Articles by "கேரளா"

கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Sabarimala today..Pooja details...23.11.2022




Morning

...........

3am....Thiru nada opens

3.05... Abhishekam

3.30am.... Ganapathy Homam

3.45am onwards Ghee Abhishekam starts and  it will continues till 11am

7.30am.... Morning pooja

12.30pm....Noon pooja

1pm....Nada will close

..............

Evening

3pm...Nada opening

6.30pm....Deeparadhana

7pm...Flower Abhishekam

9.30pm...Closing pooja

10.50pm Harivarasanam will start

11pm...Thirunada will close

சபரிமலை பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.... விரத முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 



ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.

4. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.

6. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.

7. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.

8. மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.

9. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

10. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

11. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று:

12. தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்.

13. தன் புலன்களை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றை தூய்மைப்படுத்துதல்,

14. தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்க வைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

15. மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும்.

16. எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.

17. ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது.

18. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது.

19. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.

20. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.



 சபரிமலை பூஜை நேரம்! 



Tomorrow's (30.11.2021) ceremonies at Sabarimala ...

 4am.... Holy Thirunada opening

 4.05 am..... Abhishekam

 4.30 am.... Ganapathi Homam

 Ghee Abhishekam from 5 to 7 am

 Usha Pooja at 7.30 am

 Udayasthamana Puja from 8 am to 9am

 11.30 am 25 Kalashabhishekam

 Following Kalabhabhishekam

 Noon Pooja at 12 noon

 Closing the thirunada  at 1 p.m.

 The temple will again open at 4 p.m.

 6.30pm.... Deeparadhana

 7 pm ..... Padi Pooja

 9 pm .... Night Pooja

 Harivarasanam will be sung at 9.50 pm and the  Thirunada will be closed at 10 pm

பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு!


சபரிமலை ஐயப்பன் கோயிலில்  வினியோகிக்கப்படும் அரவணை பாயசத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தவறானவை என்றும், உண்மைக்குப் புறம்பானது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சபரிமலை தேவஸ்தானத்தின் முக்கிய பிரசாதமான அரவணை பாயசம் மற்றும் அதன் தயாரிப்பு முறை குறித்து சமீப நாட்களாக சில இணையதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வரும் பொய் பிரச்சாரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கேவலமான மற்றும் அவதூறான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கைகளின் முழுப்பொறுப்பும் இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு  மட்டுமே இருக்கும் என தேவசம் போர்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

சபரிமலை தேவஸ்தானத்தின் அரவணை பிரசாதத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யும் சில இணையதளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபரிமலை செயல் அலுவலர் சன்னிதானம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



சபரிமலை முன்பதிவு மற்றும் விதிமுறைகள்! 

கேரளா:

 தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில்: 

மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் சபரிமலையில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 2,000 ஆக இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த எண்ணிக்கை 2,000 முதல் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 12மணிக்கு https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பூஜை விபரம்:

5 am .... Thirunada opening
5.05 am.... Abhishekam
Ghee abhishekam from 7 am to 11am
5.30 am.... Ganapati Homa Usha Pooja at 7.30 am
11.30 am.... 25 Kalashabhishekam
Udayasthamana Puja from 8am to 9am 12pm.....Kalabhabhishekam Noon Puja at 12.30pm
6.30 .... candle worship
Closing the nada at 1 p.m. The temple will open at 4 p.m. 7 o'clock ..... Padipooja
Nada closing time....9pm
8.30 pm .... Athazha Pooja
Harivarasana at 8.50pm

சபரி மலை பக்தர்களுக்கு விதிமுறைகள்:

- யாத்ரீகர்கள் தரிசனம் தேதியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட கோவிட் எதிர்மறை சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

- சமீபத்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, மெய்நிகர்-கியூ முன்பதிவுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் ஐடி மட்டுமே அனுமதிக்கப்படும்.

- 10 வயதுக்கு குறைவான மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- பெண் / பிறர் 50 வயதுக்கு குறைவான மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பாலினம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- 61 முதல் 65 வயதுக்குட்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.





சபரிமலை மகரவிளக்கு பூஜை

சபரிமலை:

கடும் நிபந்தனைகளுடன் வரும் மண்டல, மகரவிளக்கு கால சீசனை நடத்த கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் வரும் நவ., பாதியில் துவங்கும் மண்டல மகர விளக்கு சீசன் சபரிமலையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

நேற்று திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் சபரிமலை சீசன் பற்றிய ஆலோசனை கூட்டம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் வருவாய், போலீஸ், பொதுப்பணித்துறை, போக்குவரத்து, தேவசம்போர்டு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


                             சான்றிதழ் அவசியம்

இதில் மண்டல ,மகரவிளக்கு சீசனை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி கொரோனா பாதிப்பில்லை என்ற (கோவிட்19 நெகட்டீவ்)' சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவார்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை திறக்கப் படும். இங்கு பக்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே பம்பை செல்ல அனுமதிக் கப்படுவர்.


                        அரசு கடைகள் திறப்பு

பக்தர்கள் எண்ணிக்கை குறையும் என்ற காரணம் காட்டி கடைகள் எடுக்க வியாபாரிகள் முன்வராத பட்சத்தில் அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளை போல் சீசன் நடத்த முடியா விட்டாலும், கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு மண்டல, மகரவிளக்கு சீசனை நடத்த அரசு மற்றும் தேவசம்போர்டு எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது, என்று பந்தளம் மன்னர் பிரநிதி சசிகுமாரவர்மா கூறியுள்ளார்.




விமான விபத்து: கொரோனா பாதிப்பா?!  

திருவனந்தபுரம்: 

 வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில், விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்சுகள் வர தாமதமானதால் விமான விபத்தில் காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த மக்களே மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், விமானத்தில் சிக்கியவர்களை மீட்ட மக்கள் காயமடைந்தவர்களை தங்கள் சொந்த வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கேரள மக்களின் இந்த செயல் நாடு முழுவதும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விமான விபத்தில் உயிரிழந்த ஒரு பயணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மலப்புரம் மாவட்ட கலெக்டர்
கேபாலகிருஷ்ணனும் உள்ளடக்கம்.

இதையடுத்து, விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள், பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உள்பட 600 பேர் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டனர்.

பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  





Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.