RAAYAN REVIEW : ராயன் படம் எப்படி இருக்கு?!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ராயன். இது தனுஷின் 50-வது திரைப்படம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சிறு வயதில் சொந்த ஊரில் பெற்றோரை தொலைத்த ராயன் தனது இரண்டு தம்பிகள் மற்றும் கைக் குழந்தையாக இருக்கும் தங்கையுடன் பிழைப்பிற்காக சென்னைக்கு வருகிறார். அங்கு சேகர் (செல்வராகவன்), ராயனுக்கு வேலை கொடுத்து உதவுகிறார். ராயன் தன் தங்கை, தம்பிகளுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார்.
இதற்கிடையில் ராயன் வசிக்கும் அதே பகுதியில் உள்ள இரண்டு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட போலீஸ் திட்டம் தீட்டுகிறது. இந்த திட்டத்தில் ராயனின் குடும்பம் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பிறகு தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதி கதை.....
தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மிரட்டி இருக்கிறார். தனுஷ்க்கு தங்கையாக வரும் துஷாரா விஜயன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக நடித்து இருக்கிறார். மிரட்டல் வில்லனாக வரும் எஸ்.ஜே .சூர்யாவின் நடிப்பு சிறப்பு. ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசை அரங்கத்தையே அதிர வைத்துள்ளது. ‘உசுரே நீ தானே…நீ தானே…’ என ஏ.ஆர்.ரஹ்மான் வரி மனதை கவர்கிறது.
அண்ணன், தம்பிகள், தங்கை இடையேயான உறவு தான் படத்தின் உயிரே. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், ஜாக்கியின் கலை ஆக்கமும், பிரசன்னாவின் எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பலம்.
இரண்டாம் பாதி கதை களம் மற்றும் வில்லன் கொலை காட்சியில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த ராயன் பாச வெறியன்......
RATING: 4/5
கருத்துரையிடுக