பாம்பாட்டம் படத்தின் பூஜை படப்பிடிப்புடன் ஆரம்பம்!
சென்னை:
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம்“
ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகி
இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது.
பூஜையில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துனைத்தலைவர் கதிரேஷன், இணைச் செயலாளர் கொட்டப்பாடி ராஜேஷ், மற்றும் செயற்குழு உறுபினர்கள் அழகன் தமிழ்மணி, சக்திசிதம்பரம், விஜயமுரளி, பாபு கணேஷ், சௌந்தர், நடிகர் உதயா மற்றும் இயக்குனர்கள் திருமலை, மோகன் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக