1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ஜோதி' டீசர்!

1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ஜோதி' டீசர்!

வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஜோதி'. இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, RJபாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, G.தனஞ்செயன் நடிகை சாக்ஷி அகர்வால் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் 'ஜோதி' படக்குழுவினரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் 'ஜோதி' டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 
அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘திரௌபதி, மண்டேலா’ திரைப்படத்தின் நாயகி ஷீலா ராஜ்குமார், ‘கோலிசோடா 2’ திரைப்படத்தின் நாயகி கிரிஷா குரூப், ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வில்லன் நான் சரவணன் மற்றும் இளங்கோ குமரவேல், மைம்கோபி,   சாய் பிரியங்கா ருத் முக்கிய கதாப்பாத்திரத்தில் SP ராஜா சேதுபதி நடித்துள்ளனர். 

செசி ஜெயா ஒளிப்பதிவு செய்திருக்கும்  இத்திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்க, சத்ய மூர்த்தி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்கிறார்.பாடல்களை பின்னணி பாடகர்கள்  K J ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், மற்றும் ஆர்த்தி பாடியிருக்க, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். SPR STUDIOS சார்பில் சதுரங்க வேட்டை திரைப்பட படத்தொகுப்பாளர் SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.