'ராயன்' பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆர்வம்!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் தான் ராயன். இந்த படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது. தனுஷின் 50வது படமான இந்தப் படத்தினை இயக்குநர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
ராயன் திரைப்படம்:
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அதன்படி தற்போது அவரது 50வது படமான ‘ராயன்’ (Dhanush Raayan Movie) படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தானே இயக்கி நடித்துள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 'ராயன்' படம் பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராயன் படத்தின் விமர்சனத்தை விரைவில் நமது TAMIL LIVE NEWS இணைய தளத்தில் பார்ப்போம்.
கருத்துரையிடுக