ஏப்ரல் 2022

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த எழுத்தாளர்களுக்கான கூட்டம்! 




இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக  கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.  ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் இன்று துவங்கியது துவக்க உறையாற்றிய பா.இரஞ்சித்

தலித் எழுத்துக்கள் தான் என் திரைப்பயணத்தின் துவக்கம்.  உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிந்தது. 



வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னிப்பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல்.

90 களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது.  இப்பொது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத்தொடங்கியுள்ளது. 

அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். முன்பெப்போது  இல்லாத தலித் இலக்கியம் பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன.

'இன வரைவியல்' என்ற வகைமையை உருவாக்கிய பெரும்பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்களை குறித்து மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியை குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.



‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன் திரைப்படம்! 




அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்த்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 முதல் பிரத்தியேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். 

இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது. கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். 

தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில்:

“இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கன்பு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.. 

தற்போது நடிகராகவும் உருவெடுத்துள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கூறுகையில்:

“இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவை முன்னாள் நின்று நடித்ததால் சாணி காயிதம் எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும். திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குனர், அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், கலை இயக்குநராக ராமு தங்கராஜ், எடிட்டராக நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன், படைப்பாளியாக சித்தார்த் ரவிப்பட்டி ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் பிரைம் வீடியோ கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் சாணி காயிதம் திரைப்படமும்இணைகிறது. இதில் கெஹ்ராயியான், ஷேர்ஷா, சர்தார் உதம், ஜெய் பீம், குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, கூலி நம்பர்1, துர்காமதி, சலாங், சூரரைப் போற்று, வி சியூ சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், மாறா, பீமசேனா நளமஹாராஜா, மனே நம்பர் 13 பென்குயின், லா, சுபியும் சுஜாதாயும், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி மற்றும் பல அடங்கும். அதோடு பெஸ்ட் செல்லர், இன்சைட் எட்ஜ் சீசன் 3, மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா,ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ், பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும். இவை அனைத்தும் Amazon பிரைம் உறுப்பினர்களுக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றிக் கிடைக்கிறது. 

இந்தச் சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிளும் திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப்பினர்கள் எங்கும் எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். Prime உறுப்பினர்கள் பிரைம் வீடியோ செயலி மூலம் எபிசோடுகளைப் பதிவிறக்கலாம் மற்றும் அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். ஆண்டுக்கு ₹1499 எனும் கட்டணம் கொண்ட பிரைம் மெம்பர்ஷிப்புடன் பிரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றிக் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் இது குறித்து www.amazon.in/prime-இல் மேலும் அறியலாம்.



விமல் ஏமாற்றிவிட்டார் - தயாரிப்பாளர் மகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்




நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியதாவது:

பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து " மன்னர் வகையறா " என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.                

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார். 

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார். 

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு  மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார். 

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் " உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் " என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். 

சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார். 

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல். இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது 

தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார். அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும்  தரவில்லை. 

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல். எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

'கதிர்' திரைப்பட விமர்சனம்



படம்: கதிர்

நடிப்பு: 

வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா

தயாரிப்பு: தினேஷ் பழனிவேல்

இசை: பிரசாந்த் பிள்ளை

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்

இயக்கம்: தினேஷ் பழனிவேல்

பி.ஆர்.ஒ: சதீஷ் (AIM)

ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் ரசிக்கும் படியான ஒரு திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்படுகிறது இந்த “கதிர்” திரைப்படத்தில்

படத்தின் கதாநாயகன் வெங்கடேஷ் கல்லூரியில் படித்துவரும் போது நாயகி பவ்யா ட்ரிகாவை சந்திக்கிறார். இவர்களுக்குள் ஏற்படும் காதல், ஒருகட்டத்தில் முறிந்துவிடுகிறது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன்னுடைய சொந்த கிராமத்தில் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றி வருகிறார் வெங்கடேஷ்.

தந்தையால் கண்டிக்கப்படும் வெங்கடேஷ், சென்னை நோக்கி வேலை தேடி வருகிறார். சென்னையில் இருக்கும் தன்னுடைய கல்லூரி நண்பன் வசிக்கும் வாடகை வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் நாயகன் வெங்கடேஷ். நேர்காணலுக்கு செல்லும் வெங்கடேஷுக்கு எங்கும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிறார். விரக்தியில் இருக்கும் வெங்கடேஷ், தான் தங்கி இருக்கும் வீட்டின் பெண் உரிமையாளர் ரஜினி சாண்டியுடன் நட்பாக பழகுகிறார்.

வேலை தேடும் வெங்கடேஷுக்கு வேலை கிடைக்கிறதா, ரஜினி சாண்டியுடன் ஏற்படும் நட்பு வெங்கடேஷுக்கு உறுதுணையாக இருக்கிறதா அல்லது அவருடைய வாழ்க்கையை புரட்டி போடுகிறதா என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தின் திரைக்கதை, கல்லூரி வாழ்க்கை, காதல், புரட்சி, குடும்பம் என அனைத்தையும் தொட்டு அழகாக கருத்து சொல்கிறது இத்திரைப்படம். படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெங்கடேஷ், வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ரஜினி சாண்டி மற்றும் நாயகனின் நண்பர்கள் என பலர் அனைவரும் இதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தங்களுடைய நடிப்பில் குறை ஏதுமின்றி அற்புதமாக நடித்துள்ளனர். 

படத்தின் இரண்டாவது பாதிக்கு மேல் சிறப்பு காட்சியில் தோன்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப், ஒரு புரட்சியாளனாக தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார். நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பாவ்யா ட்ரிகா தன்னுடைய அழகிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். பாவ்யா ட்ரிகா தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ரஜினி சாண்டியின் நடிப்பு, குறிப்பாக அவருக்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரல் பார்வையாளர்களை ஈர்க்க வைக்கிறது.

கார்த்திக் மேத்தா மற்றும் உமா தேவியின் பாடல் வரிகளில் பிரஷாந்த் பிள்ளையின் இசை மற்றும் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது. தினேஷ் பழனிவேலின் கதை, திரைக்கதை, வசனத்திலும், அவருடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களுக்கு கருத்து சொல்லுவது மட்டுமின்றி, பார்வையாளர்கள் ரசித்து பார்க்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் எங்கும் ஆபாச காட்சிகளோ, அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்பது பாராட்டுதலுக்குரியது.

மொத்தத்தில் இந்த 'கதிர்' வீசும்..... 

நீரிழிவு நோய் பரவல் மீது தேசிய அளவிலான முதல் ஆய்வு!



மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் நிதி ஆதரவோடு மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஒருங்கிணைப்போடு நாடு முழுவதும் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் நீரிழிவு நிலை இருப்பது அறியப்பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களே நீரிழிவு மீது சிறப்பான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என கண்டறிந்துள்ளது. 

இவர்களுள் பாதிக்கும் குறைவான நபர்கள் மட்டுமே இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு ஆகியவற்றின் மீது நல்ல கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் 7.7% நபர்கள் மட்டுமே இந்த மூன்று இலக்கு அளவுகளையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்கின்றனர். 

இந்தியாவின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 113,043 நபர்களை கொண்ட மிகப்பெரிய மாதிரி அளவை உள்ளடக்கியதாக இருந்த இந்த ஆய்வு, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் முதல் விரிவான நோய்த்தொற்று மீதான ஆய்வு என்ற பெருமையைப் பெறுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் தி லேண்செட் டயாபடீஸ் அண்டு எண்டோகிரனாலஜி என்ற மருத்துவ அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நாட்டின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், பல்வேறு நிலைகளையும் கொண்ட மாதிரி வடிவமைப்பு முறையைப் பயன்படுத்திய இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 33,537 நபர்கள் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் மற்றும் 79,506 நபர்கள் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.  தேசிய அளவில் பிரதிநிதித்துவ மாதிரியாக, நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்பட்ட 5789 நபர்களின் அடிப்படையில் இந்தியா முழுமைக்கும் நீரிழிவு கட்டுப்பாடு நிலையைக் குறித்த மதிப்பீடுகளை முதன்முறையாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. 

 

இந்த ஆய்வு வெளிப்படுத்தும் அம்சங்கள்:

 

  • நீரிழிவு நிலையுள்ள மக்களுள் 36.3% நபர்கள் இரத்த சர்க்கரை அளவை சிறப்பான கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், 48.8% நபர்கள் இரத்த அழுத்தத்தின் மீது நல்ல கட்டுப்பாட்டையும் மற்றும் 41.5% நபர்கள் எல்டிஎல் கொழுப்பு கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர்.

 

  • உயர்கல்வி, ஆண்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் குறைவான காலஅளவில் நீரிழிவு நிலையுள்ளவர்கள் ஆகிய அம்சங்கள், நீரிழிவு சிகிச்சையின் ஒருங்கிணைந்த இலக்குகளில் சிறப்பான அளவோடு தொடர்புடையதாக இருக்கின்றன.

 

  • இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க ஒரு இரத்த சர்க்கரை அளவீடு  சாதனத்தை தாங்கள் வீட்டில் பயன்படுத்துவதாக இம்மக்களுள் 16.7% நபர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்சுலின் செலுத்திக் கொள்பவர்களுள் வெறும் 36.9% நபர்கள் மட்டுமே இரத்த சர்க்கரை அளவை சுயமாக கண்காணிப்பதை மேற்கொள்கின்றனர்; நீரிழிவு உள்ளவர்கள் அனைவரும் அவர்களது இரத்த சர்க்கரை அளவை உரிய காலஅளவுகளில் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அனைவரும் இதை செய்வதில்லை.

 

  • நீரிழிவு நிலையுள்ள நபர்களுள் 20% - க்கும் குறைவான நபர்களே ஒவ்வொரு நாளும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூன்று பரிமாறல் அளவுகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (ஒரு நாளுக்கு ஐந்து பரிமாறல் அளவுகள் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்புடன் ஒப்பிடுகையில்)

 

  • நீரிழிவு நிலை உள்ளவர்களுள் 25%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே மிதமானதிலிருந்து, கடுமையான உடற்பயிற்சி / உடலுழைப்பு  செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

 

 

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் மற்றும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் துணைத் தலைவருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா இதுதொடர்பாக கூறியதாவது: 


இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையில் தேசிய அளவில் ஒரு பிரதிநிதித்துவ ஆய்வில் HbA1c, இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் கொழுப்பு போன்ற நீரிழிவு சிகிச்சை இலக்குகளை அடைவது மீது புதிய தரவுகளை இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் வழங்குவதால் இவைகள் அதிக முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கின்றன.  நீரிழிவு நிலை இருப்பதாக சுயமாக தெரிவித்த நபர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் நல்ல இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் மற்றும் பாதிக்கும் சற்றுக் குறைவானர்கள் மட்டுமே இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் கொழுப்பு அளவில் நல்ல கட்டுப்பாட்டையும் பேணி வருகின்றனர் என்று நாங்கள் இந்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறோம்.  பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே கணிசமான அளவு வேறுபாடுகள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது.  ஆகவே, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி / உடலுழைப்பு செயல்பாட்டின் முக்கியத்துவம் குறித்து இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு உடனடி, அவசரத்தேவை இருக்கிறது.  இதை அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத முகமைகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.”

 

 

இந்த ஆய்வின் முதுநிலை ஆசிரியரும் மற்றும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் தலைவருமான டாக்டர். வி. மோகன் இதுகுறித்து மேலும் பேசுகையில்: 


“நீரிழிவு நிலையுள்ள இந்திய மக்கள் மத்தியில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது உகந்த நிலையை விட குறைவாகவே இருப்பதை எமது இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  இந்தியாவில் சுகாதாரம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைப் பொறுப்பாக இருப்பதால், நீரிழிவு சிகிச்சை இலக்குகளை எட்டுவதில் பிராந்தியங்களுக்கிடையிலான மற்றும் மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடுகள் பற்றிய தகவலை எமது ஆய்வுத் தகவல் வழங்கியிருப்பதால், இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை வழங்கலையும் மற்றும் கண்காணிப்பையும் மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளை வகுப்பதில் அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்,” என்று கூறினார்.

 

நீரிழிவு சிகிச்சைக்கான இலக்குகளை எட்டுவதும், ஆரோக்கியமான நடத்தை நடைமுறைகளை கடைப்பிடிப்பதும் இந்தியாவில் உகந்த அளவைவிட குறைவாகவே இருப்பதை ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் வலுவாக சுட்டிக்காட்டுகின்றன.  இந்திய மக்களில் நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் இடர்பாட்டை குறைக்க இரத்த சர்க்கரை, இரத்தஅழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகிய அளவுகளை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கான அவசியம் இருப்பதை இந்த முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.  இந்தியாவில் தொடக்கநிலை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை அளவுகளில் நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டும் கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம் உதவும்.

 

 VIDEO HERE:


ENERGY SWARAJ CLIMATE CHANGE AND I




Agurchand Manmull Jain College invited Dr Chetan Singh Solanki, 'The Solar Man of India' to give a talk on 'Energy Swarajya' to their students on 22nd April 2022. Dr Solanki, has been living in his 'Solar Bus' from 2020 and will be travelling all over India until 2031 to sensitise people on 'Energy Swaarajya'. Commemorating the 'Earth Day' Dr. Solanki said that he was launching the Energy Swaraj Club later in the day. Speaking on the occasion, he emphasised on the need to address the issue of heavy energy dependence on fossil fuels and switch to 100% use of Solar Energy. He wanted everyone present to be responsible about their energy consumption. 

He urged the students to contribute to the solution and not pollution. He highlighted the connection between energy dependence, the nation's economy, global warming and human survival and existence. He alerted the students that the earth's temperature is rising mainly due to the CO2 emission which is 48% above the permitted levels. Global GDP increases while Nature's health decreases, he said. Excessive use of fossil fuels like coal, gas and oil as the main sources of energy has resulted in this he added. Furthermore, natural disasters like heat and cold waves are also on the rise, for which immediate action is absolutely necessary, he stressed. ' Now or Never' he cautioned. His solution is to switch to 100% Solar Energy for all our energy needs. 



Dr. Solanki suggested a two rule "fundamental laws of human existence - limit the consumption and localise the production" as a sustainable solution for the problem. Besides, he necessitated a 3-step approach - Avoid (use of energy), Minimise(consumption) and Generate (Solar Energy) to switch to 100% Solar Energy. This, he added, will also generate jobs and add to the economy. He wanted everyone to act on spreading awareness about Energy Swaraj Movement. He urged Institutions and individuals to lead the Movement, by starting and spreading Energy Literacy, Certification, reduce energy consumption, encourage others too, start Energy Swaraj Club.  Dr. Solanki urged the students to spread awareness through social media on this energy independence movement. 

He warned that absence of effort now will make temperatures rise at least by 3°C and hence demanded that each one should accept responsibility for the change.  An interactive session followed the talk. Among the many questions, there was a question on how countries in the polar regions would generate Solar Energy. To which he said there are alternate sources like bio mass that are also available. The students were then allowed to visit his 'home' - a solar bus, in which he is going to live for 11years and travel around the country.


ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்”




தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக  ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022  ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. 

“கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்."

இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக  நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இயக்குநர் பிரியா V பேசியதாவது:

வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு; எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இளையராஜா சாருக்கு நன்றி அவருக்கு அவரது இசைக்கு ஒரு தொடரை அர்ப்பணித்துள்ளோம்.  இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி. 

ஜீ5 சார்பாக கௌசிக் நரசிம்மன் பேசியதாவது:

மீடியா நண்பர்களுக்கு வணக்கம், வழக்கமாக மாதாமாதம் புது புது தொடர்களுடன் உங்களைச் சந்தித்து வருகிறோம். இது உண்மையிலேயே புதுமையான ZEE5 ஒரிஜினல் சீரீஸ். நிஜமாகவே தொடரை பார்க்கும் போது அதை உணர்வீர்கள். ஒரு வீடு பல ஞாபகங்களை புதைத்து வைத்திருக்கும்,  அந்த வீட்டின் மேல் பயணமாகும் கதை. கேட்கும் போதே மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வருடமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி. 

ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன் பேசியதாவது:

முதலில் இதை ஆரம்பிக்கும் போது ஆந்தாலஜி செய்ய வேண்டாமென முடிவெடுத்திருந்தோம், ஆனால் இது ஒரு ஆந்தாலஜி, ஒரு வீட்டின் மீது நிகழும் கதை. பிரியா சொன்ன கதை மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. இத்தொடரில் நடித்த அனைவருமே அட்டகாச நடிப்பை தந்துள்ளார்கள். இந்த ஒரிஜினல் சீரீஸ் எட்டு அத்தியாயங்கள் கொண்டது. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்குமென நம்புகிறோம். நன்றி. 

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் பேசியதாவது:

எப்போதும் டீம் ஒர்க் வெற்றி பெறும் என்பார்கள், அது இந்த தொடரில் நிரூபணமாகியுள்ளது. இது மேலும் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பிரியா முதன் முதலில் சொன்னபோதே எங்களுக்கு கதை பிடித்திருந்தது. சொன்னவுடனே கௌசிக்கும் ஆரம்பிக்க சொல்லிவிட்டார். ஜீ5 இத்தொடரில் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார்கள்.  1964 - 2015 ஒரு வீட்டில் நடக்கும் கதை. ஒரு வீட்டில் நடப்பதால் பல இடங்களுக்கு அலைந்தோம், கடைசியில் ஆச்சி ஹவுஸில் சிறு சிறு வேலைகளை செய்து இத்தொடரை எடுத்தோம். இத்தொடரில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக முக்கியம். சூர்யா மிகச் சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பகத் மிகப்பெரிய பலமாக இருந்தார். மொத்த குழுவும் மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். எட்டு அத்தியாயங்களில் நீங்கள் ஏற்கனவே கேட்ட பாரதியார் பாடல்களை புதுமையான இசையில் தந்துள்ளோம். நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பிரியா மீது நம்பிக்கை வைத்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். 80 நடிகர்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். அவர்களின் உழைப்புக்கு நன்றி. இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி. 

ஒளிப்பதிவாளர் பகத் பேசியதாவது:

இது எனது முதல் ஒரிஜினல் சீரீஸ். முரளி சார் பிரியா மேடம் இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஒரு கதைக்குள் நிறைய பயணிக்க ஒரிஜினல் சீரீஸ் மிக வசதியாக இருக்கிறது, ஒரு பெரிய முழு நீள திரைப்படத்தை போல்  பிரியா மேடம் அழகாக செய்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். தமிழில் மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள ஜீ5  இந்த தொடரை வெளியிடுவது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் A.S. ராம் பேசியதாவது:

முரளி ராமன் சார் பிரியா மேடம் இருவரால் தான் இங்கு இருக்கிறேன், இருவருக்கும் நன்றி. ஜீ5 லிருந்து தந்த ஊக்குவிப்பு மிக பெரிய உற்சாகத்தை தந்தது. இந்த தொடரில் பணியாற்றியது கரும்பு தின்ன கூலி கொடுத்தது போல தான். என் டீமிற்கு நன்றி. தொடரைப் பார்த்து உங்கள் பார்வையை சொல்லுங்கள் நன்றி. 

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது:

இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. அனந்தம் இருந்தால் அங்கு ஒரு நம்பிக்கையும் இருக்கும். அதை தான் இந்த அனந்தம் வீடும் சொல்கிறது. அனந்தம் உங்கள் எல்லோருக்கும் பிடித்தமான பயணமாக இருக்கும். நன்றி. 

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் ஒரிஜினல் சீரீஸில் இயக்குனர் பிரியா V பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குநர் பிரியா V.

திரைக்கதை - பிரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் - பிரியா V | வசனங்கள் - ப்ரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு - பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் - சூர்யா ராஜீவன் | இசை - A.S. ராம் | எடிட்டர் - சதீஷ் சூர்யா

ஒரிஜினல் தொடர்கள் எனும்போது,  ஓடிடி பார்வையாளர்களின் முக்கிய தேர்வாக ஜீ5 விளங்குகிறது. 'விலங்கு' முதல் 'முதல் நீ முடிவும் நீ' வரை இதில் வெளியான கதைகள் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஜீ5 இல் வெளியான ஒரு வாரத்திற்குள் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டி உலகளாவிய பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளது. 

இப்படம் தமிழ் / தெலுங்கு / கன்னடம் / இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. 12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ தியேட்டர் நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், என ஜீ5 ஆனது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!



24 மணி நேரம் திரையரங்கில் ஓடிய கே.ஜி.எப் திரைப்படம்!






திருப்பூர்:

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி  திருநாளை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இந்த நேரத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து  கே.ஜி.எப்  வெளியானது. கே.ஜி.எப் திரைப்படம் திருப்பூரில் புகழ் பெற்ற  எம்.ஜி.பி கிரான்ட்  திரையரங்கிலும் வெளியானது.  கே.ஜி.எப் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில்  எம்.ஜி.பி  கிரான்ட் தியேட்டரில் 24 மணி நேரம் தொடர்ந்து ஓடி இந்த படம் சாதனை படைத்துள்ளது. 



இதை பற்றி எம்.ஜி.பி  கிரான்ட் தியேட்டர் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் கூறுகையில்: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு பிறகு கே.ஜி.எப் திரைப்படம் இந்த திரையரங்கில் 24 மணி நேரம் தொடர்ந்து காட்சியளிக்கப்பட்டது. காலை 4 மணி, 7மணி, 10.30மணி, மதியம் 1.45 மணி, மாலை  5 மணி , இரவு 8.15மணி, இரவு 11.30மணி என இடைவிடாது காட்சியளிக்கப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை குறையவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மிகுந்த நஷ்டம் அடைந்தோம். தற்போது இந்த மாபெரும் வெற்றியை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.   

பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த சமூக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள்! 




இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக   வானம் கலைத்திருவிழா , தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். பி.கே ரோசி திரைப்படவிழா, புகைப்படக்கண்காட்சி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சியைத்தொடர்ந்து  மேடை நாடகங்களும் நடைபெற்றன.

சென்னை ஐ, சி எப் அம்பேத்கர் அரங்கத்தில் சமுக நீதியைப்பேசும் நாடகங்கள் நடைபெற்றன. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இந்த நாடகங்கள் இருந்தன. நாட்டின் அரசியல் போக்குகள், அதிகாரத்தின் கோரமுகங்கள், ஆட்சியாளர்களின் மெத்தனங்கள் , மக்களின் உளவியல் என கலவையான நாடகங்கள் நடைபெற்றன.

நிகழ்வில் பேசிய ரஞ்சித்:

சினிமாவிற்கு முன்பு நான் கல்லூரிக்காலங்களில் நாடகங்கள் நடத்தியிருக்கிறேன். சினிமாவைப்போல நாடகங்கள் மீதும் பெரும் விருப்பம் உண்டு. பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் கலைகள் வழியாக நாம் சமத்துவத்தை யும் , மனிதநேயத்தையும் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  சினிமா, மற்றும் பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ,நாடகங்கள் இன்னும் என்னென்ன கலைகள் வழியாகவெல்லாம் இந்த சமூகத்தில் அன்பு திழைத்திருக்க மக்கள் மத்தியில் நம்மால் பேச முடியுமோ நாம் பேசுவோம். நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து மக்களிடையே சமூகத்திலிருக்கும் முரண்களை பேசுவதோடு குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் . தொடர்ந்து மனித மாண்பை மீட்டெடுக்க இயங்குவோம் .

தொடர்ந்து இனி நாடகத்திருவிழா நடத்தும் திட்டமும் இருக்கிறது என்றார்.

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் புகைப்படக்கண்காட்சி  நடைபெற்றுவருகிறது. மிக முக்கியமான புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெருகின்றன.  ஓவியக்கண்காட்சி வருகிற 23ம் தேதி துவங்கவிருக்கிறது.



CPCL’s Cyclothon adds energy to awareness on fuel conservation!



Chennai:

At Manali, the day broke today (17th April) with an awareness campaign at its high spirits on fuel conservation. Shri Arvind Kumar, Managing Director, CPCL, inaugurated the Mega Cycle Rally in the presence of senior officials of CPCL.

 

Over 1000 individuals cycled their way to drive home the message. Former Indian Basketball Team Captain Padma Shri P. Anitha, Badminton Player Velan, TV celebrities of small screen fame Actress Sujitha & Kavya, Actor Kumaran lead the rally.

 

Saksham Cycle Day 2022 was organised by Chennai Petroleum Corporation Limited (CPCL) in support of the initiative of Petroleum Conservation Research Association (PCRA), set up under the aegis of Ministry of Petroleum & Natural Gas, Government of India at Manali today. Top Management officials of CPCL Shri Arvind Kumar, Managing Director, Shri S. Krishnan, Director (Operations) and other senior officials participated in the programme. The Chennai campaign is one among the 200 events planned throughout the country and in cities including Mumbai, Bangalore, Hyderabad, Kolkata, and Agra.



 

People from all walks of life participated in Saksham rally in Manali, Chennai. Students, workers, professionals, activists, and house wives were among them. The 5-km rally started and ended at CPCL Polytechnic College.

 

In today’s scenario of highly depleted non-renewable resources and the world shifting its focus to alternatives, it is a matter of great concern to conserve fuel. Saving fuel not only helps to contribute towards conserving our resources, but do each one’s bit in controlling pollution too, which again is a major threat to the lives.

 

Given this milieu and the fact that most of the non-renewable resources will get depleted in the next 50 years, Cyclothon rallies are being held in many cities of the country for a wide-spread awareness. It is encouraging to see many people have volunteered in today’s rally to display their support for the cause.      

 

Saksham Cycle Rally is India’s Premier Cyclothon and an initiative by Petroleum Conservation Research Association, a non-profit organization set up in 1978 under the aegis of Ministry of Petroleum & Natural Gas, Government of India. Petroleum Conservation Research Association along with Oil Companies viz. IOCL, BPCL, HPCL, ONGC, GAIL, OIL, MRPL, CPCL, and NRL takes a number of citizen-centric initiatives to promote awareness about the need and ways to conserve petroleum products.

 


ATTACHMENT OF EXTRA COACHES IN TRAINS



To clear the extra rush of passengers during the combined Festive Season during this weekend, Extra Coaches are attached in various trains over various sectors in Southern Railway on 12th, 13th and 14th April 2022. The details of Extra Coaches attached for the benefit of passengers on and from 15th April 2022  are as follows:-

·         Train No 22667 Nagercoil – Coimbatore Express will be attached with Extra 2 Sleeper Class Coaches and 1 General Second Class Coach on 15th April 2022

·         Train No.22662 Rameswaram – Chennai Egmore Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th April, 18th April, 19th April and 20th April 2022

·         Train No.16106 Tiruchendur – Chennai Egmore Express will be attached with one Extra  AC Three Tier Coach on 15th April 2022

·         Train No.16606 Nagercoil – Mangalore Express will be attached with one Extra Chair Car on 15th April 2022

·         Train Nos.16159 Mangalore – Chennai Egmore Expresses will be attached with one Extra Sleeper Class Coach and one General Second Class Coach on 15th April 2022

·         Train No.16160 Mangalore- Chennai Egmore Express will be attached with one Extra General Second Class Coach on 15th April 2022

·         Train No.16160 Mangalore- Chennai Egmore Express will be attached with one Extra Sleeper Class Coach on 17th April 2022

·         Train No.16175 Chennai Egmore – Karaikkal Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th and 17th April 2022

·          Train No.16187 Karaikkal – Ernakulam Express will be attached with one Extra Sleeper Class Coach on 16th and 18th April 2022

·         Train No.16188 Ernakulam – Karaikkal Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th, 17th and 19thApril 2022

·         Train No.16176 Karaikkal – Chennai Egmore Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th, 16th and 18th April 2022

·         Train No.22657 Tambaram – Nagercoil Express will be attached with one Extra Sleeper Class Coach on 17th April 2022

·         TrainNo.22658 Nagercoil – Tambaram Express will be attached with one Extra Sleeper Class Coach on 18th April 2022

·         Train No.16303 Kannur – Ernakulam Express will be attached with one Extra Chair Car on 16th April 2022

·         Train No.16303 Ernakulam – Thiruvananthapuram Express will be attached with one Extra Chair Car on 17th & 18th April 2022

·         Train Nos.16308/16307 Kannur – Alappuzha – Kannur Expresses will be attached with one Extra General Second Class Coach on 16th April 2022

·         Train No.16306 Kannur- Ernakulam Express will be attached with one Extra General Second Class Coach on 17th April 2022

·         Train No22642 Shalimar – Thiruvananthapuram Express will be attached with one Extra Sleeper Class Coach on17th April 2022.

·         Train No.16317 Kanniyakumari – Sri Mata Vaishno Devi Katra Railway Station Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th April 2022

·         Train No.16318 Sri Mata Vaishno Devi Katra Railway Station - Kanniyakumari Express will be attached with one Extra Sleeper Class Coach on 18th April 2022

·         Train No.20601 Dr MGR Chennai Central – Madurai Duronto Express will be attached with one Extra Sleeper Class Coach on 15th April 2022

·         Train No.20602 Madurai -  Dr MGR Chennai Central Duronto Express will be attached with one Extra Sleeper Class Coach on 17th April 2022

·         Train No.16319 Kochuveli – Banaswadi Express will be attached with one Extra AC Three tier Coach on 16th April 2022

·         Train No.16320 Banaswadi -  Kochuveli Express will be attached with one Extra AC Three tier Coach on 15th and 17th April 2022

·         Train No.22207 Dr MGR Chennai Central – Thiruvananthapuram AC SF Express will be attached with one AC Two Tier Coach on 15th April 2022

·         Train No.2208 Thiruvananthapuram – Dr MGR Chennai Central AC SF Express will be attached with one AC Two Tier Coach on 17th April 2022

The Following Trains will be attached with one Extra Sleeper Class Coach till 20th April 2022

·         Train No.16723 Chennai Egmore – Kollam Express,

·         Train No.22661 Chennai Egmore – Rameswaram Express,

·         Train Nos.16851/16852 Chennai Egmore - Rameswaram - Chennai Egmore Expresses

·         Train No.16866/16865  Thanjavur -  Chennai Egmore – Thanjavur Expresses

·         Train Nos.16603/16630 Mangalore – Thiruvananthapuram Expresses

·         Train Nos. 12602/22638 Mangalore – Dr MGR Chennai Central Expresses

·         Train No.12695/12696  Dr MGR Chennai Central – Thiruvananthapuram – Dr MGR Chennai Central Expresses

·         Train No.22639/22640 Dr MGR Chennai Central – Alappuzha – Dr MGR Chennai Central Expresses

·         Train No.16343 Thiruvananthapuram – Madurai Express

·         Train Nos.16348/16347 Mangalore –Thiruvananthapuram – Mangalore Expresses

·         Train Nos 12620/12619 Mangalore – Lokmanya Tilak Terminus – Mangalore Expresses

·         Train No.16127 Chennai Egmore – Guruvayur Express  

The Following Trains will be attached with one Extra Sleeper Class Coach till 21st April 2022

·         Train No.16724 Kollam -  Chennai Egmore Express

·         Train Nos.16604/16629 Thiruvananthapuram - Mangalore Expresses

·         Train Nos.12601/22637 Dr MGR Chennai Central – Mangalore Expresses

·         Train No.16344 Madurai – Thiruvananthapuram Express

·         Train No.16128 Guruvayur – Chennai Egmore Express

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.