'வலிமை' திரைப்பட விமர்சனம்

'வலிமை' திரைப்பட விமர்சனம்


நடிகர்அஜித்குமார்
நடிகைஹுமா குரேஷி
இயக்குனர்எச்.வினோத்
இசையுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவுநீரவ் ஷா

'வலிமை இருக்கிறவன் தனக்கு என்ன தேவையோ, அதை எடுத்துக்குவான்' என்ற எண்ணம் கொண்ட கெட்டவனும், 'வலிமை என்பது மற்றவர்களை காப்பாற்றுவதற்குதான்' என்ற எண்ணம் கொண்ட நல்லவனுக்கும் இடையே யுத்தம் நடந்தால்... அதுவே 'வலிமை'.

நெடுஞ்சாலையில் வரும் தொழிலதிபர்கள்,அப்பாவி மக்கள் என வித்தியாசம் பார்க்காமல் வழிப்பறி செய்கிறது ஓர் மர்ம கும்பல். உச்சக்கட்ட வேகம்,பைக்கில் பல்டி, போதை என தப்புகளுக்கு இலக்கணமாய் திகழ்கிறது Satans Slaves எனப்படும் நிழல் உலக சாத்தான்கள். 

காவல்துறையின் கண் போல் காட்சியளிக்கிறார் ACP அர்ஜுனான நம் அஜித்குமார். வழக்கம்போல் "தல" என்று ஆனந்தகண்ணீருடன் கத்திய ரசிகர்கள், மனதளவில் சாரி AK என்று நினைத்தது கண்ணில் படுகிறது. அன்பின் சின்னமாய் அம்மா, பொறுப்பற்ற குடிகார அண்ணன், வேலையின்றி தவிக்கும் தம்பி இதுவே ACP அர்ஜுனின் குடும்ப பின்னணி. 

வறுமைல தப்புபண்ணிட்டேன்னு சொல்லி உழைக்கிறவன கேவலப்படுத்தாதனு சொல்ற வசனம்லாம் வினோத்தின் அந்தர் மாஸ். வேற மாரி பாட்டுல வேற லெவல் எனர்ஜியோட அஜித் சார பார்க்கமுடியுது.

காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங் ஸ்பாட், டிஸ்கஷன் ரூம், கன்ட்ரோல் ரூம்(குறிப்பாக Third eye ரூம்) எப்படி இருக்குமென்று ஆர்ட் டிபார்ட்மென்ட் கவனம் செலுத்தியது சபாஷ்.

காணும் இடமெல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் வைத்து நிரப்பியிருக்கிறார் H. வினோத். மூன்று நிமிடங்கள் வந்தாலும் எதார்த்த உடல் மொழியால் தியேட்டர் மொமென்ட்டுகளை தந்த நடிகர் புகழுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

யார் இந்த Satans Slaves ? இவர்களுக்கு இவ்வளோ பில்ட்டப்பா என்ற கேள்வி எழலாம். இரண்டாம் உலகப்போரின் போது தோன்றிய அமெரிக்க வழி அர்க்கர்களே இந்த Satans Slaves. உடல் முழுக்க டாட்டூ, போறப்போக்கில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு என குற்றங்களை முகவரியாய் வைத்திருப்பார்கள்.  படத்திலும் அந்த பாணியை கையாண்டுருக்கிறார் H. வினோத். சில இடங்களில் வில்லன்களின் யுக்தி, வசனங்கள் வீக்காக தெரிந்தாலும், ஆக்ஷன் காட்சிகள் மூலம் விருந்து வைத்திருக்கின்றனர். 

இயல்பான ஸ்டண்ட் காட்சியே கதிகலங்க வைக்கும். வானுயர பறக்கும் பைக் ஸ்டண்ட் காட்சிகளை கச்சிதமாக செதுக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனுக்கு சல்யூட். படத்தின் பின்னணி இசை சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், படத்தொகுப்பு அதை சமநிலை படுத்துகிறது. பில்லா, மங்காத்தா போன்ற அஜித் பாணி BGM இதில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இரண்டாம் பாதி

நீரவ்ஷா எனும் மூன்றாம் கண்ணுக்கு கூலிங் கிளாஸ் மாட்டி விட வேண்டும். ஒவ்வொரு ஃபிரேமும் பலே இரண்டாம் பாதியில் வரும் சகோதர பாசம், அம்மா சென்டிமென்ட் காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் மீல்ஸ் என்றே கூறலாம். ஆனால் ரசிகர்களுக்கு இது படையலாக இருக்குமா என்றால் சந்தேகம் தான். 

Satans Slaves குழுவை ACP அர்ஜுன் எப்படி டீல் செய்கிறார். அவர்களின் நெட்ஒர்க்கை எப்படி முறியடிக்கிறார் என்பதே இரண்டாம் பாதியின் ஆணிவேர். மேலும் கட்டுமானத்தில் உள்ள பகுதியில் வரும் சண்டை காட்சி கூடுதல் பூஸ்டர். வில்லன் காட்சிகளில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். பெண்களுக்கு இந்த படம் பிடிப்பது சற்று சந்தேகம் தான் ஆனால் அஜித் ரசிகர்களுக்கு நீண்ட நாள் கழித்து ஒரு சிறந்த திருவிழா என்றே கூறலாம்... 


காட்சிகளில் கரெக்ட்டாக இருக்கும் H. வினோத் கருத்தூசி போடுவதிலும் வல்லவர். சினிமா எனும் சதுரங்க வேட்டையில் தீரனாக ஜொலிப்பவர் வினோத். இளைஞர்கள் தவறான பாதைக்கு எப்படி செல்கிறார்கள், பிள்ளைகளை புல்லிங்கோவாக மூளைச்சலவை செய்து யார் மாற்றுகிறார்கள் என்பதை சரியாக கட்டமைத்துள்ளார்கள். 

யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ஆடவும், அம்மா பாடல் உருகவும் வைத்திருக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த 'வலிமை' குறையா வேகம்... 




#valimaimovie #valimaireview #valimaifilm #ajithkumarvalimai #valimaimovieviews #valimaiupdates #valimaisongs #thalavalimai #valimaifullmovie #valimai

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.