செப்டம்பர் 2021

“பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்பட இசை வெளியீட்டு விழா!


படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் 

எழுத்து இயக்கம் - பாலா அரன் 

ஒளிப்பதிவு - விக்னேஷ் செல்வராஜ் 

இசை - சுரேன் விகாஷ் 

படத்தொகுப்பு - ராம் சதீஷ்

கலை - சந்தோஷ் 

ஒலிக்கலவை - சிவகுமார் 

நடனம் - பாபு எரிக் 

SFX - சேது 

மக்கள் தொடர்பு - நிகில்

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head Media works தயாரித்துள்ள,  இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures  சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 


இந்நிகழ்வில் இயக்குநர் பாலா அரன் பேசியதாவது:

இப்படம் டார்க் ஜானரில் ஒரு  புது முயற்சியாக செய்துள்ளோம். மூடர்கூடம், சூது கவ்வும் படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும்  மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். 


தயாரிப்பாளர் ஒளிப்பதுவாளர் விக்னேஷ் செல்வராஜ்:

நானும், பாலாவும் கல்லூரி தோழர்கள் படிக்கும் போது நானும் அவனும் இணைந்து இந்த படத்தை, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் வைத்து  செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பின் பல போராட்டங்களுக்கு பிறகு நாமே செய்யலாம் என இறங்கி செய்தோம். இந்தப்படம் நாங்கள் இந்த மேடைக்கு வரும் என நினைக்கவில்லை, ஆனால் இப்போது இது பெரிய அளவில் ரிலீஸாவது மகிழ்ச்சி. இப்படத்தை இந்த அளவு பெரிய அளவில் வெளியிட காரணமாக இருந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.


படத்தொகுப்பாளர்  ராம் சதீஷ் பேசியதாவது:

இப்படத்தை எடிட் செய்வது மிக சவாலானதாக இருந்தது. ஆனால் எனக்கு  நிறைய சுதந்திரம் தந்தார்கள். எடிட் செய்யும் போதே, இந்தப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலா முழு சுதந்திரம் தந்து எடிட் செய்ய சொன்னார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் நன்றி. 


இணை தயாரிப்பாளர் விஜயன் பேசியதாவது:

இந்தப்படம் செய்யலாம் என நண்பர்கள் சொன்னார்கள்.  நண்பர்களாக செய்ததால் இந்தப்படம் கஷ்டமாக தெரியவில்லை. இந்த அனுபவம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. இப்படம் இந்த மேடைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி. 


நடிகர் நிஷாந்த் பேசியதாவது:

இந்தப்படத்தில் வர விஜயன் தான் காரணம், அவனால் தான் இந்தப்படம் எனக்கு கிடைத்தது. இயக்குநர் பாலா ஒரு இயக்குநராக இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலை செய்திருக்கிறார். இங்கு இருக்கும் அனைவருமே எல்லார் வேலையையும் கலந்து,  இணைந்தே செய்தோம். இப்படத்திற்காக இவ்வளவு பெரிய மேடையை பார்ப்போம் என யாரும் நினைக்கவில்லை. இதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி


நக்கலைட்ஸ் செல்லா பேசியதாவது:

பாலாவுக்கும்  விக்னேஷ்க்கும் கடின உழைப்பு தான் அடையாளம், அவர்கள் மிக தீவிரமான உழைப்பில் மிக அழகாக திட்டமிட்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இயக்குநர் கல்யாண் பேசியதாவது:

இந்தப்படம் டிரெய்லர் நன்றாக இருந்தது, இந்தப்படம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்ததால் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், நலன் குமாரசாமி ஒரு படத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 


இயக்குநர் ARK சரவணன் பேசியதாவது:

இந்தப்படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டேன். படம் அட்டகாசமாக இருக்கும், இப்படம் எடுக்க  நலன் தான் காரணம் என இயக்குநர் சொன்னார். என் படம் எடுக்கவும் அவர் தான் முன்னுதாரணமாக இருந்தார். இந்தப்படம் புதிய முகங்களின், கடுமையான உழைப்பில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி. 


இயக்குநர் கேபிள் சங்கர் பேசியதாவது:

தம்பி நிஷாந்த் மூலம் தான் இந்தப்படத்தை பார்த்தேன்.படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்று சொன்னார்கள். பின் நான்  இப்படத்தை CV குமாரிடம் அறிமுகப்படுத்தினேன். இப்போது இப்படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படம் எடுத்தால் எப்படியாவது அதற்குரிய இடத்தை அப்படம் பெற்றுவிடும், என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படம் சூது கவ்வும் படத்தை போல் அனைவரையும் கவரும் நன்றி. 


இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது:

2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி  புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி. 


தயாரிப்பாளர் CVகுமார் பேசியதாவது:

அட்டகத்தி எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது.  அதுமாதிரி தான் இந்தப்படமும், இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம் தான் இந்தப்படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து அவருக்கு பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 


தயாரிப்பாளர்  KE ஞானவேல் ராஜா, பேசியதாவது:

8 வருஷம் முன்னால் நடந்த  அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படம் முதலில்  பார்க்கபோகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள் பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரமாண்டமான புதிய  அனுபவமாக இருக்கும் நன்றி. 


ABI & ABI Pictures சார்பில் நந்தினி அபினேஷ் பேசியதாவது:

இந்தப்படத்தை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளிடுவது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 


தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது:

படத்தில்  இருந்து நல்ல காட்சியை போட்டு காட்டினார்கள் அதுவே மிக சுவாரஸ்யமாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த திரைப்படகுழு பெரிய அளவில் ஜெயிப்பார்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப்படங்களை தந்து வரும் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்துக்கள். 


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம்,  ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும். இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி. 

VIDEO HERE:

விஜயின் 66-வது திரைப்படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் தெரியுமா?! 

(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை ( #தளபதி 66 )  பிரபல இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார் .ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது. தளபதி 66 வது படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் ,நடிகர்களும் இணைந்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 


 60-Year Old Woman with Rheumatic Heart Disease undergoes safe!


The Cardiac Surgery team headed by Dr V.V. Bashi, Director & Senior Consultant, Institute of Cardiac & Aortic Disorders (ICAD) at SIMS Hospital, Vadapalani, performed an extremely challenging surgery of opening the heart for the fifth time and replacing the degenerated bio-prosthetic (tissue) valve of a sixty-year-old woman, thus adding more healthy years to her life.

 

Speaking about the first of its kind rare and complex surgery, Dr. V.V. Bashi said:


 "With continued advances in heart surgeries, now more and more re-operative cardiac surgeries are also being performed to improve life expectancy of the cardiac patients. However, a fifth-time valve replacement of the heart remains a rare & extremely risky surgery in my 40-year career. This requires extensive experience and precision, as it is an extremely complicated procedure carrying risk of life and cardiac failure. Since the patient has already undergone four heart surgeries in the past, the internal scar tissues between the structure of the chest makes it quite challenging to re-enter the chest and perform the surgery without damaging parts of the heart like cardiac chambers, coronary arteries, aorta etc. Further removing the existing tissue valve from the heart and replacing with a fresh valve without injuring the vital structures needs extensive planning and meticulous execution. Having safely and successfully performed this kind of a surgery, it is truly gratifying to say the least".

 

Sharing the patient's history and the line of treatment, Dr Mohammed Idhrees, Consultant Cardiothoracic & Vascular Surgeon said:


 “A 61-year-old woman was suffering from Rheumatic heart disease. She underwent mitral valve repair twice in the early 90’s. She underwent third time redo surgery in 2008 for which a mechanical valve was implanted. Unfortunately, within a year in 2009 her mechanical valve had a malfunction as she was not strict on her medication protocol. She underwent 4th time redo mitral valve surgery, where her mechanical valve was replaced with tissue valve, giving her a lease of 12 more years.  However, 12 years later (in 2021) her tissue valve is degenerated, requiring replacement. Now we had to perform an open-heart surgery for the fifth time to remove it and replace it with a new bio tissue valve.”

Also, the decision to choose between the mechanical or a tissue valve for patients undergoing surgical cardiac valve replacement comes with a lot of complexities that involve synthesizing clinical factors such as risk of bleeding, likelihood of reoperation, and patient preference.

 

Further Dr. VV Bashi added, “Since this patient was an elderly 60-year-old woman, with a history of four cardiac surgeries, the complexities of the fifth surgery including mortality and morbidity, had only increased exponentially. We reviewed her condition after conducting multiple lab investigations and diagnostics. The results revealed she had degeneration of the bio prosthetic valve, which was causing her severe breathlessness. If left untreated, with time it could prove fatal, hence, despite all the challenges, the Cardiac Surgery team at SIMS decided to perform a bio prosthetic tissue valve surgery post ascertaining the fitness of the patient. The 7-hour long surgery proved to be a success and on a post-surgery review the tests conducted upon her showed the excellent functioning of her heart and she is doing well and going about her normal activities”.

 

Rheumatic heart disease is a clinical condition that is common in India and rare in western world. Though valve repair is the best option, not all valves affected by rheumatic heart disease can be repaired. In scenarios where the heart valve has to be replaced, patient has the choice to choose between mechanical valve and bio-prosthetic (tissue) valve. The mechanical valve may last life long, but patients need to take blood thinners throughout their life and maintain a specific range to avoid complications. Values higher than the range can cause bleeding, while lower values can malfunction of the mechanical valve. On the other hand, bio-prosthetic (tissue) valve implantation will avoid the usage of blood thinners, but these valves have a life of 10 to 12 years after which they need replacement. Researchers across the globe are in search to identify an ideal valve that will last lifelong without blood thinner. Until then, these patients have to be managed efficiently and safely.

 

Dr Raju Sivasamy, Vice President, SIMS Hospital:


in his appreciation said, "These kinds of complex cases are performed only at a few elite medical institutes in the world, because it requires superior surgical skills and latest technology. We are extremely delighted that ours is one such specialised centre with a team of experienced Cardiothoracic Surgeons, Cardiac Anaesthesiologists, skilled Nursing professionals & Technicians and other support team under the stewardship of Dr. V. V. Bashi, who could safely & successfully perform such a rare and high risk surgery, saving the life of the patient and giving her a new lease of life. Also, during COVID 19 Pandemic, SIMS has treated over 3000 COVID patients with dedicated centres across the city and continued performing normal cardiac surgeries, with all requisite precautions to benefit our regular patients”. 


VIDEO HERE:


கலர்ஸ் தமிழின் இந்த வார கன்னித் தீவு நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பங்கேற்பு!


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நையாண்டி நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நிகழ்ச்சியை இந்த வாரம் சிறப்பு விளம்பரதாரராக இணைந்து கேட்பரி 5 ஸ்டார் தொகுத்து வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஜல்சா மன்னர் மற்றும் அவரது தீவின் குடிமக்களின் புதிரான நகைச்சுவைமிக்க நடவடிக்கைகள் உங்கள் விலா எலும்புகளை நோகச் செய்யும். 


இந்த வார நிகழ்ச்சியில் ஜல்சா மன்னராக ரோபோ சங்கர், சின்ன மாதாவாக கிரேஸ் கருணாஸ் மற்றும் பேபி மாதாவாக ஜாங்கிரி மதுமிதா, சிறப்பு விருந்தினராக அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்குபெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை காண 26 செப்டம்பர், 2021, ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; நிகழ்ச்சியை பார்த்து சிரித்து மகிழுங்கள்.

இந்த வார ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி அதன் வழக்கமான வடிவத்திலிருந்து சற்று மாறி பார்வையாளர்களுக்கு ஒரு வேடிக்கையான விருந்தை வழங்கவிருக்கிறது. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் அமுதவன் மற்றும் அன்சார் ஆகியோர் உங்களை சிரிக்க வைக்க பல்வேறு நகைச்சுவைகளை வழங்க இருக்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர் நாஞ்சில் சம்பத் மற்றும் ஜல்சா மன்னர் இடையே வேடிக்கை நிறைந்த உரையாடலும் நிகழ உள்ளது.

சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் தோன்றியது குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், நகைச்சுவை உலகில் ஒரு தனித்துவமான கருத்துடன் இதுபோன்ற ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது மற்றும் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது ஆகியவை சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் எனது நகைச்சுவையான பக்கத்தை கட்டவிழ்த்துவிட்டேன், பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சமீபத்திய நகைச்சுவை நிகழ்ச்சியாகும், இது மன்னர் ஜல்சானந்தாவை பற்றியும், அவரது காஸ்ட்வே தீவான கன்னி தீவில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதாகும்.  ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒன்றைவிட நகைச்சுவை நிறைந்தவையாக இருக்கும். 

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருடன் நடிகை மதுமிதா பேபி மாதாவாகவும், கிரேஸ் கருணாஸ் சின்ன மாதாவாகவும் அவதாரம் எடுத்துள்ளனர். மாதா ஜிங்காரா (அண்ணா பாரதி), மாதா ஜால்ரா (நர்மதா), இந்த தீவின் பிஆர்ஓ பிச்சுமணியான அடவாடி அன்சார் ஆகியோர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகைச்சுவை கிளப்பில் பங்கேற்கிறார்கள். கலையரசன் (அமுதவாணன்) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் சிறிய நகைச்சுவை நாடகம் ஒன்றை நடத்தி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியை காண 26 செப்டம்பர், 2021, ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்வதை மறந்துவிடாதீர்கள்.
 V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் 'தலைநகரம் 2'


ஒளிப்பதிவு - கிருஷ்ணசாமி

வசனம் - மணிஜி

இணை தயாரிப்பு - RS வெங்கட், APV மாறன்


V.Z.துரை - சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் 'தலைநகரம் 2' இயக்குனர் V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் இப்படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.  இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இயக்குனர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா!


விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.விஜய் ஆண்டனி பேசியவை:


வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான்  நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை  வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்த்ததற்கு  ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை:

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது.6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல்  இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான்.

தனஞ்ஜெயன் பேசியவை:

இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு  பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா இல்லையா என்ற கேள்விகளை தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது. இந்த படத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு வருடங்களாக படத்தின் செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு நன்றி.

நடிகர் கதிர் பேசியவை:

தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான் . பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன்.


இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் பேசியவை:

என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது. மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது.

கமல் போக்ரா பேசியவை:

இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய வெற்றியடைய செய்த  ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி.கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களை கொடுப்போம்.

VIDEO HERE:

சசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்துள்ள  "ராஜ வம்சம் "  அக்டோபர் 1ஆம் தேதி வெளியீடு !

சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம், ராஜவம்சம். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். 49 நடி கர், நடிகைகளுடன் உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பின்றி கிடக்கும் குஜிலியம்பாறை பூங்கா நகர்!


திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை , பூங்கா நகரில் குடிநீர் மற்றும் விளக்கு வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதை பற்றி இப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை கரிக்காலி செல்லும் வழியில் , பூங்கா நகர் இருக்கிறது. இந்நகரில் சுமார் 10 வருட காலமாகவே குடிநீர் தண்ணீர் மற்றும் தெரு விளக்கு இல்லாததால் அவதிபட்டு வருகின்றோம். இதனால் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் இரவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் . சில சமயங்களில் விஷ பூச்சிகளினால் உயிர் இழக்கும் அபாயம் கூட ஏற்படுகின்றது . இந்நகரில் தண்ணீர் பற்றாக்குறைகள் காரணமாக 5 கி.மீ ., சென்று தண்ணீர் எடுக்கும் சூழல் உள்ளது.  இதனால் நாங்கள் பெரிதும் அவதிபடுகின்றோம்.  இது குறித்து தாலுகா மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு சரியான பதிலும் அளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் .இப்படியே சென்றால் எங்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறிவிடும். என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 

பஞ்சாயத்து தலைவர், தாலுக்கா அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பார்களா? பார்ப்போம்.
A Session on Internet of Things (IOT)


Rotary Club of Chennai Neithal, part of Rotary International District 3232 (Chennai City) has been doing various socially committed projects as per the avenues directed by Rotary International. Rotary Chennai Neithal focuses on vocational services and Youth empowerment projects that helps skill development

among Rotaractors, the youth-wing of Rotary which comprises mostly college students. These skill development initiatives of the club in various fields benefit students to upgrade and enhance their knowledge to become industry ready.

Today, Rotary Club of Chennai Neithal have organised a trending topic in India - “Internet of Things (IOT)”. The chief guests were Mr.Krishnan (VP & CFO - ATOS India) and Mr.Ramesh (Country Director - Dewtron India). During the session on IOT, we have run through the general overview of the topic followed by a live demo about application of IOT in a car.

This car was showcased outside the venue, fitted with all IOT sensors and gadgets for live demonstration. Over 20 engineering students of Rotaract clubs participated in the session and attended the live showcase of Cars fitted with IOT devices for demonstration. During the question-answer session our special invitees and students asked several questions pertaining to IOT and received clarification.

Overall, 100 people attended this session, from various notable organisations & industry leaders were participated. Rtn.Natarajan Thagadurai, the charter president of the club appreciated members and invitees who

actively participated in this session on IOT and said “It has been a very good program for the college students. The overall perception and idea of IOT has changed among students, young engineers. I am sure, this would definitely had invoked interest among students to pursue their higher studies in this area.”

President Rtn.Sitalakshmi delivered the vote of thanks and specially mentioned members of the club who were instrumental to get this event a huge success.

குஜிலியம்பாறையில் வீரத்துறவி ராமகோபாலன் ஜி 95 ஆவது பிறந்த நாள் விழா!


குஜிலியம்பாறையில் வீரத்துறவி ராமகோபாலன் ஜி 95 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில்  தலைமை வீ. கணேசன் மாவட்ட துணைத்தலைவர் முன்னிலை   ஜெ.பாலகணேஷ் ஒன்றிய பொருளாளர் மற்றும் பிஜேபி., ஒன்றிய தலைவர் சரவணன் பொதுச்செயலாளர் இளையராஜா ராமச்சந்திரன் செயலாளர் நாகராஜ் மாவட்ட மகளிரணி தலைவி அனிதா மற்றும் ஏராளமானோர் கலந்து  கலந்து கொண்டனர்  பின்னர் விழாவின் முடிவில் ,இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.

தூத்துக்குடி பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது....

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், அடிதடி  வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ், முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி, திரு. வள்ளிநாயகம் மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (18.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது  தூத்துக்குடி பொன்னகரம் டாஸ்மாக் கடை முன்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி பூபல்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் (30), அகமது கணி மகன் ஜான் வாஸ் (31) மற்றும் டேனியல் மகன் ரூபன் ஜோஸ்வா (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர்  எதிரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராஜ் (எ) டெரன்ஸ் ராஜ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 9 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகளும், எதிரி ஜான் வாஸ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 6 வழக்குகளும், மற்றொரு எதிரியான ரூபன் ஜோஸ்வா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைக்  திருடியவர்  கைது!  

கரூர் மாவட்டம்  ,குளித்தலை  அருகே நசநல்லூரை  சேர்த்தவர்  பாலு  இவரது  மகன் முருகானந்தம் (33) . கடந்த 15 ம்  தேதி இவர்,  திண்டுக்கல்  மாவட்டம்  குஜிலியம்பாறை அருகே பைக்  திருடுவதக  குஜிலியம்பாறை போலீசாருக்கு  தகவல் கிடைத்தது  இத்  தகவலின் பேரில்  எஸ் .ஐ ., மலைச்சாமி  தலைமலையில்  போலீசார்  சம்பவ இடத்திற்கு நேரில்  சென்று  விசாரணை  செய்தனர்.

அப்போது சந்தேக்கத்திற்கு  இடமான  வகையில்  இருந்த முருகந்ததை  பிடித்து  விசாரித்த போது  பைக் திருடியது தெரியவந்தது .பின்னர் போலீசார்  அவரை  கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 10 லட்சம் மோசடி!

தூத்துக்குடியில் பலரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 10 லட்சம் மோசடி செய்தவர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடியில் பலரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ‘எம்.எஸ் லாஜிஸ்டிக்ஸ் மெரைன் ஷிப்பிங் ஏஜென்சி உரிமையாளரான அண்டன் கோமஸ் மகன் மைக்கேல் ராஜ் (41) என்பவரை கைது செய்தனர். 

அவர் அந்தோணி ரூபன் என்பவரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித்தருவமாக ரூபாய் 2 லட்சமும், மரியஜோஸ் ஸ்டானி என்பவரிடம் ரூபாய் 3,30,000/-மும், முகம்மது ஜாபித் பன்ருட்டி என்பவரிடம் ரூபாய் 50,000/-மும், பிரியத் என்பவரிடம் ரூபாய் 50,000/- ஜார்ஜ் என்பவரிடம் ரூபாய் 50,000/-மும், மரிய அன்டோ ராஜன் என்பவரிடம் ருபாய் 1 லட்சமும், மெக்வின் என்பவரிடம் ரூபாய் 1 லட்சமும், கந்தராஜ் சிவகாசி என்பவரிடம் ரூபாய் 1 லட்சமும், சாமுவேல் பாட்ரிக் என்பவரிடம் ரூபாய் 40,300/-ம் ஆகிய 9 பேரிடம் மொத்தம் ரூபாய் 10,20,300/- பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. 

மேலும் இதுபோன்று பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்படி மோசடி நபரைக் கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

 800 கிலோ குட்கா பறிமுதல்...  

அந்தியூர் அருகே பர்கூரில் அரசால்  தடைசெய்யப்பட்ட  குட்கா  ஈரோடு  போலீசார்  பறிமுதல் செய்தனர் .

ஈரோடு,அந்தியூர் அருகே பர்கூரில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை கைப்பற்றி பர்கூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் மோகித், செல்வராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை!


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள காந்தி நகா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் கோவில்பட்டி ஊருணி மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், ஆன்லைன் மூலம் விளையாடி தந்தையின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்ததும், இதனால் அவரது பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக குத்திக் கொலை : அண்ணன் - தம்பி கைது
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்- தம்பி ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ண ராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம் 

இன்று மாலை 5 மணி அளவில் 3 பேரும் வழக்கம்போல் மையவாடி அருகில் உள்ள பூங்கா முன்பு உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சிவபெருமாள் கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் கத்தியை காட்டி தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனாலும் பொதுமக்கள் இருவரையும் பிடித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிவபெருமாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குப் பதிந்து, ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட சிவபெருமாள் சடலம் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


நெல்லை போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்...

நெல்லையில் போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (27).

 இவரது அண்ணன் சாகுல் தாழையூத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். அப்துல் காதர் தற்போது பாளை சங்கர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே அப்துல் காதர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

 கொலையாளிகளை பிடிக்க, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மேல சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார் (25), ராஜீவ்நகர் 2-வது தெருவை சேர்ந்த துரை மகன் சரவணன் (24), மில்லர்புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன்குமார் என்ற சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (22), செல்லப்பா (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாதேஷ்வரன் (23), தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த காளியப்பன் (26) ஆகிய 4 பேர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். 

 அவர்களை நீதிபதி தமிழரசன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் சாத்தான்குளத்தை சேர்ந்த மாணிக்கராஜா (25) தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொள்ளை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உட்பட 5பேர் கைது: 42 பவுன் நகைகள் மீட்புகடையம் அருகே வீடுபுகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் நிதி நிறுவன மேலராளர் உட்பட  5பேர் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகள் மீட்டனர்.


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவநாடானூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவரது வீட்டில் கடந்த மாதம் 13-ந் தேதி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 33.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். முன்னதாக கோவிலூற்றைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.


இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்காக, ஆலங்குளம் காவல் துணை  கண்காணிப்பாளர்  பொன்னிவளவன் மேற்பார்வையில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.


இதில் நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா (35), அவருடைய உறவினரான வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்துராஜா, கணேசன் ஆகியோரது வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. 


பின்னர் அந்த நகைகளை சேரன்மாதேவி தனியார் நிதி நிறுவன மேலாளரான சிவகுமரேசன் மூலமாக முக்கூடலைச் சேர்ந்த பிச்சுமணி, நெல்லை டவுனைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ், கார்த்திக், சிவகுமரேசன், பிச்சுமணி, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகளை மீட்டனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

'பிரண்ட்ஷிப்' திரைப்பட விமர்சனம்: லாஸ்லியாவுக்கு என்ன ஆனது?!


ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் லாஸ்லியா.

சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.


நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.

நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது. 

ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

"கோடியில் ஒருவன்" திரைப்பட விமர்சனம் 


நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐ.ஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார். 

இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜய் ஆண்டனி, மிடுக்கான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் அவர் ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.


இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக காட்டி இருந்தாலும், திரைக்கதை வேகத்தை கூட்டி இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்திருக்கலாம். ஹீரோ தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். 

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.


“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட  இசை வெளியீட்டு விழா!


Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில்,  ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.  பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 )  ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் பேசிய....

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது...

நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும்  ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவரிடமும்  படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன். அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகர் யோகிபாபு கூறியதாவது...

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ரவீந்தர் சார், இயக்குநர் அனைவருக்கும் நன்றி. சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன்  வாய்ப்புக்காக நின்றிருப்பேன், அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது. அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது...

இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர் அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார் உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை அதனால் அவர் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி. 

டான்ஸ் மாஸ்டர் ஷோபி கூறியதாவது...

நிறைய படங்கள் செய்கிறோம் ஆனால் நாம் நினைத்தது எல்லாவற்றையும் செய்து விட முடியாது ஆனால் இந்தப்படத்தில் நாங்களே தயங்கினாலும் ரவீந்தர் நினைத்தது எல்லாவற்றையும் செய்யுங்கள் என்று சொன்னார், அவருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

நடிகை மதுமிதா கூறியதாவது...

இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எனக்கு இது இரண்டாவது படம் நான் மயில்சாமி, மனோபாலா சார் இணைந்து நன்றாக காமெடி செய்திருக்கிறோம். தயாரிப்பாளர் மிகவும் ஸ்வீட்டானவர் மிகவும் கூலாகவே இருப்பார். அவரது மனதிற்கு நன்றி. இந்தபடத்தில் அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம் 

தயாரிப்பாளர் சித்ரா லக்‌ஷ்மண் பேசியதாவது...

சாந்தனுவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும், அவரிடம் எனக்கு பிடித்தது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி. அவரது உழைப்புக்கு கண்டிப்பாக ஜெயிப்பார். இந்தப்படத்தின் கதையை கேட்டபோதே முழுதாக சிரித்ததாக சொன்னார்கள். இப்போது யாரும் கதையை முழுதாக ரெடி செய்துகொண்டு படப்பிடிப்புக்கு போவதில்லை, அந்த வகையில் இந்த டீம் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் ரவீந்திரன் நிறைய அனுபவம் கொண்டவர் ஆரம்பத்தில் நிறைய தடைகளை கடந்து கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வராவிட்டால் மிர்ச்சி சிவாவுக்கு இந்த அளவு டான்ஸ் தெரியும் என்பது தெரியாமல் போயிருக்கும் அவரை டான்ஸ் மாஸ்டராக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தப்படத்தை காமெடி கொண்டாட்டமாக உருவாக்கியிருக்கிறார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


மயில்சாமி கூறியதாவது....

என்னுடைய குருநாதர் பாக்யராஜ் சார் தான். நான் ஒரு நடிகரை பார்த்து வர வேண்டும் என நினைத்தது சுருளிராஜன் சார். நான் ஆரம்பத்தில் பாக்யராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்டு நடித்து அவரை டார்ச்சர் செய்திருக்கிறேன். பாக்யராஜ் எம் ஜி ஆர் ஆவி வருவது போல் ஒரு படம் எடுத்தார். அதில் எம் ஜி ஆருக்கு நான் தான் வாய்ஸ் குடுத்தேன் அதை எனக்கு கிடைத்த கௌரவமாக நினைக்கிறேன். இந்தப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக செலவு செய்து, காட்சிக்கு என்ன வேண்டுமோ அதை செய்து எடுத்துள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படம் மிக அற்புதமான நகைச்சுவை படமாக இருக்கும். எல்லோரும் நன்றாகவே காமெடி செய்திருக்கிறோம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது...

முருங்கைக்காய் சிப்ஸ் பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் ரவீந்தரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு நன்றாக நடிக்க வரும், வில்லனாக வாங்க சார் என்று சொன்னேன்  இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். எத்தனை தோல்வி அடைந்தாலும், அதை கடந்து வருகிறார் ரவீந்தர் மாதிரி தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியம். சாந்தனு YouTube சேனலில் கலக்கி வருகிறார். அவர் ஒரு படத்தை எழுதி இயக்கி நடிக்க வேண்டும். நாயகி அதுல்யா நன்றாக நடித்திருக்கிறார். தரணின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பராக இருந்தது. தியேட்டருக்கு ரசிகர்கள் திரும்ப வர ஆரம்பித்துள்ளது நிறைய மகிழ்ச்சியை தருகிறது. நிறைய படங்கள் வர வேண்டும், ஜெயிக்க வேண்டும். 

தயாரிப்பாளர் CV குமார் கூறியதாவது...

எத்தனையோ தோல்விகளை  தாண்டி சினிமா செய்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அவர் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது...

ரவீந்தர் மிக நல்ல மனிதர். சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பேரை அடித்தோம் என்பது முக்கியமில்லை எவ்வளவு பேரிடம் அடி வாங்கினோம் என்பதே முக்கியம். அது போல் எத்தனையோ தடைகளை தாண்டி சினிமா செய்கிறார் அவர் ஜெயிக்க வேண்டும். சாந்தனு எப்போதோ ஜெயிக்க வேண்டியவர் அவர் கடின உழைப்பிற்காக கண்டிப்பாக ஜெயிப்பார் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் PL தேனப்பன் கூறியதாவது...

இந்த மேடையிலுள்ள அனைவரும் தயாரிப்பாளரை வாழ்த்துவதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் ஶ்ரீஜர் கூறியதாவது.... 

நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு திரைக்கதை எழுத முன்னுதாரணமாக இருந்தது பாக்யராஜ் சாரின் ‘திரைக்கதை பேசலாம் வாங்க’ புத்தகம் தான். அவரை வைத்து இயக்கியது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இயக்குநர் வாசு சாரின் மகன் சக்தி தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. தயாரிப்பாளருக்கு லைன் சொன்னவுடனே அவருக்கு பிடித்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை 2 வருடம் உழைத்து உருவாக்கியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டவுடனே உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார். சாந்தனுவுக்கும் கேட்டவுடன் இந்தப்படம் பிடித்துவிட்டது. இந்த டைட்டிலை தந்தது தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளரின் அக்கறை தான் படம் நன்றாக வர காரணம்.  ஒளிப்பதிவாளர் ரமேஷ் அதிகம் பேச மாட்டார் இப்படம் விரைவாக முடிக்க காரணம் அவர் தான். இசையமைப்பாளர் தரண், படம் ரசிகர்களிடம் சென்று சேர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. அதுல்யா திறமையான தமிழ் பேசும் நடிகை நன்றாக நடித்திருக்கிறார். இந்தப்படம் முழுதாக உருவாக முழுக்காரணமாக இருந்தவர் சாந்தனு தான். அவரது கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும்.  இந்தப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் ஒரு காமெடி கலாட்டாவாக உங்களை திருப்தி படுத்தும் படமாக இப்படம் இருக்கும் நன்றி. 

நடிகை அதுல்யா கூறியதாவது...

முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி. நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள்  நன்றி. 

தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது...

எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த  இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள். இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார். இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த புரடியூசர் இல்ல ஆனா நல்ல புரடியூசர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. இந்தப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம். 

இசையமைப்பாளர் தரண் கூறியதாவது..

பாக்யராஜ் சார் என் குரு இந்த மேடையில் நிற்க அவர் தான் காரணம். அவர் ஆபிஸில் நானும் நின்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை தான் அவரை பார்த்தேன் உடனே வாய்ப்பு கிடைத்தது. அது என் பாக்கியம். ரவீந்திரன் சார் போன் செய்து ஏ ஆர் ரஹ்மான் மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டார். இப்போது மேடையில் நான் எந்தெந்த பாடல் எல்லாம் காப்பி அடித்து போட்டிருக்கிறேன் என்று சொன்னார் நன்றி. இந்தப்படத்தில் அவர் ஒரு பாடலும் எழுதினார். அவர் பாடலுக்கு செலவு செய்ததிலேயே இரண்டு படங்கள் எடுத்திருக்க முடியும் அவ்வளவு செய்திருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும்  உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள் சோனி கம்பெனிக்கும் நன்றி. ஹிட்டாகும் படங்களில் கூட இப்போது பாடல்கள் முன்பை போல் வரவேற்பை பெறுவதில்லை. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் இயக்குநர் பாக்யராஜ் கூறுயதாவது...

நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார்.  அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார். தரண் தான் இன்றைய நாயகன் நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவா தான் டான்ஸில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார். முருங்கைக்காய் சிப்ஸ் என்றவுடன் முதலில் நான் எடுத்த, அந்த காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி முதலில் பலமுறை எடுக்க நினைத்து, காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது புகழ் பெற்றிருப்பது சந்தோஷம். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களை பெற்றிருப்பது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. நாயகி கோயம்புத்தூர் என்பதே முதலில் தெரியாது அவர் ஆங்கிலத்தில் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன் பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.