டிசம்பர் 2022

Vijay Samuel, a run way model hit the ramp at Asian international fashion week!




Vijay Samuel, a runway from Chennai First time ever, a Chennai model hit the ramp at Asian international fashion week,Delhi. The designer was Amit Chauhan (DG COLLECTIONS) and styled by celebrity designer kingshuk bhaduri. The show was held at mapple gold by Raddison Blu,Delhi on 23rd and 24th December. The make up was done by uk international beauty school , India no 1 international beauty school. 

Vijay Samuel said:

Happy to work with all big celebrities from Bollywood side. To talk dg collection, my outfit was perfectly suits on me. Fittings, Color combination and everything made me to look perfect on the ramp.  He has signed so many future shows in Delhi 
Congratulations to vijay samuel from our media side.

இந்திய – ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (ECTA) கீழ் ஏற்றுமதி செயல்பாடுகள்!



சென்னை:  

சமீபத்தில் கையெழுத்தாகி செயல்பாட்டிற்கு வந்த இந்திய – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் (ECTA), இன்று முதல் அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்திலிருந்து தனது செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறது.  இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் ஏறக்குறைய 90% இத்துறைமுக முனையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்.  ECTA – ன் கீழ், ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி பொருட்கள் / சரக்குகளுக்கு 100% முன்னுரிமை அணுகுவசதியினால் இந்தியா பயன்பெறும்.  

ECTA – ன் கீழ், தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை அனுப்பி வைக்கும் விழா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தில் இன்று நடைபெற்றது.  FIEO – ன் முன்னாள் தலைவர் திரு. இஸ்ரார் அஹமது, சென்னை,  ITS -ன் வெளிநாட்டு வர்த்தக இணை தலைமை இயக்குனர் திரு. BN விஸ்வாஸ், சென்னை, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் திரு. பாலாஜி IRS, செயிண்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திரு. AR. உன்னிகிருஷ்ணன், அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் தலைவர் திரு. ராம்டே கராஞ்சியா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் விற்பனை பிரிவு தலைவர் திரு. விவேக் நாயர் மற்றும் DGFT, FIEO மற்றும் எண்ணூர் துறைமுகத்தின் முதுநிலை அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சரக்குகளை அனுப்பும் முன்னணி ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் ஏற்றுமதி சரக்குகளை அனுப்பும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் 17-வது பெரிய பார்ட்னராக ஆஸ்திரேலியா திகழ்கிறது.  அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் 9-வது பெரிய வர்த்தக பார்ட்னராக இந்தியா இருக்கிறது.  சரக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2021-ம் ஆண்டில் $27.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.  ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கடந்த பல ஆண்டுகளில் கனிசமாக அதிகரித்திருந்தாலும் கூட, ECTA – ன் கீழ் இதில் அதிகரித்த முன்னேற்றத்திற்கு சிறப்பான வாய்ப்பு இருக்கிறது.  ECTA -ன் கீழ், ஆஸ்திரேலிய சந்தையில் இதுவரை நுழைந்திடாத பகுதிகளுக்கு முன்னுரிமையுடன் கூடிய அணுகுவசதியை பெறுகின்ற நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் இப்போது இருக்கின்றனர்.  

2022 டிசம்பர் 29-ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் ECTA, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக, குறு – சிறு – நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆஸ்திரேலிய சந்தையில் சிறப்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்நிறுவனங்கள் பயன்படுத்தி, பலன்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதே இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவின் இறக்குமதியின் அதிக பங்கினைப் பெறுவதற்கு இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள். மருந்து தயாரிப்புகள், ஆபரணங்கள், வாகனங்கள் மற்றும் வேளாண் தயாரிப்புகள் ஆகியவற்றில் இந்தியாவின் வலுவான சாதக அம்சங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.  அரிசி, ஜவுளிகள் மற்றும் ஆடைகள், கைத்தறி தயாரிப்புகள், லெதர் பொருட்கள், ஆர்கானிக் வேதிப்பொருட்கள், பொறியியல் மற்றும் ஃபுளோட் கிளாஸ்கள் உட்பட கட்டுமானப் பொருட்கள், மசாலா நறுமணப் பொருட்கள் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும்.  

2022 டிசம்பர் 29 முதல், செயல்பாட்டிற்கு வரும் வகையில் ECTA – ஐ வெற்றிகரமாக அமலாக்கம் செய்திருப்பதற்காக இந்திய அரசை பாராட்டிய FIEO அமைப்பின் தலைவர் டாக்டர். சக்திவேல், கைத்தறி துறைக்கான நல்ல வாய்ப்புகளோடு, ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறும் என்று குறிப்பிட்டார்.  குறைந்த காலஅளவிற்குள், தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தைப் பங்கினை பெறக்கூடிய பிற துறைகளுள் ஜெம்ஸ் (நவரத்தின கற்கள்) மற்றும் ஆபரணங்கள், லெதர் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் பிரிவு, ஆட்டோ பாகங்கள் மற்றும் பொறியியல் தயாரிப்புகள் ஆகியவையும் இடம்பெறும்.  நிதியாண்டு 21-22 – ன் போது, தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி மதிப்பு 384 மில்லியன் யுஎஸ் டாலராக நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலஅளவில் தமிழ்நாட்டின் ஏற்றுமதியானது, ஏற்கனவே 322 மில்லியன் யு.எஸ். டாலர் என்பதை எட்டியிருக்கிறது.  எனவே, இந்த நிதியாண்டின்போது மொத்தத்தில்  500 மில்லியன் யுஎஸ் டாலர் என்ற அளவை இது கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவில் டெலிவரிகளை செய்வதை ஏதுவாக்க தங்களது சப்ளை செயின் திறமைகளை மேலும் திறம்பட உயர்த்துமாறு ஏற்றுமதியாளர்களை டாக்டர். சக்திவேல் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். தென்னிந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்படும் ஏற்றுமதிக்கு ஒரு பிரத்யேக ஏற்றுமதி சரக்கு முனையமாக நேர்த்தியான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்ற அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.  ஆஸ்திரேலிய சந்தையில் இந்திய தயாரிப்புகளுக்கு சீன நாடு முன்வைக்கும் கடும் போட்டிக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டிய டாக்டர். சக்திவேல், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா செய்யும் இறக்குமதியின் அளவு 27% ஆக இருக்கையில், இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 2.4% என மிக குறைவான நிலையில் இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டினார்.  ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகளின் அனைத்து அம்சங்களிலும் போட்டியிடக்கூடிய திறனை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் இதனை திறன்மிக்க உத்தியுடன் கையாளுமாறு ஏற்றுமதியாளர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

ECTA-ன் கீழ், ஆஸ்திரேலியாவில் HSN குறியீட்டு ரீதியாக இறக்குமதி வரி விகிதங்கள், www.indiantradeportal.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே நிகழ்நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இறக்குமதி வரி சலுகைகளைப் பெறுவதற்கு சரக்குகளின் தோற்ற கட்டளை விதிகள், தேவைப்படும் தரநிலைகள் மற்றும் ஆஸ்திரேலிய சந்தைக்காக தேவைப்படும் சான்றாக்க தேவைப்பாடுகள் ஆகியவை இத்தகவல்களில் இடம்பெற்றுள்ளன.  

அதானி எண்ணூர் கண்டெய்னர் டெர்மினல் (AECT) என்பது, சென்னைக்கு வடக்கே 30 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் மிக நவீன பாக்ஸ் டெர்மினலாகும். முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தைக் கொண்டிருக்கும் AECT, சிரமமில்லாத சரக்குப் போக்குவரத்திற்கு நெருக்கடியில்லாத அணுகுவசதி சாலைகளையும் மற்றும் பெங்களூருவிற்கு ஆன்-டாக் ரயில் சைடிங் சேவைகளையும் வழங்குகிறது.  இதன் மூலம் துறைமுகத்து பின்புற பிராந்தியத்திலிருந்து சரக்குகள் விரைவாக போக்குவரத்து செய்யப்படுவதை இது ஏதுவாக்குகிறது.  சென்னையின் முதன்மையான பின்னிலப் பகுதியோடும் மற்றும் 4 தேசிய நெடுஞ்சாலைகளோடும் இதன் அனைத்து கண்டெய்னர் ஃபிரெய்ட் ஸ்டேஷன்களும் (CFSs) நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றன.


கிரைம் திரில்லரான பாமகலாபம் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!



சென்னை

Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ்நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாமகலாபம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் வரும் ஞாயிறு புத்தாண்டு அன்று மதியம் மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இந்த நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லரை சிறப்பு பார்ட்னர் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்துஞாயிற்றுக்கிழமைஜனவரி புத்தாண்டு அன்று  மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ்  ஒளிபரப்ப உள்ளது. குற்ற உலகில் சிக்கி கொண்டு தவிக்கும்  ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பாமகலாபம் திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

அபிமன்யு தடிமேட்டி எழுதி இயக்கிய இந்தப் படத்தில்  நடிகர் ஜான் விஜய்நடிகர் சாந்தி ராவ்நடிகர் சரண்யா பிரதீப் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். ஒரு பழங்கால ஃபேபர்ஜ் முட்டையின் திருட்டுடன் தொடங்கும் இத்திரைப்படம்அக்கம்பக்கத்தினருடன் வதந்திகள் பேசிக் கொண்டுதான் செய்யும் சமையலை வீடியோ எடுத்து இணையதளத்தில்  பதிவேற்றும் செய்யும் அனுபமா மோகன் (நடிகை பிரியாமணி) என்ற  இல்லத்தரசியின் வாழ்க்கையைப் பற்றியது.  உலக தாதாவான நாயரால் (நடிகர் ஜான் விஜய்) கடத்தல் மற்றும் கொலைகளின் உலகில் சிக்கிக் கொள்கிறாள். அவள் ஒரு கொலையில் சந்தேகப்படுகிறாள் மற்றும் திருடப்பட்ட ஃபேபர்ஜ் முட்டையை எடுத்து வரும்படி நாயரால் கட்டளையிடப்படுகிறாள். நாயர் மற்றும் போலீஸ்காரர்கள் பின்னால் இருக்கும் நிலையில்அனுபமா அவர்கள் பிடியில் இருந்து எப்படி தப்பித்துதான் குற்றமற்றவர் என்பதை போலீசில் நிரூபிப்பார் என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.

 

இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர்  அபிமன்யு தடிமேடி கூறுகையில்:


பாமகலாபம் திரைப்படம் ஆந்திராவில் பாரம்பரிய நடன வடிவத்தின் அதே பெயரில் மேலும் நரகாசுரன் என்ற அரக்கனை சத்யபாமா தேவி கொன்றதை அடிப்படையாகக் கொண்டு ஈர்க்கப்பட்டது. பிரியாமணியின் கதாபாத்திரமான அனுபமாவைதன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் தலைசிறந்த பெண்ணாக வடிவமைத்துள்ளோம். தீமைகளின் இறுதியில் நன்மையே  வெல்லும் என்ற கருத்தே  இப்படத்தின் இறுதி திருப்பமாகும் .  கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் மூலம்இப்படம் அதிகமான மக்களை ஈர்க்கும் மற்றும் அனைவராலும் பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ”

 

இது குறித்து நடிகை பிரியாமணி கூறும் போது:


படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கோவிட்-ன் போது மேற்கொள்ளப்பட்டு, 25 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். இது நான் முதன்முறையாக எதிர்கொண்ட ஒரு சவாலாகவும்,முற்றிலும் ஒரு அற்புதமான அனுபவமாகவும்   இருந்தது. மேலும்சத்தமாக  இருக்கும் அனுபமா போன்ற கதாபாத்திரம் நிஜத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு முற்றிலும் எதிரானது. கலர்ஸ் தமிழில் அதன் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் மூலம்அதிகமான பார்வையாளர்கள் என்னைப் புதிய அடையாள வெளிச்சத்தில் பார்ப்பார்கள் என்று  நான் நம்புகிறேன்.

 

உலக தொலைக்காட்சி பிரீமியர் மூலம் பாமகலாபம் திரைப்படத்தை இந்த புத்தாண்டில் ஜனவரி 1, ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் பாப்கார்னுடன் உங்கள் குடும்பத்தினருடன் காணுங்கள்.

 

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)




Navin’s and Sevalaya launch Toy Gifting Drive extending Happiness to kids from Orphanage




Chennai:  

Extending smiles and happiness, Navin’s, the most trusted and respected developer of Chennai, in association with Sevalaya, today joined hands for a unique Toy Gifting Drive offering underprivileged kids a memorable experience. Titled “Give your toy, Gift some Joy”, the initiative brought together 100 children across Navin’s housing communities to voluntarily offer their toys to the underprivileged kids, encouraging the spirit of generosity.  

Hosted at Navin’s Starwood Towers, the event was witnessed over 1000 meticulously selected toys donated by the kids of Navin’s housing communities like Navin’s Starwood Towers, Navin’s White Berry, Navin’s Eden Garden and many more, handed out to the children of Sevalaya, a non-profitable organization that serves the underprivileged to improve their quality of life, across 16 centres in Tamil Nādu and Puducherry. 

Commenting on the initiative, *Mr Kalyanaraman, COO at Navin’s Housing Properties* said, “_Christmas and New Year are festive of joy, and owing to the same, Navin’s and Sevalaya undertook this initiative with the aim of bestowing this bliss and delight to the community of underprivileged children and spread some love to lighten up their lives. As much as we believe in offering the best of homes to our customers, we also believe in the power of sharing, caring and giving back to the community. With this toy gifting drive, we aspire to encourage people out there to reach out to the underprivileged and help them celebrate the holiday season in high spirits through small acts of kindness. Furthermore, we are grateful to Sevalaya and our stakeholders in helping us make this drive a success_.” 

Appreciating the initiative, *Mr V Muralidharan is our FOUNDER and MANAGING TRUSTEE of Sevalaya* said, “_The underprivileged are often overlooked by society and not everyone pays heed to their desires and happiness. But we at Sevalaya are really glad to be associated with Navin’s to facilitate this one-of-kind initiative, Give your toy, Gift some Joy, and are really grateful to the company for this venture. We appreciate Navin’s being thoughtful about the contentment of the deprived community and encouraging children in their housing communities to also partake in giving back to the society right from their childhood_.”

Give your toy, Gift some Joy is one amongst the unique several social initiatives like Seeds on Wheels, Navin’s Kitchen Garden, and many more, undertaken by the company and the momentum is only likely to continue in the coming years as well.  The grand event was held with the support of Mr Balasubramaniyam President of  Navin’s Starwood Towers Welfare Association and Mr Prabhakaran GM of Starwood Towers. 

About Navin’s

Navin’s believe that building homes is an art, and an exercise of intellect, careful precision, and passion. Since 1989, the motto of the organization has been to achieve the culmination of architectural brilliance and the highest value-for-price paid in the projects. Over 115+ projects dot Chennai’s skyline that stand testimony to a passion called Navin’s; and the long journey that intertwines a cherished dream - to be the most trusted builder. The organization was the first in Chennai to receive the ISO 9001-2008 Certification, and now upgraded to ISO 2015 and bring to the table, clear titles, excellent locations, quality products, perfect constructions, strict adherence to rules and regulations, care for customer needs, and above all, ethical business practices.

About Sevalaya

Serving the rural underprivileged communities since 1988, Sevalaya, a charitable trust operates in 16 centers in TamilNadu and Puducherry. Sevalaya renders all its services at free of cost to destitute and needy persons without any discrimination of caste, color, religion, language, gender or nationality. Sevalaya runs a home for 200 plus destitute children, three old age homes for 250+ destitute elders, two hospitals, a gaushala and 10 community colleges which offer vocational training in 11 trades. Majority of the 4000+ qualified youth are placed in jobs while some of them are self-employed.

17th Branch of ‘Scissors Studio & Academy’ 

 

 

Chennai:

Sivarajan Groups inaugurate the 17th outlet of ‘Scissors Studio & Academy’ in the presence of chief guest, Mr. Sridhar,Indian choreographer and Sivarajan, Founder and CEO of Sivarajan Groups and Magesh, Actor at Ayyanavaram on December 26th 2022.

The 17th Branch of Scissors Studio & Academy was officially opened along with lamp lighting by Mr.Sridhar.

At the launch of the 17th Branch of Scissors Studio & Academy announced an inaugural offer of 100 free seats for first 100 Registrations.

Scissors Studio & Academy is the first branch we open in ayyanavaram

Inaugural offers – 1. Pay 35k and get 35k worth products free

2. Scissors studio & academy offers 10 free seats for government college students for pro makeup class.

About Sivarajan Groups - Scissors is a professional hair salon brand est in1987 by the pioneers of hair salon services top notch Professional grooming services for men. Started in Dhindivanam at the year 1987, later moved on and open our very first branch in Mogappair. Now we are spread across with 16 branches all across Chennai. The Most distinctive feature about our brand is that its affordable for all with premium interiors and trained professionals

For More Information:

Scissors Studio & Academy: No, 33A VP Colony, Medavakkam Tank Road, Ayyanavaram, Chennai - 23

Land Mark - Opposite to Royal Enfield Showroom Ayyanavaram Depot Signal

"என்ஜாய்" திரைவிமர்சனம் 




முழுக்க முழுக்க இளைஞர்களை  குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘என்ஜாய்’. டைட்டிலுக்கு ஏற்றபடி இரண்டு மணி நேரமும் படம் பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைத்துள்ளதா இந்த படம் ? பார்க்கலாம்.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் ஒன்றாக சந்தித்து ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது. ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்ட தோழிகளுக்கு பார்ட்டியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அவர்களுக்கு உதவப்போய் இந்த மூன்று இளைஞர்களும் சிக்கலில் சிக்குகிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா ? இல்லை இழப்பை சந்தித்தார்களா ? இதில் அவர்களுக்கு கிடைத்த பாடம் என்ன ? படம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பது மீதிக்கதை.

இன்றைய பல இளைஞர்களின் மனோபாவம், அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவருமே இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என சதா ஏங்கியபடியே  தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் டான்ஸர் விக்னேஷ் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். அவருக்கு அது ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது. மதன்குமார் சற்று சீரியஸ் முகம் காட்டினாலும் காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல இருந்தாலும் இந்த மூவரும் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியுள்ளனர்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, அந்த கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம்பெண்களின் பிரதிபலிப்பாகவே ஜீவி அபர்ணா மற்றும் சாருமிசாவின் கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் சோடை போகாத நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான ரொமான்ஸும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் மார்க் பெற்று தருகிறது.

கல்லூரியில் சீனியர்கள் எல்லாம் இப்படி நல்ல தோழிகளாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஹாசின். சூழ்நிலை காரணமாக அவர் தனது லைப்ஸ்டைலை மாற்றிக்கொண்டாலும் தன்னைப்போலவே மாற முயற்சிக்கும் தனது தோழிகளை அவர் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்த முயற்சிப்பது அவர் மீதான மரியாதையை கூட்டுகிறது..

மதன்குமாரின் சீரியஸ் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம்  இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். இவர்கள் தவிர டெரர் போலீஸ் அதிகாரியாக  வலம் வந்து கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பில்லி முரளி, வீக்-என்ட் பார்ட்டி நடத்துகிறேன் என டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கும் ரிசார்ட் ஓனர்  "காலாட்படை" ஜெய், பெண்களை அரக்கத்தனமாக அணுகும் சைக்கோ வில்லன் யோகிராம் என இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் கவனம் பெறுகின்றன.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையை விட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதோ நாமே சுற்றுலா போய்வந்த உணர்வை தருகின்றது. அதேபோல கேஎம்.ரயானின் இசை இந்த படத்திற்கான பொருத்தமான பாடல்களை கொடுத்திருக்கிறார் குறிப்பாக  இடைவேளைக்குப்பின் வரும்  இரண்டு பாடல்கள் அருமை சபேஷ்-முரளியின் பின்னணி இசை விறுவிறுப்பை கூட்டியுள்ளது. மணி குமரனின் படத்தொகுப்பும் அந்த விறுவிறுப்புக்கு பக்கபலமாக கை கொடுத்துள்ளது.

இளைஞர்களை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இந்த கதையை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. அந்தவகையில் அவரை முதலில் பாராட்டி விடலாம். குறிப்பாக இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக நன்றாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும். அதேசமயம் கதைப்போக்கில் நகைச்சுவையாக இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்களை  தவிர்த்து இருக்கலாம் ஒருவேளை இளைஞர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும், அவர்கள் நிச்சயம் இதை ரசிப்பார்கள் என நினைத்து விட்டாரோ என்னவோ ?

அதேபோல நண்பர்கள் மூவரும் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் அந்த ஆன்ட்டி போர்சன், கையில் முளைத்திருக்கும் ஆறாம் விரல் போல தேவையற்ற ஒன்றாகவே நினைக்க தோன்றுகிறது.. இப்படி சின்னச்சின்ன குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இது இளைஞர்கள் ரசித்து பார்க்கக்கூடிய, அவர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் சொல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் என தாராளமாக சொல்லலாம்.

தயாரிப்பு - 
எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன்

ஒளிப்பதிவு -
 KN அக்பர்,

இசை - Km ரயான் .

எடிட்டர் - மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் - விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.


நடிகர்கள்- 

மதன்குமார் 
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா


Special trains for Christmas Festival!




Special fare Special trains will be operated in order to clear extra rush during the Christmas season as detailed below.

 

1. Train No 06021 / 06022 Tambaram – Tirunelveli Junction – Chennai Egmore Special fare special trains

 

Train No. 06021 Tambaram – Tirunelveli Junction Special fare special will leave Tambaram at 21.00 o­n 22nd December, 2022 (Thursday) and reach Tirunelveli Junction at 09.00 hrs o­n the next day i.e., Friday.

In the return direction, Train No. 06022 Tirunelveli Junction – Chennai Egmore Special fare special will leave Tirunelveli Junction at 13.00 o­n 23rd December, 2022 (Friday) and reach Chennai Egmore at 03.20 hrs o­n the next day i.e., Saturday.

 

Coach Composition: One - AC First Class Coach, Two - AC 2-Tier Coaches, Six – AC 3-Tier Coaches, Two - AC 3-Tier Coaches, (Economy) Six - Sleeper Class Coaches, Two - General Second Coaches and   & One General Second Class (Divyangjan Friendly) & Luggage cum Brake Van and One – Luggage Brake & Generator van (Total: 21)

 

Stoppages in both directions: Tambaram, Chengalpattu Junction, Villupuram Junction, Vriddhachalam Junction, Tiruchchirappalli Junction, Pudukottai, Karaikudi, Sivaganga, Manamdurai, Arupukottai, Virudhunagar Junction, Satur and Kovilpatti.

 

Train No. 06022 Tirunelveli Junction – Chennai Egmore Weekly Special fare special will have stoppage at Mambalam (Return Train)

 

2. Train No 06041 Tambaram – Nagercoil Junction Superfast Special fare special train

 

Train No. 06041 Tambaram – Nagercoil Junction Superfast Special fare special will leave Tambaram at 19.30 o­n 23rd December, 2022 (Friday) and reach Nagercoil Junction at 07.10 hrs o­n the next day i.e., Saturday.

 

Coach Composition: Two – AC First Class cum AC 2-Tier Coaches, Eleven - Sleeper Class Coaches, Three - General Second Coaches and   & One General Second Class (Divyangjan Friendly) & Luggage cum Brake Van: (Total: 17)

 

StoppagesTambaram, Chengalpattu Junction, Villupuram Junction, Vriddhachalam Junction, Tiruchchirappalli Junction, Dindugal Junction, Madurai Junction, Virudhunagar Junction, Satur, Kovilpatti, Tirunelveli Junction and Valliyur.

 

3. Train No 06046 / 06045 Ernakulam Junction – Dr. MGR Chennai Central – Ernakulam Junction Special fare special trains

 

Train No. 06046 Ernakulam Junction - Dr. MGR Chennai Central  Special fare special will leave Ernakulam Junction  at 23.20 o­n 22nd December, 2022 (Thursday) and reach Dr. MGR Chennai Central at 11.30 hrs o­n the next day i.e., Friday.

 In the return direction, Train No. 06045 Dr. MGR Chennai Central – Ernakulam Junction Special fare special will leave Dr. MGR Chennai Central at 14.50 o­n 23rd December, 2022 (Friday) and reach Ernakulam Junction at 03.10 hrs o­n the next day i.e., Saturday.

 

Coach Composition: One - AC 2-Tier Coach, Four - AC 3-Tier Coaches, Ten - Sleeper Class Coaches, Three - General Second Coaches and   & Two General Second Class (Divyangjan Friendly) & Luggage cum Brake Vans: (Total: 20)

 

Stoppages in both directions: Aluva, Thrissur, Palakkad Junction, Coimbatore Junction, Tiruppur, Erode Junction, Salem Junction, Jolarpettai Junction, Katpadi Junction, Arakkonam Junction.  

 

Train No. 06046 Ernakulam Junction - Dr. MGR Chennai Central Special fare special will have additional stoppage at Perambur.




ZEE5-யில் “காரி” திரைப்படம்! 



சென்னை:

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி இயங்குதளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 இன்று தமிழ் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான “காரி” திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது.  தயாரிப்பாளர் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள “காரி” திரைப்படத்தை, இயக்குநர் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ளார். சென்னையில் ஒரு குதிரை ஜாக்கியின் வாழ்க்கையை விதி எப்படி ராமநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது, விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை சுற்றி நடக்க கூடிய விசயங்களை பற்றி  இப்படம் பேசுகிறது. காரி படத்தில் M. சசிகுமார், பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகிநீடு, ராம்குமார் கணேசன், சம்யுக்தா, பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு சாம்பியன் ரேஸ் ஜாக்கி, மல்டி மில்லியனர் மற்றும் ஒரு எளிய கிராமத்து பெண், இந்த மூன்று கதாபாத்திரங்களும் காரையூரில் உள்ள கிராமப்புற கிராமவாசிகளும் இந்த கதையின் மையம். பல மைல்களுக்கு அப்பால் , தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழும் இவர்களை விதி ஒரு பிரச்சனையில் ஒன்றாக இணைக்கிறது. சசிகுமார் சென்னையில் வாழும்  சேது எனும் குதிரை ஜாக்கியாக நடித்திருக்கிறார். அவரது தந்தை - வெள்ளசாமி (ஆடுகளம் நரேன்) இறந்த பிறகு அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்திற்கு உள்ளாகிறது, ஒரு கட்டத்தில்  அவரது செல்ல குதிரையும் கொல்லப்படுகிறது. எதிரிகளான எஸ்.கே.ஆர் (ஜே.டி. சக்ரவர்த்தி), இறைச்சி வியாபாரம் மற்றும் விலங்குகளைச் சுரண்டுவதில் ஈடுபட்டிருக்கும் ஒரு பிஸினஸ்மேன். இவர்கள் மோதிக்கொள்வது ஏன் என்பதே படம். கிராமப்புற மண்சார்ந்த வாழ்வியல், விலங்குகளின் விடுதலை, பெருநிறுவனங்களின் பேராசை, இறைச்சி நுகர்வு நெறிமுறைகள் மற்றும் இதுவரை திரையில் பேசியிராத பல விஷயங்களளை இப்படம் அழுத்தமாக பேசுகிறது.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்:

"ZEE5 தளத்தில், பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதும் மேலும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அவர்களின் மண் சார்ந்த கதைகளை வழங்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். கிராமப்புற கதையில்  சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான யானைக்குப் பிறகு, எங்களின் அடுத்த விருந்தாக  காரி திரைப்படத்தை  அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த கிராமிய கதை, கண்டிப்பாக அனைத்து  பார்வையாளர்களையும்  ஈர்க்கும்.

தயாரிப்பாளர் லஷ்மன்குமார் கூறுகையில்:

“அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அருமையான படைப்பு இது. மனித உணர்வுகள், வலி, காதல், துரோகம் மற்றும் தியாகம் அனைத்தும் இருக்கும் இந்த கதை, ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் வகையிலான  திரைக்கதையுடன் அற்புதமான ஸ்டண்ட் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. உங்களுக்குப் பிடித்தமான  நட்சத்திர நடிகர்களின் கூட்டணியுடன், காரியில் நேரடியான ஜல்லிக்கட்டு, கார்ப்பரேட் பேராசை மற்றும் விலங்குகள் மீது எங்களின் தீராத அன்பு ஆகியவையும் நிரம்பியுள்ளன. இப்படம் விரைவில் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள  பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளிக்கலாம். 

அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்- சின்னக்குயில் சித்ரா



சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என இயக்குநர் சீனு ராமசாமி பேசினார்.

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது கடின உழைப்பால்  அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர்,  இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.

தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப்போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில். ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.  அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவிசெய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.



ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அடையாறு இசைக்கல்லூரி முன்னாள் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கிய விழாவில் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் சிஇஓ முருகன் மந்திரம் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை கவிதா மற்றும் கேபிஒய் பாலா தொகுத்து வழங்கினார்கள். இயக்குனர் சீனுராமசாமி, சின்னக்குயில் சித்ரா,  இசையமைப்பாளர் பாடகர் பிரதீப்குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ், பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட “”நாடோடிப் பாட்டுக்கு“” பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர். பத்திரிகைத் தொடர்பு பணியை பிஆர் ஓ குணசீலன் சிறப்பாக செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை சின்னா மற்றும் ராஜா பக்கிரிசாமி சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்…

அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல்  தன்னைப்போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குறியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு, அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என்று பேசினார்.

விழாவில் சின்னக்குயில் சித்ரா பேசுகையில்,

அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கைத்தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.

கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப்பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது. 

https://www.youtube.com/watch?v=B3B0cgTtkb8

விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக்கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

வாய்ப்பு கிடைக்காத நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வழிகாட்டி தன்னைப்போல உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அந்தோணிதாசன் தொடங்கியுள்ள, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழா ஆடல், பாடல், கொண்டாட்டத்தோடு மிக மிக சிறப்பாக அமைந்தது. அந்தோணிதாசனின் இந்த நல்முயற்சி பெரிய வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.


'கேமரா எரர்' படத்தின் விமர்சனம்! 




இசை - ஷ்ரவன் கலை

ஒளிப்பதிவு - பாலாஜி எஸ்.பி.

தயாரிப்பு - துபாய் மிஸ்ரா

விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  படம் தான்  'கேமரா எரர்.'

சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அகரன். உண்மைச் சம்பவங்களை படமாக எடுக்க படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு செல்கின்றனர். தினமும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சந்தேகத்துடன் கவனிக்கையில் அங்கே இறந்துபோனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்துவிடுகின்றனர்.

இப்படி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் ஆவிகளிடமிருந்து தப்பித்தார்களா? படப்பிடிப்பை முடித்தார்களா? என்று பரபரப்பாக சொல்லுவதே கதைக்களம்.

படப்பிடிப்பில் இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்க்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்  இயக்குநர் அகரன். 

ஆனால் படத்தில் வரும் ஆபாச காட்சிகள் பார்க்க சலிக்க வைக்கிறது. சினிமா கதாநாயகிகள் என்றாலே அவர்கள் படுக்கை அறைக்கு சென்று தான் நடிக்க வருகிறார்கள் என்பதை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக காட்டுவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த படத்தை குடும்பமாக நிச்சயம் பார்க்க முடியாது....  

மொத்தத்தில் இந்த 'கேமரா எரர்' ஆபாச கிளு..கிளு....  


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.