INDIAN 2 REVIEW : இந்தியன் 2 விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் "இந்தியன் 2" என அனைவரும் அறிந்ததே.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
படத்தில் சித்தார்த் துடிப்பான நேர்மையான இளைஞர். இவரது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் ஆவார்கள். இவர்கள் 'பார்கிங் டாக்ஸ்' என்ற யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். நாட்டில் நடக்கும் அவலங்களை, லஞ்சங்களை, குற்றங்களை தங்கள் யூ டியூப் சேனல் மூலமாக கேளிக்கையாக, கிண்டலாக, வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
இவர்கள் வீடியோக்கள் மூலமாக சில அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறார் சித்தார்த். சித்தார்த் காதலியாக வரும் ரகுல் ப்ரீத்சிங் நாட்டின் தற்போதைய சூழலை எடுத்துச் சொல்லி எதையும் மாற்ற முடியாது என்று கூறுவதால் மனம் உடைகிறார் சித்தார்த். லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்க இந்தியன் தாத்தாவை மீண்டும் அழைக்க முடிவு எடுக்கிறார் சித்தார்த்.
COME BACK INDIAN என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய உடனே அனைவரும் இதை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். இதை பார்த்த நம்ம தாத்தா இந்தியா வருகிறார். பிறகு தாத்தா கதற விட்டாரா? என்பதே கதை.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, குரு சோமசுந்தரம், கணேஷ், ஜெயபிரகாஷ், டெல்லி நாயகன், ஜெயபிரகாஷ் , அஸ்வினி தங்கராஜ் என அனைவரும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கமல் ஹாசன் இந்தியன் தாத்தாவிற்கே உரித்தான கிடுக்கிலும், மிடுக்கிலும் அரட்டுகிறார். அவரை சுற்றியே பெரும்பான்மையான கதை நகர்வதால், இதர கதாபாத்திரங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. வர்ம கலை சண்டை காட்சிகள் மிரட்டுகிறது.
அனிருத் இசைக்கு பதிலாக ஏ.ஆர் ரகுமான் இசை இருந்தால் அரங்கமே மேலும் அலறியிருக்கும். அடுத்து, சில காட்சிகளில் லாஜிக் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம். இந்தியன் 3- க்காக கமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் இந்த இந்தியன் 2 மிரட்டலான எச்சரிக்கை......
RATING: 3.9/5
கருத்துரையிடுக