Articles by "தமிழ் நாடு காவல் துறை"

தமிழ் நாடு காவல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகம்!


சென்னை நகரின் மையப்பகுதியை காட்டிலும், புறநகர் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருவதாலும், மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதாலும் காவல்துறையின் கண்காணிப்பையும், நடவடிக்கையையும் அந்தப் பகுதிகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது.

இதை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து தாம்பரம், ஆவடி என இரு காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைப் பகுதிகளை பிரிப்பது, காவல் நிலையங்களை பிரிப்பது, புதிதாக நிர்வாகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.

அந்த வகையில், புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர். இவர்களே புதிய காவல் ஆணையரகங்கள் உருவாகியதும், அந்த காவல் ஆணையரகங்களின் முதல் ஆணையர்களாகப் பணியாற்றவுள்ளனர்.

குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் 3 காவல் ஆணையரகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன. இதன்படி, 137 காவல் நிலையங்களுடன் செயல்பட்ட பெருநகர காவல்துறையில் 33 காவல் நிலையங்கள் குறைந்தன.

இதில் 20 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்துக்கும், 13 காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டன. சென்னை காவல்துறை 104 காவல் நிலையங்களுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான ஆயுதப்படை காவலர்கள், மத்தியக் குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு தேவையான காவலர்கள், அதிகாரிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான கணினி உள்ளிட்ட இயந்திரங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவையும் பெறப்பட்டன. இந்த நிலையில், இரு புதிய காவல் ஆணையரகங்களையும் அமைக்க நிர்வாக ரீதியான பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளதை அடுத்து இரு காவல் ஆணையரகங்களும் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2 புதிய காவல் ஆணையர் அலுவலகங்களை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகம், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் இயங்குகிறது. அதேபோல், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாகச் செயல்படுகிறது.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு நிரந்தர கட்டிடமாக தாம்பரத்திலேயே புதிய காவல் ஆணையர் அலுவலகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் செயல்படத் தொடங்கும். இதேபோல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கும் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.




தூத்துக்குடி பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது....

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், அடிதடி  வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ், முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி, திரு. வள்ளிநாயகம் மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (18.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது  தூத்துக்குடி பொன்னகரம் டாஸ்மாக் கடை முன்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி பூபல்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் (30), அகமது கணி மகன் ஜான் வாஸ் (31) மற்றும் டேனியல் மகன் ரூபன் ஜோஸ்வா (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர்  எதிரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 9 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகளும், எதிரி ஜான் வாஸ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 6 வழக்குகளும், மற்றொரு எதிரியான ரூபன் ஜோஸ்வா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை போலீஸ் தற்கொலை காரணம் என்ன?

சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜோசப் (39). இவர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் க்ரைம் பிரிவில் பணியாற்றி வந்தார். 

இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  ஜோசப்புக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெகதீஸ்வரி, கணவருடன் கோபித்துக்கொண்டு சென்னை ஓட்டேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார்.
 
இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனியாக மன வருத்தத்தில் இருந்து வந்த ஜோசப், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






இன்ஸ்பெக்டருக்கு கொரோனா! 



வேளச்சேரி : 


வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு, தொற்று பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


இதையடுத்து, மேல் பரிசோதனைக்கு பின், வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 


தொடர்ந்து, அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணி புரியும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.





Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.