங்கள் கிடைக்கட்டும்" என்று நூலின்  சிறப்பைக்கூறி வாழ்த்துரை வழங்கினார்.  

மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர் திரு.பிரசன்ன வெங்கடேசன்  தான் தேடலுடன் சுவைத்துப்படித்ததாய் நூலில் உள்ள கவிதைகள் "வேரில் பழுத்த பலா " என்று கூறிப்புகழ்ந்தார்.

திரைப்பட இயக்குனர்  திரு.எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்:

ஒவ்வொருவரும் இரவு  உறங்கப்போவதற்கு முன்னர் அன்றாடம் என்ன தவறுகள் செய்ததை நினைவுகூர்ந்து இனிமேல் அவற்றைச் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்துக்கொண்டு நல்லவற்றையே நாளைமுதல் செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார். கவிஞர் மிருதன்பாலா இந்த புத்தகத்தில் மனிதநேயம் மிகுந்த கவிதைகள் படைத்துள்ளார் என்று கூறி நாட்டுக்கு நன்மை பயக்கும் கவிதைகள் இனிவரும் காலத்தில் படைக்கவேண்டும்என்று வாழ்த்துரை வழங்கினார்.

உரத்தசிந்தனை இதழில் வெளிவந்த வெண்பாக்களில் சிறந்தவற்றைத் தேர்வுசெய்த நூற்கவிக்கோ திரு.மா.வரதராசன் அவர்கள் பரிசுத்தொகை வழங்கிய முனைவர்.அமுதா பாலகிருஷ்ணன் அவர்களின் சேவையைப் போற்றினார். மரபுக்கவிதைகளின் இலக்கணத்தை உரத்தசிந்தனை இதழின் மூலம் அதன் வாசகர்களுக்கு பயன்படும்படி கற்றுத்தருவதற்கு விருப்பத்தை தெரிவித்தார். 

எழுத்தாளர், முனைவர் திரு.அமுதா பாலகிருஷ்ணன்அவர்கள், கோவை கவிஞர். திரு.கே,பி.பத்மநாபன், திருச்சியைச் சேர்ந்த மேலை திரு.தமிழ்க்குமரன் ஆகியோருக்கு வெண்பா வேந்தர் பரிசுத்தொகை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். 

எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன்  விருதுகள் வழங்கியபின் தனது சிறப்புரையில்:

உலகில் உள்ள அனைவருக்கும் பயன்படும்படியாக திருவள்ளுவர் இரண்டு வரியில் குறள் வெண்பா கவிதையில் தந்தார் என்றால் நமது அனைவரின் பாட்டியான ஔவையார் ஒற்றைவரியில் "அறஞ்செய விரும்பு ", என்று ஒற்றை வரியில் ஆத்திசூடி எழுதினார். கவிஞர் மிருதன்பாலா  இந்த நூலில் உள்ள 'புத்தனின் பௌர்ணமி' , 'பிறவிப்பயன்' ஆகிய தலைப்புகளில் உள்ள கவிதைகளின் சிறப்பைக்கூறி அவருடைய   கவிதைகளால் நல்ல உயர்ந்த கருத்துக்களை விதைத்துள்ளார் என்றார். 

உரத்தசிந்தனை செயலாளர் திரு.உதயம்ராம் நேர்த்தியாக நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து ஒவ்வொரு பேச்சாளரின் பெருமையை எடுத்துரைத்தார். 

நிறைவாக  கவிஞர் திரு.மிருதன்பாலா அவர்கள் தனது கவிதை நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் உளமாற நன்றிகூறி சிறப்பான  ஏற்புரையுடன் உரத்தசிந்தனை அமைப்பாளர்களுக்கும் நன்றி கூறி மகிழ்ந்தார்.



கதைகளின் நிலம்’ – பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்! 


சென்னை

கோதே-இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் (சென்னை), சென்னை போட்டோ பயன்னலே (CPB - சிபிபி) அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்தகதைகளின் நிலம்’ (A Land of Stories) என்னும் தலைப்புக் கொண்ட புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி  பிப்ரவரி 26, 2022 அன்று அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கி வைத்தார்.

சென்னை கோதே இன்ஸ்டிட்யூட்/ மேக்ஸ் முல்லர் பவன், சென்னை புகைப்பட பயன்னலே அறக்கட்டளை ஆகியவை கூட்டாக நடத்தும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் டாக்டர் பி. சந்திர மோகன் ஐஏஎஸ் (அரசு சுற்றுலா கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், TTDC), சுற்றுலா இயக்குநர் மற்றும் கன்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் (கான்சலேட் ஜெனரல், ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி, சென்னை), ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்களின் படைப்புகளை இந்தக் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது. ஐபோன்களில் படம் எடுப்பது குறித்துச் சிபிபி ப்ரிசம் (CPB Prism) குழந்தைகளுக்கு வழிகாட்டியது. குழந்தைகள் நிலத்தையும் வீட்டையும் தங்கள் படைப்புக்கான வெளியாக ஆக்கித் தொலைபேசிக் கருவிகளில் பல தருணங்களை அழகாகப் படம்பிடித்தனர்.

இந்தக் கலைத் திட்டம், மாணவர்கள் நமது மாநிலமான தமிழ்நாட்டின் நல்ல அம்சங்களை ஆராய்வதையும் அதன் செழுமையைத் தங்கள் புகைப்படங்கள் மூலம் பிரதிபலிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. புகைப்படங்கள் எந்தத் தருணத்தையும் காலத்தில் உறைய வைக்கும் திறன் கொண்டவை. இந்த மாணவர்கள் பல்வேறு விதமான மனிதர்கள், கட்டிடங்கள், பசுமையான நிலப்பரப்புகள், கலாச்சாரத்தின் தடங்கள் ஆகியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். தங்கள் புகைப்படங்கள் மூலம் தமிழகத்தின் பாரம்பரியத்தை ஆராயும் வாய்ப்பையும் பெற்றார்கள்.


இந்தப் படங்கள் மாநிலத்தின் இயற்கையானதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுமான பாரம்பரியத்தை அதன் பல்வேறு பரிமாணங்களுடன் காட்டுகின்றன. மாணவர்களின் வடிகட்டப்படாத இந்தப் பார்வைகள் தமிழ்நாட்டின் முடிவற்ற கதைகளைக் கூறுகின்றன. இந்தப் படங்கள் மனதை ஈர்க்கும் கதையாடலையும் முன்வைக்கின்றன.

இளம் கலைஞர்கள் சிலர் கண்காட்சிக்கு வந்திருந்து ஆர்வமுள்ள பார்வையாளர்களிடம் தங்கள் படைப்புகளைப் பற்றி விளக்கினார்கள்.

பொது முடக்கத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் புதிய கண்களால் படைப்பூகத்துடன் மறுகண்டுபிடிப்பு செய்ய உதவ வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். சிபிபி ப்ரிசம் (CPB PRISM) நடத்திய ஊக்கமளிக்கும் கல்விப் பயிலரங்கங்களின் காரணமாக மாணவர்களால் தமிழ்நாட்டின் அழகை அதன் எல்லா விதமான வேறுபாடுகளுடனும் படம்பிடிக்க முடிந்தது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட அற்புதமான படைப்புகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் புகைப்படங்கள் சித்தரிக்கும் அனைத்து இடங்களையும் ஆராயும் விருப்பத்தை இவை எனக்குள் ஏற்படுத்தினஎன்று சென்னை கோதே இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் இயக்குனர் டாக்டர் கேதரினா கார்ஜென் (Dr.Katharina Görgen) கூறினார்.


"பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுப்பதைப் பல்வேறு வழிமுறைகள் மூலம் நாங்கள் ஊக்குவித்துவருகிறோம். புதிய உதவிக் குறிப்புகளைத் தந்து, புதிய நுட்பங்களைக் கற்றுத்தருவதன் மூலம் வளரும் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். எங்கள் பயிற்சிக்குப் பிறகு, வெளிச்சம், வெளிப்பாடு, வடிவமைப்பு ஆகியவற்றுடன் புகைப்படக் கலையின் பிற கூறுகளையும் மனதில் கொண்டு, நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட புகைப்படங்களை எடுக்கும் திறனில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் திட்டங்கள் அனைத்தும் தொடர்பையும் தொடர்பு வலைப்பின்னலையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின்போது, மாணவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உதவுவதற்கான ஒரு வழியாகப் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்என்று சிபிபி அறக்கட்டளையின் மாணவர் வழிகாட்டியான ஹபீபா பேகம் கூறினார்.



மாணவர் கண்காட்சி அரசு அருங்காட்சியகம், 406, பாந்தியன் சாலை, சென்னை-600 008இல் காலை 9.30முதல் மாலை 5.00 மணிவரை (வெள்ளிக்கிழமைகள், அரசு விடுமுறை நாட்கள் தவிர) பிப்ரவரி 26முதல் ஏப்ரல் 17, 2022வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். எல்லா நேரங்களிலும் கோவிட்-19 தொடர்பான விதிமுறைகளையும், அரசு அருங்காட்சியகமும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும் முன்வைக்கும் விதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம். 


பத்திரிகைக்கான படங்கள்: கலைஞர்களின் படைப்புகள் சில கண்காட்சியின் கரு:

கதைகளின் நிலம் இது தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கான புகைப்படத் திட்டம். பலதரப்பட்ட மக்கள், இணையற்ற பாரம்பரியம், பசுமையான நிலப்பரப்புகள் ஆகியவற்றைக் கொண்ட தமிழ்நாடு, வளமான கதைகளின் நிலம். சென்னையிலும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் உள்ள இளம் கலைஞர்களை அவர்களின் லென்ஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊரைச் சித்தரிக்குமாறு அழைப்பு விடுத்தோம். ஐபோன்களைப் பயன்படுத்திப் புகைப்படம் எடுப்பதற்கான வழிகாட்டுதலைப் பெற்ற மாணவர்கள், நிலப்பரப்பையே தங்கள் படைப்புக்கான வெளியாகக் கொண்டு உயிர்ப்புள்ள வண்ணங்கள், அரூபமான வடிவங்கள், கண்ணைக் கவரும் நிழல்கள் அழுத்தமான சித்திரங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்துப் புகைப்படம் எடுத்தார்கள்.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.