செப்டம்பர் 2022

Naane Varuven Movie Review: 'நானே வருவேன்'  படம் எப்படி இருக்கு பார்ப்போமா?! 




செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு தனுஷ் தான் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ளார். 11 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்..... 

மகளுக்காக எதையும் செய்யும் தந்தை ஒருவரின் இறுதிக்கட்ட போராட்டம் வென்றதா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன். தனது மனைவி, மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பிரபு (தனுஷ்). பாசக்கார தந்தையான அவருக்கு மகள் தான் உலகம். 

திடீரென ஒருகட்டத்தில் அவரது மகளின் நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் தென்படுகின்றன. இரவில் தூங்காமல் தனியாக பேசிக்கொண்டிருக்கும் தனது மகளின் வித்தியாசமான போக்கைக் கண்டு மனமுடைந்து போகும் பிரபு, அவரை அதிலிருந்து மீட்க போராடுகிறார். அப்படியான போராட்டத்தில் இறுதியில் அவர் தன் மகளை மீட்டாரா? இல்லையா? அவருக்குள் இருக்கும் பிரச்சனை தான் என்ன? என்பதை திரில்லராக சொல்லிருக்கிறார் செல்வராகவன்.......



 

நடிகர் தனுசின் நடிப்பை சொல்லவா வேண்டும் ரசிகர்களின் முழு கவனத்தை தன் நடிப்பால் ஈர்த்துள்ளார். 'வீரா சூரா தீரா வாடா' என்ற பாடல் ஒலிக்க ஸ்லோமோஷனில் தனுஷ் நடந்து வரும் காட்சி திரையரங்கை தெறிக்கவிடுகிறது. 

ஒரு சில நிமிடமே வந்துபோனாலும் தனது மிரட்டலான தோற்றத்தால் ஈர்க்கிறார் செல்வராகவன். இரண்டாம் பாதியில் வரும் நடிகை எல்லி அவரம் மற்றும் தனுஷின் சிறுவயது வெர்ஷன்களாக வரும் சிறுவர்கள் மற்றும் அவரின் மகன்களாக நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பு கதையோட்டத்திற்கு பலம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வெண்ணிற இரவும், அடர்ந்த காடுகளும், சண்டைக் காட்சிகளும் நம்மை அப்படியே... ஈர்க்கின்றன.

யோகிபாபு, பிரபு கதாபாத்திரங்களின் தேவை, திரையில் பெரிய அளவில் தேவைப்படவில்லை. இரண்டாம் பாதி கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமேக்ஸ் முடிவு  ரசிகர்களை திருப்திப்படுத்துமா? என்பது சந்தேகம் தான்.

மொத்தத்தில் இந்த 'நானே வருவேன்' திரில்லர் கலந்த பாச போராட்டம்...... 


 "Healthpreneur Awards"




"Healthpreneur Awards", an humble initiative by Lexa to recognize entrepreneurs from health care industry, happened on September 22nd 2022 at Hotel Le Royal Meridian, Chennai. The event had an array of eminent personalities to inaugurate and do the honors to the awardees. The guests of honor for the evening were Dr. Mohammad Ibrahim Al Haj, MD JUMERAH LIFESTYLE, DUBAI 

● Dr Madhivendan, HONOURABLE MINISTER of TOURISM TAMILNADU

 ● Mr. Paul J. Dryden MBE, Deputy Head of Mission, BRITISH Deputy HIGH COMMISSION to Tamil Nadu and Pondicherry ● Shri MVS Choudhry, CHIEF COMMISSIONER CUSTOMS 

● Mr Wan Ahmad Tarmizi Wan Idris, Trade Commissioner,  CONSULATE GENERAL OF MALAYSIA 

● Mr Vijayakarthikeyan IAS, Secretary HUMAN RIGHTS COMMISION

● Mr Sesha Sai, HONOURABLE CONSULATE OF REPUBLIC OF SEYCHELLES 

● Ms. Sridevi Arunachalam, President, INDO- UAE Association.

The Lexa team received 500 plus nominations for Healthpreneur Awards 2022 out of which 25 were selected and recognized during the event. They were honored with an Award, a Medal and a Certificate of Appreciation and also had an opportunity to speak about their vision and their untiring service to the society.

The event started with a welcome note by Dr Hemamalini, the co-founder of Lexa.

The 25 awardees who were recognized during the event:

1. Dr.A. Mythili, Dr Mythili Corner, Best NGO for Excellence in Ayush

2. Dr.D.L Jebarani, MedDiToo Best Health Tech in Siddha System of Medicine

3. Dr.N.C. Palaniappan, Dr.Pal’s Face Academy, Best Specialty Educator of the Year - Allopathy

4. Dr P.Thanigavel, Thanigai Pet Care Clinic, Best Veterinary clinic

5. Dr MMT.Vasan, V-Graft Hair Transplant Centre, Best Hair Transplant Centre

6. Mr.D.Suresh Lingam, Agam Diagnostics, Best Diagnostic Centre

7. Dr.H.Arunkumar, Dr. Arun's Diabetes and Diabetic Foot Care Specialty Centre, Best Diabetic Centre Rural

8. Mr. Anurag Mehta (Omega Medical Coding Academy) Omega Healthcare Management Services Pvt Ltd, Best Vocational Training Institute

9. Dr.H.Rekha Rajeswari, Wish Tree, Best Wellness & Mental Health Centre

10. Dr Vani Vijay, Mira Healthcare, Best Clinic for Patient Care

11. Dr. Rufus Vasanth Raj, Dr Rufus Ortho Clinic, Best Orthopedic Clinic

12. Dr. S.Sandhya, Dr Sandhya Heart & Diabetes Clinic, Best Heart & Diabetes Clinic

13. Dr. Sowmya N Dogiparthi, Dermipure Dermaclinic, Best Dermatology Clinic of the Year

14. Dr. Vignesh Resalraj, Kurinji Clinic, Best Clinic for Excellence in Public Health

15. Dr. T Vadivel, Dr Vels Regenerative Therapy Pvt Ltd, Best Regenerative

Therapy Centre

16. Mr.K V Sidharthan, Healthtunnel Best Healthcare Aggregator App of the Year

17. Dr K Prakash, Mr. Dilli Babu, Medilabs, Best Chain of Diagnostic labs

18. Mr. Damodaran, D&S Infotech, Best HR in Healthcare

19. Dr Balakrishnan Kaviarasu, Dr Anu, Ananth Sairam, Ayyamperumal and Dhandapani, Manushayaa Blossom, Best Multi-Specialty Siddha clinic

20. Dr Sudharson, Kumaran Dental Clinic Pvt Ltd, Sure Smile Aligners,

Best Aligner Brand of the Year

21. Dr. D Vijaya Krishna, Kolors Healthcare, Best Chain of Weight Loss Clinic South India

22. Mr Thangamuthu, Advocate, Medicolegal Expert of the Year

23. Mr Gopinath Ramachandran, Mighty Martial Arts Academy, Best Fitness Academy of the Year - Silambam

24. Prof. Dr.N. Balaji, Sri Narayani Hospital & Research Center Vellore, Best Super Specialty Hospital

25. Prof. Rajan Santosham, Santhosham Chest Hospital, Sushrutha Life

Time Achievement Award

Specialty Centre, Best Diabetic Centre Rural

8. Mr. Anurag Mehta (Omega Medical Coding Academy) Omega Healthcare Management Services Pvt Ltd, Best Vocational Training Institute

9. Dr.H.Rekha Rajeswari, Wish Tree, Best Wellness & Mental Health Centre

10. Dr Vani Vijay, Mira Healthcare, Best Clinic for Patient Care

11. Dr. Rufus Vasanth Raj, Dr Rufus Ortho Clinic, Best Orthopedic Clinic

12. Dr. S.Sandhya, Dr Sandhya Heart & Diabetes Clinic, Best Heart & Diabetes Clinic

13. Dr. Sowmya N Dogiparthi, Dermipure Dermaclinic, Best Dermatology Clinic of the Year

14. Dr. Vignesh Resalraj, Kurinji Clinic, Best Clinic for Excellence in Public Health

15. Dr. T Vadivel, Dr Vels Regenerative Therapy Pvt Ltd, Best Regenerative

Therapy Centre

16. Mr.K V Sidharthan, Healthtunnel Best Healthcare Aggregator App of the Year

17. Dr K Prakash, Mr. Dilli Babu, Medilabs, Best Chain of Diagnostic labs

18. Mr. Damodaran, D&S Infotech, Best HR in Healthcare

19. Dr Balakrishnan Kaviarasu, Dr Anu, Ananth Sairam, Ayyamperumal and Dhandapani, Manushayaa Blossom, Best Multi-Specialty Siddha clinic

20. Dr Sudharson, Kumaran Dental Clinic Pvt Ltd, Sure Smile Aligners,

Best Aligner Brand of the Year

21. Dr. D Vijaya Krishna, Kolors Healthcare, Best Chain of Weight Loss Clinic South India

22. Mr Thangamuthu, Advocate, Medicolegal Expert of the Year

23. Mr Gopinath Ramachandran, Mighty Martial Arts Academy, Best Fitness Academy of the Year - Silambam

24. Prof. Dr.N. Balaji, Sri Narayani Hospital & Research Center Vellore, Best Super Specialty Hospital

25. Prof. Rajan Santosham, Santhosham Chest Hospital, Sushrutha Life

Time Achievement Award

 

The event was a grand success with the support of

● DR SHAHZADA SIDDIQUI - MD JUMERAH LIFESTYLE

● MINT HOSPITAL - DR VINOTH & DR SHARANYA

● SRI NARAYANI HOLISTIC CENTER, SRIPURAM, VELLORE – PROF.DR.N. BALAJI & MRS MANISHA

● BM HOSPITALS- DR THIAGARAJAN & MRS VASUNDRA THIAGARAJAN

● SMS TRADERS - MR MANIKANDAN & MRS SHANTHI

● PHOTOGRAPHY PARTNER - MR AJAY, SHADOWS PHOTOGRAPHY

● GIFT PARTNER - MR ANIL DANGI, GRANO LIFE MILLETS

 

The event concluded with a vote of thanks by Dr Rajinikanth the Founder, Director of LEXA and also a renowned plastic surgeon.


ஆன்ட்டி இண்டியன் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்!




மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், இயக்குனர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறி மரணித்த ஒருவரின் இறுதிச்சடங்கு எந்த அளவுக்கு மதரீதியான, அரசியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதை தனது பாணியில் நையாண்டி கலந்து இந்த படத்தை இயக்கியிருந்தார் ப்ளூ சட்டை மாறன். 

இந்த படம் பல சிரமங்களை தாண்டி வெளியானது. அந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் இந்த படத்திற்கு நேரடியாக வெளியிட நல்ல வரவேற்பு இருந்தாலும் தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என உறுதியாக நின்று வெளியிட்டனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் திருப்திகரமான வசூலையும் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ஓடிடியில் வெளியிடுவதற்கும் சாட்டிலைட் உரிமையை பெறுவதற்கும் சில முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.



இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'காபி வித் காதல்'



அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயக\ர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம் அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

விஜய் டிவி புகழ் டிடி பேசும்போது, "ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை மிட்டாய் மாமா என்று தான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர் சி சார் எப்படி எல்லாருடைய குறை நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோல தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்த கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்" என்று கூறினார்.
 
இயக்குனர் சுந்தர்.சியுடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவருடன் நண்பராக பயணித்து வரும் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் பேசும்போது, 'இதுவரை 170 படங்களில் நான் நடித்துள்ளேன். அதில் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றும் 35 படம் இது என்றார்.

நடிகை ரைசா வில்சன் பேசும்போது, "இந்த படத்தின் படப்பிடிப்பில் யாராவது ஒருவர் காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். படப்பிடிப்பில் நடிக்கும்போது கூட சிரிக்காமல் நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது" என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, "சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்" என்றார்.

பிக்பாஸ் சம்யுக்தா பேசும்போது, " ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்று சொல்லும் போது என்ன உணர்வு ஏற்படுமோ சுந்தர் சி சார் படத்தில் நடித்து விட்டேன் என்று கூறும் போது அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது" என்றார். இந்த படத்தில் உனக்கு மேக்கப்பும் இல்லை.. கிளாமரும் இல்லை என்று சொல்லி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்து விட்டார் சுந்தர்.சி" என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது, "நாலு வருசமாக சரியான படம் அமையாமல் இருந்தேன். இந்த படத்தின் கதையை சுந்தர்.சி கூறியதுமே உடனே ஒப்புக்கொண்டு எப்போது நடிக்க கிளம்ப வேண்டும் என கேட்டேன். நாளை படப்பிடிப்பு என்றால், முதல் நாள் இரவு எனக்கு தூக்கமே வராது. ஏனென்றால் படப்பிடிப்பு அவ்வளவு ஜாலியாக இருக்கும்" என்றார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசும்போது, "இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். முக்கியமான ஒரு சூழ்நிலையில் கூட சோகமாக இல்லாமல் எனர்ஜி தரும் விதமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பாடலை உருவாக்கி உள்ளோம். ஆனால் சில நேரங்களில் தாமதமானாலும் கூட சுந்தர் சி முகம் சுளிக்காமல் என்னை வசதியாக பணியாற்ற வைத்தார்" என்று கூறினார்.

இந்த படத்தில் தியாகி பாய்ஸ் என்கிற பாடலை எழுதியுள்ள இயக்குனர் பேரரசு பேசும்போது, "யுவன் சங்கர் ராஜா இசையில் இதற்கு முன்னால் வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி என்கிற பாடலை எழுதி இருந்தேன். இதில் தியாகி பாய்ஸ் என்கிற பாடலை எழுதியுள்ளேன். இயக்குனர் சுந்தர்சி என்றாலே ‘கலர்ஃபுல் வித் கலகலப்பு’ என்று சொல்லலாம்.. பாலசந்தர் எப்படி ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான படங்களை எடுத்து பின்பு ஸ்டைலிஷான படங்களாக எடுக்க ஆரம்பித்தாரோ அதேபோல காலத்திற்கு ஏற்றார் போல் சுந்தர்.சி தன்னை பக்கா யூத்தாக மாற்றிக்கொண்டு வருகிறார்” என்றார்




இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது, “இதுவரை கிட்டத்தட்ட 3000 பாடல்கள் வரை எழுதி உள்ளேன். ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் பணியாற்றவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அதில் சுந்தர்.சியும் ஒருவர். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பாடல் எனக்கு எழுத வாய்ப்பு தேடி வந்தது,. ஆனால் அந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மறுநாள் காலை நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டிய இக்கட்டான சூழலில் தான் முதல்நாள் இரவு யுவன் சங்கர் ராஜா நாளை ஒரு பாடல் நீங்கள் எழுதவேண்டும் நேரில் சந்திப்போம் என்றார்..

அவரிடம் நிலைமையை சொல்லி இந்த படத்தில் நான் எப்படியும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறி, இரவு பதினொரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் அந்த பாடலை எழுதிக்கொடுத்துவிட்டு தான், மறுநாள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போனேன். இயக்குனருடன் இல்லாமலேயே நான் முதன்முதலில் எழுதிய பாடல் இதுவாகத்தான் இருக்கும்” என்றார்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன் அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.. இந்த படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னை படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமணநாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன்செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.

இந்த படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள் ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம் என்று கூறினார் சுந்தர்சி.. மற்றவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார்” என தனது கணவர் சுந்தர்.சி பற்றி ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் குஷ்பு.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர் சியும் ரிஷி பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில் தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

நடிகர்கள்

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

தொழில்நுட்பக்குழு

எழுத்து, இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர்.C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு - E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு - ஃபென்னி ஆலிவர்
கலை - குருராஜ். B
நடனம் - ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி - தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு - பாலா கோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத்


'டிராமா' திரைப்பட விமர்சனம் 




ஒரு காவல் நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? எதற்கு கொலை நடந்தது?  என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பது தான் 'டிராமா' திரைப்படம்.

ஒரு காவல்நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்கிற பல ஆபத்தான புதிய முயற்சிகளைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா.

ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன. சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.

விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோரின் நடிப்பு அருமை. அதனால், காட்சிகள் மெதுவாகவும் சோதிக்கும் விதத்தில் இருந்தாலும் நடுநடுவே காதல், காமம், காவல்துறையிலேயே இருந்தாலும் பெண்களின் நிலை, திருநங்கைகளின் துடிப்பு ஆகியனவற்றைக் காட்டி படத்தை சமன் செய்திருக்கிறார்கள்.

இறுதியில் சார்லியை கொலை செய்த காரணம் அசர வைக்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் அடிக்கும் லூட்டி வெறுப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் இந்த  'டிராமா' சிறந்த நடிப்பு...... 

‘விஜய் டக்கர்’ எனும் பொழுதுபோக்கு சேனல்! 




ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

‘விஜய் டக்கர்’ தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன்  இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது. 

விஜய் டக்கர் - ‘இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’

விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக  இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

‘விஜய் டக்கர்’  Non Fiction வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான  முழுக்கலவையை  கொண்டுள்ளது. Non Fiction வகையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் ஒளிப்பரப்பவுள்ளது. 

விஜய் டக்கர் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்:

காலேஜ் டா - தமிழகத்தின் 2k கிட் என்று அழைக்கப்படும் புது தலைமுறை gen z குழந்தைகளின் கல்லூரி வளாகத்தில் அவர்களின் வாழ்வை காட்சிபடுத்தும் நிகழ்ச்சி. 

சினிமா காரம் காஃபி - ஒரு கபேயில் 3 இளைஞர்களுடன் ஒரு நகைச்சுவையான அரட்டை நிகழ்ச்சி,  சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் கிசுகிசுக்கும் ஒரு  நிகழ்ச்சி. 

டிரக் மேல லக்கு - முழுத்திரை கொண்ட ஒரு  விளையாட்டு டிரக்கில்  அசத்தும் பொழுதுபோக்குடன் அற்புதமான கேம் ஷோ ஸ்டைல் ஸ்டைல் தான் - மேக்கப் மேன், மேக்கப் கலைஞர் மற்றும் பேஷன் போட்டோகிராபர் ஆகியோர் இணைந்து சாதாரண பொது மக்களை அழகுப்படுத்தும் அழகான நிகழ்ச்சி.

ஸ்டாருடன் ஒரு நாள் - தங்கள் வீடு, நண்பர்கள், குடும்பம் மற்றும் பொழுதுபோக்குகளை உள்ளடக்கிய பிரபலங்களின் வாழ்க்கையில் ஒரு நாளை புகுந்து காணும் ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி. 

சம்திங் சம்திங் - ஒரு டேட்டிங் ஷோ, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் சிலர் தங்களுக்கு சரியான பொருத்தத்தை தேடி அடையும் நிகழ்ச்சி. 

மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை ஒட்டி உருவாக்கப்பட்டது. கவர்ச்சியான மற்றும் மனதை ஈர்க்கும் கேம் ஷோக்கள் தவிர, தமிழ்நாட்டின் வேறு எந்தச் சேனலும் வழங்காத உள்ளடக்கத்தை இந்த சேனல் வழங்கும்.  இசை மற்றும் திரைப்படங்களையும் இந்த சேனல் கொண்டிருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் பார்வையாளர்களுக்கு பல வகை நிகழ்ச்சிகளை வழங்க  விஜய் டக்கர் தயாராக உள்ளது. இது நிச்சயமாக இளைஞர்களின் இதயங்களை கவரும் வகையில் இருக்கும்.

இந்த சேனலின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான உள்ளடக்கங்களுடன் விஜய் டக்கர், இளைஞர்களின் இதயங்களை நிச்சயமாகக் கைப்பற்றும் அற்புதமான புதுமையான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கும். விஜய் டக்கர் முன்னெப்போதும் இல்லாத வகையில், இளைஞர்களுக்கான சிறப்பான பொழுது போக்கை வழங்கும் ஒரு உற்சாக மிக்க சேனலாக இருக்கும். வரம்பற்ற பொழுதுபோக்குடன் விரைவில் தொடங்கவுள்ளது விஜய் டக்கர் சேனல் !  விஜய் டக்கரின் சேனல் பார்ட்னர்கள் Prithvi Women's Inner wear, RMKV Unique silks மற்றும்  Viking Premium Banians & briefs.


கலர்ஸ் தமிழில் நாளை 'ரங்கா’ திரைப்படம்! 




தமிழகத்தின் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைகாதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கலர்ஸ் தமிழ்,  அதன் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை  நடிகர்    சிபி சத்யராஜ்  நடிப்பில் வெளிவந்த  'ரங்கா’ திரைப்படத்தை  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக    ஒளிபரப்பவிருக்கிறது. 

மதியம் 2 மணிக்கு ஒளிரப்பாகும்  காதலும் திகிலும் கலந்த இந்த புத்தம் புதிய திரைப்படத்தை ஒரைசா ரிபைண்டு ரைஸ் பிரான் ஆயில் சிறப்பு பார்ட்னராக இணைந்து வழங்குகிறது. இந்த படத்திற்கு கதை எழுதி வினு இயக்கி உள்ளார். கதாநாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகர் மனோபாலா மற்றும் சிவ ஷர ஆகியோரும் நடித்துள்ளனர்.  பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மகிழ்ச்சியாக பொழுதுபோக்க மணாலிக்குச் செல்லும் புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் பிரச்சினையை சுற்றி வருகிறது.

இந்த படத்தில் ஆதித்யாவாக நடித்துள்ள சிபி சத்யராஜ், தனது குழந்தைப் பருவ காதலி அபிநயாவான நடிகை நிகிலா விமலை ரகசிய திருமணம் செய்துகொள்கிறார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் தேனிலவுக்காக மணாலிக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து படம் எடுப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். 

ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிப்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இவர்களை எதிர்த்து அவர்கள் இருவரும் எப்படி போராடி ஜெயித்தார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். 

இது குறித்து இயக்குனர் வினு கூறுகையில்:

“ரங்கா படம் காதலுடன் திகில் நிறைந்த படம் ஆகும். இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் முதலில் இது காதல் கதை என்று நினைப்பார்கள். ஆனால் போகப்போக இது மிகவும் திகில் நிறைந்த படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்கே கொண்டு செல்லும். எனது முதல் திரைப்படமான இந்த படம் கலர்ஸ் தமிழ் போன்ற பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்து மிகவும் உற்சாகம் அடைவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார் ”. 

சிபி சத்யராஜ் கூறுகையில்: 

“இந்த படத்தின் வித்தியாசமான கதை காரணமாகவே நான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த படம் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது, மேலும் ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இது நிச்சயம் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்”. 

எனவே நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் படத்தை பார்த்து மகிழுங்கள்.



'NC22' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்:  தொழில்நுட்ப குழு விவரம் அறிவிப்பு!




நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய 'NC22' படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்'ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இன்னொரு நல்ல செய்தி 'மாஸ்ட்ரோ' இளையராஜாவும், 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா  இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.

அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது.

கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் 'NC22'-ல் அங்கமாக உள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்‌ஷன்- எண்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

நடிகர்கள்: நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர் : பவன் குமார்,
இசை: 'மாஸ்ட்ரோ' இளையராஜா, 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: SR கதிர்,
எடிட்டர் : வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
ஆக்‌ஷன்: யானிக் என், மகேஷ் மாத்யூ,
கலை இயக்கம்: DY சத்யநாராயணா



Kuzhali Movie Review: 'குழலி'  திரைப்படத்தின் விமர்சனம்! 



முக்குழி பிலிம்ஸ் சார்பில் கே.பி வேலு , ஜெயராமன், ராமச்சந்திரன் தயாரிப்பில் விக்னேஷ்,  ஆரா  மகா , செந்தி, ஷாலினி நடிப்பில் சேரா கலையரசன் இயக்கி இருக்கும் படம்  தான்  'குழலி'. 

கதையின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.....  

கிராமத்தில் உயர் சாதிப் பெண்ணுக்கும் (ஆரா) தாழ்த்தப்பட்ட சாதியிலேயே கொஞ்சம் பெரிய ஆளான ஒருவரின்  மகனுக்கும் ( விக்னேஷ்) காதல். 

பல வருடங்களுக்கு முன்பு உயர் சாதி நபர் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்துக் கர்ப்பமாக்க ,  அந்தக் காதலை உயர் சாதி  ஆட்கள் ஏற்காததோடு சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பாவை நாயை விட்டுக் கடிக்க வைத்து  அவமானப்படுத்தி  விடுகிறார்கள்.

அந்த விசயத்தில் உயர்சாதி ஆட்களிடம் பேசி நியாயம் பெறப் போராடவில்லை என்று நாயகனின் அப்பா மீது சக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபம். இந்த சூழலில் இந்தப் புதிய காதலைக் கண்டு பிடிக்கும் அந்த தாழ்த்தப்பட்ட சமூக சக நபர் ஒருவன் , பெண்ணின் தாய்மாமாவிடம் போய் , ”அப்போ ஏமாந்துட்டோம் இந்த முறை விட மாட்டோம் . 


இந்தக் காதல் நிறைவேற வேண்டும்” என்று கொடி பிடிக்க, விஷயம் பெண்ணின் அம்மாவுக்கும் உறவுகளுக்கும் சாதிக்காரர்களுக்கும்  தெரிய வர, மருத்துவராகும் கனவோடு காதலித்த அந்தக் காதல் ஜோடி சேர்ந்தார்களா? முடிவில் காதல் ஜெயித்ததா? சாதி ஜெயித்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை..... 

ஆரா, செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.  உதயகுமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை . சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு . கிராமியப் பழக்க வழக்கக் கலாச்சாரங்களை காட்சிகளில் இணைத்து இருக்கும் விதம் படத்திற்கு  அழகு. ஆனால்  சாதியை அடிப்படையாக கொண்டு  பழைய  கதையையே  மீண்டும் எடுத்திருப்பது பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் இந்த  'குழலி' சாதி வெறியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்..... 

     

Rendagam Movie Review:  ‘ரெண்டகம்’ திரைப்படத்தின் விமர்சனம் 




நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் தான் ‘ரெண்டகம்’. 

இந்தப்படத்தை ஆகஸ்ட் சினிமா பேனருடன் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. 

கேங்வார் மோதல் ஒன்றில் டேவிட்டாக காட்டப்படும்  அரவிந்த் சாமிக்கு தலையில் அடிபட்டது போலவும், அதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது போலவும் படம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கும்பல் ஒன்று அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவரின் நினைவுகளை மீட்டெடுக்க கிச்சுவாக வரும்  குஞ்சக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது. அவரும் நெருக்கமாக பழகி அரவிந்த்சாமியின் நினைவுகளை மீட்டெடுக்க அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமிக்கு நினைவுகள் வந்ததா?  கும்பல் குஞ்சக்கோ போபனை அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது படத்தின் ட்விஸ்ட் .

வெறுமனே கேங்ஸ்டர் படமாக மட்டும் எடுக்காமல் செம ட்விஸ்ட் ஒன்று வைத்து த்ரில்லர் படமாக இயக்குநர் மாற்றியது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் சில காட்சிகளை கணிக்க முடிகிறதை இயக்குநர் கணிக்கவில்லையோ என்று  தோன்றுகிறது....

கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல்கள் எல்லாம் 'தேமே' என்று கடந்து செல்கிறது. மாஸ் மொமெண்ட்டுகள், லொக்கேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

மொத்தத்தில்  இந்த ‘ரெண்டகம்’ நம் மனதை ரெண்டாக்கும்.....


KCC-க்கான முன்னோடித்திட்டத்தை அறிமுகம் செய்யும் பெடரல் வங்கி!



செப்டம்பர் மாத தொடக்கத்தில், தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரக (கிராமப்புற) நிதி வழங்கலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை பெடரல் வங்கியை, கூட்டாளி வங்கியாகவும் மற்றும் மாநில அரசின் தீவிர ஒத்துழைப்போடும் சேர்த்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப்-ஆல் உருவாக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு நடவடிக்கையின் முன்னோடித்திட்டமானது, சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்திய ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட் கார்டுக்கான (KCC) (விவசாயிகளுக்கான உடனடி கடன் அட்டை) முன்னோடித்திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. வேளாண் துறையில் நிதி வழங்கலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுவதாக இந்த டிஜிட்டல் கடன் செயல்திட்டம் இருக்கிறது. சௌகரியம் மற்றும் இச்செயல்திட்டத்திற்காக எடுக்கக்கூடிய நேரம் ஆகிய அம்சங்களைப் பொறுத்தவரை கடன் வழங்கலில் தற்போது இருந்துவரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும். தொடக்கத்திலிருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இச்செயல்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயல்திட்டத்தில் இணைகின்ற செயல்நடவடிக்கை E-kyc  வழியாக நிகழும்; TN-eGA இணைய வாசலிலிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுருக்கள் / ஆவணங்கள் பெறப்படுகின்றன; வழங்கப்படும் நிதி / கடனின் அளவு தானியக்க முறையில் கணக்கிடப்படுகிறது மற்றும் இதற்கான ஆவண செயலாக்கம், e-sign (மின்னியல் முறையில் கையொப்பம்) வழியாக நிகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்ட இச்செயல்திட்டமானது, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு குறைந்த மதிப்பிலான, சிறிய தொகையிலான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 

மேலும், இதுவரை சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகிற கிராமப்புற பொதுமக்களுக்கு திறன்மிக்க கடன்வசதியினை ஏற்பாடு செய்வதற்காக இந்த செயல்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் (RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. ராஜேஷ் பன்சால், இச்செயல்திட்டத்தின் அறிமுகம் குறித்து கூறியதாவது:

இந்தியாவில் கிராமப்புற / ஊரக நிதி / கடன் என்பது பொருளாதார வளர்ச்சியோடு நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், RBI-ன் ஒத்துழைப்போடு கிஸான் கிரெடிட் கார்டு (KCC) கடன் வழங்கல் செயல்பாட்டில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை டிஜிட்டல்மயமாக்கலுக்கான ஒரு முன்னோடி செயல்திட்டத்தை RBIH-ல் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாடு மாநிலத்தில், மாநில அரசின் தீவிர பங்கேற்போடு பெடரல் வங்கியால் இப்போது, தொடங்கப்படுகிற இச்செயல்திட்டமானது, நமது விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது. இச்செயல்திட்டம் சிறப்பான வெற்றிபெறும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம் மற்றும் நாடு முழுவதும் இது அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் மற்றும் அதற்காக காத்திருக்கிறோம்.’’ 

பெடரல் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷியாம் சீனிவாசன் அவரது உரையில் கூறியதாவது : 

ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒத்துழைப்போடு, நமது விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிற சிறப்பான தீர்வுகளை இப்போது வழங்க இயலும் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது; தொழில்நுட்பத்தின் உதவியோடு, விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு இச்செயல்திட்டம் உதவும். முறைப்படுத்தப்பட்ட வங்கி சேவை அமைப்பிலிருந்து கடன் பெறுவதற்கு எளிதான அணுகுவசதி என்ற இலக்கை நோக்கி மாறும் செயல்திட்டத்தை இந்த அறிமுகம் துரிதமாக்கும்; நமது பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் என்ற குறிக்கோளை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிக முக்கியமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கிறது. நிலம் மற்றும் பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்போது, நமது சமூகத்தில் அதிக தகுதியுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன் வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திறன்கொண்ட தீர்வுகள் உதவுமென்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். தொழில்நுட்பத்தை மானுடத்துக்கு சிறப்பாக உதவும் வகையில் மாற்றுவதற்கான எமது நிலையான மன உறுதியும், அர்ப்பணிப்பும் இத்தகைய முயற்சிகளில் தெளிவாக வெளிப்படுகிறது; புதிய மற்றும் இதுவரை வங்கிச்சேவையை முழுமையாக பெறாத சந்தைகளில் நிதி / கடன் வசதி கிடைப்பதை முன்னேற்ற வேண்டுமென்ற எமது பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் இதனை நாங்கள் கருதுகிறோம். இதற்கான பயணம் இப்போது சிறப்பான தொடக்கத்துடன் நன்றாக நடைபெற்று வருகிறது என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற இன்னும் பல புத்தாக்கமான செயல்நடவடிக்கைகள் விரைவில் நிகழும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.’’ என்று கூறினார்.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.