செல்லம்மாள் பாரதி சிலையை கடையத்தில் வைக்க கோரிக்கை!

செல்லம்மாள் பாரதி சிலையை கடையத்தில் வைக்க கோரிக்கை! 



சென்னை: 

உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் கடந்த ஒரு மாத காலமாக இணைய வழியில் கல்லூரிகளுடனும் பன்னாட்டு தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து பாரதி உலா நிகழ்ச்சிகளை நடத்தின.

அதன் நிறைவு விழாவில் பாரதி உலா சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இல.கணேசன் , திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் , கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் , திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் , உரத்த சிந்தனை சங்கத்தின் பொதுச் செயலாளர் உதயம் ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திரு. இல, கணேசன்:

பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் பாரதியும் செல்லம்மாவும் சேர்ந்து இருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டு தயாராக இருந்தும் .. ஏதோ சில காரணங்களால் அதை அங்கு நிறுவமுடியவில்லை.

தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு அங்கு அச்சிலையை நிறுவ உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக கொண்டு வந்தார்.

இதனை அரசு ஏற்று ஆவண செய்து பாரதிக்கு தமிழக அரசு உரிய பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

VIDEO HERE:

SUBSCRIBE & CLICK BELL BUTTON

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

CINEMA ADVERTISEMENT



CINEMA ADVERTISEMENT

 


தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.