கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை- மாவட்ட ஆட்சியர்
கோவை:
கரோனா பரவும் அச்சத்தால், கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோவை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நாளை (31-ம் தேதி) இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தும் போது, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கருத்துரையிடுக