அக்டோபர் 2022

பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர்- கே.பாக்யராஜ்



Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது 

இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 

நடிகை கோவை சரளா பேசியதாவது...

இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள். 

தயாரிப்பாளர் TG தியாகராஜன்…

இசை விழா நாயகன் நிவாஸ் K பிரசன்னாவிற்கு வாழ்த்துகள். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். அவரது கும்கி படம் பார்த்து அவருடன் வேலை செய்ய வேண்டுமென கேட்டு படம் செய்தோம். இந்தப்படத்தை மிக அற்புதமாக எடுத்திருக்கிறார். கோவை சரளா மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 

தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது….

கமல் சார் ஒரு படத்திற்கு வந்தால் அது வெற்றிக்கான அறிகுறி. விக்ரம் மூலம் திரைத்துறையையே மீண்டும் ஜொலிக்க வைத்துள்ளார். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். கோவை சரளா மிகச்சிறந்த நடிகை. மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்கும் தகுதி கோவை சரளாவுக்கே உண்டு. பிரபு சாலமன் செய்த அற்புதங்களில் ஒன்று தம்பி ராமையா போன்ற நடிகரை தமிழுக்கு கொடுத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

திரு அருள்பதி பேசியதாவது…

விக்ரம் படத்திற்காக கமலுக்கு வாழ்த்துகள். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது…

கமல் சார் இன்னும் எல்லோரையும் இன்ஸ்ஃபையர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். கமல் சார் போன்ற ஆளுமை கிடைத்தது சினிமாவுக்கு பெருமை. மிகக்குறைந்த பட்ஜெட்டில் மைனா, கும்கி என எடுத்து பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன். வெறும் பறவை பறக்கும் இயற்கையை தான் காட்டுகிறார், தியேட்டர் அதிர்கிறது. அதே போல் கோவை சரளா அவர்கள் பிரமிக்க வைக்கும் நடிப்பை தந்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

கமல் சாருக்கு என்னைவிட தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து சிங்காரவேலன் படமெடுத்தேன், இன்றும் கொண்டாடும் படமாக இருக்கிறது. அதற்கு காரணம் கமல் சார் தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார். அஷ்வின் அவர்களே கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கூடியவர் கோவை சரளா தான். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

திரு நாஞ்சில் சம்பத் பேசியதாவது..

இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன், அதுவே தான் எனது விருப்பமும். நான் நன்றாக நடித்ததாக கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள். அவர் ஆளும் மனோரமா. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 

திரு பழ கருப்பையா பேசியதாவது…

ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன். ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. 

கே.பாக்யராஜ் பேசியதாவது…

கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து. இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

Dr.ஐசரி K கணேஷ் பேசியதாவது…

பிரபு சாலமன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவரை வைத்து என் தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய ஆசைப்பட்டேன். அது வரும் காலத்தில் நடக்கும் என நம்புகிறேன். கோவை சரளா மேடம் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். டிரெய்லரே படம் நன்றாக இருக்குமென்பதை சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது...

Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில் முந்தைய படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அது போல் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். உங்களுக்கு கமல் சார் சப்போர்ட் இருக்கிறது. அவரால் நானே தெனாலி படத்தில் தயாரிப்பாளராக மாறினேன். கோவைசரளாவை நாயகியாக்கினார். அது போல் அவர் சப்போர்ட் இருக்கும் போது எளிதாக ஜெயிக்கலாம். இந்தப்படமும் ஜெயிக்கும் வாழ்த்துகள். 

நடிகர் அஷ்வின் பேசியதாவது…

படம் பண்ணுவதே எனக்கு பாக்கியம். ரவி சார் எனக்கு முதல் படம் கொடுத்ததோடு இரண்டாவது படமும் கொடுத்தார். பிரபு சாலமன் சார் படம் என்றவுடனே நான் எதுவுமே கேட்கவில்லை. நான் ஓகேவா சார் எனக்கேட்டேன், அவர் எனக்கு செய்ததை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். கமல் சார் பக்கத்தில் நிற்பதே பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப்பெரிய பெருமை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…

கமல் சார் கலையின் நாயகன். அவர் இருக்கும் மேடையில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் நாயகன் பிரபு சாலமன், நடிப்பு ராட்சசி கோவை சரளா எல்லோருக்கும் நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள். 

இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…

படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் பாத்திரத்திற்காக பல காலம் அலைந்திருக்கிறேன். கொடைக்கானலில் இருந்து கொல்லிமலை வரை பலரை தேடினோம் இறுதியில் கமல் சாரின் சதிலீலாவதி ஞாபகம் வந்தது, உடனே கோவை சரளா மேடமை பார்த்து கதை சொன்னேன். என்னால் முடியுமா என்றார்கள், உங்களால் கண்டிப்பாக முடியும் என்றேன் படத்தில் அசத்திவிட்டார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை. எல்லோருக்கும் நன்றி. 

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…

கோவைசரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது. கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. என்னையே திட்டியிருக்கிறார்கள். நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள் அதைக்கேட்க சந்தோஷமாக இருக்கிறது. 

ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக்கேட்டால் அது பெரிய படம் இல்லை. கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். 

அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நல்ல படம் வெற்றிப்படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். செம்பி மிகப்பெரிய வெற்றி பெறும், வாழ்த்துகள். 

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட “அன்ன பூரணி” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! 




Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.  கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் …

Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.  கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம். 

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார். 

லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9.!




பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ் , நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.  கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.


இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது:

இன்றைய இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார் தான். அவர்தான் தனது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குனர் கையாள வேண்டும் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தவர். அவருக்கு பின்வரும் இயக்குனர்கள் கதையுடன் வரவேண்டும் என்கிற நெருக்கடியையும் அவர் உருவாக்கினார். அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது” என்று கூறினார்.


இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் பேசும்போது:

 “இந்த படத்தின் தலைப்பு 3.6.9 என்பது என்னால் மறக்க முடியாத ஒரு நம்பர்.. காரணம் நான் முதன்முதலில் வாங்கிய காரின் நம்பரும் அதுதான்.. இளமையான ஒரு கூட்டணியில் இணைந்து பாக்கியராஜ் சார் பணியாற்றியுள்ளார். இந்த மேடையில் அவர் வரும்போது படக்குழுவினர் அனைவருமே அவரை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் வரவேற்றனர். சாதித்த இயக்குனர்களுக்கு இன்று கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது தான். ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறைக்கு சாதித்த சீனியர்கள் பற்றி தெரிவதில்லை. தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர் அவர். வெள்ளிவிழா படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் போல இன்று இருப்பவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவருடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா படங்கள் தான்.. எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில், கதை சரியாக யோசிக்க முடியாத நேரங்களில், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் இயக்குனர் பாக்கியராஜின் மாணவன் என்பதை நினைத்துக் கொள்வேன். உடனே உற்சாகம் வந்துவிடும்” என்று கூறினார்


இசையமைப்பாளர் தீனா பேசும்போது:

 “சில படங்களில் ட்ரெய்லரை பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. இந்த படத்தின் ட்ரெய்லரும் அதுபோலத்தான் இருந்தது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக இந்த ட்ரெய்லர் இருப்பதை மறுக்க முடியாது. இந்த படத்தின் பின்னணி இசையை பார்க்கும்போது ஜுராசிக் பார்க் படத்திற்கு கையாண்ட முறையை போல இதிலும் செய்திருப்பார்கள் என்று நினைக்க வைக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முதலில் நான் வருவதாக இல்லை.. காரணம் படத்தின் இசையமைப்பாளர் எங்களது சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால் இன்று மாலை தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அடுத்த நிமிடமே இந்த விழாவுக்கு கிளம்பி வந்துவிட்டேன். அவர் மிகப்பெரிய அளவில் வருவார்” என்று பாராட்டினார்.


இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசும்போது:

 “நான் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டு அதை நோக்கி வந்தேன். ஆனால் சில நேரங்களில் அதை விட்டு பாதை மாறும் விதமாக நான் செல்லும்போது தயாரிப்பாளர் பிஜிஎஸ்  தான் என்னை இழுத்து பிடித்து இதுதான் உனக்கு சரியான பாதை என்று என்னை வழிநடத்தினார். என்னை நம்பி இந்த படத்திற்கு நீதான் இசையமைக்கிறார் என்று மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தார். அதுமட்டுமல்ல இது போன்ற ஒரு சாதனை படத்திற்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களை தான் பெரும்பாலும் தேடுவார்கள். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் சிவ மாதவ்வும் ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.


நடிகர் பிளாக் பாண்டி பேசும்போது:

 “இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ரிகர்சல் செய்து கொண்டிருந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. நாம் நினைத்தபடி படப்பிடிப்பு நடத்த  முடியுமா என எனக்கு சந்தேகம் வந்தது. அதனால் இயக்குனர் நம்பிக்கையுடன் இருந்தார். அதேபோல சாதனைப்படமாக இது எடுக்கப்பட இருப்பதால் எந்த ஒரு இடத்திலும் நம்மால் அதற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வசனத்தை மறந்து விட்டால் கூட அதனால் சாதனை தடைப்பட்டு விடும் என்று கூட இயக்குனர் கூறியிருந்தார். அதனால் இந்த படம் குறித்த நினைப்பை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் சிவ மாதவ் பேசும்போது:

 “கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப்படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இதை துவங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர்கள் வரை வந்து சென்றனர். அதில் பலபேர் இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு சாதனையை செய்து விட்டோம் அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டி இருப்பார்கள்.

இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில் கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றி தான் இந்தப் படம் பேசுகிறது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் பேசும்போது:

 “முதல் படம் எனக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை. அதன் பிறகுதான் ஒரு பெரிய படமாக, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.. அந்த படம் அனைவரையும் பேச வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த போது தான் இப்படி ஒரு சாதனை படத்தை எடுக்கும் எண்ணம் உருவானது. இயக்குனர் சிவ மாதவ்விடம் இதை சொன்னபோது சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டார். அதேசமயம் படம் ஆரம்பிக்கும் முன்பு அவர் என்னிடம் சொன்ன கதை படமாக எடுக்க துவங்கியபோது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது. ஆனால் அதுவும் முதலில் சொன்னதைவிட நன்றாகவே இருந்தது. 81 நிமிடங்களில் எடுக்கும் படம் தானே, குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே காலியானது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது. இந்த படத்தில் ரிகர்சளுக்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பாக்கியராஜ் சார் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த கப்பலின் கேப்டன் சிவமாதவ் தான் என்றாலும் இது பாக்கியராஜ் சார் படம் தான் என்பதை உறுதியாக சொல்வேன்” இந்த கூறினார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது:

“நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான்.. நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன். நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது,  அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.

அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை. 

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.



'ரிப்பீட் ஷூ' திரைவிமர்சனம் 





இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ரிப்பீட் ஷூ'. இந்த படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடிங் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா, ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் இந்த படம் உருவாகிறது.

படத்தில் நாயகன் திலீபன் அவர்கள் ஒரு டைம் ட்ராவல் மெஷினை பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக போலீசுக்கும் இவருக்கும் இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. அதில் துப்பாக்கி கொண்டு நாயகன் திலீபன் கழுத்தில் பாய்கிறது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் தாம் கண்டு பிடித்த டைம் டிராவல் சூவை திலீபன் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார்.

திலீபன் மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன அந்தோணி தாசனின் மகளாக வரும் பிரியாவிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து யோகி பாபுவின் கைக்கு அந்த ஷூ செல்கிறது. ஷூ வந்த நேரம் யோகி பாபு உடைய வாழ்க்கையே மாறுகிறது . யோகி பாபு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது ஒரு கும்பல்.

அந்த கும்பலிடம் குடிகாரரான அந்தோணி தாசன் தன்னுடைய மகள் பிரியாவையும் விற்று விடுகிறார். இந்த நிலையில் பிரியாவின் வாழ்க்கை என்னானது? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா? இறுதியில் இந்த ஷூவை திலீப் கைப்பற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. 

இந்த படத்தில் ஷூ வில் டைம் ட்ராவல் மெஷினை வைத்து வித்தியாசமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். டெக்னிக்கலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண். படத்தில் யோகி பாபு, ரெடீன், பாலா காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. பெண் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகளும், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்கும் படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் காட்சியில் அந்த சிறு பெண் குழந்தையை பாலியல் அறைக்கு அனுப்புவது இயக்குனர் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது........

மொத்தத்தில் இந்த ரிப்பீட் 'ஷூ' வை ஒரு முறை அணியலாம்....... 

'ஆற்றல்' திரைப்பட விமர்சனம் 




ஓட்டுனர் இன்றி தானே இயங்கும் கார் ஒன்றை உருவாக்கும் முயற்சில் இருக்கிறார் விதார்த். இதற்காக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விதார்த்தின் தந்தை சார்லி, மகனுக்காக பைனான்ஸியரிடம் பணம் கடன் வாங்கி வருகிறார். 

ஆனால் பணத்தை மகனிடம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொலை செய்யப்படுகிறார். பணமும் கொள்ளை போகிறது. இதே சமயம் நகரில் ஆங்காங்கே முகமூடி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கொள்ளையடித்துவிட்டு கொலை செய்வது இந்த கொள்ளை கும்பலின் வாடிக்கை.

ஒரு நாள் கண்ணெதிரே நடுரோட்டில் முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடமிருந்து முகமூடி கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்க்கிறார் விதார்த். கொள்ளையர்களைத் துரத்திச் சென்று பணத்தை மீட்டு, கொலையுண்ட முதியவரின் குடும்பத்தில் ஒப்படைக்கிறார். கொள்ளை கும்பல் குறித்து போலீசில் புகார் செய்யப் போகும் விதார்த்தை காவலர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். 

வேறு வழியின்றி கொள்ளையர்களைப் பிடிக்க தானே களத்தில் இறங்குகிறார் விதார்த். கொள்ளையர்களை பிடிக்க அவரால் முடிந்ததா? அவரது தானியங்கி கார் கனவு என்னவானது? என்பதை எல்லாம் சுவைபட விவரிக்கும் படம்தான் ஆற்றல். 

சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டி அமர்க்களப்படுத்தியிருக்கும் விதார்த், இறந்த போன அப்பாவை தன் மடியில் போட்டுக்கொண்டு கதறி அழும் காட்சியில் நெஞ்சைத் தொடும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கும் நாயகி ஷிரிதா ராவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட வேடத்தை குறையின்றி செய்திருக்கிறார். விதார்த்துக்கு அடுதபடியாக மனதில் நிற்பவர்கள் அப்பா வேடம் ஏற்ற நகைச்சுவை நடிகர் சார்லியும், வில்லன் வேடத்தில் வெளுத்து கட்டியிருக்கும் வம்சி கிருஷ்ணாவும்தான். அஸ்வின் ஹேமந்த் இசையில் உருவான பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. 

கொள்ளையர்கள் 'ஈ' வடிவ ரோபோ ஒன்றி்ல் கேமராவை பொருத்தி கொள்ளையடிக்கப்போகும் வீட்டை வேவு பார்ப்பது புதுமையாக இருக்கிறது. பத்து லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு தனி மனிதனாக தானியங்கி கார் ஒன்றை விதார்த் உருவாக்குகிறார் என்பது நம்பும்படி இல்லையே… இரவுக் காட்சிகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது கொளஞ்சி குமாரின் கேமரா.

மொத்தத்தில் இந்த 'ஆற்றல்' கனவில் மிதக்கும்.....

‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து வெளியிட்டுள்ளனர்!



ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் .

படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும்  ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.  

தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான்.

ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில், ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

காதல் என்றால் என்ன? காதலை விட  உயர்ந்தது எது? காதல் முக்கியமா? பணம் முக்கியமா? எது முக்கியம் என்பதை விளக்கம் படம் இந்த ON OFF

FULL MOVIE HERE:

'விங் டுகெதர்' என்பது  என்ன? இந்த படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்!


சேர்ந்து வாழ்தல் ,  லிவ்விங் டுகெதர் நமது இந்திய சமூகத்திற்கு இருக்கும் பெரும் சவால்.  குடும்பத்துடன் இருப்பது,குடும்பத்திற்காக வாழ்வது தலைமுறை தலைமுறையாக முன்னோர்களின் பங்களிப்பும் மற்றும் பாசத்தாலே இளைய தலைமுறையினர் முன்னேறுகிறார்கள்.

ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுப்பது,  தனது குடும்பத்திற்காக தியாகம் செய்வது,  தங்கள் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பது, இந்தியர்களின் இயல்பு.

இதனை குலைக்கும் விதமாக இன்றைய இளையதலைமுறையினர் கல்யாணம், குடும்பம்  குழந்தை என்பது நவீன சிறையாக உள்ளது என்று எண்ணம் பெறுநகரங்களில் வளர்ந்து வருகிறது. இதனை மையமாகக் கொண்டு 'காதலிசம்' என்று படம் உருவாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற 'டுலெட்' பட கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் இந்த படத்தை எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ளார். சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. 'ஹர்மீத் கௌர்' என்ற பஞ்சாபி பெண் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.  

இந்த படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜனிடம் கேட்ட போது:

'லிவிங் டுகெதர் ' என்பது நமக்கு மேற்குலகிலிருந்து வந்தது உலகமயமாக்கல் பொருளாதார தாராளமயமாக்கல் இன்னொரு விளைவு இந்த 'லிவிங் டுகதர்'. இன்றைக்கு பெரும் நகரம் பெரும் சுதந்திரத்தில் திருமணமாகாமல் சேர்ந்து வாழக்கூடிய சூழல் உள்ளது.  ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்களது தனிப்பட்ட உரிமை என்றாலும் குழந்தை என்று வரும்போதுதான் இதனுடைய உண்மையான சிக்கலே பிறக்கிறது. 

குழந்தையை யார் பராமரிப்பது, அந்தக் குழந்தையின் எதிர்காலம், குழந்தையின் மன நலம், குழந்தை வளர்ப்பு என்று அனைத்துமே குழப்பம் அடைகிறது. குழந்தைபேறு தள்ளிப் போடுவதால் வேறு பல சிக்கல்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாளைய சமூகமே கேள்விக்குறியாகும். இதனை இளமை துள்ளும் கட்சிகளுடனும் நகைச்சுவை சென்டிமென்ட் கட்சிகளுடனும் படமாக்கியுள்ளோம்.

மிக அழகான நகரத்தில் படம் பார்க்க வேண்டும் என்ற சிங்கப்பூரில் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளோம். இதுவரை படத்தில் காணாத சிங்கப்பூர் அழகினை எங்கள் ஒளிப்பதிவாளர் நட்சத்திரம் பிரேம்குமார் காட்சி ஆகியுள்ளார். 'சிங்கப்பூர்' எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது, படத்திற்கு மிகப்பெரிய பலம். 'சிங்காவுட்' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் காமேஷின் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.  'காதலிசம்'  படம் காதலின் வேறொரு பரிமாணத்தைக் காட்டும். இந்த வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

மொத்தத்தில் இந்த "காதலிசம்" இளைஞர்கள் மனதில் கொள்ளை கொள்ளும்....

VIDEO HERE:

திரௌபதி வெற்றிப் பட வரிசையில் ஓங்காரம் திரைப்படம்



ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. ‘அய்யன்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. அவரே நாயகனாக நடித்திருக்கும் படத்தில், கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு , சர்வதேச விளையாட்டு வீரர் மா.ரா.சௌந்தரராஜன்,தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் S .கோபி ,தமிழ் திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் R .K .அன்புச் செல்வன் ,அய்யன் தயாரிப்பாளர் சேகர் ராஜன் ,நடிகர் இயக்குனர் சரவண சக்தி உள்ளிட்ட  பல சிறப்பு  விருந்தினர்கள்  கலந்து  கொண்டனர் . 


அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ‘நடிகை நடிகர்களுக்காக தானே நாங்கள் சிரமப்படுகிறோம். நாங்கள் செய்யும் செலவு அத்தனையும் உங்களுக்காகத் தான் .ஆக படத்திற்கு மரியாதை கொடுங்கள். படத்தின் நடிகையை விட நடிகையின் அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் நடிகை, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு ரூ. 1 லட்சம் கேட்டதாகவும், அதுமட் டுமின்றி பல்வேறு நிபந்தனைகளையும் விதித்ததாக கூறப்பட்டது. இதனால், அவரை வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது என கே.ராஜன் பேசியிருந்தார். மேலும், பொன்னியின் செல்வம் திரைப்படம் குறித்தும் சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.  முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணியில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் இன்னும் திரையுலகினருக்கு இன்னும் ஏதும் செய்யவில்லை. கருணாநிதி திரைத்துறைக்காக நிறைய செய்துள்ளார். ஆகவே, அவரின் மகனான நீங்கள் உதவ வேண்டும். சின்ன திரைப்படம் தான் சினிமாவை காப்பாற்றி கொண்டிருக்கிறது.


அதன்பின் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ‘ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது, எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை சினிமாவில் படித்துள்ளாய் என்று சொன்னார். இன்று பிரச்சினை செய்கிறார்கள். ராஜா ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று, எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா சம்பாதித்தோமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம்' என்றார்.


இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, “சினிமாவில் வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி என அனைத்து திரைப்படங்களும் வெளியாக வேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஒன்று. யாரும், இவற்றின் கதைகளை எடுக்கக்கூடாது என வற்புறுத்தக் கூடாது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசியதாவது, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வலதுசாரி சிந்தனைக்கொண்டது. கல்கி எழுதிய நாவல் முழுவதுமே அப்படிதான் .திரைப்படத்தில், த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரமும், விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரமும் உரையாடும் காட்சி ஒன்றுதான் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு அடிப்படை.



ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில், கையாலய மலையின் வடிவத்தை. ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனும், கங்கைகொண்ட சோழபுரத்தை தூய்மைப்படுத்திய கங்கையில் இருந்து நீர் எடுத்துவந்து ஊர் முழுவதும் தெளித்தார். இந்த சடங்கு தற்போது வரை துக்க வீடுகளில் செய்யப்படுகிறது. எனவே, தற்போதைய காலக்கட்டத்தைதான் பார்க்க வேண்டும். மக்களை குழப்பி, பிரிவினை உண்டாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் .


தமிழ்திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  R .K .அன்புச் செல்வன் பேசிய போது  சினிமா சினிமாவாக  இருக்கும் போது சினிமாவாக  இருந்தது .சினிமாவுக்குள் எப்ப அரசியல்  புகுந்ததோ அப்போது சினிமாவின்  முகம் மாறி விடுகிறது .இன்று லோகேஷ் கனகராஜ் ,முருகதாஸ் போன்ற  எத்தனையோ  இளம் இயக்குனர்கள்  வாய்ப்பு கிடைக்காமல்  அலைகிறார்கள் .நல்ல  கதை  இருந்தால்  ஒரு  சிறிய பட்ஜெட்டில் நல்ல  படம் பண்ண முடியும். அதற்கு இந்த தம்பி ஒரு உதாரணம்.


சினிமா பேச  வந்தால்  சினிமா பற்றியே பேச வேண்டும் .அரசியல்  பேசக்கூடாது .ஒரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது  ...இன்னொரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது அதை  முதலில்  விடுங்கள் .முதல்வர்  என்றால் முதல்வருக்குரிய மரியாதையை  கொடுங்கள். இந்த ஓங்காரம் படத்தின் இயக்குனர் வந்தார். சென்சார் பண்ணனும் என சொன்னார் .படத்தை பற்றி எல்லா விஷயத்தையும் சொன்னார் .இங்குள்ள  பல  பிரச்சனையை  சொன்னார் .வாங்க தம்பி என அழைத்து போய் என்னென்ன செய்ய வேண்டுமென அதற்கான விஷயத்தை சொன்னேன்.தம்பியும் நாங்கள் சொன்ன  விஷயத்தை முறையாக  பின்பற்றி படமும்  சென்சார்  வாங்கிடுச்சு .சின்ன பட்ஜெட்டில்  நல்லாவே  படம் பண்ணிருக்கு  இந்த  தம்பி .இன்றைய இயக்குனர்கள் பலர் 100 கோடி வாங்கும் நடிகர்கள்  பின்னே  அலைந்து தயாரிப்பாளர்களை  தெருக்கோடிக்கு  கொண்டு சென்று  விடுகிறார்கள் .நல்ல  கதை  இருந்தால் 1.5 கோடிக்குள் ஒரு  நல்ல  திரைப்படத்தை  எடுத்து விட முடியும் .இன்று பல  சிறு  பட தயாரிப்பாளர்கள் விளம்பரம் குடுக்க முடியாமல்  ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் .தினத்தந்தியில்  ஒரு  QUARTER PAGE விளம்பரம்  குடுக்க பல  தயாரிப்பாளர்கள்  பணம் இல்லாமல் இருக்கிறார்கள் .இன்னைக்கு  தமிழ் சினிமாவை  வாழ  வைப்பது தந்தி  மட்டுமே .யாரும் தவறாக  நினைக்க  வேண்டாம் .அது உண்மையும்  கூட.சிறு பட தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும்  நாயகனாக  தந்தி  திகழ்கிறது .ஒரு படத்திற்கு  4 விளம்பரங்கள்  இலவசமாக  தந்தி  கொடுக்கிறது .நேற்று இந்த தம்பியுடைய படம் தந்தியில்  இலவசமாக  வந்து இருக்கிறது .தந்தி  சிறுபட  தயாரிப்பாளருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சினிமாவை வாழ  வைத்து கொண்டு இருக்கிறது .தமிழ்  சினிமா சிறு பட தயாரிப்பாளர்களை நம்பியே இருக்கிறது . இங்கு சிலர் பேச பயப்படுகிறார்கள் .ஜால்ரா போட்டு பயனில்லை .சினிமா நல்லா இருக்கணும்  என்றால்  ஜால்ரா  ஒழியனும் .எந்த  கவர்மெண்ட் இருந்தாலும் ஜால்ரா போடாமல் அவர்களிடம் கோரிக்கை வையுங்கள் .சினிமாவை  வாழ  வையுங்கள் .முதல்வருக்குரிய மரியாதையை கொடுங்கள் .சிறு பட தயாரிப்பாளர்களுக்கு பல  உதவிகளை  எங்கள்  சங்கம்  செய்கிறது என்றார் .

பீனிக்ஸ் மார்க்கெட்  சிட்டியின் நகை கண்காட்சி!


சென்னை: 

சென்னையின் பிரீமியம் மால்களில் ஒன்றான ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்விக்கும் வகையில், தி ஜூவல்லரி எக்ஸ்போ 2022 என்ற பிரம்மாண்டமான ஆபரண தங்கநகை கண்காட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்காட்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் கீழ் தரை தளத்தில், காலை 10.00 - இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.




இந்த கண்காட்சியில் ஜுக்தி, ஸ்வா டைமண்ட்ஸ், மலபார் கோல்டு, ப்ளூ ஸ்டோன், ஸ்வரோவ்ஸ்கி, தனிஷ்க்கின் மியா, குஷால்ஸ், பெயோரா, எஸ்டெல், சலானி ஜூவல்லரி, கேஜே பெதர் டச் மற்றும் வில்வா ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தங்க நகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தொடக்க விழாவை முன்னிட்டு, நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி, மற்றும் நடிகை பவித்ரா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பற்றி: 

பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், சில்லறை வர்த்தகம் சார்ந்த மால்களை துவக்கி சொத்துக்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மால்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ள பீனிக்ஸ் மால்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து பிராண்ட் நிறுவனங்களும், சாப்பிடுவதற்கான ஓட்டல்களும், பொழுது போக்குவதற்கான தியேட்டர்களும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மும்பை, புனே, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பீனிக்ஸ் மால்கள் உள்ளன.      

Lanson Brings Toyota’s Urban Cruiser Hyryder, the First and Only Self-charging Strong-Hybrid Electric B-SUV in India to Chennai 




Chennai:

Lanson Toyota, one of the leading Toyota car dealers in the country, has launched Urban Cruiser Hyryder, India’s first and only self-charging strong-hybrid electric vehicle in the B-segment SUV segment, in the city today. With the ex-showroom prices starting at Rs. 15,11,000, this mid-size SUV, the newest and an advanced addition to Toyota’s acclaimed hybrid legacy, is now the most affordable strong-hybrid car in India. 

The launch function saw the participation of top officials from Toyota Kirloskar Motors, including Mr. Takashi Takamiya, Vice President, Mr. Rajesh Menon, General Manager, and Mr. Pradeep Rai, Deputy Manager. Representing Lanson Toyota, Mr. M. Lankalingam, Chairman & Managing Director, Mr. Shivanka Lankalingam, Executive Director, and Ms. Lavanya Kumaraguru, Chief Operating Officer took part in the event.

Combining the reliability of a petrol engine and the performance of an electric motor, the all-new Toyota Urban Cruiser Hyryder delivers smoother, more efficient and silent drives, and stands for lesser emissions. Toyota claims a fuel efficiency of 27.97 km/l. Hyryder comes in four variants, including the strong-hybrid and the mid-hybrid - all are All-wheel-drive (AWD) vehicles, wherein the system powers both the front and rear wheels. The vehicle, depending on the variant, is powered by a TNGA or K-series engine, both 1.5L. 

 

The strong-hybrid gets a 1.5-litre TNGA Atkinson Cycle engine that makes 92 hp and 122 Nm of torque, paired with an eCVT gearbox. The engine is coupled to an electric motor that makes 79 hp and 141 Nm of torque, offering a combined output of 114 hp. The motor draws power from a 177.6V lithium-ion battery. The mid-hybrid version gets a 1.5-litre K15C engine. It makes 103 hp and 137 Nm, paired with a five-speed manual or a six-speed torque converter automatic gearbox. The manual transmission gets AWD as an option. This makes the Hyryder the only mid-size SUV in India to offer AWD.

 

Unique exterior features of Urban Cruiser Hyryder are: LED projector headlamps, twin LED daytime running lamps, roof rails, sporty rear skid plate, dual-tone body colour, sleek and dynamic R17 alloy wheels, and LED tail lamps. On connectivity, the model has remote vehicle ignition, smartwatch connectivity, advanced voice control, remote AC control, among others. It also has a Stolen Vehicle Tracker system. The car boasts of a stunning black and brown interior, leather seats with ventilation, 360-degree camera and view for better vantage point while navigating tight spaces, head-up display for a distraction-free drive. 

Speaking about Urban Cruiser Hyryder, Mr. Takeshi Takamiya said, “I am very much happy and it is my great pleasure to present this historical moment. I am proud to witness the launch of the hybrid Hyryder that eptimosises the most advanced technology in the world. This is a technology for everyone, so please enjoy.”

In his comments, Mr. Lankalingam said, “Lanson Toyota is very happy and proud to bring to our discerning customers the most loved hybrid vehicle Toyota Urban Cruiser Hyryder. We wish to personally thank each one of our guests for the trust they place in Lanson Toyota. We are overwhelmed by the bookings we have received for the all-new Toyota Urban Cruiser Hyryder, the self-charging hybrid electric vehicle that truly reflects the ‘Kind to Planet’ philosophy of Toyota.

In his speech, Mr. Shivanka Lankalingam said, “We are gearing up to offer you all a world-class guest experience through our dedicated service and care. Lanson Toyota’s 25 facilities, including Festive Counters, are closer to our customers, even in tier 3 towns in northern Tamil Nadu and Puducherry. Our business is all about building lasting relationships, not just selling cars.’

Lanson Motors was born in 2000 to create a path breaking motoring experience in Chennai and northern Tamil Nadu. Its team of 1200 experienced sales, service and guest relations personnel, with the pedigree of 22 years, serve close to a million customers. It services 550 to 600 vehicles a day. 


Minister Subramanian inaugurated CMR's Versius Robotic Surgical System at SIMS Hospital!


Chennai:

In an endeavour to provide affordable robotic minimal access surgery and make a difference in the lives of more people, SIMS Hospital (SRM Institutes for Medical Science), one of the leading multi-specialty hospitals in the city, launched Versius Robotic Surgical System at its Vadapalani facility. 

 

Inaugurated by Hon'ble Minister for Health and Family Welfare, Government of Tamil Nadu, Thiru. Ma. Subramanian in the presence of Dr. Ravi Pachamuthu, Chairman SRM Group, the new Robotic Surgical System will be a great boon for both the medical care team and the patients, alike. From being cost-effective and affordable, to being less painful with minimal invasion, scarring and bleeding, to facilitating speedy recovery for the patients with shorter hospital stay, so as to resume their normal activities, these robotic surgical interventions have many advantages over the traditional open surgical procedures.  

 

Speaking at the inauguration, Dr. Ravi Pachamuthu, Chairman SRM Group. Said, “The robotic assisted surgery system has radically changed the surgical practice in recent times and SIMS is happy to be bringing such a progressive procedure of minimally invasive robotic surgery solutions to all. The system enables the surgeons from across various disciplines like Urology, Gynaecology, Surgical Gastroenterology, Surgical Oncology, Cardiothoracic, ENT and General Surgery, perform common as well as complex and advanced procedures with increased flexibility, greater accuracy, enhanced precision and dexterity, alongside maintaining safety and control, all through the procedure". 



 

Sharing about the advantages of Robotic Surgeries Dr Patta Radhakrishnan, Director & Senior Consultant – Surgical Gastroenterology Institute of Gastroenterology | Hepatobiliary Science and Transplantation at SIMS, said:


 "The NEXT generation Surgical robot is backed by Artificial intelligence & machine learning that empowers the surgeons to operate through one or a few small incisions in place of a large incision as with traditional open surgeries. The system delivers a highly magnified 3 D high-definition optical view of the surgical area that helps in in-depth analysis of the problem area and aids in precision surgery. It facilitates surgeon's hand movements at the console in real time, bending and rotating the instruments while performing the procedure. These kinds of robotic surgical interventions not only help in treating patients with shorter recovery periods but also improve their quality-of-life post-surgery.

 

"Though the robotic-minimal access surgery facilities have spread to the nook and corner of the country, the awareness about the procedure is very low and has not reached the masses yet. Also, not many surgeons in India are trained in this procedure, making its availability in the country very limited. Furthermore, there is a huge dearth for quality training institutes that offer structured and adequate courses in the field of minimal access surgery. Keeping all this in view and the already existing hardware and infrastructure including clinical equipment and facilities for minimal access surgery, we at SIMS have endeavoured to offer a structured course that would enable the gen next students to come and learn the nuances of minimal access robotic and laparoscopic surgeries and have hands-on experience in this field. In a way we would be happy passing on the Robotic Surgical Technology to the next generation. We intend to affiliate with SRM University for certification, adding more authenticity to the program," he added.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.