செப்டம்பர் 2020

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் லைப் கேர் டெவலப்மெண்ட் டிரஸ்ட் இணைந்து  ஐந்து வெவ்வேறு கிராமங்களில் ஐம்பெரும் விழாக்களை நடத்தி சாதனை ஒவ்வொரு கிராமத்திலும்  5 நிகழ்வுகள் நடத்தி  மொத்தம் 25 நிகழ்வுகளை ஒரே நாளில் செய்துள்ளது.

இந்த ஐந்து கிராமங்களும் இருளர் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக Literacy மாதத்தை முன்னிட்டு இருளர் பகுதி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து லிட்ரெஸி சேர்மன் கேட்டர் பில்லர் நிறுவனத்தின் மேனேஜர் திருமதி.லக்ஷ்மி அவர்கள் வழங்கினார்.

பின்பு ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தப்பட்டது.

மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசியும் காய்கறிகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக ரோட்டரி பசுமைக் காடுகள் திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்பட்டன.


இந்த நிகழ்வில் சங்கத்தைச் சார்ந்த தலைவர்  அனுகிரகா கார்த்திக், துணைத்தலைவர் சாரா  செல்லக்குமார், செயலாளர் முகமது மூசா, பொருளாளர் நிரஞ்சன் செல்வகுமார், சங்கப்பணி ரிஷிகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் உறுப்பினர்கள் , கிஷோர், பிரதீப், நிரஞ்சன், கலையரசன் ,ரோஜர்,காமேஷ், வருங்கால தலைவர் கரண்ட் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை லைப்கேர் டெவலப்மெண்ட் அறக்கட்டளையை சேர்ந்த திருமதி.தெய்வானை அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்

இந்த நிகழ்வில் ஒவ்வொரு கிராமத்திற்கு செல்லும் போதும் அந்தந்த கிராம தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பாக வரவேற்றனர் 

வலசைவெட்டிக்காடு கிராமத்தில் திரு.சுரேஷ் மற்றும் நயப்பாக்கத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் மகிழ்ச்சி அறக்கட்டளை தலைவர் திரு.அசோகன் அவர்களும்,  இலுப்பூர் கிராமத்திற்கு  திருமதி.சுதாலட்சுமி அவர்களும், 
பாக்குப்பேட்டை & சத்திரம் கிராமத்திற்கு திரு.சதீஷ் அவர்களும்,
மேல்நலாத்தூர் கிராமத்திற்கு திரு.ராஜேஸ்பாபு அவர்களும் தலைமை தாங்கினர். 

இந்த நிகழ்வின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர் பொது மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன் பெற்றனர்.




 
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது இந்த கட்டிடத்தை புதுப்பிக்க 97 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பொது நிதி அலுவலக கட்டிடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.

 இந்த நகராட்சியை 07,09, 2020 அன்று பிற்பகல் 3 மணி அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதனை  நேற்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் இந்த கட்டிடத்தில் ஆய்வுக்காக வந்த மாபா.பாண்டியராஜன் அவர்களை ஆணையர் செந்தில் குமார் அவர்கள் வரவேற்றார்.

 இவர்களுடன் சுகாதார ஆய்வாளர் திரு ஆல்பர்ட் மற்றும் பொறியாளர் நளினி நகரமைப்பு ஆய்வலர் திருமதி.கவிதா அவர்கள் உடனிருந்து வரவேற்றனர்.

குறைந்த டேட்டா செலவில் Hip Hop செயலியை வெளியிட்ட கல்லூரி மாணவர்கள்!

கள்ளகுறிச்சி:

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர்  TIK TOK அப்ளிகேசன் தடை செய்த உடன் குறைந்த டேட்டா செலவில் பயன் பெரும் வகையில்  Hip Hop அப்ளிகேசனை வெளியிட்டுள்ளனர். இதில் இன்டர்நெட் டேட்டா அதிகம் செலவாகாது என்று உறுதியளித்துள்ளார்.


செயலி-இன் சிறப்பம்சங்களை  பற்றி  அறிய 


செயலியை  பதிவிறக்கம்  செய்ய 




ATTESTATION PARADE : MADRAS REGIMENTAL CENTRE


The Madras Regiment is the oldest Infantry Regiment of the Indian Army with its Regimental Centre at Wellington. On 05 September 2020, 134 recruits were attested at the historic drill ground of Shrinagesh Barracks, after successful completion of a yearlong Basic and Advanced Military Training.


The Attestation Parade was reviewed by Brigadier Rajeshwar Singh,     Shaurya Chakra, Sena Medal, Commandant, The Madras Regimental Centre, Wellington. The attestation Parade was carried out with appropriate social distancing in consonances  with heighest traditions of the Indian Army. 


While addressing the parade, Reviewing Officer congratulated meritorious recruits and appreciated the instructors and staff for achieving a very high standards of training and lauded the effort of Madras Regiment Centre to train a smart and effective soldiers for Indian Army. 


The reviewing officer emphasized the fact that the recruits were being attested on 05 September 2020, which is ‘Teachers Day’ and they must cherish the values imbibed in them by their instructors. 


Brigadier Rajeshwar Singh, Shaurya Chakra, Sena Medal, has also awarded the medals to Recruits for overall Best in Training and Best in Physicals. The Reviewing Officer made a special mention of the efforts to train the soldiers under the prevailing pandemic situation and commended all stakeholders for their hardwork in this situation.  


He also congratulated the parents of the young soldiers in this moment of pride and glory, who could not witness the parade due to restrictions imposed by COVID-19.







கனமழை பெய்ய வாய்ப்பு!


சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ., பெரியகுளத்தில் 10 செ.மீ., தல்லாகுளத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நாளை முதல் முன்பதிவு தொடக்கம்  


சென்னை:

தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை வரும் 7-ந் தேதி முதல் இயக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 9 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4 சிறப்பு ரெயில்களுக்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.  இதேபோல் திருச்சி - நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 




Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.