ஜூலை 2023

23 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள்!


இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11 லட்சம் கோடியை கடந்திருக்கிறது

நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது

செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 16% அதிகரித்திருக்கிறது

முக்கிய சிறப்பம்சங்கள்

(ஜுன்’22 மற்றும் ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)

  • நிகர இலாபம் ஜுன்’22-ல் ₹1213 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1709 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம் ஜுன்’22-ல் ₹1345 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹2394 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 78% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம் ஜுன்’22-ல் ₹3564 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹4135 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 16% அதிகரித்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய் ஜுன்’22-ல் ₹4534 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹5703 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 26% அதிகரித்திருக்கிறது
  • கட்டணம் சார்ந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 7% அதிகரித்து ஜுன்’23-ல் ₹671 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
  • வருவாய்க்கான செலவு விகிதம் ஜுன்’23-ல் 44.22% என பதிவாகியிருக்கிறது
 • உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), ஜுன்’22-ல் 3.10% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 3.61% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
 • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) ஜுன்’22-ல் 0.73% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 0.95% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
 • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) ஜுன்’22-ல் 14.18% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 17.88% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது
 • மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, ஜுன்’22-ல் ₹1009454 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1100943 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
 • மொத்த கடன்கள், ஜுன்’22-ல் ₹425203 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் 13% வளர்ச்சி பெற்று ₹479404 கோடியாக அதிகரித்திருக்கிறது
 • RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் ஜுன்’22-ல் ₹244247 கோடி என்ற அளவிலிருந்து ஜுன்’23-ல் ₹276435 கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
 • மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 61% ஆக இருக்கிறது. ரீடெய்ல் கடன்கள் மற்றும் விவசாயக் கடன்கள் முந்தைய ஆண்டைவிட ஒவ்வொன்றும் 16% வளர்ச்சியையும், MSME துறைக்கான கடன்கள் 7% வளர்ச்சியையும் பதிவுசெய்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 14%, ஆட்டோமொபைலுக்கான கடன் 29% மற்றும் தனிநபர் கடன் 52% என அதிகரித்திருக்கின்றன
 • வைப்புத் தொகைகள் (டெபாசிட்கள்), முந்தைய ஆண்டைவிட 6% உயர்ந்து ஜுன்’23-ல் ₹621539 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன
 • CASA டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட  5% உயர்ந்து ஜுன்’23-ல் ₹250242 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன. மொத்த டெபாசிட்களுள் CASA-ன் பங்களிப்பு 40% ஆக இருக்கிறது.
 • GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’22-ல் இருந்த 8.13% லிருந்து ஜுன்’23-ல் 266 bps குறைந்து 5.47% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) ஜுன்’22-ல் இருந்த 2.12% லிருந்து ஜுன்’23-ல் 142 bps குறைந்து 0.70% ஆக பதிவாகியிருக்கிறது
 • வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம்  (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), ஜுன்’22-ல் இருந்த 88.08% லிருந்து ஜுன்’23-ல் 702 bps அதிகரித்து 95.10% ஆக பதிவாகியிருக்கிறது
 • மூலதன போதுமான நிலை விகிதம் 15.78% என்பதாகவும் மற்றும் CET-I & அடுக்கு I மூலதனம் முறையே 12.31% & 12.88% என்ற அளவிலும் இருந்தன.

முக்கிய சிறப்பம்சங்கள்

(மார்ச்’23 மற்றும் ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)

  • நிகர இலாபம் மார்ச்’23-ல் ₹1447 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1709 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 18% உயர்ந்திருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம் மார்ச்’23-ல் ₹1452 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹2394 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 65% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம் மார்ச்’23-ல் ₹4016 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹4135 கோடியாக அதிகரித்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய் மார்ச்’23-ல் ₹5508 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹5703 கோடியாக அதிகரித்திருக்கிறது
 • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) ஜுன்’23-ல் 0.95% என 13 bps முன்னேற்றம் கண்டிருக்கிறது
 • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) முந்தைய காலாண்டைவிட ஜுன்’23-ல் 240 bps உயர்ந்து 17.88% ஆக பதிவாகியிருக்கிறது
 • வருவாய்க்கான செலவு விகிதம் முந்தைய காலாண்டைவிட ஜுன்’23-ல் 225 bps உயர்ந்து 44.22% என்பதாக மேம்பட்டிருக்கிறது
 • முன்னுரிமை துறைக்கான போர்ட்ஃபோலியோ, ஜுன்’23-ல் ₹160863 கோடி என்ற அளவில் இருந்தது. ANBC-ன் ஒரு சதவீதமாக முன்னுரிமை துறைக்கான கடன்கள், ஒழுங்குமுறை தேவைப்பாடான 40% என்பதற்கு எதிராக 44% என்ற உயர்நிலையை எட்டியிருக்கிறது.

வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:

 • இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5798 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1970 கிராமப்புறங்களிலும், 1517 சிறு நகரங்களிலும், 1168 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1143 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IFSC பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.
 • இவ்வங்கி, 4804 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10805 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.

டிஜிட்டல் வங்கிச்சேவை:

 • ஏடிஎம், பிஎன்ஏ & டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டைவிட Q1FY24-ல் 7% அதிகரித்திருக்கின்றன.
 • மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது.
 • UPI பயனாளிகள் மற்றும் பரிவர்த்தனைகள், முந்தைய ஆண்டைவிட முறையே 33% மற்றும் 85% அதிகரித்திருக்கிறது.
 • Q1FY24-ன்போது, இவ்வங்கி அதன் டிஜிட்டல் நிலைமாற்ற செயல்திட்டத்தின்கீழ் பல்வேறு டிஜிட்டல் பயன முன்னெடுப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்:

 • அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்திற்கான சேர்க்கையில் நேர்த்தியான செயல்பாட்டுக்காக கீழ்வரும் விருதுகளை இவ்வங்கி பெற்றிருக்கிறது:
  • உயர்நேர்த்திக்காக APY லீடர்ஷிப் பினாக்கிள் எக்ஸம்பிளரி அவார்டு (வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்களுக்கான திட்டம்): அனைத்து பொதுத்துறை வங்கிகள் மத்தியில், இலக்கின் மீது 181.95% என்பதை எட்டி முதலிடத்தை இந்தியன் வங்கி பெற்றிருக்கிறது.
  • ஸ்பான்சர் வங்கிகள் மற்றும் RRBகளுக்கான APY தேசிய சேம்பியன்ஷிப் கோப்பை: அனைத்து குழுக்களிலும் மிகச்சிறந்த வங்கிகளுக்கான தர வரிசையில் இவ்வங்கி 2வது இடத்தைப் பெற்றிருக்கிறது – APY சேம்பியன்ஷிப் எக்ஸம்பிளரி அவார்டு உடன் APY சேம்பியன்ஷிப் பரிசுக் கோப்பையையும் இவ்வங்கி வென்றிருக்கிறது.

எமது சிறப்பு கூர்நோக்கம்:

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவது, பிரத்யேகமாக உருவாக்கப்படும் இனிய அனுபவங்களை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர்களது பிரச்சனைகளை சுய முனைப்புடன் தீர்ப்பது ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரது திருப்தியை மேம்படுத்த நாங்கள் பேரார்வத்துடனும், அர்ப்பணிப்போடும் செயலாற்றுகிறோம்.

வங்கியின் பணியாளர்களுக்காக நடத்தப்படும் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகு முறை வழியாகவும் நம்பிக்கையை மேன்மேலும் மேம்படுத்தவும், நிதிசார் அறிவை ஊக்குவிக்கவும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்;

மேலும் எமது வாடிக்கையாளர்களான தனி நபர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனங்கள் அவர்களது நிதிசார் இலக்குகளை எட்டுவதற்கு அவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குவது எமது சிறப்பு நோக்கமாக இருக்கிறது

"டை நோ சர்ஸ்" திரை விமர்சனம் "டை நோ சர்ஸ்" படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். மாறா, அட்டு படத்தில் நடித்த ரிஷி, சாய் பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.‌ 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!

வட சென்னையில் சாலையார் மற்றும் கிளியப்பன் கும்பலுக்கும் இடையே பகை. இதனால் கிளியப்பன் மச்சானை தனது அடியாட்களை வைத்து சாலையார் போட்டுத்தள்ளுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட மச்சானை கொலை செய்த 8 பேரையும் சரணடைய செய்கிறார். இதில் ஒருவனுக்கு தற்போது தான் திருமணம் ஆகியுள்ளது என்பதால் அவனுக்கு பதிலாக அவனது நண்பன் சிறைக்கு செல்கிறான். இதனால் சமாதானம் அடைந்த கிளியப்பன் வீட்டிற்கு பணம் வாங்க சாலையார் கும்பலில் இருந்து ஆட்கள் செல்கிறார்கள் அவர்களுடன் கொலையாளியும் செல்கிறான். 


அங்கு கொலை செய்தது இவன் தான் என கிளியப்பனுக்கு தெரியவருகிறது. பிறகு நாயகன் சந்திக்கும் பின் விளைவுகள் என்ன? இறுதியில் என்ன ஆனது?? என்பதே மீதிக்கதை....

போபோ சசி இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை. கிணற்றுக்குள் இருக்கும் ஹீத் லெட்ஜர் படம், ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா ரகளையாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

வட சென்னை பகுதி காட்சிகள் படத்திற்கு பலம்.... இசையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....

மொத்தத்தில் இந்த "டை நோ சர்ஸ்" அடிக்கும்.....

RATING: 3/5


Gleneagles Global Health City launches Advanced Heart, Lung & Liver Transplant Clinic in Anna Nagar Chennai: 

Chennai-based Gleneagles Global Health City (GGHC) have launched its Advanced Heart & Lung Transplant, VATS & Robotic Surgery Clinic, and the Liver Transplant, HBP and Robotic Surgery Clinic at Anna Nagar today. The Daycare clinic is in association with Dr Heart Healthcare. This would be the second-day care Clinic that Gleneagles Global Health City has opened in the city in the recent past. The first clinic was launched in Adyar, Chennai. 

The Heart & Lung Transplant clinic was inaugurated by Thiru MK Mohan, MLA, Anna Nagar and Thiru B Ranganathan, Chairman, Tamil Nadu Warehouse Corporation inaugurated the Liver Transplant, HBP, and Robotic Surgery Clinic. Gleneagles Global will have their doctors consulting at the Clinic, screening patients and sensitizing the community at large. 

"We are very pleased to announce this association with Dr Heart Healthcare. The Daycare clinic will cater to the thousands of residents within a radius of 5 to 7 kilometers. Critical organs like the Heart, Lungs, and Liver can be transplanted if it is carefully harvested and on time. Our daycare clinic will ensure we save lives on time, every time," said Dr Alok Khullar, Chief Executive Officer, Gleneagles Global Health City. 


"With the launch of the Anna Nagar clinic for Heart, Lung and Liver transplants, thousands of sick patients in and around Anna Nagar. Also, patients who have undergone surgery at the main hospital need not travel for their post-surgery reviews as we now have a presence in this part of town," said Dr. Govini Balasubramanian, Cardiothoracic Surgeon, Gleneagles Global Health City "Robotic surgery is a cutting-edge technology that enables surgeons to perform complex procedures with enhanced precision and minimal invasiveness in liver transplants and HBP surgeries. 

The Robotic clinic which launched today in Annanagar would help patients with smaller incisions, reduced blood loss, shorter hospital stays, and faster recovery for patients" said, Dr Rajanikanth Patcha, Senior Consultant, Liver Transplant & HPB surgery, Global health city, Chennai. "It is due to the lack of awareness that we have patients coming to us at the last stage. 

Many diseases are preventable, curable, and manageable if caught early. All that one has to do is go for a regular medical health checkup. Even the Government can do a lot more to create awareness amongst the poor and needy," Dr. Guruprasad Sognurnuru, MD, Dr. Heart Health Care.IQOO Registers 82% YOY Growth in Tamil Nadu!


Chennai: 

iQOO, the high-performance smartphone brand, has become the fastest growing smartphone brand in the above INR 10K segment in Tamil Nadu. Tamil Nadu is among the top 5 states contributing to iQOO revenues in India. The state registered 82% YOY growth for the 12-month period ended June 2023. iQOO’s top spot in a highly competitive segment underscores the brand’s consistent commitment to innovation and to delivering industry-leading, power-packed devices across price points. It also underlines the increasing popularity of, and trust in, iQOO's innovative technology and customer-centric approach. This translates into highly anticipated products by both existing and newer customers across different segments.

The brand recently unveiled the iQOO Neo 7 Pro - a smartphone that has broken records from the 1st day of sale, with its Fearless Flame edition going out of stock within just a few hours of its release. South India is a key market for iQOO and that reflects in the brand’s marketing campaigns as well as the overwhelming response from the region. iQOO recently launched its latest digital campaign titled "Sleepless Star" featuring the charismatic superstar, Dulquer Salmaan for the Neo 7 Pro smartphone. The campaign showcases a unique storyline where Dulquer Salmaan is looking for peace and calm but finds himself irresistibly drawn to the iQOO Neo 7 Pro smartphone placed next to him. Earlier, with the launch of iQOO 11, a campaign was launched with Vijay Deverakonda and Janhvi Kapoor. The campaign was created after a contest by iQOO where the brand asked users to share their pronunciation of the brand name.


iQOO Z series has also witnessed an astounding 2X growth in Tamil Nadu. The Z series has been widely recognized for its sleek design, powerful performance, and feature-rich capabilities, making it a preferred choice among smartphone enthusiasts in the region. iQOO will further strengthen its Z series portfolio with the much-awaited iQOO Z7 Pro soon.

Sharing the growth journey of the brand, Nipun Marya, CEO, iQOO India, said, “At iQOO, our quest is to always deliver innovative products with the best of performance. We are very proud that within just four years of our operations in India, we have already become one of the fastest-growing brands in Tamil Nadu. This remarkable growth in our contribution to the market is a testament to the trust and confidence that consumers have bestowed upon iQOO. We are thrilled at the overwhelming response we have received for the newly launched iQOO Neo 7 Pro. The market response to our latest offering corroborates our working in the right direction and helps us stay committed to continuously delivering products that exceed our customers' expectations, subsequently helping us drive growth in the future.”

#PowerToWin with iQOO Neo 7 Pro Smartphone The iQOO Neo 7 Pro is a true powerhouse that competes with top-tier flagship devices. This device is equipped with Dual Chip Power – runs on the cutting-edge Qualcomm Snapdragon 8+ Gen 1 mobile platform along with Independent Gaming Chip (IG Chip) for flagship-level performance and gaming experience, delivering enhanced graphics and smooth gameplay. This sheer amalgamation of performance and power wrapped in Leather design or AG Glass is definitely bound to turn heads. Additionally, the smartphone features 120W FlashCharge, Flagship 50MP GN5 Ultra-Sensing Camera, Full-Coverage Smart 3D Cooling System, 10 bit - 120Hz AMOLED Display and 120FPS gaming with Game Frame Interpolation. iQOO Neo 7 Pro is truly a performance beast combining raw power with seamless multitasking capabilities, immersive visuals, and overall enhanced performance.

The iQOO Neo 7 Pro is available at an MOP of INR 34,999 (Effective Price INR 32,999) for 8GB+128GB and INR 37,999 for a 12GB+ 256GB (Effective Price INR 35,999) and is available on Amazon.in and the iQOO e-store. The smartphone is available in two elegant color options: Fearless Flame and Dark Storm. In addition, the company is providing three years of monthly security and two years of Android updates for the smartphone. The phone has Funtouch OS 13 based on Android 13 out of the box.

Earlier this year, iQOO launched a power packed offering from its number series, the iQOO 11, powered by the latest Snapdragon® 8 Gen 2 Mobile Processor, which boasts the efficiency of TSMC's 4nm processor. The smartphone's impressive performance is further highlighted by its astonishing AnTuTu benchmark score of 1323820*. Equipped with the latest LPDDR5X RAM and UFS 4.0, the iQOO 11 delivers an enhanced user experience with faster app start speed, cache speed, and transfer speed of large files. The iQOO 11 is a true powerhouse, designed to meet the needs of tech enthusiasts and gamers alike.

Continuing iQOO’s commitment to ‘Make in India’, all smartphones mentioned above will be manufactured at vivo's Greater Noida facility. Also, to offer hassle free after-sales service experience to its valued customers, iQOO customers can now visit any of the 650+ company owned service centers located across the country. Additionally, as per the 91 Mobile’s Great Indian Smartphone Survey 2022; iQOO remained on top position for two consecutive years 2021 - 2022 in customer satisfaction surpassing OnePlus and Apple.

MGM Healthcare Inaugurates Advanced ECMO Care for Kids!
Chennai:

MGM Healthcare, a leading quaternary care multi-speciality hospital in Chennai, today inaugurated its Centralized Paediatric and Neonatal ECMO Centre. The inauguration ceremony was graced by esteemed dignitaries, including Dr. KR Balakrishnan, Chairman - Institute of Cardiac Sciences | Director - Institute of Heart and Lung Transplant & Mechanical Circulatory Support, MGM Healthcare; Dr. Suresh Rao, Co- Director - Institute of Heart and Lung Transplant & Mechanical Circulatory Support, MGM Healthcare; Mr. Harish Manian, Group CEO, MGM Healthcare; Dr. Kalaimaran Sadasivam - Senior Consultant, and Clinical Lead Pediatric Intensive Care; Dr. Binu Ninan, Senior Consultant & HOD Paediatrics & Neonatology MGM Healthcare; and Dr. Ananth Mohan Pai, DMS MGM Healthcare. Pediatric extracorporeal membrane oxygenation (ECMO) is a life support system for critically ill children who have life-threatening heart or lung problems. ECMO is a treatment that pumps and oxygenates blood outside a child's body through a machine and returns oxygen-rich-blood to the body, allowing the heart and lungs to recover. ECMO has proven to be invaluable for neonates with meconium aspiration and congenital diaphragmatic hernia. Moreover, children with end-stage heart or lung failure can greatly benefit from ECMO support. The launch of the Paediatric and Neonatal ECMO Centre at MGM Healthcare aims to cater to the critical care needs of children, providing them with intensive care during their most vulnerable moments. Our dedicated team of critical care specialists provides advanced 24/7 care for children who need ECMO. We have deep experience using the therapy. 


Dr. KR Balakrishnan, Chairman - Institute of Cardiac Sciences | Director - Institute of Heart and Lung Transplant & Mechanical Circulatory Support, MGM Healthcare said:

"Today marks a significant milestone in pediatric critical care as we inaugurate MGM Healthcare's centralized Pediatric and Neonatal ECMO Centre. This centralized facility symbolizes our unwavering dedication to delivering cutting-edge medical interventions, particularly ECMO, the pinnacle of life support for critically ill children. By establishing this center, we reaffirm our mission to offer these young patients the utmost opportunities for recovery and a promising, thriving future." 

Dr. Suresh Rao, Co-Director - Institute of Heart and Lung Transplant & Mechanical Circulatory Support, MGM Healthcare mentioned:

"At MGM Healthcare we have treated more than 400 patients using ECMO, and with this facility, we believe we will be saving more lives by moving our focus more towards treating the younger generation. Our team of doctors is trained to provide the utmost dedicated care."

"Within MGM Healthcare, a cohesive multidisciplinary team collaborates, comprising pediatric intensivists, neonatologists, surgeons, perfusionists, respiratory therapists, and other skilled professionals. Dr. Binu Ninan, Senior Consultant, and HOD of the Department of Pediatrics and Neonatology, emphasizes the seamless integration of their extensive expertise and the advanced infrastructure at MGM Healthcare, which guarantees exceptional management and care throughout the ECMO process.


"Mr. Harish Manian, Group CEO, MGM Healthcare, said:

"Amidst the COVID pandemic, MGM Healthcare achieved a remarkable feat by establishing the largest ECMO Center, which has been instrumental in saving numerous lives. As we take pride in this accomplishment, we are equally delighted to inaugurate a dedicated center for pediatric care, where children will receive personalized and compassionate support. This specialized center has the capacity to accommodate up to 25 critically ill pediatric patients simultaneously." 

"Pediatric and neonatal ECMO offer a beacon of hope for the smallest and most vulnerable children who confront life-threatening lung or heart failure. Continuously pushing the boundaries of what is achievable, Pediatric and Neonatal ECMO rekindle optimism and hold the promise of a bright future for these precious lives. The role of PICU team is crucial to achieving the best possible outcomes for pediatric and neonatal patients requiring ECMO support.," affirms Dr. Kalaimaran, Senior Consultant, and Clinical Lead of Pediatric Intensive Care.

ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி- 'வெப்' இயக்குனர் ஹாரூண்வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுறை தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நடிகை சுபப்பிரியா பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகை  இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்தப்படத்தில் 5 பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத இயக்குனர் ஹாரூன் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்ட்டர் கொடுத்து ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார். கதாநாயகன் நட்டியும் எப்பொழுதும் ரஜினி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.” என்று கூறினார்.

நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோயம்பேட்டில் மிகப்பெரிய வியாபாரி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் ஆட்கள் பார்த்தாலே இந்த படம் ஹிட் ஆகிவிடும். நடிகர் நட்டி எந்தவித பந்தாவும் காட்டாதவர். அவரை மாதிரி இருக்க நானும் முயற்சி செய்வேன். படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் ஹீரோயின்களுக்கு மத்தியில் எங்களையும் அழகாக காட்டியுள்ளார்” என்றார்.

பாடலாசிரிசிரியர் ஜெகன் கவிராஜ் பேசும்போது, “அதிர்ஷ்டம் என்றாலே அது இஷ்டத்துக்கு வரும் என்பார்கள் அப்படி வந்த வாய்ப்பு தான் இது. இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ராஜ வம்சத்தில் நானும் இணைந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன். பாடல் எழுதத் தெரிந்த ஒரு இயக்குனருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம்” என்று கூறினார்.

பாடலாசிரியர் அருண்பாரதி பேசும்போது, “இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான் பாடல் எழுத என்னை அழைத்தார். இந்த படத்தில் நட்டியின் ஃப்ளாஷ்பேக்கில் அண்ணன் தங்கச்சிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளேன். இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். கிளைமாக்ஸ் உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இருக்கும். இந்த படத்தில் வேறொரு விதமான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் ஹாரூண்” என்று கூறினார்.

நடிகை சாஷ்வி பாலா பேசும்போது, “ஒரு படத்தின் பிரமோசனுக்கு அதில் நடித்த அனைவருமே கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும். இயக்குனர் ஹாரூண் எல்லா காட்சிகளையும் எனக்கு நடித்துக் காட்டினார். படத்தில் நட்டியுடன் நடிக்கும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். என்னை போன்ற இலங்கை தமிழ் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்புகள் தந்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


நடிகர் நட்டி பேசும்போது:

“எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரேகா நாயர் பேசும்போது, “ஹீரோயின் வரவிலைலை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அதனாலேயே படமும் ஹிட் ஆகிவிடும். ஹீரோயினும் பிரபலமாகி விடுவார். நட்டி சாரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஞானி. அது அவர்களுடன் பேசி பழகியவர்களுக்கு தான் தெரியும். நட்டி எல்லோருக்குமே வாய்ப்புகளை தேடி கொடுக்கிறார். தயாரிப்பாளரின் பெயரிலேயே முனி இருப்பதால் நிச்சயமாக காத்து கருப்பு அண்டாது. நடிகர் முரளி இங்கே வருத்தப்பட்டதை பார்க்கும்போது அவர் இத்தனை வருடங்களாக இன்னும் முள் பாதையிலேயே நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. விரைவில் அவருக்கு வெல்வெட்  பாதையில் நடக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.  

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர்.  அவர் சிறுவயதாக இருந்தபோதே நான் அவரிடம் சின்னக்கவுண்டர் படத்தின் கதையை கூறியிருக்கிறேன். நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரைலரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும் திலீப் என்கிற பெயரில் இருந்த ஏ..ஆர் ரகுமானும் தான் அதை செய்து கொடுத்தனர். அதன்பிறகு பொன்னுமணி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்.” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நடிகர் நட்டி இருக்கும் இடம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். அவருடன் நான் பகாசுரன் என்கிற படத்தில் இணைந்து சில நாட்கள் நடித்தபோது, அவரது அற்புதமான குணத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன் . ஒழுக்க நெறி கொண்ட நடிகர் அவர். தயாரிப்பாளருக்கு துரோகம் செய்கின்ற, டார்ச்சர் கொடுக்கின்ற எந்த ஒரு நடிகர் என்றாலும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். கடந்த ஒரு வருடமாக சின்ன படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். லவ் டுடே, டா டா, குட் நைட், போர் தொழில் என அந்த வரிசையில் இந்த வெப் படமும் இடம் பெறும்” என்று கூறினார்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா கூறும்போது, “யாருக்கும் தெரியாத விஷயம் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூண் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நட்டியை சமூகம் என்று தான் நான் கூப்பிடுவேன். காரணம் அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் எப்போதும் நான்கு ஐந்து நண்பர்கள் அவருடன் இருப்பார்கள். எல்லோரும் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே உடன் இருந்த நண்பர்கள். அப்படி பழைய நண்பர்களை அரவணைத்து செல்வது வெகு சிலர் மட்டுமே. இந்த படத்தின் டைட்டான வலை என்பது பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களை லட்சம் பேர் இப்போது கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்ஷனோட இருக்கும் ஆபத்துதான் இந்த வலை” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம். அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப்போனவர்கள் எல்லாம், நாளை சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிபி என வியாபாரம் பேச தேடி வருவார்கள்.

சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன் தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார் .

இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்..  கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.

யோக்கியன் திரைப்படம் ஒரே நேரத்தில் தியேட்டர் மற்றும் ஒ.டி.டி யில்  ரிலீஸ்!
சென்னை:

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஹீரோயின்களாக  கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில்.உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

யோக்கியன் படம் முதன்.முறை யாக ஒரே நேரத்தில் ஜூலை 28ம் தேதி தியேட்டர் மற்றும்   A  கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App )ஒ டி டி தளத்தில்  ரிலீஸ் ஆகிறது. 

யோக்கியன் படம் ஒரே நேரத்தில் தியேட்டர், மற்றும்  ஒ டி டி யில் ரிலீஸ் ஆவது பற்றி  பத்திரிகை, மீடியாக்கள் முன்னிலையில் ஜெய் ஆகாஷ்  கூறியதாவது:

ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும்.கடினமாக  உழைத்திருக்கிறார்கள்.. 

எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால் இப்போது  தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய  பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம்  சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான்  ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஏ கியூப ஆப்பை ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும்,  ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக  டவுன் லோடு செய்துகொள்ளலாம். அதில் படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.

A கியூப் ஆப்பிள் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள்.  இதனால் படத்தின். மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பிள் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது.படம் எடுத்துவிட்டு  தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில்  வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப் படும் அத்துடன் 80 சதவீதம் வருமான அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.

சினிமாவில் நான் நடித்து பெற்ற பெயரைவிட  ஜீ தமிழ் டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் என்ற டி வி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.


ஜூலை 28ம் தேதி தியேட்டரிலும் யோக்கியன் ரிலீஸ் ஆகிறது. குறைந்தளவு தியேட்டர்ல்தான் படம் வெளியாகிறது தியேட்டரில் படத்தை பார்க்க  முடியா விட்டால் ஏ கியூப் மூவிஸ் ஆப்பிள் யோக்கியன் படத்தை பார்த்து ரசியுங்கள்  

கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகி யுள்ளது.  அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக் கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில்  ஹீரோக்கள் நடிக்கின்றனர்.  அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல்  வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இவ்வாறு ஜெய் ஆகாஷ் கூறினார்.

இயக்குனர் சாய் பிரபா மீனா பேசும்போது, யோக்கியன் கதையை ஜெய் ஆகாஷ்  எழுதி உள்ளார். திரைக்கதை அமைத்து நான்  இயக்கி உள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் ஏ கியூப் ஆப்பில் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்" என்றார்.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில்  ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு!
சென்னை:

சென்னையில் முன்னணி கிளெனிகிள்ஸ் குளோபல் புற்றுநோய்களுக்கு பன்னோக்கு ஹெல்த் சிட்டி சிகிச்சை அளிக்க மையம் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர், இம்மருத்துவமனையின் இயக்குனரும், புற்றுநோய் மையத்தின் தலைவரும், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜாசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50 சதவீதத்துக்கும் அதிகமான கருப்பை புற்றுநோய், 30 முதல் 50 சதவீத வயிற்று புற்றுநோய் மற்றும் 20 சதவீத பெருங்குடல் புற்றுநோய் வயிற்று குழியின் பெரிட்டோனியல் என்னும் வயிற்று அறையின் மேற்பரப்பில் பரவுகிறது. இந்த வகை புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் உயிர்வாழும் விகிதத்தை 1 முதல் 2 ஆண்டுகள் அதிகரிக்க உதவுகிறது. சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி போன்ற தீவிரமான அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாக, இந்த நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கின்றனர். 


தற்போது இந்த மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ள இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் சிறப்பு வசதிகள் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட சுகாதார நிபுணர்களின் சிறப்பான குழுவைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த மையம் நோயாளிகளுக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதோடு, ஊட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் வலி மேலாண்மை உள்ளிட்ட ஆதரவு சேவைகளை வழங்கும், மேலும் இந்த துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் பங்களிக்க உள்ளது. 

இது குறித்து கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:

இன்ட்ராபெரிட்டோனியல் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக துல்லியமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களோடு நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகிறது. கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் மேம்பட்ட மற்றும் உயர்தர புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்புக்கு மேலும் ஒரு சிறப்பாகும் என்று தெரிவித்தார். 


இது குறித்து இம்மருத்துவமனையின் இயக்குனரும், புற்றுநோய் மையத்தின் தலைவரும், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜாசுந்தரம் கூறுகையில்:

வழக்கமான கீமோதெரபி சிகிச்சையானது ரத்த ஓட்டத்தில் முழுவதும் பரவும்போது, ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சையானது நேரடியாக அடிவயிற்றில் புற்றுநோய் செல்களுக்கு கீமோதெரபியை வழங்குகிறது. இந்த சிகிச்சையில் செல்கள் அதிக அளவு கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதால், இந்த செயல்முறை மருந்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. இந்த சிகிச்சை துவங்குவதற்கு முன், நோயாளிக்கு முழுமையான சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது வயிற்று குழியின் திசுக்கள் பாதிப்பும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன. இது போன்ற தீவிர வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளுக்கு மேல் எங்கள் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் ரெக்டோசிக்மாய்டு, வயிற்றின் ஆன்ட்ரம் மற்றும் பித்தப்பை போன்ற உறுப்புகளை பிரிப்பது அடங்கும் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை செயல்முறையை தொடர்ந்து அளிக்கப்படும் சூடேற்றப்பட்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட கீமோதெரபி கரைசலானது மீதமுள்ள புற்றுநோய் செல்களை ஊடுருவி அழிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கரைசல் தோராயமாக 41-42 டிகிரி செல்சியஸ் [105 மற்றும் 109 பாரன்ஹீட்டுக்கு இடையில்] சுமார் 90 நிமிடங்களுக்கு சூடேற்றப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின் அந்த கரைசல் அடிவயிற்றில் இருந்து நீக்கப்பட்டு சிகிச்சை நிறைவு பெறும்.

இது குறித்து இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில்:

வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சையை வழங்கும் நோக்கில் நாங்கள் இங்கு இந்த மையத்தை திறந்துள்ளோம். டாக்டர். ராஜாசுந்தரம் மற்றும் அவரது நிபுணர்கள் குழு, வயிறு சம்பந்தமான அனைத்து புற்றுநோய்களுக்கும் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது என்று தெரிவித்தார்.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.