18 மாத புரொஃபஷனல் டிப்ளமாவை வழங்கும் EHL -ன் VET கல்வித்திட்டம்!

18 மாத புரொஃபஷனல் டிப்ளமாவை வழங்கும் EHL -ன் VET கல்வித்திட்டம்!


இந்திய விருந்தோம்பல் துறையில் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்திய தொழில்துறை கூட்டமைப்பும், ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனமும், 18 மாத காலஅளவுடன் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான டிப்ளமா படிப்பை வழங்க சுவிட்சர்லாந்தின் EHL கல்விக்குழுமத்தோடு ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கின்றன. ஐடிசி கிராண்டு சோழா (சென்னை), ஐடிசி மௌரியா (புதுடெல்லி), ஐடிசி சோனார் & ராயல் பெங்கால் (கொல்கத்தா) மற்றும் ஐடிசி மராத்தா (மும்பை) ஆகிய நான்கு ஐடிசி லக்சரி ஹோட்டல் அமைவிடங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

 

இந்த ஆண்டு தமிழ்நாட்டின், சென்னையில் EHL-ன் VET கல்வித்திட்டத்தில் 160-க்கும் அதிகமான மாணவர்கள் இக்கல்வித்திட்டத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் முக்கிய விருந்தோம்பல் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ‘VET by EHL’-ஐ வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் சிஐஐ வழங்கியிருக்கிறது.

 

தெற்காசியா, மத்தியக்கிழக்கு மற்றும் மியான்மருக்கான EHL-ன் இணை இயக்குனர் மற்றும் பிராந்திய தலைவர் திரு. பிரவீன் ராய் இச்செயல்திட்டம் பற்றி கூறியதாவது: “தற்போது நிலவும் திறன் இடைவெளியை நிரப்பவும், உலகளவில் விருந்தோம்பல் துறைக்கு பணியாளர்களை அனுப்பும் நாடு என்ற இந்தியாவின் நிலையை இன்னும் வலுப்படுத்தவும் EHL-ன் VET கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் இத்துறை சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. பாரம்பரிய விருந்தோம்பல் கல்வி மாதிரியில் தகவல்தொடர்பு, தலைமைத்துவப் பண்பு, மாறுபட்ட சிந்தனை, கலாச்சார அறிவுத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற மென்திறன்களில் பயிற்சி குறைவாகவே இருந்தது. 


தமிழ்நாடு, குறிப்பாக சென்னை மாநகரம், உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மிகப்பெரிய சாத்தியத்திறனைக் கொண்டிருப்பதோடு, விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்பையும் வழங்கக்கூடியதாக இருப்பதால் திறனுள்ள பணியாளர்களின் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதை அவசியமானதாக நாங்கள் கருதினோம். உலகத்தரத்தில் தொழில்முறை பயிற்சியை வழங்கி திறன்மிக்கப் பணியாளர்களை உருவாக்குவதன் அவசியமே இத்திட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது,” என்று கூறினார்.  

 

இந்தியாவில் முன்னணி விருந்தோம்பல் பிராண்டுகளுள் ஒன்றான ஐடிசியின் கூட்டாண்மையில் EHL-ன் VET பயிற்சி திட்டம் ஹோட்டல் வளாகங்களிலேயே வழங்கப்படுகிறது. நிபுணர்களாலும், கல்வியாளர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும் EHL பயிற்சி திட்டத்திற்கான டிப்ளமா, உலகத்தரத்தில் கரியர்களுக்கான திறனை இளையோருக்கு வழங்கும்.” என்று அவர் மேலும் கூறினார்.

 

சிஐஐ-ன் செயல் இயக்குனர் சௌகத்தா ராய் சௌத்ரி இதுகுறித்து பேசுகையில், “உலகளவில் அங்கீகரிக்கப்படுகின்ற, திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு இந்திய விருந்தோம்பல் தொழில்துறையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்வதே சிஐஐ-ன் நோக்கமாகும். உலகில் விருந்தோம்பலில் முதன்மை மேலாண்மை பள்ளியான 129 ஆண்டுகள் தொன்மையான EHL குழுமத்துடன் இக்கல்வித்திட்டத்திற்காக நாங்கள் இணைந்திருக்கிறோம். ஐடிசி ஹோட்டல்களில் நிஜ பணிசூழல்களில் விருந்தினர்களோடு பழகி, சேவையாற்றுவதன் மூலம் திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்வது சாத்தியமாகிறது. வரும் ஆண்டுகளில் இச்செயல்திட்டத்தில் இன்னும் அதிக ஹோட்டல்களை நாங்கள் இணைக்கவிருப்பதால் பயிற்சியும், திறனும் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை உயரும். 3 ஆண்டுகள் காலஅளவில் தேசிய அளவில் ஏறக்குறைய 10,000 மாணவர்கள் இப்பயிற்சிதிட்டத்தில் இணைவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

“இந்நாட்டில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் நபர்களின் எண்ணிக்கையும், சுற்றுலா அமைவிடங்களில் தங்குமிட வசதிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. சர்வதேச கல்வித்திட்டத்தின் மூலம் திறமைகளை வளர்த்துக்கொள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் இக்கல்வித்திட்டம், இந்தியாவில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையின் தேவையை பூர்த்திசெய்ய சிறந்த பங்களிப்பை வழங்கும். பணியமர்த்தலுக்கான உத்தரவாதத்துடன் முன்னணி ஹோட்டலால் வழங்கப்படும் நேரடி பயிற்சியின் மூலம் பயன் பெறலாம் என்பது இக்கல்வித்திட்டத்தின் சிறப்பம்சம்.”

ஐடிசி லிமிடெட்-ன் ஹோட்டல் டிவிஷனின் திறன் மேலாண்மையின் துணைத்தலைவர் திரு. நிலேஷ் மித்ரா கூறியதாவது: திறன் தொகுப்பையும், கற்றல்களையும் கல்வி அலகோடு ஐடிசி ஹோட்டல்கள் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றன. EHL மற்றும் CII ஆல் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற திறமைமிக்க ஆசிரியர்கள் எங்களிடம் இருக்கின்றனர். உலகத்தரத்திலான ஆசிரியர்களது கற்பிப்பின் மூலம் மாணவர்கள் பயன்பெறுவதோடு, நேரடி பயிற்சியின் வழியாக அவர்களது திறனை இன்னும் கூர்மையாக்கிக்கொள்ள சிறந்த வாய்ப்பை இது மாணவர்களுக்கு வழங்குகிறது,” என்று கூறினார்.

இக்கல்வித்திட்டம் குறித்து:

 

அடித்தளம், இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலை என கற்றலின் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ள VET by EHL புரொஃபஷனல் டிப்ளமா கல்வித்திட்டம் 18 மாதங்கள் காலஅளவைக் கொண்டது. சிறந்த, தர-உத்தரவாத தரநிலைகளைப் பின்பற்றுகின்ற இக்கல்வித்திட்டம், ‘சமையற்கலை, உணவு மற்றும் பானங்கள் சேவை’ (F&B) மற்றும் ‘அறைகள்’ என மூன்று தனித்துவமான பிரிவுகளில் கற்றலை வழங்கும். இந்த ஒவ்வொரு சான்றிதழ் நிலையும். முந்தையதன் மேல் திறன்களை கட்டமைத்து, மேம்படுத்தி ஒரு புரொஃபஷனல் டிப்ளமாவை வழங்கும்.

 

EHL-ஆல் உருவாக்கப்பட்டிருக்கும், உலகளாவிய கற்றல் மேலாண்மை அமைப்பிற்கு ஆன்லைன் அணுகுவசதியை பெறும் மாணவர்கள், கோட்பாடு சார்ந்த அறிவுத்திறன் மற்றும் பயிற்சியின்போது கற்றுக்கொண்டுள்ள நடைமுறை திறன்கள் ஆகிய இரண்டின்மீதும் மதிப்பிடப்படுவார்கள். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும்போது VET by EHL உலகளாவிய முன்னாள் மாணவர் வலையமைப்பின் ஒரு அங்கமாக இம்மாணவர்கள் இடம்பெறுவார்கள். இதற்கும் மேலாக, UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து பயிலவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

 

இக்கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தபிறகு பணியமர்த்தலுக்கு 100% உத்தரவாதம் இம்மாணவர்களுக்குத் தரப்படுகிறது. சர்வதேச டிப்ளமாவுடன் 18 மாத காலஅளவில் பணிக்கு தயாராகியிருக்கும் திறன் மற்றும் நிஜ பணியமைவிடங்களான ஐடிசி-ன் சொகு ஹோட்டல்களில் கற்றல் அனுபவம் ஆகிய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இம்மாணவர்கள் இந்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களால் விரும்பி பணியமர்த்தப்படுபவர்களாக இருப்பார்கள்.

 

இக்கல்வித்திட்டத்திற்கான மொத்த கல்வி கட்டணம் ரூ.3,00,000 (வரிகள் கூடுதலாக).


இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.