காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார்

காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் காலமானார் 

சென்னை:  

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் ஐ.சி.யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எம்பி வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருக்கும் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அவருடைய உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் அவர் உயிர் பிரிந்தது. 

SUBSCRIBE & CLICK BELL BUTTON: https://www.youtube.com/c/tamillivenewsofficial


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.