டீன்ஸ் திரை விமர்சனம்
டீன் வயது பருவத்தை அடைந்த சிறுவர், சிறுமியர் அடங்கிய 13 பேர் சாகசப் பயணம் ஒன்றுக்கு தயாராகின்றனர். அந்தக் குழுவில் உள்ள ஒரு பெண்ணின் பாட்டி ஊரில் நிகழும் அமானுஷ்யமான விஷயங்களைப் பார்க்க செல்கின்றனர். பள்ளியை ‘கட்’ அடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் தப்பிச் செல்லும் அவர்கள், வழியில் போராட்டம் ஒன்றினால், காட்டுப் பாதைக்குள் நுழையும் சூழ்நிலை ஏற்படுகிறது . அந்தப் பயணத்தில் ஒவ்வொருவராக மாயமாகின்றனர். பிறகு என்ன நடந்தது? பார்த்திபன் வந்து என்ன செய்தார்? என்பதே கதை....
படத்தில் விஷ்ருதா, டி.அம்ருதா, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, டி.ஜான் போஸ்கோ, சில்வென்ஸ்டன், பிரஷிதா, தீபேஷ்வரன், உதய்பிரியன், கே.எஸ்.தீபன், ரோஷன், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன் ஆகியோர் நடிப்பு அருமை. இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
பின்னணி இசையில் விறுவிறுப்பு. இரண்டாம் பாதியில் விஞ்ஞானியாக தலைகாட்டும் பார்த்திபன் தன் வழக்கமான நடிப்பைத் தவிர்த்து அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைச் செய்திருக்கிறார். பார்த்திபனின் இந்தப் புதிய முயற்சியை பாராட்டலாம்.
காவல்துறை தேடுதல் வேட்டையில் இன்னும் வேகத்தை கூட்டியிருக்கலாம். இளம் காதல் காட்சியில் கூடுதல் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த ' டீன்ஸ்' குழந்தைகளுடன் பார்க்கலாம்....
RATING: 3.5/5
கருத்துரையிடுக