ஆகஸ்ட் 2020

SPB உடல்நிலை?! 


பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: 

முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதைச் சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன்.

 அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 

அப்பா பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்" இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உடல் நிலை மோசமாக இருக்கிறது. 


முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்: தலைவர்கள் இரங்கல் 



பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்து சென்றுள்ளார் பிரணாப் முகர்ஜி: பிரதமர் மோடி இரங்கல்

* இந்திய தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

* இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்றுகாட்டுவார் என எதிர்பார்த்த நேரத்தில் துயரச் செய்தி -பிரணாப் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல். கடின உழைப்பாலும், திறமையாலும் குடியரசுத் தலைவர் என்ற சிகரத்தை எட்டியவர் என்று ஸ்டாலின் புகழாரம் .

* மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை புரிந்தவர் பிரணாப் முகர்ஜி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்


* குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் முகர்ஜி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

* முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

* மத்திய அரசில் பிரணப் முகர்ஜி பணியாற்றாத அமைச்சகங்களே இல்லை எனலாம்: பீட்டர் அல்போன்ஸ்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்தி

*  நாட்டின் கலாசாரம், பண்பாட்டை முன்னிறுத்தியவர் பிரணாப் முகர்ஜி: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

* சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் பிரணாப் முகர்ஜி: மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

* முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு நாட்டிற்கு மிக பெரிய இழப்பு: புதுச்சேரி முதல்வர் இரங்கல்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு அதிமுக சார்பில் வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம்: வைகைச்செல்வன் இரங்கல்

* பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: G.K.வாசன் இரங்கல்

* சிறந்த அரசியல் தலைவரை இந்த நாடு இழந்து இருக்கிறது: டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல்

* பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு: கனிமொழி எம்.பி. இரங்கல்





செப் 30 வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு: முழு விபரம் 


சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி.
செப்.30 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை

                                        முழு விபரம் :

1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.  

2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள்  தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.  இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.  வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

3) மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.  

6) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  

8) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9) தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

10) உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

11) திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

12) தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.  எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

13) வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14) நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

15) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16) ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.  

17) மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

18) விமானப் போக்குவரத்து  மூலம்  பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், இரயில் போக்குவரத்து  மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.  

19) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள  நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.  இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.




போக்குவரத்துக்கு அனுமதி: வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி! 


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


செப்டம்பர் 30-ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே
அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல்
அனுமதி அளிக்கப்படுகிறது:


1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர
வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/அலைபேசி எண்ணுடன் நு-ஞயளள விண்ணப்பித்த அனைவருக்கும் Auto
generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும்
வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.

2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் (Sanctum sanctorum) ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

3) மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் (Standard Operating
Procedure)  செயல்பட அனுமதிக்கப்படுகிறது.




INDIAN COAST GUARD IN A ANTI-SMUGGLING OPERATION IN GULF OF MANNAR

In a swift sea-air coordinated mid-sea operation an Indian Coast Guard Ship and Aircraft apprehended a fishing boat at about 1200 hrs on 29 Aug 2020, carrying approximately 1000 Kgs of Sea Cucumbers, an endangered and protected species, worth over Rs 5 Crores in International Market. 

The package was intended to be smuggled into Sri Lanka. The fishing boat along with three crew have been apprehended and brought to Tuticorin for further investigation. 

The successful operation reiterates the Indian Coast Guard’s resolve for ensuring safe seas in the region through extensive surveillance for monitoring suspicious activities at Sea.



கொரோனா தொற்று அதிகரிப்பு! 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

 அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 09 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 752 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 49  ஆயிரத்தைக் கடந்துது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.


தேசிய கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் மனநிலை?! 


சென்னை: 

தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார் என சென்னை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தியது, ஈ.வே.ராமசாமி சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் இபிஎஸ், தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், மூன்று நிறங்கள் குறித்த புதுவிளக்கம் ஒன்றையும் கூறினார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


இந்தப் புகாரின் அடிப்படையில்:

எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பதிலளிக்க போலீசாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், தனது மனுதாரர் கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், போலீசார் 4 பக்க கேள்விகளைக் கொடுத்துப் பதிலளிக்கக் கூறியிருந்ததனர், அவற்றிற்கு இன்று ஆஜராகி அளித்துள்ளார் . அந்தப் படிவத்தை தாக்கல் செய்து, கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும். 

நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, இது குறித்து, மனுதாரர், தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






Congress MP H Vasanthakumar dies due to COVID-19


Tamil Nadu Member of Parliament from Kanyakumari and businessman H Vasanthakumar succumbed to COVID-19 on August 28 after a three-week battle against the disease. The senior Congress party leader was admitted to Chennai’s Apollo Hospital and passed away at 7.07 pm on Friday.

The 70-year-old businessman who founded Tamil Nadu’s biggest appliances retail chain Vasanth and Co was in a critical condition, put on both the ECMO and a ventilator. He was admitted to the hospital on August 10, after developing symptoms of COVID-19.

A two-time MLA, Vasanthakumar was first elected to the Tamil Nadu Assembly from Nanguneri constituency in 2006, and thereafter in 2016. He, however, resigned from his seat after successfully contesting from Kanyakumari parliamentary constituency in the 2019 Lok Sabha Election. He defeated the sitting MP and then Union Minister Pon Radhakrishnan by a huge margin.  




He was also the brother of former Tamil Nadu Congress Committee President and veteran Congress leader Kumari Ananthan. His niece is Telangana Governor Tamilisai Soundararajan.

Vasanthakumar came from humble beginnings, working as a salesman in the seventies. He was a popular name in Tamil Nadu as he started Vasanth & Co, a premium home appliances and electronic goods dealer, in 1978. In the last few decades, Vasanth and Co grew to be a household name in the state with almost 90 showrooms across Tamil Nadu and Puducherry. In addition to the retail chain Vasanth & Co, the politician also ran Vasanth TV channel.

Condolences have been pouring in after news of his demise came.

“The party has given him the highest posting and made him proud. He has helped many during his lifetime, including those who worked for him at Vasantha and Co,” said Congress party member Vijayadharini. 

VCK’s Member of Parliament Ravikumar shared that he was shocked and saddened by the news. “Even during the last Parliament session he was constantly raising his voice to bring back Tamil Nadu’s fishermen who were stuck in Iran. He has always spoken for the people whenever he got the opportunity to do so in the House. I think he could feature among the MPs from Tamil Nadu who spoke the most in the Parliament.”
 
“He would always enthusiastically take part in Parliamentary sessions. He came up in life as a result of his hardwork and has served as an example for many youngsters. It is very rare to see someone like him. He had several plans for his constituency and would speak for it whenever he got the opportunity to do so,” said DMK’s MP Kanimozhi.


காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார் 

சென்னை:  

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் ஐ.சி.யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எம்பி வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருக்கும் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அவருடைய உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் அவர் உயிர் பிரிந்தது. 

SUBSCRIBE & CLICK BELL BUTTON: https://www.youtube.com/c/tamillivenewsofficial


Aswin soundarajan from Chennai played carrom for more than 24 hours!

Chennai:

Aswin, a resident of mint,  pensioner lane with a keen interest in carrom, He was very well versed with the intention of achieving success in the carrom game and has decided to play for more than 34 hours.

In its preview, he started playing at 8 Am on Wednesday, 19.08.2020 and held the record for playing carrom for 35 hours 35 minutes and 35 seconds continuously. He has also played carrom with various national and international carrom players.


As he describes about it:

He said, “Only by believing at his series training, He has played more than 34 hours”and he beated the world record And by this, many youngsters will be attracted to the game of carrom.


For your wishes Contact
Mr.Aswin Soundara Rajan (Carrom Player, Chennai)
9600113377



#carrom#carrom2020#aswin soundararajan carrom#chennai aswin soundararajan carrom#mint aswin soundararajan carrom#carrom board aswin soundararajan#carrom winner 2020#carom players#aswin soundararajan carrom live#live carrom game#tamillivenews#live news#carrom winner#carrom game#carrom playing#chennai carrom player aswin soundararajan#carrom live telecast#live broadcasting#24hrs carrom#48hours carrom game#guiness record carrom board#carrom players list#aswin soundararajan carrom 2020#carrom player aswin soundararajan



35 மணி நேரம் 35 நிமிடம் 35 விநாடி  கேரம் விளையாடி சாதனை! 

சென்னை: 

தொடர்ச்சியாக 24+மணி நேரத்திற்கும் மேல் கேரம் விளையாடிய  சென்னையை சேர்ந்த அஸ்வின் சௌந்திரராஜன்.

மின்ட், தங்கசாலை, பென்ஷனேர்ஸ் லேனில் வசித்து வருபவர் அஸ்வின். கேரம் மீதான ஆர்வத்தினால் மிக நன்றாக கைதேர்ந்த அவருக்கு கேரம் விளையாட்டில் சாதிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து 40 மணி நேரத்த்திற்கு மேல் விளையாட முடிவு செய்துள்ளார்.

அதன் முன்னோட்டமாக 19.08.2020 புதன் கிழமை  காலை 8 மணியளவில் விளையாட துவங்கியுள்ள  அவர் தொடர்ந்து 35 மணி நேரம் 35 நிமிடம் 35 விநாடி  கேரம் விளையாடி சாதனை செய்திருக்கிறார். மேலும் இவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கேரம் விளையாட்டு வீரர்கள் கேரம் விளையாடியுள்ளனர்.

திரு.அஸ்வின் சௌந்திரராஜன் கூறுகையில்:
 
தான் தொடர்ந்து 40 மணி நேரத்திற்கும் கேரம் விளையாட உள்ளதாகவும், 

மேலும் அவர் திரு. பங்காரு பாபு (father of carrom) , திரு. ஆனந்தன் ( முன்னாள் சென்னை மாவட்ட கேரம் சங்க செயலாளர்), திரு. டில்லி (முன்னாள் தேசிய சாம்பியன்) மற்றும் 11 முறை தேசிய சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனும், கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரருமான திரு. மரியா இருதயம் ( Chennai district carrom association secretary )  திரு.மார்ட்டின் ( Tamilnadu carrom association secretary) ஆகியோரது ஆலோசனையும், நல்லாசியும் இருந்ததால் மட்டுமே தன்னால் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக கூறியுள்ளார்.

அவருக்கு பக்கபலமாக இருந்த தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டு வீரர்களுக்கும், தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த விடா முயற்சியில் 35 மணி நேரம் 35 நிமிடம் 35 விநாடி விளையாடி சாதனை படைத்த இவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

உங்கள் வாழ்த்தையும் நம்ம தமிழனுக்கு தெரிவிக்க, தொடர்பு கொள்ளுங்கள்  
Mr.Aswin Soundara Rajan (Carrom Player, Chennai)
9600113377


#carrom#carrom2020#aswin soundararajan carrom#chennai aswin soundararajan carrom#mint aswin soundararajan carrom#carrom board aswin soundararajan#carrom winner 2020#carom players#aswin soundararajan carrom live#live carrom game#tamillivenews#live news#carrom winner#carrom game#carrom playing#chennai carrom player aswin soundararajan#carrom live telecast#live broadcasting#24hrs carrom#48hours carrom game#guiness record carrom board#carrom players list#aswin soundararajan carrom 2020

COLORS Tamil strengthens its Sunday morning programming with ‘Sinthanaigal Simplified’ 

Chennai:

With the world going through a humanitarian crisis one could never have imagined, a silver lining of hope is all that is required to keep oneself sailing. In an effort to make these tough times slightly easier for its viewers and engage them with new and innovative content, COLORS Tamil presents ‘Sinthanaigal Simplified’, a motivational heart to heart conversation talk show in association with The Art of Living Foundation. Set to go on-air starting 23rd August 2020, every Sunday at 11:00 AM, the program will showcase Global Humanitarian, Gurudev Sri Sri Ravishankar of Art of Living Foundation in candid conversation with Tamil personalities from different walks of life.

Speaking about the channel’s first ever talk show, Anup Chandrasekharan, Business Head, COLORS Tamil said:


“As a channel, COLORS Tamil has always focused on telling stories that are meaningful and that make a difference. The Art of Living Foundation has been pivotal in helping many individuals find their inner peace and living a happy and stress-free life. We are delighted on this association with the Foundation and  more importantly with highly  respected Gurudev Sri Sri Ravi Shankarji. We are sure that our viewers will not only enjoy watching COLORS Tamil’s very first and brand new talk show Sinthanaigal Simplified every Sunday morning, but will also find it very enriching that will help them live a more meaningful life.”

  

The talk show titled ‘Sinthanaigal Simplified’ featuring spiritual guru Sri Sri Ravi Shankar:


aims to reinstall positivity and engage in an honest and thought-provoking conversation about life, relationships, inclusiveness, belonging, family, love, success, health, mental well-being, spirituality, hope and courage in difficult times. Each conversation will provide viewers a peak into the treasured hearts of personalities as they drop their guard and reveal their innermost vulnerabilities. The show is set to provide the audience a sense of awakening as Gurudev talks about living a happy life, with his inimitable sense of humor and poignancy.

 

The inaugural episode shall feature Veteran Actor-Director K.Bhagyaraj and Gurudev Sri Sri Ravishankar engage in a fascinating conversation on 23rd August, Sunday at 11:00 AM, only on COLORS Tamil. The 60-minute series will feature different celebrities every Sunday in conversation with the spiritual leader. Some prominent personalities who will feature on the show along with Gurudev Sri Sri Ravishankar are Lakshmi Ramakrishnan, Gautham Menon, Andrea Jeremiah, Aishwarya Rajesh, Rangaraj Pandey and many more.

Powered by Tamil Matrimony App, tune in to the first episode of COLORS Tamil’s first ever talk show  Sinthanaigal Simplified at 11:00 am every Sunday, starting August 23, 2020 within the comfort of your homes.



ஆவடியில் அரசு இடம் மீட்பு


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான அய்யபாக்கம் எம் ஜி.ஆர் நகரில் ஒரு கோடி மதிப்பில் உள்ள 40 அடி சாலையை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகள் கட்டி இருப்பதனால் இங்கு இருப்பவர்களுக்கு15 நாட்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பி  நேற்று இடிக்கும் பணி நடைபெற்றது.

 இங்கு மாநகராட்சி ஆணையர் திரு நாராயணன்  டி.பி.ஓ வெங்கடேசன் டிபிஐ தினகர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஊழியர்கள்  சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் வீடு கடைகளையும் அகற்றினர்.

 இதேபோல் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள்  இருக்கிறதோ அதனை உடனடியாக கண்டறிந்து மீட்டெடுப்பது எனது வேலை என்று ஆணையர் திரு.நாராயணன் அவர்கள் தெரிவித்தார்.


 தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழக காவல்துறை இயக்குனர் திரு.J.K திரிபாதி இ.கா.ப அவர்கள் தலைமையில்  தென்மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. முருகன் இ.கா.ப, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு தீபக் டாமோர் இ.கா.ப, நெல்லை சரக காவல் துணை தலைவர் திரு.பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ.பத்ரி நாராயணன் இ.கா.ப, திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர் திரு. அர்ஜுன் சரவணன்  (சட்டம் & ஒழுங்கு) ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்களின் புகைப்படத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடந்து 24+ மணி நேரம் கேரம் விளையாடும் சென்னையை சேர்ந்த கேரம் வீரர் அஸ்வின் சௌந்திரராஜன்! 

தொடர்ச்சியாக 24+மணி நேரம் கேரம் விளையாடும் சாதனையை துவங்கியுள்ளார் தமிழ்நாடு  சென்னையை சேர்ந்த அஸ்வின் சௌந்திரராஜன்.

மின்ட், தங்கசாலை, பென்ஷனேர்ஸ்  லேனில் வசித்து வருபவர் அஸ்வின். கேரம் மீதான ஆர்வத்தினால் மிக நன்றாக கைதேர்ந்த அவருக்கு கேரம் விளையாட்டில் சாதிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து 40 மணி நேரத்த்திற்கு மேல் விளையாட முடிவு செய்துள்ளார்.

அதன் முன்னோட்டமாக இன்று காலை 8 மணியளவில் விளையாட துவங்கியுள்ள அவர் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல்  கேரம் விளையாடயுள்ளார் . மேலும் இருவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கேரம் விளையாட்டு வீரர்கள் கேரம் விளையாடி வருகின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில்:

தனது தொடர் பயிற்சியின் மீதான நம்பிக்கையில் தான் 40 மணி நேரத்திற்கும் மேல் விளையாட உள்ளதாகவும், இதன் மூலம் கேரம் விளையாட்டை நோக்கி பல இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

FOR You Tube LIVE SUBSCRIBE & CLICK BELL BUTTON 

https://www.youtube.com/c/tamillivenewsofficial


உங்கள் வாழ்த்தையும் நம்ம தமிழனுக்கு தெரிவிக்க, தொடர்பு கொள்ளுங்கள்  
Mr.Aswin Soundara Rajan (Carrom Player, Chennai)
9600113377



Southern Railway covered in the Weeklong Special Cleanliness drive




Southern Railway, a passenger-oriented zone, is making significant progress in enhancing the cleanliness parameters of its stations and trains. Cleanliness campaigns are organized throughout the year to provide a pleasing ambience at railway stations,  Clean tracks free of plastic waste and vegetation, Clean trains , neat and tidy toilets,  hygienic catering, potable drinking water and clean railway colonies.

 Every year, along with railway staff, NGOs, Volunteers, School and College students were also roped in to join hands with Railways in Swachh Bharat campaigns.  This year, in view of CoVID pandemic and lockdown restrictions, the Special Cleanliness drive from 10th to 16th August, 2020 was carried out with the wholehearted cooperation of employees.

343 railway stations were cleaned up across Southern Railway.  This includes 152 railway stations in Chennai Division, 102 stations in Madurai Division, 36 in Palakkad Division, 20 stations in Salem division, 18 stations in Thiruvananthapuram Division and 15 stations in Tiruchchirappalli Division.  Besides, intensive Cleanliness activity was undertaken at major Workshops and maintenance Depots also. 

 

Through such sustained Cleanliness efforts Southern Railway aims to bring a systemic improvement in the Cleanliness of its railway stations, trains, tracks, yards and other worksites.  In order to make "Swachh Rail" the driving force behind the government's flagship "Swachh Bharat Abhiyan" , Southern Railway seeks the cooperation and commitment of the rail users, general public, railway employees and voluntary organisations.



சவரன் ரூ. 736 உயர்ந்து ரூ. 41,336க்கு விற்பனை!

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது. மார்ச் 23ம் தேதி கடந்த 7ம் தேதி வரை சவரனுக்கு 11,712 வரை உயர்ந்தது. 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. 

அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. 8ம் தேதி ஒரு சவரன் 43,080, 10ம் தேதி 42,920, 11ம் தேதி 41,936, 12ம் தேதி 40,832க்கும் விற்கப்பட்டது. 

13ம் தேதி 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் 5,076க்கும், சவரன் 40,608க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,740 வரை குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிகரித்தது. கிராம் 24 அதிகரித்து ஒரு கிராம் 5100க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 40,800க்கும் விற்கப்பட்டது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றமின்றி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800ஆக இருந்து வந்தது. 

வர்த்தக தொடக்கத்தின் முதல் நாளான நேற்று, தங்கம் விலை சவரன் ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனையானது.ஒரு கிராம் விலை ரூ. 29 குறைந்து ரூ.5071க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில், தங்கம் விலை இன்று ரூ. 736 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 92 உயர்ந்து ரூ. 5,167க்கும் சவரன் ரூ. 736 உயர்ந்து ரூ.41,336க்கும் உயர்ந்தது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 76,30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து 

சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில்:

“ தங்கம் விலை இந்த காலக்கட்டத்தில் கூடும், குறையும் காலமாகும். முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் வரை இப்படி கூடுவதும், குறைவதுவான போக்கு தான் காணப்படும்” என்றார்.







74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிவானந்தா ஸ்டில்ஸ் தொழிலாள நண்பர்கள் பழைய நினைவுகள் விழா நடைபெற்றது இந்த விழாவினை உதவிக்கரம் மூலம் நடைபெற்றது.

 இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பத்தாவது படித்து முதல் மார்க் வாங்கிய மாணவர்களுக்கும் பரிசினை வழங்கி ஐஏஎஸ் படிக்க 3 மாணவ மாணவிகளுக்கு உதவிகரம் மூலம் முழு செலவையும் ஏற்று படிக்க வைக்க முன்வந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் படிக்க முடியாத குழந்தைகளையும் இவர்களே படிக்க வைக்கவும் முன்வந்துள்ளன இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் திரு ஆனந்த் சின்னத்திரை திரு.வேலூர் பூந்தமல்லி ஆணையர் திரு. எஸ் செந்தில்குமார் ஆவடி மாநகராட்சி . தினகரன் மற்றும் திரு வெங்கட் இவர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


74-வது சுதந்திர தினம் 

சென்னை:

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.

அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்தார்.


முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:


இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள்  நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.