சிறந்த சிகிச்சையில் RSRM மருத்துவமனை

 சிறந்த சிகிச்சையில் RSRM மருத்துவமனை

சென்னை:

ராயபுரம் சிமிட்ரி சாலையில் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. வட சென்னையின் முக்கிய மருத்துவமனையான இங்கு பிரசவம், கர்ப்பப்பை அகற்றுதல், கருத்தடை உள்பட பல்வேறு சிகிச்சைகள் நடைபெறும். 

இந்த மருத்துவமனையில் தற்போது டாக்டர்.குப்புலக்ஷ்மி கண்காணிப்பாளராக  பொறுப்பு ஏற்றவுடன் மருத்துவ சிகிச்சை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனை என்றாலே அச்சம் ஆகும் சூழ்நிலையில் அனைவரையும் தன் குடும்ப உறவினர்கள் போல் அன்பு காட்டி சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். இவர் வந்தவுடன் தனியார் ஊழியர்களும் உள்ளே பணம் வாங்க அச்சம் அடைந்துள்ளனர். 

எங்கள் டீன் டாக்டர். பாலாஜி ஐயா அவர்கள் வழிகாட்டுதலின் படி மேலும் சிறந்த சேவையை கர்ப்பிணி பெண்களுக்கு செய்வோம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் .   

இதில் தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர்.ராஜலக்ஷ்மி அவர்கள் கர்ப்பிணி பெண்களிடையே அவர்களின் உடல் நிலையை பொறுமையுடன் கேட்டு அன்புடன் பேசி வருவது அனைவரையும் மகிழ்ச்சி அளித்து வருகிறது. 

உறவினர்கள் இல்லாமல் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு "நாங்கள் இருக்கிறோம் வருத்த பட வேண்டாம்" என்று இவர்கள் காட்டும் அன்பிற்கு எல்லையே இல்லை என்று கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இந்த RSRM மருத்துவமனைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.