பிப்ரவரி 2023

Hungama strengthens its regional footprint, launches its first Tamil web series ‘Maaya Thotta’



Chennai:

Hungama, India’s largest digital entertainment company announces the launch of ‘Maaya Thotta’, its first Tamil original. The show features popular stars of the Tamil entertainment industry Chaitra Reddy, Amit Bhargav and Kumaran Thangarajan. The series kicks off with the assassination of a Minister under mysterious circumstances amidst the presence of high security. The police investigation to unveil the truth behind the sinister murder, turns into a race against time.       

 

Suspense, action, and drama woven together into one of the most nail-biting stories with an unpredictable ending, “Maaya Thotta” makes for the complete package. Directed by Nandhakumar Raju, the show is produced by Madhu Alexander & Prabhu Antony in association with Hungama.

 

Speaking about the show, Siddhartha Roy, CEO, of Hungama Digital Media said, “Our vision at Hungama has always been to create, innovate and deliver entertainment through our original library of content. With our first Tamil original series Maaya Thotta, we are making an entry into the Tamil regional market which is a step forward in the direction of expanding our footprint in the South. We strongly believe that our audiences will enjoy the series, the high impact performances of the actors and compelling storyline. We further intend to launch more shows that will appeal to the audiences in the regional demographics, especially the South and provide them with a complete package of entertainment”.

 

Director Nandhakumar Raju said, “Households, particularly in the South thrive on content that entails suspense and action and my aim was to offer them just that. Maaya Thotta is a story that will make the audiences wonder and engage in thought. It is a story that I hope will gain mounting interest from the audience and appreciation for its unique, different and riveting storyline. I am delighted to have the chance to direct Hungama's first original Tamil series and look forward to working with them on more projects in the future."

 

Model and actress Chaitra Reddy said, “I am thrilled to be a part of Hungama’s first Tamil original show. Maya Thotta is a perfect blend of suspense and action with a pinch of humour involved. Personally, playing the role of a police inspector was quite empowering and refreshing. I am sure the audience will be in for a complete rollercoaster of thoughts to determine the real culprit. I look forward to the audience's positive review of the show and hope it is a complete entertainer for them.”

 

Audiobook narrator and popular actor Amit Bhargav said, “Suspense and action are genres that are close to the heart of every Tamil household. Maya Thotta’s engaging and unique storyline will keep the audience wanting for more. Getting into the character's skin and navigating through every twist and turn of the story was exciting. I am glad to have shared screen space with Chaitra and Kumaran and play a pivotal character in Hungama’s first Tamil original.”

 

Talented actor Kumaran Thangarajan said, “I play the role of a security detail with secrets of his own that will turn out to be one of the biggest plot twists in the show. I am sure the audience will never have seen it coming and the unpredictability at every step is exactly the USP of the show. Being Hungama’s first Tamil original and being able to be a part of it holds significance for me too. I hope that the series is well-received by the audience and is lauded for its exceptional storytelling.”



60-year-old with Severe Parkinson’s disease gets a new life after Deep Brain Stimulation at Fortis Vadapalani!




Chennai: 

A 60-year-old patient with off-state Parkinson's disease with developing OFF dystonia found fresh hope after Deep Brain Stimulation surgery (DBS) at Fortis Hospital Vadapalani's recently launched Comprehensive Parkinson’s Disease and Movement Disorder Center. DBS is a neurological technique that involves implanting hair-thin electrodes deep inside the brain to stimulate the brain and alleviate Parkinson's symptoms. Under the guidance of Dr. K Bhanu, HOD Neurology, the Fortis team led by Dr. Vikash Agarwal, Parkinson’s Disease and DBS Specialist, successfully completed the 10-hour long surgery. The patient was presented in a state of complete immobility and was non-responsive to medication. After carefully reviewing the case, the team of neurologists, which included Dr. Vikash Agarwal, Parkinson’s Disease and DBS Specialist, Dr. K. Visvanathan, Senior Consultant Epilepsy and Functional Neurosurgeon, Dr. Shubha Subramanian, Consultant Neurologist, and Dr. K. Sudhakar, Consultant Neurosurgeon, concluded that DBS would be the most effective treatment for his condition.

Dr. Vikash Agarwal, Parkinson’s Disease and DBS Specialist, Fortis Hospital Vadapalani, said: 

“Deep Brain Stimulation is a boon for patients with severe Parkinson's disease and those taking unacceptably high dosages of medicines.  The patient, who is in his 60s, came to see us in a state of off dystonia, a drug-resistant form of Parkinson's disease. The team completed the 10-hour long surgery and implanted the electrodes in the patient’s brain. The first challenge in such cases is that older adults typically have co-morbid conditions. Additionally, any kind of external implants to the body may cause bleeding and infection, both of which might lead to stroke. As assessing the patient's brain response is necessary, the surgery must be carried out while the patient is awake. However, the success rate of DBS surgery is high when performed by qualified movement disorder specialists, neuro experts and with advanced medical technology. A successful operation will result in an almost 15-year extension of quality life in Parkinson’s patients in most cases.




Mr. Venkata Phanidhar Nelluri, SBU Head, Fortis Hospitals, Chennai said:

“We are excited to launch Fortis Comprehensive Parkinson's Disease and DBS Clinic, to provide cutting-edge treatment for movement disorders. The DBS Clinic would address Movement Disorders and empower patients to live a normal, self-sufficient life.” “In Tamil Nadu, there are very few facilities dedicated to providing high end interventions for movement disorders. Our centre has the distinction of hosting a multidisciplinary team of Neurologists, Neurosurgeons, Neuro Anaesthetists, Psychiatrists, Psychologists, Pain Management Specialists, and Neuro Rehabilitation Specialists for providing Comprehensive DBS treatment. We have made conscious efforts to ensure that we provide DBS treatments at an affordable cost.” 

About Fortis Hospital, Vadapalani Fortis Hospital:

Vadapalani is the second facility within Chennai from the country’s fastest growing healthcare group – Fortis Healthcare and centrally located in the bustling epicentre of Arcot Road, Vadapalani. The 250 bedded Quaternary care super specialty hospital hosts a 24x7 Emergency Centre with Ambulance Services, Centre of Excellence in Cardiac, Gastro, Renal, Neuro, Trauma & Orthopedics Care. We are the largest multi organ transplant centre in Chennai which includes heart, lung, liver, kidney, small bowel, and pancreas. 

About Fortis Healthcare Limited:

Fortis Healthcare Limited – an IHH Healthcare Berhad Company – is a leading integrated healthcare services provider in India. It is one of the largest healthcare organizations in the country with 27 healthcare facilities, 4,300 operational beds and 400 diagnostics centers (including JVs). Fortis is present in India, United Arab Emirates (UAE), Nepal & Sri Lanka. The Company is listed on the BSE Ltd and National Stock Exchange (NSE) of India. It draws strength from its partnership with global major and parent company - IHH, to build upon its culture of world-class patient care and superlative clinical excellence. Fortis employs ~23,000 people (including SRL) who share its vision of becoming the world’s most trusted healthcare network. Fortis offers a full spectrum of integrated healthcare services ranging from clinics to quaternary care facilities and a wide range of ancillary services.


Cyclothon Promoting Safe Disposal of E- Waste Organized by Phoenix Marketcity!



Chennai: 

Phoenix Marketcity one of the premium mall in Chennai hosted an e-waste campaign aimed at spreading awareness on the safe and effective waste disposal of electronic gadgets. The 25-km cyclothon consisting of more than round 800 participants flagged off on Sunday at 7 am from Decathlon in West Mogappair had its finishing point at Phoenix Marketcity Chennai. The jubilant crowd cheered for their cyclists arriving at Phoenix Marketcity emphasizing and highlighting the need and significance of safe disposal of e-waste coupled with focus on the harmful environmental and biological hazards. The participants finally were awarded with certificates and gift vouchers from the Apple’s Premium Partner Store - Aptronix .

Noted ISRO Scientist Padma Bhushan Nambi Narayan also lauded the efforts while having inaugurated the e-waste bin at Phoenix Marketcity on Friday. E-waste is considered to be the fastest growing waste in the world and the event helped raise awareness through the initiatives taken by the Aptronix store in association with Decathlon. The fun filled e- waste cycle rally ended with participants receiving goodies and refreshments by the Aptronix Store culminating the end of the 3day Grand Carnival at Phoenix Marketcity, Chennai.





About Phoenix Marketcity: A premier destination for a luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as ex-pats thanks to its truly international appearance and feel elegantly decorated interiors and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options. 


 'மார்டின்' டீசர் வெளியீட்டு விழா!



Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது.  இவ்விழாவில் வெளியிடப்பட்ட  டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர். 

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாகவ பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.


நடிகர்கள் : 

துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் 

தொழில் நுட்ப குழு: 

இயக்கம்: AP அர்ஜுன் 

கதை: ஆக்சன் கிங் அர்ஜுன் 

தயாரிப்பு: உதய் K மேத்தா 

தயாரிப்பு நிறுவனம் : Vasavi Enterprises

தியேட்டர் டீஸர் இசை: ரவி பஸ்ரூர் 

வசனங்கள்: AP அர்ஜுன் 

எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி 

இசை: மணி சர்மா 

பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர் 

ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே 

எடிட்டர்: கே எம் பிரகாஷ் 

மக்கள் தொடர்பு : சதீஷ் ( AIM )

வாத்தி வசூல் 8 நாட்களில் 75 கோடி நிகர தொகை!




நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்தநிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 




இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது:

“இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னை கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்க சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களை படிக்க சொல்லி உற்சாகப்படுத்துவதை பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார். 

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது:

வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்கு சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். 

இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது:

“இந்தப்படத்தின் கதையை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக இந்த படம் வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுக்கள் என இந்த படத்திற்கு பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வம்சி இந்த படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. இந்த படத்தை தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இந்தப்படத்தில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்.



கடத்தப்படும் பெண்ணின் மனநிலை பற்றி விவரிக்கும் இந்த "இன் கார்"



Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்  

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

"இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே "இன் கார்". இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 




நடிகை ரித்திகா சிங் பேசியதாவது:

"இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி. 


நடிகர்கள் : 

ரித்திகா சிங்

சந்தீப் கோயத்

மனிஷ் ஜான்ஜோலியா

ஞான பிரகாஷ்


தொழில்நுட்ப குழு : 

தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures 

தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி

எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்

ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்

எடிட்டர்: மாணிக் திவார்

சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM )

"தக்ஸ்" விமர்சனம்


பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தக்ஸ். முதல் படத்தை காதல் படமாக இயக்கியவர் இம்முறை ஒரு ஆக்ஷன் படத்துடன் வந்து இருக்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளின் கதையாக தக்ஸ் படம் உருவாகியுள்ளது.

ஹிர்து ஹாரூன் தனது காதலிக்கு தொல்லை கொடுத்த ஒருவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். எப்படியாவது சிறையில் இருந்து தப்பித்துவிட்டு காதலியுடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது இவரின் திட்டம். இதற்கு சிறையில் இருக்கும் சக கைதிகளின் உதவியை நாடுகிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் உள்ளிட்ட கைதிகள் சம்மதிக்கின்றனர். இறுதியில் எல்லோரும் சிறையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை....


படத்தின் ஆகச்சிறந்த பலம் அதன் மேக்கிங். சிறைச்சாலையின் அந்த நான்கு அறைகளுக்குள்ளாக அங்கிருக்கும் லைட்டிங்குகளை பயன்படுத்தி காட்சிகளை ரம்மியமாக்கியிருக்கிறது பிரியேஷ் குருசாமியின் லென்ஸ். பரபரப்பு பசிக்கு தேவைப்படும் தீனியை ஃபுல் மீல்ஸ் ஆக கொடுத்து பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சாம்.சி.எஸ். உண்மையில் த்ரில்லர் ஜானர்கள் சாமுக்கான குலாம்ஜாமுன்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல பிரவீன் ஆண்டனியின் கட்ஸ்கள் கச்சிதம். குறிப்பாக இறுதிக் காட்சி ஈர்ப்பு.

மொத்தத்தில் இந்த தக்ஸ் சிறைக்குள் காதல்.....

Royaloak Furniture opens its 6th store in Chennai and 144th in India!




Chennai:

The largest furniture retailer in the country, is on a retail expansion spree. With the goal of strengthening niche markets and Omni-channel consumer engagement throughout India, the brand launches yet another brand-exclusive store in Ekkatuthangal, Chennai. The store will establish a haven for high-end furniture items for the people of Chennai with an exciting inaugural deal on a select variety of home and office furniture, including sofas, beds, office seats, and more.

With this launch that marks the brand’s continuing expansion drive, Royaloak Furniture now has 150 business-owned and controlled stores across the country. The launch in Chennai broadens the brand’s Pan-Indian reach even further.

Royaloak Furniture, known for its lifestyle furnishings, offers 10,000+ products for homes, including sofa sets, recliners, coffee and side tables, beds, lounge chairs, dining room furniture, study tables, WFH necessities, and premium bedroom furniture such as queen and king size mattresses. They provide a variety of products made to complement any décor, including classics from the mid-century modern era as well as current and international designs.

The store was inaugurated in the presence of Mr. Vijai Subramaniam, Chairman, Royaloak Furniture, Mr. Mathan Subramaniam- Managing Director, Mr. HS Suresh- Head(Retail), Mr. Prashanth S Kotian- Head (Sales), Ms. Irina Moses- Head (Home Décor), Mr. Sasikumar Sanker- State Head (Tamil Nadu).


Speaking on the occasion, Mr. Vijai Subramaniam, Chairman, Royaloak Furniture said:

“During the past 20 years, we have gained a ton of affection from our devoted clients through experience studios all across the nation. By providing them with a delightful shopping experience, we’ll also keep cultivating a sense of connection and trust among our customers as we move forward. The new outlets are a one-stop shop for furniture and home decor where shoppers from all over the city can get the newest trends and international design at low costs.” A unique offering of the International Collection of the greatest and most distinctive furniture from America, Italy, Vietnam, Turkey, Germany, Malaysia, and India is available in the company’s showrooms. It offers a wide range of products, such as beds, couches, recliners, dining chairs, mattresses, and other home and office furnishings. With 144 experiential storefronts around the nation, Royaloak currently has a foothold in more than 150 locations. The brand has recorded remarkable growth since it was launched in Bengaluru in 2010, which is evident from its prominent presence in select Metro Cities and Tier I and Tier II cities.

Speaking at the launch, Mr. Mathan Subramaniam, Managing Director- Royaloak Inc. Pvt Ltd. said:

“Our experience stores are carefully designed to provide the best shopping experience to our clients around the nation. Our goal is to close the gap between the consumer and the furniture-buying experience. To ensure that our customers continue to have faith in our brand, we have also optimized the delivery experience.” By fusing innovation, experience, and vision with its contemporary, luxurious, and effective furniture, Royaloak Furniture is on a mission to elevate the bar for luxury living.


தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா!




Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இவ்விழாவினில் 

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,

“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“

நடிகர் நாசர் பேசியதாவது…

இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை ஆனால் என் நண்பர்கள் நிறைய பேர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பார்க்க நன்றாக உள்ளது படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஹரி பேசியதாவது..,

“படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். “

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன் பேசியதாவது..,

“இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசியதாவது..,

“காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.




நடிகர் ஶ்ரீமன் பேசியதாவது,

இந்த விழாவிற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு நாள் இரண்டு நாள் நடித்தவர்களும் இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம். இரண்டு இயக்குநர்கள் என்பது பெயரில் மட்டும் தான், அவர்கள் மனதளவில் ஒருவர் தான், அதற்கு காரணம் அவர்கள் பயிற்சி பெற்ற இடம். இயக்குநர்கள் இந்த படத்தின் கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல இருந்து ஷூட் பண்ணிருகாங்க , ரொம்ப தைரியம் இருந்தால் தான் இத பண்ண முடியும். அவர்களின் இந்த  கான்ஃபிடென்ஸை நான் பாராட்டுகிறேன், எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக பணி புரிந்துள்ளனர் , இதற்கு உதவி கரமாக இருந்த காவல் துறைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது..

இந்த விழாவிற்காக  பல ஊர்களில் இருந்து வந்த எனது அன்பான சகோதரர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சதீஷ்குமார் எனது கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். இதற்கு முன் நான் நடித்த படத்தில் ஒரு சிக்கல் வந்த போது, அதற்கும் உதவ முன் வந்தவர் சதீஷ் சார் தான்.  அவர் தான் இந்தப்படத்தின் அற்புதமான இயக்குநர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ஒரு அற்புதமான கதையை எனக்கு கொடுத்து, அதில் நான் சரியாக பொருந்தி போவேன் என்றும் கூறினார்.  அவருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக  அனைவரையும் ரசிக்க வைக்கும்.

நடிகர் அஜ்மல் பேசியதாவது..,

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

துஷ்யந்த் பேசியதாவது..,

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். “ 

இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,

“இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இயக்குநர் LR சுந்தரபாண்டி பேசியதாவது..,

பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!


HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 


இந்நிகழ்வினில்..


இயக்குநர் பிருந்தா பேசுகையில், 

“ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில்,

“இசை இயக்குநராக, நான் பல திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளேன், அந்தப்படங்களின் கதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் படத்தின் இறுதிப்பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகிவிடுகிறது. எந்தத் திரையுலகிலும் இது சகஜம் தான், ஆனால் தகஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தா மேடம் ஸ்கிரிப்டை விவரித்தபோதே கதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழுப்படமாக இன்னும் பிடித்துள்ளது. அவர் இசை மற்றும் பாடல்களில் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார். கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டும் இப்படத்தில் மிக நன்றாக வந்துள்ளது. ஹிருது ஒரு புதுமுகம் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுக்கு நன்றி” 


நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில்,


“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த பாபி சிம்ஹா சார், தேனப்பன் சார், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹிருது இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நடிகர் ஹிருது ஹாரூன் பேசுகையில்..

“இந்த வாய்ப்பை வழங்கிய பிருந்தா மேடத்திற்கு நன்றி. படத்தில் வசனங்கள் கம்மியாக உள்ளது, ஆனால் சாம் சிஎஸ் உடைய இசை நிறையப் பேசுகிறது. படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி."



நடிகர்-தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது.,

“மெல்லிசைப் பாடலைப் படமாக்கப் போகும் போதெல்லாம், உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் பிருந்தா மாஸ்டர். இன்று ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் பட இயக்குநராக அவரைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று  இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நன்றி”


ஒளிப்பதிவாளர் பிரியேஷ் பேசுகையில்,

“என்னைப் போன்ற ஒரு புதிய ஒளிப்பதிவாளருக்கு வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபு, நடிகர்கள்  ஹிருது மற்றும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார், முனிஷ்காந்த் சார் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி. நான் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த படத்திற்கு அவர் மிக அபாரமான இசையை கொடுத்துள்ளார்” இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.


நடிகை ரம்யா பேசுகையில்,

“இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கும், என் அம்மாவுக்கும், பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி. என்னை மாடலாக காட்டிய சில விளம்பரங்களுக்கு அவர் தான் நடனம் அமைத்தார். அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் அட்டகாசமாக வந்துள்ளது, நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்”.


தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில்,

“இந்த திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டு மொத்த டீமும் அபாரமான வேலையைச் செய்திருக்கிறார்கள். தக்ஸ் பெரிய வெற்றியைப் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. தயாரிப்பாளர் தேனப்பன் சார் திரையில் பிரமாதப்படுத்தியுள்ளார். பிருந்தா மாஸ்டர் அனைவரையும் ஊக்குவிப்பார். என் அண்ணன் ஹிருது இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சாம் சிஎஸ்ஸின் இசை படத்தைப் படத்திற்கு உயிர்ப்பைத் தந்துள்ளது. முனிஷ்காந்த் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர், இந்த படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரியேஷ் சார் எனக்கு இன்னொரு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் அவர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் பிப்ரவரி 24, 2023 வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. 


நடிகர்கள்:

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்


தொழில் நுட்பக் குழுவினர்:

இயக்கம் : பிருந்தா 

தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் - ரியா ஷிபு

இசை : சாம் CS

ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி

புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்

எடிட்டர்: பிரவீன் ஆண்டனி

ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்

ஆடை: மாலினி கார்த்திகேயன்

நிர்வாக தயாரிப்பாளர் - யுவராஜ்

இணை இயக்குநர்: ஹரிஹர கிருஷ்ணன் ராமலிங்கம்

டிசைனர்: கபிலன்

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் - சிவா (Aim)

நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா!


சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் 'சீன் ஆ சீன் ஆ' பாடலுக்கு 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது

‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் சிங்கிள், 'சீன் ஆ சீன் ஆ' பாடல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் அனைத்து இடங்களிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது. 

இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சே இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள்தான். சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரமாண்ட பாடல் நேற்று (பிப்ரவரி 17, 2023) வெளியானது.  கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் - திரு. சின்னி பிரகாஷ், திரு. பாபு மற்றும் திரு. மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் நடிக்கும் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

மாவீரன் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்க, பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

கலை இயக்கம்: குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு,
சண்டைப்பயிற்சி: யானிக் பென்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை & வசனம்: சந்துரு ஏ,
ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,
ஒப்பனைக் கலைஞர்:ஷைட் மாலிக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன்.


'வாத்தி' படம் எப்படி இருக்கு?! 



யக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் "வாத்தி"  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.... 

90களின் இறுதியில் ஆசிரியர்கள் இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்படி திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டிலிருந்து பாலமுருகன் (தனுஷ்) என்ற ஆசிரியர் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்லும் பாலமுருகனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளும், சவால்களும் அங்கே காத்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து பாலமுருகன் அங்கிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி மேம்படுத்தினார் என்பதே கதை.....

தனியார்மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை புரட்டுகிறது படம். பெண்கல்வியின் அவசியம், சாதிப் பாகுபாடு தொடர்பான உரையாடல் காட்சியும் அழுத்தம் கூட்டுகிறது. படத்தில் TNPCEE தேர்வு பற்றிக் காட்டப்படுகிறது. 

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் தனுஷ். பாலாவாகவே வாழ்ந்திருக்கிறார். மாணர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது. சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மொத்தத்தில் இந்த வாத்தி மறைமுகமாக பாடம் நடத்துகிறார்...... 


சைபர் வார் வெப் சீரிஸில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள்!

 


சென்னை: 

தொழில்நுட்ப அடிப்படையிலான குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் த்ரில்லர் திரைக்கதையான சைபர் வார் வெப் சீரிஸை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்புகிறதுசைபர் நிபுணர்கள் குழு மும்பை நகரத்தில் உள்ள குற்றவாளிகள் மூலம் நடைபெறும்  சைபர் கிரைம் வலையமைப்பைக் கைப்பற்றும்  பணியைத் தொடங்கும்போது மும்பை காவல்துறையை தாக்கி அழிக்கும் நோக்குடன் அடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பான கதைகளத்தை கொண்டுள்ளது

 

 

தொழில்நுட்ப கதைக்களம்:


   1. நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையிலான தொழில்நுட்ப விதிமுறைகள்தொழில் தளங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல் மற்றும் கலந்துரையாடலை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் புதுவித  அனுபவத்தை உண்டாக்கும்.

 

2.  சுவாரஸ்யமான வழக்குகள்:  இத்திரைக்கதை மக்களுக்கு பல திருப்பங்கள் நிறைந்த பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவிப்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கதையாகும்.

 

3.  கணிக்க முடியாத கதைதளம்:   இந்த கதையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை பார்வையாளர்களை கணிக்க முடியாத நிலையில் கொண்டு செல்கிறது.

 

4.  அருமையான வசனங்கள்:  கதையின் விசாரணை உரையாடல்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டு பார்வையாளர்களை தன்வசம் ஈர்க்கிறது

 

5. நடிப்பின் வெளிப்பாடுமுன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மோகித் மாலிக் மற்றும் சானியா இரானி இருவரும் திரைக்கதையில் அற்புதமான தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்மேலும் வெப் சீரிஸில் அடுத்து அடுத்த நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு  ஆர்வத்தை தூண்டும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது

 

 

ஒரு புதிரான விறுவிறுப்பான த்ரில்லர் பயணத்தை அனுபவிக்க சைபர் வார் வெப் சீரிஸை தினமும் இரவு  8:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்மேலும் எந்நேரத்திலும் காண VOOT-  ட்யூன் செய்யலாம்.



 

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.