அக்டோபர் 2021

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'


விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா. படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் .படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


நடிகர் விஷால் பேசியவை:

என்னுடைய நல்ல நண்பர் புனித் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை OTT இல் வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்தீர்களாம் . திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்  .

இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா ஒரு ஒரு ஜாலியான மனிதர். கடின உழைப்பாளி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை  அடித்துவிட்டார் அடுத்து அவருடன் நான் எப்போது படம் நடிப்பேன் என ஆவலாக உள்ளேன்.

நடிகர் ஆர்யா பேசியவை:

இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார் .நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது .எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது  என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகள் அதிகமாக  வைக்க சொல்லி விஷால் கூறியுள்ளார் .வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்கு தெரியவில்லை .நன்றி. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம் .இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க  முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம் .இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது .கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை .அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார் .துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது .கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தை பாருங்கள் நன்றி.


இயக்குனர் ஆனந்த் சங்கர் பேசியவை:

எனது முந்தைய இரு படங்களில் பசங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு  போய் சேரும். நடிகை மிர்னாலினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் .அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம் .அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் .அவர் டான்ஸர் கூட. இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார் பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .கைதி, விக்ரம்வேதா படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை. அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம் .அதேபோல் எதிர்பார்ப்புகளை தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. இப்படம் சுலபமாக தற்போது வெளியேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத் ,மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் .அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேணுடும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி .மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக  தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசியவை:

என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன் .அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார் .அதன் மூலம் 14 படங்களை  தயாரித்து . தயாரிப்பு ,தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாக கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால் ,ஆர்யாவுக்கும் இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது ,அதற்கான ரிசல்ட் இப்படத்தின்  வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன் .அனைவரது ஆதரவும் தேவை நன்றி.

நடிகை மிருணாளினி ரவி பேசியவை:

எனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு மிகப்பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது .என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய நடிகர். எனக்கு கூச்சமாக பயமாக தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரை போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது .இப்படத்தில்  அழகான பாடல்களை கொடுத்த தமன்அவர்களுக்கு நன்றி .தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வசனகர்த்தா ஷான் கருப்பசாமி பேசியவை:

நோட்டா படத்துக்கு பிறகு ஆனந்த் சங்கருடன் இணைந்து பணி புரிந்துள்ளேன். இப்படத்தின் டீசரில் வரும் டயலாக்குகள் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தில் ஒவ்வொரு  ஆக்சன் சீன்கள் பின்னாலும் ஒரு எமோஷனல் இருக்கும். உளவியல் ரீதியாக பல வசனங்களை வைத்துள்ளோம் .வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

கலை இயக்குனர் ராமலிங்கம் பேசியவை:

இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் என்று சொல்லலாம். எனது முயற்சியின் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கிறேன். இந்த படத்தில் ஹீரோவின் தந்தையின் கதாபாத்திரத்தின் பெயரை ராமலிங்கம் என எனது பெயரை இயக்குனர் வைத்துள்ளார் அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் சிங்கப்பூர் செட்டை ஐதராபாத்தில் உருவாக்கினோம். இந்தப்படத்தில் பணி புரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியவை:

நோட்டா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஆனந்த் ஷங்கருடன் இணைந்து உள்ளேன் .இந்த படத்தில் லேட்டாகத்தான் இணைந்தேன். ஒரு உலகத்தரம் வாய்ந்த என்கின்ற வார்த்தையை நிரூபித்தவர் ஆனந்த் ஷங்கர். ஒரு படத்தின் கதைதான் அந்தப் படத்தின் பின்னணி இசையை தீர்மானிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. பின்னணி இசை நினைத்ததை விட அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.


FULL VIDEO HERE:

 கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம்


இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிஉலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது

திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள, ஸ்பெஷல் பார்ட்னர் கோல்டு வின்னர் எல்டியா பியூர் கோக்கனட் ஆயில் வழங்கும் இந்த அதிரடி திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந்தேதி ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது

சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்ததுஇதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார்மேலும் அவருடன் மகிமா நம்பியார்இந்துஜா ரவிச்சந்திரன்காளி வெங்கட்ரோகினிஜெயபிரகாஷ்இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்ஆகியோரை சுற்றி வருகிறது.

 

மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான்இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான்



அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது  நம்பிக்கை வைத்துள்ளான்அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான்முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.

 

இது குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில்:


 கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சியில் இப்படியொரு சுவாரசியமான கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பது உண்மையிலேயே சிறப்பானதுபார்வையாளர்கள் ஒரு சிறப்பான வார இறுதியை எதிர்பார்க்கலாம்மேலும் இது பார்க்க வேண்டிய பயனுள்ள படம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்." என்று தெரிவித்தார்.

 

இது குறித்து இயக்குனர் சாந்தகுமார் கூறுகையில்:


 எனது இரண்டாவது படமான இந்த திரைப்படம் கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்நல்ல கதை அம்சம் கொண்டுள்ள இந்த படத்தில் அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளனர்இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்பார்வையாளர்களுக்கு இந்த வார இறுதி பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

 

இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இரண்டு சகோதரர்களின் மனதைக் கவரும் பயணத்தை மதியம் 12.30 மணிக்கும் மாலை 4 மணிக்கும் பார்த்து ரசியுங்கள்.



 

Transplant gives a new lease of life to 34-year-old patient at Fortis Vadapalani!


A Team of doctors led by Dr. Govini Balasubramani at Fortis Hospital Vadapalani, successfully performed a rare lung transplant earlier this month on a 34-year-old male. The rare and challenging surgery lasted for 7 hours where both lungs were successfully transplanted to the patient in spite of the multiple health challenges such as small chest cavity, multiple chest tube insertions on the sides of the lungs and low BMI

The 34-year-old patient from Punjab was presented at Fortis Hospital, Vadapalani, with a rare familial Interstitial Lung Disease (A group of disorders that cause progressive scarring of lung tissue that occurs in one of every one lakh population)


The family of the patient had already lost two of its members because of familial ILD. The patient's Low BMI was the biggest challenge as it was less than the required range for organ transplantation. The average BMI for organ transplant should be 18-32 for the transplant to be successful. The patient was dependent on oxygen support for his survival since past two years and had been in the waiting list of NOTTO. 


The wait for the suitable lung came to an end, post a donor from Madurai. The 29-year-old donor met with a fatal accident and declared brain dead by the hospital at Madurai while he was on ventilator support.


FULL VIDEO HERE:

சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்!


இயக்குனர் டோனிசான்  இயக்கத்தில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள படம் கொடியன். கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே, மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு   மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது.

நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டுவருகிறது. கொடியன் படமும் மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றிபேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது சர்வதேச விருதுகளைப்பெற்றுவருகிறது.

'இது வழக்கமான திரில்லர் பார்முலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம் , அது படம் வெளியாகும்போதுதான் தெரியும் அது எந்த அளவுக்கு கவனம் பெருகிறது என்பது. 

இந்த படத்தில்  நிவாஸ் ஆதித்தன் நாயகனாக நித்யஸ்ரீ  கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.

யோக் ஜேப்பி வில்லனாக மிரட்டியிருக்கிறார். மற்றும் லிசி ஆண்டனி, புதுமுகம் விக்டர் பிரபாகர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசை கேபர் வாசுகி, பின்னணி இசை கிரிநந்த் -விஜய் கார்த்திகேயன் செய்திருக்கிறார்கள். விரைவில் தியேட்டரில் வெளியாகவிருக்கும் கொடியன் படம் பல சர்வதேசவிருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் டோனிசான். தயாரிப்பு  சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நேரு நகர் நந்து.




கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் – 2’

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 32 போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்

அவர்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் தங்களை தயார்படுத்தி உள்ளனர். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோரின் அற்புதமான வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அவர்கள் போட்டியாளர்கள் மற்றும் அந்தந்த அணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். அதில் நடிகர் ஷாம்நடன இயக்குனர் ஸ்ரீதர்நடிகை அபிராமி மற்றும் நடிகை இனியா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்இந்த நிகழ்ச்சியின் பல சிறப்பு அம்சங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.  


வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் அனிமேஷன்துள்ளல் நடனம்பங்க் டான்ஸ்பிரேக் டான்ஸ்கிளாசிக்கல் டான்ஸ்லத்தீன் சல்சாஆப்ரோ டான்ஸ் மற்றும் லிரிகல் டான்ஸ் போன்ற பல்வேறு நடனங்கள் இடம்பெற உள்ளன.


போட்டிச் சுற்று அக்டோபர் 23-ந் தேதி அன்று துவங்குகிறது. இதில் கீழ்க்கண்ட குழுக்கள் பங்கேற்க இருக்கிறது.



1. வினோஷ் ஆனந்த் மற்றும் சையத் கபீர்

2. சாண்டி சுந்தர் மற்றும் நந்திகா

3. செராபின் மற்றும் சிவன்

4. நாவலரசன் மற்றும் அலிஷா

5. சாய் மற்றும் அரவிந்த்

6. ஜாக்கி மற்றும் பிருத்விராஜ்

7. மெர்சினா மற்றும் ராய்சன்

8. ஹரி மற்றும் பிரியதர்ஷினி

9. காவ்யா மற்றும் மகாலட்சுமி

10. பிளாக் மற்றும் கார்த்திக்

11. அனுஷா மற்றும் சுபாங்கி

12. ஜூட் மற்றும் ரக்ஷனா

13. அஞ்சனா மற்றும் அபிராஜ்

14. அபிராமி மற்றும் மாதுரி

15. மனோஜ் மற்றும் அமிர்தா

16. அல்கெனா மற்றும் ஆயிஷு


இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தமும் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழ் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை விரிவாக எடுத்துரைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒவ்வொரு நடனத்தின் வரலாற்று பின்னணியையும் பாரம்பரியத்தையும் பார்வையாளர்களுக்கு தொகுத்து வழங்க இருக்கிறார். 


மேலும்வரவிருக்கும் நிகழ்ச்சியில்நடிகை குஷ்பு பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கப்போகிறார். அது அவர்களை நிச்சயம் வாயடைக்கச் செய்யும். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.


Indian Bank felicitates winning para-athletes and forges MOU with PCI

Indian Bank, one of the leading banks of the country, with an enduring legacy of 115 years, has once again taken the lead and felicitated the Indian contingent of para-athletes who won the country a haul of 5 Gold medals at the recently concluded Tokyo Paralympics 2020. Marking India’s best-ever performance in the Paralympics that also included 8 Silver and 6 Bronze medals, Indian Bank awarded 10 para-athletes with token of appreciation for their exemplary efforts.  

Amongst those felicitated were Men’s Javelin Throw Gold winner Sumit Antil and the dashing duo of Pramod Bhagat & Krishna Nagar who won a Gold medal each in the Badminton Men’s single event. Shining with a Silver medal in their respective events, para-athletes Yogesh Kathunia, Singhraj Adhana and Mariappan Thangavelu were awarded for their efforts along with Bronze medal winners Sharad Kumar, Manoj Sarkar and Harwinder Singh. Additionally, para-athlete Navdeep Singh was also feted for his commendable 4th position in the Men’s Javelin Throw event.


Indian Bank is a Banking Partner of Paralympic Committee of India, the apex body overseeing the para-sports in India, and has entered into a long-term commitment with it wherein it extends support for training, equipment, nutrition and medical needs amongst others.

Congratulating the para-athletes, Shri Shanti Lal Jain, MD&CEO, Indian Bank said, “It gives me great pleasure to be part of this event that recognizes the outstanding achievements of these gritty para-athletes. That the historic haul of highest medals ever, came this year when Indian Bank has actively extended a hand, gives us confidence that we are on the right track and our bright athletes shall be scaling even greater heights in years to come. They are a beacon of light and inspiration for all of us; they are also living examples of never-say-die attitude.”


Expressing gratitude, Dr. Deepa Malik, President of the Paralympic Committee of India (PCI) added,” We have always believed in the sheer talent, strength and resolve of all our para-athletes which has borne immense fruit in the form of 19 medals at the recent Paralympics. This gradual growth of our athletes has filled us with pride and further strengthened our commitment to support all budding para-athletes in our country.


I would like to thank team Indian Bank for conducting this felicitation ceremony and trust that our association with them will further provide impetus to the hard-work put by both the para-athletes and the entire supporting team involved.”


Executive Directors of Indian Bank, Shri. V V Shenoy & Shri Imran Amin Siddiqui further encouraged the para-athletes by gracing the occasion and interacting with them. General Managers, Executives and other staff members of both organizations were also present.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.