நவம்பர் 2022

"யுத்த சத்தம்" திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!




வயாகாம்18-ன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், வரும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 2 அன்று இரவு 9:30 மணிக்கு யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்ப தயாராக இருக்கிறது.  பிரபல நடிகர்கள் ஆர். பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம் திகிலூட்டும் விதத்தில் நடத்தப்பட்ட  ஒரு கொலை சம்பவத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, கொலையாளியை கண்டறிவதற்காக முற்படும் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஒரு துப்பறியும் நிபுணரின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் இசையின் மர்மச் சுவையோடு திரைக்கதை சித்தரிக்கிறது.

 

திடுக்கிட வைக்கும் மர்மக்கொலையின் புதிரையும்எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த அடுக்கடுக்கான சம்பவங்களையும் டிசம்பர் 2 வெள்ளியன்று இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் காணத் தயாராகுங்கள். 

 

எழிலின் திறன்மிக்க இயக்கத்தின் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகை சாய்பிரியா தேவாநடிகர் ரோபோ சங்கர்நடிகர் வையாபுரி மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  டி. இமான் அவர்களின் பின்னணி இசை இதன் திகிலை மேலும் உயர்த்தி சிறப்பான மர்மத் திரைப்படமாக உயர்த்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. 

 

தொடர்ச்சியான துயர சம்பவங்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம்ஒரு தனிப்பட்ட சோக நிகழ்வை எதிர்கொண்டதற்குப் பிறகு காவல்துறை அதிகாரியான கதிர்வேலன் (நடிகர் ஆர். பார்த்திபன்) பணிக்கு மீண்டும் திரும்புவதிலிருந்து தொடங்குகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் எண்ணற்ற முறைகள் கத்தியால் ஒரு பெண் குத்தப்படும் கொடூர சம்பவமான வழக்கை அவர் கையாள வேண்டியிருக்கிறது.  நகுலன் என்ற இளைஞனின் பெண் நண்பியாகவும் கொலையுண்ட இந்த பெண் இருக்கிறாள்.  ஒரு உளவியலாளராகவும்துப்பறியும் நிபுணராகவும் இருக்கும் நகுலன் (கௌதம் கார்த்திக்)கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றபோது காவல்துறை அதிகாரி கதிர்வேலனின் பாதையில் குறுக்கிட வேண்டியிருக்கிறது.  கொலைக்கு காரணம் என்று கதிர்வேலன்நகுலனை சந்தேகிக்க தொடங்குகிறான்.  தான் குற்றமற்றவர் என்று வலியுறுத்தும் நகுலன்ராகவியின் கொலைக்கு காரணமான குற்றவாளியை நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்த சபதம் ஏற்கிறார்.  கொலையாளி யார் மற்றும் என்னென்ன மர்மங்களை அவிழ்க்க வேண்டியிருக்கிறது என்பது கதையின் எஞ்சிய பகுதியாக விரிகிறது. 

 

யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சி பிரீமியர் பற்றி இயக்குனர் எழில் பேசுகையில், “இசை எப்படி ஒரு ஆற்றல்மிக்க மருந்தாக செயல்பட முடியும் என்று காட்டுகின்ற ஒரு தனித்துவமான கருத்தாக்கத்தை மக்கள் முன் வைப்பதே இத்திரைப்படத்தின் பின்னணி நோக்கமாகும்.  இக்கருத்தைச் சுற்றி இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மர்மக் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதே பெயரில் எழுதிய புத்தகத்தின் தழுவலான இத்திரைப்படத்தில்நாவலின் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் இருக்கும் வகையில் நாங்கள் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். நடிகர்கள் பார்த்திபனும்கௌதம் கார்த்திக்கும் இத்திரைப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  மற்ற துணை நடிகர்களின் பங்களிப்பும் முக்கியமானது.  கலர்ஸ் தமிழ் சேனலில் இதன் உலகத் தொலைக்காட்சி பிரீமியர்ஒளிபரப்பாகும் நிலையில் தனித்துவமான கருத்தாக்கம் கொண்ட இத்திரைப்படம் மிகப்பெரிய எண்ணிக்கையில் உலகளவில் ரசிகர்களை சென்றடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இத்திரைப்படத்தை கண்டு ரசிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.

                                                         

இதுபற்றி நடிகர் பார்த்திபன் கூறியதாவது: “இத்திரைப்படத்தில்அதுவும் குறிப்பாக கௌதம் கார்த்திக் அவர்களுடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. திரைப்படத்தின் கருப்பொருள் மிக வித்தியாசமானதாகசிறப்பானதாக உண்மையிலேயே இருந்தது. வழக்கமான  கதைகளிலிருந்து மாறுபட்டதை தேர்வு செய்யும் எனது விருப்பத்திற்கு ஏற்றவாறு இத்திரைக்கதையும் அமைந்திருந்தது. ஆகவேயுத்த சத்தம் திரைப்படம் எனது மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும்.  உலகளவில் தொலைக்காட்சி பிரீமியராக கலர்ஸ் தமிழில் இத்திரைப்படம் ஒளிபரப்பாவதால் இந்த திரில்லர் திரைப்படத்தை மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்து வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

 

கலர் தமிழ் சேனலில் டிசம்பர் இரவு 9:30 மணிக்கு யுத்த சத்தம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை தவறாமல் கண்டு ரசிக்க எதிர்பார்ப்புடன் காத்திருங்கள்.

 

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.




 ‘ஃபால் ‘( Fall )டிசம்பர் 9 முதல் உலகமெங்கும்!




ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  மிகவும் எதிரப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஃபால் ‘( Fall ) தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்”  தொடர் "வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’  தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். 

ITV company நிறுவனமான Armoza Formats  விநியோகம் செய்யப்படும் ,  ‘ஃபால்’ தொடர் மைக்கேல் ஆலன் எழுத்தில், Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.  

ஒரு இளம் பெண்ணுக்கு தான் தற்கொலைக்கு முயன்ற  24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.  உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது. மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள். 

‘ஃபால்’ (Fall) தொடரை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. இத்தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.



கோவை மாநகரில் நகரியங்கள்  - ஒரு பாதுகாப்பான முதலீடு

 


தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரம் என அறியப்படும் கோயம்புத்தூர், தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பெரு நகரங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது.  ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இம்மாநகரில் காணப்படும் வளர்ச்சியானது, அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக உட்கட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ந்து வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தோடு இணைந்ததாக நிலம் மற்றும் சொத்துக்களுக்கான தேவையும் அதிகரிப்பது இயல்பானதே.  கோயம்புத்தூரில் அவுட்டர் ரிங் ரோடு என அழைக்கப்படும் வெளிவட்டச் சாலை சமீப காலத்தில் மிகச்சரியான காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வர்த்தக மனைகளுக்கான முதலீட்டிற்கு அதிக வரவேற்பை பெறும் அமைவிடமாக உருவெடுத்திருக்கிறது.  

சிறப்பான நகர வடிவமைப்பு திட்டமிடல், நேர்த்தியான போக்குவரத்து அணுகுவசதி மற்றும் குறைவான வாழ்க்கைச் செலவுகள் என பல்வேறு அம்சங்களுக்காக அறியப்படும் கோயம்புத்தூர் அதன் குடியிருப்புவாசிகளுக்கு உயர்தர வாழ்க்கை வசதிகளை வழங்குகிறது.   நகரியங்கள் என அழைக்கப்படும் பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள் மக்களின் அதிக அபிமானத்தைப் பெற்று வருகின்ற நிலையில் இம்மாநகரில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிவேகமாக வளர்ந்து வருவதற்கான காரணங்களுள் ஒன்றாக இந்த சிறப்பான லைஃப் ஸ்டைல் வசதிகள் இருக்கின்றன என்றே கூறலாம்.

கேட்டட் கம்யூனிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு நகரியம், எண்ணற்ற ஆதாயங்களை அதே விலையில் வழங்குகிறது.  இம்மாநகரில் சமீபத்தில் முழுமையடைந்திருக்கும் இத்தகைய குடியிருப்பு வளாக செயல்திட்டங்கள், அதிக அமைதியான, சௌகரியமான வாழ்க்கையையும், மேம்பட்ட நவீன அம்சங்களையும் ஒருங்கிணைத்து, கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் வழங்கியிருப்பது மக்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.

இன்றைக்கு, சிறப்பான வாழ்விட வசதிகள் வேண்டுமென விரும்பி, விவேகமாகத் தேடுகின்ற நபர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் மற்றும் வசிப்பிட விருப்பத்தேர்வாகவும் கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகத் திட்டங்கள் இருப்பதால், பல பிரபல மற்றும் அனுபவம் மிக்க ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங்கள் பலவும் இத்தகைய நகரியங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகின்றன.  தனிப்பட்ட குடியிருப்பு வீடுகளும், சிறிய குடியிருப்பு வளாகமும் கொண்டிராத எண்ணற்ற வசதிகளோடு நிகரற்ற பாதுகாப்பையும் இத்தகைய நகரியம் வழங்குகிறது.  டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சிக்கான இடம், பல்வேறு விளையாட்டுகளுக்கான சிறு மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, நடைப்பயிற்சிக்குரிய பூங்காக்கள், பார்ட்டிகளையும், விழாக்களையும் நடத்துவதற்கான கூடங்கள், மினி தியேட்டர், கிளப்ஹவுசஸ், நீச்சல் குளம் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பெரிய அளவிலான குடியிருப்பு வளாகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.  மருத்துவ உதவி மையம், ஏடிஎம் வசதி மற்றும் நூலகம் போன்ற அத்தியாவசிய வசதிகளும் இங்கு வசிப்பவர்களின் சௌகரியத்திற்காகவும் மற்றும் அவசரநிலை நேரத்தில் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே இடம்பெறுகின்றன.  பிற இடங்களில் கிடைக்காத இந்த வசதிகள் அனைத்தும், இங்கு வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் பராமரிப்பு கட்டணமின்றி அல்லது மிக மிகக் குறைவான கட்டணத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில, முதல் சில ஆண்டுகளுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே இத்தகைய பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.  

இந்த நகரிய குடியிருப்பு வளாகங்களின் சுற்றுப்புறங்களும் மற்றும் உட்புற அமைவிடங்களும் மிக நன்றாக பராமரிக்கப்படுகின்றன.  ஒரு பெருநகரத்தின் பரபரப்பு, கூச்சல் மற்றும் ஒலிமாசு ஆகிய தொந்தரவுகளிலிருந்து விலகி, அமைதியான, பசுமையான வாழ்க்கை முறையை வழங்குவது நகரிய திட்டத்தின் சிறப்பை இன்னும் அதிகமாக்குகின்றன.  குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி பசுமையான தாவரங்களும், மரங்களும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய மாசு பிரச்சனை குறைவாக இருப்பதை உறுதி செய்கின்றன.  ஆண்டு முழுவதும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வகையில் 24*7 கேமரா கண்காணிப்பு அமைப்பின் கீழ், ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகமும் கொண்டு வரப்படுகிறது.  பெரும்பாலான நகரிய செயல்திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களது அலுவலக அமைவிடங்களுக்கு அருகே இடம்பெற்றிருப்பதால் போக்குவரத்திற்கு செலவிடப்படும் நேரம் குறைக்கப்படுகிறது; ஆரோக்கியமான பணி – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பணியாளர்கள் கொண்டிருப்பதற்கு இது வகை செய்கிறது.

நவீனமான, தரம் உயர்த்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்பட்ட வாழ்க்கை முறையின் இந்த நகரிய வளாகத்தில் கிடைப்பதால், முதலீட்டின் மீது அதிக லாபம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது; அத்துடன் ரியல் எஸ்டேட் சந்தையில்   எளிதாக மறுவிற்பனை செய்யும் வாய்ப்பும் உத்தரவாதத்துடன் இங்கு அமைந்துள்ள வீடுகளுக்கு கிடைக்கிறது.  இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் எதிர்காலமாக இத்தகைய நகரிய கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகங்களே இருக்கப்போகின்றன.  கோயம்புத்தூர் மாநகரில் வெளிவட்டச் சாலை பகுதியில் சிறப்பான முதலீட்டிற்கு நிகரற்ற வசதிகளுடன் உருவாக்கப்படுகின்ற கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகளுக்கான மனைகள் பல கிடைக்கின்றன.  

வெளிவட்டச் சாலையில் முதலீடு செய்வதில் இருக்கும் வளர்ச்சிக்கான அதிக சாத்தியத்திறன் கோயம்புத்தூரில் குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான மனைகளுக்கு மக்களால் அதிகம் விரும்பித் தேடப்படும் அமைவிடமாக வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு) இருக்கிறது.  அத்துடன் மிதமான விலைகளில் இந்த மனைகள் கிடைப்பது இப்பகுதியின் மதிப்பை இன்னும் உயர்த்துகின்றன.  சிறப்பான வசதிகள், அமைவிடம் மற்றும் நகரின் மிக முக்கிய இடங்களுக்கு அருகிலிருப்பது ஆகியவை அவுட்டர் ரிங் ரோடில் மனைகள் வாங்குவதில் கிடைக்கக்கூடிய ஆதாயங்களுள் சிலவாகும்.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலைகள் எப்படி மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளும்போது, கோயம்புத்தூரிலும் வெளிவட்டச் சாலையில் செய்யப்படும் முதலீடுகள் அதேபோன்ற வெற்றி வரலாற்றைக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.  உட்கட்டமைப்பு மேம்பாடுகள் வரும்போது அதிகரித்த வேலைவாய்ப்புகளும், வாழ்க்கை முறை வசதிகளும் அதனோடு சேர்ந்தே தான் உருவாகின்றன.  குறைந்த காலஅளவிற்குள்ளேயே, வேகமாக வளர்ந்து வரும் மாநகரின் உயிர்நாடிகளுள் ஒன்றாக இத்தகைய வெளிவட்டச் சாலைகள் மாறிவிடுவதை நீங்கள் உணர்வீர்கள்.  சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் வெளிவட்டச் சாலையையொட்டிய வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

பிற பெருநகரங்களில் வெளிவட்டச் சாலைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அருகருகே அமைந்து மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில் கோயம்புத்தூரின் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலைகளும் வரும் ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எதிர்கொள்ளப்போவது இப்போதே வெளிப்படையாகத் தென்படுகிறது.  கனவு இல்லத்தை அமைதியான சூழலில் உருவாக்குவது அல்லது ஒரு பிசினஸ் நிறுவனத்தை தொடங்குவது அல்லது முதலீட்டின் மீது நல்ல லாபம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக இன்று முதலீடு செய்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக முதலீட்டாளர்கள் இப்பகுதியில் இப்போது முதலீடு செய்வது நிச்சயம் விவேகமான செயல்பாடாக இருக்கும்.  இப்போது கோயம்புத்தூர் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலை அமைவிடங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பத்தேர்வுகளுள் ஒன்றாக கோயம்புத்தூரில் இருக்கிறது.



Kaari Movie Review: "காரி" படம் எப்படி இருக்கு?! 




ஹேமந்த் இயக்கத்தில், இமான் இசையில், நடிகர் சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் என பலர்  நடித்துள்ள படன் தான் "காரி".

சரி விமர்சனத்தை பார்ப்போம் வாங்க..... 

ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை அரசாங்கம் குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம் சென்னையில் சசிகுமார் மற்றும் அவரது அப்பா நரேன் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன்.  ஒரு ஊர் 18 காளைகளை போட்டியில் இறக்க, மற்றொரு ஊரை சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, வீட்டுக்கு ஒரு வீரர் என்று தேர்வு செய்யும் கிராம மக்கள் வெள்ளைச்சாமி குடும்பத்தை சேர்ந்த வாரிசையும் இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரை தேடி சென்னைக்கு புறப்பட, வெள்ளைச்சாமி கிடைத்தாரா? ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? இல்லையா? அதன் மூலம் அந்த ஊருக்கு எத்தகைய நன்மை கிடைத்தது? என்பதே காரி படத்தின் கதை. 

சேது என்ற வேடத்தில் வெள்ளைச்சாமியின் வாரிசாக நடித்திருக்கும் சசிகுமார், முதல் பாதியில் சென்னை தமிழ் பேசும் சென்னை வாசியாக வலம் வருபவர், இரண்டாம் பாதியில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞராக மாறி தன் மக்களுக்காகவும், ஊருக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்த இந்த கதையில் பார்வதி அருண் சிறப்பாகவே நடித்திருந்தார், அவருடைய அப்பாவாக பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துள்ளார். மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த்.  இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் மையக்கருவும், அதை படமாக்கிய விதமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் வலு சேர்த்திருக்கிறது. 

மொத்தத்தில் இந்த "காரி" வீரம் நிறைந்தவன்......

KAARI Movie Mark: 3.5/5


“கிடா” அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது!


தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !! 

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும்  எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். 

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. 

இது குறித்து தயாரிப்பாளர் ரவி கிஷோர் கூறியதாவது:

“முதன்முதலில் கிடா கதையை சென்னையில் இருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். பின் இயக்குநர் வாய்ஸ் நோட் மூலம் அளித்த குறிப்பை  கேட்டேன். அந்தக் கதை என் மனதினை உலுக்கியது.  உடனடியாக இயக்குனரை ஒப்பந்தம் செய்து படத்தை துவக்கிவிட்டேன். அவருக்கான முழு சுதந்திரம் கொடுத்து அவருடைய கதைக்கு உயிர் கொடுத்தேன். இப்படியாகத்தான் இந்தப் படம் நடந்து, இன்று பல திரைவிழாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் முதல் தமிழ் படம். சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை. அதனால்தான் தமிழில் இப்படத்தை செய்தேன். விரைவில் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி திரையரங்குகளில் வெளியிடுவோம்”

இயக்குனர் ரா.வெங்கட் கூறுகையில்:

“எங்கள் படத்துக்கு இவ்வளவு அரிய அங்கீகாரம் கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக்கதையின் உந்து சக்தி. இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்றமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள்தான் படத்தை அதிகமாக கொண்டாடினார்கள். பெரும் மகிழ்ச்சி. நான் என் தாத்தா பாட்டியுடன் வளர்ந்தேன், திரைப்படத்தை உருவாக்கும் போது எனது குழந்தை பருவ நினைவுகளிலிருந்து படத்திற்கான உத்வேகம் பெற்றேன். எனது தயாரிப்பாளர் ரவிகிஷோர் அவர்களுக்கு  நன்றி. எனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதருடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றி.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தொழில் நுட்ப குழு விபரம்: 

ஆடியோகிராஃபி - தபஸ் நாயக் 

கலை இயக்கம் : K.B.நந்து 

பாடல்கள் :  ஏகாதசி 

எடிட்டர்  : ஆனந்த் ஜெரால்டின் 

இசை : தீசன்

ஒளிப்பதிவு  : M.ஜெயப்பிரகாஷ்

தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்

இயக்கம்  : ரா. வெங்கட்



Sabarimala today..Pooja details...23.11.2022




Morning

...........

3am....Thiru nada opens

3.05... Abhishekam

3.30am.... Ganapathy Homam

3.45am onwards Ghee Abhishekam starts and  it will continues till 11am

7.30am.... Morning pooja

12.30pm....Noon pooja

1pm....Nada will close

..............

Evening

3pm...Nada opening

6.30pm....Deeparadhana

7pm...Flower Abhishekam

9.30pm...Closing pooja

10.50pm Harivarasanam will start

11pm...Thirunada will close

INDIAN COAST GUARD SEIZE MARIJUANA WORTH 1.3 CRORE!




In a joint operation with Narcotics Control Bureau, Indian Coast Guard Station Mandapam apprehended a suspicious boat with 04 crew near Rameshwaram on 21 November 22. It was apprehended after hot pursuit as they were trying to flee at high speed. 

On investigation,300 kg of Marijuana in 08 gunny bags and 500 gm of Hashish oil were recovered from the boat. The market value of consignment is approx. Rs. 1.3 Crores.  The Coast Guard being the lead agency in intelligence has always been on a high alert to deal with such cases with alacrity and vigilance.

“வாழை” திரைப்படத்தின் படப்பிடிப்பு  துவங்கியது ! 




Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. 




இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். 

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 


தொழில்நுட்ப குழு விவரம்: 


எழுத்து இயக்கம் - மாரி செல்வராஜ்

ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் 

இசை - சந்தோஷ் நாராயணன்

கலை இயக்கம் - குமார் கங்கப்பன்

படத்தொகுப்பு  - சூரிய பிரதமான்

சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன் 

நடனம் - சாண்டி 

பாடல்கள் - யுகபாரதி, வெயில் முத்து 

உடை வடிவமைப்பு - ஶ்ரீ ஸ்வர்ணா 

ஒலி வடிவமைப்பு - சுரேன் G

ஸ்டில்ஸ் - ஜெய்குமார் வைரவன்

உடைகள் - ரவி தேவராஜ் 

மேக்கப் - R கணபதி

விளம்பர வடிவமைப்பு - கபிலன் செல்லையா 

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் - வெங்கட் ஆறுமுகம்

தயாரிப்பாளர் - திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்



"கலகத்தலைவன்" எப்படி இருக்கு?! 




உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் தான் "கலகத்தலைவன்

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.... 

ஃபரிதாபாத்தில் மிகப்பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கும் வஜ்ரா என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனங்களை தயாரித்து வருகின்றது. அப்படி அவர்கள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மைலேஜ் தரும் வகையில் ஒரு புதிய வாகனத்தை தயாரிக்கின்றனர். ஆனால், அந்த வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை அதிகமான காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. 

இதை எப்படி சரி செய்வது என்று வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனி விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில் இந்த ரகசியம் எப்படியோ வெளியில் கசிந்து விடுகிறது. இதனால் பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. இந்தப் புதிய வாகனம் விற்பனைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. காற்று மாசு குறித்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது? யார் மூலம் கசிந்தது? என்பதைக் கண்டுபிடித்து அவர்களை அழிக்க வஜ்ரா கம்பெனி சைக்கோபாத் கில்லர் வில்லன் ஆரவ்வை நியமிக்கின்றனர். 

ஆரவ்வும் இந்த ரகசியங்களை எல்லாம் போட்டி கம்பெனிகளுக்கு விற்கும் நாயகன் உதயநிதி ஸ்டாலினை தேடிச் செல்கிறார். இதையடுத்து வில்லன் ஆரவ் நாயகன் உதயநிதியை எப்படி நெருங்கினார்? உதயநிதி ஸ்டாலினின் பின்னணி என்ன? அவர் ஏன் இந்த கம்பெனி ரகசியங்களை வெளியிடுகிறார்? இறுதியில் ஆரவ்விடம் உதயநிதி சிக்கினாரா, இல்லையா..? என்பதே கலகத் தலைவன் படத்தின் மீதி கதை. 

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். கதாநாயகியாக நிதி அகர்வால். உதயநிதியிடம் காதலைச் சொல்லாமல் உள்ளுக்குள் உருகும் இடங்களில் ஐஸ்க்ரீம் போல நம் மனதை அள்ளுகிறார். படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக  'பிக் பாஸ் புகழ்' ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். வழக்கமான ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார்.  படம் முழுக்க கேன்டிட் உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜின் கேமரா. 

எடிட்டிங்கில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் என்.பி.ஶ்ரீகாந்த். இசையை ஶ்ரீகாந்த் தேவா வழங்க, இரண்டு பாடல்களில் ஆரோல் கரோலி மனதை வருடிச் செல்கிறார். இறுதியில் வரும் ரஷ்யன் மாஃபியா ரெபரன்ஸ் 'காதுல பூ' ரகம் சீன்கள் ஓவர்.... ஆரவ் கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக கையாண்ட மகிழ், உதயநிதியின் கதாபாத்திரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

மொத்தத்தில் இந்த ‘கலகத்தலைவன்’ மாஸ் தலைவன்.....

Kalaga Thalaivan Movie Mark: 

3.5/5

'ஜல்லிக்கட்டு' படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை- நடிகர் சசிகுமார் 


பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது:

“ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்த கதையை இயக்குனர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்த கதையை கேட்டதும் எப்படியாவது இதை படமாக எடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். அதன்பிறகு தமிழக இளைஞர்களின் புரட்சி மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. சசிகுமாருக்கு என்றே அளவெடுத்து தைக்கப்பட்ட ஒரு சட்டை போல இந்த கதையும் கதாபாத்திரமும் அமைந்துவிட்டது. 

காளைகள், குதிரைகளை வைத்து மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். அதிலும் மைசூர் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் ரேஸ் குதிரைகளை வைத்தே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  சமீப காலமாக நம் நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆனால் அதை தடுத்து, நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும்” என்று கூறினார்.



நடிகர் பிரேம் பேசும்போது:

“என்னுடைய கதாபாத்திரம் குறித்து சொன்னதுமே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டுமா என முதலில் தயங்கினேன். ஆனாலும் இந்த துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து தான் பார்ப்போமே என முடிவெடுத்து ஒப்புக்கொண்டேன்.. ரேஸ் குதிரை ஓட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.. மைசூரில் இந்த காட்சிகளில் நடித்தபோது ரொம்பவே சிரமப்பட்டுத்தான் படமாக்கினோம்” என்று கூறினார்.


ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா பேசும்போது:

‘தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் முழுமையாக இந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இயக்குனர் வசந்தபாலனுக்கு அடுத்து விஷுவலாக கதை சொல்லும் இயக்குனராக ஹேமந்த்தை தான் பார்க்கிறேன். அதற்கு இமான் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார் நடிகை பார்வதி அருண் இன்டர்வெல் பிளாக் காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நிஜமாகவே உயிரை கொடுத்து நடித்துள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் காட்சிகளை எதார்த்தமாக படமாக்க உதவினார்கள்” என்றார்.


படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் பேசும்போது:

“தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிய படம் காரி. இந்த படத்திற்கு கச்சிதமான இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் அமைந்துவிட்டது. சில உண்மைகளை சிலர் பேசினால்தான் சரியாக இருக்கும். இந்த படத்தில் பேசப்படும் விஷயங்களை சசிகுமாரால் தான் பேச முடியும். இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது” என்று கூறினார்.


நடிகர் நாகிநீடு பேசும்போது:

“இந்த படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதை புரிந்துகொண்ட சசிகுமார் எனக்கு படம் முழுவதும் தனது ஆதரவை கொடுத்தார். என்னுடன் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லியை வெடிகுண்டு என்று தான் சொல்வேன். காரணம் நான் சீரியசாக பேசிக்கொண்டிருக்கும்போது ரெடின் கிங்ஸ்லி வெடிகுண்டு வீசுவது போல ஏதாவது ஒன்றை பேசிவிடுவார். அதன்பிறகு அவரைப்பற்றி விசாரித்த பின்னர் தான் அவர் எல்லா படங்களிலும் இதே மாதிரிதான் பண்ணிக்கிட்டு வர்றார் என்பது தெரிந்தது” என்று கூறினார்.



நடிகை அம்மு அபிராமி பேசும்போது:

“சசிகுமார் படம் மட்டுமல்ல.. அவரும் கூட ரொம்பவே எதார்த்தமான மனிதர் தான்” என்று கூறினார்.


ஆடுகளம் நரேன் பேசும்போது:

“சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நான் பொதுவாக எந்த இயக்குனரிடமும் முழு கதையும் கேட்க மாட்டேன். ஆனால் இயக்குனர் ஹேமந்த் என்னிடம் மூன்று மணி நேரம் இந்த கதையை கூறினார். அந்த அளவிற்கு படத்தில் நடிக்கும் அனைவருமே படத்தின் முழு கதையையும் தெரிந்திருக்க வேண்டும் என அவர் நினைத்தார்” என்று கூறினார்.


நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது:

“எனக்கு டூவீலரே சரியாக ஓட்டத்தெரியாது. ஆனால் இந்த படத்தில் என்னை ஆட்டோ ஓட்ட வைத்து விட்டார்கள். அதிலும் சசிகுமார், நாயகி பார்வதி அருண் இருவரையும் வைத்து நான் ஆட்டோ ஓட்ட வேண்டும்.. பயந்துகொண்டே தான் ஆட்டோ ஓட்டினேன்.. லவ்டுடே படம் எப்படி பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல இந்த படமும் வெற்றி பெறும்” என்றார்.


நடிகை பார்வதி அருண் பேசும்போது:

“ஆரம்பத்தில் சசிகுமாரை பார்த்து பயந்தேன். ஆனால் போகப்போக படப்பிடிப்பில் எனக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் வசதி ஏற்படுத்தி தந்தார் சசிகுமார். இயக்குனர் என்னிடம் கேட்கும்போதே மாடு பிடிக்குமா என்றுதான் கேட்டார். நானும் பிடிக்கும் என்று தலையாட்டி விட்டேன். எல்லோரும் குறிப்பிட்டு சொன்னது போல அந்த இடைவேளை காட்சி மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் இமான் பேசும்போது:

“திரையுலகில் என்னுடைய 20ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளேன். இயக்குனர் ஹேமந்த் என்னிடமும் மூன்று மணி நேரம் கதை சொன்னார். அதேபோல எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். அனைத்து காட்சிகளையும் நம்பகத்தன்மையுடன் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்த படம் பேசும். இதில் இடம்பெற்ற சாஞ்சிக்கவா என்கிற பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த பாடலாசிரியர் லலித் ஆனந்த் எழுதிய கடைசி பாடல் இதுதான். சசிகுமார் நிறைய படங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்” என்று கூறினார்.

இயக்குனர் ஹேமந்த் பேசும்போது:

“இந்த படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார். 

லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கவேண்டாம் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும்.. எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால். இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது. 

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்த படம் எமோசனல் ஆக்சன் ட்ராமாவாக இருக்கும்” என்றார்.




நாயகன் சசிகுமார் பேசும்போது:

“இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. 

அம்மு அபிராமி இந்த படத்தில் மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால் அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்ப குறைவாகவே இருக்கிறார்கள். 

இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, என்னை அழைத்து முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.

இந்த படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குனரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். 

படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான்.. ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்..

ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை.. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும். அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்டநாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன்.. காலம் கடந்தும் இது பேசப்படும்.. ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை. 

இது மக்களுக்காக எடுத்த படம்.. ஜல்லிக்கட்டு பற்றிய படம்.. அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்.. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன்.. அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.


தொழில்நுட்ப குழுவினர் விபரம்:


தயாரிப்பு ; பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மன் குமார்

இயக்கம் ; ஹேமந்த்

இசை ; டி.இமான்

ஒளிப்பதிவு ; கணேஷ் சந்திரா

படத்தொகுப்பு ; சிவநந்தீஸ்வரன்

கலை ; மிலன்

நடனம் ; ஹரி கிரண்

சண்டைப்பயிற்சி ; அன்பறிவு, தினேஷ் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா

பாடல்கள் ; லலித் ஆனந்த், ஹேமந்த்

ஆடை வடிவமைப்பு ; பூர்த்தி பிரவீண்

உடை அலங்காரம் ; பெருமாள் செல்வம்

ஒப்பனை கலைமாமணி வி.சண்முகம்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

புதுபொலிவுடன் மீண்டும் "பாபா" திரைப்படம்... ரஜினி ரசிகர்கள் ஆர்வம்!  




2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. 

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.



"நான் மிருகமாய் மாற" சசிகுமாரின் படம் எப்படி இருக்கு?!



இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார் ஹரிப்ரியா விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான்  "நான் மிருகமாய் மாற". 

தனது தம்பியை கொன்றவனை பழி வாங்க போகும் சசிகுமார் அங்கே எதிரிகளின் கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். பிறகு என்னவானது சசிகுமார் தனது தம்பியை கொன்றவனை பழி வாங்கினாரா? அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? என்பது தான் கதை. 

ஒத்த ஆளாக மொத்த படையத்தையும் தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு சசிகுமாரிடமே இருந்துள்ளது. சவுண்ட் இன்ஜினியராக வரும் “சசிகுமார்” தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். 

ஆக்ரோஷம், பரிதவிப்பு குடும்ப பொறுப்பு என அனைத்து விதமான எமோஷன்களையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக நடத்த விக்ராந்த் நடிப்பும் ஓகே... ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம்... இரவு நேர காட்சிகளுக்கு இசைதான் உயிர் கொடுத்துள்ளது. ஆனால் பாடல்கள் அனைத்தும் இனிமை இல்லையே....

சசிகுமார் இது போன்ற கதையை இனி தேர்ந்தெடுத்தால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாவர் என்பது நித்திய உண்மை.  

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகப்படியாக உள்ளதால் குழந்தைகளுடன் இந்த படத்தை ரசிக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். நாம் காலம் காலமாக பார்த்து சலித்து போன ஒரு கதையாக இருந்தாலும் ஒரு திரில்லர் கலந்த வன்முறையாக இப்படம் உள்ளது. 

மொத்தத்தில் இந்த "நான் மிருகமாய் மாற" ரசிகர்களை மாற்றும்......

Governor of Tamil Nadu flags off the journey!



Shri R.N.Ravi, Hon'ble Governor of Tamil Nadu flagged off the train journey of the first contingent of 216 delegates for Kasi Tamil Sangamam today, 17th of November from Chennai Egmore railway station in the august presence of  Dr L.Murugan, Honble Union Minister of State for Information and Broadcasting, Fisheries and Animal Husbandry.  

Shri R.N. Ravi interacted with the Kashi Tamil Sangamam Selection Committee Members-Industrialist Dr.NalliKuppuswamiChetti, Dr SudhaSeshayyan,Vice-Chancellor The TamilnaduDr.M.G.R. Medical University,  Shri V.Kamakoti, Director, IIT Madras and Professor Dr. MohansankarSivaprakasam, IIT Madras, Social & cultural activist Mr. Mohammad Asif Ali.  The Governor interacted with the student delegates and congratulated them for being a part of the initiative to revive and reaffirm Tamil Nadu's cultural and historic links with Kashi. Of the delegates forming the first contingent to Kashi Tamil Sangamam, 35 boarded the Train No.22535 Rameswaram - Varanasi Express at Rameswaram, 103 delegates boarded at Tiruchchirappalli and 78 delegates joined at Dr MGR Chennai Egmore.  

All the delegates were students from various educational institutions from across Tamil Nadu. Students from various eminent institutions like IIT Madras expressed pride in joining the initiative and that theylook forward to the learning experience that theKashi Tamil Sangamam would offer.  The delegates expressed happiness for the opportunity extended to them by the Govt. of India to participate in the Kashi Tamil Sangamam.  The students will participate in various cultural events showcasing the rich tradition and culture of Tamil Nadu like Villupaatu, Bharatanatyam, folk dance, Kaliyattam etc. in Varanasi during their stay. Shri B.G.Mallya, Additional General Manager, Southern Railway, Shri Ganesh, Divisional Railway Manager, Chennai, and other Officers and Staff of Southern Railway, officials of IRCTC and IIT-Madras participated in the event at Chennai Egmore.

Kashi Tamil Sangamam: 

Kashi Tamil Sangamam is an initiative by the Government of India as a part of “AzadikaAmritMahotsav” and to uphold, revive and reaffirm the spirit of mutual bonding among diverse cultures.  The month-long KashiSangamam events is being organized by the Ministry of Education in partnership with IIT Madras and Banaras Hindu University.

The month-long programme aims to create an understanding of our shared heritage and deepen the people-to-people bond between the regions. Tamil Nadu and Kashi, and the area around it, are two of the oldest and most important of such centres. Both these centres have been fountainheads of knowledge in the intellectual, cultural, spiritual and artisanal realms. 

Varanasi, known popularly as Kashi in Tamil Nadu, is one of the oldest living cities of the world, endowed with a civilizational and cultural continuum that is unparalleled. Knowledge, philosophy, culture, devotion to Gods, literature, Indian arts and crafts have all flourished in this holy city. Tamil Nadu on the other hand is another cradle of culture, arts, crafts, literature, with a wealth of knowledge available in Tamil language, which is the most ancient language in the world. 

Hence exploring and rediscovering the links between these two centres can lead to the creation of important bodies of knowledge both in the intellectual and practical realms.Kashi Tamil Sangamam is held so that the people belonging to these two cultures can appreciate and strengthen the bonds amongst themselves.



 ஜீ5 ஒரிஜினல்ஸ் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்!



தமிழ் ஓடிடி உலகில்  புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்.  முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.  

இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.  இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில் இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசியதாவது.. 

இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இங்கு நிறையப் பிரபலங்கள் வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி.  இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



பாடலாசிரியர் மதன்  கார்க்கி பேசியதாவது… 

டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


எடிட்டர் ஆண்டனி பேசியதாவது… 

இந்த தொடர் மிக அற்புதமாக வந்துள்ளது. நவம்பர் 18 முதல் ஜீ5 யில் பார்த்து ரசியுங்கள் நன்றி. 


டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் பேசியதாவது.. 

டான்ஸை வைத்து உருவாக்கியுள்ள தொடரில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  பார்க்கவே மிக வித்தியாசமாக இருக்கிறது. விஜய் சார் இயக்கத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். தித்யா மற்றும் விவேக் மிக நன்றாக நடித்துள்ளார்கள். இத்தொடர் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்.  அனைவருக்கும் வாழ்த்துகள். 

இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது.. 

123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது லக்‌ஷ்மி படத்தின் மொராக்கோ சாங் தான் அதே போன்ற கதை கொண்ட  இந்த படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இது வெறும் டான்ஸ் காம்படேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல, நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். 




நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசியதாவது.. 

இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி. 


நடன இயக்குநர் ராஜு சுந்தரம் பேசியதாவது…

இந்த படக்குழுவினருக்கும் இயக்குநர் விஜய்க்கும் வாழ்த்துக்கள். நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தொடருக்கு ஆதரவு தந்த ஜீ5 க்கு நன்றி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் பாலா பேசியதாவது..

எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 


நடிகர் ஜீவா பேசியதாவது.. 

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் விஜய் பேசியதாவது… 

பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

FULL VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.