‘புட்புரோ 2022’ கண்காட்சியில் சுகுணா புட்ஸ் டெல்ப்ரெஸ் பங்கேற்பு!

‘புட்புரோ 2022’ கண்காட்சியில் சுகுணா புட்ஸ் டெல்ப்ரெஸ் பங்கேற்பு!





சென்னை: 

இந்தியாவின் மிகப்பெரிய கோழிப்பண்ணை கூட்டு நிறுவனமான சுகுணா புட்ஸ் நிறுவனம் புதிதாக ‘டெல்ப்ரெஸ்’ என்னும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவை துவக்கி உள்ளது. அதில் எந்தவிதமான உணவு வகைகள் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக எடுத்துக்கூறும் விதமாக அதற்கான ஸ்டால் ஒன்றை தற்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில்கூட்டமைப்பு நடத்தம் ‘புட்புரோ 2022’ கண்காட்சியில் அமைத்துள்ளது. 

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை விரிவாக எடுத்துக்கூறும் விதமாக இந்த கண்காட்சியை இந்திய தொழில் கூட்டமைப்பு கடந்த 1995–ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 

தற்போது சென்னையில் கடந்த 5–ந்தேதி துவங்கிய இந்த கண்காட்சி 7–ந்தேதி நிறைவடைகிறது. சுகுணா புட்ஸ் நிறுவனத்தால் துவக்கப்பட்டுள்ள புதிய ‘டெல்ப்ரெஸ்’ பிராண்ட் மக்களுக்கு உயர்தர, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கோழிக்கறியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த பிராண்ட் குளிரூட்டப்பட்ட கோழிக்கறி, உடனடியாக சாப்பிட –சமைப்பதற்கு ஏற்ற இறைச்சி வகைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட இறைச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விதமான இறைச்சி உணவுகளை விற்பனை செய்து வருகிறது. நாட்டிலேயே முதன்மையான டெல்ப்ரெஸ் வலுவூட்டப்பட்ட முட்டைகள் டெல்ப்ரெஸ் ஆக்டிவ், ஹார்ட், ஷார்ப் மற்றும் எனர்ஜி என நான்கு வகைகளில் விற்பனை செய்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் கோழிக்கறி, ஆட்டிறைச்சி, முட்டை, இறைச்சிகள் மற்றும் உண்ணத் தயாராக உள்ள பொருட்கள் மற்றும் சமைக்கத் தயாராக உள்ள தயாரிப்புகள் மற்றும் புதிய பேக்கேஜிங் உணவுகள் ஆகியவற்றை பார்வையாளர்களுக்காக டெல்ப்ரெஸ் காட்சிப்படுத்தி உள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.delfrez.com/franchisee.aspxஐ பார்க்கவும். மேலும் டெல்ப்ரெஸ் குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதோடு, பெரிய ஓட்டல்கள், உணவகங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

VIDEO HERE:

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.